Latest News

Slider Area

Featured post

அல்லைப்பிட்டி படுகொலை

அல்லைப்பிட்டி படுகொலை. யாழ் அல்லைப்பிட்டி படுகொலைகளை கோர தாக்குதலின் 14 ஆம் ஆண்டு வலி சுமந்த படுகொலை நினைவு நாள்!   2006 ஆகஸ்ட் ...

தமிழீழம்

சினிமா

தமிழ் வளர்ப்போம்

August 14, 2020

அல்லைப்பிட்டி படுகொலை
by Editor - 0

அல்லைப்பிட்டி படுகொலை.

யாழ் அல்லைப்பிட்டி படுகொலைகளை கோர தாக்குதலின் 14 ஆம் ஆண்டு வலி சுமந்த படுகொலை நினைவு நாள்!

 

2006 ஆகஸ்ட் 13 அன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீதும் மற்றும் இரு ஊர்களிலும் இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் இதே நாளில் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலைகளின் தொகுப்பாக “அல்லைப்பிட்டி படுகொலைகள்” என்ற படுகொலை இலங்கையின் வடக்கே வேலணைத் தீவில் மூன்று வெவ்வேறு கிராமங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களினை குறிக்கும்.

2006, மே 13 சனிக்கிழமை இரவு வேலணையின் அல்லைப்பிட்டி, புளியங்கூடல், வங்களாவடி ஆகிய கிராமங்களில் இப்படுகொலைகள் இடம்பெற்றன.

இம்மூன்று கிராமங்களிலும், இலங்கைக் கடற்படயினர் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தோர் மீது துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டியில் பச்சிளம் ஆறு மாத குழந்தை உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் ஒரே வீட்டில் மிக கொடூரமாக கொல்லப்பட்டனர்.

புளியங்கூடலில் மூன்று பேரும், வங்களாவடியில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் காயமடைந்தனர். பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அடுத்து சுமார் 150 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த சிலர் தாம் கடற்படையினரால் தாக்கப்பட்டதாகவும், படுகொலைகளை அவர்களே நடத்தியிருந்தனர் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் வழமை போல சிறிலங்கா அரசு இதை மறுத்தது.

இப்படுகொலைகளை நடத்தியதில் சம்பந்தப்பட்ட இலங்கைக் கடற்படையினர், துணை இராணுவப் படையினரான (EPDPஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள்) ஆகியோரை பன்னாட்டு நெருக்கடிக் குழு அடையாளம் காட்டியிருக்கிறது.

உள்ளூரில் இயங்கும் மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளும் இத்தாக்குதலை நடத்தியவர்கள் கடற்படையினரும், துணை இராணுவக் குழுவினருமே என உறுதி படுத்தி இருக்கின்றது.

தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கடற்படையினரும், ஈபிடிபியினரும் இருந்தமை பற்றித் தமக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக பன்னாட்டு மன்னிப்பு அவை அறிவித்திருந்தது.

படுகொலைகளின் பின்னர் இலங்கையின் ஆங்கிலிக்க ஆயர் துலீப் டி சிக்கேரா நிலைமைகளை ஆராயும் பொருட்டு அல்லைப்பிட்டிக்குச் சென்று பார்த்து, பின்வருமாறு கூறியிருந்தார்:

“அல்லைப்பிட்டித் தீவுக்கு நான் சென்ற போது, பொதுமக்கள் அங்கு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் அங்கிருந்த இறுக்கமான நிலைமைகளை நான் அவதானித்தேன்.

ஒரே குடும்பத்தில் எட்டுப் பேர் கொல்லப்பட்டிருந்தனர். இக்குடும்பத்தில் எஞ்சியிருப்போர் கொலையாளிகளைத் தாம் அடையாளம் காட்ட முடியும் எனத் தெரிவித்திருந்தனர்.

பொதுமக்களை இத்தீவில் இருந்து வெளியேறும் படி குழுவொன்று அச்சுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் அங்கு பயத்துடன் வாழ்கிறார்கள். 

இப்படுகொலைகள் குறித்து விரைவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலமே இலங்கைப் படைத்துறையினருக்கும், மக்களுக்கும் இடையே சுமுகமான உறவை பேண முடியும்.” என்றார்.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த விசாரணைகள், சம்பந்தப்பட்டவர்களின் ஒத்துழையாமை காரணமாக இடை நிறுத்தப்பட்ட நாடகம் நடந்தேறியது.

இதே வேளை இந்த நாளில் புனித பிலிப்பு நேரியார் ஆலயம் மீதான எறிகணை வீச்சுத் தாக்குதல் (St. Philip Neri Church shelling) இதே நாளில் i இடம்பெற்றது.

புனித பிலிப்பு நேரியார் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணைத் தீவில் அல்லைப்பிட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. 

இவ்வாலயம் மீதான எறிகணைத் தாக்குதல் இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்டு குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டு மேலும் 54 பேர் காயமடைந்தனர்.

தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டு இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சுக்களுக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்தார்கள்.

2006 ஆகத்து 12 சனிக்கிழமை காலையில் விடுதலைப் புலிகள் அல்லைப்பிட்டியில் தரையிறங்கினர். இதனை அடுத்து இராணுவத்தினர் பின்வாங்கி அருகில் அமைந்திருந்த கடற்படைத் தளத்தினுள் சென்றனர்.

இராணுவத்தினர் பின்னர் மக்கள் குடிமனைகளை நோக்கி எறிகணை வீச்சை ஆரம்பித்தனர். இது அன்று இரவு முழுவதும் தொடர்ந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றின் படி இராணுவத்தினரின் பல்குழல் ஏவுகணைகள் அல்லைப்பிட்டிக் கிராமம் முழுவதும் வந்து வீழ்ந்ததாகத் தெரிவித்திருக்கிறது.

2006 ஆகத்து 13 ஞாயிற்றுக்கிழமை அதிகால 04:30 மணிக்கு பிலிப்பு நேரியார் ஆலயம் மீது எறிகணை ஒன்று வீழ்ந்தது. ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த 15 பேர் கொல்லப்பட்டனர். 54 பேர் காயமடைந்தனர்.

தேவாலய குருவானவர் திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் காயமடைந்தோரை யாழ்ப்பாணம் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அல்லைப்பிட்டியில் தங்கியிருந்த மேலும் 300 குடும்பங்களை அவர் ஊர்காவற்துறையில் உள்ள புனித மேரி தேவாலயத்திற்கு அனுப்பினார். 

குண்டு வீச்சு இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர் ஆகத்து 20 இல் அருட்தந்தை ஜிம் பிறவுன் காணாமல் போன கொடுமையும் நிகழ்ந்தது.

வழமை போல் தேவாலயம் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்தனர். ஆனாலும், அரசுப் படையினராலேயே எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

பலாலி இராணுவமுகாமில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததாக யாழ் பல்கலைக்கழக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளும் இவ்வாறே உறுதிப்படுத்தினார்கள்.

வழமை போல் சிறிலங்கா இனவெறிப்படை நிகழ்த்திய இந்த கொடூர இனப்படுகொலைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை.

வலிகளை பத்திரப்படுத்தும் நினைவுகள் நீதிக்கான போராட்டத்திற்கு வலு சேர்க்கும் சக்தியாக எமக்குள் கரு கொண்டு “போராடு” என உந்தி தள்ளும்.
Read More

August 13, 2020

செஞ்சோலை நினைவேந்தலுக்கு தடை
by Editor - 0

செஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளை நடாத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆவணி 14 அன்று இலங்கை விமான படையினர் நடாத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யபட்டதின் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நாடாத்தபடும் நிலையில் இவ்வருடம் நாளை காலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வந்த நிலையில் ஏற்பாட்டாளர்களை நேற்று (12.08.2020)பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த முடியாது எனவும் அவ்வாறு நடாத்தினால் கைது செய்ய படுவீர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்
Read More

கோட்டாபய - மஹிந்த அரசிற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு சுமந்திரன் பதில்
by Editor - 0

ஸ்ரீலங்காவில் பௌத்த மதத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கோட்டா - மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய மக்கள் இது தொடர்பில் நன்றாக சிந்திக்க வேண்டும்.

கோட்டா - மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நேற்று புதன்கிழமை கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல் மடுவ மண்டபத்தில் வைத்து பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பௌத்த மத தலைவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததுடன் பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் கொடிகளே அங்கு பறக்கவிடப்பட்டிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
Read More

August 12, 2020

ஜெனிவாவில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இவர்களால் ஆதரவு தரமுடியுமா - கஜேந்திரகுமார்
by Editor - 0

💢#ஜெனிவாவில்_இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இவர்களால் ஆதரவு தரமுடியுமா - #கஜேந்திரகுமார்
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் பின்னர், ஒற்றுமைக்கான கோசங்களை விக்கினேஷ்வரன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அழைப்பில் பல சந்தேகங்கள் இருக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் வானொலி ஒன்றுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது.. 

உண்மையான ஒற்றுமைக்கான அழைப்பு எனின், கொள்கை அடிப்படையில் தங்களை திருத்திக்கொண்டு அந்த அழைப்பை விடவேண்டும். ஆனால் வெறுமனே மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஒற்றுமையாக செயற்படுவோம் என சொல்வது ஒரு ஏமாற்று நாடகம் என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது.

பல தடவைகள் ஏமாற்றப்பட்டதால் வந்த படிப்பினைகளை கொண்டே, தெளிவான முடிவை எடுக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம்.

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமையான பிரகடனம் ஒன்றை ஆறு கட்சிகள் சேர்ந்து செய்திருக்க முடியும். ஆனால் எமது கட்சியை வெளியே அனுப்பி, ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள் அவர்கள்.

ஆனால் தேர்தல் முடிந்தவுடன், ஒன்றாக வாருங்கள் என்றால் என்ன அடிப்படையில் ஒன்றாக செல்ல முடியும்?

அதனால்தான், அவர்களது செயல்பாடுகள் ஊடாக ஒற்றுமைக்கான தளத்தை உருவாக்கட்டும். உதாரணமாக, இடைக்கால தீர்வு வரைபு பற்றி என்ன முடிவு எடுக்கிறார்கள்? ஜெனிவாவில் வருகின்ற பிரேரணைகள் தொடர்பில் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என நடைமுறையில் பார்ப்போம்.

அந்த செயற்பாடுகளில் ஒற்றுமை வந்தால், அதுவே உண்மையான ஒற்றுமையாக இருக்கும். அப்படியான ஒற்றுமைகள் ஏற்படும்போது அனைவரும் ஒருமித்து செயற்படக்கூடிய சூழல் இயல்பாகவே ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More

துணைவேந்தர் பதவிக்காக 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு
by Editor - 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும், 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான, பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம், இன்று (12) நடைபெற்றது.

இதன்போது, விஞ்ஞான பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணிதப் புள்ளி விவரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா முதலாமிடத்திலும் உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாமிடத்திலும் வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி மூன்றாமிடத்திலும் பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவால் முன்மொழியப்பட்டுள்ளனர்.

இத்தடன், முன்னாள் துணைவேந்தரும் கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நான்காவது இடத்திலும், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஐந்தாவது இடத்திலும் முன்மொழியப்பட்டுள்ளனர்.

புள்ளிவிவரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன்,   மதிப்பீட்டுக் குழுவால்  நிராகரிக்கப்பட்டுள்ளார். 

முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் திறமைப் பட்டியல், பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையுடன், தகுதி வாய்ந்த அதிகாரியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, நாளைய தினம் (13) அனுப்பி வைக்கப்படும்.
Read More

August 10, 2020

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா ?
by Editor - 0

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை அகற்ற, முதல் கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்று பிரித்தானிய அரசால் நிறுவப்பட்டுள்ள நிலையில். அதில் ஆதாரங்களை கொடுத்து தடையை நீக்க, நாடு கடந்த தமிழீழ அரசு பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

கடந்த 2000ம் ஆண்டு பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்ட, வெளிநாட்டு பயங்கரவாத  சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பிரித்தானியா தடை செய்தது. இந்த தடை காலவரையறை இன்றி தொடர்ந்து வருவதோடு. அது அப்படியே நிலைத்து இருக்க சந்தர்பங்கள் உள்ளது. இதனால் எவராவது இந்த முடிவை ஆட்சேபிக்க வேண்டும். அதனை கையில் எடுத்த நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்கள். டிசம்பர் மாதம் 2018ம் ஆண்டு, பிரித்தானிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்கள்.


அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை விலக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இதனை அடுத்து மார்ச் மாதம் 2019 அன்று அந்த கோரிக்கையை மறுத்து உள்துறை அமைச்சர் சாவிட் ஜாவிட் பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார். இதனை அடுத்து, தனது முடிவை நீதியான முறையில் கொண்டு செல்ல, அவர் ஒரு விசாரணை கமிஷனை ஏற்பாடு செய்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகள், அதனை விலக்க கோரி முறைப்பாடு செய்யும்(Proscribed Organisations Appeal Commission) அமைப்பில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர்(ஜூலை 31) அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பிரித்தானிய உள்துறை அமைச்சர், பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணிக்கும் குழுவிடம்(Joint Terrorism Analysis Centre) தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை தரும்படி கேட்டிருந்தார். அதற்கு அமைவாக அந்த அமைப்பு 2018ம் ஆண்டு ஒட்டிசுட்டானில் 3 பேர் புலிக்கொடிகளை வைத்திருந்த சம்பவத்தையும். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள் என்று, இலங்கை அரசால் தெரிவிக்கப்பட்ட தகவலை எடுத்து, உள்துறை அமைச்சருக்கு கொடுத்து. புலிகள் மீளவும் ஒன்றினைகிறார்கள் என்று தகவல் ஒன்றை கொடுத்துள்ளார்கள்.


இணையங்களில் வந்த செய்தியை ஆதாரமாக வைத்து, புலிகள் இன்னும் ஆயுதங்களோடு இருப்பதாக பிரித்தானிய அரசு கருதுவது பிழை என்று, நாடு கடந்த அரசின் வக்கீல் வாதாடியுள்ளார். அதுபோல இலங்கை அரசு வேண்டும் என்றே இது போன்ற தகவல்களை அடிக்கடி பரப்பி வருவதாகவும், அவர் குற்றம் சுமத்தி வாதாடியுள்ளார். இந்த வாத பிரதிவாதங்கள் கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து, மேலதிக தேதிகளில் விவாதங்கள் இடம்பெற உள்ளது.

இணையங்களில் வந்த செய்தியை ஆதாரமாக வைத்து, புலிகள் இன்னும் ஆயுதங்களோடு இருப்பதாக பிரித்தானிய அரசு கருதுவது பிழை என்று, நாடு கடந்த அரசின் வக்கீல் வாதாடியுள்ளார். அதுபோல இலங்கை அரசு வேண்டும் என்றே இது போன்ற தகவல்களை அடிக்கடி பரப்பி வருவதாகவும், அவர் குற்றம் சுமத்தி வாதாடியுள்ளார். இந்த வாத பிரதிவாதங்கள் கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து, மேலதிக தேதிகளில் விவாதங்கள் இடம்பெற உள்ளது.பிரித்தானிய அரசு புலிகள் தொடர்பாக எடுத்துள்ள முடிவு, ஆதாரமற்றது எனவும். இதனால் தமிழர்கள் சுயமாக செயல்பட இது தடையாக உள்ளதாகவும், நாடு கடந்த தமிழீழ அரசின் வக்கீல் வாதாடியுள்ளார். இறுதியாக ஒரு தமிழ் அமைப்பாவது, பிரித்தானிய அரசின் முடிவை எதிர்த்து, பலமான சவால் ஒன்றை விடுத்துள்ளது

இதற்கு பிரித்தானிய அரசு பதில் சொல்லியே ஆகவேண்டிய கடைப்பாட்டில் உள்ளது. இதனை தமிழர்கள் ஆகிய நாம் வரவேற்க்கவேண்டும். பிரித்தானியாவில் புலிகளுக்கான தடை நீங்கினால் அது தமிழர்களுக்கு கிடைக்கும் பெரும் வெற்றியாக இருக்கும். நாடு கடந்த அரசின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.

Source : https://www.bindmans.com/news/proscribed-organisation-appeals-commission-hears-appeal-against-ltte-terrrorism-ban


நன்றி அதிர்வு 

Read More

August 09, 2020

28 ஆவது பிரதமராக பதவியேற்றார் மஹிந்த
by Editor - 0

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நாட்டின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) பதவியேற்றார்.

பதவியேற்பு நிகழ்வு களனி ரஜமஹா விகாரையில் இன்று காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்கள் மற்றும் வௌிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளது.
Read More

ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு பின்னிற்கப்போவதில்லை என்று புளொட் மற்றும் ரெலோ
by Editor - 0

பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ் தரப்புகள் இதய சுத்தியான ஒற்றுமையுடன் இணைந்து செயற்படுமாக இருந்தால் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு பின்னிற்கப்போவதில்லை என்று புளொட் மற்றும் ரெலோ ஆகிய தரப்புக்கள் அறிவித்துள்ளன.

முதற்கட்டமாக தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அனைத்து தரப்புக்களும் பாராளுமன்றில் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் அத்தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அமைப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒற்றுமையை வலியுத்தி ஒன்றிணைவதற்கு தயாரென கருத்து பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், மற்றும் ரெலோ ஆகிய தரப்புக்கள் இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளன.

ரெலோ அமைப்பின் தலைவரும் வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகரத்தினை கைப்பற்றியுள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவங்கள் சிதறிப்போயுள்ளன. இது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தில் பலவீனமான நிலைமையை உருவாக்கும்.

ஆகவே தமிழ் தேசிய பரப்பில் உள்ள தரப்பினர் மத்தியில் ஒற்றுமையும் ஒன்றிணைந்த செயற்பாடும் மிகவும் அவசியமானதாக தற்போதைய தருணத்தில் உணரப்படுகின்றது.

ஆகவே நேர்மையான முறையில் தமிழ் கூட்டணியாக செயற்படுவது மிகவும் பொருத்தமானதொரு செயற்பாடாக இருக்கும்.

குறிப்பாக பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய தரப்பினராக கூட்டிணைந்து செயற்படுவதானது பலமானதாக இருக்கும்.

தமிழ் மக்களின் விடயங்களை கையாள்வதற்கும் பொருத்தமானதாக இருக்கும்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகள் பிளவடைந்து நிற்கின்றமைக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை தேடுவதன் ஊடாக, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து பலமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

இதேவேளை, புளொட் அமைப்பின் தலைவரும், யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கூறுகையில்,

தமிழ்த் தேசியப் பரப்பில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்பினர்கள் ஒன்றிணைந்து பயணிப்பது மிகவும் நல்லொரு விடயமாகும். ஆனால் அது இதயசுத்தயானதாக இருக்க வேண்டும். தனிநபர் ஒருவரின் நலன்களை அடியொற்றியதாக அமையக்கூடாது.

தனியொருவருக்கு சாதகமான நிலைமைகளை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது.

புளொட்டைப் பொறுத்தவரையில் தமிழ்த் தரப்பிற்கு இடையில் ஒற்றுமைக்காக எத்தனையோ தியாகங்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் செய்துள்ளோம்.

எதிர்காலத்திலும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம்.

ஆனால் கூட்டுச் செயற்பாடு அல்லது ஒற்றுமை என்பது நேர்மையானதாக இருக்கு வேண்டும் என்றார்.
Read More

August 06, 2020

சிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்?
by Editor - 0

தற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் கிளிநொச்சியில் பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் சி.சிறீதரன் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.


கிளிநொச்சி_தேர்தல்_முடிவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 31106

கேடயம் 13383


(1)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 82 ஐ உடைய நிலையத்தின் முடிவு


*82

த.தே.கூ 2592

கேடயம் 1001

த.ம.மு 268

ஈ.பி.டி.பி 289


(2)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 75 ஐ உடைய நிலையத்தின் முடிவு


*75

த.தே.கூ 1859

கேடையம் 897

த.ம.மு 206

ஈ.பி.டி.பி 105


(3)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 81 ஐ உடைய நிலையத்தின் முடிவு


81

த.தே.கூ 2108

கேடையம் 854

த.ம.மு

ஈ.பி.டி.பி


(4)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 79 ஐ உடைய நிலையத்தின் முடிவு


79

த.தே.கூ 1993

கேடையம் 843

த.ம.மு

ஈ.பி.டி.பி


(5)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 84 ஐ உடைய நிலையத்தின் முடிவு


79

த.தே.கூ 2170

கேடையம் 718

த.ம.மு 135

ஈ.பி.டி.பி 218


(6)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 74 ஐ உடைய நிலையத்தின் முடிவு


த.தே.கூ 1980

கேடையம் 880

த.ம.மு

ஈ.பி.டி.பி


(7)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 77 ஐ உடைய நிலையத்தின் முடிவு


த.தே.கூ 2743

கேடையம் 1094

த.ம.மு

ஈ.பி.டி.பி


(8)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 76 ஐ உடைய நிலையத்தின் முடிவு


த.தே.கூ 1764

கேடையம் 873

த.ம.மு

ஈ.பி.டி.பி


(9)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 87 ஐ உடைய நிலையத்தின் முடிவு


த.தே.கூ 2464

கேடையம் 1088

த.ம.மு

ஈ.பி.டி.பி


(10)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 86 ஐ உடைய நிலையத்தின் முடிவு


த.தே.கூ 1836

கேடையம் 1200

த.ம.மு

ஈ.பி.டி.பி


(11)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 80 ஐ உடைய நிலையத்தின் முடிவு


த.தே.கூ 2703

கேடையம் 969

த.ம.மு

ஈ.பி.டி.பி


(12)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 85 ஐ உடைய நிலையத்தின் முடிவு


த.தே.கூ 2117

கேடையம் 856

த.ம.மு

ஈ.பி.டி.பி


(13)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 78ஐ உடைய நிலையத்தின் முடிவு


த.தே.கூ 2030

கேடையம் 1128

த.ம.மு

ஈ.பி.டி.பி


(14)கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒன்றான இலக்கம் 83 ஐ உடைய நிலையத்தின் முடிவு


த.தே.கூ 2757

கேடையம் 984

த.ம.மு

ஈ.பி.டி.பி


Read More

August 05, 2020

கள்ளவாக்கு! யாழில் பரபரப்பு
by Editor - 0

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருக்கின்றார்.

அங்கு அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் சம்பவம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரிய வாக்கு மோசடிகள் பரவலாக இடம்பெற்றுள்ளதா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

தேர்தல் அமைதிக் காலத்தில் ஒருவர் சுட்டுக் கொலை!
by Editor - 0

அநுராதபுரம்- தஹாயியாகம சந்தியில் நடந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொல்லப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராத்தே சாம்பியனான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான எஸ்.எப்.லொக்கா என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இன்னொரு நபருடன் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே தஹாயியாகம புகையிரத கடவைக்கு அருகில் வைத்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் எஸ்.எப்.லொக்கா பலியாகியுள்ளார். அத்துடன் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Read More

August 01, 2020

கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல் எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள்
by Editor - 0

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல்எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள்.
கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல் எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள் என யாழ்ப்பாண பல்கலைகழக பல்கலைகழக மாணவர் ஓன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளை தெரிவு செய்யுங்கள் கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல்கொடுக்ககூடிய அடையாளம் கண்டு வாங்களியுங்கள் என மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மக்கள் விரக்தி மனோநிலையிலிருந்து விலகி வாக்களிக்க முன்வரவேண்டும் எனவும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தலுக்கு முன்னர் எட்டப்படமுடியாமல் போன ஒற்றுமையை தேர்தலின் பின்னராவது செயற்படு தளத்தில் எட்ட முடியுமென நம்பிக்கைகொண்டுள்ளோம் என யாழ்ப்பாண பல்கலைகழக பல்கலைகழக மாணவர் ஓன்றியம் தெரிவித்துள்ளது.


Read More

மாற்று என்றால் யார்? கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா?
by Editor - 0

மாற்று என்றால் யார்? கஜேந்திரகுமாரா அல்லது விக்கினேஸ்வரன் ஐயாவா? 
கலாநிதி குருபரன் குமாரவடிவேல் -

முதலில் விக்கினேஸ்வரன் ஐயாவை பார்ப்போம். தனிப்பட்ட நீதியரசர் விக்கினேஸ்வரனின் கரங்கள் தூயமையானவை. 2013இல் கூட்டமைப்பில் இணைந்து முதலமைச்சரானவர் 18 மாதங்களிலேயே தமிழரசுக் கட்சியின் பிறழ்வுகளை விளங்கி தனித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்தவர். தனது மனசாட்சிக்கு ஏற்ப செயற்படுபவர் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். 

ஆனால் ஐயாவிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடே அவரின் அரசியல் தயக்கமும் அரசியல் கருத்தியல் தெளிவின்மையும். இரண்டு உதாரணங்களை பார்ப்போம்: 

முதலாவது: 

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகளில் மிகப் பெரிய கருத்தியல் உள்ளடக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முக்கியமானவர். அந்த நேரத்தில் நான் பேரவையின் உப குழுவில் சிவில் சமூக பிரதிநிதியாக சனாதிபதி சட்டத்தரணி திரு. விவேகானந்தன் புவிதரனுடன்- Vivekananthan Puvitharan சேர்ந்து பணியாற்றினேன். பேரவையின் வரைவை தயாரிப்பதில் குறிப்பிடத்தக்களவு பங்கு எங்களுக்கும் இருந்தது. அந்த வரைபின் இறுதி வடிவம் நீதியரசருக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அதில் 'தமிழ் தேசம்' எனக் குறிப்பிடப்பட்ட இடங்களை எல்லாம் வெட்டி நீக்கி 'தமிழ் மக்கள்' என வெட்டி திருத்தினார். மேலே தான் செய்ததற்கு விளக்கமாக 'இந்த திருத்தங்கள் கூட்டமைப்பின் 'உணர்வுகளை' (feelings) ஐ மதித்து செய்யப்படுகின்றன' என விக்கினேஸ்வரன் ஐயா குறிப்பிட்டார்.  

கஜேந்திரகுமார் இதை கடுமையாக எதிர்த்தார். கஜேந்திரகுமார் தேசம் என்ற சொல் பாவனையின் முக்கியத்துவத்தை சட்டம் சார்ந்து, தேசத்தின் இறைமையில் இருந்தான எமது தீர்வு எடுத்தப்படவேண்டியதன் நடைமுறை முக்கியத்துவம் சார்ந்து, முன்வைத்து வருபவர். ஒரு நாட்டிற்குள் தீர்வையினும் அது தேசம் என்ற அங்கீகாரத்துடன் வராவிட்டால் அதனால் பிரோயோசனமில்லை என்பதனையும் குறிப்பாக தமிழரால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களிலேயே நாம் இதனை சொல்லாமல் விடுவது ஒரு தொடந்தேர்ச்சியான அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட முறிவாக இருக்கும் என்பதனையும் கஜேந்திரகுமார் அறிவார். அந்த தெளிவோடு எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தோல்வியை கண்டாலும் தொடர்ந்து பிரயாணிப்பவர் அவர். அந்த வகையில் விக்கினேஸ்வரன் ஐயா தேசம் என்ற சொல்லை விடுத்து சுமந்திரன் சேர் பரிந்துரைக்கும் 'மக்கள்' என்ற சொல்லை முன்வைப்போம் என்று நிலைப்பாடு எடுத்த போது மிகக் கடுமையாக எதிர்த்து அந்த மாற்றத்துடன் பேரவையின் அரசியல் தீர்வு யோசனை முன்வைக்கப்பட அனுமதிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இந்த மாற்றங்களை பிரேரித்த விக்கினேஸ்வரன் ஐயா ஆவணத்திற்கு நான் மின்னஞ்சலில் உடனடியாக பதிலளித்தேன்.  1951 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் முதலாவது பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானத்திலேயே 'தேசம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதனை தற்போதைய தமிழரசுக் கட்சியினர் மறந்திருக்கலாம் ஆனால் தமிழரை தேசம் என வரையறுத்த முதல் கட்சி தமிழரசுக் கட்சி தான் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் பின்னர் விக்கினேஸ்வரனை ஐயா அதை ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் விக்கினேஸ்வரன் ஐயாவின் அரசியல் தயக்கத்திற்கும் தெளிவின்மைக்கும் சான்று. 

இரண்டாவது: 

2019 சனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள் மத்தியில் பொது நிலைப்பாடு வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் கூட்டங்களை நடத்தினர். நான் இதில் ஆரம்பத்தில் கலந்து கொள்ளவில்லை. பின்னர் இடைக்கால அறிக்கையை வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்மபலத்தின் வலியுறுத்தலை கூட்டமைப்பு ஏற்காதிருக்க பேச்சுவார்த்தை முறிவடையும் என்று மாணவர்கள் அஞ்ச என்னையும் அழைத்தார்கள். அறிக்கையின் கீழே முன்னணியின் நிலைப்பாட்டை தனித்து சொல்லி அவர்களின் அந்த நிராகரிப்பை பதிவு செய்தல், ஒரு அடிக்குறிப்பாக முன்னணியின் நிலைப்பாட்டை சேர்த்தல் என பல தெரிவுகள் முன்வைக்கப்பட்டன. மாவை, சுமந்திரன் சேர், ஸ்ரீகாந்தா சேர், சுரேஷ் என்று எல்லோரும் அதை எதிர்த்தார்கள். முன்னணி மட்டும் நிராகரிக்கின்றது என்று அறிக்கை வெளிவந்தால் தாம் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வது என்று அர்த்தமாகி விடுமே, அதனால் அப்படி சேர்க்கக் கூடாது என்றும் இன்று விக்கினேஸ்வரன் ஐயாவோடு கூட்டணியில் இருக்கும் சில தலைவர்கள் கருத்து  தெரிவித்தனர்.விக்கினேஸ்வரன் ஐயா கொஞ்சம் பிந்தி வந்தார். அவருக்கு நடந்த விவாதத்தின் சுருக்கத்தை சுமந்திரன் சேர் வழங்கினார். நிராகரிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை தானும் ஏற்பதாக விக்கினேஸ்வரன் ஐயாவும் சொன்னது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. குறைந்தது முன்னணி தமது நிலைப்பாட்டை தனித்து சொல்ல அறிக்கையில் இடம் வழங்கலாம் என்பதைக் கூட விக்கினேஸ்வரன் ஐயா பரிசீலிக்கவில்லை. இடைக்கால அறிக்கையை பற்றி அந்த அறிக்கையில் பேச வேண்டுமா என்பதை கூட நியாயமான நிலைப்பாடாக கருதலாம். ஆனால் அதை நிராகரிக்கக் கூடாது என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அன்றுடன் யார் மாற்று என்பது தொடர்பில் எனக்கு தெளிவாக விளங்கியது. 

இதை சொல்வதால் எனக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு கருத்து முரண்பாடுகள் இல்லை என்று சொல்வதற்கு இல்லை. முன்னணி சனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரியது தவறு எனக் கருதுகிறேன். 2013இல் வடக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்க எடுத்த முடிவு உத்தி சார்ந்து தவறு என நான் கருதுகிறேன். முன்னணியின் சில உறுப்பினர்களின் அதி தீவிர தேசியவாதம் வன்மமானது. தேர்தல் அரசியலில் அதி கூடிய விட்டுக்கொடுப்பின்மை, இறுக்கத்தை காட்டுவதாகவும் கருதியது உண்டு. எனினும் கூட்டமைப்பின் தேசிய நீக்க அரசியலுக்கு சவால் கொடுக்க கூடிய தெளிவு உள்ள ஆளுமைகள் உள்ள ஒரே கட்சி என்னை பொறுத்த வரையில் முன்னணி தான்.

- கலாநிதி குருபரன் குமாரவடிவேல் -
Read More

July 31, 2020

விடுதலைப் புலிகள் பெயரில் போலி அறிக்கை வெளியிடும் இலங்கைப் புலனாய்வுத்துறை?
by Editor - 0

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு சேறுபூசும் சதித்திட்டம் அம்பலம்

இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படும் போலியான விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு சேறு பூசும் வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிடவிருந்த சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

தற்போது தமிழர் தாயகத்தில் இடம்பெறவிருக்கும் நாடாழுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பல தரப்புக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீது பெரும் குற்றச்சாட்டை முன் வைத்து புலிகளின் பெயரில் போலியான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத தீட்டப்பட்ட சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. இது போன்ற சதித்திட்டங்கள் கடந்த காலத்திலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிட்டதக்கது.

2010 ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கூட்டமைப்பின் பத்திரிகை ஒன்று கஜேந்திரன் கோத்தாவுடன் ஒப்பந்தம் செய்தார் என்ற கட்டுக்கதையை முப்பக்க செய்தியாகவும் 2015 ம் ஆண்டு கஜேந்திரகுமார் வெள்ளைக்கொடியுடன் வந்த புலிகளை காட்டிக் கொடுத்தார் என்ற கட்டுக்கதையை முன்பக்க செய்தியாகவும் வெளியிட்டு மக்களை பெரும் குழப்பதினுள் தள்ளி மக்களை தமது பக்கம் சாய நயவஞ்சக திட்டங்களை நிறைவேற்றியது. இம்முறையும் பரப்புரை நிறைவு பெறும் தினத்துக்கு மறு நாள் வெளிநாட்டில் ஒரு அறிக்கையை வெளியிட்டு அதனைக் குடாநாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியீடு செய்து மக்கள் முன்னணிக்கு உச்சந்தலை அடி ஒன்றினை கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடாநாட்டிலிலருந்து வெளிவரும் பத்திரிகைகள் இரண்டும் ஏட்டிக்கு போட்டியாக தமது கையாட்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் நோக்குடன் ஊடக தர்மங்களை எல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டு நிர்வாணமாக தமது ஆட்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந் நிலையில் வெளிநாட்டிலிருந்து இத்தகையதொரு அறிக்கை வெளிவருமாக இருந்தால் அது கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த கதையாகதான் இருக்கும்.

மேற்படி அறிக்கை வெளியாகும் விடயம் தோல்வியடையும் படசத்தில் வேறு ஏதேனும் வழிமுறையை பாவித்து முன்னணி பற்றிய ஒரு பொய்யான கட்டுக்கதை ஒன்று இம்முறையும் இரண்டு பத்திரிகைகளிலும் வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சு போட கைதேர்ந்த குடாநாட்டுப்பத்திரிகைகள் இம் முறை என்ன முடிச்சு போட போகிறார்கள் என்பது மக்கள் முன்னணியினருக்கு மட்டுமல்ல அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஒரு புதிராகவே இருக்கும்

Read More

July 30, 2020

சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ? TGTE
by Editor - 0

சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ? 

இணக்கஅரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், சர்வதேச அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும்;, தமிழர்களின் நலன்களையும்  இணைக்கும் அரசதந்திரம் கொண்டு, தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாக தேர்வு செய்யவேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இத்தேர்தலில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்தவு செய்யும் முன் கீழ் வரும் விடயங்களில் அவர்களுக்கு உள்ள உறுதிப்பாட்டை கவனத்தில் கொள்ளுமாறு கோரியுள்ளது.

1 - ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் -  தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.

2 - இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசும் அதன் அரசியல், இராணுவ தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

3 - நடந்தேறிய சர்வதேசக் குற்றங்கள் 'systemic crime ' என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிநபர்களாலோ, ஒரு குறிப்பிட்ட இராணுவப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. முhறாக இவை சிறிலங்கா என்ற 'அரசு' செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு செல்லத் தமிழர் பிரதிநிதிகள் பாடுபடுவேண்டும்.

4 - சர்வதேச தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.

5. தாயகத்தில் தமிழர் தேச நிர்;மாணத்தை உறுதியாக மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

சர்வதேச சமூகத்தை நோக்கி எமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் தமிழர் தேசம் கையாள வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.


Read More

July 28, 2020

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு கொரோனா! மருத்துவர்கள், தாதியர்கள் தனிமையில்!
by Editor - 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயத் தாக்கம் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

நோயாளி ஒருவர் அண்மையில் நோய்த் தாக்கம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

அவருக்கு யாழ்.கொரோனா பரிசோதனைக் கூடத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் அப்போது அவருக்கு கொரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை.

இருந்தபோதிலும் அவர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டிருக்கின்றார்.

அங்கிருந்து அவருடைய மாதிரி சேகரிக்கப்பட்டு அனுராதபுரம் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தகவல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 07ஆம் இலக்க விடுதியில் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடுதியில் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்டவர்களை தனிமைப்படுத்த வைத்தியசாலை அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரியவருகிறது.

இதனிடையே தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவர் குறித்த அழைப்புக்கு ஒத்துழைக்க மறுத்திருப்பதாகவும் அவரைத் தேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

பிந்திய தகவல்

குறித்த நோயாளி தானாகவே வந்து வைத்தியாலையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தபோதிலும் அவர் சகோதர மொழி பேசியமையால் அவர் படைத்துறையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன

Read More

July 26, 2020

தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்ற கொள்கையுடன் ஒன்றுபட வழி உண்டா? – சரவணை மைந்தன்
by Editor - 0


காலத்தின் தேவை கருதி இது ஒரு மீள் பதிவு 


இலங்கை தீவானது உலக வல்லரசுகளின் கழுகு பார்வையில் உள்ள ஒரு அழகான தீவு பல்லின மக்கள் வாழும் தீவில் என்றுமே எதிரிகளாக தமிழரும் சிங்களவரும் இதனால் சிவப்பாகிய ஈழம் இன்றுவரை அதன் சிவப்புக்கறை போகவில்லை சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற தமிழர்களின் போராட்டம் இந்த மணித்துளி வரை நடந்துகொண்டே இருக்கிறது.

இந்த போராட்டத்தில் உன்னத உயிர்களையும் எண்ணிலடங்கா உடைமைகளையும் இழந்தும் விடுதலைப் பற்று என்னும் நெருப்புடன் தமிழ் சமூகம் இன்றுவரை விழ விழ எழுவோம் என்பதற்கிணங்க தமது ஈழ விடுதலை போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றார்கள்.
அகிம்சை போராட்டம் பலனில்லாமல் போக ஆயுதப் போராட்டம்  வெற்றிப்பாதையில் பயணித்துக்கொண்டது வெற்றியின் உச்சத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் தொட்டனர். தரைப்படை,கடற்படை அத்துடன் விமானப்படையையும் அடைந்து சிங்களப்படைகளுக்கு பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்தனர். தமிழீழம் என்ற தனிநாடு மலரும் தருவாயில் பக்கத்து வல்லரசு, உலக வல்லரசு, உலக நாடுகள் இலங்கையில் இரண்டு ஆதிக்க சக்திகள் இருப்பதால், அதாவது தமிழீழ அரசு மற்றும் சிங்கள அரசு என இரண்டு இருப்பதால் தங்களின் ஆதிக்க நலனைக்கருதி தமிழீழ அரசை அழிக்க திட்டம் தீட்டி தமிழீழ நிழல் அரசை உலக நாடுகளின் துணையுடனும் இந்திய நேரடிக்கள முன்னெடுப்புடனும் சிங்கள கூட்டுடன் அழித்தன.  தமிழர்களின் பலத்தை முள்ளிவாக்காலில் துடைத்து அழித்தது.


 ஆனால் முள்ளிவாய்க்காலில் தமிழர் போராட்டம் முடியவில்லை என்பதை தமிழர்கள் இன்றுவரை நடத்தும் ஜனநாயக வழி போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களின் ஜனநாயக வழிப்போராட்டம் உலக அரங்கில் உத்வேகம் அடைந்து வீறுநடை போடுகின்றது.
ஈழத்தில் விடுதலைப்புலிகளின் மௌனத்தின் பின் தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழீழ மக்களுக்கு தங்களின் ஜனநாயக அமைப்பாக தேசிய தலைவரால் சுட்டிக்காட்டப்பட்ட அமைப்பு என்ற ஒரு காரணத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் தங்களின் ஜனநாயக விடுதலை அமைப்பாக கருதுகின்றனர்.
இதனால் கூட்டமைப்பு விடுதலை புலிகளின் மௌனத்தின் பின் தமிழ் மக்களின் விடுதலைக் குரலாக மாறியது. தமிழ் மக்களின் விடுதலைக் குரலாகவும் ஜனநாயக அமைப்பாகவும் இருக்கும் கூட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்திய வல்லரசு முயல்கின்றது. அதாவது தனது கைப்பொம்மை போல் பாவித்து தான் போடும் தாளத்திற்கேற்ப ஆட்டுவிக்கும் முயற்சியில் இறங்கியது. அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள் என்பதே உண்மை. அந்த வெற்றி கூட்டமைப்பின் சில பழுத்த அரசியல் வாதிகளின் அனுசரணையோடு பெற்றுக்கொள்ளப்பட்டது.


முன்னைய காலங்களில் விடுதலைப்புலிகளை தங்களின் ஆதிக்க நலன்களுக்கு பயன்படுத்த முயன்று தோற்றுப்போன இந்தியா விடுதலைப்புலிகளின் வளர்ச்சி பொறுக்கமுடியாமல் சிங்கள பேரினவாத அரசுக்கு தனது ஆதரவை வழங்கி தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தது.
தற்பொழுது கூட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குக் கூட்டமைப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் தடைக்கல்லாக இருப்பதாலும் மற்றும் அவர்கள் விடுதலைப்புலிகளை நேரடியாக பிரநிதித்துவப்படுத்துவதோடுஅவர்கள் புலிகளின் கொள்கையுடன் தற்பொழுதும்இருக்கிறார்கள் என்பதாலும் அவர்களை கூட்டமைப்பில் இருந்து அகற்ற முடிவெடுத்தது. இதில் முதல் பலியானவர்கள் பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன்  இவர்களுடன் சேர்த்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற சிறந்த தமிழ் தேசியவாதிகள்.
“இவர்கள் தமிழ்த்தேசியம் பேசுவார்கள்,  விடுதலைப்புலிகளின் கொள்கையை கடைப்பிடிப்பார்கள், இவர்களை கூட்டமைப்பில் இருந்து நீக்குங்கள்” என்ற இந்தியாவின் கட்டளைக்கு அமைய பத்மினி சிதம்பரநாதன்,செல்வராஜா கஜேந்திரன் போன்றவர்களை கூட்டமைப்பின் தலைமை 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில் போட்டி இடுவதற்கு கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தாமல் தவிர்த்தது. இதனால் இவர்களுடன் சேர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். அதாவது இவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.


 இந்தியாவின் கட்டளைக்கு அமைய கூட்டமைப்பின் தலைமை தமிழ்தேசிய  பற்றுள்ள விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு ஏற்றாற்போல் நடக்கும் அல்லது புலிகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை  கூட்டமைப்பில்  இருந்து சாதூரியமாக  விலக்கியது.
அதாவது விடுதலைப்புலிகள், தமிழீழம் போன்ற அடையாளங்களை தமிழர்களிடம் இருந்து பிரித்தெடுக்க உலக அரங்கில் நடக்கும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமே இந்த நடவடிக்கைகள். அதேபோல் விடுதலைப்புலிகளின் வவுனியா மற்றும் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக கடமையாற்றி இறுதி யுத்தத்தில் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த எழிலன்(சசிதரன்) அவர்களின் மனைவி அனந்தி  சசிதரன் அவர்களின் இடைநிறுத்தமும் இதனையே தெளிவாக்குகின்றது.


கூட்டமைப்பின் வாக்கு பலத்தை அதிகரிக்க வடமாகாண சபைதேர்தலில் விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் செய்வதற்கு அனந்தி  சசிதரனை பாவித்த கூட்டமைப்பு தற்பொழுது அவருடைய வளர்ச்சி கண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவரை புறந்தள்ள வேண்டும் என்ற இந்திய அறிவுறுத்தலுக்கு அமைய தற்பொழுதே நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கை கூட்டமைப்பை தமிழ் மக்களிடமிருந்து வேறுபடுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூட்டமைப்பினர் வரும் தேர்தலில் முன்னர் விட்ட தவறுகளை சரி செய்து தமிழ் தேசிய உணர்வாளர்களையும் இணைத்து, அவர்களையும் வரும் பொதுதேர்தலில் கூட்டமைப்பின் சர்ப்பாக நிறுத்துவதன் மூலம் கூட்டமைப்பானது தமிழர் தேசத்தில் அதிகளவு பிரதிநிதிகளை தெரிவு செய்ய வழிசமைத்து கொடுக்க முன்வரவேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு போன்றன இணைவதோடு, அனந்தி சசிதரன் அவர்களுக்கும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கி பொதுத்தேர்தலை சந்தித்தால், 3 தொடக்கம் 4மேலதிக  உறுப்பினர்கள் தெரிவை தமிழர் கூட்டமைப்பு பெற்றுகொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும். வல்லரசுகளை  மக்கள் பலத்தின் மூலம் தமிழர்களாகிய எங்களின் கொள்கைக்கு வரவைப்போம்.

தாயகம் ,தேசியம், சுயநிர்ணயம் என்ற கொள்கைகளோடு தமிழர்கள் யாவரும் இணைந்து செயற்படுங்கள். ஒற்றுமையே விடுதலையைப் பெற்றுத்தரும்.

சரவணை மைந்தன்
Read More

தமிழர் தலைநகரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி TNPF
by Editor - 0

தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் “தேர்தல் அறிக்கை” . வெளியிட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி 

Read More

July 23, 2020

கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்
by Editor - 0

கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று London னில் Sri Lankan High Commission க்கு முன்னால் புலம்பெயர் மக்களால் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.....
Read More

யாழில் முன்னிலையில் சைக்கிள் கட்சி
by Editor - 0

இது என்னுடைய கருத்துக்கணிப்பல்ல என்னுடைய அனுமானம்  நடந்து முடிந்த பாரளுமன்ற(2004,2010,2015) மகாணசபை(2013)  உள்ளுராட்சி(2012, 2018)  தேர்தல்கள் அவற்றில் கிடைத்த வாக்குகளின் புள்ளிவிபரங்களின்  அடிப்படையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை இவ்வாறாக அமையும்  மாற்றம் ஒன்றே மாறாதது 
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டம்
----------------------------------------------------------
மொத்தவாக்குகளில் வழமையாக வாக்களிப்பவர்களால் 3லட்சம்  தொடக்கம் 3.3 லட்சம் வாக்குகள் வரையிலேயே வழங்கப்படுகிறது. இம்முறை அது குறைவடையவே வாய்ப்புண்டு.

அ)தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி -சைக்கிள்
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) :  ~100,000

ஆ)தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  : ~ 80,000
(இலங்கை தமிழரசுக்கட்சி)  -வீடு

இ) ஈபிடிபி (வீணை) : ~50,000

ஈ) தமிழ் மக்கள் கூட்டணி ( மீன்) : ~25 , 000

ஈ) சிறிலங்கா சுதந்திரக்கட்சி (கை) : ~25,000

ஊ)ஏனையவை அனைத்தும் : ~ 30,000

இந்த ஏனையவை யில் உள்ள சுமார் 30,000 வாக்குகளையும் போட்டிக்கட்சிகளிடம் உள்ளவற்றையும் தட்டிப்பறிப்பதில் தங்கள் பக்கம் கவருவதில் எந்தக்கட்சி வெற்றி பெறுகின்றது என்பதில் உள்ளது யாழ்மாவட்ட தேர்தல் முடிவுகள்

மேலுள்ளவற்றில் சிறு ஏற்ற இறக்கம் இருக்கலாம்.
வாக்களிப்பு வீதம் சற்று குறையும்

எத்தனை சீற்று என்று இனி எவனும் என்னை கேட்கமுடியாது. அவனவன் கணித்துப்பார்க்கலாம்
இப்ப செம்பெல்லாம் சிதறி ஓடும் பதறும்  அதற்காக நான் ஒன்டும் செய்யமுடியாது பதறவிடுறதும் கதறவிடுறதும் நமது வேலை முடிவை விடுறது மகிந்த தேசப்பிரியவின் வேலை

பதிவு  : 23.07.2020 மாலை 5.30


நன்றி 

தங்கராஜா தவரூபன் 
Read More

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 37 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
by Editor - 0

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 37 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 37ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பங்கெடுத்த இத்தாக்குதல் லெப்.செல்லக்கிளி அவர்களின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது.

படை ஊர்தியை இலக்கு வைத்து கண்ணிவெடி இயக்கிய லெப். செல்லக்கிளி அம்மான் பின்னர் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். திருநெல்வேலி தாக்குதல். 

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.

முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.

எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.

விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.

தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.

செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.

வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.

“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.

நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.

சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக’கும’ எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.

ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.

ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.

தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.

ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.

சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.

ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.

ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.

இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.

அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.

விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து ‘”பசீர் காக்கா”” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே ‘கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.

இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ”தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.

ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.

சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.

மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ”யாரது”” என்று முன்னே வந்தனர்.

”அது நான்ராப்பா”” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ”அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை”” என்றார் ரஞ்சன்.

”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்”” என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.

மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.

இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. ‘எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ”அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.

இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.

”கரையால் வாருங்கள்”” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.

இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் ”அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.

பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ”அம்மானைக் காணவில்லை”” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ”டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.

வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.

லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.

வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.

நினைவுப் பகிர்வு 
அன்புடன் கிட்டு 

https://www.youtube.com/watch?v=PVrnAdGRbhI

- ஈழம் ரஞ்சன்-
Read More

July 22, 2020

எவ்வளவு காலம் இழுத்தடிப்பீர்கள்! ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றம் அதிரடி
by Editor - 0

கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.

7பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் என அதிரடியாக கேள்வியெழுப்பியுள்ளது
Read More

July 19, 2020

20 வருடங்களுக்கு ராஜபக்சாக்களின் ஆட்சி -அசைக்க முடியாத நம்பிக்கையில் மகிந்த தரப்பு
by Editor - 0

"நாட்டில் இருபது வருடங்களுக்கு மேல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சி தொடரப்போகின்றது. எவரும் இந்த ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது. ராஜபக்சாக்களின் தலைமையில் புதிய சரித்திரத்தை நாம் படைப்போம்."

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

பத்தனைப் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"வாக்கு என்பது உங்கள் உரிமை. அந்த வாக்குத்தான் ஆட்சியைத் தீர்மானிக்கப் போகின்றது. மக்களின் இறைமையே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும்.

எனவே, அந்த உரிமையை எவரும் களவாடமுடியாது. முன்னர் கள்ள வாக்குப் போட்டவர்கள் இருந்தனர். சாராயத்துக்கும், சாப்பாட்டுக்கும் வாக்குகள் அளித்தவர்களும் இருந்தனர். அந்தக் காலம் தற்போது மலையேறிவிட்டது.

கள்வர்கள் மற்றும் கொள்ளையர்களும் நாடாளுமன்றம் தெரிவானதால் நல்லவர்களையும் மக்கள் திட்டினர். 225 பேருக்கும் இடிவிழ வேண்டும் எனவும் விமர்சித்தனர்.

சிலருக்கு அமைச்சுப் பதவி இல்லாவிட்டால் காலைக்கடனைகூட நிறைவேற்ற மனம் வராது. அவர்கள்தான் அந்தப் பக்கம், இந்தப் பக்கம் எனத் தாவுகின்றனர். நாளை எந்தப் பக்கம் தாவுவார்கள் எனவும் தெரியாது. எமது பக்கத்திலும் சிலர் இருக்கின்றனர். உங்கள் புள்ளடி மூலம் அவர்களுக்குச் சிறந்த பதிலடியைக் கொடுக்கவேண்டும்.

இதனால்தான் மஹிந்த ராஜபக்சவை விட்டுச் சென்றவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என பிரசன்ன ரணதுங்ககூடக் கூறுகின்றார். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.

தற்போது பருவகால குருவிகள் வருகின்றன. அழகாக இருக்கின்றன. ஆனால், எதிர்வரும் 5 ஆம் திகதி பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக்குருவி உங்களுடன்தான் இருக்கும். வாக்குகளை வாங்கிக்கொண்டு தவளைகள்போல் தாவவில்லை. பதவிகள் பறிக்கப்பட்டபோதுகூட மஹிந்தவுடனேயே இருந்தேன்" - என்றார்.
Read More

முருகனைப் பற்றிபேச யாருக்கும் தகுதி இல்லை! கறுப்பர் கூட்டத்துக்கு பதிலடி
by Editor - 0

முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.

இந்துக் கடவுளை பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருக்கும் முருக கடவுளை கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவரின் ஆதங்கமாக வருகிறது இக்காணொளி

ibctamil
Read More