Latest News

March 26, 2012

லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா படங்கள் இணைப்பு
by admin - 0

ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தின் ஷூட்டிங்கிற்காக கோச்சடையான் படக்குழு சில தினங்களுக்கு முன் லண்டன் பறந்தது. அதன் பிறகு கோச்சடையான் படத்தை பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எந்த விதத்திலும் அறிய முடியவில்லை. இந்நிலையில் தனது ட்விட்டர் சமூகதளத்தில் நடிகை ராதிகா சரத்குமார் “நானும் என் கணவரும் கோச்சடையான் யூனிட்டுடன் இணைந்துவிட்டோம். படத்தில் சரத் நடிக்கும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஷூட்டிங் நடக்காத நேரத்தில் என் கணவரும், ரஜினியும் என்னுடன் வந்து பேசிவிட்டு சென்றார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். கோச்சடையான் யூனிட் முழுவதும் கலகலப்பாக இருக்கிறது. இதை பார்க்கும் போது எனக்கு அந்த காலத்தில் கேரவன் இல்லாத போது எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டே சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது” என்று கூறியுள்ளார்.
வழக்கமாக ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எடுக்கப்படும் லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டூடியோஸில் தான் கோச்சடையான் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. கோச்சடையான் படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கான உரிமையை லக்‌ஷ்மிகணபதி பிலிம்ஸ் வாங்க இருப்பதாக ஒரு தகவல். ஆனால் இது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. லக்‌ஷ்மி கணபதி பிலிம்ஸ் அந்நியன் படத்தையே 15கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். கோச்சடையானின் தெலுங்கு உரிமை எப்படியும் 100 கொடியைத் தாண்டும் என்பது தற்போதைய கோடம்பாக்கத்து பேச்சு.


« PREV
NEXT »

No comments