படப்பிடிப்பு ஒன்றில் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு காயம் ஏற்பட்டது.
தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி, சமீபத்தில் ஐதராபாத் அருகேயுள்ள பங்காரா ஹில்ஸ் பகுதியில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்று நடித்தார்
.
அப்போது காளையை வைத்து சண்டைக்காட்சியை படமாக்கினர் படக்குழுவினர். அப்போது எதிர்பாரா விதமாக காளை மிரண்டு ஓடியதில் படப்பிடிப்பின் கேமராமேன் மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் படப்பிடிப்பின் கேமராவும் உடைந்தது. தற்போது அனைவரும் நலமாக இருக்கிறார்கள். அடுத்தவாரம் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment