Latest News

March 27, 2012

தமிழ்ச் சிறுமியான துஷா சுடப்பட்ட அதிர்ச்சிக் காட்சி
by admin - 0

பிரித்தானியாவில் உள்ள சுப்பர் மாக்கட் ஒன்றில் ஆயுதக் குழு ஒன்றினால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பிய துஷா கமலேஸ்வரன் என்கின்ற ஐந்து வயதுச் சிறுமி பற்றி யாரும் எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள்.
டான்சராக வர விரும்பிய அந்த குட்டிச் சிறுமியின் கனவு மாமாவின் சுப்பர் மாக்கெட்டில் தவிடு பொடியாகியது.

தெற்கு லண்டனில் உள்ள Stockwell என்ற இடத்தில் தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்படி துயரச் சம்பவம் அரங்கேறியது.

குறித்த சிறுமியின் நெஞ்சுப்பகுதியிலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததால் கோமா நிலைக்கு சென்று மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துஷாவைச் சுட்ட குற்றவாளிகள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இந்த நேரத்தில் சி.சி.ரி.வி கமராவில் பதிவான துஷா சுடப்பட்ட அதிர்ச்சிக் காட்சிகளை லண்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments