Latest News

November 30, 2011

பிரிட்டன் ஈரான் மோதல் முற்றுகிறது
by admin - 0

பிரிட்டனில் இருக்கும் ஈரானின் தூதரகம் மூடப்பட வேண்டும் என்றும், அதில் வேலைசெய்யும் பணியாளர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டுள்ளது.


ஈரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்குள் எதிர்ப்பாளர்கள் புகுந்து தாக்கிய சம்பவம் நடைபெற்று ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கையை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார்.
இது போன்ற தாக்குதல்கள் அரசின் அனுசரணைகள் சற்றும் இல்லாமல் நடந்திருக்க முடியாது என்று ஹேக் குறிப்பிட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை தாம் மூடிவிட்டதாகவும் அங்கிருக்கும் ஊழியர்கள் தற்போது அங்கிருந்து வெளியேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜாங்க உறவுகள் மிக மிக கீழ் மட்டத்தில் இருப்பதாகவும் வெளியுறவுச் செயலர் தெரிவித்தார்.
Read More

கொலைவெறி பாடலை கேட்டு புல்லரித்துப் போன அமிதாப்!
by admin - 0

தனுஷ் எழுதி, பாடிய கொலைவெறி பாடலைக் கேட்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் புல்லரித்துப் போனாராம். இதுபற்றி அவர் தனது பிளாக் பக்கத்தில், ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி.. ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடனமிடுகின்றன, என்று எழுதியிருக்கிறார்.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. இளம் நடிகர் படையின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் தனுஷ், மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார். யாரைப் பார்த்தாலும் இப்போது இந்தப் பாடலைத்தான் கேட்கிறார்கள் என்றும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார் அமிதாப்.
<a href="http://www.bux2get.com/aft/0e36db18/c4062c69.html" target="_top"><img src="http://banners.bigextracash.com/banner_1_300x250.jpg" border="0" alt="Get cash from your website. Sign up as affiliate." title="Get cash from your website. Sign up as affiliate." width="300" height="250" /></a>
Read More

காடபியின் மகனை காட்டி கொடுத்த செய்மதி தொலைபேசி
by admin - 0

கடாபியின் மகன் சிக்கிக் கொண்டது எப்படி என்ற தகவல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியவருகிறது. லிபியாவின் தென்மேற்கு பாலைவனப் பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் கடாபியின் மகன் செய்ஃப் அல்-இஸ்லாம் எல்-கடாபி கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மேலதிக விபரங்கள் ஏதும் உடனடியாக தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. கைது செய்யப்பட்டவரை பார்வையிட யாரும் அனுமதிக்கப்படவில்லை. எப்படிச் சிக்கிக் கொண்டார் என்ற தகவலையும் லிபிய இடைக்கால அரசு வெளியிடவில்லை. தற்போது கசிந்துள்ள கதையின்படி அல்-இஸ்லாம் எல்-கடாபி, பிரிட்டிஷ் உளவுத்துறை MI6-ன் பெயர் குறிப்பிடப்படாத ஆபரேஷன் ஒன்றின் மூலமே சிக்கியதாக தெரியவருகின்றது. ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில், 25 மில்லியன் பவுன்ட்ஸ் மதிப்புள்ள உளவு பார்த்தல் கருவி ஒன்றே கடாபியின் மகனின் மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்துள்ளது.
Get cash from your website. Sign up as affiliate.

அல்-இஸ்லாம் எல்-கடாபி அகப்படுவதற்கு முன் சுமார் ஒரு மாத காலமாக பாலைவன மறைவிடம் ஒன்றிலேயே பதுங்கி இருந்திருக்கிறார். ELINT உளவு பார்க்கும் கருவி ஒன்றின் உதவியுடன், அவரை எப்போது மடக்கலாம் என்று காத்திருந்திருக்கிறது பிரிட்டிஷ் உளவுத்துறை. ஆனால், அவரது நடமாட்டம் பற்றிய எந்தத் தகவலும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த உளவு பார்த்தல் விளையாட்டின் பிரேக்-பாயின்ட் எப்போது வந்தது என்றால், பாலைவனத்தில் இருந்து அல்-இஸ்லாம் எல்-கடாபி தனது சட்டலைட் போன் மூலமாக இரு போன்-கால்களை அடுத்தடுத்து செய்திருக்கிறார். �நான் பாதுகாப்பாக இருக்கிறேன்� என்ற ஒற்றை வாக்கியத்தைக் கூறியதுடன் போன் இணைப்பை துண்டித்தும் இருக்கிறார்.

குறுகிய நேரத்தில் செய்யப்பட்ட போன் கால் என்பதால், அதை ட்ரேஸ் பண்ண முடியாது என அவர் நினைத்திருக்கலாம். ஆனால், MI6-ன் உளவு பார்க்கும் கருவி அதை துல்லியமாக ட்ரேஸ் பண்ணி விட்டது. அதிலிருந்து அவரது இருப்பிடத்தை தெரிந்துகொண்ட MI6, அவரது இருப்பிடம் பற்றி லிபிய உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கவே, கடாபியின் மகனின் பாலைவன மறைவிடத்தை சுற்றி வளைத்து விட்டர்கள். பெயர் குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர், �அவர் (கடாபியின் மகன்) செய்தது முட்டாள்தனமான காரியம். பாலைவனத்தில் வைத்து தனது சட்டலைட் போனை அவர் உபயோகித்திருக்க கூடாது� என்றார்.

�ஒரு மாத காலமாக போனையே அவர் தொடவில்லை. அவர் எப்போதாவது தவறு செய்வார் என்பதற்காக நாங்கள் பொறுமையாகக் காத்திருந்தோம். இது ஒரு சிறிய மனோதத்துவம்தான். ஒருவர் மறைவிடம் ஒன்றுக்குள் சென்றவுடன் மிகவும் அவதானமாக இருப்பார். ஆனால் நாளடைவில் அவர் இயல்பாக இருக்கத் தொடங்குவார். அந்தக் கட்டத்தில்தான், தான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை தனக்கு நெருக்கமானவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்படும். சிலரால் அந்த ஆசையை அடக்கிக் கொள்ள முடியும். சிலரால் முடியாது. கடாபியின் மகனால் ஆசையை அடக்க முடியவில்லை. குறுகிய நேர போன்கால்தானே என்று தன்னை சமாதானம் செய்துகொண்டு போனை எடுத்து விட்டார்.
எமக்கு (MI6) அவரிடம் என்ன உபகரணங்கள் இருக்கின்றன என்பதும் தெரியும், அவர் உபயோகிக்கும் சகல போன் நம்பர்களும் தெரியும். அவர் யாருக்கு போன் பண்ணுவார் என்பதும் தெரியும். அவரது போனை ஆன் பண்ணி டயல் பண்ணி முடிந்த 5 விநாடிகளிலேயே அவரது இருப்பிடத்தை ட்ரேஸ் பண்ணிவிடும் தொழில்நுட்பம் எம்மிடம் இருப்பது அவருக்கு தெரியாது என்று நினைக்கிறேன்� என்றும் தெரிவித்தார் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி.


Read More

உலக காலநிலை மாற்றம் இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் - ஆய்வில் அச்சம்
by admin - 0

உலகில் கால நிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயரும் போது இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படலாம் என ஆய்வொன்றில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

ஐ.நா.வின் மனித குடியிருப்பிற்கான திட்டத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிட வடிவமைப்பு பீடத்தின் தலைவரான பேராசிரியர பி.கே.எஸ் மகாநாம கூறுகின்றார். 

வறண்ட வலயப்பகுதியான மட்டக்களப்பு, ஈர வலயமான நீர்கொழும்பு ஆகிய கரையோர நகரங்கள் தெரிவு செய்யப்பட்டு தாங்கள் ஆய்வுகள் மேற்கொண்டதாக தெரிவிக்கும் அவர், அடுத்த முப்பது நாற்பது ஆண்டுகளில் விஞ்ஞானிகளினால் எதிர்வு கூறப்பட்டது போல் கடல் மட்டம் வெகுவாக உயருமானால் மட்டக்களப்பு நகர கரையோரத்தில் 20 சதவீதமும் நீர்கொழும்பு நகர கரையோரத்தில் 15 சத வீதமும் தாழ்ந்து போகும் அபாயம் உள்ளது என்றும் கூறுகின்றார். 

இருப்பினும் 100 சத வீதம் இப்படி நடக்கும் என்று கூற முடியாது என்றும் கால நிலை மாற்றங்களின் தாக்கம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் போகலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார். 

ஏனைய கரையோர நகரங்களிலும் இப்படியான தாக்கங்கள் இருக்கலாம். ஆனால் அங்கு எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை என்று கூறும் பேராசிரியர் பி.கே.எஸ் மகாநாம, இதனை தடுப்பதற்குரிய செயல்பாட்டு திட்டமொன்று தங்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிதிப்பிரச்சினை அதற்கு தடையாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த விடயத்திற்காக நோர்வே உதவ முன் வந்துள்ளதாக தெரிவித்த அவர், அந்நாட்டின் நிதி கிடைக்குமானால் முற்றாக இல்லா விட்டாலும் இந்த நகரங்களில் ஓரளவாவது செயல் திட்டத்தை தங்களால் மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 
Read More

பாவம் தமிழன்!
by admin - 0

கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.

அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.

தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.

2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.

1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.

எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.

ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.

இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.

அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.

தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.

நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.

முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. 

பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.

அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.

கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.

இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.

அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.

காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.

பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.

புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.

தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.

பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?

மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.

புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003):

தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.

ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.

பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.

இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன். 

நன்றி - தினமணி
Read More

அழகிரி டெல்லி போயுள்ள நேரம் பார்த்து மதுரையில் எம்.பி. அலுவலகம் பறிப்பு!
by admin - 0

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி டெல்லி போயுள்ள நிலையில், மதுரையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த எம்.பி. அலுவலகத்தை மதுரை மாநகராட்சி பறித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மு.க.அழகிரி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இதையடுத்து மதுரை மாநகராட்சி சார்பில் புதிதாக ஒரு கட்டடம் கட்டி அதை எம்.பி. அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி அழகிரியிடம் ஒப்படைத்தார் அப்போதைய திமுக மேயர் தேன்மொழி.

இந்த நிலையில் இந்த அலுவலக ஒதுக்கீடுக்கான உத்தரவை இன்று மதுரை மாநகராட்சி தீர்மானம் மூலம் ரத்து செய்துள்ளது. மேலும், அந்த இடத்தில் மண்டல அலுவலகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அலுவலகம் பறிக்கப்பட்ட தகவல் அழகிரிக்கு போயுள்ளதாம். அவர் தற்போது டெல்லியில் உள்ளார். திஹார் சிறையிலிருந்து விடுதலையான தங்கை கனிமொழியை வரவேற்க டெல்லி போன அழகிரி, கனிமொழியை தனது வீட்டில்தான் தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் எம்.பி. அலுவலகத்தை மதுரை மாநகராட்சி பறித்துள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மதுரை திரும்பியதும் அலுவலகத்தை மீட்கும் நடவடிக்கையில் அவர் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More

November 29, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்ய எதிர்க்கவில்லை - தமிழக அரசு
by admin - 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கு தமிழக அரசு ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், தங்களை விடுவிக்க வேண்டும் என்று மூன்று பேரும்கோரிக்கை விடுத்து மனு செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மூவரையும் தூக்கில் போடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி இந்த வழக்கை விசாரித்தபோது 8 வார கால இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றம் விதித்தது. இதனால் மூன்று பேரும் தூக்குக் கயிற்றிலிருந்து தற்காலிகமாக தப்பியுள்ளனர். 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியும் வெங்கட் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, மாநில அரசு உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை. 

இந்தப் பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று தமிழர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சி.நாகப்பன், பி.சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய குழு முன்பு இன்று (29) விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசு சட்டத்தரணி ரவிந்திரன் ஆஜராகி வாதிடுகையில், 

பஞ்சாப்பைச் சேர்ந்த புல்லர் என்பவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இதில் மரண தண்டனையை விதிக்கப்பட்டோர், மாநில கவர்னர், குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்த கருணை மனு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

டிசம்பர் 2-வது வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

இதேவேளை, உள்துறை செயலாளர் ரமேஷ் சர்மாமிஸ்ரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், 

இந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த பதில் மனுவை ஊடகங்கள் புரிந்து கொண்டுள்ளன. அதனால் இந்த கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளோம். இந்த நீதிமன்றத்தின் வாயிலாக தண்டனையை குறைக்க கேட்டு இந்த மூவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தங்களது கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுப்பதற்கு 11 ஆண்டுகள் காலதாமதமானதை சுட்டிக் காட்டியுள்ளனர். அதுபற்றி மாநில அரசு கருத்து கூற விரும்பவில்லை. 

கருணை மனு நிராகரித்தது தொடர்பாக குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவு கிடைத்த பின்னர் தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைதான் எடுத்தது. அதே நேரத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 30-8-2011 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க குடியரசு தலைவர் பரிசீலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

இந்த தீர்மானம் குறித்து விவரம் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை இந்த நீதிமன்றின் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி வெங்கட் என்பவர் உச்ச நீதிமன்றில் தொடர்ந்த வழக்கில் ஜனவரி 11-ந் திகதிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

எனவே வழக்கை ஜனவரி 11-ந் திகதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றார். 

அப்போது தமிழக அரசின் சட்டத்தரணி ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிடுகையில், 

இந்த வழக்கில் மாநில அரசு பதில் மனுதாக்கல் செய்து இருந்தது அந்த மனுவை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் உள்துறை செயலாளர் கூடுதலாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்த 3 பேரது மரண தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு எதிர்க்கவில்லை. தண்டனையை குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இப்போதாவது வைகோ திருப்தி அடைவாரா? என்றார். 

இதைக் கேட்டதும் வைகோ சிரித்தார். பின்னர் சரி என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், நாங்களும் புரிந்து கொண்டோம். வழக்கை ஜனவரி 31ம் திகதிக்கு ஒத்திவைக்கிறோம் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர். 
Read More

விமானதளத்தை 15 நாட்களுக்குள் யு.எஸ். காலி செய்ய வேண்டும்: மேலும் 'டைம்' கொடுக்க சர்தாரி மறுப்பு
by admin - 0

அமெரிக்க்காவின் சிஐஏ, ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை ட்ரோன் ஏவுகணைகளை வீசித் தாக்க பயன்படுத்தி வரும், ஷம்சி விமானதளத்தை காலி செய்ய பாகிஸ்தான் அரசு கொடுத்துள்ள 15 நாள் கெடுவை நீட்டிக்க அநநாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி மறுத்துவிட்டார்.

சமீபத்தில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசும் இதனால் பெரும் கடுப்பாகியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைத்திருக்கும் ஷம்சி விமானதளத்தை 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இந்த விமான தளத்தைத்தான் தனது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய தளமாக அமெரிக்கப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜயீத் அல் நஹ்யான் திடீர் என்று நேற்று பாகிஸ்தான் வந்தார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் சர்தார் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி ஆகியோரை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷம்சி விமானதளத்தை காலி செய்ய அமெரிக்காவுக்கு அளித்துள்ள 15 நாள் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க சர்தாரி மறுத்து விட்டார். 

நஹ்யானுடனான சந்திப்பு குறித்து பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் ஷம்சி விமானதளத்தை காலி செய்வது பற்றி குறிப்பிடவில்லை.

பாகிஸ்தான் அரசு கடந்த 1992ம் ஆண்டு ஷம்சி விமானதளத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னர் பரம்பரையினருக்கு லீசுக்கு விட்டது. 9/11 தாக்குதல் நடந்ததில் இருந்து அந்த விமானதளத்தை அமெரிக்கா பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி அளித்தது.

இந்த சந்திப்பின் போது நஹ்யான் 15 நாள் கெடுவை நீட்டிக்குமாறு சர்தாரியை மீண்டும், மீண்டும் வலியுறுத்தியும் அவர் மசியவில்லை என்று கூறப்படுகின்றது.
Read More

திஹார் சிறையிலிருந்து மாலை வெளியே வருகிறார் கனிமொழி: 3ம் தேதி சென்னை வருவார்
by admin - 0

 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் கழித்து விட்ட திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி இன்று சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார்.

டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழிக்கு நேற்று நிபந்தனை ஜாமீன்அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவே அவர் வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் திஹார் சிறைக்கு வெளியே மீடியாக்கள் குழுமியிருந்தனர். அதேபோல திமுகவினரும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். இருப்பினும் ஜாமீன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு, 2ஜி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு சிபிஐ கோர்ட்டுக்கு தாமதமாக வந்தது. 

அதற்குள் சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி வீட்டுக்குக் கிளம்பி விட்டார். இதனால் கனிமொழியை விடுவிப்பது நேற்று இயலாததாகி விட்டது. இதனால் நேற்று இரவும் கனிமொழி சிறையிலேயே கழித்தார்.

இன்று சிறப்பு சிபிஐ நீதிபதியிடம் உயர்நீதிமன்ற உத்தரவு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் இருந்து வெளிவருவதற்காக அங்கு கனிமொழி சார்பில் பிணைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை சிபிஐ நீதிமன்றம் வெளியிடும்.

இதன் பின்னர் அந்த உத்தரவு திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர். இந்த நடைமுறைகள் முடிய இன்று மாலை ஆகிவிடும். அதன் பின்னரே அவர் சிறையிலிருந்து வெளியே வருவார்.

3ம் தேதி சென்னை வருகிறார்:

இந் நிலையில் திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 3 நாட்கள் சிபிஐ தரப்பு நடைமுறைகளை முடித்து விட்டு அவர் டிசம்பர் 3ம் தேதி சென்னை வருவார் என்றும், டிசம்பர் 6ம் தேதி வரை சென்னையில் இருக்கும் கனிமொழி, பின்னர் மீண்டும் டெல்லிக்குச் செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தடபுடல் வரவேற்புக்கு திமுக தயார்

சென்னை வரும் கனிமொழிக்கு தடபுடலான வரவேற்பு அளித்து பிரமாண்டமாக அவரை வீட்டுக்கு அழைத்து வர கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

விழாக்கோலத்தில் திமுகவினர்

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது திமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கனிமொழி கவலையால்தான் கருணாநிதி பெரும் சோர்வுடன் காணப்பட்டார். அவரது வழக்கமான அதிரடியைக் கூடக் காண முடியவில்லை. இப்போது அவர் நிம்மதியாக இருப்பார். தனது வழக்கமான அரசியலில் அவர் இறங்குவார். அது பல கட்சிகளுக்கு நிம்மதியான தூக்கத்தைப் பறிப்பதாக அமையும் என்று திமுகவினர் கருதுகிறார்கள்.
Read More

November 28, 2011

ரஜினிக்கு ஜோடி அனுஷ்கா
by admin - 0

ராணா படத்துக்கு முன்பாக ரஜினிகாந்த், கோச்சடையான் என்ற படத்தில் நடிக்கிறார். கோச்சடையான், கி.பி.735 ல் வாழ்ந்த பாண்டியன் மன்னர் ஆவார். துணிச்சலும், வீரதீரமும் மிகுந்த அந்த மன்னரின் வரலாற்றை அடிப்படையாக வைத்து, கோச்சடையான் படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

அவதார், டின் டின் ஆகிய ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன், இந்த படம் தயாராகிறது. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார். ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்குகிறார். 

இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க அனுஷ்கா உள்பட சில கதாநாயகிகளிடம் கால்ஷீட் கேட்டு இருப்பதாக டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்தார். 

"கதாநாயகி யார்? என்பது இன்னும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை. யாருடைய கால்ஷீட் சாதகமாக இருக்கிறதோ, அவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்படுவார்´´ என்று அவர் கூறினார். 
Read More

டிசம்பர் 9ம் திகதிக்கு முன் க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்
by admin - 0


நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். 

பெறுபேறுகளை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இம்முறை பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Read More

இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு
by admin - 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் இயற்கை அனர்த்தங்களால் 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் சீரற்ற காலநிலையால் 16945 குடும்பங்களைச் சேர்ந்த 66760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அமைக்கப்பட்டுள்ள 6 தற்காலிக முகாம்களில் 424 குடும்பங்களைச் சேர்ந்த 1705 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர் மாயம் - கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
by admin - 0

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீட மாணவர் ஒருவர் நேற்று இரவுமுதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

27 வயதுடைய வேதாரணியம் லதீஸ் என்பரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

நேற்றிவு திருநெல்வெலியிருந்து கைதடியில் உள்ள விடுதிக்கு சென்றவர் விடுதியை சென்றடையவில்லை எனவும் இவரை இடையில் யாரும் கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இறுதிக் கட்ட யுத்தத்தின் படையினரால் கைது செய்யப்பட்ட லதீஸ் பூஸா தடுப்பு முகாமில் இருந்து விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில நாட்களாக யாழ். குடாநாட்டில் படையினரின் செயற்பாடுகள் குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் அதிருப்பி வெளியிட்டுள்ளனர். 
Read More

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது… திமுக மகிழ்ச்சி!
by admin - 0


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
அவருடன் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் கரீம் மொரானி, குஸோகான் நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் உள்ளிட்டோருக்கும் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கலைஞர் டிவி தொடர்பான ரூ 200 கோடி பணப் பரிவர்த்தனையில் கனிமொழி சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி, கடந்த மே 20-ம் தேதி அவரை கைது செய்தது சிபிஐ. கடந்த 7 மாதங்களாக அவர் 5 முறை ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தார்.
முதல் நான்கு முறையும் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில் கூட தனது ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்ததால்,  உயர்நீதிமன்றத்தை கனிமொழியும் மற்றவர்களும் நாடினர்.
இந்த வழக்கில் குற்றம்  சாட்டப்பட்டிருந்த கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் 5 பேருக்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியதையடுத்து தங்களுக்கும் ஜாமீன் கிடைத்துவிடும் என்று கனிமொழி உள்ளிட்டோர் நம்பினர். இதனால் டிசம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய வழக்கை முன்னதாகவே விசாரிக்குமாறு கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.
இவர்களது ஜாமீன் மனுக்கள் தொடர்பாக வெள்ளிக்கிழமையும், இன்றும் விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி விகே சஹேலி கூறுகையில், “முன்பு 5 அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கியபோது, சிபிஐ 409வது பிரிவின்கீழ் (நம்பிக்கை துரோகம்) பதிவு செய்த குற்றச்சாட்டு குறித்து எதுவும் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் கவனக்குறைவு என்று இதை சொல்ல முடியாது. ஆனால் ஏன் இதை கவனத்தில் கொள்ளவில்லை என்பது புரியவில்லை,” என்றார்.
உடனே எழுந்த கனிமொழியின் வழக்கறிஞர் அல்டாப், “மதிப்புக்குரிய உச்சநீதிமன்றம் இதை கவனிக்கவில்லை என்று கூறமுடியாது, உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டே அந்த தீர்ப்பினை வழங்கியது. அதுவே கனிமொழிக்கும் மற்றவர்களுக்கும் பொருந்தும்,” என்று கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் இரண்டு முக்கிய பத்திகைளை வாசித்துக் காட்டினார்.
விசாரணையின் முடிவில் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு திமுக தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Read More

November 27, 2011

செவ்வாய் கிரகத்துக்கு புதிய ஆராய்ச்சி வண்டி
by admin - 0

செய்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி ஆராயக்கூடிய 'ரோவர்' எனப்படும் இயந்திர வண்டி ஒன்றை ஏந்திச் செல்லுகின்ற ராக்கெட்டை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா இன்று விண்ணில் ஏவுகிறது.
செவ்வாய் செல்லவுள்ள கியூரியாஸிட்டி ரோவர் இயந்திரம்

கியூரியாஸிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோவர் இயந்திரத்தை புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கெனர்வல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்று சுமந்து செல்கிறது.
இந்த கியூரியாஸிட்டி ரோவர், நாஸா இதற்கு முன் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பிய ரோவர் எந்திரங்களைவிட மிகப் பெரியது. கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு வண்டி இது.
உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகளை ஆராயவுள்ளது
செவ்வாயில் தரையிரங்றங்கிய பின்னர் அந்தக் கிரகத்தில் முன்பு உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடியதற்கான அறிகுறிகள் உள்ளனவா என்பது உட்பட பல விஷயங்களை ஆராய்வதற்குரிய கருவிகள் இந்த வண்டியில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விண்வெளிப் பயணத்துக்காக நாஸா 250 கோடி டாலர்களை செலவிடுகிறதாம்.
செவ்வாய்க் கிரகத்தில் காணப்படுகின்ற மிக ஆழமான பள்ளங்களில் ஒன்றில் இந்த வண்டியை தரையிறக்கிவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தப் பள்ளத்தின் நடுவே காணப்படுகின்ற 5 கிலோமீட்டர்கள் அளவுக்கு உயரமான ஒரு மலையில் ஏறி ஆராய்ச்சிகள் செய்யும் வகையில் இந்த வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நூறு கோடி கணக்கான வருடங்கள் முன்பு செவ்வாய்க் கிரகத்தில் நீர் ஓடியபோது அந்த மலைக்கு வந்து சேர்ந்த பல பாறைகளை இந்த ரோவர் ஆராயுவுள்ளது.
செவ்வாய்க் கிரகத்தில் நீர் ஓடிய அந்த காலகட்டத்தில் அதில் நுண்ணியிரிகள் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்கள் எதுவும் அந்தப் பாறைகளில் தென்படுகின்றனவா என்பதை இந்த ரோவர் தேடிப்பார்க்கும்.
ஆனால் இந்த ஆராய்ச்சிகளையெல்லாம் செய்வதற்கு ராக்கெட் மூலமாக அனுப்பப்படுகின்ற அந்த ரோவர் செவ்வாய்க் கிரகத்தில் ஒழுங்காக, சேதம் இல்லாமல் தரையிறங்க வேண்டும்.
அவ்வாறு ஒழுங்காக தரையிறங்கிவிட்டால் நெடுங்காலத்துக்கு செவ்வாய் பற்றி பல புதிய அறிவியல் விபரங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
Read More

15 நாட்களில் வெளியேற உத்தரவு -எல்லை அடைப்பு – நேட்டோ படைகள் தவிப்பு
by admin - 0

இஸ்லாமாபாத்: அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 28 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக ஆப்கானிஸ்தான் செல்லும் எல்லையை பாகிஸ்தான் அடைத்துள்ளது. தங்களின் விமான தளத்தில் இருந்த 15 நாட்களுக்குள் அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் பாகிஸ்தான் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் அத்துமீறி நுழைந்து சுட்டுக்கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அமெரிக்கா –பாகிஸ்தான் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மலைபகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ சோதனை சாவடி மீது அமெரிக்க கூட்டுப்படையான“நேட்டோ” ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி தாக்கின. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 ராணுவ மேஜர்கள், ஒரு கேப்டன் உள்பட 28 வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை அடைக்கப்பட்டது

இந்த விவகாரம் குறித்து பிரதமர் யூசுப் ரசாகிலானி தலைமையில் கூடிய அமைச்சரவை அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க தலைமையிலான “நேட்டோ” படைகளுக்கு உணவு கொண்டு செல்லும் பாகிஸ்தானின் தோர்க்காம், சாமன் ஆகிய எல்லைப் பாதைகளை அடைத்து விடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன் படி உடனடியாக 2 எல்லை பகுதிகளும் அடைக்கப்பட்டன. இதனால் நேட்டோ படைகளுக்கு பொருட்களை ஏற்றி சென்ற 40 லாரிகள் பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டன. அவை ஜம்ரூட் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

15 நாட்களில் வெளியேற உத்தரவு

பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைகளை வீசி அழித்து விடுகிறது.

அதற்காக ஷாம்சி விமான படை தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. தற்போது நடந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து இன்னும் 15 நாட்களுக்குள் அமெரிக்க ராணுவம் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பிரதமர் கிலானியை நேரில் வந்து சந்திக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சம்மன் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்கா இரங்கல்

இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் நடத்திய குண்டு வீச்சு சம்பவத்தில் பலியான வீரர்களுக்கு அமெரிக்கா சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன், ராணுவ மந்திரி லியோன் பெனெட்டா ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.
Read More

புத்தளம் - மன்னார் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
by admin - 0

புத்தளம் - மன்னார் வீதியை தற்காலிகமாக மூடிவைக்கத் தீர்மானித்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ராஜாங்கணை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கணை நீர்தேக்கத்தின் 6 வான் கதவுகள் இன்று(26) 4 அடிக்கு திறந்துவிடப்பட்டுள்ளன.

இதனால் எழுவக்குளம் பிரதேத்தில் மன்னார் - புத்தளம் வீதியில் 5 அடி உயரத்திற்கு நீர் நிறைந்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்படவுள்ள போக்குவரத்துத் தடையை தவிர்க்க வீதியை மூடி வைத்துள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது.
Read More

சுல்தான் தி வாரியர் வேறு; கோச்சடையான் வேறு! - கே எஸ் ரவிக்குமார்
by admin - 0

கோச்சடையான் படம் புதிய கதை, புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகிறது. சுல்தான் படத்துக்கும் கோச்சடையானுக்கும் தொடர்பில்லை என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் சுல்தான் - தி வாரியர் என்ற படத்தை தயாரித்து இயக்குவதாக அறிவித்தார் சௌந்தர்யா ரஜினி. அனிமேஷன் தொழில் நுட்பத்தில் அந்தப் படத்தை உருவாக்கினார். இடையில் ரஜினி எந்திரனில் நடிக்கத் தொடங்கியதால், அந்தப் படம் நிறுத்தப்பட்டது.

எந்திரன் வெளியான பிறகு சுல்தான் வரும் என்றார்கள். ஆனால் பல்வேறு தடைகளால் சுல்தான் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்ட நிலையில் ராணா படத்தை அறிவித்தார் ரஜினி.

ராணா தொடங்கிய ஏப்ரல் 29-ம் தேதியன்றே, ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணா படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. இதோ அதோ என பல தேதிகளை பத்திரிகைகள் ஹேஷ்யங்களாக வெளியிட்டு வந்தன. ஆனால் ரஜினி தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்லப்பட வில்லை. வரும் ஜனவரியில் இதுகுறித்து சொல்வதாக கூறியிருந்தனர். ரஜினியும் இதை பின்னர் உறுதி செய்தார்.

இந்த நிலையில், திடீரென ரஜினியின் புதிய படம் கோச்சடையான் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் அனிமேஷனாகக் கூட இல்லாமல், ஜோம்ஸ் கேமரூனின் அவதார், ஸ்பீல்பெர்கின் டின் டின் படங்களைப் போல மோஷன் கேப்சரிங் உத்தியில் படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க 3 டி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் இந்தப் படம் முன்பு கைவிடப்பட்டதாக கூறப்பட்ட சுல்தானா என்று கேட்டபோது, இந்தப் படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பை ஏற்றுள்ள ரவிக்குமார் கூறுகையில், "சுல்தான்தான் ராணா என்று முன்பு சொன்னார்கள். இரண்டு வேறு வேறு என்று முன்பு நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன், சுல்தானுக்கும் கோச்சடையானுக்கும் சம்பந்தமில்லை. கோச்சடையான் முற்றிலும் புதிய கதை, புதிய திரைக்கதை.

ரஜினி சார்தான் இதில் நடிக்கிறார். இதில் ஒரு ஹைடெக் செட்டுக்குள் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி, அவற்றை மோஷன் கேப்சரிங் உத்தியில் மாற்றுகிறோம். அவ்வளவுதான். மற்றபடி, இது முழுக்க முழுக்க ரஜினி படம்.

ராணா ஒரு ஹெவியான படம். அதற்கு முன் இந்தப் படத்தில் நடிப்பது ரஜினிக்கு ஒரு ரிலாக்ஸான அதேநேரம் சுமையற்றதாக இருக்கும். அதனால்தான் இந்த முடிவு. ராணா நிச்சயம் 2012-ல் தொடங்கும்," என்றார்.

Read More