Latest News

March 29, 2012

அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்படுவாரா?
by admin - 0

அமைச்சர் மேர்வின் சில்வா குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கட்சி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சென்றுள்ள ஊடகவியலாளர்கள் சிலர் இலங்கை வந்தால் அவர்களின் கை, கால்களை பகிரங்கமாக உடைப்பேன் எனவும் ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவை இலங்கையில் இருந்து தானே விரட்டியதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

அமைச்சரின் இக்கருத்து தொடர்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பதில் ஊடகத்துறை அமைச்சர்,

ஊடகவியலாளர்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல் விடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

அமைச்சர் மேர்வின் சில்வா குறித்து பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் என அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவிடம் வினவியபோது,

அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவருடைய கருத்துபடி ஏதாவது குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் பதிலளித்தார்.
Read More

சிம்பு நயன் மீண்டும் இணைவு
by admin - 0


நயன்தாரா நல்ல பொண்ணு, அவருக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது, என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா - பிரபு தேவா பிரிவு குறித்து அவரிடம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்துள்ள சிம்பு, "நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு,'' என்றவரிடம்,
நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று கேட்டபோது, ''நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் 'அவங்கதான் வேணும்’னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன்.
நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் கொண்டுவரக் கூடாது,'' என்று கூறியுள்ளார்.
சிம்பு அடுத்து வேட்டை மன்னன், போடா போடி படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் போடா போடி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குமேல் இழுத்தடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Read More

பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொமான்ஸ் காட்சி!
by admin - 0


பிரபு தேவாவை பிரிந்த பிறகு, மீண்டும் மும்முரமாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.
இந்தப் பிரிவுக்குப் பிறகு அவர் தெலுங்கில் நடிக்க முதல் படம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும். டக்குபதி ராணாவுக்கு ஜோடி.

முதல் காட்சியே, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருவரும் காதல் பண்ணுவது போல படமாக்கப்பட்டது. வானம் படத்தை இயக்கிய க்ருஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நயன்தாரா.
ஏற்கெனவே தெலுங்கில் நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் அவரது காதலியாக நடிக்கிறார் நயன். தமிழ் - தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் புதிய படத்திலும் இவர்தான் நாயகி.
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க, ஏ எம் ரத்னம் தயாரிக்கும் மெகா படத்திலும் நயன்தான் நாயகி.
11 மாத இடைவெளிக்குப் பிறகு பரபரப்பாக தனது அடுத்த ரவுண்டைத் தொடங்கியிருக்கும் நயன்தாராவிடம் அதுகுறித்துக் கேட்டால், "நடிப்பை நான் ரசித்து அனுபவிக்கிறேன். இந்த இன்னிங்ஸ் எனக்கு மறக்க முடியாததாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றா
Read More

சிரேஷ்ட மாணவர்களின் தாக்குதலில் மாணவனின் செவிப்பறை கிழிந்தது! யாழ்.பல்கலையில் சம்பவம்!
by admin - 0

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் செவிப்பறை கிழிந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நண்பகல் சக மாணவிகளுடன் உரையாடிக்கொண்டு சென்றுகொண்டிருந்த கலைப்பீடத்தினைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவரை அழைத்த சிரேஷ்ட பிரிவு மாணவர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர்.
சம்பவத்தில் குறித்த மாணவனின் செவிப்பறை கிழிந்திருக்கின்றது. இந்நிலையில் அவர் உடனடியாக யாழ்.போதான வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த மாணவன் மல்லாவியைச் சேர்ந்த தனராஜ் என்று சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டும் இதேபோன்று மற்றொரு மாணவருக்கும் செவிப்பறைப்பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More

பயங்கர பீதியில் 'உண்மையான' அதிமுகவினர்!
by admin - 0

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று சசிகலா நீக்கப்பட்டபோது சித்தாந்தமாக பேசி சிலாகித்துப் போன அதிமுகவினர் இப்போது எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டதே என்று திகிலடித்துப் போய் நிற்கின்றனராம்.

காரணம், சசிகலாவின் மறு வருகை.. இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், பின்னர் சேர்ந்து கொள்வார்கள், இது என்ன புதுசா என்றுதான் 4 மாதத்திற்கு முன்பு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு அதிமுகவை விட்டும் போயஸ் கார்டன் வீட்டை விட்டும் ஜெயலலிதா தூக்கியபோது அனைவருமே நினைத்தார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவின் செயல்பாட்டு வேகத்தைப் பார்த்த அதிமுகவினரும், பொதுமக்களும், பரவாயில்லையே உண்மையிலேயே சசிகலாவை துரத்தி விட்டு விட்டாரே என்றுதான் நினைத்தனர்.


விரட்டிய வேகத்தில், சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக வழக்குகள் பாயத் தொடங்கின. இதுவரை நடராஜன், திவாகரன், ராவணன் என மூன்று பேர் சிறைக் கம்பிகளுக்குள் சிறைப்பட்டுள்ளனர். அடுத்து மகாதேவன், தொடர்ந்து சசிகலா என பெயர் அடிபட்ட நேரத்தில்தான். அக்கா.. என்னை மன்னிச்சுடுக்கா என்று அறிக்கை வந்துள்ளது சசிகலாவிடம்...

சசிகலாவின் அறிக்கை தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதிமுக சார்ந்த, அதிகார மட்ட, காவல்துறை அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், இனி மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்கும், நாமெல்லாம் மறுபடியும் கைகளை மாற்றிக் கட்ட வேண்டும் என்ற பதட்டமே.

சசிகலா நீக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆதரவான கட்சிக்காரர்களை மேலிடத்திற்குப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர் தற்போது அதிர்ச்சி அடைந்து போய் நிற்கின்றனராம். தாங்கள் சசிகலாவால் பழிவாங்கப்படலாம் என்ற பயம்தானாம் அது.

அதேபோல சசிகலா தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து வரும் போலீஸாரும் கூட பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளதாக தெரிகிறது. அதிகாரிகள் மட்டத்திலும், இனி என்ன செய்வது, எப்படி நடந்து கொள்வது, சசிகலா தலையீடு மறுபடியும் இருக்குமா என்ற குழப்பத்தில் உள்ளனராம்.

மீண்டும் சசிகலா அதிகாரவட்டம் தலை தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம், சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரும் ஆட்டம் போட ஆரம்பிப்பார்களே, அதை முதல்வர் ஜெயலலிதா எப்படித் தடுக்கப் போகிறார் என்ற கேள்விகள் அதிமுகவினர் மத்தியில் இல்லாமல் அரசு அதிகாரிகள் மத்தியிலும் நிலவுகிறது.

சசிகலாவின் மறு வருகையால், உண்மையான அதிமுகவினர்தான் பெரும் கலக்கத்தில் மூழ்கியுள்ளனர். கட்சி உருப்படும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டு தற்போது மறுபடியும் கலங்கலாக்கி விட்டனரே என்ற வேதனையிலும், விரக்தியிலும் அவர்கள் இருப்பதாக தெரிகிறது. மேலும் சசிகலா நீக்கப்பட்டபோது அதற்கு கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என பல தரப்பிலும் பெரும் வரவேற்பு காணப்பட்டது. காரணம், சசிகலா குடும்பத்தினர் தமிழகத்தை சூறையாடி போட்ட ஆட்டம்தான். கருணாநிதி குடும்பத்தினரை மிஞ்சி விட்டனரே என்றுதான் அத்தனை பேரும் சசிகலா குடும்பத்தி்னர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.

சசிகலா நீக்கத்தை வைத்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பல முக்கியப் புள்ளிகளும் மீண்டும் கட்சிக்குத் திரும்ப யோசித்து வருவதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அத்தனையும் தவிடுபொடியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா சண்டை என்பது பொம்மை விளையாட்டு போல என்றாகி விட்டது. எனவே அதிமுகவின் தலைவிதியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இந்த உண்மையான அதிமுகவினர் உள்ளனராம்.

சசிகலாவின் மறு வருகை அதிமுகவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
Read More

March 28, 2012

தனுஷ்-ஸ்ருதி ஜோடிக்கு ரஜினி-கமல் பாராட்டு
by admin - 0


தனது விஸ்வரூபம் படத்தின் கடைசிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் கமல் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் செலவு செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஸ்ருதிஹாஸனுக்காக அவர் நடித்த ’3’ படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்திருக்கிறார்.

கமல் படத்தை ரசித்து பார்த்தாராம். படம் பார்த்து முடித்த பின் 3 படக்குழுவையும் படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யாவையும் பாராட்டியிருக்கிறார்.தனுஷ்-ஸ்ருதி இடையேயான கெமிஸ்டிரி அற்புதமாக இருப்பதாக கூறினாராம். படத்தின் ஹீரோவான தனுஷை தனியே அழைத்து நன்றாக நடித்துள்ளதாக பாராட்டியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பே ரஜினி படத்தை பார்த்துவிட்டார். அப்போது ரஜினி தனுஷையும்-ஸ்ருதிஹாஸனையும் பாராட்டினார். அப்படிப்பட்ட ஜோடிப் பொருத்தமா!(படத்தில்) இருவருக்கும்.....

‘3’ படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கிடையே பெருகிக் கொண்டே வருகிறது. “ஊர்ல இப்ப 3-னு ஒரு காய்ச்சல் பரவிடுச்சு. இதுக்கு மருந்து 30-தேதி தான் மார்க்கெட்ல வருதாம்” என்று ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை கலப்பாக சமூக இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ரஜினி-கமல் இணைந்து நடிப்பதை விட மறுபடியும் தனுஷ்-ஸ்ருதி எப்போது இணைவார்கள் என்ற கேள்விகளே அதிகம் பறக்கின்றன.
Read More

முகமாற்று சிகிச்சை வெற்றி விடியோ இணைப்பு
by admin - 0

முகமாற்று சிகிச்சை வெற்றி விடியோ இணைப்பு


1993 ஆண்டு எற்பட்ட ஒரு விபத்தில் அசிங்கமான முகம் மீண்டும் பொலிவு பெற்றது
Read More

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்- சுனாமி பீதி
by admin - 0

ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது.

ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. இதில் 20 ஆயிரம் பேர் பலியாகினர். புகுஷிமா அணு உலை வெடித்து கதிர் வீச்சு பரவியது அதை தொடர்ந்து அங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் மற்றும் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு ஜப்பானில் உள்ள ஹோன்சு தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் தலைநகர் டோக்கியோவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே, 6.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக வழக்கத்தை விட மிகப்பெரிய அளவில் கடல் அலைகள் எழும்பின. எனவே, சுனாமி ஏற்படலாம் என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

மேலும் நில நடுக்கம் ஏற்பட்ட வடகிழக்கு பகுதியில் அதிவேகமாக இயங்கும் புல்லட் ரெயில்கள் வழக்கம் போல் இயங்கின. ரெயில் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
Read More

போயஸ் கார்டன் திரும்பினார் சசி! ஜெ.வுடன் சந்திப்பு!
by admin - 0

சசிகலா புதன்கிழமை (28.03.2012) காலை விடுத்த அறிக்கையில்,


ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள். அவருக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. அவர்களின் உறவை துண்டித்து விட்டேன். எம்எல்ஏ, அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும், பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஜெயலலிதாவுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று சசிகலா சந்தித்தார்.
Read More

கொதிக்கும் பாலை குடம் குடமாய் உடலில் ஊற்றும் சாமியார்! (வீடியோ இணைப்பு)
by admin - 0

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது வரனாசி. கங்கை நதி பாய்ந்தோடும் இங்கு தான் புகழ்பெற்ற பல இந்து ஆலயங்கள் உள்ளன.
இங்குள்ள பிரசித்தி பெற்ற துர்க்கா கோவில் ஒன்றில் தான் மேற்படி வித்தியாசமான மெய்சிலிர்க்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பொதுவாக அம்மன் ஆலயங்களில் தீ மிதிப்பு வைபவம் இடம்பெறுவது பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இங்கு அதையும் விட ஒரு படி தாண்டி கொதிக்கும் பாலை உடலில் ஊற்றிக் கொள்ளும் அதிர்சிகரமான நிகழ்வு இடம்பெறுகின்றது.
கோயிலின் முன்பு பெரிய பானைகளில் பக்தர்கள் பால் காய்ச்சுகிறார்கள்.
பால் நன்றாக கொதித்து வந்ததும் ஆவி பறக்க கொதிச்சுக் கொண்டிருக்கும் பாலை அப்படியே தூக்கி தனது உடலில் ஊற்றுகிறார் சாமியார்.
கொதிக்கிற பாலில் சிறு துளி பட்டாலே நாங்கள் துடிதுடித்துப் போவோம். ஆனால் இந்த சாமியாரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் விட எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மேலும் நின்று ஆச்சர்யம் காட்டுகிறார் இந்த வினோத சாமியார்.
Read More

படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகாவுக்கு காயம்!
by admin - 0


படப்பிடிப்பு ஒன்றில் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு காயம் ஏற்பட்டது.
தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி, சமீபத்தில் ஐதராபாத் அருகேயுள்ள பங்காரா ஹில்ஸ் பகுதியில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்று நடித்தார்
.
அப்போது காளையை வைத்து சண்டைக்காட்சியை படமாக்கினர் படக்குழுவினர். அப்போது எதிர்பாரா விதமாக காளை மிரண்டு ஓடியதில் படப்பிடிப்பின் கேமராமேன் மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் படப்பிடிப்பின் கேமராவும் உடைந்தது. தற்போது அனைவரும் நலமாக இருக்கிறார்கள். அடுத்தவாரம் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Read More

March 27, 2012

வழக்கிலிருந்து விடுவிக்க கோரி திமுக எம்பி கனிமொழி மனு
by admin - 1

ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி திமுக எம்பி கனிமொழி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.



இந்த மனு குறித்து விளக்கம் அளிக்க சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி, எம்.எல். மேத்தா உத்தரவிட்டார்.

கனிமொழி சார்பில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைகாட்சி கடன் பெற்ற போது கனிமொழி அதன் இயக்குனராக இருக்க வில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்தில் அவர் ஒரு பங்குதாரர் மட்டுமே என்றும் ராம்ஜெத்மலானி தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்த தன்னை விடுவிக்குமாறு கடந்த 23 - ம் தேதி. கனிமொழி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
Read More

தமிழ்ச் சிறுமியான துஷா சுடப்பட்ட அதிர்ச்சிக் காட்சி
by admin - 0

பிரித்தானியாவில் உள்ள சுப்பர் மாக்கட் ஒன்றில் ஆயுதக் குழு ஒன்றினால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பிய துஷா கமலேஸ்வரன் என்கின்ற ஐந்து வயதுச் சிறுமி பற்றி யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்.
டான்சராக வர விரும்பிய அந்த குட்டிச் சிறுமியின் கனவு மாமாவின் சுப்பர் மாக்கெட்டில் தவிடு பொடியாகியது.

தெற்கு லண்டனில் உள்ள Stockwell என்ற இடத்தில் தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்படி துயரச் சம்பவம் அரங்கேறியது.

குறித்த சிறுமியின் நெஞ்சுப்பகுதியிலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததால் கோமா நிலைக்கு சென்று மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துஷாவைச் சுட்ட குற்றவாளிகள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இந்த நேரத்தில் சி.சி.ரி.வி கமராவில் பதிவான துஷா சுடப்பட்ட அதிர்ச்சிக் காட்சிகளை லண்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
Read More

வான் கோழி வளர்த்து வளம் காணலாம்
by admin - 0


இன்று அசைவ பிரியர்கள் அதிகம் பேர் சுவைப்பது கோழி வகையைத்தான். இவற்றில் வான்கோழியின் சுவை தற்போது உணவுப் பிரியர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. இதனால் விவசாயிகள் வான்கோழி வளர்ப்பில் அக்கறை காட்டினால், அவர்களது வாழ்வு வளம் காணும் என்பதில் சந்தேகமில்லை.வான்கோழியின் தாயகம் தென் அமெரிக்கா. இது பிறநாடுகளிலும் பரவி, தற்போது ஹாலந்து வெள்ளை, பிரான்ஸ் பெல்ட்ஸ்வில்லி, நார்கான்செட், பார்பான் சிவப்பு, ஸ்லேட், நார்போக் என பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. பிற இனங்களைவிட விரைந்த வளர்ச்சி காணும் இவற்றிற்கு குறைந்த தீவனம் போதுமானது. ஒரு வான்கோழி மாதம்தோறும் 12 முட்டைகள் இடும்.
மேற்கூறிய இனங்களில் பிரான்ஸ் பெல்ட்ஸ்வில்லி நம்நாட்டுக்கு ஏற்ற வகையாக கருதப்படுகிறது. இவற்றிற்கான கொட்டகையை அமைக்க காற்றோட்டமான இடம் தேவை. சிமென்ட் தரையுடன், காகிதம், மரத்தூள், நிலக்கடலை தோல், நெல்உமியை தரைமீது 6 அங்குலம் உயரத்திற்கு பரப்ப வேண்டும். ஆண்கோழிக்கு 5 சதுர அடி, பெண் கோழிக்கு 4 சதுர அடி இடவசதி தேவை. வளர்ந்த கோழிக்கும், குஞ்சு வளர்க்கவும் தனி கொட்டகை தேவை.பொதுவாக வான்கோழி 6 முதல் 7 மாத பருவத்தில் முட்டையிடும். அடைகாலம் 28 நாட்கள். புரூடர் எனப்படும் அடைகாப்பானில் இளம் குஞ்சுகள் பொரித்ததில் இருந்து 3 வாரம் செயற்கை வெப்பம் அளிக்கப்படும். இக்கோழிகள் விரைவாக வளர்வதால் குஞ்சு பொரித்த நாள் முதல் புரதச் சத்துடன் கூடிய தீவனம் தேவை. அடர்தீவன வகை யான மக்காச்சோளம், கம்பு, கடலை புண்ணாக்கு, சோயா புண்ணாக்கு, மீன்தூள், கோதுமை, அரிசிதவிடு, தாது உப்பு அளிக்கப்படும்.
இந்த கோழிகளை பொறுத்தவரை விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மார்க்கெட்டிங்கில் எளிய வழிமுறை இல்லாததே இதற்கு காரணம்
Read More

March 26, 2012

லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா படங்கள் இணைப்பு
by admin - 0

ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தின் ஷூட்டிங்கிற்காக கோச்சடையான் படக்குழு சில தினங்களுக்கு முன் லண்டன் பறந்தது. அதன் பிறகு கோச்சடையான் படத்தை பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எந்த விதத்திலும் அறிய முடியவில்லை. இந்நிலையில் தனது ட்விட்டர் சமூகதளத்தில் நடிகை ராதிகா சரத்குமார் “நானும் என் கணவரும் கோச்சடையான் யூனிட்டுடன் இணைந்துவிட்டோம். படத்தில் சரத் நடிக்கும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஷூட்டிங் நடக்காத நேரத்தில் என் கணவரும், ரஜினியும் என்னுடன் வந்து பேசிவிட்டு சென்றார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். கோச்சடையான் யூனிட் முழுவதும் கலகலப்பாக இருக்கிறது. இதை பார்க்கும் போது எனக்கு அந்த காலத்தில் கேரவன் இல்லாத போது எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டே சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது” என்று கூறியுள்ளார்.
வழக்கமாக ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எடுக்கப்படும் லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டூடியோஸில் தான் கோச்சடையான் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. கோச்சடையான் படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கான உரிமையை லக்‌ஷ்மிகணபதி பிலிம்ஸ் வாங்க இருப்பதாக ஒரு தகவல். ஆனால் இது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. லக்‌ஷ்மி கணபதி பிலிம்ஸ் அந்நியன் படத்தையே 15கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். கோச்சடையானின் தெலுங்கு உரிமை எப்படியும் 100 கொடியைத் தாண்டும் என்பது தற்போதைய கோடம்பாக்கத்து பேச்சு.


Read More

விண்ணில் இருந்து 200 கிலோ எடை கொண்ட மர்ம பொருள் விழுந்ததால் மக்கள் பீதி
by admin - 0

சைபீரியாவில் விண்ணில் இருந்து 200 கிலோ எடை கொண்ட மர்ம பொருள் விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சைபீரியாவில் உள்ள ஓட்ராட்நெஸ்கி என்ற கிராமத்தின் அடர்ந்த காட்டு பகுதியில் விண்ணில் இருந்து திடீரென மர்ம பொருள் சமீபத்தில் விழுந்தது.
Read More

க.பொ.த. சா/ த பரீட்சை முடிவுகள்
by admin - 0


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. www.doenets.lk என்ற இணைய முகவரியில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும். கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் EXAME என டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் உங்கள் பரீட்சை சுட்டிலக்கத்தை டைப் செய்து 7777 என்ற இலக்கத்திற்கு எஸ.எம்.எம. செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
Read More

March 25, 2012

சீரகத்தின் மகிமை
by admin - 0

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மந்தத்தைப் போக்கும், நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறு விட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

திராட்சைப் பழச்சாறுடன் சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்
Read More

ஒரு விரலில் உடலைத் தாங்கி படைக்கப்பட்​ட உலக சாதனைஒரே விரலில் உடலைத் தாங்கி படைக்கப்பட்​ட உலக சாதனை
by admin - 0

உடற்பயிற்சிகளின் போது இரு கைகளிலுள்ள விரல்களை பலப்படுத்தும் பொருட்டு உடலின் பாரம் முழுவதையும் விரல்களில் தாங்கி செய்யப்படும் உடற்பயிற்சியை கொண்டு ஒருவர் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
பத்து விரல்களையும் பயன்படுத்தி குறித்த உடற்பயிற்சியை மேற்கொள்வதே கடினமாக காணப்படும் வேளையில் ஒரே ஒரு விரலை பயன்படுத்தி 30 செக்கன்களில் அதிகதடவைகள் குறித்த பயிற்சியை மேற்கொண்டு உலகசாதனை நிகழ்த்தியுள்ளார்.
Read More

திருமணத்துக்கு Byee... சினிமாவுக்கு Hay! - அனன்யா பல்டி
by admin - 0

திருமணம் பற்றி இறுதி முடிவெடுக்கவில்லை. சினிமாவில் பெரிய அளவு சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன், என்று பல்டியடித்துவிட்டார் அனன்யா.



நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான கேரள நடிகை அனன்யா, ஒரு பெரிய நடிகையாக வருவார் என எதிர்ப்பார்க்கப்ட்டார். குறிப்பாக அவரது கடைசி படமான எங்கேயும் எப்போதும் நன்றாக ஓடியதால் நிறைய வாய்ப்புகள் அவருக்கு வந்தன.
இந்த நேரத்தில்தான் கேரள தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் அவருக்கு திடீரென திருமணம் முடிவாகி நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கும் என்றும் திருமண தேதியை சீக்கிரம் முடிவு செய்து அறிவிப்போம் என்றும் அனன்யா கூறினார்.

முன்னணி நடிகையாக வளரும்போது அனன்யா திருமணத்துக்கு சம்மதித்தது தமிழ், மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து அனன்யாவின் தந்தை போலீசில் ஆஞ்சநேயன் மீது புகார் அளித்தார். முதல் திருமணத்தை மறைத்து என் மகளை மணக்க முயற்சித்த ஆஞ்சநேயலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருப்பதாக தெரிவித்தார். அனன்யாவும், இந்த விஷயம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்றும், ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன் என்றும் உறுதியாக அறிவித்தார். திருமண ஏற்பாடுகளும் நடந்தன.

ஆனால் தற்போது அனன்யா தனது முடிவை மாற்றிக் கொண்டு திருமணத்தை நிறுத்திவிட்டாராம்.

மீண்டும் முழு நேரம் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறாராம்.
திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது, ''திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் அவசரப்பட முடியாது.

சினிமாவில் அதிகம் நடிக்க விரும்புகிறேன். அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது. சினிமாவில் நிறைய சாதித்த பிறகே எனக்கு திருமணம் நடக்கும்,'' என்றார்.
ஆஞ்சநேயனுடன் அனன்யா திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.
Read More

March 24, 2012

விஜய் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடக்கிறது?
by admin - 0

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் இரண்டு பட்டு நிற்கிறதோ என கேள்வி எழுப்பும் அளவுக்கு சங்க நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு அறிக்கைகள் விடுவதும் பேட்டிகள் தருவதுமாக உள்ளனர்.

பெப்சி - தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினையால் படப்பிடிப்புகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் மகன் விஜய் நடிக்கும் துப்பாக்கி படப்பிடிப்பு மட்டும் எந்த வித தடங்கலும் இல்லாமல் நடப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இது குறித்து இயக்குநரும், தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான கேயார் கூறுகையில், "தற்போது நடைபெற்று வரும் தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

இயக்குனர் பாலசந்தர் இப்பிரச்னையில் தலையிட இருப்பதால் விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் பெப்சி பதவியில் இருந்து பாலசந்தர், பாரதிராஜா இருவருமே கடந்த 19ம் தேதி விலகிவிட்டனர்.

பதவியில் இல்லாத போது எப்படி அவர் இந்த பிரச்னையில் தலையிட முடியும். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக கருதுகிறேன்.

36 நாட்களாக மற்ற படப்பிடிப்புகள் நடைபெறாத போது, விஜய் நடிக்கும் துப்பாக்கி படப்பிடிப்பு மட்டும் எப்படி நடைபெற்றது என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடையே எவ்வித ஒற்றுமையும் இல்லை என்பதே இதை காட்டுகிறது," என்று தெரிவித்தார்.

அதேநேரம் தமிழ் சினிமாவுக்கென்று தனியாக தொழிலாளர் அமைப்பு வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Read More

March 23, 2012

பிரபாகரன் போராட்டம் சரியானதே..
by admin - 0

தனி ஈழத்துக்கான
பிரபாகரன்
போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான்
முட்டாள் இல்லை. அவர் போராட்டம்
சரியானதே. ஆனால் சகோதரச்
சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக்
கெடுத்தது என்று திமுக தலைவர்
கருணாநிதி கூறியுள்ளார். ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்
நிறைவேறிய பிறகு செய்தியாளர்களைச்
சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய
கேள்வி, தமிழ் ஈழம் பற்றியதுதான்.
அதற்கு அவர் அளித்த பதில்களின்
தொகுப்பு: ஈழத்தில் நடந்த சகோதர யுத்தம்தான்
தமிழீழம் உருவாவதைத்
தடுத்துவிட்டது என்பது என்
கருத்து என்றார் கருணாநிதி. அப்போது, புலிகள் நடத்திய சகோதர
யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள்.
தந்தை செல்வா போன்றோர்
அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போதும் தமிழர்கள்
மீது அத்துமீறல்கள் நடந்தன. அதனால்தான் நாங்கள் போராடத் தொடங்கினோம்'
என்று பிரபாகரன் சொல்லியிருந்தாரே?
அது தவறா? என்று ஒரு நிருபர் கேட்டார். உடனே பதிலளித்த கருணாநிதி:
"பிரபாகரன் போராட்டத்தைக்
குறை கூறும் அளவுக்கு நான் முட்டாள்
அல்ல. அவர் முன்னெடுத்த போராட்டம்
சரியானதே. அதை திமுகவும்
ஆதரிக்காமலில்லை. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான்
சொன்னது அவர்களைப்
பற்றி மட்டுமே அல்ல. ஆனால் பிரபாகரனும் முகுந்தனும்,
பத்நாபாவும், ஸ்ரீசபாரத்தினமும் மோதிக்
கொண்டு அதில் ரத்த
ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த
வேதனையோடு அப்போதும் தடுத்தேன்.
இப்போதும் அந்த நிலை வரக்கூடாது," என்று வேண்டுகிறேன்.
Read More

March 22, 2012

உடம்பால் மட்டும் ஊனமான பெண் உயரத்தில் இருந்து குதித்து சாகாசம் video in
by admin - 0

2008 விபத்தில் இடுப்புக்கு கிழ் இயங்காமல் போன் பெண் இந்த துணிகர செயலை செய்துள்ளார்




wheelchair இருந்தே இவர் குத்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

130 வருடங்களுக்​கு முந்தைய மம்மி சீனாவில் கண்டுபிடிப்​பு
by admin - 0

பெண் ஒருவரின் தோற்றத்தில் காணப்படும் இந்த மம்மியின் உடலில் தோல் காணப்படுவதுடன், பற்களும் பெருமளவில் சிதைவடையாமல் காணப்படுகின்றது.பியூயியான் மாநிலத்திலுள்ள நின்ங்டே எனும் இடத்தில் காணப்பட்ட இந்த மம்மிக்கு அருகில் கல்வெட்டு ஒன்றும் காணப்பட்டுள்ளது. அதில் கடந்த 1882ம் ஆண்டு இந்த மம்மி புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.





Read More

திருப்பதியில் நயன்தாரா!
by admin - 0

மீண்டும் பரபரப்பாக செய்திகளில் அடிபட ஆரம்பித்துவிட்டார் நடிகை நயன்தாரா. முன்பு காதல், மோதல் சமாச்சாரங்களுக்காக. இப்போது அடுத்தடுத்து பெரிய சினிமாக்களில் நடிக்க ஒப்பந்தமாவதற்காக. காதல் முறிவின் பின் மதம் மாறிய நயந்தாரா என்பது கூறிப்பிடத்தக்கது.



ஏற்கெனவே அஜீத், கோபிசந்த் படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா, தெலுங்கிலும் இரு படங்களுக்கு ஓகே சொல்லி, ஒன்றில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.
தமிழில் இன்னும் இரு பெரிய படங்களுக்கு அவருடன் பேசி வருகிறார்கள் இயக்குநர்கள்.
இத்தனை ஆண்டுகள் கடந்தும், தனக்கு இருக்கும் மவுசையும் வரவேற்பையும் பார்த்து அகமகிழ்ந்துபோன நயன்தாரா, நேற்று காலை 10 மணிக்கு திருப்பதிக்கு சென்றார்.
ஏழுமலையானை மனமுருக வேண்டிக் கொண்டு திரும்பிய அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திருமலையில் திரண்டுவிட்டனர்.
அவர்களுக்கு 'டாட்டா' காட்டிக் கொண்டே, 'திருமலைக்கு வந்து தரிசனம் முடித்த பிறகு மிகுந்த நிம்மதியை உணர்கிறேன்,' என்று கூறியபடி காரில் ஏறிக் கிளம்பினார் நயன்தாரா.
Read More

ஜெனீவாவில் அமெரிக்க பிரேரணை வெற்றி !
by admin - 0

பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும், வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆக மொத்தம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இதில் கலந்து கொண்டு பேசிய நாடுகளில் கியூபா, சீனா, எக்குவடோர், ரஷ்யா, உருகுவே, கிரிகிஸ்தான்,தாய்லாந்து,பிலிப்பைன்ஸ் , உகண்டா,மாலைதீவு,பங்களாதேஷ் என்பன இலங்கைக்கு ஆதரவாகப் பேசின. அதாவது தீர்மானத்தை எதிர்த்தன. உள்நாட்டுப் பொறி முறையே போதும் என்பதுதான் அவர்களின் வாதம்.

ஆனால் இங்கு பேசிய இலங்கையின் பிரதிநிதி மகிந்த சமரசிங்கே, 'கண்ணாடி வீட்டிலில் இருந்து கல் எறிய வேண்டாம்' என்று எச்சரித்ததோடு, இதற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோமென சூளுரைத்தார்.


காலை 9.30 மணிக்கு ஆரம்பமான அமர்வுகளில் நடைபெற்ற விடையங்கள் பின்வருமாறு !


அமெரிக்கா: முதலில் பேசியது. அது தான் கொண்டுவந்துள்ள பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவாலம் எனத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கியூபா நாட்டு பிரதிநிதி பேச ஆரம்பிக்கிறார் !

கியூபா நாடு: கியூபா நாட்டுப் பிரதிநிதி பேசும்போது, இப் பிரேரணையை வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்க கேட்டுக்கொண்டார்.

அமெரிக்கா: அமெரிக்கா இதனை நிராகரித்தது.

கியூபா நாடு: குறுக்கிட்டு, இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என்றும், இலங்கையின் உள் நாட்டு விவகாரங்களில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தலையிடக்கூடாது என்றும், கூறுகிறது. இலங்கையை மிகவும் ஆதரித்து பேசியுள்ள முதலாவது நாடு கியூபா ஆகும் !

பெல்ஜியம் நாடு: பெல்ஜியம் தாம் ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையை ஆதரிப்பதாகவும் தெரிவித்தது.

செக் ரிப்பப்பிளிக்: இந் நாடு அமெரிக்காவுக்கு ஆதரவாகப் பேசியதோடு, தாம் பிரேரணையை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

சீனா: சீனா மிகவும் குறுகிய நேரமே பேசியுள்ளது. தாம் இந்தப் பிரேரணையை விரும்பவில்லை என்பது அவர்களின் வாதம் !

இலங்கை: இலங்கைக் குழு பேசும்போது கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியவேண்டாம் என அமைரிக்காவைப் பார்த்து எச்சரித்தார் மகிந்த சமரசிங்க. அவர் பேச்சு மிகவும் கடுமையான தொணியில் அமைந்தது.

இதனை அடுத்து கியூபா நாடு பேசியுள்ளது: அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம், தாக்குதல் நடத்துகிறது. குவாண்டமானோ சிறைச்சாலையில் கைதிகளை படு மோசமாக நடத்துகிறது. லிபியா போன்ற நாடுகளில் ஊடுருவுகிறது இதனைப் பற்றி ஏன் இம் மாநாட்டில் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய கியூபா நாட்டுக் குழு, அமெரிக்கவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு 2009ம் ஆண்டு ஆயுதங்களை வழங்கியது என்ச் சாடினார். இன்று நடைபெறும் மாநாட்டில் கியூபா நாடு பேச்சாளர் மேசையில் இருப்பதால், அவர்கள் தொடர்ந்து தமது விமர்சனங்களை முன்வைக்ககூடியதாக உள்ளது:


ஈகுவட்டோர்: அமெரிக்காவின் பிரேரணைய எதிர்த்தும், இலங்கைக்கு ஆதரவாகவும் பேசியுள்ளது.


ருஷ்யா: ருஷ்யா பேசும்போது உள் நாட்டு விடையங்களில் தலையிடவேண்டாம் என்று கூறியது: அமெரிக்க பிரேரணைய எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளது.


உருகுவே: அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவு.


குகிதிஸ்தான்: நடு நிலையகப் பேசியுள்ளது.


தாய்லாந்து: அமெரிக்க பிரேரணைக்கு ஆதவாகப் பேசியுள்ளது.


நைஜீரியா: அமெரிக்காவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது.


பிலிப்பைன்ஸ்: தாம் அமெரிக்க பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகப் பேசியுள்ளது.


உகண்டா : தாம் அமெரிக்காவுக்கு எதிராப் பேசியுள்ளது. அது இலங்கையை ஆதரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.


சீனா: தாம் எதிர்ப்பதாக திரும்பவும் தெரிவித்துள்ளது. அது இலங்கையை ஆதரித்து பேசியுள்ளது.


மாலைதீவு: இந் நாட்டு தூதுக்குழு தெரிவிக்கையில், தாம் இலங்கையின் நண்பர்கள் எனவும் அதனால் தாம் அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணைய எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.


இந்தோனேசியா: தாம் அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணையை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.


பங்களாதேஷ்: தாமும் அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணைய எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.


மெக்சிகோ நாடு: மெக்சிக்கோ தூதுக் குழு தெரிவிக்கையில், தாம் அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணைய ஆதரிப்பதாத் தெரிவித்துள்ளனர். இன்று காலை தம்மை அணுகிய சிலர் தமக்கு சில விளக்கங்களைக் கொடுத்துள்ளதாகவும், அதனால் தாம் உண்மை நிலையை அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பிரித்தானிய தமிழர் பேரவையின் அங்கத்துவர்களாகக் கூட இருக்கலாம். ஏன் எனில் BTF அங்கத்தவர்கள் பலர், சிரமங்களையும் அச்சுறுத்தல்களையும் பாராது, ஐ.நாவில் பல நாட்களாக பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து பிரித்தானிய நேரம் காலை 10.47 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பமானது !

Read More

March 21, 2012

சூர்யாவின் ஒரு கோடி நிகழ்ச்சியில் அஜித்தும்! விஜய்யும்!
by admin - 0

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” என்ற தலைப்பில் நடிகர் சூர்யா நடத்தும் ஒரு கோடிக்கான கேம் ஷோ ஒன்று ஒளிபரப்பாகிறது.இதில் அவ்வளவு எளிதில் விடை கண்டுபிடிக்க முடியாத அறிவுப்பூர்வமான(!) பல கேள்விகள் தினமும் கேட்கப்படுகின்றன. சூர்யா ஒரு நடிகன் என்பதை ஒதுக்கிவிட்டு அனைத்து ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்க்கின்றனர். நிகழ்ச்சியில் மற்ற நடிகர்களைப் பற்றிய கேள்விகள் வரும் போது சூர்யாவிடம் அவர்களை பற்றி பேச மக்கள் சிறு தயக்கம் காட்டுகின்றனர்.


ஆனால் சூர்யா சாதாரணமாக அவர்களை பற்றி பேசுகிறார். அஜித், விஜய் ஆகியோரைப் பற்றி சூர்யா இந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். “ திருமணத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிக்கு பெயர் என்ன?” என்று சூர்யா கேட்ட போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தலை தீபாவளி என்பதை தல தீபாவளி என்று மாற்றி(எப்புடியெல்லாம் ட்விஸ்ட் பண்ணுறாங்க பாருங்க) ”உங்க முன்னாடி எப்படி தல பற்றி பேசுவது” என்று கேட்டார். அதற்கு சூர்யா “ஓ நீங்க அப்படி வர்றீங்களா. தல எப்பவுமே தல தாங்க” என்று கூறினார். மற்றொரு நாள் நடந்த நிகழ்ச்சியில் ”நண்பன் திரைபடத்தில் வரும் பிரபலமான ஆங்கில வசனம் எது?” என்று கேட்டார். நண்பன் படம் விஜய் நடித்த படம் என்பதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சூர்யாவிடம் “விஜய் நல்லவரா? கெட்டவரா?” என்று கேட்டார்.

அந்த கேள்விக்கு சூர்யா “அவர் ஏன் கெட்டவரா இருக்கனும். அவரது படங்களை பார்த்து நான் பிரம்மித்துள்ளேன். கல்லூரியிலிருந்தே அவரது வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவன் நான். எனது ”அகரம் பவுண்டேஷனு”க்காக ஒரு குறும்படத்தில் நடிக்க அவருக்கு போன் செய்து கேட்ட போது ”அதுக்கென்ன மாமா பன்னிடலாம் மாமா” என்று கூறினார்.

அவருடைய காமெடியும், தன்னம்பிக்கையும் தான் அவரிடம் எனக்கு பிடித்தது” என்று பதிலளித்தார். அதன் பின் அந்த கேள்விக்கு மிகவும் யோசித்து(!) சரியான பதில் சொல்லப்பட்டது.
Read More

ஐ நா தீர்மானத்துக்கு வட பகுதி மக்கள் ஆதரவு
by admin - 0

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் வடக்கில் உள்ள மக்கள் பல வகையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். மூன்று வருடங்கள் முடிந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான தமிழர்கள் வலியுறுத்துகின்றார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் பிரேரணையைத் தாங்கள் வரவேற்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு அரசு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்றும் ஒருவர் தெரிவித்தார். போரின் இறுதிக் காலத்தில் பிணங்களின் மீது தாம் நடந்து வந்ததாக கண்ணீரோடு குறிப்பிட்ட மற்றொருவர் பல பிணங்கள் பதுங்குகுழிகளிலேயே புதைக்கப்பட்டதாகக் கூறினார்.கட்டாய ஆள்சேர்ப்பு உள்ளிட்ட சில விடயங்களை விடுதலைப் புலிகள் செய்தார்கள் என்றாலும் அரசு தரப்புதான் அதிக அளவிலான அழிவுகளை ஏற்படுத்தியது என்று தமிழோசையிடம் தெரிவித்த ஒரு பெண்மணி, இனியாவது மக்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்றார். கடந்த கால சம்பவங்களுக்கு பொறுப்பு சுமத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
போர் முடிந்தும் வடக்கில் தொடர்ந்து அதிக அளவிலான இராணுவத்தினர் இருப்பதால் சுதந்திரமாக நடமாடமுடியவில்லை தம்மால் சுதந்திரமாக ஏதும் கருத்து கூற முடியவில்லை என்றும் வேறு சிலர் கூறினர்.
சிங்களவர் கருத்து
வவுனியாவைச் சேர்ந்த சிங்களவரான ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டுமே நீதி வழங்கப்பட வேண்டும் என்ற தோரணையில் இந்த பிரேரணை அமைந்திருப்பது வருத்தத்திற்குரியது என்றார். .
"யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தமிழ் மக்களைப் பற்றி மட்டுமே பேசப்படுகின்றது. ஆனால் சிங்கள மக்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி பேசுவதற்கு எவருமில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நீதி வழங்குமாறு கேட்பதற்கும் எவருமில்லை. யுத்த காலத்தில் பௌத்த குருமார்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களது கொலைக்குக் காரணமானவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள். ஆனால் சிங்கள மக்களுக்கு நீதி வழங்குவதற்குத்தான் எவருமில்லை" என்றார் அவர்.

தமிழோசை
Read More

பணத்தை வாரியிறைத்த ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை-விஜயகாந்
by admin - 0


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவை தேமுதிக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை
கரன்சிக்கும் கட்சிகளுக்கும் இடையே நடந்த போட்டி என விஜயகாந்த் அறிக்கை
பணத்தை வாரியிறைத்த ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே சலுகைகளை வாரி வழங்கியதாக விஜயகாந்த் குற்றச்சாட்டு
Read More

சங்கரன்கோவில்-68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி
by admin - 0

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.


இந்தத் தொகுதியில் அதிமுக தொடர்ச்சியாக 5வது முறையாக வெற்றி பெற்று தனது கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு 94,977 வாக்குகள் கிடைத்தன. 2வது இடத்தைப் பிடித்த திமுகவின் ஜவஹர் சூரியக்குமாருக்கு வெறும் 26,220 வாக்குகளே கிடைத்தன.

3வது இடத்தை மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 4வது இடத்தை தேமுதிகவின் முத்துக்குமாரும் பெற்றனர்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பதிவான 16 ஓட்டுக்களில் அதிமுகவுக்கு 13 ஓட்டுக்களும், மதிமுகவுக்கு 3 ஓட்டுக்களும் கிடைத்தன.

ஆரம்பத்திலிருந்தே முத்துச்செல்வி முதலிடத்தில் இருந்து வந்தார். அவரை விட வெகுவாக பின்தங்கியிருந்தனர் மற்ற வேட்பாளர்கள்.

கடந்த தேர்தலில் இத்தொகுதியை அதிமுகவின் கருப்பசாமி வென்றார். அவரது மரணத்தைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் வெல்லுங்கள் பார்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கும், பிற கட்சிகளுக்கும் சவால் விட்டிருந்தார். அந்தப் பின்னணியில் தேர்தல் நடந்திருப்பதாலும், மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்ததாலும் இந்தத் தேர்தலின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்கு விவரம்:

முத்துச் செல்வி - அதிமுக - 94,977
ஜவஹர் சூரியக்குமார் - திமுக - 26,220
சதன் திருமலைக்குமார் - மதிமுக -20,678
முத்துக்குமார் - தேமுதிக - 12,144
முருகன்- பாஜக - 1633
Read More

நயன்தாரா ஆரியா காதல் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றினார் நயன்
by admin - 0


நடிகர் ஆர்யா புதிதாக கட்டியிருக்கும் வீட்டில் நடிகை நயன்தாரா குத்துவிளக்கேற்றினார்.இதனால் ஆர்யா நயன் கதலா? நயன் வாழ்க்கையில் உண்டுபன்னியுள்ளதா? நடிகர் ஆர்யா சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு வீடு வாங்கியிருக்கிறார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் நடந்த இந்த விழாவிற்கு நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்திருந்தார் ஆர்யா.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை நயன்தாரா, புதுமனை புகுவிழாவில் குத்துவிளக்கேற்றினார். பிரபுதேவாவை பிரிந்தபின் நயன்தாரா சென்னை வருவது, இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்குவதற்காக சென்னை வந்தார். அதன்பிறகு அவர் ஆர்யா வீட்டின் புதுமனை புகுவிழாவுக்காக இப்போது சென்னை வந்திருக்கிறார். இந்த விழாவில் நடிகர் விஷால், பட அதிபரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றார்கள். புதிய திருப்பங்களை
Read More

March 20, 2012

இணையத்தில் சக்கை போடு போடும் விஜய் கீதம்! (காணொளி)
by admin - 0

சிம்புவின் காதல் கீதம், தனுஷின் சச்சின் கீதம் என்பவற்றைத் தொடர்ந்து தற்பொழுது விஜய்க்கும் தளபதி கீதம் உருவாகி உள்ளது.
தளபதி கீதம் என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த ஆல்பத்தை எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்தில் இளம் பெண்ணை காதலிக்கும் கதாபாத்திரத்தில நடித்த வாட்சன் உருவாக்கி இருக்கிறார்.
விஜய்க்கு கீதம் உருவாக்கியது ஏன்? என்பது குறித்து வாட்சன் கூறுகையில், விஜய் தான் எனக்கு மிக பிடித்தமான நடிகர். அவருடைய நடிப்பு, ஸ்டைல், நடனம் எல்லாமே எனக்கு பிடிக்கும்.
அவருக்காக ஒரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்பநாள் ஆசை. அதன்படி இந்த ஆல்பத்தை உருவாக்கினேன். தற்போது யூடியூப்பில் இந்த ஆல்பம் வெளியாகி இருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆல்பத்தை பார்த்து ரசித்து இருக்கிறார்கள். மேலும் இந்த ஆல்பத்தை பார்த்து விஜய் சாரும் என்னையும் எனது குழுவையும் அழைத்து பாராட்டினார்.
அவர் அழைத்து பாராட்டியது ரொம்பவே மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருக்கும் வாட்சன், இப்போது ஒரு பாட்டு தான் வெளியிட்டு இருக்கிறோம். இனி தொடர்ந்து இரண்டு, மூன்று பாடல்களை வெளியிட உள்ளோம் என்று கூறியுள்ளார்.
Read More

சீனாவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
by admin - 0





ஒவ்வொன்றும் 10 மீற்றர் உயரமும், 10 டன் எடையுடன் காணப்படுகிறது.மேலும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் காணப்பட்ட இத்திமிங்கலத்தினை இரவோடு இரவாக வெட்டி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More

200 அடி உயரத்தில் கயிற்றின் மீது நடக்கும் அதிசய இளைஞர்
by admin - 0

3 வயதுடைய ஜூன்கி மிச் என்ற இளைஞர் தரை மட்டத்திலிருந்து 200 அடிகள் உயரத்தில் உள்ள கயிற்றின் மீது நடந்து சாதித்துள்ளார். இந்த அதிசய சம்பவமானது மொனாகோ எனும் இடத்தில் நிகழந்துள்ளது.



Read More

100 ஆண்டுகளுக்கு முந்தைய காகித விமானங்கள் கண்டெடுப்பு-ஆராட்சி தொடர்கிறது
by admin - 0





இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் டெவோன் நகரில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இருக்கிறது. இதனை சீரமைப்பு பணியை சமீபத்தில் தொடங்கினார்கள்.
அப்போது அதன் கூரைப்பகுதியை இடித்தபோது அங்கு ஏராளமான காகிதத்தில் செய்த விமானங்கள் போன்றவை இருந்தன. அத்துடன் கல்மாவினால் செய்த பென்கில்களும் இருந்தன.இவைகள் 100 ஆண்டுகள் ஆகியும் அழிவடையாமல் இருந்ததால் அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள். இந்த காகித விமானங்கள் பிரத்தியோக காகிதங்களினால் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது
Read More

March 19, 2012

சில தினங்கள் ஒரே வீட்டில் தங்கியதால் காதல் ஏற்பட்டது-சினேகா
by admin - 0


நடிகை சினேகா தனது திருமண செலவுக்காக பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று பரபரப்பாக கூறப்படுகின்றது.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியவர்கள் நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும். இந்தப் படத்துக்காக சில தினங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்க நேர்ந்தபோது காதல் மலர்ந்ததாம். முதலில் காதல் குறித்து மௌனமாக இருந்து வந்த அவர்கள் பிறகு ஒப்புக் கொண்டனர். இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டவே அவர் விரைவில் தம்பதிகளாகின்றனர்.

அவர்களின் திருமணம் வரும் மே மாதம் 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமணத் தேதி நெருங்குவதால் சினேகா தான் ஒப்புக் கொண்ட படங்களை வேக, வேகமாக முடித்துக் கொடுத்து வருகிறார்.திருமணத்துக்கு செலவுகலை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முன்னதாக கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்க சினேகா தேர்வானார். ஆனால் படப்பிடிப்பு மே மாதத்தில் நடக்கும் என்று கூறியதால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் தனது திருமணச் செலவுக்காக சொந்த ஊரான பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மண்டபம் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.ஆனால் அவர் விலக்கம் எதையும் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை
Read More

உண்மையைக் கூறமுடியாத கட்டத்தில் நிற்கும் தமிழினம் -உதயன்
by admin - 0

"வீட்டுத்திட்டம் தருவதற்கு யாழ்ப்பாணத்தில் பதிய வேணும் நாளைக்கு என்று கூறித்தான் எங்களை இராணுவத்தினர் வரச்சொன்னார்கள் நான் காலமை வரும்போது பிந்தி விட்டது அதனால் என்னை விட்டிட்டு வந்திட்டினம் நான் வீட்டுத்திட்டத்திற்கு கட்டாயம் பதிய வேணும் எண்டு என்ரை காசைக் கொடுத்து பஸ்சில வந்தனான் ஆர்ப்பாட்டம் என்று தெரியாது இங்க வந்தாப் பிறகுதான் அர்ப்பாட்டம் என்று தெரியும் நல்லா ஏமாத்தீட்டாங்கள்"

இது கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ஏழைத்தாயின் உள்ளக் குமுறல். இவ்வாறு தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு மக்களிடத்திலும் இருந்த ஆதங்கமாக இருந்தது. கனவுகளுடன் குழந்தைகளையும் கொழுத்தும் வெய்யிலில் அழைத்துக்கொண்டு எத்தனையோ தாய்மார் வந்திருந்தனர்.


மனதில் ஆதங்கத்தை சுமந்து கொண்டு வெளியில் உண்மையைக் கூறுவதற்கு தைரியமற்ற திராணிகளாக நின்றார்கள். நன்றாக எங்களை ஏமாற்றி விட்டார்கள் என தட்டிக் கேட்ட ஆளில்லாது தம்மைத் தாமே நொந்து கொண்டனர்


கூட்டம் என்றால் அமைச்சர்கள் யாராவது வருவார்கள் தமது குறைகளைக் கூறி தீர்த்துக் கொள்ளலாம் என்று கற்பனைகளுடன் வந்தவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான்.

கடந்த சனிக்கிழமை ஆளும் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.அங்கஜன தலைமையிலான அணி ஜெனீவாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இதற்கு தென்மாகாணம் உட்பட நாடளாவிய ரீதியில் இருந்தும் பெருந்தொகையான மக்கள் இராணுவத்தினராலும் கட்சி ஆதரவாளர்களினாலும் உண்மைக்கு புறம்பான கதைகளைக் கூறி அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி அழைத்து வரப்பட்டனர்.


இது மட்டுமல்ல தமது சொந்தத் தேவைகளுக்கான வீதியால் சென்றவர்கள் இராணுவத்தினரால் பிடித்து பலவந்தமாக ஏற்றப்பட்டனர். அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்டு தமது முகாம்களுக்கு வருமாறு கட்டளையிட்டனர் இவர்களை எல்லாம் திரட்டிய கூட்டமே இங்கு பெருந்தொகையாகி நின்றது.

உண்மையைச் சொல்லி இருந்தால் ஒரு பத்துப் பேர் கூட வந்திருக்க மாட்டார்கள்.


எவ்வாறெல்லாம் அரசினால் எமது அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.


இத் தருணத்தில் மக்களது யதார்த்த நிலைமையினைக் கேட்டறிய முனைந்த ஊடகவியலாளர்களும் காவற்றுறை, சீ. ஐ. டி என்று குறிப்பிடப்பட்ட சிலரினால் சோதனையிடப்பட்ட சம்வமும் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More

சுப்பெர் மாக்கட்டில் உலாவும் பேய் விடியோ இணைக்கப்பட்டுள்ளது
by admin - 0


அவுஸ்ரெலியாவில் உள்ள ஒரு சுப்ப மர்கெட்டில் அதன் விடியோவில் பதிவாகியது பேய்களின் நடமாட்டம். கடை உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு வீடு சென்றவுடன் இரவு 11.30 மனியளவில் தானியங்கி இயங்கி இந்த அரிய காட்சிகளை எடுத்து தள்ளியுள்ளது.விடியோவை பார்த்து முடிவு எடுங்கள்
Read More

21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி பாடிய பாட்டு
by admin - 0


21 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் பின்னணி பாடினார். இந்த முறை கோச்சடையான் படத்துக்காக அவர் பாடினார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் குதுகலத்தில் திழைத்துள்ளார்கள்.
1991-ம் ஆண்டு மன்னன் படத்தில் அடிக்குது குளிரு... என்ற பாடலை எஸ் ஜானகியுடன் இணைந்து பாடினார் ரஜினி. அந்தப் பாடலுக்கு இசை இளையராஜா. அந்தகாலதில் இந்த பாடல் பெரும் கிட் ஆகியது அது போல் இந்த பாடலும் வரும் என எதிர்பார்கப்படுகிறது.

இத்தனை ஆண்டுகளில் பல முறை அவரை பாடுமாறு பல இசையமைப்பாளர்கள் வற்புறுத்தியும் சம்மதிக்காமல் இருந்தார் ரஜினி. இப்போது மீண்டும் ரஜினி தனது அடுத்த படமான கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சௌந்தர்யா ஆகியோர் உடனிருந்தனர்.

மிக மகிழ்ச்சியுடனும் மனதிருப்தியுடனும் இந்தப் பாடலை அவர் பாடிக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ரஹ்மான் தெரிவித்தார்.
Read More

March 17, 2012

கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்
by admin - 0


கோச்சடையான் படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை லண்டன் புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

லண்டனில் வரும் 19-ம் தேதி கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். பாடல் காட்சிகள், டாக்கி போர்ஷன் என 40 சதவீதம் ஷூட்டிங் லண்டனில். பின்னர் தமிழகத்திலும் கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் இதற்கு முன்பு பார்க்காத புதிய, துடிப்பான ரஜினியை நீங்கள் பார்க்கலாம்.

படம் இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

ரஜினியுடன் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் வந்திருந்தார். அவரிடம் இந்தப் படத்துக்குப் பிறகு ராணாவா? என்று நிருபர்கள் கேட்டபோது, "ஆமாம், கோச்சடையானுக்குப் பிறகு ராணாதான். ஆனால் அதுபற்றி அந்த நேரத்தில்தான் அறிவிப்பு வரும்," என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
Read More

ஓட்டுக்கு பணம் கொடுத்து மாட்டிக் கொண்ட அதிமுகவினர்
by admin - 0

இன்று (16.03.2012) கலிங்கப்பட்டியில் வீடு தோறும் ஓட்டுக்கு ரூ.1000 என கொடுத்து வந்த அதிமுகவினர், ஒரு குடும்பத்திடம் “உங்க வீட்ல ஏழு ஓட்டு இருக்கு.. இந்தாங்க ஏழாயிரம்..” என்று பணத்தை நீட்டியிருக்கின்றனர்.

அந்தக் குடும்பமோ “பணம் எங்களுக்குத் தேவையில்லை..” என்று மறுத்து விட்டு, இந்தத் தகவலை அதே கிராமத்தில் வீட்டில் இருந்த வைகோ விடம் போய்ச் சொல்லியிருக்கிறது.



இதனைத் தொடர்ந்து, எப்படியாவது கலிங்கப்பட்டியில் மதிமுகவைக் காட்டிலும் அதிக ஓட்டுக்களை வாங்கி விட வேண்டும் என்று மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுக்கு ஏற்ப அங்கு பண மழை பொழிந்து கொண்டிருந்த அதிமுகவினர் 4 பேரை ஊர்க்காரர்கள் பணமும் கையுமாகப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

இந்த தகவலை மேலிடத்துக்குத் தெரிவித்து விட்டு, நேராக வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டுக்குச் சென்றது போலீஸ். “அதிமுகவினரை அடித்துக் காயப்படுத்தி போலீஸிடம் ஒப்படைத்தது உங்கள் வீட்டில் இருக்கின்ற 5 பேர் தான்.. அவர்களிடம் விசாரிக்க வேண்டும்..” என்று அங்கிருந்த வைகோ விடம் கண்டிப்பு காட்டியிருக்கிறார் ஏ.டி.எஸ்.பி. மகேஷ்.


அப்போது ஊர்க்காரர்களும் அங்கு திரண்டு விட, கொந்தளித்து விட்டார் வைகோ. “பிடிச்சுக் கொடுத்தவங்க என் வீட்டுல இல்லை,.. அதுக்காக விசாரணைக்குன்னு என் வீட்ல இருக்கிற அஞ்சு பேரைக் கூட்டிக்கிட்டுப் போயி அரெஸ்ட் பண்ண நினைக்கிறது நடக்காது.

நான் கேட்கிறேன்.. இப்பவும் ஊருக்குள்ள பணம் கொடுத்துக்கிட்டிருக்காங்களே ஆளும் கட்சிக்காரங்க.. அவங்களைப் பிடிக்கிறத விட்டுட்டு, பிடிச்சுக் கொடுத்தவங்களத் தேடி அலையறீங்களே.. உங்களின் கடமை உணர்வு என்னாயிற்று?

ஜெயலலிதா பிரச்சாரத்துகு வந்த போது அவர் பின்னால 1000 காருக்கு மேல வந்துச்சே.. அப்பத்தானே கோடி கோடியா தொகுதிக்குள்ள பணம் வந்துச்சு.. அந்தக் காரையெல்லாம் ஏன் செக் பண்ணல? அட.. ஜெயலலிதாவின் கைக்கூலிகளே..!” என்று ஆங்கிலத்தில் வைகோ பொரிந்து தள்ள.. எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பியிருக்கின்றனர் காக்கிகள்.


இதைத்தொடர்ந்து, மார்ச் 18ந் தேதி வாக்குப்பதிவு நடந்தால் தேர்தல் நியாய மானதாகவும், சுதந்திரமானதாகவும், நேர்மையான தாகவும் நடக்காது. ஜனநாயகத்துக்கு எதிரானதாக அமையும்.

இந்தச் சூழ்நிலையில் நியாயமான தேர்தல் நடத்த சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலை பிந்திய தேதிக்கு ஒத்திவைக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையரை வேண்டிக் கொள்கிறேன் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் குரோசிக்கும், அதன் நகலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வேட்பாளர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் அனுப்பியுள்ளனர்.


சி.என்.இராமகிருஷ்ணன்
நக்கீரன்


வசமாக மாட்டிய அ.தி.மு.க




Read More

March 16, 2012

விவேக் வடிவேல் மோதல்
by admin - 0


வடிவேலு சிங்கமுத்துக்கு இடையில் நடந்த பெரும் சீரியஸான பெரும் மோசடி பிரச்சணையை விவேக் காமடியாக படமாக்கியதால் இந்த மோதல் நிலமை எற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பாபு கே விஸ்வநாத் இயக்க, கரண் ஹீரோவாக நடித்துள்ள படம் இது. முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது. கொஞ்சம் டிலே ஆகி, அடுத்த வாரம் வருகிறது.

விவேக்கை நேரில் பார்த்தபோது, 'வடிவேலுவுக்கும் சிங்கமுத்துக்கும் நடுவே எழுந்த ரியல் எஸ்டேட் பிரச்னையை கந்தா படத்தில் சீண்டியிருக்கிறீர்களாமே?' என்று கேட்டோம்.
அதற்கு அவர், "கந்தா படத்தில் ரியல் எஸ்டேட் பிரச்னையை வைத்து நான் ட்ராக் பண்ணியிருப்பது உண்மைதான். ஆனால், இது காமெடி ட்ராக் முடிந்து ஷூட்டிங் முடிந்த பிறகுதான் வடிவேலு பிரச்னை வெளிவந்தது.
அதற்கும் இதற்கும் எந்த தொடர்பு இல்லை.. கந்தா பட்ஜெட் படம் என்பதாலும், தியேட்டர்கள் கிடைக்காததாலும் இந்தப் படம் இப்போது தான் வருகிறது. வடிவேலுவிடம் கூட இதுதொடர்பாக பேசிவிட்டேன்," என்றார்.
Read More

March 15, 2012

உலகிலேயே அசிங்கமான நாய் மரணம்
by admin - 0

யோடா என்ற பெயர் கொண்ட இந்த நாய் உலகிலேயே அசிங்கமான நாய் என்ற பெயர் எடுத்தது.இன்று அது மரணத்தை தழுவிக்கொண்டது,இந்த நாய்க்கு எங்களது அஞ்சலிகள்
Read More