Latest News

December 31, 2011

விடைகாணா ராமானானுஜனின் கணித புதிர்கள்
by admin - 0


கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் 125 ஆவது ஆண்டில் கூட ஆயிரக்கணக்கான அவரது கணித புதிர்களுக்கு விடை தெரியவில்லை என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமனுஜன் உயர்கணித கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் டி தங்கராஜ் அவர்கள்.
கணிதம் என்பது தனித்துறையாக பரவலாக அறியப்பட்டாலும், விஞ்ஞான உலகில் அறிவியல் துறைகளுக்கெல்லாம் தாயாக கணிதம் கருதப்படுகிறது.
எல்லாவிதமான விஞ்ஞான தத்துவங்களுக்கும் கணக்கே அடிப்படை என்கிற விஞ்ஞானிகளின் கருத்தே இதற்கு காரணம். அப்படியான அடிப்படை விஞ்ஞானமான கணிதத்தில் அகில உலக கவனத்தையும் ஈர்த்த மேதை ராமானுஜன்.
தமிழ்நாட்டின் ஈரோட்டில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து, கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை துவங்கிய ராமானுஜன் ஆரம்பம் முதலே கணிதத்தில் மிகப்பெரும் புலமையை வெளிப்படுத்தினார். பள்ளி செல்லும் மாணவனாக அவர் இருந்தபோதே, கல்லூரி மாணவர்களுக்கான கணித பாடங்களை சுயமாக படித்து எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்தார்.
ஆனால் அவரால் மற்ற பாடங்களுக்கான தேர்வுகளில் முறையாக தேர முடியாமல் தடுமாறிய சம்பவங்களும் நடந்தன. அத்தகைய தடைகளையும் மீறி, பிற்காலத்தில் உலக கணித மேதைகளில் ஒருவராக அவர் பரிணமித்தார்.
மிகச்சிறிய வயதில், அதாவது தனது 32வது வயதில் இறந்த அவருடைய கணித சூத்திரங்கள் இருபதாம் நூற்றாண்டு கணித வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின என்பது மட்டுமல்ல, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் கணித வல்லுநர்களுக்கு தூண்டுகோலாகவும் விளங்கி வருகிறது.
Read More

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு 'Sir' பட்டம்
by admin - 0

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்று பிரிட்டனில் ஆராய்ச்சிகளை மெற்கொண்டு வருபவரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு, நைட்ஹுட் எனப்படும் Sir பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் 2009ல் இரசாயனவியல் துறையில் நொபெல் பரிசைப் பெற்றவர் இவர்.
பிரிட்டிஷ் அரசாங்கம் வரும் வருடத்தில் வழங்கவுள்ள சிவில் விருதுகளைப் பெறவுள்ளவர்களுக்கான பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயரிய சிவில் விருதான சர் பட்டம், பிரிட்டனில் இருந்து செயல்படக்கூடிய வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவதென்பது மிகவும் அரிதாகத்தான் நடக்கும்.
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்தபடி மைக்ரோபயாலஜியில் முன்னணி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் 58 வயதான ராமகிருஷ்ணன், சர்ப் பட்டம் தனக்கு கிடைத்திருப்பதை இட்டு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் சமூகத்தில் குடியேறிகள் வழங்கும் பங்களிப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்பதன் அடையாளம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராமகிருஷ்ணனைத் தாண்டி வேறு இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் இவ்வாண்டு நைட்ஹுட் வழங்கப்படுகிறது.
சென்ற வருடம் இயற்பியலுக்காக நொபெல் பரிசு வாங்கிய ரஷ்யாவில் பிறந்த ஆந்த்ரே கெய்ம் மற்றும் கொன்ஸ்டாண்டின் நொவொஸொலொவ் ஆகியோர் இவர்கள்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன், ஐபேட் போன்றவற்றை வடிவமைத்தவரான ஜோனதன் ஐவிக்கும் சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சாமானியருக்கு சிவில் விருதுகள்
சர் பட்டங்களைத் தாண்டி ஓ.பி.இ., எம்.பி. இ. என வேறு பல சிவில் விருதுகளையும் பிரிட்டிஷ் அரசாங்கம் வருடா வருடம் வழங்கிவருகிறது.
இவ்வருடத்தில் இவ்வகையான விருது பெறுவோரில் எழுபது சதவீதமானோர் தமது சமூகங்களில் தன்னார்வத் தொண்டராகவோ அல்லது பொறுப்புதாரியாகோ இருந்து சிறப்பாக பணியாற்றிய சாமானிய மக்களாவர்.
பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கும் பெண் ஊழியரில் , உதவிப் பணிகளுக்கு நிதி திரட்டிய தேவாலய ஊழியர், போதை மருந்து கடத்துபவராக இருந்து மனம் திருந்தி வன்முறை மிக்க குற்றங்களில் இருந்து இளைஞர்களை திசைத் திருப்ப உதவும் பிரச்சாரப் பணியில் பங்காற்றியவர் என சமூகத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இம்முறை இந்த விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read More

பறவைக் காய்ச்சல் வைரஸ்: புதிய கண்டுபிடிப்பால் அச்சம்
by admin - 0

எச்5 என்1 அல்லது பறவைக் காய்ச்சல் வைரஸ் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இந்த வைரஸ் கிருமியின், மிக இலகுவாக பரப்பப்படக்கூடிய வடிவத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறான ஆய்வுகளின் மூலம் மிக மோசமான ஆபத்துக்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம், அவற்றை மிக கட்டுப்பாடான கண்காணிப்புக்குள் வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று முலையூட்டிகளுக்கிடையே குறிப்பாக மனிதர்களிடையே இந்த வைரஸை எவ்வாறு பரப்ப முடியும் என்பதை கடந்த வாரம் கண்டறிந்திருந்தது.
பயோ டெரரிஸ்ட் - அதாவது உயிரியல் பொருட்களை, குறிப்பாக ஆபத்தான கிருமிகளைக் கொண்டு அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் விஞ்ஞானத்தின் நோக்கம் தோற்றுப்போகக்கூடிய நிலை ஏற்படலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் துணை இயக்குநர் டொக்டர் கீய்ஜி ஃபுக்குடா பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.
இந்த வைரஸ்களை எவ்வாறு உருவாக்குவது, அவற்றை எவ்வாறு பயன்படு்த்துவது போன்ற விடயங்கள் வெளியாருக்கு தெரியவந்தால் அந்த வைரஸ்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அந்த துஸ்பிரயோகத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எப்படி எம்மால் குறைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பறவைக் காய்ச்சல் வைரஸான எச்5என்1 உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய கிருமிதான், ஆனால் தற்போதிருக்கின்ற கிருமிகள் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவாது என்ற நிலை தான் காணப்படுகின்றது.
அமெரிக்காவில் அரசு- விஞ்ஞானிகள் கருத்து முரண்பாடு
இந்தப் பிரச்சனை அமெரிக்காவில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு அந்த கண்டுபிடிப்பு தகவல்களை பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரையாக வரைந்தவர்கள், அவற்றை விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியிட வேண்டுமானால் முக்கிய சில தரவுகளை மறைக்க வேண்டுமென்று அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர்.இவ்வாறான தகவல்கள் வெளிவருவது பயங்கரவாத நோக்கங்களுக்கு சாதகமாக அமைந்துவிடுமென்று அந்நாட்டு சுகாதாரதுறை அதிகாரிகள் வாதி்ட்டுள்ளனர்.
ஆனால், ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த தரவுகளை தாராளமாகப் பயன்படுத்தமுடியும் என்ற உத்தரவாதம் கிடைக்கும்வரை கட்டுரை மாற்றியமைக்கப்படாது என்று சைன்ன்ஸ் மற்றும் நேச்சர் சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுக் கட்டுரையை மாற்றியமைக்கக் கோரும் அமெரிக்காவின் உயிரியல் பாதுகாப்பு தொடர்பான தேசிய விஞ்ஞான ஆலோசனை சபையின் விளக்கத்தை தம்மால் ஏற்க முடியாது என்று இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவைச் சேர்ந்த நெதர்லாந்து ஆய்வாளர் அல்பேர்ட் ஒஸ்டர்ஹோஸ் கூறிவிட்டார்.
கிருமிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு இந்த தரவுகளைப் பயன்படுத்த தாராளமாக அனுமதியளிக்கப்பட வேண்டுமென்று நேச்சர் சஞ்சிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.
-
Read More

ஆங்கிலப் புத்தாண்டு
by admin - 0

மகிழ்ச்சியான இந்த புத்தாண்டில் அனைத்து மக்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு திருநாட்டுக்கு அமைதி, செழிப்பு, முன்னேற்றம், வளர்ச்சி அனைத்தையும் கொண்டு வரட்டும்."விவசாயி
Read More

கோழிக்குஞ்சு பராமரிப்பு
by admin - 0

கோழிக்குஞ்சுகள் வாங்கும் போது நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்க வேண்டும். சிலநாட்களான இளம் பெட்டைக் குஞ்சுகளை வாங்குதல் நலம். இறைச்சிக்கென வளர்க்கும் கோழிகள் நன்கு வளர்ந்து ஓடக் கூடிய நிலையில் இருக்கலாம். குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும்போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்துவிட வேண்டும். குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழை வாயிலிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக்கொள்ளுதல் நலம். கொதிக்கவைத்து ஆறவைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்க வேண்டும். 8 கிராம் குளூக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல்நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும். எதிர்ப்பொருளும் விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம். வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்க வேண்டும். ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்க விடவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக்கொள்ள வேண்டும். வளரும் குஞ்சுகள்

பராமரிப்பு: 6 வார வயதிற்குப் பின் செயற்கை வெப்பமும் வெப்பக்கூடுகளையும் நீக்கிவிடலாம். பயன்படாத குஞ்சுகளை நீக்கிவிட வேண்டும். ஒரு குஞ்சுக்கு 0.095 - 0.19 மீ2 என்ற அளவு இடவசதி இருக்க வேண்டும். 8 வார வயதில் இருந்து வளரும் கோழிகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்க வேண்டும். நீர் மற்றும் தீவனம்: தீவனத் தொட்டிகள் அதிக எண்ணிக்கையிலும் தரையிலிருந்து சற்று உயரத்திலும் வைக்க வேண்டும். வளரும் குஞ்சுகளுக்கான தீவனத் தொட்டி 10 செ.மீ. உயரத்தில் வைக்க வேண்டும். குழாய் முறையில் அளிப்பதாக இருந்தால் 25 கிலோ எடையுள்ள 50 குஞ்சுகளுக்கு ஒரு குழாய் என்ற அளவில் வழங்கலாம். தண்ணீர் எந்த நேரமும் கிடைக்கும்படி இருக்க வேண்டும். 2.25 செ.மீ. ஒரு ஞ்சுக்கு என்ற வீதத்தில் நீர் அளிக்க வேண்டும். அலகு நீக்கம் செய்தல்: அலகை நீக்குவதால் தீவன விரயம் மற்றும் தன் இனத்தைத் தானே உண்ணுதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்கலாம். மின்சார அலகு நீக்கி கொண்டு நீக்குவது நல்லது. மேல் அலகில் மூன்றில் ஒரு பங்கும், கீழ் அலகில் சிறிதளவு மட்டும் நீக்க வேண்டும். இது குஞ்சுபொரித்து, ஒரு வார காலத்திற்குள் செய்துவிட வேண்டும். மீண்டும் ஒருமுறை முட்டையிடுவதற்கு முட்டையிடும் கூட்டினுள்
விடுமுன் 16 வார வயதில் அலகு நீக்கம் செய்ய வேண்டும். கொல்லைப்புற முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அலகுநீக்கம் செய்தல் கூடாது. நன்கு தெரிந்த பயிற்சிபெற்ற ஒருவர் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். கொண்டை நீக்கம்: கொண்டையானது தொங்கிக்கொண்டோ, பெரியதாகவோ இருக்கும் இனமாக இருந்தால் ஒரு நாள் வயதிற்குள் கொண்டை நீக்கம் செய்துவிட வேண்டும்
Read More

அடுத்த பிரதமர் யார்? அதிமுதான் தீர்மானிக்கும்!- ஜெயலலிதா
by admin - 0

அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் அதிமுக இருக்கும், செங்கோட்டையிலும் அதிமுக கொடி பறக்கும் என கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசியது:

"கடந்த ஆண்டு இதே டிசம்பர்த் திங்களில் கழகத்தின் வெற்றிக்கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது என்று நான் சூளுரைத்ததை இம்மியும் பிசகாது உண்மையாக்கி இருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி உரைக்கும் இவ்வேளையில் இந்தத் தாய் இட்ட கட்டளையை தலை மேல் சுமந்து ஓடிக் களைத்து உறக்கமின்றி உழைத்து சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் கழகம் இமாலய வெற்றியை ஈட்டுவதற்கும் ஆறாவது முறையாக, தமிழகத்தின் ஆட்சி அரியணையில் கழகத்தை அமர்த்துவதற்கும் அயராது பாடுபட்ட என் பாசமுடைய கழக உடன்பிறப்புகளான உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யார் தயவுமின்றி...

யார் தயவின்றியும், எத்தகைய ஊன்றுகோல் உதவி இல்லாமலும், ஓடிச் சென்று தங்கப் பதக்கத்தை தட்டிப் பறிக்கிற திராணியும், திடமும் கொண்ட ஒரே இயக்கம் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த உலகிற்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திட்டமிட்ட பயணத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம். மொழிக்கொரு சங்கம் கண்டு மூவாப் புகழ் படைத்த மூதூர் மதுரையில் நின்றுகொண்டு அன்று நான் சொன்னது போல உன்னதமான உழைப்பை நீங்கள் கொடுங்கள், கூட்டணியையும், தேர்தலுக்கான திட்டமிடலையும் நான் செய்து முடிக்கிறேன்; என் கணக்கு ஒரு போதும் தப்பாது என்று அப்போது சொன்னது இப்போதும் நிறைவேறி இருக்கிறது.

உங்களின் தூய்மையான உழைப்பும் அன்பும் எனக்கு எந்நாளும் துணை இருக்கும் போது, இனி எப்போதும் நிறைவேறும்.

கடந்த காலத்தை வென்றிருக்கிறோம். இனி எதிர்காலத்தை எந்நாளும் நம்முடையதாக்க துல்லியமான செயல் திட்டங்களையும், நாம் வகுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

தமிழக மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற அளவில்லாத அன்பையும், ஆழமான நம்பிக்கையையும் தங்களின் வாக்களிப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக நான் மாற்றுவேன் என்னும் உறுதிமொழியை தங்கள் ஆள்காட்டி விரல் மையால் வரவேற்று ஆமோதித்து இருக்கிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை, அந்த மகத்தான பாசத்தை, எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல் குறையாமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதில் கழகக் கண்மணிகளாகிய உங்களின் தலையாய பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல.

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை

மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நம்மை நடத்தும் நடுநிலை இல்லாத நடுவண் அரசின் பாரபட்சம் மறுபக்கம். இவற்றிற்கிடையே தான், நம்மிடமிருந்து பேரார்வத்தோடு நிறையவே எதிர்பார்க்கும் தமிழக மக்களுக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்க வேண்டிய சவாலும், போராட்டமும் நம் முன்னே நிற்கிறது.

கல்லில் இருந்து அவசியமற்ற பகுதிகளை, கழிவுகளை அகற்றிட அகற்றிட உள்ளிருந்து ஒரு தெய்வச் சிலை பிறக்கிறது! அப்படிப் பிறக்கும் அந்த முழு உருவச் சிலைக்கு கண் திறக்கிற போது, அந்த சிலையை செதுக்கும் சிற்பியின் உளியும், அவரது விழியும் எத்தகைய கவனத்தோடு இருக்குமோ, அத்தகைய கவனத்தோடு தான் இன்றைக்கு தமிழகத்தின் அரசாட்சியை நான் நடத்தி வருகிறேன் என்பதை என் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள் அறிவீர்கள்.

ஒரு பரிசுத்தமான நிர்வாகத்திற்கு உரியவர்களான நம்மிடம் நமது பணிகளும், செயல்களும் பக்கத் துணையாகி நிற்க வேண்டும். அப்பொழுது தான் இனி எக்காலத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து ஆட்சியை ஒரு போதும் இனி எவராலும் பறிக்க முடியாது என்கிற வரலாற்றுப் புரட்சியை நாம் உருவாக்க முடியும்.

மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தின் எல்லையைக் கடந்து தேசிய அரசியலிலும் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்துகிற காலம் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது.

'வாஜ்பாயை பிரதமராக்கியது அதிமுக'

'அனைத்திந்திய' என்றே துவங்கும் நம் இயக்கத்தின் பெயருக்கேற்ப தேசிய அரசியலிலும் ஒரு பொற்காலத்தை 1998-லேயே உருவாக்கினோம். அன்று வாஜ்பாயை பிரதமராக்கி பாரதீய ஜனதா கட்சிக்கு முதன் முதலாக இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றது.

'அடுத்த மத்திய அரசில் நாம் இருப்போம்!!'

நாம் ஒரு அனைத்திந்திய அரசியல் இயக்கம் என்பதை அப்போதே நிரூபித்தோம். இப்போதும் அதனை மேலும் பலப்படுத்தி இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப் போகிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது. அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் நாம் இருப்போம். நாமும் இருப்போம் என்பது திண்ணம்.

நீங்கள் நினைக்கலாம்; பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டு காலம் இருக்கிறதே? அம்மா அதற்குள் நம்மை ஆயத்தப்படுத்துகிறாரே...? இப்போது தானே இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றோம் என்று நினைத்துவிடக் கூடாது.

ராக்ஃபெல்லர் கதை

உலகத்தின் பெரும் பணக்காரரான ராக்ஃபெல்லர் ஒரு முறை விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அருகில் அமர்ந்திருந்தவர் அவரை அடையாளம் கண்டுகொண்டு “எங்கே பயணம்?” எனக் கேட்டார். “தொழில் நிமித்தமாக லண்டன் போகிறேன்” என்றார் அவர்.

“உலகப் பணக்காரராகிவிட்டீர். ஓய்வெடுக்கக் கூடாதா? இன்னும் இப்படி உழைக்கிறீர்களே...?” என்று கேட்க, ராக்ஃபெல்லரோ “விமானம் ஓடுதளத்திலிருந்து உயரப் பறந்து இப்பொழுது தான் உச்சத்திற்கு வந்துவிட்டதே? அதனால் விமானத்தின் இஞ்சின் இயக்கத்தை நிறுத்திவிடலாமா?” என்று அவர் திருப்பிக் கேட்டாராம்.

அது போலத் தான் நமது வெற்றியை நாளை இந்த நாடே சொல்வதற்கான ஆயத்தப் பணிகளை நாம் இப்போதே தொடங்கிவிட வேண்டும். தொடர்ந்துவிட வேண்டும்.

ஒரு மரத்தை வெட்டுவதற்கு பத்து மணி நேரமாகும் என்றால் அதில் ஒன்பது மணி நேரத்தை கோடாரியை கூர் படுத்துவதற்கே செலவு செய்வேன் என்று சொன்ன சாக்ரடீசின் கருத்தைத்தான் நான் உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.

இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுவிட்டோம் என்னும் மகிழ்ச்சி நமக்கு சோர்வையோ, போதும் என்ற ஓய்வு மனப்பான்மையையோ தந்துவிடக் கூடாது. அடுத்த வெற்றிக்கு இப்போதே ஆயத்தமாக வேண்டும்.

ஆதலால், இன்னும் பல அரசியல் பொற்காலங்களை உருவாக்குகிற பொறுப்பும் அதற்கான உழைப்பும் உங்களிடம் இருக்கிறது. அதனை செவ்வனே செய்து முடித்துவிட்டால் இன்றைக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக, நீர் ஆதார வளங்களைப் பாதுகாப்பதற்காக, தற்காப்பதற்காக, கையேந்திப் போராடுகிற, இது போன்ற நிலை நமக்கு ஒரு போதும் வராது.

செங்கோட்டையிலும் அதிமுக கொடி...

தீர்மானிக்கிற இடத்தில் நாம் இருப்போம். அப்படி இருக்கிற போது தேசத்தின் இறையாண்மை குலையாமலும்; தமிழகத்தின் உரிமைகள், உடமைகள் எதிலும் குன்றிமணி அளவுக்கு இழப்போ, குறைபாடோ ஏற்படாமலும் முடிவெடுக்கும் சூழலை நாம் உருவாக்க முடியும். அந்த நிலை, அந்த அரசியல் பொற்காலம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கடந்து, செங்கோட்டையிலும் கழகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டுமானால் என் அன்பிற்குரிய கழகக் கண்மணிகளும், உடன்பிறப்புகளும் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

தீயசக்திகளின் கும்பலை எதிர்கொண்டு போராடுகிற நம் கழகத்தின் நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஒன்றியக் கழகச் செயலாளர்கள், நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள் எந்த அளவுக்கு பொருளாதார ரீதியாக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதை இந்தத் தாய் அறியாமல் இல்லை.

அம்மாவாகிய நான்...



உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். தேவைகள் அறிந்து எப்படி அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி சரி செய்கிற சாமர்த்தியம் உங்கள் அம்மாவாகிய எனக்கு உண்டு என்பதை நீங்கள் பூரணமாக நம்பலாம். அதே வேளையில், இலை வெளியே தெரியும். பூ வெளியே தெரியும். காய் வெளியே தெரியும். கனி வெளியே தெரியும். கிளை வெளியே தெரியும்.

மரமும் வெளியே தெரியும். ஆனால் இவை அனைத்தையும் தாங்கிப் பிடித்திருக்கும் வேர் வெளியே தெரியாது. அந்த வேர்தான் கழகத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் கோடானு கோடித் தொண்டர்கள் என்பதை கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு லட்சத்திற்கும் மேலான உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

பொதுமக்களிடம் எளிமையோடு நடந்துகொள்ள வேண்டும். இன்றோடு கழகம் ஆட்சியில் அமர்ந்து ஏறத்தாழ ஏழு மாதம் நிறைவுற்ற நிலையில் கருணாநிதி ஆட்சிக் காலத்திய எந்த ஆடம்பர விழாக்கள் போன்றோ தற்புகழ்ச்சி மாநாடுகள் போன்றோ எதனையும் நடத்தி அரசுப் பணத்தை, பொதுமக்களின் வரிப் பணத்தை வீணடிக்காமல் எப்படி எளிமையான அரசாங்கமாக, அதே நேரத்தில் வலிமையான வருங்காலத்தை தமிழக மக்களுக்கு அமைத்துத் தரும் அரசாக நம்முடைய கழக அரசு திகழ்கிறதோ அதனையே நீங்களும் பின்பற்ற வேண்டும்.

மக்கள் நலத் திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கின்ற கடமையை அரசு அலுவலர்களோடு சேர்ந்து நாமும் செய்திட வேண்டும். கழக அரசுக்கு எவ்வகையிலும் அவப்பெயர் நேர்ந்துவிடக் கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாய் கடமை உணர்ச்சியோடு நாம் பணியாற்ற வேண்டும். அப்படி நம்மை நாமே ஆத்ம பரிசோதனை செய்துகொண்டு மக்கள் சேவையை தூய தொண்டுள்ளத்தோடு செய்வோமேயானால் வருங்காலம் நமக்கு மேலும் மேலும் வசந்த காலமாகும்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா...



இரட்டை இலை இங்கு மட்டுமல்ல, தமிழக எல்லை கடந்தும் துளிர்க்கும்; செழிக்கும்! ஒரு முறை மரங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஆண்டவனிடம் மனு கொடுத்ததாம். அதில் “இறைவா எங்களை இரக்கமின்றி வெட்டிச் சாய்க்கிற இரும்புக் கோடாரிகளை இனி நீ தயாரிக்க அனுமதிக்காதே” என்றனவாம்.

உடனே ஆண்டவன் சொன்னாராம் “கோடாரி தயாரிப்பதை என்னிடம் நிறுத்தச் சொல்வதற்கு முன் நீங்கள் முதலில் அந்தக் கோடாரிகளுக்கு கைப்பிடியாக ஆவதை நிறுத்துங்கள். மரங்களாகிய உங்களிடமிருந்து தானே கூரிய கோடாரிக்கு கைப்பிடிகள் தயாரிக்கப்படுகின்றன...?” என்ற போது தலைகுனிந்து நின்றனவாம் மரங்கள். ஆக, தீதும் நன்றும் பிறர்தர வாரா.

நாம், நமக்கு துரோகம் செய்யாமல், ஒற்றுமையோடு நின்றோமானால், எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன், எப்படை வரினும் இப்படையே வெல்லும்," என்றார் ஜெயலலிதா.
Read More

2011- தமிழ் சினிமாவின் சூப்பர் வெற்றிகள்... மங்காத்தாவுக்கு முதலிடம்!
by admin - 0

2011-ம் ஆண்டு சினிமா உலகத்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் எந்திரன் தாக்கமே 2011 முதல் காலாண்டு வரை பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்தது.

இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலித்து வாய் பிளக்க வைத்துவிட்டதால், அதன் பிறகு வெளியான பல நடிகர்களின் படங்களுடைய வர்த்தக எல்லை, அளவு பற்றிய எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்தது.

ஆனால் ஒரு படம் கூட அதில் கால்வாசியைக் கூட தொடவில்லை என்பதுதான் பரிதாபம். ஆனால் விளம்பரங்களில் எந்திரனுக்கு நிகராக அல்லது எந்திரனுக்கு அடுத்து என போட்டு பீற்றிக் கொண்ட காமெடி அரங்கேறியது!

ஹாலிவுட் போல உண்மையான வசூல் விவரங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள கோலிவுட்டில் வழியில்லை. நஷ்டம் என்றாலும் அதை கவுரமாக லாபம் அல்லது சாதனை என்று கூறும் போக்கு, வீம்புக்காக மகாலட்சுமி அல்லது கோபிகிருஷ்ணாவில் 250 நாட்கள் ஓட்டிக் காட்டும் வழக்கமும் இங்கு தொடர்வது.

இதையெல்லாம் தாண்டி, பளிச்சென்று வெற்றிப் படங்களாக தெரிந்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.

1. மங்காத்தா


அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் கடந்த ஆண்டின் பெரிய வெற்றிப்படம் எனலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரே படம் மங்காத்தா. வசூல் என்று பார்த்தால் ரூ 130 கோடி என்று கூறப்பட்டது.

ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற, எந்த ஆதாரமும் தரப்படாமல் தயாரிப்பாளரால் சொல்லப்பட்ட விவரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம் அஏஜீத், யுவன் சங்கர் ராஜா, எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் அவற்றைக் கவனிக்கவிடாமல் பார்த்துக் கொண்ட வெங்கட் பிரபுவின் இயக்கம்.

2. காஞ்சனா

சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. பெரிய ஸ்டார் வேல்யூ, செட்டிங்குகள், செலவுகள் எதுவும் இல்லாமல், இன்ஸ்டன்டாக ஜெயித்த பேய்ப் படம் இது. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார்.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நகைச்சுவை மற்றும் அமானுஷ்ய காட்சிகளை இயல்பாக, சரியான விகிதத்தில் அமைத்திருந்தது. குறிப்பாக கோவை சரளா!

3 கோடி செலவு, ரூ 30 கோடிக்கு மேல் லாபம், பிற மொழி உரிமையாக மட்டுமே பல கோடிகளைப் பெற்றது என, காஞ்சனா ஒரு உண்மையான 'ப்ளாக்பஸ்டர்' என்றால் மிகையல்ல.

3. எங்கேயும் எப்போதும்

எதிர்பாராமல் ஜாக்பாட் அடிப்பது என்பார்களே, அது இந்தப் படத்துக்குப் பொருந்தும். புதிய இயக்குநர், பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது.

அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவு கதை-திரைக்கதை வித்தியாசமாக அமைந்ததால், நல்ல வெற்றியைப் பெற்றது படம். மிகக் குறைந்த முதலீட்டில் வெளியாக, பெரிய லாபத்தைப் பெற்ற இந்தப் படம், நூறாவது நாளையும் தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4. கோ

ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. பத்திரிகை உலகை அடிப்படையாக வைத்து கே வி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள். ஆனால், பரபரவென நகர்ந்த காட்சிகளால், அந்த ஓட்டைகளை கண்டுகொள்ளாமல் ரசித்தனர் மக்கள்.

படத்தின் பெரிய பலம் இயக்குநர் கே வி ஆனந்த், ஹீரோ ஜீவா. ரொம்ப அநாயாசமாக தனது பாத்திரத்தை கையாண்டிருந்தார் ஜீவா.

5. தெய்வத் திருமகள்

விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் இன்னுமொரு வெற்றிப் படம். ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்தான் என்றாலும், விக்ரம் நடிப்பில் அதை மக்கள் மறந்தே போனார்கள்.

விக்ரமைத் தாண்டி படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானம், அனுஷ்கா. அப்புறம் அந்த அழகான குழந்தை பேபி சாரா.

6. 7ஆம் அறிவு



இந்த ஆண்டில் பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வெளியானது 7 ஆம் அறிவு. காரணம், ரமணா, கஜினி தந்த ஏ ஆர் முருகதாஸ் என்ற திறமையான இளைஞர் மீது தமிழ் ரசிகர்கள் வைத்திருந்த மரியாதை ப்ளஸ் நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கை முதல் முறையாக இந்தப் படத்தில் தோற்கடிக்கப்பட்டது.

படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் புண்ணியத்தில் இந்தப் படத்துக்கு ஏக விளம்பரங்கள். அந்த விளம்பரங்களின் தயவிலேயே படமும் ஓரளவு தாக்குப் பிடித்துவிட்டது. வசூலைப் பொருத்தவரை தயாரிப்பாளர் திருப்தி. 2011 ஹிட் படங்களில் 7-ஆம் அறிவும் இடம்பெற்றுவிட்டது.

7. வேலாயுதம்

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, காவலன் சின்ன ஆறுதலைக் கொடுத்ததென்றால், வேலாயுதம் பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனலாம். படம் ஏற்கெனவே வந்த திருப்பாச்சியின் உல்டா, சுமார்தான் என்றாலும், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா என திறமையான கலைஞர்களின் பங்களிப்பால் ரசிகர்களை கவர்ந்தது. நல்ல வசூல்.

8. அவன் இவன்

இந்தப் பட்டியலில் அவன் இவனா... அது ஓடவே இல்லையே என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். அந்தப் படத்தின் வெற்றி ஓடிய நாள் கணக்கில் இல்லை. வசூல் கணக்கில்தான் இருக்கிறது!

விஷாலுக்கு நல்ல பெயர், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு நல்ல லாபம், குறிப்பாக அதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே ரூ 17 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையான இழப்பு பாலாவுக்கு மட்டும்தான். பணமல்ல, இத்தனை படங்களில் அவர் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்!

9. காவலன்

விஜய்யின் 6 தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த படம் காவலன். சுமாரான வெற்றிதான் என்றாலும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருக்கு லாபத்தைத் தந்தது இந்தப் படம். வடிவேலுதான் படத்தின் பெரிய ப்ளஸ். ரொம்ப நாளைக்குப் பிறகு விஜய் இந்தப் படத்தில் 'நடித்திருந்தது' குறிப்பிடத்தக்கது!

10. ஆடுகளம்

தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். மேலும் பல தேசிய விருதுகளையும் வென்ற இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக வெளியானது (எந்த அடிப்படையில் இந்த விருதுகள் தரப்பட்டன என்பதுதான் இதுவரை யாருக்கும் புரியாத புதிர். பாலு மகேந்திராவைத்தான் கேட்க வேண்டும்!!). சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்கள் இந்தப் படத்தை வசூல் ரீதியாக சுமாரான வெற்றி பெற உதவின!
Read More

December 28, 2011

மீண்டும் வருகிறது பிளாஸ்டிக் சட்டம்! கடன் அடிப்படையில் கூடை வழங்க திட்டம்
by admin - 0

மரக்கறி மற்றும் பழங்களை ஏற்றிச் செல்ல பிளாஸ்டிக் கூடைகளை இலகுவாக பெற்றுக் கொடுக்கும் முறை தொடர்பில் ஆலோசனை நடத்தி வருவதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார்.



இது குறித்த விவசாய துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்தார்.

கடன் அடிப்படையில் விவசாயிகளுக்கு பிளாஸ்டிக் கூடைகளை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை விஸ்தரித்தல் தொடர்பாக பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் பிளாஸ்டிக் கூடைகளை உபயோகிப்பது கட்டயமாக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னர் நிவாரணம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன், பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்த தற்போது தமது வர்த்தகர்கள் படிப்படியாக பழக்கப்பட்டு வருவதாக மெனிங் சந்தை பொது சேவை சங்க செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.
Read More

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மெளனம்... ஹஸாரே போராட்டத்துக்கு மட்டும் ரஜினி ஆதரவா?'
by admin - 0

தமிழரின் ஜீவாதாரப் பிரச்சனைகள் வெடிக்கும் போதெல்லாம் உஷாராக மெளனம் காக்கும் ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்கள், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு ஓடி ஓடி ஆதரவளிப்பது தவறானது என்று தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக இணையத்தளங்களிலும் இதுகுறித்து கடுமையான விமர்சனங்களை ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் மீது வைத்துள்ளனர்.



சினிமா தவிர்த்து சமூக- அரசியல் ரீதியாக ரஜினியின் நடவடிக்கைகள் தொடர்ந்து மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மிக மோசமான விளைவுகளை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அரசியலுக்கு அப்பால் நின்று அனைவரும் தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். கேரளாவின் பொய்ப் பிரச்சாரம், விஷமத்தனம், தமிழகத்தின் உரிமையை பறிக்க அவர்கள் நடத்தும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் பணியில் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி இயக்குநர்கள் பலரும் இதில் அக்கறை காட்டுகின்றனர்.

ஆனால் ரஜினி, கமல், விஜய், அஜீத் என எந்த முன்னணி நடிகரும் தமிழகத்தில் இப்படியொரு விஷயமே நடப்பது போல காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் 'கெழவிய தூக்கி மனையில் வை' என்ற வழக்குச் சொல்லை மெய்ப்பிப்பது போல, ஹஸாரேவின் உண்ணாவிரதத்துக்கு ராகவேந்திரா மண்டபத்தை இலவசமாகக் கொடுத்துள்ளார் ரஜினி இந்தப் போராட்டத்துக்கு தனது ஆதரவு உண்டு என்றும் அறிவித்துள்ளார் (ஆனால், இதில் 10 பேர் கூட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!).

இதுதான் முல்லைப் பெரியாறுக்காகவும் கூடங்குளத்துக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

'கேரளத்தின் வஞ்சகத்தனத்தால் தமிழகத்தின் ஒரு பகுதியே வறண்டு பாலையாகும் அபாயம் உள்ளது. தமிழகமே ஒட்டுமொத்தமாக கொந்தளித்து எழுந்துள்ள இந்த சூழலில், அதுகுறித்து வாய் திறக்காத, தமிழர்களின் உரிமைகளுக்காக கிஞ்சித்தும் குரல் கொடுக்காத ரஜினி, நாடாளுமன்ற அமைப்பையே கேலிக்குரியதாக்கிக் கொண்டிருக்கும் ஹஸாரேவுக்கு ஆதரவளிப்பதா?', என முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழுவினர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

டெல்லிக்குப் போய் ஹஸாரேவுக்கு ஆதரவு காட்டத் தெரிந்த விஜய்க்கு இங்கிருக்கும் தேனிக்குப் போய், முல்லைப் பெரியாறு அணை காக்க போராடும் நம் உறவுகளுக்கு குரல் கொடுக்கத் தெரியாதா" என்று கேள்வி எழுப்பியுள்ளனர் முல்லைப் பெரியாறு போராட்டக்காரர்கள்.

ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நபர்களுக்கு ரஜினி தன் மண்டபத்தைக் கொடுத்திருப்பதற்கு திரையுலகினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். குறிப்பாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் களம் இறங்கியுள்ள பாரதிராஜா, தங்கர் பச்சான் போன்றவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ரஜினியின் ரசிகர்களே கூட இதை பெரிதாக வரவேற்கவில்லை என்பது, இந்த உண்ணாவிரதத்துக்கு வந்த 10 பேரைப் பார்த்தபோதே புரிந்துவிட்டது
Read More

மன்னார்குடி நிர்வாண சாமியாரின் சாபத்தால், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கம்
by admin - 0

மன்னார்குடி நிர்வாண சாமியாரின் சாபத்தால், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாக பரவிய தகவலால், சாமியார், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இருந்து, மன்னார்குடிக்கு அழைத்து வரப்பட்டார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, மூவாநல்லூரை சேர்ந்தவர் சேகர், 37. பெயின்டர் மற்றும் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்தார். ஆறு மாதம் முன், திடீரென வீட்டை விட்டு வெளியேறி, நிர்வாணக் கோலம் கொண்டு, மன்னார்குடியில் உள்ள, சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி சித்தர் கோவிலில் தங்கிவிட்டார். "என் உடலில், சித்தர்களுக்கு உண்டான மாற்றங்கள் தோன்றியதால், நிர்வாண கோலத்துக்கு மாறிவிட்டேன்' எனக் கூறிய சேகர், யாரிடமும் பேசாமல் இருந்தாலும், தன்னை பார்க்கும் பக்தர்கள் சிலருக்கு மட்டும், அருள்வாக்கு மற்றும் குறி சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இவரை பற்றி, சில பத்திரிகைகளில் செய்தி வெளியானதால், திடீரென பிரபலமானார். இவரை பார்க்க வரும் பக்தர்கள், குறிப்பாக, அரசியல்வாதிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையறிந்த சசிகலாவின் தம்பி திவாகரன், 45 நாளுக்கு முன், நிர்வாண சாமியாரை காணச் சென்றார்.
அப்போது, நிர்வாண சாமியார், சில கொடூரமான வார்த்தைகளால் திட்டி, "இங்கேயும் நீ வந்துட்டாயா... இன்னும் மூன்று மாதத்தில், உன் பெயர், புகழ் அனைத்தும் போய்விடும்' என சாபமிட்டார்.
திகைப்படைந்த திவாகரன், ஆத்திரத்தை வெளிக் காட்டாமல் சென்றுவிட்டார். பின் விளைவாக, மன்னார்குடி போலீசார், "மனநிலை பாதிக்கப்பட்ட சேகர், நிர்வாண கோலத்தில், பக்தர்களுக்கு இடையூறு செய்கிறார்' என, வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். மன்னார்குடி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
"மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், கோர்ட் தலையிட முடியாது' என, மாஜிஸ்திரேட் ஐயப்பன் பிள்ளை, நிர்வாண சாமியாரை, "ரிமாண்ட்' செய்ய மறுத்து விட்டார்.
அதையடுத்து சாமியாரை, மன்னார்குடியில் பிரபலமான ஒருவரின் சொகுசு காரில் ஏற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், போலீசார் சேர்த்து விட்டனர்.
ஒரு மாதத்துக்கு முன் நடந்த இச்சம்பவம், மன்னார்குடி பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த, 20 நாளில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தன் தோழி சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி திவாகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலை சேர்ந்த, 18 பேரை, கட்சியில் இருந்து நீக்கினார்."சசிகலா கும்பலை ஜெயலலிதா அதிரடியாக நீக்கியதற்கும், நிர்வாண சாமியார் கொடுத்த சாபம் தான் காரணம்' என, திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் நம்பத் துவங்கி விட்டனர்.தகவலறிந்த, நிர்வாண சாமியாரின் ரெகுலர் கஸ்டமரான, மதுரையை சேர்ந்த மக்கள் முன்னேற்றக் கட்சியின் மாநிலத் தலைவர் முத்துராஜன், சென்னைக்கு சென்று நிர்வாண சாமியாரை மீட்டு, மீண்டும் மன்னார்குடிக்கு அழைத்து வந்து விட்டார்.

"டிஸ்சார்ஜ்' ஆனது எப்படி? : சென்னை மனநல காப்பகத்தில் இருந்த நிர்வாண சாமியாரை, மருத்துவமனை நிபந்தனைகளைக் காட்டி டீன் குமார், முத்துராஜனோடு அனுப்ப மறுத்து விட்டார். உடனே, "திவாகரனால் தான் சாமியார் தூக்கப்பட்டார்' என்பதற்கான ஆதாரங்களை முத்துராஜன் திரட்டி, முதல்வருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். அடுத்த ஓரிரு நாளில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், டீன் குமாரை, போனில் தொடர்பு கொண்டார். அதையடுத்து, முத்துராஜிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு, நி ர்வாண சாமியார், "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
Read More

December 27, 2011

நிறைவேறியது லோக்பால் மசோதா
by admin - 0

லோக்பால் மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியது.

11 மணி நேர விவாதத்திற்குப்பின் குரல் வாக்கெடுப்பு மூலம் சில திருத்தங்களூடன் லோக்பால் மசோதா நிறைவேறியது.
Read More

2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள்
by admin - 0

சென்ற 2011 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில் நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐ போன் 4 எஸ் மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது. வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கேமரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில் நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது. நம் ஒலி வழி தரும் (Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன. ஆனால், ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ் (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐ போன் 4 எஸ் உடன் கிடைக்கிறது. வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கம்ப்யூட்டர்களில் இதனைப் பயன்படுத்து கையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.

2. சாம்சங் கேலக்ஸி போன்கள்: ஸ்மார்ட் போன்களைத் தருவதில், ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது. மிகக் குறைவான தடிமனில், ஆண்ட் ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப் பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.

3. ஆப்பிள் ஐ-பேட் 2: தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில், ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து, தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால், மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன. அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது, ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.

4.விண்டோஸ் போன்: மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர். 2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் சாப்ட்வேர் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும், அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது. காப்பி அண்ட் பேஸ்ட் வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கேமரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற் கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களி டையே கொண்டு வரும் முயற்சி யானது. மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ்போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப் படுவதற் கில்லை.

5. கூகுள் ப்ளஸ்: ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது. சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.
ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை, கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.

6. கூகுள் குரோம்: மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக, அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர். நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பாக்ஸைப் பின்னுக்குத் தள்ளி யுள்ளது உண்மை. வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு நிச்சயமாய், குரோம் பிரவுசர் சரியான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
Read More

ரஜினிகாந்த் அனுப்பிய இ -மெயில்
by admin - 0

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி மும்பையில் அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.




இது குறித்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு ரஜினி அனுப்பியுள்ள மெயிலில், ‘’ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய். அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம். ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தலைவர்.நாடாளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன். சத்தியாகிரகத்தின் பிறப்பிடம் இந்தியா.

இங்கு மட்டுமே இதுபோன்ற அமைதியான போராட்டங்கள் சாத்தியமானது. ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்’’ என்று தெரிவித் துள்ளார்.
Read More

வயோதிப பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை
by admin - 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை வயோதிபப் பெண்னொருவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி -01 ஜச் சேர்ந்த வெள்ளக்குட்டி வெள்ளையம்மா (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மரணமான பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

அதிவேக ரயிலை உருவாக்கியுள்ள சீனா _
by admin - 0

சீனா மணித்தியாலத்திற்கு 500 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயிலை உருவாக்கியுள்ளது. உலகில் அதிவேக ரயில் போக்குவரத்தினை மேற்கொள்ளும் நாடுகளுள் சீனாவும் ஒன்று.


சீனாவில் முன்னணி அதிவேக ரயி்ல் தயாரிப்பு நிறுவனமான சி.எஸ்.ஆர்.கோர்ப்பரேசன் லிமிடெட் என்ற நிறுவனம் மணிக்கு 500 கி.மீ.வேகம் செல்லக்கூடிய ரயிலை தயாரித்துள்ளது.

இதன் மேற்பரப்புமுழுவதும் பிளாஸ்டிக்கினாலும், பைபர் கண்ணாடியாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவின் ஷங்காய்- பீய்ஜிங் மாகாணங்களுக்கிடையே மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ரயிலே உலகின் அதிக வேக ரயிலாகத் திகழ்கின்றது.
Read More

புலிகளை தவறாக நடத்தினாரா வைகோ
by admin - 0

இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது என நோர்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். நோர்வே அரசின் உத்தரவின் பேரில் இலங்கைப் போர் குறித்து தயாரிக்கப்பட்ட அமைதிக்கான அடைமானங்கள் என்ற தலைப் பிலான 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை அண்மையில் ஒஸ்லோ வில் வெளியிடப்பட்டது அதில்,

இலங்கையில் சமாதான முயற்சிகள் 2003-2004 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய போது இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் கவனித் தது. ஆனால், 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் சோனியாகாந்தி இந்தியாவின் சக்தி வாய்ந்த நபராக மாறினார். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண் டியவர்கள் என்பதில் அவர் தீவிரமாக இருந்தார். போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல் குறித்து இலங்கை கவலை கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தோற்றால் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என இலங்கை நினைத்தது என நீளும் அந்த அறிக்கை வைகோ குறித்து கூறும் வரிகள் தமிழகத்தில் பரப ரப்பை பற்ற வைத்துள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தொடர்பு கொண்டு, ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அறிக்கையை ஏற்று ஆயுதங் களைக் கீழே போடுமாறு ஆலோசனை வழங்கினார். அதைத் தெரிந்து கொண்ட வைகோ புலிகளிடம் இது காங்கிரஸின் சதி இதற்கு உடன்பட வேண்டாம். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாரதிய ஜனதா ஆட்சியைப்பிடிக்கும். அவர்கள் புலிகளுக்கு உதவி செய்வார்கள் என்று சொன்னார் என்று நோர்வே அறிக்கை தெரிவிக்கிறது.இது குறித்து விளக்கம் கேட்க வைகோவைத் தொடர்பு கொண்டோம். அவர் சார்பில் கட்சியின் மூத்த நிர்வாகி பதிலளித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குமரன் பத்மநாதன் ஓர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலும் இதே குற்றச் சாட்டைச் சொல்லியிருந்தார்.

அதற்குப் பதிலளித்து வைகோ அன்றைக்கே அறிக்கை வெளியிட்டார். இலங்கையின் போரை நிறுத்த தி.மு.க தரப்பில் முயற்சித்ததாகவும் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அதற்கான ஓர் அறிக்கையைத் தயாரித்ததாகவும் சொல்லப் படுகின்றது. அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயு தங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடை வோம் என்று அறிவிக்க வேண்டும். சுதந்திர தமிழீழம் என்கிற குறிக்கோளைக் கைவிட்டு மாற்று அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்க வேண்டும் என்று இருப்பதாக குமரன் பத்மநாதன் கூறியிருந்தார். இந்தத்திட்டம் குறித்து வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தெரிவிக்கக்கூடாது என்றும் தேர்தல் காலம் ஆதலால் போர்நிறுத்தம் ஏற்பட்டால் காங்கிரஸ், தி.மு.கவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதால் அவர்கள் தடுத்து விடுவார்கள் என்றும் அரசியல் பிரிவுச் செயலர் நடேசனிடம் சிதம்பரம் தெரிவித்த தாக குமரன் பத்மநாதன் கூறியிருந்தார்.

ஆனால் அந்தத் தகவலை நடேசன் வைகோவிடம் கூறி விட்டதாகவும் வைகோ அதை அலட்சி யப்படுத்தச் சொன்னதாகவும் தொடர்ந்து சொல்கிறார்கள். இது அப்பட்டமான பொய். விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்து எந்தக் காலத்திலும் வைகோ ஆலோசனை கூறியது கிடையாது. ஈழத்தின் நிலைமைக்கேற்ப, மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளை பிரபாகரன் தான் மேற்கொள்வார். இலங்கை போர் உச்சத்தில் இருந்த போது எந்த வகையிலாவது போர்நிறுத்தம் ஏற்பட்டு விடாதா? என்று வைகோ துடித்ததை நாங்கள் அருகில் இருந்து பார்த்தோம்.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் வைகோ வைத் தொடர்பு கொண்டு தேர்தலில் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டதா?எனக் கேட்டார். தேர்தலில் அணிமாற விருப்பமில்லை போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கலாமா என யோசிக்கிறேன் என வைகோ சொன்னார். ம.தி. மு.க விற்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டதை அறிந்த நடேசன் நீங்கள் ஒருவர் பாராளுமன்றம் சென்றால் எங்களுக்காக 500 எம்.பிக்கள் சென்றதாக நினைத்துக் கொள்வோம். அதனால் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்று சொன்னார். அன்று இரவு வைகோவை நடேசன் மீண்டும் தொடர்பு கொண்டார். இங்கு பலத்த சண்டை நடக்கிறது. மிகவும் சிரமப்பட்டு சற்றலைற் போனில் பேசுகிறேன். நீங்கள் அவசியம் போட்டியிட வேண்டும் என்று பிரபாகரன் விரும்புகிறார் என்று வைகோவிடம் தெரிவித்தார். எனவே, அவர்கள் வைகோ மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். குமரன் பத்மநாதன் பேச்சோ நோர்வே அறிக்கையில் வைகோ பற்றிக் குறிப்பிட்டிருப்பதோ உண்மை கிடையாது.

துரோகிகளும் எதிரிகளும் தூற்றினால்தான் நீ சரியான பாதையில் போவதாக அர்த்தம் என்று தந்தை பெரியார் சொன்னார். இன்றைக்கு வைகோ மீதும் நெடுமாறன் மீதும் இதுபோன்ற அவதூறுகள் தூற்றுகின்ற போதிலும் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை தன்மானம் உள்ள தமிழர்கள் நன்கு அறிவார்கள் என்று தெளிவாக விளக்கம் அளித்தார்.valampurii
Read More

சீரற்ற காலநிலையால் 29 தமிழக மீனவர்கள் இலங்கையில்
by admin - 0

சீரற்ற காலநிலை, படகு விபத்துக்குள்ளானமை, திசை மாறிச் சென்றமை உள்ளிட்ட பல விபத்துக்களுக்கு முகங்கொடுத்த 29 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்சமயம் இலங்கையில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மீனவர்கள் 7 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தமிழக மீனவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் யாழ். துணை தூதரகமும் நெருங்கி செயற்படுவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதன் பின் தமிழக மீனவர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை உறுதியளித்துள்ளதென இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

3 வார யோசனைக்குப் பின் நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!
by admin - 0

கன்னடப் படத்துக்காக உடலில் ஒட்டுத் துணியின்றி நிர்வாண கோலத்தில் நடித்துள்ளார் முன்னணி நடிகை பூஜா காந்தி.



தமிழில் கரணுடன் கொக்கி, அர்ஜூனுடன் திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கும் 'தண்டுபால்யா' என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக பூஜா காந்தி நிர்வாணமாக நடித்த காட்சி சமீபத்தில் படமாகியுள்ளது.

இது ஒரு க்ரைம் த்ரில்லர். படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "நான் இயக்கும் முதல் க்ரைம் த்ரில்லர் இந்தப் படம்.

தொடர் கொலைகள் செய்துவந்த ஒரு ரவுடி கூட்டத்தின் உண்மை கதை இது. 11 பேர் கொண்ட இந்த கூட்டத்தில் லட்சுமி என்ற பெண்ணும் இடம்பெற்றிருந்தார். இவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது லட்சுமியை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

இதைப் படமாக்க முடிவு செய்தேன். இதற்கான தகவல்களை சேகரிக்க பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த ரவுடி கும்பலை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தேன். பின்னர் இக்கதையை பூஜா காந்தியிடம் கூறினேன். நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும், பீடி புகைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்றேன்.

3 வார யோசனைக்குப் பிறகு நிர்வாணமாக நடிக்க சம்மதித்தார். சமீபத்தில் அவர் நடித்த நிர்வாண காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. யூனிட் ஆட்களில் சிலர் மட்டும் இருக்க, ரகசியமாக படமாக்கினோம். பயமோ கூச்சமோ இல்லாமல் நடித்தார் பூஜா. இந்தக் காட்சியை அருவருக்கும்படி இருக்காது," என்றார்.

Read More

ரஜினிக்கு முடியாதுன்னு சொன்ன சத்யராஜ் விஜய்க்கு ஓ.கே சொன்னார்!
by admin - 0

சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார். சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம்.


எந்திரன் படத்தை மறந்து விடுங்கள். அது போல நண்பன் இருக்காது. எந்திரனை மறந்து விட்டு நண்பன் படத்தைப் பார்க்க வாருங்கள் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர். கோவையில் நண்பன் படத்தின் பாடல் வெளியீடு நடந்தது. ஷங்கர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, த்ரி இடியட்ஸ் திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.
திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார். நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.
எந்திரன் படம் போல அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள் என்றார் ஷங்கர். நண்பன் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க அவருடன் ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
Read More

ஹசாரே போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு: உண்ணாவிரதத்தை திருமணமண்டபத்தில் இலவசமாக நடத்த அனுமதி
by admin - 0

ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் சென்னை கிளை சார்பில், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இன்று (27.12.2011) முதல் 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
கோடம்பாக்கம் விஸ்வநாதபுரத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொள்ள உள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் போராட்டம் 29 ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
மேற்கண்ட தகவலை செய்தி தொடர்பாளர் பானு ஹோம்ஸ், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சென்னை கிளை ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதத்துக்காக ரஜினிகாந்த் தனது திருமணமண்டபத்தை இலவசமாக அளிப்பதாக அறிவித்தார். பின்னர் இரவில் அங்கு சென்று உண்ணாவிரத ஏற்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.
அண்மையில் ஹசாரே சென்னை வந்தபோது, ரஜினிகாந்த் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது
Read More

பிரிட்டிஷ் பிரஜை கொலை: முக்கிய சந்தேக நபர் சரண்
by admin - 0

இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை என்ற இடத்தில் உள்ள களியாட்ட ஓய்வு விடுதியொன்றில் நத்தார் பிறப்பு நள்ளிரவில் பிரிட்டிஷ் பிரஜையொருவர் கொல்லப்பட்ட சம்வத்தின் முக்கிய சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
தங்காலை பிரதேச சபைத் தலைவரான சம்பத் விதான பத்திரண(24 வயது) பொலிஸில் சரணடைந்தவுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்பி அஜித் ரோஹன பிபிசியிடம் கூறினார்.தங்காலை பிரதேச சபையைச் சேர்ந்த வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரணடைந்தவர்கள் நீதவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கூரிய ஆயுதமொன்றால் தாக்கியே பிரிட்டிஷ் சுற்றுலா பயணி கொல்லப்பட்டதாக கூறிய பொலிசார் கொல்லப்பட்டவரின் சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
கொலை நடந்தவுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஆளுங்கட்சியைச் சேர்ந்த தங்காலை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட சந்தேக நபர்களை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தேடி வருவதாக இலங்கை காவல்துறை முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவருடன் இருந்த ரஷ்யப் பெண்மணி காயமடைந்து தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸ் பேச்சாளர் பிபிசியிடம் மேலும் கூறினார்.
Read More

முல்லைத்தீவில் குடிமனைகளுக்குள் பெருக்கெடுத்துப் பாய்ந்த கடல்நீர் – கடலோரக் கிராமங்களில் நேற்றிரவு பதற்றம்
by admin - 0

முல்லைத்தீவில் கடல்நீர் பெருக்கெடுத்து குடிமனைகளுக்குள் புகுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவை அண்டிய கரையோரக் கிராமங்களிலேயே நேற்றிரவு 9 மணியளவில் கடல் நீர் திடீரென குடிமனைகளுக்குள் புகுந்தது.

செம்மலை, கள்ளப்பாடு, அளம்பில், சிலாவத்தை, முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகள், உப்புக்குளம் போன்ற பகுதிகளுக்குள்ளேயே, கடல்நீர் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2004ம் ஆண்டு இதேநாளில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு கடல்நீர் குடிமனைகளுக்குள் பெருக்கெடுத்துப் பாய்ந்ததால், மீண்டும் சுனாமி வந்து விட்டதோ என்று அஞ்சிய மக்கள் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

கடல் பெருக்கெடுத்ததால், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் பலவும் குடிமனைகளுக்குள் இழுத்து வரப்பட்டன.

பல இடங்களில் இரண்டு அடிக்கும் மேலாக கடல்நீர் குடிமனைகளுக்குள் புகுந்துள்ளதாகவும், இன்று அதிகாலை வரை வற்றாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
Read More

மம்பட்டியான்
by admin - 0

பணக்காரர்கள், பண்ணை முதலாளிகளிடமிருந்து கொள்ளையடித்து, ஏழை எளியோர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் ஒரு கொள்ளைக்காரனை பற்றிய கதை! பல வருடங்களுக்கு முன் தியாகராஜன் நடித்து வெளிவந்த மலையூர் மம்பட்டியான், அவரது மகன் பிரஷாந்த் நடிக்க, அப்பா தியாகராஜனின் இயக்கத்தில் மம்பட்டியானாக மறு அவதாரம் எடுத்திருக்கிறது!

பண்ணையார் கோட்டா சீனிவாசராவிடம், பண்ணை ஆளாக வேலை பார்க்கும் மம்பட்டியான் பிரஷாந்தின் அப்பாவினுடைய கைகளில் ஒரு நாள் தங்க புதையல் கிடைக்கிறது. மண்ணுக்கு அடியில் கிடைக்கும் பொருள், புதையல் அரசாங்கத்திற்குதான் சொந்தம், என அதனை அரசாங்கத்திற்கு கொடுக்க ஆயத்தமாகும் மம்பட்டியானின் அப்பாவையும், அம்மாவையும் போட்டு தள்ளிவிட்டு, புதையலை கைப்பற்றும் பண்ணை கோட்டா சீனிவாசராவ், அதனை தட்டிக் கேட்க வரும் மம்பட்டியானையும் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு காலி பண்ணுகிறார். அவர்களிடமிருந்து தப்பும் மம்பட்டியான் பிரஷாந்த், கோவில் திருவிழாவில் பண்ணை கோட்டாவையும், அவரது அடியாட்கள் ஏழெட்டு பேரையும் வெட்டி கொன்று, தன் சகாக்களுடன் அருகில் இருக்கும் காட்டில் தஞ்சம் புகுந்து கொண்டு, அங்கிருந்தபடியே பணக்காரர்களிடமிருந்து கொ‌ள்ளை அடித்து ஏழைகளுக்கு உதவி வருகிறார்.



மம்பட்டியானை பிடிக்க போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ், ஒரு பக்கம் தன் போலீஸ் டீமுடன் பகீரத பிராயாத்தனம் செய்தபடி இருக்கிறார். மற்றொருபக்கம் மம்பட்டியான் தலைக்கு பத்து லட்சம் பணமும், பத்து ஏக்கர் நிலமும் விலையாக வைத்து அறிவிப்பும் செய்கிறார். பணத்துக்கும், நிலத்துக்கும் ஆசைப்பட்டு, ஊருக்கு நல்லது செய்யும் மம்பட்டியானை ஊர் மக்கள் யாரும் காட்டிக் கொடுத்தார்களா...? அல்லது போலீஸ்க்கு போக்குகாட்டினார்களா...? என்னும் விறுவிறுப்பான கொள்ளை கதையினூடே, மம்பட்டியான் பிரஷாந்த்க்கும், கிராமத்து பெண்ணான கண்ணாத்தாள் எனும் மீரா ஜாஸ்மினுக்குமிடையில் ஏற்படும் பரபரப்பான, அழகிய மனதைக் கொள்ளும் காதலையும் கலந்து கட்டி கலக்கலாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் கம் மாஜி மம்பட்டியான் நடிகர் தியாகராஜன்!

தாடி-மீசை, அடர்ந்த கூந்தல், அஜானுபாகுவான உருவத்தை சுற்றி படர்ந்த கறுப்பு போர்வை சகிதம் மம்பட்டியானாக பிரஷாந்த் பிரமாதம்! ஓப்பனிங் சீனில் பண்ணையார் கோட்டாவை போட்டுத்தள்ள பிரஷாந்த், குதிரை வண்டியில் வித்தியாசமும், விறுவிறுப்புமாக ஆக்ரோஷமாக வரும் காட்சி ஒன்று போதும், அப்பா பாய்ந்த எட்டடியை, பிள்ளை பதினாறடி பாய்ந்து கடந்து விட்டார் என்று சொல்வதற்கு... வாயில் மெழுவர்த்தியை ஏந்தி கை கட்டுகளை தகர்த்து தப்பிப்பது, புத்திசாலித்தனமாக போலீஸ் பிரகாஷ்ராஜிடமிருந்து தன் சகாக்களை விடுவித்து மீட்டு செல்வது, காதலி சொல்லிவிட்டாள் எனும் ஒரு காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்காக சாட்டையடி வாங்குவது என மம்பட்டியானாக நெகிழ வைக்கும் பிரஷாந்த், மீரா ஜாஸ்மின் உடனான காதல் காட்சிகளில் மகிழவும் வைக்கிறார்.

கண்ணாத்தாளாக மீரா ஜாஸ்மின், பழைய மம்பட்டியான நாயகி சரிதா இடத்தை எட்டிபிடிக்க முயன்றிருக்கிறார் அவ்வளவே! ஆனாலும் சின்னப் பொண்ணு சேலை... பாடலில் சரிதாவையும் விஞ்சி சபாஷ் வாங்கிவிடுகிறார். பலே! பலே!!

மம்பட்டியானை பிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ், முமைத்கானை ஒருதலையாக காதலிக்கும் சின்ன பண்ணையாக காமெடி வடிவேலும் இருவரும் படத்தின் பெரும் பலம்! அதேநேரம், சில்க் ஸ்மிதா நடித்த வேடத்தில் முமைத்கானை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஆனாலும் இவரது பாத்திரம் ஓ.கே.! பங்களிப்பு பலவீனம்!!

மலையூர் மம்பட்டியான் பாடல்களை அப்படியே இசையமைப்பாளர் எஸ்.தமன், ரீ-மேக்கான மம்பட்டியான் படத்தில் பிரமாதமாக ரீ-மிக்ஸ் செய்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ்! அதேமாதிரி இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத பச்சை பசேலின், சாஜி குமாரின் ஒளிப்பதிவும் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்டாகும்!

தியாகராஜனின் பிரமாண்டம் ப்ளஸ், பிரமாதமான தயாரிப்பு மற்றும் எழுத்து, இயக்கத்தால், புதிய "மம்பட்டியான்", பழைய "மலையூர் மம்பட்டியான்" படத்தை விட ஜொலிக்கிறது என்றால் மிகையல்ல!
Read More

சசியுடன் இணைவாரா முதல்வர் -சசிகலா- நாயுடு உதவியை நாடினார்!
by admin - 0

முதல்வர் ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா தரப்பு கடுமையாக முயல்வதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் தற்போது ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அணுகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



சமீபத்தில் சசிகலா குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு அதிமுகவை விட்டு வெளியேற்றினார். மேலும் போயஸ் தோட்டத்திலிருந்தும் சசி குடும்பம் வெளியேற்றப்பட்டது. தற்போது அங்கு தங்கியிருப்பது சசிகலாவின் அண்ணி இளவரசி மட்டுமே.

வெளியேற்றப்பட்ட சசிகலா தரப்பு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறது. நீக்கம் தொடர்பாக இதுவரை சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யாருமே கருத்து தெரிவிக்காமல் பலத்த அமைதி காத்து வருகின்றனர். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இப்படி அத்தனை பேரும் மொத்தமாக மெளனம் காக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் சைலன்ட்டாக ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா குடும்பத்தினர் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ன.

ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதால் அவரிடம் நேரடியாக போய் சமரசம் பேச அச்சப்பட்ட சசிகலா தரப்பு ஜெயலலிதாவுக்கு நெருக்கமான வட்டத்தை அணுகி சமரசம் செய்யுமாறு கேட்டு வருவதாக தெரிகிறது.

இதற்காக அவர்களில் முதலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க முயன்றனராம். இதற்காக சிலரை மோடியிடம் அனுப்பி வைத்தனராம். ஆனால் அவர்களை திட்டி அனுப்பி விட்டாராம் மோடி. இதுதொடர்பாக இனிமேல் என்னிடம் யாரும் வராதீர்கள் என்றும் கூறி விட்டாராம்.

இதையடுத்து அடுத்து சந்திரபாபு நாயுடுவை அணுகியுள்ளதாம் சசிகலா தரப்பு. ஒரு ஆந்திர தொழிலதிபர் மூலமாக நாயுடுவை சசிகலா தரப்பு அணுகியுள்ளதாக கூறுகிறார்கள். அந்தத் தொழிலதிபரும் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்குமாறு நாயுடுவைக் கேட்டுக் கொண்டுள்ளாராம். மோடி போல நடந்து கொள்ளாமல் சசிகலா தரப்பு கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டுள்ளாராம் நாயுடு.

இதனால் சற்று நம்பிக்கையுடன் சசிகலா தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் ஜெயலலிதாவுடன் நாயுடு பேசி சமரசம் ஏற்படுத்த முயல்வார் என்று சசிகலா தரப்பு பெருத்த நம்பிக்கையி்ல் உள்ளது.

இந்த சமரச முயற்சிகள் காரணமாகத்தான் ஜெயலலிதாவின் நடவடிக்கை குறித்து எதுவும் பேசாமல் கப்சிப்பென சசிகலா தரப்பினர் இருப்பதாக கூறுகிறார்கள்.
Read More

ராஜபாட்டை
by admin - 0

கலை படங்களையும், கமர்ஷியல் படங்களாக நடித்து ரசிகர்களை கவருவதில் வல்லவரான விக்ரம், முழுக்க முழுக்க கமர்ஷியலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "ராஜபாட்டை".


சினிமாவில் பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவுடன் ஜிம்பாயாக சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் விக்ரம், ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் முதியவரான கே.விஸ்வநாத்தை காபந்து செய்து, தன் கூடவே தங்க வைத்து கொள்கிறர். விக்ரம்-தீக்ஷா சேத்தின் காதலுக்கு கலர்ஃபுல் டிப்ஸெல்லாம் தரும் கலக்கல் பெரியவரான கே.விஸ்வநாத் வாழ்க்கையில் அப்படி ஒரு சோகம்! அதாகப்பட்டது, தன் மறைந்த மனைவி பெயரில் விஸ்வநாத் நடத்தி வரும் அனாதை சிறுவர்கள் ஆசிரமத்தை, தன் அரசியல் லாபத்திற்காக அடித்து பிடுங்குகிறார் அவரது மகன் அவினாஷ்! அதை அவரிடமிருந்து ஆட்டையை போடுகிறார் அரசியல் தலைவியும், நிலமோசடி ராணியுமான அக்கா ரங்கநாயகி எனும் சனா. அவருக்கு ஆதியும் அந்தமும் ஆதரவாக இருக்கிறார் வாப்பா எனும் பிரதீப் ராவத். மகன் அவினாஷிடமிருந்து பெரியவர் கே.விஸ்வநாத்தை காக்கும் விக்ரம், அக்கா சனா, வாப்பா பிரதீப் இருவரிடமிருந்து அனாதை ஆசிரம நிலத்தை மீட்டு மீண்டும் விஸ்வநாத் விருப்பபடி அந்த இடத்தில் அனாதை சிறுவர் விடுதிக்கு அடிக்கோள் நாட்டுவது தான் "ராஜபாட்டை" படத்தின் மொத்த கதையும்!

விக்ரம் ஜிம்பாயாக, பெரிய ஹீரோவாகும் ஆசையில் கோலிவுட்டை ரவுண்ட் அடிப்பது வரை ஓ.கே. அதில் சி.பி.ஐ. ஆபிஸராக, சீக்கிய ஆபிஸராக மாறி நிலமோசடி விவகாரத்தில் வாப்பாவை வதைப்பது எல்லாம் ரொம்பவே ஓவராகத் தெரிகிறது! இது மாதிரி படக்காட்சிகளிலும், ஒரு பாடல் காட்சிகளிலும் சேர்த்து 17 வேடங்களில் விக்ரம் வருவதெல்லாம் கதைக்கேற்ற காட்சிகளை பிடிக்காமல் இயக்குநருடன் சேர்ந்து விக்ரமும் கண்ணாமூச்சி காட்டியிருப்பதாகவே தோன்றுகிறது!

படத்தின் புதுமுகநாயகி தீக்ஷா சேத்திற்கே போதுமான சீன்கள் இல்லாத பட்சத்தில் க்ளைமாக்ஸ் முடிச்சு, ஸ்ரேயாவுடனும், ரீமா சென்னுடனும் விக்ரம் ஆடிப்பாடும் பாடல்காட்சி ஏதோ எடுத்து விட்டோம் காசை கொட்டி என வலிய திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. தீக்ஷாவின் நடிப்பை அடுத்த படத்தில் பார்த்துவிட்டு தான் விமர்சிக்க முடியும்! இதில் அவ்வளவு சின்னரோல் அம்மணிக்கு பாவம்! கே.விஸ்வநாத், தம்பி ராமையா, பிரதீப்ராவ், அவினாஷ், சனா, அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் தங்கள் பங்கை சரியாகவே செய்திருக்கின்றனர்!

யுவனின் பின்னணி இசையும் (பாடல்கள் அல்ல...) மதியின் ஒளிப்பதிவும் படத்தின் பெரும்பலம்! வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை என யதார்த்தமான படங்களை எளிமையாகவும், இனிமையாகவும் இயக்கிய சுசீந்திரன், கமர்ஷியலாக இயக்கிய "நான் மகான் அல்ல" அளவிற்கு கூட ராஜபாட்டையில் கலக்காதது வருத்தமே!

தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலமோசடி விவகார வழக்குகளை விளையாட்டாக படமாக்கி இருக்கிறார்கள்! இன்னும் சற்று விளையாட்டை குறைத்து அதன் வீரியத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருந்தால் "ராஜபாட்டை", "ரசிக்கும் பாட்டை"யாக இருந்திருக்கும்!
Read More

சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்தார் ஜீவா!
by admin - 0

சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்திருக்கும் நடிகர் ஜீவா, "தமிழர்கள் மனதை புண்படுத்தும் விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் சிலர், புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பின்னணி பாடகருமான கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.

அந்த விழாவில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூன்று பேரும் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கருணா கோஷ்டியினர் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதைத்தொடர்ந்து ஜீவா தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "சங்கீதாவையும், கிரிஷையும் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் சங்கம் கவுரவிக்க இருப்பதாகவும், அதில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைத்தார்கள். அதோடு அங்கு நடைபெறும் புத்தாண்டு விழாவிலும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் வருடந்தோறும் மனைவியுடன் வெளிநாடு சென்று புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். அதனால், சுவிட்சர்லாந்து செல்ல சம்மதித்து இருந்தேன். ஆனால், அந்த விழா சர்ச்சையாகி இருக்கிறது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் விழாவில், நான் கலந்துகொள்ள மாட்டேன். சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டேன், என்று கூறியுள்ளார்.
Read More

பாலிவுட் படத்தில் மீண்டும் விக்ரம்!
by admin - 0


ராவண் படத்துக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் விக்ரம். இந்தப் படத்தை மலையாள இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்குகிறார். மலையாள இயக்குநரின் பாலிவுட் படத்தில் மீண்டும் விக்ரம்! விக்ரம் முதல் முதலாக நடித்த இந்திப் படம் ராவண். மணிரத்னம் இயக்கி படுதோல்வியைச் சந்தித்த படம் இது. ஆனாலும் படத்தில் ஹீரோ அபிஷேக் பச்சனை விட, ராவணாக நடித்த விக்ரமுக்கு ஏக பாராட்டுகள் குவிந்தன. இப்போது மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்தப் படத்துக்கு டேவிட் என பெயர் வைத்துள்ளனர்.மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த பிஜாய் நம்பியார் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து விக்ரம் கூறுகையில், "பிஜாய் இயக்கும் இந்திப் படத்தில் நடிப்பது உண்மைதான். 2012-ல் ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ராவண் படம் பண்ண போதே, பிஜாயுடன் எனக்கு நெருங்கிய பழக்கம்," என்றார். இந்தியில் வெளியான சைத்தான் என்ற படத்தை ஏற்கெனவே இயக்கியவர் இந்த பிஜாய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

December 26, 2011

நமீபியாவில் விண் வெளியில் இருந்து விழுந்த இரும்பு குண்டு!
by admin - 0


ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் விண்வெளியில் இருந்து இரும்பு குண்டு ஒன்று விழுந்தது. தலைநகர் வின்ட்கோயக்கில் இருந்து 750 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்த அந்த இரும்பு குண்டு 1.1 மீட்டர் அதாவது 43 “இஞ்ச்” நீளமும், 35 செ.மீட்டர் அகலமும் கொண்டது.

இந்த குண்டின் எடை 6 கிலோ இருந்தது. இரு அரை வட்டங்கள் வெல்டிங் செய்து ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அந்த குண்டு விழுந்ததால் பூமியில் 3.8 மீட்டர் அகலத்தில் 33 செ.மீட்டர் ஆழம் ஏற்பட்டது. இந்த குண்டு எங்கிருந்து எப்படி விழுந்தது என தெரியவில்லை.எனவே, இது குறித்து நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு கடந்த நவம்பர் மாதம் மத்தியில் விண்ணில் இருந்து விழுந்தது. இரும்பினால் ஆன இந்த குண்டினால் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.


வெடிக்கக்கூடிய தன்மையற்றதாக அது இருந்ததாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி வில்கோ தெரிவித்தார்.தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று விண்வெளியில் இருந்து குண்டுகள் விழுந்துள்ளன.
Read More

சுனாமி நினைவலைகள்: 7 ஆண்டு ஆகியும் அழியாத நினைவுகள்-கடலோர மாவட்டங்களில் அஞ்சலி
by admin - 0

ஆசிய நாடுகளை சுனாமி தாக்கியதன் 7 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கடலோர மாவட்டங்களில் அனுசரிக்கப்பட்டது.

ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கடற்கரையில் குவிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


2004 ம் ஆண்டு டிசம்பர் 24ம் நாள் காலை 8 மணியளவில் தமிழ்நாடு கடலோர மாவட்ட மக்கள் அப்படியொரு மரண அரக்கன் தங்களைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடலில் இருந்து எழும்பிய ராட்சத அலைகள், கடற்கரையில் இருந்த மக்களையும், அவர்களின் உடமைகளையும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கபளீகரம் செய்துகொண்டு சென்றது.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை காவு கொடுத்த பெற்றோர்களும், கணவனை இழந்தவர்களும், உற்றார்களை, உறவுகளை, நட்புகளை வாரிச் சுருட்டிக் கொண்டோடியது சுனாமி. ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த ஆசியநாடுகளும் அழுது அரற்றிய காட்சி வரலாற்றில் காண முடியாத காட்சியாகிவிட்டது.

சென்னை முதல் குமரி வரை

இந்தோனேசியா முதல் இந்தியா வரை இந்தியப் பெருங்கடலைப் புரட்டிப் போட்ட சுனாமி அலைகளுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரி வரை கடற்கரையோர மாவட்ட மக்கள் சுனாமியின் கோரத்தாண்டவத்திற்கு 8 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

கடற்கரையோரங்களில் வீடுகட்டி ராஜவாழ்க்கை வாழ்ந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் தெருவோரத்திற்கு வந்த சம்பவமும் அந்த நாளில் நிகழ்ந்தது. நாகை மாவட்டத்தில் மட்டும், 6ஆயிரத்து 65 பேரை ஆழிப் பேரலை அள்ளிப்போட்டுக்கொண்டது.

கிருஸ்துமஸ் தினத்திற்கு மறுதினம் என்பதால் வேளாங்கண்ணியில் குவிந்திருந்த பக்தர்கள் அனைவரும் கொத்துக்கொத்தாக கடலின் கோர நாவுகளுக்கு இரையாகினர்.

நினைவு அஞ்சலி




கடலோர மக்களை சுனாமி சுருட்டிப்போட்டு இன்றோடு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதனையொட்டி, கடல் கொண்ட தங்களின் உறவினர்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரீனா கடற்கரையில் குழுமிய மக்கள் கடலுக்குள் குடம் குடமாய் பாலை ஊற்றி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாகை, வேளாங்கன்னி, தரங்கம்பாடி, உள்ளிட்ட தமிழக கடற்கரையோர பகுதிகளில் நினைவு பேரணி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

கன்னியாகுமரியில் அஞ்சலி

கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூண் முன்பு ஏராளமானோர் மெழுகு வர்த்தி ஏற்றிவைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்தியா மட்டுமின்றி சுனாமி தாக்கிய மற்ற நாடுகளும் இன்று ஏழாம் வருட துக்க தினத்தை அனுசரித்து வருகின்றன.
Read More

கறுப்புக் கொடி காட்ட புறப்படும்போதே விஜயகாந்த் கைது!
by admin - 0

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கறுப்புக் காட்ட வீட்டிலிருந்து புறப்பட்ட போதே தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார்.



முல்லைப் பெரியாறு, கூடங்குளம் போன்ற பிரச்சினைகளில் தமிழகத்துக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப் பிடிப்பதால், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

இன்று காலை முதலே அவரது வீட்டைச் சுற்றி ஏராளமான தேமுதிக தொண்டர்கள் குவிந்திருந்தனர். பெரும்பாலானோர் கறுப்பு உடை அணிந்திருந்தனர்.

திட்டமிட்டபடி இன்று காலை கருப்புக்கொடி காட்ட தன் வீட்டிலிருந்து புறப்பட்ட விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். அவரை மாநகர பஸ்ஸிலேற்றி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அவருடன் கட்சியின் நிர்வாகிகள் சிலரும் கைதாகினர். விஜயகாந்த் கைது செய்யப்பட்ட போத, தொண்டர்கள் பிரதமரையும் மத்திய அரசையும் எதிர்த்துக் கோஷமிட்டனர்.
Read More

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறுகிறது- நாளை முதல் மழை பெய்யும்!
by admin - 0

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது இன்று இரவுக்குள் புயலாக மாறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் நாளை முதல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது நேற்று இரவு ஒரு தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றது. இன்று காலை 5. 30 மணி நிலவரப்படி அது மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது.

இது தற்போது சென்னையிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இலங்கை மற்றும் தமிழகத்தை நோக்கி இது நகரத் தொடங்கியுள்ளது. இன்றுஇரவுக்குள் இது புயலாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எனவே கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என்றுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலில் காற்றும் பலமாக வீசும். நாளை முதல் தமிழகத்தின் வட பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தில் மழை பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ள இந்தப் புயலானது தொடர்ந்து மேற்கு வட மேற்குத் திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆநதிரா இடையே, கடலூர் மற்றும் நெல்லூர் இடையே 29ம் தேதி அதிகாலையில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நாளை முதல் 29ம் தேதி வரை தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Read More

முல்லைப் பெரியாறு- ஆளுநர் மாளிகையில் தந்தையுடன் போய் பிரதமரை சந்தித்த கனிமொழி
by admin - 0

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, இன்று காலை தனது தந்தை கருணாநிதியுடன் சென்று பிரதமரைச் சந்தித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய பின்னர் பிரதமரை கனிமொழி சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இன்று காலை பிரதமரை கருணாநிதி சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். இந்த சந்திப்பின்போது முக்கிய நபராக கனிமொழியும் உடன் இருந்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியின் விடுதலை தொடர்பாக பிரதமர், சோனியா காந்தியை திமுக தரப்பு பலமுறை சந்தித்துப் பேசியது. இருப்பினும் கோர்ட் மற்றும் சிபிஐயின் நடவடிக்கையில் காங்கிரஸோ, மத்திய அரசோ நேரடியாக தலையிட முடியாது என்று பிரதமர் தரப்பிலும், காங்கிரஸ் தரப்பிலும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கனிமொழி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பிரதமரைச் சந்திக்கச் சென்ற கருணாநிதி, கூடவே கனிமொழியையும் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Read More

கட்சியை தொடங்கி போராட்டம் நடத்தி முதல் முறையாக விஜயகாந்த் கைது!
by admin - 0

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பிலிருந்து ஊர்வலகமாக புறப்பட்ட தேமுதிகவினர் சின்னமலை வழியாக பிரதமர் தங்கியிருந்த ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றனர்.



சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை ஏற்க மறுத்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகாந்த் மற்றும் தேமுதிகவினர் திருமண மண்டபவங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 12.45 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், கூடங்குளம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல், தனியார் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் செல்வது தவறு. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க பிரதமர் வந்தாரா? அரசாங்கம் விழாவுக்கு வந்த மாதிரி வந்துவிட்டு, ப.சிதம்பரம் சொல்கிற 2 விழாவுக்கு போய் சேருகிறார் பிரதமர். மக்கள் செத்தாலும் பரவாயில்லை. பிரதமர் விழாவுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். 4 அடுக்கு பாதுகாப்பு என்று சொன்னார்கள். திருச்சியில் இருந்து காரில் போகிறார் என்றார்கள். எங்கே கருப்புக்கொடி காட்டுவார்களோ என்று உடனே விமானத்தில் போகிறார். இதுதான் மக்களுக்கு செய்கிற நல்ல காரியமா?


திமுக அதிமுக ஒன்றுபட்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு போராட தயாராக இருந்தால், தேமுதிகவும் போராட்டத்தில் இணையும். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தேமுதிக தயாராக உள்ளது.


கடந்த 2005ஆம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

பிரதமருக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்திய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும், தே.மு.தி.கவினர் மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஆயிரகணக்கானவர்கள் கைது செய்யபட்டனர். 10 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் கைதானார்கள்.
Read More

முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
by admin - 0

முல்லைப் பெரியாறு அணை பகுதி மீனாட்சியம்மனுக்கு சொந்தமானது. எனவே, கேரள அரசு வறட்டு பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்திடம் அப்பகுதியை ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவி்த்துள்ளார்.

மதுரை நகர பண்பாட்டுக்கழகம் சார்பில் முல்லைப் பெரியாறு அணையை மீட்கும் உரிமை முழக்க விளக்க கூட்டம் மதுரை விக்டோரியா எட்வர்டு திறந்த வெளி அரங்கில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியதாவது,

முல்லைப் பெரியாறு பிரச்சனையை கேரள அரசு அவதூறாக தூண்டி விட்டு மனிதாபிமான மற்ற செயல்களில் ஈடுபடுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அலட்சியப்படுத்திவி்ட்டு, தமிழகத்துக்கு கேடு விளைவித்துக் கொண்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை பறித்துவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழினத்தின் கடைமையாகும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு கரன்சி, ராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல நதிகளையும், அணைக்கட்டுகளையும் உடனே தனது கடுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அப்போது தான் காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியும். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சரியான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் தமிழகமே அணிவகுத்துக் கொண்டிருக்கிறது.

கேரள அரசு தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு ஒருமைப்பாட்டை காக்க முன்வர வேண்டும். ஜவஹர்லால் நேரு போதித்த வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடு எங்கே? இங்கே ஒட்டுமொத்த தமிழர்கள் அனைவரும் கேரளத்துக்கு எதிராக கொந்தளித்து முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க புறப்பட்டுள்ளனர். இது தான் தமிழின உணர்வு, இது கேரளத்துக்கு நல்ல எச்சரிக்கை.

கேரள அரசு உடனே தனது பொய்ப் பிரசாரத்தை விட்டுவிட்டு தமிழக உரிமையை பறிக்காமல் 142 அடிக்கு தண்ணீரை தேக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். புதிய அணையை கட்டினால் நானே நேரடிப் போராட்டத்தில் குதிப்பேன். முல்லைப் பெரியாறுக்கு செல்வேன். எல்லை போராட்டத்தில் ஈடுபடுவேன்.

முல்லைப் பெரியாறு அணை பகுதி மீனாட்சியம்மனுக்கு சொந்தமானது. எனவே, கேரள அரசு வறட்டு பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்திடம் அப்பகுதியை ஒப்படைக்க வேண்டும். இது சிவபெருமானின் ஆணை. இந்த போராட்டத்தில் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.
Read More

யாழ்.கிழக்கு கடலில் சூறாவளி: வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை
by admin - 0

யாழ். குடாநாட்டின் கிழக்கு கடல் பகுதியில் ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் கிழக்கு கடலில் இருந்து 750 கிலோ மீற்றர் தூரத்திலே சூறாவளி மையம் கொண்டுள்ளதாகவும் இதனையடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் இலங்கை வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது
Read More

ரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை!
by admin - 0

ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத்.

இவரும் கூட ஒரு காலத்தில் நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர்தான். ஆனால் பின்னாளில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின் பிரமாண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து அமைதியாகிவிட்டார் (இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு படத்திலாவது அடிவாங்கினால் போதும் என்கிறார்!)


அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.

இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன!





Read More

December 25, 2011

சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி
by admin - 0

சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி சுற்றுலாத் தலமாகும். அபாயகரமான ஏரியும் கூட. இருப்பினும் பலரும் இங்கு சுற்றுலா சவாரியாக படகு சவாரி செய்வது வழக்கம்.

இந்தநிலையில் இன்று ஒரு படகு சுற்றுலா வந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அதில் 25க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் படகு பாரம் தாங்க முடியாமல், ஏரியின் நடுவில் கவிழ்ந்தது. நீரில் மூழ்கிய பலரும் உயிருக்காக போராடினர். அதில் 22 பேர் உயிரிழந்து விட்டனர்.

இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.

படகில் பயணித்தவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்நதவர்கள் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா இரங்கல்

பழவேற்காடு படகு விபத்து குறித்து தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அமைச்சர்கள் பி.வி.ரமணா, மூர்த்தி ஆகியோரையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
Read More

மலையாள நடிகைகளை 'பேக்கப்' செய்து அனுப்பிய பாரதிராஜா!
by admin - 1

முல்லைப் பெரியாறு விவகாரம் எதிரொலி-படத்தை நிறுத்தினார் பாரதிராஜா-மலையாள நடிகைகளுக்குப் பேக்கப்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டக் களத்தில் குதித்துள்ள இயக்குநர் பாரதிராஜா, பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தான் தொடங்கிய கொடி வீரனும் அன்னக்கொடியும் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துள்ளார். இப்படத்தின் நாயகிகள் இருவரும் மலையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த முடிவாம்.


சமீபத்தில் தனது சொநத ஊரான தேன அல்லிநகரத்திற்கு தமிழ்த் திரையுலக பிதாமகர்களையும், பத்திரிக்கையாளர்களையும் அழைத்துச் சென்று, தான் நேசிக்கும் மக்கள் முன்பு கொடிவீரனும் அன்னக்கொடியும் படப்பிடிப்பை தொடங்கினார் பாரதிராஜா.

பிரமாண்டமாக நடந்த அந்த விழாவுக்குப் பின்னர் படப்பிடிப்பையும் தொடங்கினார். இப்படத்தில் இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக இனியா மற்றும் கார்த்திகா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களில் இனியா வாகை சூட வா படத்தின் மூலம் அறிமுகமானவர். கார்த்திகா, நடிகை ராதாவின் மகள், கோ படத்தின் மூலம் ஹிட் நாயகியானவர். இருவருமே மலையாளிகள்.

தற்போது முல்லைப் பெரியாறு விவகாரம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு துறையினரும் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் பாரதிராஜாவும் களத்தில் குதித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெரும் அறப் போராட்டத்தில் அவர் பங்கேற்கிறார். மேலும், தேனி, கம்பத்தில் நடைபெறவுள்ள திரைப்பட இயக்குநர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில் தனது கொடிவீரனும், அன்னக்கொடியும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளாராம் பாரதிராஜா. மேலும், தனது இரு மலையாள நாயகிகளையும் பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.

முல்லைப் பெரியாறு விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், தானே மலையாள நடிகைகளை வைத்து படத்தை தொடர்ந்து இயக்கினால் சரியாக இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் பாரதிராஜா.

இது நிரந்தர முடிவா அல்லது பிரச்சினை ஆறிய பிறகு மீண்டும் இனியா, கார்த்திகாவை வைத்துப் படத்தைத் தொடருவாரா என்பது குறித்துத் தெரியவில்லை.
Read More

ஜெயலலலிதாவால் விரட்டப்பட்டுள்ள சசிகலா குழுவினர் விஜயகாந்த்துடன் இணைவு
by admin - 0

ஜெயலலலிதாவால் விரட்டப்பட்டுள்ள சசிகலா குழுவினர், ஜெயலலிதாவை வீழ்த்த அவரது இன்னொரு எதிரியான விஜயகாந்த்துடன் கை கோர்க்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.


அதிமுகவிலிருந்தும், ஜெயலலிதாவின் மதிப்பு வட்டத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டுள்ள சசிகலா தரப்பு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்தடுத்த விசாரணையின்போது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல் ஒன்று கிசுகிசுக்கப்படுகிறது. சசிகலா தரப்பு, ஜெயலலிதாவை வீழ்த்த விஜயகாந்த்துடன் அணி சேரலாம் என்பதுதான் அந்த கிசுகிசு.

அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த்தைக் கூட்டி வந்தவர்களில் முக்கியமான பங்கு சசிகலா தரப்புக்கும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். பத்திரிக்கையாளர் சோ உள்ளிட்டோர்தான் இந்த கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டனர் என்றாலும் கூட தொகுதிப் பங்கீடு, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சசிகலா தரப்புதான் முதலில் விஜயகாந்த் தரப்புடன் பேசியது.

எனவே அந்த நட்பின் அடிப்பையில் வரும் காலத்தில் விஜயகாந்த்துடன் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சசிகலா தரப்பு இணைந்து செயல்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், நடராஜன், திமுகவுடன் தனக்குள்ள ரகசிய உறவைப் பயன்படுத்தி அந்தக் கட்சிக்கும் உதவிக் கரம் நீட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜெயலலிதாவுக்கு எதிராக சிதறிக் கிடக்கும் பல்வேறு சக்திகளைத் திரட்டவும் அவர் முயலலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த தங்களை கூண்டோடு ஜெயலலிதா நீக்கியுள்ளதன் மூலம் முற்பட்ட வகுப்புக்குச் சாதகமாக ஜெயலலிதா நடப்பதாக அந்த சமுதாயத்தினர் மத்தியில் குறிப்பாக காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களில் உள்ள தங்களது சமுதாயத்தினர் மத்தியில் கருத்தைரப் பரப்ப அவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோருடன் கை கோர்க்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதனால் நடராஜனின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால் ஜாதியை வைத்து நடராஜன் தரப்பு பிரசாரத்தில் இறங்கினால் அதை ஜெயலலிதா எளிதாக சமாளித்து விடுவார் என்று ஜெயலலிதா விசுவாசிகள் கூறுகிறார்கள். காரணம், முக்குலத்தோருக்கு அரசியல்ரீதியாக பெரும் அங்கீகாரம் கொடுத்து பல உயர் பதவிகளையும், அமைச்சர் பதவிகளையும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்., அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாதான் என்பது அந்த சமுதாயத்தினருக்கு நன்கு தெரியும். மேலும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் பதவியிலும் ஜெயலலிதா அமர்த்தியதை அச்சமுதாயத்தினர் இன்னும் மறக்கவில்லை. எனவே ஜாதி ரீதியாக நடராஜன் தரப்பு கிளம்பினால் அது தோல்வியிலேயே முடியும் என்கிறார்கள் அவர்கள்.

தற்போதைய நிலையில் சசிகலா தரப்பு, ஜெயலலிதாவுக்கு எதிராக ஏவப் போகும் அஸ்திரம் என்ன என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் காத்திருக்கிறது.
Read More

கறுப்புக் கொடிகளுடன் தயாராகும் வைகோ, விஜயகாந்த்- பதட்டத்தில் தமிழக போலீஸ்!
by admin - 0

சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை கறுப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவரைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அறிவித்திருப்பதால் சென்னை போலீஸார் படபடப்புடன் உள்ளனர். எந்த இடத்திலும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டு விடக் கூடாதே என்ற பதட்டத்துடன் அவர்கள் பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் வைகோ. மேலும், பிரதமருக்கு நாளை கறுப்புக் கொடி காட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதேபோல விஜயகாந்த்தும் தனது தலைமையில் கறுப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்துள்ளார். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார் என்றும் அவர் காட்டமாக கேட்டுள்ளார்.

இதேபோல, காரைக்குடிக்கு பிரதமர் வரும்போது அங்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று விவசாய அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் அறிவித்துள்ளன. மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வீடுகளில்கறுப்புக்கொடி ஏற்றப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் சென்னை, காரைக்குடி, திருச்சி போலீஸார் கடும் பதட்டத்துடன் உள்ளனர். எந்த இடத்திலும் கருப்புக் கொடி காட்டப்பட்டு விடக் கூடாதே என்ற படபடப்புடன் உள்ளனர். இதனால் பிரதமர் செல்லும் வழியெல்லாம் பெருமளவில் போலீஸார் குவிக்கப்படவுள்ளனர். பலத்த பாதுகாப்பும் போடப்படுகிறது.

சென்னை ராஜ்பவனிலிருந்து பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ரகசிய கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்படுகின்றன. ஆயுதப் படை போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து ஏற்கனவே வந்து விட்ட 6 உறுப்பினர்களைக் கொண்ட பிரதமரின் பாதுகாப்பு்ப் படை நிபுணர்களும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்துள்ளனர்.

இதேபோல திருச்சி, காரைக்குடி ஆகிய இடங்களிலும் பெருமளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடியில் ஆயிரக்கணக்கில் விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு வர பல்வேறு விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதால் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

December 24, 2011

தூத்துக்குடி: ஆராய்ச்சிக்காக மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பும் முயற்சிக்கு நாசா உதவி செய்யும
by admin - 0

தூத்துக்குடி: ஆராய்ச்சிக்காக மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பும் முயற்சிக்கு நாசா உதவி செய்யும் என்று விஞ்ஞானி அந்தோணி ஜீவன்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி காமராஜர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சார்பில் ‘வருங்கால தலைமுறைக்கான சவால்களும், எதிர்பார்ப்புகளும் நாசாவின் பார்வையில்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். விலங்கியல் துறை இணை பேராசிரியர் நாகராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முன்னாள் மாணவரும் தற்போது அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மைய விஞ்ஞானியுமான அந்தோணி ஜீவன்ராஜ் கருத்தரங்கில் பேசியதாவது, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் வரை ஆளில்லா விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி செவ்வாய் கிரகத்திற்கு சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆள் இல்லா விண்கலத்தில் ஹெப்லாஸ் என்ற தொலைநோக்கி மற்றும் அதிநவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன கருவிகள் முலம் செவ்வாய் கிரகம் மற்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய கிரகங்கள் பற்றி போட்டோ தகவல்களை அது நாசா மையத்திற்கு அனுப்பி வைக்கும். இந்தியாவுக்கு உதவி இந்த ஆள் இல்லா விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள சூரிய குடும்பங்கள் மற்றும் பூமி பற்றிய பல ஆராய்ச்சிகளுக்கு அது மிகவும் பயன் உள்ளதாக அமையும். செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக மனிதனை அனுப்புவதற்காக இந்தியா முயற்சி செய்து வருகிறது. அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் இந்த சவாலான முயற்சிக்கு நாசா உதவி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Read More

December 23, 2011

இரட்டை தலையுடன் பிறந்த அதிசய குழந்தை
by admin - 0

பிரேசில் நாட்டு பெண்ணுக்கு இரட்டை தலை உள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பாரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மரியா டி நாசரே(25). கர்ப்பமாக இருந்த மரியா இங்குள்ள அனாஜஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு மரியாவுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் குழந்தைக்கு இரண்டு மூளைகள், இரண்டு முதுகெலும்பும், ஆனால் இதயம், நுரையீரல், கல்லீரல், இடுப்பெலும்பு ஆகியவை வழக்கமாக இருப்பது போல ஒன்று மட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. பிரசவ காலம் நெருங்கியதும் மரியாவுக்கு வைத்தியர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து இரட்டை தலை உள்ள ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர். நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தை இருப்பதாகவும், அதன் நிறை 4 கிலோ இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இக்குழந்தைக்கு எமனோயில் யேசு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் இரட்டை தலையுடன் கூடிய குழந்தை பிறப்பது இது இரண்டாவது சம்பவம். ஏற்கனவே, பரைபா மாகாணத்தில் சுலே பெரைரா என்ற பெண்ணுக்கு இரண்டு தலை கொண்ட குழந்தை பிறந்து, பின்பு சில மணி நேரங்களில் உயிர் பிரிந்தது என்று கூறப்படுகிறது.
Read More