Latest News

Slider Area

Featured post

நீதியை நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், தமிழ் மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்.”

“நீதியை நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், தமிழ் மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்.” – ஜஸ்மின் சூக்கா அம்மையார் இனப்பட...

தமிழீழம்

சினிமா

தமிழ் வளர்ப்போம்

May 21, 2020

நீதியை நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், தமிழ் மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்.”
by Editor - 0

“நீதியை நிலைநாட்ட காலதாமதம் ஏற்பட்டாலும், தமிழ் மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்.” – ஜஸ்மின் சூக்கா அம்மையார்


இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு “நீதியை நிலைநாட்டக் கால தாமதம் ஏற்பட்டாலும், மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்!” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா அம்மையார
 வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவெந்தலின் 11 வது ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள காணொளி அறிவிப்பிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இந்த காணொளி அறிவிப்பில், இறுதி போரின்போது உயிர்நீத்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மோதல் முடிவிற்கு வந்து பல ஆண்டுகள்  கடந்தும், இறுதி யுத்தத்தின்போது எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை உறுதியாக கூற முடியாதுள்ளமை, கொடுமையான விடயம்!”

“இலங்கை அரசாங்கமும் அதிகாரிகளும் தங்களிடம் சரணடைந்தவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என தொடர்ந்தும் மறுத்துவருகின்றனர்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெறுமனே உயிர்தப்பியவர்களின் ஆவணங்களை பதிவு செய்வதை மாத்திரம் மேற்கொள்ளவில்லை.

மாறாக யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கான ஆதாரங்கள் தடயங்களை சேகரித்து ஆவணப்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளோம்! 

இதன் காரணமாக ஒரு நாள் அவற்றிற்கு காரணமானவர்களை நாங்கள் பொறுப்புக்கூறச்செய்யலாம்! 

கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் எங்களிடமுள்ள ஆவணங்களை பயன்படுத்தி கொலைகளுக்கு காரணமானவர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தி வருகின்றோம்!

அத்தோடு, சாத்தியமான சூழ்நிலைகளின்போது அவர்களுக்கு எதிராக சர்வதேச நியாயாதிக்க எல்லைக்குள் நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்!

மேலும், இலங்கையில் 1000 நாட்களைக் கடந்த நிலையிலும் மேற்கொள்ளப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்!

அதேநேரம், இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர், அவர் முக்கிய பதவிகளிற்கு யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமையை தாங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்!” என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

May 17, 2020

ஒன்றிணைந்து தொடர்ந்து போராடுவோம்.உலகத் தமிழ் இளையோர் ஒன்றியம் WTYA
by Editor - 0

எமது அன்பார்ந்த தமிழீழ    மக்களே !


                                                                                    இன்று மே 17 நினைவு நாள். தமிழர்களின் நீண்ட பெரும் ஆயுதப்போராட்டத்தின் உயிர்நாடி விதையாகிய நினைவுநாள். தமிழர்கள் ஆட்சி, அதிகாரங்களுடன் இறையாண்மை செய்யப்பட்ட நிலம் பறிக்கப்பட்டு எம் இனம் ஒன்றாக கொண்று குவிக்கப்பட்ட இறுதிநாள். தமிழீழ தனியரசின் கட்டுமானங்கள், துறைகள், நிறுவனங்கள், பல்துறைசார்ந்த அமைப்புக்கள், முப்படைகள்கொண்ட மரபுவழி இராணுவ சமநிலைகள்யாவும் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்ட நாள். ஆகவேதான் ஆயுதமௌனிப்பு பெற்றதாகவும்  இன்நாள் அமைகிறது. எனவே மே 17க்கு ஒற்றைச்சொல்லில் தமிழ் அகராதியில் பொருள்தேட முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் வெளிப்படையாய் தெரிந்ததில் அறிய முடிகிறது. அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ளுங்கள் என்ற செய்தி அத்திவாரமிடப்பட்டிருக்கின்றது. ஆகவே எமது அன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய தமிழ் பேசும் எம் சொந்தங்களே! சர்வதேசமயப்படுத்தப்பட்ட இப்போராட்டத்தை தமிழ் பேசும் மக்களும், இளையதலைமுறையும் இணைந்து தொடர்ந்தும் இப்போராட்டத்தை முன்னெடுப்பீர்கள் என்ற செய்தியை வெளிப்படுத்தும் வரலாற்றுச்சிறப்புமிக்க நாளாகவும் இன் நாள் அமைகின்றது. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு மறுநாள் மே 18ம் திகதியை சிங்களவர்களின் வெற்றி நாளாக சிங்கள அரசு பிரகடனப்படுத்தியமையும், அதன் காரணமும் உலகத்தமிழர்கள் உயிருடன் உயிர்ரற்ற சடலங்களாக மாறிப்போயிருந்தார்கள். அதாவது மே 17ம் திகதி இரவு பிணம்தின்னி கழுகுகளின் 57வது படைப்பிரிவினரிடம் எமது தேசியத்தலைவரின் வித்துடல் கிடைக்கப்பெற்றதாகவும் இதனை இலங்கை இராணுவத்தளபதிக்கு அறிவித்த 57வது கட்டளைத்தளபதி முள்ளிவாய்க்காலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். இதன் பின்னர் மே 18ம் திகதி பிரபாகரனின் உடலை உறுதிப்படுத்திவிட்டோம் இந்நாள் சிங்கள மக்களின் வெற்றிநாள் என்ற செய்தியை சிங்கள அரசு அறிவித்திருந்தமையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்விடயம் இவ்வாறிருக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழர்தரப்பின் பல கட்சிகள், குழுக்கள், அமைப்புக்கள் போன்றோர் மே 18ம் திகதியை இனப்படுகொலை நாளாக அறிவித்திருந்தமை தமிழர்களின் நீண்ட ஆயுதப்போராட்ட வரலாற்றை மாசுபடுத்துவதோடு எதிர்கால சந்ததிக்கு தவறான வரலாற்றை புகட்டுவதாகவே தென்படுகிறது. அது மட்டுமன்றி சிங்கள அரசு அறிவித்த அறிவிப்பை எதிர்மறையாக ஏற்றுக்கொள்வதாகவே அமைகிறது. ஆனால் நாடுகடந்த தமிழீழரசு சிங்கள அரசின் வெற்றிக்கு எதிரான தமிழர்களின் துக்கநாளாக அறிவித்திருந்தமை ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், இறுதிப்போரின் முடிவும் வரலாற்றுப் பதிவும் மே 17ம் நாளையே முன்நிறுத்தியிருக்கிறது. ஆகவே எமது பேரன்புமிக்க உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்களே! எமது அயுதப் போராட்டம் 37 அகவையும் 12 நாட்களுடனும் மௌனிக்கப்பட்டுவிட்டதென்பதை நேரடிச் சாட்சியங்கள் ஊடாகவும், பகுப்பாய்வுகள் மூலமாகவும் நியாயமான சந்தேகத்திற்க்கப்பால் உறுதிப்படுத்தி எம்மால் எண்பிக்கமுடிகின்றது. 

எனவே தான் மே 17ம் திகதியை ஒட்டுமொத்த தமிழின அழிப்பின் "இன அழிப்பு"நாளாக பிரகடனம் செய்யும் அதேநேரம் வரலாற்றுரீதியாக இன் நாளை பதிவு செய்யுமாறும் தமிழ்மக்கள் அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம்.

                                    எமது அன்பிற்கினிய மக்களே! உலகெங்கும் சிதறுண்டிருக்கும் எம் இளைய தலைமுறையினரே! நாம் பல தசாப்த காலங்களாக தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பல வழிகளில் போராடி வருகிறோம். குறிப்பாக எமது ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சனநாயகரீதியாக எமது தமிழ்த்தலைவர்கள் அரசியல்ரீதியான போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அதற்குமாறாக சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், வன்முறைகளையும், இனக்கலவரங்களையும் கட்டவிழ்த்துவிட்டார்களேதவிர எமது உரிமைகள் எவையும் வழங்கப்படவில்லை. தென்னாசியவின் கிழட்டுச்சிங்கள நரி என்று வர்ணிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரமுறைமையும் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச்சட்டமும், கொடுங்கோலாட்சியும், இலங்கை தனிச்சிங்கள நாடு என்பதை பறைசாற்றுகின்றது. தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. அப்போதைய தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை செல்வநாயகம் அவர்கள் இறுதியாக இலங்கை சட்டக்கல்லூரியில் உரையாற்றும் போது ஒன்றை தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது "நாம் அரசியல் ரீதியில் இராணுவ ஒடுக்குமுறைக்குலிருந்து தமிழர்களின் உரிமைக்காக போராடுகிறோம். சிங்கள அரசு எமது உரிமைகளைத்தர மறுக்கின்றது. ஆனால் என்றோ ஒரு நாள் தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி முனையில் சந்திப்பார்கள் அப்போது சிங்கள அரசு பதில் சொல்லவேண்டிய நிலை உருவாகும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்". இவ்வாறான சூழ்நிலையில்தான் தமிழர் தரப்பு 1972 மே மாதம் 5ம் திகதி ஆயுதப்போராட்டம் ஆரம்பிப்பதற்குரிய சூழல் உருவானதென்பதையும் இளைய தலைமுறைக்கு தெளிவு படுத்த விரும்புகிறோம். எமது தேசியத் தலைவரின் சிந்தனைகளில் ஒன்றான "எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியங்கள் என்றும் மாறப்போவதில்லை" என்ற சிந்தனைக்கேற்ப  இளைய  சமுதாயம்  போராடமுன்வரவேண்டுமென விரும்புகிறோம். மே 17ம் திகதி ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்குப்பின்னர் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழர் தரப்பு மேற்கொண்ட ஆக்கபூர்வமான அரசியல் முன்னேற்பாடுகள் என்ன? அவை எவ்வகையான பயன்பாட்டை தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்கின்றன? மாறாக சிங்கள அரசிற்கு எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன? ஆனால், தமிழ் மக்களின் கட்சிகள் , குழுக்கள் , அமைப்புக்களின் கட்டமைப்புகலுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்தி கருத்தியல் ரீதியான முரண்பாடுகளால், நேர்மையற்ற செயல்பாடுகளால் ஒற்றுமை குலைக்கப்பட்டு கொள்கையில் பிளவுபட்டு தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதென்பதுமட்டும் மறுப்பதற்கில்லை. அதேநேரம் ஒரு சில அமைப்புகள், சில தனிநபர்கள் மேற்கொண்டுவரும் ஆக்கபூர்வமான முயற்சிகள் மறுப்பதற்கில்லை. ஆகவே எமது போராட்டத்தை முன்நிறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து போராட்ட தரப்பினருக்கும் எமது நன்றியையும் பாராட்டுதல்களையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறோம். குறிப்பாக தாய்த்தமிழகத்தில் எமது போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நாம்தமிழர் கட்சிக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு உறுதி தளராது தொடர்ந்தும் போராடுமாறும் அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம். எமது அன்பிற்கும் பெரும் நம்பிக்கைக்குமுரிய எதிர்கால இளைய தலைமுறையினரே! அன்று பாரதி சொன்ன அக்கினிக் குஞ்சுகளை பிரபாகரன் சேனை வளர்த்து விட்டிருக்கிறது. அந்த அக்கினிக்குஞ்சுகளில் ஒன்றாக எமது விடுதலைப்போரட்டத்தை உங்கள் தோழ்களில் சுமக்க ஒவ்வொருவரும் எமது தேசியத் தலைவரின் சிந்தனையாளர்களாக மாறுங்கள். மாற்றம் ஒன்றே விடுதலையின் முதற்படி. ஒரு வரலாற்று உண்மையை புரிந்து கொள்ளுங்கள். ஒரு இனம் அழிக்கப்பட வேண்டுமானால். முதலில் மொழி அழிக்கப்பட வேண்டும். அந்தவகையில் தான் தமிழீழ நிலப்பரப்பு எங்கும் சிங்களமொழி  திட்டமிட்டுத்திணிக்கப்படுகிறது. இனக்கலப்பு திருமணங்கள் அரங்கேற்றப்படுகின்றன. தமிழர்களின் பிறப்பு வீதம் திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. இன் நிலையில் எமது தலைவர் கூறியது இன்னும் சில ஆண்டுகளில் நடந்துவிடுமோ என்ற ஏக்கம் மௌனமாகவே உறைந்து போகின்றது. ஆகவே தமிழர்கள் போராடினாலும் போராடாமல் விட்டாலும் எமது இனம் அழிக்கப்பட்டுக்கொண்டேதானிருக்கும். இந்த நியதியை மாற்றிஅமைத்து நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை ஆழமாக புரிந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம். தமிழர் தரப்பில் எமது உரிமைக்காக போராடும் தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள் அனைவரையும் ஒரே அரசியல் கொள்கையோடு ஒரே தளத்தில் ஒற்றுமையோடு கொள்கை ரீதியாக ஒன்றினைந்து பொது எதிரிக்கு எதிராக போராட முன் வருமாறு மிகவும் அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம்.
                                                                                                       எம் பாசத்துக்குரிய புலம்பெயர் வாழ் எம் தேசத்து உறவுகளே! உலகில் எந்த ஒரு இனமும் போராடாமல், இரத்தம் சிந்தாமல், வியர்வை சிந்தாமல் போராடி வென்றதாக வரலாறில்லை. அதேநேரம் இறுதியான விடுதலை என்கின்ற தீர்வு துப்பாக்கிமுனையில் பெற்றதாகவும் சரித்திரமில்லை. எனவேதான் எமது தலைவர் எமது விடுதலைப்போரட்டத்தை சர்வதேசமயப்படுத்தியமை மட்டுமல்லாது தமிழர்கள் ஒரு பாரம்பரிய மொழி, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான இனம் என்பதையும், தமிழீழ கட்டமைப்புக்கள் ஊடாகவும், சர்வதேச பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், தமிழீழ தனியரசை உருவாக்கி உலகறிய செய்திருந்தார். எனவேதான் இந்த இடத்தில் இருந்துதான் தமிழர்களின் அடுத்தகட்ட அரசியல்முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அந்தவகையில் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக எமது திட்டத்துக்கு எவ்வகையான பாகுபாடின்றி அனைத்து தமிழர் தரப்பு ஒருங்கிணைப்பாளர்களும் ஒன்றுசேர்ந்து உழைக்குமாறு உளமாற வேண்டி நிக்கிறோம். எனவே தமிழர்களின் நீண்ட போராட்ட வரலாற்றுப் பாதையில் தமிழீழ தனியரசு அமைவதையே எமது கொள்கையும் இலட்சியமாகவும் கொண்டிருந்தோம் என்பது மறுப்பதற்கில்லை. எனவே உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர் தரப்பும் ஒன்றிணைந்து "தமிழீழத்திற்கான சர்வதேச வாக்கெடுப்பை" நடத்துவதற்கான தேவையினையும், அதன் சூழலையும், தெளிவுபடுத்தி தாம்வாழும்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து அந்தந்த நாடுகளுக்கு அழுத்தங்கள் கொடுப்பது மூலமாகவும், சட்டரீதியாகவும், சனநாயகரீதியான அரசியல் முன்னெடுப்புக்கள் மூலம் தொடர்ந்து மன உறுதி தளராது போராட வேண்டுமென வேண்டிநிற்கிறோம். தமிழர்களின் ஒன்றுபட்ட சக்திகளின் அழுத்தம் ஐ.நா சபை தமிழீழத்திற்கான சர்வதேச வாக்கெடுப்பு நடத்துவதற்கு மூன்றாம் தரப்பிற்கு உத்தரவிடப்படும்வரை தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம். அண்மையில் சர்வதேச வாக்கெடுப்பு மூலம் பிரிந்து சென்று தனியரசு அமைத்துக் கொண்ட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டைப் போல் தமிழீழம் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் வரை அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராடுவோம்.

நன்றி
த.கதிரவன்
இணைப்பாளர்
உலக தமிழ் இளையோர் ஒன்றியம்
தமிழீழம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
Read More

May 16, 2020

பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
by Editor - 0

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அண்ணா அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம்.தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது.இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண்.தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.பாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர்தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.இக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள்இ கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.ஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.
சொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான்.வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.
இவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும் அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.

இவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல். சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.


ஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.இம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.இக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான்.அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தார்.
நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால் வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான்.இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவர்.இந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.இவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவரால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை.எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறார்.
-போராளி விதுரன்-
Read More

May 15, 2020

கடல் எம் சனங்களுக்கு சவக்குழியானது! – கவிஞர் தீபச்செல்வன்
by Editor - 0

இலங்கை அரச படைகள், கடலில் நடத்திய படுகொலைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நிலத்தில் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவ்வாறே ஈழக் கடலிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. நிலத்தில் எவ்வாறு இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டனவோ அவ்வாறே கடலிலும் இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டன. ஈழ இறுதிப் போரின் போது அழிக்கப்பட்ட தமிழ் மக்கள் நந்திக்கடலில் கொன்று எரியப்பட்டனர். அதற்கு முன்பாகவே கடலில் பல இனக் கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் குமுதினிப்படுகொலை.

ஈழத்தின் சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. ஈழத்தின் மிகப் பெரிய தீவு என்பதனால் நெடுந்தீவு என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடுகின்ற போது, அடிப்படைவசதிகளற்ற நிலையில் இருக்கிறது நெடுந்தீவு. எனினும் பல அறிஞர்களையும் கலைஞர்களையும் ஈழத்திற்கு அளித்த மிக முக்கியமான தீவ இதுவாகும். இத் தீவுக்கான போக்குவரத்து புங்குடுதீவில் இருந்து படகு வழியாகவே அன்று தொட்டு இன்றுவரையில் மேற்கொள்ளப்படுகின்றது.

மே 15ஆம் நாள். 1985ஆம் ஆண்டு. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகு பயணிகளை சுமந்து சென்றது. அன்றைக்கு காலையில் 7.15மணிக்கு 64 பயணிகளை ஏற்றிய குமுதினிப்படகு, நயினாதீவுக்குச்சென்றது. வழமைபோலான பயணம். கடலை ரசித்தபடி சென்ற மக்களுக்கு இலங்கை கட்படையின் அச்சம் உள்ளுக்குள் இருந்தது. ஆனாலும் எதிர்பாராதபடி இலங்கை இராணுவத்தின் இரண்டு பிளாஸ்டிக் படகுகள் சூழ்ந்தன. இடைமறித்த படகுகளை கண்டு மக்கள் திகைத்துப் போயினர்.

இலங்கை அரச படைகளை சேர்ந்த ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். படகின் பின்னால் இருந்த மக்களை படகின் இயந்திர அறைக்கு வருமாறு ஆயுதங்களால் படைகள் மிரட்டினர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இயந்திய அறை இருக்கை மட்டத்திலிருந்து 4 அடி ஆழமாக இருந்தது. அதற்குள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். பயணிகளோ அச்சத்துடன் உள்ளே சென்றனர்.

இலங்கை அரச படைகள் மிக மோசமான இன அழிப்பாளர்கள் அல்லது கொலையாளிகள் என்பதற்கு அன்றைய காலத்தில் நடந்த இந்தப் படுகொலையே பெரும் சாட்சி. குமுதினிப் படகின் இரு பக்க வாசல்களிலும் சீருடை தரித்த இலங்கை கடற்படையினர் காவலுக்கு நிற்கவே சீருடையற்ற படையினர் இந்தப் படுகொலையைப் புரிந்தனர். ஒவ்வொருவராக இயந்திர அறைக்குள் அழைத்த கடற்படையினர், மக்களை கத்தியால் குத்தியும் கோடாலியால் வெட்டியும் இரும்புக் கம்பிளால் தாக்கியும் படுகொலை செய்தனர். கொல்ப்பட்டவர்களை ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் சித்திரவதைகளின் அவல ஒலி கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெரையும் ஊரையும் கத்திச் சொல்லுமாறு கடற்படையினர் கூறினர். ஒரு பக்கம் கடல் அரைச்சல். மற்றொரு பக்கம் இராணுவத்தின் மிரட்டல். அவலக் குரலை எழுப்பி வாதையை வெளிப்படுத்தாமலே அவர்களில் பலர் இறந்து போயினர். கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டு கடலில் அவர்கள் வீசப்பட்டனர்.

கடற்படையினரின் அராஜகத்தை கண்ட ஒருவர் கடலில் குதித்தார். அவருடன் சேர்ந்து மேலும் பலர் கடலில் குதித்தனர். அவர்கள்மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் படைகள். இந்தப் படுகொலையின் ஒரு நேரடிச் சாட்சி இப்படி சொல்கிறார். “எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.” என திகிலான அவ் நிமிடங்களை விபரித்தார்.

இந்தக் கொடூரப் படுகொலையின் போது, பிறந்து ஏழு மாதம் மாத்திரமேயான விஸ்வலிங்கம் சுபாசினி என்ற பச்சிளம் பாலகி படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் எழுபது வயதான தெய்வானை என்ற முதிய தாய் வரையிலாக 36பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குமுதினிப்படுகொலையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பில் சரியாக கூற இயலவில்லை என்று சில சர்வதேச அமைப்புக்கள் கூறியிருந்தன. 23பேர் இதன்போது படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியிருந்தது.

இப்படுகொலையை இலங்கை கடற்படையின் நயினாதீவு கடைப்படையே மேற்கொண்டது என குற்றம் சுமத்தப்பட்ட வேலையில் இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி இதனை மறுத்திருந்ததுடன், இதனை செய்தது யார் என்று தமக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டார். ஆனால் இலங்கை அரச கடற்படையினரே இதனை செய்தனர் என்பது தெட்டத்ததெளிவானது. அதற்கு பாதிக்கப்பட்ட மக்களே நேரடிச் சாட்சியுகளுமாவார். கடந்த 2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 72 பேர் பயணித்த படகில் 36பேர் கொல்லப்பட்டதாகவும் உயிர் தப்பியவர்களின் வாக்குமூலங்களும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் நவம்பர் 22, 2006ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் வெளியிட வாக்குமூலங்களின் அடிப்படையில் இலங்கை அரச படைகள் புரிந்த மிக கொடூரமான படுகொலையாக குமுதினிப்படுகொலை இனம்காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் பல விடங்களை வெளிச்சத்திற்கு உட்படுத்தப்படுகின்றது. எனினும் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்ற இன்றைய நிலையில், இப்படுகொலை குறித்து துளியேனும் நீதி நிலைநாட்டப்படவில்லை.

மே 15 ஈழத் தமிழ் மக்களுக்கு கடலே சவக்குழியான நாள். அதன் பிறகு கடலில் தமிழ் மக்களை கொல்லுகின்ற படலங்கை இலங்கை கடற்படைகள் எந்த தயக்கமும் தடையுமின்றி மேற்கொண்டன. கிளாலிக் கடலே ஈழ மக்களின் சடலங்களால் நிறைந்ததது. இவைகள் எவற்றுக்கும் தண்டனையும் இல்லை. நீதியும் இல்லை. இறுதியில் மிகக் கோரமாக லட்சம் மக்கள் நந்திக்கடலிலும் முள்ளிவாய்க்காலிலும் கொன்று வீசப்பட்டனர். அதற்கும் நீதியில்லை. நாம் வாழ்ந்த நிலமும் நாம் நீந்தும் கடலும் சவக்குழியானது எமக்கு. குமுதினிப்படுகொலை போன்ற இரக்கமற்ற கொடுஞ்செயல்கள் முதல், நந்திக்கடல் கொலைகள் வரை நீதியான சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்பதே எம் மக்களின் நிலை.

தமிழ்க்குரலுக்காக கவிஞர் தீபச்செல்வன் 

Read More

நடுக்கடலில் கலந்துபோன அழுகுரல்கள் – 35 வருடங்களாக கேட்கும் விசும்பல்கள்
by Editor - 0

நடுக்கடலில் கலந்துபோன அழுகுரல்கள் – 35 வருடங்களாக கேட்கும் விசும்பல்கள்


 

காலம் காலமாக மனிதர்களால் கொட்டப்படும் அழுக்குகளை தன்னுள்ளே இழுத்து அழகையும், ஆண்டாண்டுகாலமாக மனிதர்களுக்கான உணவையும் வழங்கிக்கொண்டிருக்கும் கடலன்னை, தன்னுள் சேர்த்து வைத்திருக்கும் கண்ணீர்த்துளிகள் கனமானவை.


ஈழப் போராட்டத்தின் கனத்த வரலாறுகளை, காடுகளை போலவே, வயல்களை போலவே, தேசமெல்லாம் கொண்டலையும் காற்றைப் போலவே கடல்களும் சேர்த்து வைத்திருக்கின்றன.


 

வெற்றிகளின் பெருங்கீற்றுகள், போராட்டத்தின், துணிவின், இன விடுதலை மீதான வேட்கையின் மாறாத மனநிலைகளை தமிழர் தாயகத்தின் பெருங்கடல் மெளனமாக சேர்த்து வைத்திருக்கிறது.


அவ்வாறு, கடந்த முப்பத்தைந்து வருடங்களாக ஈழத்தின் பெரும் துயர்களில் ஒன்றான 64 பேரின் அழுகுரல்கள் சமுத்திர வெளிகளின் மேலே அலை மோதுகின்றன.


 

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து தமது பயண சேவகியாக இருந்த குமுதினிப் படகில் பயணத்தை ஆரம்பித்த 64 பேருக்கும், தமது இறுதி பயணம் அதுவென தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


 

ஏறக்குறைய அரை மணிநேரம் பயணித்த குமுதினி படகு இரண்டு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த இலங்கை கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது.


குமுதினி படகினை உடனடியாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கடற்படையினர், படகின் ஒரு பகுதிக்கு பயணிகளை அழைத்து பின்ன ஒவ்வொருவராக படகின் கீழ்ப்பகுதிக்கு அழைத்து கொடூரமான முறையில் அவர்களை கொலை செய்ய ஆரம்பித்தனர்.


இவ்விடயம் அறிந்து ஓரிருவர் கடலில் குதித்த போதும் அவர்களும் துப்பாக்கிகளுக்கு இரையாக்கப்பட்டிருந்தனர்.


அனைத்தும் முடிந்தபின்னர் ஓசைகள் ஏதுமற்று மிதந்துகொண்டிருந்த குமுதினிப் படகில் ஓலமும், எந்த பாவமும் அறியாத பயணிகளின் இறுதி ஓசைகளும் மட்டும் சன்னமாய் ஒலித்துக்கொண்டிருந்தன. கூடவே குருதியும் வழிந்தோடியது.


இக்குரூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட பல நெருக்கடிகளுக்கு பின்னரே காயமடைந்தவர்களின் உயிர்கள் காக்கப்பட்டன.


இந்த படுகொலை தொடர்பாக, இலங்கை பொலிஸாரிடம் முறையிடப்பட்டது. மனித உரிமை ஆணையகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நீதி தேடிய பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.


எது எப்படி இருந்தாலும் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு நீதி மறுக்கப்பட்ட பல்வேறு அத்துமீறல்களில் ஒன்றாக குமுதினிப் படுகொலையும் ஆகிப்போனதே தவிர, நீதியும், கொல்லப்பட்டவர்களின் கடைசி விசும்பல்களுக்கான பதிலும் இதுவரை கிடைக்கவே இல்லை.

Read More

May 06, 2020

பிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்!
by admin - 0

உலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம்.

வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயிர் இருப்பை துறந்து சக மனித உயிர்ப்பிற்காக களப்பணி ஆற்றிவரும் NHS பிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கு பெருமளவிலா உணவுப் பொருட்களை வழங்கி தமது அன்பை வெளிப்படுத்தியிருந்தார்கள் பிரித்தானியத் தமிழர்கள்.

பிரித்தானியா உட்பட பல நாடுகளில் தமிழ் இனம் சார்ந்த தமிழ் மருத்துவர்கள் பணியாற்றி வருவதை NHS கட்டமைப்பு மேன்மையாக பார்க்கின்ற இந்த வேளையில், NHS பணியாளர்களுக்கான உணவு வழங்கும் மனித நேய உதவிப் பணியை தமிழ் தேசிய மக்கள் சார்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு இன்று வழங்கி இருந்தது.

இது பற்றி எமக்கு கருத்தத் தெரிவித்த பிரித்தானிய தமிழ் ஒருங்கிளைப்புக் குழுவின் ஒரு உறுப்பினர்,

'1976ம் ஆண்டு மே மாதம் இதே தினத்தில்தான் தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு புதிய மாற்றம் உருவான நிகழ்வு நடைபெற்றிருந்தது. அதேபோன்று இந்த மே மாதம்தான் தமிழர்கள் ஆயிரக் கணக்கில், இலட்சக்கணக்கில் அவலத்தை சந்தித்த மாதம். இந்த குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட தினத்தில் எங்களுடைய மக்கள் சார்பாக இந்த மனிதநேய உதவியைச் செய்வதில் பெருமை கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

Read More

April 25, 2020

வடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் ?
by Editor - 0

வடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு  கொலை என சந்தேகம் ?

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன், நேற்று மாலை முதல் காணாமற்போன நிலையில் வடமராட்சி தொண்டமனாறு கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது.
அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்பே உறுதி செய்ய முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தொண்டமனாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்றிரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர்.

அதுதொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கினர்.நேற்றிரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.

சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் அவரைத் தேடினர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

April 24, 2020

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை காணவில்லை
by Editor - 0

வலி கிழக்கு பிரதேச சபை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்  உறுப்பினர் இ.செந்தூரன் என்பவரது மோட்டார் சைக்கிள் தொலைபேசி  அடையாள அட்டை என்பன யாருமற்ற நிலையில் தொண்டைமானாறு மயிலியதனைப்பகுதியில் கடற்கரையோரமாக மீட்கப்பட்டது.

 இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  பொதுச் செயலாளர்  செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சட்டத்தரணி சுகாஸ் மற்றும் சிலர் நேரில் சென்று உள்ளனார் .

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் இன்று (24) இரவு சற்றுமுன் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
தொண்டமனாறு, மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று (24) இரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர். அத்துடன் அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.
இரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.
அதன் பின்னர் அவரது மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையறிந்த உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் தேடி வருகின்றனர். அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவில்லை என்று உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

Read More

April 22, 2020

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...
by Editor - 0

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...

20 வது ஆண்டு வெற்றி நாள்

சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, ‘புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்’ என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர்.

1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டையே, அதன்பின் ஆள்மாறி ஆள்மாறி இறுதியாகச் சிங்கள இராணுவத்திடம் வந்துசேர்ந்த ஆனையிறவுப் படைத்தளமாகும். ‘ஆனையிறவு’ என்பதற்கான சரியான பெயர்க்காரணம் எனக்குத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படும் யானைகள் இரவில் தங்கவைக்கப்படும் இடமாக அது இருந்ததே அப்பெயருக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.

ஓயாத அலைகள் – 3 தாக்குதல் காணொளிகள்
ஆனையிறவுப் படைத்தளம் தமிழரின் வாழ்வில் நீங்காத வடு. யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்ல இருந்த பாதைகள் இரண்டு. பூநகரி வழியான பாதையொன்று, ஆனையிறவு வழியான பாதை மற்றொன்று. இவற்றில் பூநகரிப் பாதை, மன்னார் மாவட்டத்துக்கான போக்குவரத்துக்காகப் பயன்பட்டது. ஏனையவற்றுக்கு ஆனையிறவுதான் ஒரேபாதை. அதிலிருந்த இராணுவ முகாமில் சோதனைகள் நடக்கும். அங்கு நிற்பவர்களின் மனநிலையைப் பொறுத்துக் காரியங்கள் நடக்கும். அந்தக் கொழுத்தும் வெயிலில் செருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு நடக்கவிடுவார்கள். பலர் பிடிபட்டுக் காணாமலே போய்விட்டார்கள்.

அதுவொரு சித்திரவதைக் கூடமாகவும் இருந்ததாக மூத்தோர் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். அப்பாதையால் போய் வந்த தமிழர் பலருக்கு நடுக்கத்தைத் தரும் ஓரிடமாக அது இருந்தது.
ஈழப்போராட்டம் முனைப்புற்ற பின் இத்தளம் தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டியது. சில முன்னேற்ற நடவடிக்கைளின் மூலம் அத்தளம் விரிவடைந்து பருத்தது. இத்தளம் மீது புலிகள் பலமுறை தாக்கதல் தொடுத்துள்ளார்கள். ஆனால் எல்லாம் கைகூடிவந்தது 2000 இல்தான்.

1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், யாழ் குடாநாட்டுக்கான வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. இருந்த பாதைகளான ஆனையிறவும் பூநகரியும் மூடப்பட்டன. கொம்படி – ஊரியான் பாதை எனச் சொல்லப்பட்ட ஒரு பாதைவழியே, ஏறத்தாழ 5 மைல்கள் நீருக்குள்ளால் செல்லும் பாதைவழியே பயணம் செய்தனர் மக்கள்.
உப்புவெட்டையையே பெரும்பகுதியாகக் கொண்ட இத்தளம்மீது 1991 நடுப்பகுதியில் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்ற பெயரிட்டு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்தனர் புலிகள். பெயரிட்டு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது இத்தாக்குதல். சில முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தபோதும் ஆனையிறவு முற்றாக விழவில்லை. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைக் காக்கும் முகமாக கட்டைக்காடு, வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் பாரிய தரையிறக்கத்தைச் செய்தது அரசபடை. அதன்மூலம் ஆனையிறவைத் தக்க வைத்துக்கொண்டது இராணுவம். அச்சமரில் புலிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர். ஏறத்தாழ 600 வரையானவர்கள் புலிகள் தரப்பில் சாவடைந்திருந்தனர்.
அத்தாக்குதலின்பின் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உட்பட பெரும்பகுதியைக்கொண்டு வீங்கயிருந்தது இப்படைத்தளம். மேலும் இயக்கச்சிவரை முன்னேறி தன்னை விரித்துக்கொண்டது இராணுவம். இதிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி “யாழ்தேவி” என்ற பெயரில் முன்னேறிய நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள். இப்போது கிழாலிக் கடல்வழிப்பாதை மட்டுமே யாழ்ப்பாண மக்களுக்கு இருந்தது. கிழாலிக்கடலிலும் பல படுகெலைகளைச் செய்தது சிங்களக் கடற்படை.
யாழ்குடாநாடு முற்றாக இராணுவ வசம் வந்தபின் போராட்டம் வன்னியை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இராணுவம் பரந்தன், கிளிநொச்சி என இடங்களைப் பிடித்து, ஆனையிறவை மையமாகக் கொண்ட பெரியதொரு இராணுவ வலையத்தை ஏற்படுத்திக்கொண்டது. இந்நிலையில் 09.01.1997 அன்று ஆனையிறவு மீது பெரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. 11 ஆட்லறிகள் அழிக்கப்பட்ட போதும் ஆனையிறவு முற்றாகக் கைப்பற்றப்படாத நிலையில் தாக்குதலணிகள் திரும்பின. பின் 27.09.1998 அன்று கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர். புலிகள்.

இந்நிலையில் ஆனையிறவை முற்றாகக் கைப்பற்றும் காலமும் வந்தது.

ஆனையிறவின் மீதான தாக்குதல் நேரடியாக நடத்தப்பட்டதன்று. அது பலபடிமுறையான நகர்வுகளின் தொகுப்பு. 11.12.99 அன்று ஆனையிறவைப் பிடிக்கத் தொடங்கப்பட்டதிலிருந்து 20.04.2000 இல் இறுதித்தாக்குதல் நடத்தப்படும்வரை, நான்கு மாதங்களுக்கும் மேலாக ஆனையிறவு மீது புலிகள் கை வைக்கவேயில்லை.

ஓயாத அலைகள் -3 இன் முதல் இரு கட்டங்களும், வன்னியின் தெற்கு, மேற்குப் பகுதிகளை மீட்டெடுத்தபின், ஆனையிறவு மீதான கவனம் குவிந்தது. அடுத்தது ஆனையிறவுதான் என்று எல்லோருமே நம்பிய நிலையில், 11.12.1999 அன்று கட்டைக்காட்டு – வெற்றிலைக்கேணி தளங்கள் மீது ஓயாத அலைகள் -3 இன் மூன்றாம் கட்டத் தாக்குதல் தொடங்கப்பட்டது. இப்பகுதி ஆனையிறவிலிருந்து கிழக்குப்பக்கமாக உள்ள கடற்கரைப்பகுதி. 91 இல் ஆனையிறவு மேல் தாக்குதல் நடத்தப்பட்டபோது இராணுவத்தினர் தரையிறக்கம் செய்யப்பட்ட பகுதிதான் இது. அத்தளங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்தும் கடற்கரை வழியாக சில இடங்களைக் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். அப்போதுகூட ஆனையிறவு வீழ்ந்துவிடுமென்று இராணுவம் நம்பவில்லை.

பின் கண்டிவீதியில் ஆனையிறவுக்குத் தெற்குப்புறமாக இருந்த பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது முக்கியமானதொரு தாக்குதல். அதுவரை பெரும்பாலும் இரவுநேரத்தாக்குதல்களையே நடத்திவந்தனர் புலிகள். முதன்முதலாக பகலில் வலிந்த தாக்குதலொன்றைச் செய்தனர் புலிகள். அதுவும் எதிரிக்குத் தெரிவித்துவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஒருநாள் மதியம் இரண்டு மணிக்கு பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலுக்கு முன் புலிகளின் தளபதி கேணல் தீபன், இராணுவத்தின் பரந்தன் கட்டளைத் தளபதியோடு வானொலித் தொலைத்தொடர்பு வழி கதைத்தபோது, ‘முடிந்தால் தாக்குதல் நடத்தி பரந்தனைப் பிடியுங்கள் பார்ப்போம். எங்களை ஒட்டுசுட்டான் இராணுவம் என்று நினைக்க வேண்டாம்’ என்று தீபனுக்குச் சொன்னாராம். ஆனால் மதியம் தொடங்கப்பட்ட தாக்குதலில் பரந்தன் தளம் புலிகளிடம் வீழ்ந்தது. புலிகளின் கனரக ஆயுத வளத்தை எதிரிக்கு உணர்த்திய தாக்குதலென்று அதைச் சொல்லலாம்.

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் உள்ளிட்ட முக்கிய முன்னணித்தளங்கள் வீழ்ந்தபின்பும் கூட, ஆனையிறவின் பலத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. பரந்தன் கைப்பற்றப்பட்டதால் ஆனையிறவுக்கான குடிநீர் வழங்கல் வழிகளிலொன்று அடைபட்டது. சில நாட்கள் எந்த முன்னேற்றமுமின்றி களமுனை இருந்தது.

பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘மாமுனைத் தரையிறக்கம்’ புலிகளால் நடத்தப்பட்டது. தரையிறக்கப்பட்ட 1200 புலிவீரர்கள், ஆனையிறவிலிருந்து யாழ்ப்பாணப் பக்கமாக 15 கிலோமீட்டரில் இருக்கும் இத்தாவில் என்ற இடத்தில் கண்டிவீதியை மறித்து நிலையெடுத்தார்கள். அதேயிரவு பளை ஆடலறித் தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் அணி அங்கிருந்த 11 ஆட்லறிகளைத் தகர்ந்தது. அப்போதுதான் ஆனையிறவு மீதான ஆபத்து கொஞசம் புலப்பட்டது. ஆனாலும் தரையிறங்கிய புலியணிகள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்களென்று சொல்ல முடியாத நிலை. மிகச்சிறிய இடம். சுற்றிவர ஏறத்தாள நாற்பதாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஆனையிறவு, யாழ்ப்பாணப் படைநிலைகள்.

முழுப்பேரையும் துவம்சம் செய்வதென்று கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கும் இராணுவத்தினர். மிகப்பெருமெடுப்பில் அந்நிலைகள் மீது எதிரி தாக்குதல் நடத்தினான். ஆனாலும் அவனால் அவ்விடத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

மாமுனையில் தரையிறங்கிய அணிகள் இத்தாவில் நோக்கிச் செல்கின்றன.

இதற்கிடையில் கடல் வழி மட்டுமே இத்தாவிலுடன் தொடர்பிருந்த நிலையில், தாளையடி, செம்பியன்பற்று போன்ற முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றியதன் மூலம் நேரடித் தொடர்பை இத்தாவில் அணியினருடன் ஏற்படுத்திக்கொண்டனர் புலிகள். முப்பத்து நான்கு நாட்கள் வரை ஆனையிறவுக்கான முதன்மை வினியோகப் பாதையை மறித்து வைத்திருந்தனர், கேணல் பால்றாஜ் தலைமையிலான அவ்வணியினர்.

இதுவரை ஆனையிறவு மீது நேரடியான எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இவை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஆனையிறவு மீதான இறுதித்தாக்குலைத் தொடுத்தனர் புலிகள். இயக்கச்சிப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் ஆனையிறவை மிக நெருங்கியதுடன், ஆனையிறவுப் படையினருக்கான குடிநீர் விநியோகத்தையும் முற்றாகக் கட்டுப்படுத்தினர் புலிகள். இயக்கச்சி முகாம் வீழ்ந்த உடனேயே ஆனையிறவைக் கைவிட்டு ஓடத்தொடங்கியது சிங்களப்படை. அவர்களுக்கிருந்த ஒரே வழி, கிழாலிக்கடற்கரை வழியாகத் தப்புவதே. தப்பியோடிய இராணுவத்தினரும் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அப்பாதையில் வைத்து 152 mm ஆட்லறிப்பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. ஆனையிறவுப்படைத்தளம் முழுமையாகப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 22.04.2000 அன்று கேணல். பானு அவர்கள் ஆனையிறவில் புலிக்கொடியேற்றினார்.

மக்களுக்கு ஆனையிறவு வீழ்ந்தது கனவு போலவே இருந்தது.

ஆனையிறவு முகாம் மீதான இறுதித்தாக்குதல் வெகு சுலபமாக முடிவடைந்தது. புலிகள் தரப்பில் 34 போராளிகளே சாவடைந்தனர். ஆனால் அத்தளத்தைக் கைப்பற்ற, முற்றுகை நடத்திச் செய்த சண்டைதான் நீண்டதும், கடினமானதும்.

ஆனையிறவுக்காக ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக புலிகளின் குறிப்பு கூறுகிறது. ஆனையிறவின் வீழ்ச்சியை சிங்களத் தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இது வழமையான ஒன்றே.

வெளித்தோற்றத்துக்கு, ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது. அவ்வளவுக்கு அப்பெயர் மிகப்பிரசித்தம்.
தலைவர் பிரபாகரனின் பன்னாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டில், வெற்றிகளில் எதை முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பெரும்பாலானோர் எதிர்பார்த்த பதில் ‘ஆனையிறவு’தான். ஆனால் வந்த பதில், ‘ஜெயசிக்குறு எதிர்ச்சமர்’.

ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலிலும் அதன் துணைத்தாக்குதல்களிலும் மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக இத்தாவில் பகுதியில் நடந்த சண்டையில் எல்லைப் படையினராக மக்கள் கலந்துகொண்டு முழுமையான பங்களிப்பைச் செய்தனர். நிறையப்பேர் களப்பலியாகினர்.

இந்த நேரத்தில் ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி சமரில் வீரகாவியமான மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அனைவருக்கும் எமது வீரவணக்கம்.
Read More

கர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்! china india
by Editor - 0

கர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்!
அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரிய தூண்களாக நின்ற சீனா, இந்தியா அமெரிக்கா இன்னும் சில ஐரோப்பிய நாடுகள்... இன்று கர்மவினைப்பயனை அனுபவித்து வருகின்றன..!

இலங்கை அரசிற்கு, இன்று கொழும்பில் தாமரைக் கோபுரத்திற்கு அத்திவாரம் எப்படிப் பலமாக சீனாவினால் போடப்பட்டதோ அதைவிட மிகப் பலமாக இலங்கை இராணுவத்திற்கும், அதன் அரசிற்கும் இந்தச் சீனா பக்கபலமாக நின்று எமது மக்களை மூச்சுத்திணற வைத்துக் கொல்வதற்கான பல மில்லியன் பெறுமதியான நச்சு வாயுக்களையும், இவ் வாயுக்கள் அடைக்கப்பட்ட ரொக்கெட் குண்டுகளையும் இலங்கை இராணுவத்திற்குக் கொடுத்து அதனை வன்னியில் உள்ள தமிழ் மக்கள் மீது பிரயோகித்ததனால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் மூச்சடக்கியும், மூச்சுத் திணறியும் உயிரை மாய்த்தார்கள்!
அதனை இன்று சீனா தன் கர்மவினைப் பயனாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இதே காலகட்டத்தில்தான் இந்தியாவும் தனது படைகளையும், தனது உயரிய தொழில்நுட்பங்களையும் இலங்கை அரசிற்கு கொடுத்ததன் மூலமும், அதன் இராணுவத்தை நேரடியாக சண்டைகளில் ஈடுபடுத்தியும் எம் மக்களை பாரபட்சமின்றி கொன்று குவித்தார்கள்! எம் தொப்புள்க்கொடி உறவான இந்தியாவே எம்மை அழிக்க முன்னின்று செயற்படும் என கனவில்கூட ஒருபோதும் எம்மக்கள் நினைத்ததே இல்லை!
காரணம், கடந்த 2000 ஆண்டில் விடுதலைப் புலிகள், ஆனையிறவு பெருந்தளத்தைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடி, பெரும்பலத்தோடு யாழ் நகரை கைப்பற்ற நகர்ந்தபோது யாழ்மாவட்டத்தில் உள்ள நாற்பதினாயிரம் (40.000) சிங்களச் சிப்பாய்களைக் காப்பாற்றுமாறு சந்திரிகா அரசாங்கமானது, அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அரசிடம் கெஞ்சியது! அப்போதைய இந்தியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவே விடுதலைப் புலிகள் ஒருதலைபட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்து சிங்களச் சிப்பாய்களுக்கு மறுபிறவி கொடுத்தார்கள்! (இது வரலாற்று உண்மையாகும்) இவ்வாறான இந்தியாவைத்தான் எம் மக்கள் முற்றுமுழுதாகவே நம்பினார்கள்.
மேற்குறிப்பிட்ட இந்தியாவைப்பற்றிய தமிழீழம் நோக்கிய வரலாற்றுப் பார்வைகள் ஒருபுறமிருக்க, நான் மறுபடியும் எனது பதிவிற்கே வருகிறேன்.

இதே இந்தியாவினால்தான்....

பசியாலும், பட்டினியாலும் அதேவேளை மருந்துகள் இன்றியும் எம்மக்கள்  அநியாயமாகக் கொன்று பழி தீர்க்கப்பட்டார்கள்! இவற்றையும்விட அமெரிக்காவுடன் இணைந்து கூகுள் வரைபட செயலி (Google Map) மூலம் எம் மக்கள் எத்திசை நோக்கி நகருகிறார்கள் என்பதையும்,  விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களையும்... எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடைவிடாது இரவு பகலாக தரவுகளை வழங்கி எம் மக்கள் பெருந்தொகையாக கொல்லப்படுவதற்கு காரணமாகியது.
ஆனால், இன்று கர்மவினை அல்லது "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்ற எம் முன்னோரின் வாசகம் நினைவிற்கு வரும் அதேவேளை, இந்தியாவின் தலைநகரில் பல்லாயிரக் கணக்கானோர் இறந்தாலும் அது அவர்களது வினைப் பயனே! இதில் நாம் கவலை கொள்வதற்கு எதுவுமே இல்லை!
ஏனெனில், எமது அயல்நாடு என்று எம் மக்கள் இறுதி யுத்தத்தின்போதும் கடைசி வரை நம்பியே இருந்தனர். 2009 இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது....

"நம்மட இந்தியா, நம்மளக் கைவிடாது!" என எம் மக்கள் பேசிக்கொண்டது அப்போது என் காதுகளில் வலம் வந்தது. இப்போது கூட இக்கட்டான இந்த உலக சூழலில், என் மனதில் பதிவாகிய அவ்வார்த்தைகள் பிரதிபலிக்கின்றது!

ஆனால், இந்தியா எமக்கு என்ன செய்தது? வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்ததா? இல்லை! மாறாக எம் தமிழின அழிப்பிற்கு நூறு வீதம் துணை போனது!
2009ல் அமெரிக்காவானது, தனது புதிய அரசியல் தளத்தை பயன்படுத்தி எமக்கு நம்பிக்கை ஊட்டுவதை போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கி 2009 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கு மிக முக்கிய தொழில்நுட்ப வளங்களை இலங்கை இராணுவத்திற்கு இடைவிடாது வழங்கிக் கொண்டே இருந்தது. 

அமெரிக்கா, தனது செயற்கைக்கோள்களை வன்னி நிலப்பரப்பின்மேல் நிலையாக நிறுத்தி வேவு பார்த்தது மட்டுமல்லாமல். ஆளில்லாத விமானங்கள் மூலம் வேவு பார்த்த தரவுகளை உடனுக்குடன் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கி பேருதவி புரிந்து வந்தது. 

கூகுள் வரைபடச் செயலியை பூராணமாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் படை நகர்வுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, மக்கள் எங்கெல்லாம் செறிந்து இடம்பெயர்கிறார்கள் என்பதை இனங்கண்டு இலங்கை இராணுத்திற்கு தரவுகள் கொடுக்க, அவர்கள் அந்த இடங்களை நோக்கி நச்சு வாயுக்கள் தாங்கி வரும் குண்டுகளையும்,  பல்குழல் எறிகணைகளையும் மற்றும் சாதாரண எறிகணைகளையும் கொண்டு பரவலாகத் தாக்கி தப்பிக்கவே முடியாமல் மூச்சுத் திணற வைத்தே கொன்று குவித்தனர். 

"இதில் என்ன இலாபம் அமெரிக்காவிற்கு இருந்ததோ தெரியவில்லை?! அதனால்தான் என்னவோ இன்று மற்றைய நாடுகளையும் விட அமெரிக்காவில் பல இலட்சம் மக்கள் மூச்சுத்திணறி இறந்தவண்ணம் உள்ளனரோ?" என்று எம்மைச் சிந்திக்க வைக்கின்றது!

எம் முன்னோர்களின் பழமொழியான "தன்வினை தன்னைச் சுடும்" என்பது இவ்விடத்தில் சாலப் பொருத்தமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன். 

ஏனெனில், எமது மக்கள் 2009இல் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒருவேளை கஞ்சிக்காக நீண்டவரிசையில் நின்றபோது இதே அமெரிக்காவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விமானங்களும் நீண்ட வரிசையில் கஞ்சிக்காக நின்ற எம் மக்களை படம் பிடித்தும், காணொளிகளாக பதிவு செய்தும், மிகத் துல்லியமாக அந்த இடத்தை சுட்டிக் காட்டி, கொடுத்த தரவுகளின் அடிப்படையில்தான் அங்கு வரிசையில் கடும்பசியோடும், ஒட்டிய வயிறோடும் காத்திருந்த மக்கள் மீது விமானம் மற்றும் எறிகணைகள் மூலம் சரமாரியான குண்டுத் தாக்குதல்களை நடாத்தி அந்த இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மண்ணுக்குள் புதைத்தனர். 

இதைவிடவும் எம்மக்கள் பசியால் பலநூறுபேர் இறந்தார்கள்! அதே நிலை இன்று அமெரிக்காவில் பத்தாயிரத்திற்கும் (10,000) மேற்பட்ட வாகனங்கள் (Cars) நிவாரணப் பொதிகளை வாங்குவதற்காக வரிசையில் நிற்பதை, உலக மக்கள் பார்த்து ஆர்ச்சரியப்பட்டாலும், அதைப் பெரிய விடயமாக எம்மக்கள் பெரிதாக கருத்தில் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்! தற்போதைய சூழலில் யாருமே எதுவுமே செய்துவிடமுடியாது! 

ஏனெனில், அவர்கள் (அமெரிக்கா) விதைத்த வினை இன்று அறுவடை செய்யப்படுகிறது!

அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது வீழ்ச்சி அடைந்து கொண்டே இருப்பதால்... இந்நிலை நாளை இன்னும் மிகமிக மோசமாக மாறலாம்.! அதையும் எம் மக்கள் கண்ணூடாகப் பார்த்து தங்கள் கவலைகளுடன் சேர்த்து  தேற்றிக்கொள்ளலாம்!

இன்னுமொன்றை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். கோவிட் 19 கிருமியால் உலகெங்கும் தாக்கத்திற்கு உள்ளானபோதும், தமிழினம் அழிக்கப்பட்ட வன்னி நிலப்பரப்பில் இன்றுவரை (22.04.2020) கோவிட்19 கிருமியால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கூட நீங்கள் காணமுடியாது! அதற்கும் ஒரு தீர்க்கதரிசனமான காரணம் உண்டு.  

1995 ஆம் ஆண்டு வன்னிக்கு இடம்பெயர்ந்த எம் மக்களை மலேரியா தொற்றிக் கொண்டது. அதற்கான மருந்தாக எமது மருத்துவர்களின் ஆலோசனைப்படி குளோறோக்குயின் மாத்திரைகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. 2001 ஆம் ஆண்டளவில் வன்னி நிலப்பரப்பில் தமிழீழ மருத்துவர்களின் இடைவிடாத தீவிர செயற்பாடுகளினால் மலேரியாவின் தாக்கம் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது!

அதன்பின்னர் தமிழீழ மருத்துவர்களை அழைத்து கலந்தலோசித்த எமது தேசியத் தலைவர் அவர்கள் மேற்குறிப்பிட்ட மாத்திரைகளை குறிப்பிட்ட சில வியாதிகளுக்கு தடுப்பாக அமையும் என்பதால் வாரத்தில் ஒருமுறை இரண்டு மாத்திரைகள் வீதம் மக்கள் மற்றும் போராளிகள் என அனைவருக்கும் வழங்கப்பட்டதோடு போர்க்கைதிகளாக விடுதலைப் புலிகளிடம் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டது.

இந்தக் குளோறோக்குயின் மாத்திரைகளின் வீரியத்தன்மை இப்போதும் எம்மக்களில் இருப்பதனாலோ அல்லது இறைவனின் இரக்கத்தினாலோ வன்னி மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல்  மிகவும் ஆரோக்கியத்துடனேயே இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

2009 இல் எம் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது இவ்வுலக நாடுகள் அனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எம் மக்களின் பிணக்குவியல்களை உழவுஇயந்திரப் பெட்டிகளில் ஏற்றிச் சென்று கிடைத்த இடங்களில் மண்ணைக் கைகளால் தோண்டிப் புதைத்தோம், தென்னை மரங்களுக்கு பசளை போடுவதற்காக வெட்டிய குழிகளில் எம்மக்களின் உடல்களைப் போட்டு அந்த உடல்களின் மேல் தென்னம்மட்டைகளை வைத்து மண்ணைப் போட்டு மூடினோம்! இதைவிட மிகக் கேவலமான நிலையில்தான் முக்கியமாக சீனா, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் தற்போது  அனுபவித்து வருகின்றன.

இறுதி யுத்தத்தின்போது நாம் உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி, மருத்துவமின்றி, மருந்துகளின்றி, மருத்துவர்களின்றி, மருத்துவமனைகளின்றி, பிணவறைகளின்றி மற்றும் பிணங்களைப் புதைக்க இடமின்றி... நாதியற்றுப்போய் நின்றோம்! இவற்றையெல்லாம் பார்த்து அனுபவித்த எம் மக்களுக்கு, இன்று இவ்வுலகில் நடப்பவை எவையும் புதியவை அல்ல!

இன்று சீனர்களும், அமெரிக்கர்களும் மேற்கூறிய யாவற்றையும் அனுபவிக்கும் அதேவேளை, பிணங்களை என்ன செய்வதென்று தெரியாது பாரிய கனரக வாகனங்களில்  ஏற்றித் தெருத்தெருவாக அலைந்து திணறி வருகின்றனர்.

புதைப்பதற்கு இடமின்றி ஒருசில நாடுகள் பெருந்தொகையான பிணங்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கடலில் வீசியுள்ளதையும் நாம் அறிவோம்!

இவையனைத்தையும்... எம்மக்கள் கண்டு குதூகலம் கொண்டாலும் தவறென சொல்வதிற்கில்லை! மாறாக எம்மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல... பல தசாப்த காலங்களாக உலக நாடுகளால் ஏமாற்றப்பட்டு இலங்கை மற்றும் இந்திய அரசுகளால் வஞ்சிக்கப்பட்டு நீண்ட போரினாலும், பல பேரிடர்களாலும் பல இழப்புகளுக்கு முகம் கொடுத்து பெரும் வலிகளைச் சுமந்தவர்கள். 

அம்மக்களே அடுத்தவர்களின் வலிகளை மிகவும் நன்றாக உள்வாங்கி உணர்ந்தவர்கள்! 

அவ்வாறு உணர்ந்த எம் மக்கள்தான், இன்று இவ்வுலக மக்கள் நலம் பெறவும், அவர்களுக்குத் தேவையான தம்மால் முடிந்த உதவிகளையும் இன்றுவரையும் செய்தவண்ணமே இருக்கின்றார்கள்.  

அவர்கள்தான் என்னின தமிழர்கள்.

தாயக விடியலை நோக்கி...

- வல்வை அலன்
Read More

லாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் vivasaayam
by admin - 0


 வேளாண்மை
லாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன் மற்றொரு பயிரையும் சேர்த்து சாகுபடி செய்தோம் என்றால் கொஞ்சம் அதிகமாக வருமானம் எடுக்க முடியும் அதாவது மானாவாரி பகுதியில் விவசாயிகள் சோளத்தை மட்டும் பயிர் செய்தீர்கள் என்றால் குறைந்த லாபம் மட்டும் பெற முடியும். ஒருவேளை மழை பொய்த்து விட்டது என்றால் சோளப்பயிர் நமக்கு நஷ்டத்தை தந்து விடும். எனவே அந்த சோளப்பயிர் நடுவே வேறு ஏதேனும்  ஊடுபயிர் போட்டு இருந்தால் அதன் மூலம் நமக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக ஊடுபயிர் மூலம் 40 லிருந்து 60% கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதுஊடுபயிரின் அவசியம் மற்றும் நமக்கு கிடைக்கும் நன்மைகள்
முதன்மை பயிருக்கு பாதுகாப்பு அரணாகவும், நோய் பூச்சித் தாக்குதலை தடுத்தும் விடுகிறது.
மண் வளம் பெருகி, நுண்கிருமிகள் மூலம் மண்ணிற்கு தேவையான அங்ககச் சத்தை அதிகரிக்க செய்துவிடுகிறது.
ஒரு இலை தாவரகளான சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயர்களில் இரு இலை தாவரமான பாசிப்பயிறு, தட்டபயிறு, நிலக்கடலை, உளுந்து போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம்.
மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் இலைகளின் மூலம் தான் 80% தங்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியை சூரிய ஒளியின் மூலம் எடுத்துக்கொள்கின்றன. சூரிய ஒளி இலைகளில் அதிக அளவு இருந்தால் உணவு உற்பத்தி கூடவோ குறையவோ வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த சூரிய ஒளியை சற்று குறைக்கும் விதத்தில் நாம் ஊடு பயிர் செய்தால் நிச்சயம் நமக்கு லாபம் கிடைக்கும்.
விவசாயிகளின் மந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்றால் "ஒரு மடங்கு நிலம், இருமடங்கு உற்பத்தி, மூன்று மடங்கு லாபம்" என்ற விதத்தில் அமைய வேண்டும்
குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி
விவசாயி குறைவில்லா வருவாய் பெற ஒரு முக்கிய பயிர்,அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும்.  தற்பொழுது மானாவாரி நிலங்கள் விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கிறார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையில் நான்கு அல்லது 6வரிசைக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிர் செய்கிறர்கள். இதனால் நிலக்கடலையில் வரக்கூடிய அனைத்து பூச்சிகளும் முதலில் ஆமணக்கு பயிரை தாக்குகிறது. அதனால் நிலக்கடலை எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.நமக்கு ஆமணக்கில் இருந்து ஒரு லாபம் அதே சமயத்தில் ஆமணக்கு பயிரில் இருந்து  மற்றொரு லாபம் கிடைக்கிறது. இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் நிலத்திற்கு தேவையான அங்ககச் சத்துக்கள் எல்லாம் நன்கு கிடைக்கிறது.

முதன்மை பயிருக்கு அருகில் பயிறு வகைகளான தட்ட பயிறு, உளுந்து காராமணி, பாசிப் பயிறு, மொச்சை, அவரை போன்றவற்றை போடுவதால் அவற்றின் மூலம் நமக்கு மகசூலும், அறுவடைக்கு பின்பு அதன் கழிவுகள் மண்ணிற்கு உரமாகிறது. எடுத்துக்காட்டாக பருத்தியில் ஊடுபயிராக என்ன என்ன பயிர் போடலாம் என்றால் கண்டிப்பாக பயறு வகையான உளுந்து /பாசிப்பயறு தட்டைப்பயறு, வெண்டை கொத்தவரங்காய், அவரை போன்ற 80 முதல் 85 நாட்கள் வயது உடைய பயிரை பயிரிடலாம்.


வரப்பு பயிராக பருத்தி வயலைச் சுற்றி சூரியகாந்தி பயிர் செய்யலாம் . இந்த சூரியகாந்தி பயிர் பருத்திக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அதே சமயம் சூரியகாந்தி வயலைச் சுற்றி சோளம், கம்பு போன்றவற்றை வரப்புப் பயிராகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். தென்னையில் ஊடுபயிராக இஞ்சி, வாழை, கோக்கோ, முருங்கை, பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை சாகுபடி செய்து அதன் மூலம் நாம் அதிக லாபம் பெறலாம்
தென்னைகேற்ற ஊடுபயிர்
பொள்ளாச்சி விவசாயிகள் தென்னை மரத்தில் மிளகு கொடிகளை ஏற்றி விடுகிறார்கள். இதன் மூலம் தென்னையில் வரும் வருமானத்தை விட மிளகில் அதிக லாபத்தை பெற்று விடுகிறார்கள்.  தென்னையில் புத்திசாலித்தனமாக லாபம் தரும் மிளகினை ஊடுபயிர் செய்வதால் நல்ல லாபம் பெற்று வருகின்றனர்.

வாழை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகச்சிறந்ததாகும். தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், தற்போது நடவு செய்யும் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பொதுவாக தென்னையில் ஏதோ ஊடுபயிர் இருக்க வேண்டும். அது தென்னை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இலைவாழை, மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், கருணைக்கிழங்கு, பைனாப்பிள், பாக்கு மற்றும் கறிப்பலா போன்றவை தென்னையின் சிறந்த ஊடுபயிர்களாகும். இலைவாழை பயிரிடும் போது தோப்புகளுக்கு இயற்கையாகவே குளிர்ந்த சூழ்நிலை கிடைக்கிறது. ரகங்கள் இலைவாழைக்கு, பூவன், கற்பூரவள்ளி, மொந்தன் வாழை ரகங்கள் சிறந்ததாகும். திசு வாழை அல்லது கிழங்கு மூலம் நடவு பயிரிடலாம். ஒரு ஏக்கர் தோப்பில், 4.5 அடிக்கு, 4.5 அடி இடைவெளியில் இரண்டாயிரத்து, 150 வாழைக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். தார்வாழையை விட, இலைவாழை சாகுபடி எளிதாகும். இவற்றில் மரத்துக்கு முட்டுக்கொடுக்கும் வேலை மற்றும் திருட்டு பயம் இருக்காது. காற்று, மழையால் ஏற்படும் பாதிப்புகளும் மிக குறைவு.


கரும்கேற்ற ஊடுபயிர்
கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் கரும்பு பயிரில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளையும், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உர பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்து மண் வளத்தை அதிகரித்து உபரி வருமானம் பெறலாம். இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் கரும்பு பயிர் இளங்குருத்து புழு தாக்குதலில் இருந்து பாதுகாப்பதுடன் செடிகள் வளர்வதையும் கட்டுப்படுத்துகிறது. கரும்பு பயிரில் ஊடு பயிர் செய்யும் போது,  குறுகிய வயதுடைய கிளைகள் இல்லாத மேலோட்டமான வேர்களைக் கொண்ட உளுந்து, பச்சைப்பயறு,  சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பயிர்களை கரும்பு நடவு செய்த பின்பு கரும்பு பார்களுக்கிடையே ஒரு வரிசையிலோ அல்லது இரு வரிசையிலோ நடவு செய்ய வேண்டும். மணற்பாங்கான நிலத்திற்கு சணப்பையும், களிமண் நிலத்திற்கு தக்கைப்பூண்டும் ஊடுபயிர் விதைப்பு செய்ய வேண்டும். சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை 45-50 நாட்களில் பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது விடுவதால் நிலத்தில் அங்ககப் பொருட்கள் அதிகமாகி உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.எனவே கரும்பு நடவு செய்யும் விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்து உபரி வருமானம் பெறுவதோடு, சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை பயிரிடுவதால் மண் வளத்தைப் பெருக்கி பயன் அடையலாம்.

கரும்பு வயலில் ஏக்கருக்கு 4 கிலோ உளுந்து அல்லது பாசிப்பயறு அல்லது சோயா மொச்சை 6 கிலோ கரும்பு நட்ட 3-ம் நாள் ஊடுபயிராக விதைக்கலாம். நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள் பயறுவகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உர பயிர்களை பயிர் செய்யலாம். மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களை கட்டுப்பாடு, மண் வளம் பெருக்க முடியும்.

பருத்திக்கேற்ற ஊடுபயிர்
பருத்தி விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் கணிசமான லாபம் பெறலாம். பருத்தி நடவு 6 வரிசைக்கும் ஒரு வரிசை தட்டப்பயறு  நடவு செய்ய வேண்டும். அல்லது மக்காச்சோளம் இதேபோல நடவு செய்யலாம். மேலும் ஊடுபயிராக வரப்பு ஓரங்களில் வெண்டை அல்லது ஆமணக்கு பயிரிடலாம்.
பருத்தி பயிரில் தட்டப்பயறு ஊடுபயிராக சாகுபடி செய்வதால் பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகி அசுவுனியை பிடித்து உண்ணும்.
பருத்தியை தாக்கும் காய்ப்புழு முதலில் சூரியகாந்தி பயிரையே தாக்குவதால் கட்டுப்படுத்துதல் இலகுவாகிறது. மேலும் சூரியகாந்தியின் மகரந்த்தினை பருத்தியின் சூழின் உன்னியாக கண்ணாடி இலைப்பூச்சி அதிகம் விரும்பி உண்ணும். இவ்வாறு சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், காய்ப்புழுக்களின் இளம் பூச்சிகளையும் உண்ணும்.
மக்காச்சோளம் ஊடுபயிராக விதைப்பதால் அதன் மகரந்தத்தை உண்டு, பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகிறது  மேலும் இது பருத்தியை தாக்கும்
வெண்டை ஊடுபயிராக பயிரிடுவதால், பருத்தியினை தாக்கும் காய்ப்புழுக்கள் அதிகமாக வெண்டைப் பயிரையே விரும்பி உண்பதால் அதன் தாக்குதல் வெண்டைப் பயிரில் அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்துதல் 6 வரிசைக்கு ஒரு வரிசை பயிரிட்டு புழுக்களை கவர்ந்து அழிக்க வேண்டும்.
வரப்பு ஒரங்களில் ஆமணக்கு பயிரிடுவதால் பருத்தியினை தாக்கும் புகையிலை புழு (புரோடினியா) தாக்குதல் பருத்தி பயிருக்கு குறைகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஊடு பயிர்களை தினந்தோறும் கண்காணித்து முட்டை குவியல் புழுக்களை கையால் பொறுக்கி அழிக்கவும். மேலும் பருத்தியை தாக்கும் அனைத்து காய்ப்புழுக்களையும் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.
இப்படி நாம் முதன்மை பயிருடன் ஊடுபயிராக சாகுபடி செய்வதால் மிகுந்த நன்மை கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள் ஆகவே இந்த மானாவாரி சமயத்தில் கண்டிப்பாக ஊடுபயிரை பயன்படுத்துங்கள். உண்மையாகவே உங்களது வருமானத்தை ஊடுபயிர் சாகுபடி இரட்டிப்பாக்கும் என்பதில் ஐயமில்லை.

என்.மதுபாலன்
ஓய்வுபெற்ற வேளாண்துறை உதவி இயக்குனர்,
9751506521
தர்மபுரி மாவட்டம்
Read More

April 19, 2020

தியாக தீபம் அன்னை பூபதியின் 32ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்
by Editor - 0

தியாக தீபம் அன்னை பூபதியின் 32ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.
சித்திரை  பத்தொன்பதாம் நாள் (19.04.1988) ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.

யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது.

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.

புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.

இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அவையாவன,

1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.

2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான “பிரிக்கேடியர் சண்டேஸ்” பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.

நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் “அன்னம்மா டேவிட்” தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி ‘பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்’ என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.

இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.

இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.

ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.

சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே.
தமிழீழமெங்கும் அன்னை பூபதியின் நினைவுநாளே ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்’ தினமாக அனுசரிக்கப்படுகிறது.

தாயக விடியலில் காற்றில் கலந்து தங்கள் உயிரை அர்பணித்து தாயகத்தைத் நெஞ்சில் தாங்கி பயணித்த அனைத்து நாட்டுப்பற்றாளர்களுக்கும், மாமனிதர்களுக்கும், வெளித் தெரியாது தேசவிடுதலைக்கு உழைத்த மக்களுக்கும் எமது வீரவணக்கங்கள்…!

- ஈழம் ரஞ்சன் -
Read More

April 18, 2020

லெப்.கேணல் கலையழகன் அண்ணாவின் 13 ம் ஆண்டு வீர வணக்க நாள்
by Editor - 0

லெப்.கேணல் கலையழகன் அண்ணாவின் 13 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்..புன்னகை பூத்த முகமே கலையழகன். 
கலையழகன் என நினைக்கும் போது,என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும்.

தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசறிவியலும், படையப்பயிற்சியும் இக்கல்லூரி மாணவர்களிற்கு மாறிமாறி வழங்கப்பட்டது. அக்கல்லூரியின் முதன்மை மாணவர்களில் ஒருவனாக மாவீரன் கலையழகன் திகழ்ந்தான். பேச்சாற்றல், நுட்பமாகப் பதில் கொடுக்கும் தன்மையினை கல்லூரியில் அவன் வளர்த்துகொண்டான். அங்கு அவனது ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றவர்களோடு பழகும் தன்மை, எல்லோருக்கும் உதவும் பண்பு, நேர்மை என்பன அவனைத் தூய்மையான போராளியாக வெளிச்சம் போட்டுக்காட்டியது.
நான்கு வருடங்களிற்கு மேலாக அரசறிவியல் கற்ற கலையழகன் தேசியத்தலைவர் அவர்களது கருத்துரைகளினாலும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தொடர் வகுப்புக்களினாலும் முழுமையான போராளியாகப் புடம் போடப்பட்டான். இந்தக்காலப் பகுதியில் கொமாண்டோப் பயிற்சியிலிருந்து கனரகப்பீரங்கிப் பயிற்சி வரைக்குமான பல்வேறு வகையான படையப்பயிற்சிகளை அவன் பெற்றான். 1995ஆம் ஆண்டு மாதகலில் ஆரம்பித்த அவனது போர் நடவடிக்கைகள் ரிவிரச, சத்ஜெய, ஜெயசிக்குறு, ஓயாத அலைகள்-03, ஆனையிறவுச்சமர் என நீண்டது. அண்மைய முகமாலை தாக்குதல் களத்திலும் அவன் பங்குபற்றியிருந்தான். இக்கல்லூரியின் முதலாவது அணி மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவடைந்த போது, மிகச்சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக கலையழகன் தெரிவு செய்யப்பட்டு தலைவர் அவர்களினால் சிறப்புப் பரிசும் “திறவோர்“ எனும் பட்ட வழங்கி மதிப்பளிக்கப்பட்டான். அரசியல் அறிவும், படைய அறிவும் ஒருங்கே இணைந்து தலைவர் அவர்கள் எதிர்பார்த்த பல்துறைசார் போராளியாக அவன் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்திருந்தான்.

கல்லூரிக் காலங்களில் பகுதி நேரமாக கலையழகன் தொலைத்தொடர்பாளனாக செயற்பட்டான். பின்பு சிறிது காலம் மொழிபெயர்ப்பு அறிவினை பெறுவதற்கான கல்வியையும், பாதுகாப்பு பயிற்சியையும் பெற்ற கலையழகனுக்கு தேசியத்தலைவர் அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை ஆவணமாக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வரிய வாய்ப்பினை தனது வாழ்நாளில் தனக்கு கிடைத்த பெரும் பேறாகவே அவன் கருதியிருந்தான். கால ஓட்டத்தில் அவனுக்கு வேலைச்சுமை அதிகரித்த போதும் தலைவர் அவர்களின் வரலாற்றை ஆவணமாக்கும் பணியினை தானே செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவனுக்கிருந்தது. தலைவர் அவர்களது தொடக்க கால நிகழ்வுகளை தேடி எடுத்து தொகுப்பதிலும், தலைவர் அவர்களின் தொடக்க காலத் தோழர்களிடமும், ஆதரவாளர்களிடமும் தகவல்களைத் திரட்டி அதனைச் சரிபார்த்து ஆவணமாக்குவதிலும் அவன் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தான், வேறு சில தேசப்பற்றாளர்களுடன் சேர்ந்து கலையழகனின் கடும் உழைப்பின் பயனாகவே “Leader for All Season” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய புகைப்பட ஆவணநூலும், “விடுதலைப் பேரொளி” என்ற தலைவர் அவர்களைப்பற்றிய தொகுப்பு நூலும் வெளிவந்தன.
செஞ்சோலை, காந்தரூபன் சிறார்களுக்கான எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காக, அவர்களிற்கான அழகான, அமைதியான இருப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டுமென்ற தலைவர் அவர்களின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் பொறுப்பு கலையழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப்பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட கலையழகன் அதற்காக கடுமையாக உழைத்தான் . புலம் பெயர்ந்த மக்கள், அமைப்புக்கள், மத்தியில் இதற்கான நிதி வளங்களை திரட்டுவதற்காக கடும் முயற்சியெடுத்தான். ஏராளமானோரை அவன் சந்தித்தான், கதைத்தான், திட்டங்களை வழங்கினான். இறுதியில் அவன் இந்தப்பணியில் முழுமையாக வெற்றியடைந்திருந்தான். செஞ்சோலை – காந்தரூபன் சிறார்களுக்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டு தலைவர் அவர்களால் அவை திறந்து வைக்கப்பட்டமை அவனுக்குப் பெரும் மன மகிழ்வையும் திருப்தியையும் தந்திருந்தது. அவனது ஆன்மா அன்று நிறைவடைந்திருந்தது. இதே போலவே நவம் அறிவுக்கூட போராளிகளிற்கான அமைவிடத்திற்கும் கலையழகனின் பங்கு கணிசமானதாக இருந்தது.

எமது தேசத்திற்கான வெளிநாட்டுத் தொடர்புகளை, அனைத்துலக பணிகளை செய்வதற்கான தயார்ப்படுத்தலுக்காக கலையழகன் பல்வேறு நாடுகளிற்கு அனுப்பப்பட்டான். வெளிநாட்டுப் பயணமானது அவன் கல்லூரியில் கற்ற பல விடயங்களை நேரில் பார்த்து அறியக்கூடியதாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் தாயகப்பற்று, விடுதலையுணர்வு, வாழ்க்கைநிலை என்பவற்றை அவன் அறிந்து கொண்டான். எமது பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் கடின உழைப்புப் பற்றியும், எதிர் கொள்கின்ற பிரச்சினை குறித்தும் இங்கு சகதோழர்களிற்கு எடுத்துரைத்தான். அதே நேரம் தேசியத்தலைவர், விடுதலைப் போராட்டம் குறித்த தெளிவான கருத்துக்களை அவன் செல்லுமிடமெல்லாம் முன்வைத்தான். நட்பு ரீதியாக நிறையப் பேருடன் உறவாடி தொடர்புகளைப் பேணிவந்தான். புலம்பெயர்ந்த எமது உறவுகளின் தாயகம் தொடர்பான பிரச்சினைகளை அந்த மக்களின் நிலையில் நின்று பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியவன். குறிப்பாக கனடாவில் வாழும் தமிழர்களிற்கான தாயகப்பணிகளை ஒருங்கிணைப்பதில் அவன் கடுமையாக உழைத்தான். புலம்பெயர் தமிழர்களின் பலத்தை, வளத்தை ஒருங்கிணைப்பதில் அவன் ஆற்றிய பணி அளப்பரியது. அவை வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை.

2006ம் ஆண்டு நடுப்பகுதியில் கலையழகன் அனைத்துலகத் தொடர்பக துணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இதற்கு இவனது பண்பும், ஆளுமையும், விடயங்களை இலகுவாகக் கையாளும் ஆற்றலும் காரணமாக இருந்தன. சக போராளித் தோழர்களை மதித்து, அவர்களோடு மனம் திறந்து பழகி, அனுசரித்து, அவர்களது தேவைகளை விளங்கி பூர்த்தி செய்யும் பக்குவம் அவனுக்கிருந்தது. போராளிகளை வளர்க்க வேண்டும், வேலைகளுக்குள்ளால் உள்வாங்க வேண்டும், நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று அவன் விரும்பிச் செயற்பட்டான். அவனை விட வயதில் கூடியவர்களும், அனுபவசாலிகளும் இருக்குமிடத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை அவனிடமிருந்தது. அந்தக் கவர்ச்சி மிக்க ஆளுமை எல்லோரையும் அவன் பால் ஈர்த்தது. குறுகிய காலத்தில் அவன் மிக வேகமாக வளர்ந்தான். அவனது ஆற்றல், ஆளுமையின் வீச்சு, முதிர்ச்சியடைந்த தன்மை என்பவை மூலம் ஒரு பெரிய பொறுப்பைத் தனியே செய்யக்கூடிய நிலையினை அவன் அடைந்திருந்தான் . அவன் நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் திகழ்ந்தான் என்பது தான் உண்மை.

இவ்வாறான நேரத்தில் தான் 18.04.2007 அன்று எதிர்பாராத வெடிவிபத்தில் கலையழகன் வீரச்சாவு என்ற செய்தி வந்தவுடன் நாம் எல்லோரும் துடிதுடித்துப் பதறிப்போனோம். ஆழிப்பேரலை வந்து தாக்கியது மாதிரியான உணர்வு, பூமியதிர்ந்து நிலம் பிளந்து போன மாதிரியான நிலை, இதயத்தை யாரோ சம்மட்டியால் அடித்த அதிர்வு. வார்த்தைகளில் வடிக்க முடியாத துயரமும் வலியும். வேதனைச்சகதியில் சிக்கித் தவிக்கின்ற சோகம் . ஏன் இவ்வளவு வேகமாக எமை விட்டுப்பிரிந்தான் என்று மனதில் ஆழமான வலியுடன் எழும்பும் வினா. கலையின் இழப்பின் பெறுமதி, இழப்பின் இதயவலி, அதன் ஒட்டுமொத்தப் பரிமாணம் எனக்கே முழுமையாகத் தெரிந்திருந்தது. என்னையே முழுமையாகத் தாக்கியிருந்தது.

அவன் அழகானவன், பண்பானவன், பழகுவதற்கு இனிமையானவன், கள்ளம்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்தவன். ஆளுமையெடுத்து செயற்கரிய பணிகளைச் செய்தவன். முதல் நாள் உயிரோடு வலம் வந்தவனை மறுநாள் விதைகுழியில் விதைத்துவிட்டு வந்தோம். இது எவ்வளவு துயரமாக, கொடுமையாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு இழப்புவரினும், இடர்வரினும் உறுதி தளரோம். லெப். கேணல் கலையழகனது தலைவர் மீதான பற்றும் பாசமும், விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் கொண்ட எண்ணங்களை நெஞ்சினில் சுமந்து அவனது இலட்சியக் கனவை நனவாக்குவோம் என அவனது விதைகுழி மீது சத்தியம் செய்கின்றோம்.

மணிவண்ணன் (காஸ்ரோ) 19/04/2007
அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்.

-ஈழம் ரஞ்சன்-
Read More