Latest News

March 19, 2012

சில தினங்கள் ஒரே வீட்டில் தங்கியதால் காதல் ஏற்பட்டது-சினேகா
by admin - 0


நடிகை சினேகா தனது திருமண செலவுக்காக பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று பரபரப்பாக கூறப்படுகின்றது.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியவர்கள் நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும். இந்தப் படத்துக்காக சில தினங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்க நேர்ந்தபோது காதல் மலர்ந்ததாம். முதலில் காதல் குறித்து மௌனமாக இருந்து வந்த அவர்கள் பிறகு ஒப்புக் கொண்டனர். இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டவே அவர் விரைவில் தம்பதிகளாகின்றனர்.

அவர்களின் திருமணம் வரும் மே மாதம் 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமணத் தேதி நெருங்குவதால் சினேகா தான் ஒப்புக் கொண்ட படங்களை வேக, வேகமாக முடித்துக் கொடுத்து வருகிறார்.திருமணத்துக்கு செலவுகலை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முன்னதாக கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்க சினேகா தேர்வானார். ஆனால் படப்பிடிப்பு மே மாதத்தில் நடக்கும் என்று கூறியதால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் தனது திருமணச் செலவுக்காக சொந்த ஊரான பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மண்டபம் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.ஆனால் அவர் விலக்கம் எதையும் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை
« PREV
NEXT »

No comments