Latest News

March 29, 2012

பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொமான்ஸ் காட்சி!
by admin - 0


பிரபு தேவாவை பிரிந்த பிறகு, மீண்டும் மும்முரமாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.
இந்தப் பிரிவுக்குப் பிறகு அவர் தெலுங்கில் நடிக்க முதல் படம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும். டக்குபதி ராணாவுக்கு ஜோடி.

முதல் காட்சியே, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருவரும் காதல் பண்ணுவது போல படமாக்கப்பட்டது. வானம் படத்தை இயக்கிய க்ருஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நயன்தாரா.
ஏற்கெனவே தெலுங்கில் நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் அவரது காதலியாக நடிக்கிறார் நயன். தமிழ் - தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் புதிய படத்திலும் இவர்தான் நாயகி.
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க, ஏ எம் ரத்னம் தயாரிக்கும் மெகா படத்திலும் நயன்தான் நாயகி.
11 மாத இடைவெளிக்குப் பிறகு பரபரப்பாக தனது அடுத்த ரவுண்டைத் தொடங்கியிருக்கும் நயன்தாராவிடம் அதுகுறித்துக் கேட்டால், "நடிப்பை நான் ரசித்து அனுபவிக்கிறேன். இந்த இன்னிங்ஸ் எனக்கு மறக்க முடியாததாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றா
« PREV
NEXT »

No comments