Latest News

Slider Area

Featured post

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...

தமிழீழம்

சினிமா

தமிழ் வளர்ப்போம்

December 11, 2018

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.
by விவசாயி செய்திகள் - 0

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை கோரியும் பிரித்தானிய பாராளுமன்றில் நேற்று திங்கட்கிழமை இனப்படுகொலை மாநாடு நடைபெற்றது.சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்றைய நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ‘தடுப்போம் தண்டிப்போம் என கொடுத்த வாக்குறுதி எங்கே’ எனும் தொனிப்பொருளில் பிரித்தானிய பாராளுமன்றின் 10 ஆம் இலக்கம் குழு அறையில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை குறித்த மாநாடு இடம்பெற்றது.பிரித்தானியாவின் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டோனாவின் தலைமையில் ஆரம்பமான மேற்படி நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் ஆரம்ப உரையினை (நியூயோர்க்கிலிருந்து ஸ்கைப் தொழில் நுட்பத்தின் மூலம்) நிகழ்த்தினார்.


தொடர்ந்து மூத்த அரசியல் வாதியும் பரிஸ்டருமான பீற்றர் ஹேன்ஸ் இலங்கை தொடர்பான கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குழுவின் முக்கியஸ்தர் ரிச்சட் ரோஜர்ஸ் மற்றும் உலகளாவிய விடாமுயற்சி மற்றும் பங்குதாரர் அமைப்பின் அலெக்ஸ் பிரசந்தி ஆகியோர் பிரதான உரைகளையாற்றினர்.இதனையடுத்து ICPPG இன் இயக்குனர் அம்பிகை சீவரட்ணம் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சாட்சியங்களை சொல்ல யாவரும் முன்வரவேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத்தர வழிவகுக்கும் என தனது உரையில் பிரதானமாக குறிப்பிட்டார்.இறுதியாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன் நிறுத்தி நீதியை பெற்றுக்கொள்வதற்கான வலியுறுத்தலை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வரும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இணையவழி கையெழுத்து போராட்டத்திற்கு பங்காற்றிய செயற்பாட்டளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டது.
செய்தி படங்கள் ஈழம் ரஞ்சன்


Read More

November 29, 2018

கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்!
by விவசாயி செய்திகள் - 0

மரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசா இன்று அதிகாலை காலமானார். அவரதுக்கு வயது 69

வடமராட்சி பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த சிவலிங்கம், தமிழரின் மரபுக் கலைகளான சிலம்பாட்டம், உடுக்கு போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்தார்.இறுதிவரை அவற்றை இளையவர்களிற்கு கற்றுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். அவரிடம் மரபு கலைகளை கற்ற ஏராளமான மாணவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read More

November 28, 2018

செவியை நிறைத்த மாவீரம்
by விவசாயி செய்திகள் - 0

புனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால் தொட்டு இன்று வரை எம்முள்ளே எரிந்து வரும் நெருப்பிது.. இத்தனை காலமும் தேக்கிவைத்த தமிழரின் உணர்விது.ஓர் புதினமோ, கட்டுரையோ அல்லது இன்னபிற எழுத்தோ அது என்ன சொல்ல வருகிறது என்பதை தாண்டி அதனுள்ளே என்ன இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பை கூட்டி வாசகனை தன் பக்கம் ஈர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது அதன் தலைப்பு.. “விதையாய் விழுவோம் விடுதலையாய் எழுவோம்” என்கிற இந்த இவ்வெறுட்டின் தலைப்பே சொல்லிவிடுகிறது இதன் உள்ள இருப்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல.. விடுதலை முழக்கமும் இதில் இடம்பெற்றிருக்கிறதென்று…
விலை கொடுத்தாலும் கிடைக்காததென்று இந்த உலகில் தனியாய் எதுவும் இல்லை உயிரைத்தவிர.. அந்த உயிரையும் விலையாய் கொடுத்து ஈழமென்ற தாய் நிலத்திற்காகவும், தமிழனின் தன்மான விடிவிற்காகவும் சமராடி உயிர் நீத்த எம் மாவீரைப் போற்றும் விதமாய் வெளிவந்திருக்கும் இந்த இறுவெட்டானது.. விதையாய் வீழ்ந்தாலும் விடுதலையாய் எழுவோம் என்கிற அறைகூவலொன்றை கொஞ்சம் சத்தமாகவே விடுத்திருக்கிறது இந்த உலகத்திற்கு..மாவீரர்களுக்கான புகழாஞ்சலி மற்றும் நம்மை தலைநிமிர்த்திய தலைவனுக்கான வாழ்த்து இதை தாண்டி நிமிராத தமிழனின் முதுகெலும்பை நிமிர்த்தும் நெம்புகோலொன்றும் பாடல்களினூடே இடம்பெற்றிருப்பாதகவே தோன்றுகிறது. இது மிகையான வார்த்தையல்ல, மிகச்சரியான வார்த்தையென்பதை இடம்பெற்றுள்ள பாடல்களை கேட்கும் இனி கேட்கபோகிற செவிகள் உணரும் என்கிற நம்பிகையானது அதிகமாகவே இருக்கிறது விடுதலையை நேசிக்கிற செவியுடைய எனக்கு.

ஒரு உயிர் கருவாகி, உருவாகி, உலகத்தை காண்பதைபோல தான் ஒரு பாடல் உருவாக்கம் பெற்று இசையாகி வெளியீடு செய்யப்படுவதென்பதும்.. மனைவியை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்து விட்டு வாரந்தாவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து திரியும் கணவனின் உணர்வை போன்றது அது… ஒவ்வொரு பாடலையும் கேட்கும் பொழுது சுகபிரசவம் அடைந்த ஓர் குழந்தையை காண்கிற மகிழ்வை தருகிறது எனக்கு.. பாடல் எழுதிய அத்தனை பேருக்கும் புரட்சிக்கர வாழ்த்துகளும், நெஞ்சார்ந்த வணக்கங்களும்..நல்லதொரு வரிகளுக்கு உருக்கொடுத்து இசையமைத்த இசையமைப்பாளர் தாமசு இரத்னம் அவர்களுக்கும், குரல்கொடுத்த பாடகர்களுக்கும், இதில் இடம்பெற்ற இசைக்காய் உழைத்த கடைநிலை ஊழியர்கள் அத்தனை பேருக்கும் இசை ரசிகனான எனதின் நெஞ்சார்ந்த நன்றிகள்.. நல்லதொரு இசையை தந்திருக்கிறார்கள் அதற்கு…

பார்க்கும் போதே ஈர்க்கிற வகையில் அட்டைப்படத்தை வடிவமைத்திருக்கிறார் வரைகலைஞர் அண்ணன் இதயதூரிகா.. விடுதலைத்தனலை தூரிகையில் அள்ளியெடுத்து தெளித்திருக்கும் அவரின் நேர்த்திக்கு எனது வாழ்த்துகள்.

மண்ணுக்காய் போராடி உயிர்நீத்து வீரகாவியமாகி காற்றோடு கலந்து இன்று எம் மூச்சோடு நிறைந்தவிட்ட மாவீரர்களை போற்றும் விதமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த இசைப்பேழைக்காய் உழைத்த உறவுகள் மற்றும் வெளியில் நின்று பணமாகவும் இனமாகவும் தோள்கொடுத்த அனைவருக்கும் தாயக விடுதலையை நேசிக்கின்ற அத்தனைபேருமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.. அந்தவகையில் நானும்..நல்லதோர் இசைப் பேழையொன்றின் மூலமாக மாவீரரின் ஈகைத்தை போற்றும் முகமாய் இந்த இறுவெட்டை வெளீயிடு செய்ய உழைத்த அத்தனைபேருக்கும் நன்றிகள்.

மேற்சொன்னது போல இதில் இடம்பெற்றிருப்பது பாடல்கள் அல்ல.. முள்ளிவாய்க்காலில் முடிந்துபோனதாய் சொன்ன ஒர் இனத்தின் விடுதலை முழக்கம்.. போராட்டத்தின் தொடர்ச்சி.. புரட்சியின் நீட்சி.. கேட்கும் காதுகள் இதை உணரும் என்பது மட்டும் நிச்சயம்.

-சா.அருண் பிரபாகரன்

Read More

November 27, 2018

மாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா
by விவசாயி செய்திகள் - 0

மாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி  எழுச்சி கீதங்களும் எழுச்சி உரைகளும் நிகழ்த்தப்பட்டு சமகாலத்தில் வீரகாவியமான மாவீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது இதனை உலக தமிழர் வரலாற்று மையம், பிரித்தானியா அவர்களினால் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கதுமேற்படி நிகழ்வின் முக்கிய அங்கமான ஈகைச்சுடரினை பிரித்தானிய நேரம் மாலை 12.30 மணி அளவில் மணி ஒலிக்க இசைபரியாவின் தாய் அவர்கள் ஈகச்சுடரேற்றி மாவீரர் கீதம்  ஒலிக்கப்பட்டது வீரகாவியமான மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது 


இதன்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சினால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த பிரித்தானிய பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்ற மக்களின் ஆதரவினை கோரி கையெழுத்து திரட்டி வருகின்றது. அந்தவகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் 
சிவகுரு சஜூபன்,இளவரசன் ஜெயபாலன்,பிரான்சிஸ் வசந்தராஜன், சிவஞானம் ஜெகநாதன், டிறோஷன் அவர்கள் தலைமையில் மேற்படி திட்டமும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Read More

இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்கள்!
by விவசாயி செய்திகள் - 0

பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்கள்!இல112a The Green, Southall இல் உள்ள Virendra Sharma பாராளமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  காலை 10.00 மணிக்கு  தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

மேற்படி சந்திப்பில் பிரித்தானிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரியும், இலங்கை சிங்கள அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனையும், தொடர்ந்து ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற சித்திரவதைகளும் துன்புறுத்தல்கள் தொடர்பிலும் விளக்கப்பட்டது 

மேலும் இச்சந்திப்பில் ஈழத்து கவிஞர் புதுவை இரட்ணதுரை அவர்கள் இராணுவத்தினால் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் அவரின் சகோதரர் விமலேந்திரம் அவர்களின் சாட்சியும். கடந்த மாதம் மன்னாரில் வசந்தராஜன் பீரிஸ் அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கு இராணுவ புலனாய்வாளர்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாகவும் பாராளமன்ற உறுப்பினர் அவர்களுக்கு சுட்டி காட்டப்பட்டது.

இவ்விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளமன்றத்தில் விவாத்த்திற்கு கொணர்வதற்காக பாராளமன்ற உறுப்பினர் Davey, Edward அர்களீர்களின் Early day motion 1480 இற்கு ஆதரவும் வேண்டப்பட்டது 

பாராளமன்ற உறுப்பினர் Virendra Sharma அவர்கள் தனது பூரண ஆதரவினை தருவதாகவும் கதைக்ப்பட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். 

இச்சந்திப்பில் தமிழ் தகவல் மையத்தின் செயற்பாட்டாளர்களும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுமான பிரான்சிஸ் வசந்தராஜன்,சிதம்பரநாதன் சைலேசன், 
கந்தசாமி விமலேந்திரம், சுரேஸ், ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Read More

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள்
by விவசாயி செய்திகள் - 0

வடக்கு மற்றும் கிழக்கில் இன்று மாவீரர் தினம் உணர்வுப் பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் யாழ். பல்கலைக்கழகத்திலும் மாவீரர் தின நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதில் பெருமளவான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டதுடன், மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்திலான கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. 

மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தியதுடன், மௌன அஞ்சலியும் செலுத்தியதை காணக்கூடியதாக உள்ளது.

Read More

November 26, 2018

பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து Early Day Motion இற்காக ஆதரவு கோரிய தமிழ் தகவல் நடுவம்
by விவசாயி செய்திகள் - 0

பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து Early Day Motion இற்காக ஆதரவு கோரிய தமிழ் தகவல் நடுவம்

பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினர் Frank Field அவர்களை Birkenhead Town Hall இல் இன்று 23.11.2018 மாலை 5.00 சந்தித்த தமிழ் தகவல் மையத்தின் செயற்பாட்டாளர்களும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுமான சிவகுரு சஜூபன் தலைமையில் அருளோசன் அருளானந்தம், ,கிருசாந்தன் பாலேந்திரா ,  நிலாசுதன்  பேரின்பநாதன்  ,நிருஷன் விக்னேஸ்வரன்ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

மேற்படி சந்திப்பில் பிரித்தானிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரியும், இலங்கை சிங்கள அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனையும், தொடர்ந்து ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற சித்திரவதைகளும் துன்புறுத்தல்கள் தொடர்பிலும் விளக்கப்பட்டது இவ்விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளமன்றத்தில் விவாத்த்திற்கு கொணர்வதற்காக பாராளமன்ற உறுப்பினர் Davey, Edward அர்களீர்களின் Early day motion 1480 இற்கு ஆதரவும் வேண்டப்பட்டது 

பாராளமன்ற உறுப்பினர் மேற்படி முன்னெடுப்புகளுக்கு தனது பூரண ஆதரவினை தருவதாகவும் கதைக்ப்பட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
Read More

November 25, 2018

யாழ் உருளைக்கிழங்கு உற்பத்தி வலையம் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் பிரகடனம்
by விவசாயி செய்திகள் - 0

யாழ் உருளைக்கிழங்கு உற்பத்தி வலையம் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் பிரகடனம் 2000 பேருக்கான உருளைக்கிழங்கு விதை தானியம் இன்று காலை 20/11/18 புத்தூர் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றிருந்த நிகழ்வில்  விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்கையாளர்களுக்கு விதை உருளைக்கிழங்கு  வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

76 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 50 சத வீத மானியத்துடன்,1000 ரூபா விசேட மானிய உரமும் ஊக்குவிப்பாக  வழங்கப்படுவதோடு காப்புறுதி,கொள்வனவு,நேரடி சந்தை வாய்ப்பு மற்றும் யாழ் உருளைக்கிழங்கு என்னும் வர்த்தக நாம தர பொதியிடலுடன்,உயர்தரமான வணிக வர்த்தக உற்பத்திக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது. 

விவசாய பிரதி அமைச்சர் அவர்கள் உரையாற்றும் பொழுது கருத்து தெரிவிக்கையில் 

கடந்த நான்கு மாத காலப்பகுதியில் விவசாய நல செயல்திட்டங்களுக்காக 600  மில்லியன் ரூபா வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு,விவசாய  செயல் திட்டங்களுக்காக வட மாகானதிற்கும்  விசேடமாக யாழ் மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.40 சத வீதம் விவசாய செய்கையாளர்களாக இருந்தும் பின்தங்கிய நிலையில் இருக்கும் விவசாய பெருமக்களை ஏனைய மாவட்டங்களை போன்று முன்னோக்கி கொண்டு செல்வதற்காக துரித விவசாய மீள் எழுச்சி திட்டம்  வட மாகாண விவசாயிகளுக்கு உந்துசக்தியாக அமையும் வகையில்  விவசாய சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் உயர்வுக்கு உருளைக்கிழங்கு உற்பத்தியை போன்று மாற்று பயிர் செய்கையாகவும்,அதன்  ஊடாக உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதி வாய்ப்புக்கள் ஊடாக சிறந்த வருவாயை  பெற்று கொள்ளும் அதேவேளை புகையிலை செய்கையாளர்கள் தங்களது செய்கைகளை தொடரும் அதேவேளை மாற்று பயிர்களை மேற்கொள்ளும் வரை உற்பத்தி நடவடிக்கைகளை குறைத்து மேற்கொள்ளுமாறும்,விவசாயிகளின்  வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெறாது எனவும் விவசாயிகளுக்கு பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன்  அவர்கள் உரையாற்றும் போது  உறுதியளித்திருந்தார்.

Read More

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு -பல்லவராயன்கட்டு
by விவசாயி செய்திகள் - 0

வீரத்தமிழர் முன்ணனி ஐக்கிய இராட்சியம் அமைப்பின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மற்றும் மாவீரர்  குடும்பத்தாரை போற்றி வணக்கும் நிகழ்வு இன்று   பல்லவராயன்கட்டு பூநகரியில் நடைபெற்றது இதில் நாட்டுக்காக தங்களை ஈகை செய்த மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து  கொண்டார்கள்
Read More