ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. இதில் 20 ஆயிரம் பேர் பலியாகினர். புகுஷிமா அணு உலை வெடித்து கதிர் வீச்சு பரவியது அதை தொடர்ந்து அங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் மற்றும் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு ஜப்பானில் உள்ள ஹோன்சு தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் தலைநகர் டோக்கியோவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே, 6.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக வழக்கத்தை விட மிகப்பெரிய அளவில் கடல் அலைகள் எழும்பின. எனவே, சுனாமி ஏற்படலாம் என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
மேலும் நில நடுக்கம் ஏற்பட்ட வடகிழக்கு பகுதியில் அதிவேகமாக இயங்கும் புல்லட் ரெயில்கள் வழக்கம் போல் இயங்கின. ரெயில் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
No comments
Post a Comment