Latest News

November 27, 2011

செவ்வாய் கிரகத்துக்கு புதிய ஆராய்ச்சி வண்டி
by admin - 0

செய்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி ஆராயக்கூடிய 'ரோவர்' எனப்படும் இயந்திர வண்டி ஒன்றை ஏந்திச் செல்லுகின்ற ராக்கெட்டை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா இன்று விண்ணில் ஏவுகிறது.
செவ்வாய் செல்லவுள்ள கியூரியாஸிட்டி ரோவர் இயந்திரம்

கியூரியாஸிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோவர் இயந்திரத்தை புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கெனர்வல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்று சுமந்து செல்கிறது.
இந்த கியூரியாஸிட்டி ரோவர், நாஸா இதற்கு முன் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பிய ரோவர் எந்திரங்களைவிட மிகப் பெரியது. கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு வண்டி இது.
உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகளை ஆராயவுள்ளது
செவ்வாயில் தரையிரங்றங்கிய பின்னர் அந்தக் கிரகத்தில் முன்பு உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடியதற்கான அறிகுறிகள் உள்ளனவா என்பது உட்பட பல விஷயங்களை ஆராய்வதற்குரிய கருவிகள் இந்த வண்டியில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விண்வெளிப் பயணத்துக்காக நாஸா 250 கோடி டாலர்களை செலவிடுகிறதாம்.
செவ்வாய்க் கிரகத்தில் காணப்படுகின்ற மிக ஆழமான பள்ளங்களில் ஒன்றில் இந்த வண்டியை தரையிறக்கிவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தப் பள்ளத்தின் நடுவே காணப்படுகின்ற 5 கிலோமீட்டர்கள் அளவுக்கு உயரமான ஒரு மலையில் ஏறி ஆராய்ச்சிகள் செய்யும் வகையில் இந்த வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நூறு கோடி கணக்கான வருடங்கள் முன்பு செவ்வாய்க் கிரகத்தில் நீர் ஓடியபோது அந்த மலைக்கு வந்து சேர்ந்த பல பாறைகளை இந்த ரோவர் ஆராயுவுள்ளது.
செவ்வாய்க் கிரகத்தில் நீர் ஓடிய அந்த காலகட்டத்தில் அதில் நுண்ணியிரிகள் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்கள் எதுவும் அந்தப் பாறைகளில் தென்படுகின்றனவா என்பதை இந்த ரோவர் தேடிப்பார்க்கும்.
ஆனால் இந்த ஆராய்ச்சிகளையெல்லாம் செய்வதற்கு ராக்கெட் மூலமாக அனுப்பப்படுகின்ற அந்த ரோவர் செவ்வாய்க் கிரகத்தில் ஒழுங்காக, சேதம் இல்லாமல் தரையிறங்க வேண்டும்.
அவ்வாறு ஒழுங்காக தரையிறங்கிவிட்டால் நெடுங்காலத்துக்கு செவ்வாய் பற்றி பல புதிய அறிவியல் விபரங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
« PREV
NEXT »

No comments