Latest News

November 28, 2011

ரஜினிக்கு ஜோடி அனுஷ்கா
by admin - 0

ராணா படத்துக்கு முன்பாக ரஜினிகாந்த், கோச்சடையான் என்ற படத்தில் நடிக்கிறார். கோச்சடையான், கி.பி.735 ல் வாழ்ந்த பாண்டியன் மன்னர் ஆவார். துணிச்சலும், வீரதீரமும் மிகுந்த அந்த மன்னரின் வரலாற்றை அடிப்படையாக வைத்து, கோச்சடையான் படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

அவதார், டின் டின் ஆகிய ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன், இந்த படம் தயாராகிறது. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார். ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்குகிறார். 

இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க அனுஷ்கா உள்பட சில கதாநாயகிகளிடம் கால்ஷீட் கேட்டு இருப்பதாக டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்தார். 

"கதாநாயகி யார்? என்பது இன்னும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை. யாருடைய கால்ஷீட் சாதகமாக இருக்கிறதோ, அவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்படுவார்´´ என்று அவர் கூறினார். 
« PREV
NEXT »

No comments