Latest News

March 28, 2012

தனுஷ்-ஸ்ருதி ஜோடிக்கு ரஜினி-கமல் பாராட்டு
by admin - 0


தனது விஸ்வரூபம் படத்தின் கடைசிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் கமல் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் செலவு செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஸ்ருதிஹாஸனுக்காக அவர் நடித்த ’3’ படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்திருக்கிறார்.

கமல் படத்தை ரசித்து பார்த்தாராம். படம் பார்த்து முடித்த பின் 3 படக்குழுவையும் படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யாவையும் பாராட்டியிருக்கிறார்.தனுஷ்-ஸ்ருதி இடையேயான கெமிஸ்டிரி அற்புதமாக இருப்பதாக கூறினாராம். படத்தின் ஹீரோவான தனுஷை தனியே அழைத்து நன்றாக நடித்துள்ளதாக பாராட்டியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பே ரஜினி படத்தை பார்த்துவிட்டார். அப்போது ரஜினி தனுஷையும்-ஸ்ருதிஹாஸனையும் பாராட்டினார். அப்படிப்பட்ட ஜோடிப் பொருத்தமா!(படத்தில்) இருவருக்கும்.....

‘3’ படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கிடையே பெருகிக் கொண்டே வருகிறது. “ஊர்ல இப்ப 3-னு ஒரு காய்ச்சல் பரவிடுச்சு. இதுக்கு மருந்து 30-தேதி தான் மார்க்கெட்ல வருதாம்” என்று ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை கலப்பாக சமூக இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ரஜினி-கமல் இணைந்து நடிப்பதை விட மறுபடியும் தனுஷ்-ஸ்ருதி எப்போது இணைவார்கள் என்ற கேள்விகளே அதிகம் பறக்கின்றன.
« PREV
NEXT »

No comments