Latest News

March 27, 2012

வழக்கிலிருந்து விடுவிக்க கோரி திமுக எம்பி கனிமொழி மனு
by admin - 1

ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி திமுக எம்பி கனிமொழி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.



இந்த மனு குறித்து விளக்கம் அளிக்க சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி, எம்.எல். மேத்தா உத்தரவிட்டார்.

கனிமொழி சார்பில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைகாட்சி கடன் பெற்ற போது கனிமொழி அதன் இயக்குனராக இருக்க வில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்தில் அவர் ஒரு பங்குதாரர் மட்டுமே என்றும் ராம்ஜெத்மலானி தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்த தன்னை விடுவிக்குமாறு கடந்த 23 - ம் தேதி. கனிமொழி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
« PREV
NEXT »

1 comment

bhaskar said...

எல்லாம் கோடிகள் விளயடுகிராது . பொது மக்கள்தான் பாவம்