கடந்த சில மாதங்களுக்கு பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் அத்துமீறி நுழைந்து சுட்டுக்கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அமெரிக்கா –பாகிஸ்தான் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மலைபகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ சோதனை சாவடி மீது அமெரிக்க கூட்டுப்படையான“நேட்டோ” ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி தாக்கின. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 ராணுவ மேஜர்கள், ஒரு கேப்டன் உள்பட 28 வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை அடைக்கப்பட்டது
இந்த விவகாரம் குறித்து பிரதமர் யூசுப் ரசாகிலானி தலைமையில் கூடிய அமைச்சரவை அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க தலைமையிலான “நேட்டோ” படைகளுக்கு உணவு கொண்டு செல்லும் பாகிஸ்தானின் தோர்க்காம், சாமன் ஆகிய எல்லைப் பாதைகளை அடைத்து விடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன் படி உடனடியாக 2 எல்லை பகுதிகளும் அடைக்கப்பட்டன. இதனால் நேட்டோ படைகளுக்கு பொருட்களை ஏற்றி சென்ற 40 லாரிகள் பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டன. அவை ஜம்ரூட் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
15 நாட்களில் வெளியேற உத்தரவு
பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைகளை வீசி அழித்து விடுகிறது.
அதற்காக ஷாம்சி விமான படை தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. தற்போது நடந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து இன்னும் 15 நாட்களுக்குள் அமெரிக்க ராணுவம் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பிரதமர் கிலானியை நேரில் வந்து சந்திக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சம்மன் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்கா இரங்கல்
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் நடத்திய குண்டு வீச்சு சம்பவத்தில் பலியான வீரர்களுக்கு அமெரிக்கா சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன், ராணுவ மந்திரி லியோன் பெனெட்டா ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.
No comments
Post a Comment