Latest News

January 31, 2012

சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா
by admin - 1

டெல்லி: பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறை . மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படும். டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் மிகவும் நவீனமானவை. இந்திய விமானப்படைக்கு இந்த போர் விமானங்கள் மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்பதால் இந்த டீல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த நிதியாண்டில் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று கையெழுத்தாகும். முதல் கட்டமாக 18 விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும். மீதமுள்ள 118 வி்மானங்களை இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து டஸ்ஸால்ட் ஏவியேஷன் தயாரித்து அளிக்கும்.

உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக மாறியுள்ள இதைப் பெற ரஷ்யாவின் மிக்-35, லாக்கீட் மாட்டினின் எப்-16 பால்கன், போயிங்கின் எப் 18 ஹார்னட், ஸ்வீடனின் சாப் கிரிப்பன், ஐரோப்பிய போர் விமானமான டைபூன் மற்றும் டஸ்ஸால்ட் ரபேல் ஆகியவற்றுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரபேல் வென்றுள்ளது.

ஈரோபைட்டர் எனப்படும் டைபூன் போர் விமானத்தை ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த நான்கு நாடுகளின் அரசுகளும் இந்திய விமானப்படையின் ஒப்பந்தத்தைப் பெற கடுமையாக முயன்று வந்தன. அதேசமயம், டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானத்திற்கு பிரான்ஸ் அரசு தீவிர ஆதரவு தெரிவித்து செயல்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி இறுதியாக இந்த இரண்டு நிறுவனங்களை மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தப் பரிசீலனையில் வைத்தது. இதில் டஸ்ஸால்ட் ரபேல் விமானங்களின் விலை டைபூனை விட குறைவாக இருந்ததாலும், அதன் துல்லியம் சிறப்பாக இருந்ததாலும், பிரான்ஸ் நிறுவனத்திற்கு தற்போது அடித்துள்ளது யோகம்.

மிராஜைத் தந்ததும் டஸ்ஸால்ட்தான்

இந்திய வி்மானப் படைக்கும், டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பு புதிதல்ல. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நிறுவனம்தான் மிராஜ் 2000 விமானத்தை இந்தியாவுக்குக் கொடுத்தது. இந்தியாவின் மிகச் சிறந்த போர் விமானங்களில் ஒன்று மிராஜ்தா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேரும்போது இந்திய விமானப்படையின் பலம் பலமடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நிச்சயம் சீனாவுக்கு இது கசப்பான செய்திதான்..!


100 டாலர் ஒருநாளைக்கு உழைக்கலாம் வாருங்கள் முயற்சி செய்து பாருங்கள்




Read More

பசு மாடுகளை உருவாக்க அவுஸ்திரேலிய காளைகள் இலங்கை வருகின்றன
by admin - 0


இலங்கை பால் உற்பத்தி அபிவிருத்திக்கென பசு மாடுகளை உருவாக்க அவுஸ்திரேலியாவில் இருந்து காளை மாடுகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் முதல்கட்டமாக அவுஸ்திரேலியாவின் ஜேர்சி வர்க்க காளைகள் 8 இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பயணிகள் விமானத்தில் முதல் வகுப்பில் வைத்து குறித்த 8 காளைகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இந்த முயற்சி குறித்து தாம் புதுமை அடைவதாக தாஸ்மேனிய ஜேர்சி வல்லுநர் ஜியோக் ஹீஸ்லேவூட் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்படும் காளைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டம் வெற்றியளித்தால் எதிர்காலத்தில் 2000 - 2500 இளம் பசுமாடுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.



Read More

தலைவன் இருக்கிறான்
by admin - 0


அஜித் நடிக்கும் பில்ல 2 முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த‌ நிலையில் அடுத்து அஜித் நடிக்கப்போவது ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில்தான் என்பது அணைவரும் அறிந்த ஒன்றாகும்.

அனால் தற்போது இப்படம் தொடர்பாக மேலும் சில தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தல நடிக்கும் இப்படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்று பெயரிட்டுள்ளனர். அதைவிட தெலுங்கு ஸ்டார் ரவிதேஜா, உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர் இத்திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடிக்கவுள்ளனர்.

தலைவன் இருக்கிறான் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More

மாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு
by admin - 0


இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக நெட்வொர்க் வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப, ஒவ்வொரு நெட்வொர்க் அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால் முகவரி தேவைப்படுகிறது. இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் இன்டர் நெட் சொசைட்டியினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப் பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும்.
IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்திலேயே, இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது. நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஐகதி6 அமைப்பில் 340 அன்டெசிலியன் (undecillion) முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில், 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது இது 2 டு த பவர் ஆப் 128. எண் இரண்டினை, அடுத்தடுத்து, இரண்டால் 128 முறை பெருக்கி வரும் எண் இது. அந்த எண்ணிக்கையில் முகவரிகளை அமைக்க இந்த புதிய அமைப்பு வழி தருகிறது. இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும்.
Read More

நேக்டு ஐ ஸ்டைலில் புதிய பல்சர் 200 என்எஸ்: பஜாஜ் அறிமுகம்
by admin - 0


புதிய 200 சிசி எஞ்சினுடன் பல்சர் 200 என்எஸ் என்ற பெயரில் புத்தம் புதிய 2012ம் ஆண்டு பல்சர் பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பல்சர் வரும் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பஜாஜ் ஆட்டோவின் பல்சர்தான் தனிக்காட்டு ராஜாவாக நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. எத்தனையோ பல புதிய மாடல்கள் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும் பல்சரின் மார்க்கெட்டில் பிற மாடல்களால் சிறு தாக்கத்தைகூட ஏற்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டை மற்றொரு பல்சர் மாடலால் மட்டுமே நிலை நிறுத்த முடியும் என்று கருதிய பஜாஜ் ஆட்டோ நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 200 சிசி எஞ்சினுடன் புதிய பல்சரை வடிவமைத்துள்ளது.

இந்த புதிய பல்சரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது. நேக்டு ஐ ஸ்போர்ட்ஸ் பைக் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய பல்சரை பார்த்தவுடனே அடுத்த தலைமுறைக்கான மாடல் என்று கூற முடிகிறது.

புதிய பல்சரில் 4சிலிண்டர்கள் கொண்ட 199.5 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய எஞ்சின் 23.18 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை கொண்டிருக்கிறது. இந்த புதிய எஞ்சின் வெறும் 3.61 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தை எட்டும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவிக்கிறது.

ரூ.1 லட்சம் விலைக்குள் புதிய பல்சர் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.





Read More

இனி நோ ரீமேக்... ஒரிஜினல்தான்! - ஷங்கர்
by admin - 0


இனி ரீமேக் படங்களை எடுக்கவே மாட்டேன். நண்பன்தான் எனது கடைசி ரீமேக் படம். இனிவரும் படங்களை ஒரிஜினலாகவே எடுப்பேன், என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

ரஜினியின் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு ஷங்கர் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்தை வைத்து இயக்கிய படம் 'நண்பன்'.

பொங்கலுக்கு ரிலீசான இந்தப் படம் நகர்ப்புறங்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு ஓடினாலும், கிராமம் சார்ந்த பகுதிகளில் பெரிதாகப் போகவில்லை. இதன் தெலுங்குப் பதிப்புக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. ஆந்திராவில் பெரும்பாலானோர், இந்தப் படத்தின் ஒரிஜினல் இந்திப் பதிப்பான 3 இடியட்ஸைப் பார்த்துவிட்டதால், இந்த 'சினேகிதடு' தங்களைக் கவரவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார் ஷங்கர்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நண்பன் படம் இந்தியிலிருந்து அப்படியே எந்தக் காட்சியும் மாறாமல் ரீமேக் செய்ப்பட்டது. 3 இடிட்ஸையும் மாற்றக்கூடாது, அதேநேரம் ஒரிஜினல் படத்தில் இருந்த உணர்வும் வேண்டும் என்பதால் நிறைய சவால் இருந்தது எனக்கு.

விஜய்யை அவரது வழக்கமான பாணியிலிருந்து மாற்ற முயற்சித்தேன். '3 இடியட்ஸ்' படத்தை விடவும் பாடல்கள் இதில் நன்றாக இருந்ததாக பாராட்டினார்கள். ரீமேக் படத்தை இயக்கியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. 3 இடியட்ஸ் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி கூட நண்பனை பாராட்டினார்.

ஆனால் இனி ஒருபோதும் ரீமேக் படங்களை இயக்கமாட்டேன். நண்பன்தான் அந்த வகையில் முதலும் கடைசியுமான ரீமேக்.

சொந்தத் தயாரிப்புகள்...

நான் தயாரித்த பல படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். நானே என் கை காலை சுட்டுக்கொண்டேன். அவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன். அடுத்து தயாரிப்பதற்காக நல்ல கதையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

அடுத்த ஹீரோ யார்? விக்ரம், அஜீத், சிரஞ்சீவி?

இவர்களில் யாருமில்லை. எந்தக் கதையையும் முடிவு செய்யவில்லை. எந்த ஹீரோவுடனும் இன்னும் பேசவில்லை. நிறைய கதைகள் மனதில் உள்ளன. அடுத்த படம் ஒரிஜினல் கதையாகவே இருக்கும். என்ன படம் என்பது குறித்து மார்ச்சில் அறிவிப்பேன். இப்போது விடுமுறையை அனுபவிக்கிறேன்," என்றார்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் நீங்களா என்று கேட்ட போது, "இதில் பெரிய சந்தோஷமில்லை. இந்தியாவிலேயே அதிக நம்பிக்கையான இயக்குநர் என்ற பெயர் கிடைத்தால்தான் சந்தோஷம்," என்றார் ஷங்கர்.
Read More

திவாகரன் சேலத்தில் கைது?
by admin - 0

சென்னை: சமீப காலம் வரை அதிமுகவில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தவரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன் இன்று சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனிலிருந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வெளியேற்றப்பட்டதிலிருந்து, தமிழக அரசியல் என்பதே ஜெயலலிதா - சசிகலா பிணக்கு, மோதல், விரட்டல், பணப் பதுக்கல் தொடர்பானதாக மாறிவிட்டது.

சமீப காலமாக சசிகலாவின் உறவினர்கள் யாராவது ஒருவர் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வன்முறை, சட்டமீறல் போன்றவற்றுக்காக போலீசாரிடம் புகார் கொடுப்பதும், அவர்களை விரட்டிக் கொண்டு போலீஸ் படை செல்வதுமான காட்சிகள் தொடர்கின்றன.

சமீபத்தில் சசிகலாவின் மற்றொரு நெருங்கிய உறவினர் ராவணன் பல்வேறு புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் வரை இவர் ஆட்சியிலும் அதிமுகவிலும் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவராகத் திகழ்ந்தவர். விரைவில் அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறப்படுகிறது.

இப்போது அடுத்ததாக, திருவாரூர் மாவட்டம் ரிஷியூர் கீழத்தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியனின் தொகுப்பு வீடு மற்றும் அவரது தந்தை மாணிக்கத்தின் வீடு ஆகியவற்றை இடித்த புகாரின் பேரில் திவாகரனைக் கைது செய்ய போலீஸ் தீவிரமுயற்சி மேற்கொண்டது.

திவாகரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க தமிழகம் மற்றும் அவருக்கு தொடர்புள்ள வேறு நகரங்களிலும் தேடுதல் தீவிரமாக நடந்தது.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சேலத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை போலீசார் உறுதிப்படுத்தவோ, மறுக்கமவோ இல்லை. விவரம் கேட்டால் மழுப்பலாகக் கூறிவருகின்றனர்.

மன்னார்குடி, சிவகங்கை, சேலம் பகுதிகளில் தீவிரமாக அவரைத் தேடி வந்த போலீஸ் படை, இன்று காலை சேலத்தில் திவாகரனைப் பிடித்துவிட்டதாகவும், தகவலை இப்போது ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

திவாகரன் கைது என்பது வெறும் வீடு இடிப்பு தொடர்பானது மட்டுமல்ல என்பதால், முழுவதுமாக தகவல்களைக் கறந்த பிறகே அவரை வெளியே காட்டுவார்கள் என்கிறது காவல்துறை வட்டாரம்!
Read More

இந்தியாவுக்கு எதிராக போராடவும் அனைவரும் தயாராக வேண்டும்
by admin - 0

முல்தான்: நாங்கள் எப்போதும் பாகிஸ்தானை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்றும், அங்கு தான் வாழ விரும்புகிறோம் என்றும், காஷ்மீர் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இதற்கென இந்தியாவுக்கு எதிராக போராடவும் அனைவரும் தயாராக வேண்டும் என்றும், அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் பாகிஸ்தானில் நடந்த மாபெரும் பேரணியில் ஜமாஉத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ் சயீத் பேசினார், முல்தானில் நடந்த பேரணியில் 40 க்கும் மேற்பட்ட மத மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர் . இந்த பேரணியில் மும்பை வழக்கில் தொடர்புடைய ஜாமத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் ஆவேசமாக பேசினார். இந்த பேரணியில் அவர் பேசுகையில் கூறியதாவது: இந்தியாவிற்கு எதிரான ஜம்ஜக்தா எக்ஸ்பிரஸ் ரயில் தாக்குதலில் இருந்து எங்களின் பணி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நல்ல படியாக நடக்கும். சுதந்திர காஷ்மீரைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்கா - பாகிஸ்தான் உறவை மறு ஆய்வு செய்ய வேண்வும். இந்நாட்டினர் இஸ்லாம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்றார். பாகிஸ்தான் மக்கள் இணைந்து உறுதியான நிலைப்பாட்டை எடுதத்தோமானால் அமெரிக்காவின் சதியை உடைத்து எறிய முடியும் என்றார். இந்த பேரணியில் முன்னாள் ஐ.எஸ்.ஐ., ஹமீத் ஹூல், முக்கிய பிரமுகரான ஷேக்ரசீத் அகம்மது, ஜியா உல் ஹக் மகன் இஜாஸ் உல் ஹக் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
Read More

ஜப்பானில் சுருங்கி வருகிறது மக்கள் தொகை
by admin - 0


டோக்கியோ: ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை, 12 கோடியே 77 லட்சமாக தற்போது உள்ளது. மக்கள் தொகை குறித்து, அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின், தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம், நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2060ல், ஜப்பானின் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும். இதே சூழல் தொடர்ந்தால், 2110ல், 4 கோடியே 29 லட்சமாகி விடும். <உ<லகில், ஜப்பானில் தான் சராசரி மனித ஆயுள் அதிகம். 2010 கணக்கெடுப்பின்படி, அங்கு சராசரி மனித ஆயுள், 86.39 ஆண்டுகள். இது, 2060ல், பெண்களைப் பொறுத்தவரை, 90.93 ஆண்டுகளாக அதிகரித்து விடும். ஆண்களின் சராசரி ஆயுள் தற்போதைய, 79.64 ஆண்டுகளில் இருந்து, 84.19 ஆண்டுகளாக அதிகரிக்கும். இந்த மக்கள் தொகை குறைவுக்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக, தற்போதைய ஜப்பானிய இளைய சமுதாயம், தங்களின் வாழ்க்கைக்கும், வேலை வாய்ப்புக்கும், குடும்பத்தை ஒரு பாரமாகக் கருதுவதால், அதில் ஈடுபடுவதில்லை. அதோடு, கடந்தாண்டு ஏற்பட்ட சுனாமியில், 19 ஆயிரம் பேர் பலியாயினர்.சுனாமியால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால், பெரும்பாலானோரின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள், குழந்தைகளைப் பெறுவதை விரும்பவில்லை.
Read More

January 30, 2012

நண்பன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
by admin - 0

நண்பன் திரைப்படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
தென்னிந்திய படங்களில் நடிப்பதோடு பாலிவுட்
படத்திலும்
இலியானா நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் உடன் இலியானா இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நண்பனின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக
கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. நண்பன் படத்தில் நடிக்கும் போதே அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை என்று இலியானா பரபரப்பாக பேசப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக கோடிக்கு குறைவாக இலியானா சம்பளம் வாங்குவதில்லை என்று பட புள்ளிகள் கூறுகிறார்கள். இலியானா படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது கூடவே ஆறு நபர்கள் அடங்கிய
குழு அவருக்கு தேவையானதை செய்து தர காத்திருக்கும். படப்பிடிப்புக்கு இலியானா விமானத்தில் தான் வந்து செல்வார். ஐந்து நட்சத்திர விடுதியில் தான் தங்குவார். அதனால் பெரிய படத்தயாரிப்பாளர் மட்டுமே இலியானாவை நெருங்க முடியும் என்கிறது பட வட்டாரம்.
Read More

செல்போன் பயன்பாட்டுக்கு தடை- போர்க்குற்றமாக அறிவிப்பு!
by admin - 0

வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல்போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வடகொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள வடகொரிய அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களுக்கு நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை எவரும் தகவல் அனுப்பிவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் நாட்டை விட்டு வெளியேறி தென்கொரியாவில் அடைக்கலம் கோருவோருக்கு வெளியில் இருந்து தகவல்கள் கிடைப்பதையும் தடுக்கும் நோக்கத்தில் வடகொரிய அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும் அண்டை நாடான சீனாவுக்குள் அகதிகளாக செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து வடகொரிய அரசு இத்தகைய தடையை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Read More

சினேகா, பிரசன்னா திருமணம்: பம்பரமாய் சுழலும் இருவீட்டார்
by admin - 0

நடிகை சினேகா, பிரசன்னாவின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடக்கிறது.

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இரு வீட்டாரும் கூடி நிச்சயதார்த்தம் நடத்துகின்றனர். திருமணத் தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அநேகமாக வரும் ஏப்ரல் மாதத்தில் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடக்கும். இதற்காக அந்த ஹோட்டல் ஹால் மற்றும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தி. நகரில் உள்ள நகைக் கடை ஒன்றில் திருமண நகைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சினேகாவுக்கு காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுக்கின்றனர். திருமண அழைப்பிதழும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது.

என்ன பிரசன்னா திருமணத்திற்குப் பிறகு சினேகா நடிக்க அனுமதிப்பீங்களா என்று கேட்டதற்கு,

சினேகா திறமையான நடிகை. அவர் திருமணத்திற்கு பிறகு வீட்டில் சும்மா இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் அவர் திருமணத்திற்கு பிறகும் நடிக்கலாம் என்றார்.

கோச்சடையானில் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கும் சினேகா தான் வரும் காட்சிகளை திருமணத்திற்கு முன்பு நடித்துக் கொடுப்பார் என்று தெரிகிறது.
Read More

January 29, 2012

சென்னை அருகே வாயு கசிவினால் பலர் பாதிப்பு
by admin - 0

சென்னை: சென்னையில் உர தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயுவினால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எண்ணூர் அருகே தனியார் உர தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையிலிருந்து இன்று திடீரென விஷ வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி வாசிகள், பீதியடைந்தனர். மேலும் அவர்களுக்கு கண்எரிச்சல் , மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விஷவாயு கசிவு குறித்து உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

ஹன்சிகாவினால் பிரிந்த பிரவுதேவா நயன்தாரா காதால் -நடந்தது என்ன?
by admin - 0

எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே வேகத்தில் அவரை விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா. இதனால் பிரபுதேவாவின் கதி என்ன என்பது திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே பெரும் மர்மக் கதையாகவே இருந்து வருகிறது. ரம்லத்தை அவர் திருமணம் செய்த ஸ்டைலும், அதை மறைத்து பல ஆண்டுகளாக வாழ்ந்த விதமும் அனைவராலும் மறக்க முடியாதது.

ரம்லத்துடன் அவர் கிட்டத்தட்ட ரகசிய வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். இவர்தான் எனது மனைவி என்று அவர் வெகு காலமாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காரணம், பிரபுதேவாவின் குடும்பத்தார் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என்பதால். இதனால் 3 குழந்தைகள் பிறந்து அவர்கள் ஓரளவுக்குப் பெரியவர்களாக ஆன பிறகும் கூட ரகசிய வாழ்ககைதான் வாழ்ந்து வந்தார் பிரபுதேவா.

இந்த நிலையில் பிரபுதேவா-ரம்லத் தம்பதியின் குழந்தை இறந்தபோது பெரும் சோகமடைந்தார் பிரபுதேவா. அந்த சோகத்தில் பங்கெடுக்க வந்தவர்தான் நயனதாரா. அப்போது அவரும் கூட சோகத்தில்தான் இருந்து வந்தார். சிம்புவிடமிருந்து பிரிந்த சோகம். இரண்டு சோகங்களும் ஒன்று கலக்கவே, அது அவர்களுக்கு சுகமாக தெரிந்தது- புதிய காதல் கதை பிறந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர் பிரபு தேவாவும் நயன்தாராவும். இந்தக் காதலுக்காக தனது மனைவியை கடுமையாக பிடிவாதம் பிடித்து விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா. தனது கணவரை தக்க வைக்க எப்படியெல்லாமோ முயற்சித்தார் ரம்லத். ஆனால் பாவம், அந்தப் பெண்ணின் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. அவரும் கூட தனது மனதை தேற்றிக் கொண்டு கணவரை இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்துக் கொடுக்க நேரிட்டு விட்டது. இதனால் விவாகரத்து நடந்தது, பாகப்பிரிவினையும் நடந்து முடிந்தது.

அதன் பிறகு நடந்த அத்தனையுமே படு சுவாரஸ்யமானவை. பிரபுதேவாவை கல்யாணம் செய்வதற்காக மதம் மாறினார் நயனாரா. சினிமாவுக்கும் கூட முழுக்குப் போட்டார். சிம்பு மீண்டும் ஒருமுறை தனது படத்தில் ஆட வேண்டும் என்று வைத்த வேண்டுகோளையும் கூட நிராகரித்தார்.

தமிழில அவர் கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்திருந்தார். அதேபோல தெலுங்கில், ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்தார்.

இத்தனையும் செய்து விட்டு பிரபுதேவாவிடம் கல்யாணம் என்று பேச்சை ஆரம்பித்த போதெல்லாம் அவர் பிடி கொடுக்கவே இல்லை. என்ன என்று ஆராய்ந்து பார்த்தபோதுதான், ரம்லத் மறறும் பிள்ளைகள் மீது இருந்த பாசத்தை பிரபுதேவாவால் விட முடியவில்லை என்பது.

நயனதாராவுக்கு தெரியாமல் ரகசியமாக தனது பிள்ளைகளைப் பார்த்து கொஞ்சி வந்தார் பிரபுதேவா. ரம்லத்தையும் கூட அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் நயனதாராவுக்குத் தெரிய வர ஷாக் ஆகி விட்டார். இதனால் இடையில் பிரபுதேவாவுடன் சண்டை போட்டு சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டார். இதையடுத்து அங்கு ஓடிய பிரபுதேவாவை வீட்டுக்குள்ளேயே நயனதாரா சேர்க்கவில்லை. இதனால் தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும் இதெல்லாம் கப்சா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, திருமண ஏற்பாடுகள் தீவிரமாகநடந்து வருவதாக பிரபுதேவா, நயனதாரா தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவருக்கும் இடையிலான பிளவு மிகப் பெரிதாகி விட்டதாகவும், இனிமேல் சேர முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிளவுக்கு நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் பிரபுதேவா நெருக்கம் காட்டியதும் ஒரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் ரம்லத் மற்றும் பிள்ளைகள் மீதான பாசத்தை பிரபுதேவாவால் கைவிட முடியாமல் தவிப்பதால்தான் நயனதாரா பிரிந்து போய் விட்டதாக கூறப்படுகிறது.

இப்போது மீண்டும் ஒரு சோகப் புள்ளியில் பிரபுதேவாவும், நயனதாராவும் வந்து நிற்கின்றனர். இந்த சோகத்தைப் பங்கு போடப் போவது யாரோ...



நீங்கள் செய்யவேண்டியது இதுதான் இங்கே காணப்படும் படத்தை செருகி உங்கள் பணத்தை பெற்று கொள்ளுங்கள் ஒரு கிளிக் செய்தால் 6 டாலர் கிடைக்கும் அதற்கு உங்களிக்கு ஒரு இணையமோ ப்ளாக் எதுவும் தேவையில்லை ஈமெயில் இருந்தால் போதும். இதில் பதிவு செய்தவுடன் view add என்றதை கிளிக் செய்து அங்கெ தரப்பட்ட இணைப்புக்களை ஒருநிமிடம் வரை விட்டால் போதும் இங்களுக்கு ஆறு டாலர் கிடைக்கும் பின்னர் அடுத்த இணைப்பை கிளிக் செய்யலாம் இப்படியே உங்களுக்கு ஆறு டாலராக அதிகரிக்கும் . ஒருநாளைக்கு உங்களால் 100 டாலர் வரை குறைந்தது உழைக்கலாம் இதை நீங்கள் இணையத்தில் உலா வரும் நேரங்களில் உங்கள் கணக்கை புதுப்பித்து view adds என்பதை கிளிக் பண்ணி புதிய லிங்க் வந்திருக்கா என பார்த்து கிளிக் செய்யுங்கள் ஒருநாளைக்கு 30 டாலர் படி 100 டாலருக்கு மேல் உழைக்கலாம்
Read More

100 டாலர் ஒருநாளைக்கு உழைக்கலாம் வாருங்கள் முயற்சி செய்து பாருங்கள்
by admin - 0

நீங்கள் செய்யவேண்டியது இதுதான் இங்கே காணப்படும் படத்தை செருகி உங்கள் பணத்தை பெற்று கொள்ளுங்கள் ஒரு கிளிக் செய்தால் 6 டாலர் கிடைக்கும் அதற்கு உங்களிக்கு ஒரு இணையமோ ப்ளாக் எதுவும் தேவையில்லை ஈமெயில் இருந்தால் போதும். இதில் பதிவு செய்தவுடன் view add என்றதை கிளிக் செய்து அங்கெ தரப்பட்ட இணைப்புக்களை ஒருநிமிடம் வரை விட்டால் போதும் இங்களுக்கு ஆறு டாலர் கிடைக்கும் பின்னர் அடுத்த இணைப்பை கிளிக் செய்யலாம் இப்படியே உங்களுக்கு ஆறு டாலராக அதிகரிக்கும் . ஒருநாளைக்கு உங்களால் 100 டாலர் வரை குறைந்தது உழைக்கலாம் இதை நீங்கள் இணையத்தில் உலா வரும் நேரங்களில் உங்கள் கணக்கை புதுப்பித்து view adds என்பதை கிளிக் பண்ணி புதிய லிங்க் வந்திருக்கா என பார்த்து கிளிக் செய்யுங்கள் ஒருநாளைக்கு 30 டாலர் படி 100 டாலருக்கு மேல் உழைக்கலாம்
Read More

பாம்பின் தலையை பிடித்து கடித்த ஒரு வயது குழந்தை
by admin - 0

இளம்கன்று பயம் அறியாது என்று கூறுவார்கள்.
அதாவது எதிர்விளைவு பற்றி அறியாமல்
நடந்து கொள்பவர்களை இவ்வாறு குறிப்பிடுவார்கள்.
அது போலவே பாம்பை பிடித்து ஒரு வயது குழந்தை கடித்த
சம்பவம் இஸ்ரேலின் வடக்கே ஜெருசிலேம்
அருகே அரேபியர்கள் அதிகம் வசிக்கும் நகரில் நடந்தது. மேலும் அந்த குழந்தையின் பெயர் இமாத் அலீயன்.
பிறந்து 13 மாதங்களே ஆன இந்த குழந்தைக்கு 6
சிறிய பற்கள் இருக்கின்றன. இந்த குழந்தையும்,
தாயும் வீட்டில் இருந்தபோது ஒரு பாம்பு புகுந்தது. குழந்தையில் அருகில்
சென்று அது சுருண்டு கிடந்தது. பொதுவாக
குழந்தைகள் தங்களின் கையில் பட்ட
பொருட்களை எடுத்து வாயில்
வைத்து கடித்து விடும். அதுபோலவே இந்த
குழந்தையும் எதிர்பாராதவிதமாக கையில் சிக்கிய பாம்பை பிடித்து அதன் தலைப்பகுதியை கடித்தது. இதைக் கண்ட இக்குழந்தையில் அருகில் இருந்த தாய்
இதை பார்த்து பதறிப்போய் அலறினார். இந்த
அபயக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர்
ஓடி வந்து சுமார் 1 அடி நீளமுள்ள
பாம்பை குழந்தையின் பிடியில் இருந்து எடுத்தனர்.
அதன் பின்னரே குழந்தை அலறி அழுதது.
Read More

பிச்சை எடுத்து ஆசிரியைக்கு படிக்க விரும்பும் பெண்!!
by admin - 0

எதிர்காலத்தில்
ஆசிரியையாக
வேண்டும்
என்ற
லட்சியம்
கொண்ட இளம்பெண்,
கேரளாவில்
சுற்றுலா பயணிகளிடம்
பிச்சை எடுத்து வருகிறார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர் நரசிம்மலு. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனம்மா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தம்பதியருக்கு மூன்று மகள்கள். இவர்களில் இருவருக்கு திருமணமாகி விட்டது. மூன்றாவது மகள் சிராவணா, 17. பிளஸ் 2 தேர்வில்
1000த்திற்கு 752 மதிப்பெண் பெற்றுள்ள இவர், ஆசிரியையாக விரும்பினார். ஆனால், கட்டடத் தொழிலாளியான அவரது தந்தை வேலைக்குச் செல்லாமல், நோயாளி மனைவியை கவனித்து வருகிறார். சிராவணாவை படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. இதையடுத்து அவர் அதே பகுதியைச் சேர்ந்த கங்கலுப்பா என்ற வாலிபருடன், கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு பத்து நாட்களுக்கு முன் வந்தார். அங்கு கடற்கரையோரம் ஒரு குடிசையில் தங்கி, அங்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட பலரிடம் பிச்சை எடுத்து வருகிறார். அவர் ஆலப்புழா அரசு மருத்துவமனை முன் பிச்சை எடுக்கும்போது, சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து, அவரை பிடித்துச் சென்று மகளிர் இல்லத்தில் கொண்டு சேர்த்தனர். ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் சரளமாக பேசத் தெரிந்த சிராவணா கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றாலும், முதலில் நர்சிங் படிக்க விரும்பினேன். ஆனால், இடது தோளில் உள்ள பிரச்னை காரணமாக, அக்கல்வியை தவிர்த்து விட்டு, ஆசிரியை கல்வி கற்க விரும்பினேன். ஆனால்,
ஆசிரியை பணி என்பது எளிதானது அல்ல என்பதை உணர்ந்தேன். எனது சொந்த ஊரில் இருந்து கங்கலுப்பா என்பவருடன் இங்கு வந்தேன். அவரும் இங்கு பிச்சை எடுத்து வருகிறார். கடற்கரையோரம் ஆந்திராவைச் சேர்ந்த சிலர் தங்கி உள்ளனர். அவர்களுடன் நானும் தங்கியிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தையுடன் இங்கு வந்துள்ளேன். அப்போது அவர் இங்கு கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்தார். ஒன்பது நாட்கள் பிச்சை எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த
பணத்தை சேகரித்து மேற்கொண்டு படிக்க முயற்சிப்பேன்' என்றார்.
Read More

போலீசுக்கு லஞ்சம் கொடுத்த செய்திதாள்: லண்டனில் 4 பத்திரிகையாளர் கைது
by admin - 0

லண்டன் : பிரிட்டனில் தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டின் கீழ், லண்டன் நியூஸ் இன்டர்நேஷனல் பத்திரிகையின் நிருபர்கள் 4 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். தொலைபேசி ஒட்டு கேட்க போலீசாருக்கு இவர்கள் லஞ்சம் கொடுத்தனர் என்பது குற்றச்சாட்டு .இது தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட, நியூஸ் இன்டர்நேஷனல் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பிரிட்டன் மட்டுமின்றி, உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரூபர்ட் முர்டோக்கின் மூடப்பட்ட, நியூஸ் ஆப் த வேர்ல்டு பத்திரிகையின் தொலைபேசி ஒட்டு கேட்பு, பலரது பதவிகளையும் காவு வாங்கி வருகிறது. இப்பத்திரிகையில் பணியாற்றி வந்த முன்னாள் ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் மற்றும் நியூஸ் இன்டர்நேஷனல் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் என, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டின் கீழ், லண்டன் மாநகர போலீஸ் கமிஷனர் பால் ஸ்டீபன்சன், பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணத்தில், நியூஸ் இன்டர்நேஷனல் மூத்த அதிகாரிகளுடன் மாநகர போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த யூகம் மற்றும் குற்றச்சாட்டின் கீழ் பதவியை ராஜினாமா செய்கிறேன் என, தெரிவித்துள்ளார்.இன்றைய கைதுடன் 14 பேர் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். முன்னதாக இந்த பத்திரிகை ஆபீசில் போலீசார் ரெய்டு நடத்தினர்.
Read More

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பப்படிவ விநியோகம் ஆரம்பம்
by admin - 0

2011/2012 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பப்படிவம் இன்று (29) தொடக்கம் விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2011ம் ஆண்டு உ/த பரீட்சை பெறுபேறு வெளியானவுடன் அதில் பல குளறுபடிகள் காணப்பட்டன.

இதனையடுத்து பரீட்சை விடைத்தாள் மீள்திருத்த சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது 2011ம் வருடம் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 50% மாணவர்கள் விடைத்தாள் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
Read More

கோடையில் கோழிகளுக்கு தண்ணீர் பராமரிப்பு
by admin - 0


கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது.
வணிக அளவில் வளர்க்கப் படும் இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ள முடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது.
கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். இத்துடன் தாது உப்புக்களையும் போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன் கோழிகளுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன.
தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம். இதில் குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம்.
தரமற்ற குடிநீர் கோழிக்கு ரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன.
முட்டையிடும் கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவு தண்ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும், அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவே கோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்த அளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.
Read More

பிரபுதேவா-நயன்தாரா பிரிய முடிவு!!
by admin - 0


விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும்-நயன்தாராவும் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர். நயன்தாரா மீதுள்ள காதலால் தனது முதல்மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு எல்லாம் மாறினார். கடைசியாக தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு விட்டதாகவும், இதனால் இருவரும் பிரிய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரபுதேவா-நயன்தாராவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில், முதல் மனைவி ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தாலும், அவரது குழந்தைகளை விட்டு பிரிய மனமில்லையாம். சமீபத்தில் கூட இதுதொடர்பாக நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே பிரச்னை உருவானது. மேலும் நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நயன்தாராவுக்கு, பிரபுதேவாவின் மீதான கோபம் அதிகரித்துள்ளதாகவும், இதுவே இவர்களது காதலில் விரிசல் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போது இருவரும் அமைதியாக பிரிவது என்று முடிவு எடுத்து, பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நயன்தாராவும், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அவர் இப்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read More

தானே புயல் நிவாரண நிதி… முதல்வர் ஜெ.விடம் ரூ.10 லட்சம் கொடுத்த ரஜினிகாந்த்!
by admin - 0



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.



கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி வீசிய தானே புயல், தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையை சின்னாபின்னமாக்கிவிட்டன.
இந்த புயலுக்கு 48 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூர் மாவட்டம் தற்போதுதான் ஓரளவு மீளத் தொடங்கியிருந்தாலும், சகஜ நிலை திரும்ப இன்னும் நாளாகும் என்கிறார்கள்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ஓரளவு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது. தனியார் அமைப்புகள், கலைஞர்களும் தங்கள் பங்குக்கு உதவி வருகிறார்கள்.
இந்நிலையில் தானே புயல் நிவாரண நிதிக்கு தன் பங்குக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்தார். இதையடுத்து அவர் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
பின்னர் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், ‘என்ன திடீர் சந்திப்பு?’ என்று கேட்டதற்கு, “இதில் முக்கியம் எதுவும் இல்லை, மரியாதை நிமித்தமான சந்திப்புதான். தானே புயல் நிவாரண நிதி கொடுக்க வந்தேன்,” என்றார்.
புதிய படம் குறித்த கேள்விக்கு, “விரைவில் நல்ல செய்தி வரும்” என்றார் ரஜினி. பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
உடல் நலம் தேறிய பிறகு ரஜினிகாந்த் ஜெயலலிதாவை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
Read More

கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி - அணு மின் கழக தலைவர் பானர்ஜி தகவல்
by admin - 0


கூடங்குளத்தில் மூன்றே மாதங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என இந்திய அணு மின் கழக தலைவரும் இந்திய அணு சக்தி துறையின் செயலாளருமான டாக்டர் ஸ்ரீகுமார் பானார்ஜி கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் என்.ஐ பொறியியல் கல்லூரியில் உலக பேரிடர் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு நடைபெற்றது. இதனை இந்திய அணு சக்தி துறையின் செயலாளருமான டாக்டர் ஸ்ரீகுமார் பானார்ஜி தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மூன்று மாதங்களில் உற்பத்தி

கூடங்குளம் அணு மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியபோதே அதன் கட்டிட அமைப்பு, ரியாக்டரின் தரம், மக்களின் வாழ்வாதாரம் இவையெல்லாம் நன்கு பரிசோதித்த பின்னரே பணிகள் துவங்கப்பட்டன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் தோரியம் அதிக அளவில் கிடைக்கிறது. எதிர்காலத்தில இதை கூடங்குளத்தில் பயன்படுத்த முடியும். கூடங்குளம் திட்டம் சுற்று சூழல் பாதுகாப்புக்கு உகந்த திட்டம். இங்கு கதிரியக்கம் குறைந்த அளவில்தான் உள்ளது.

அதிக மின் வெட்டு

காற்றில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் உள்ளூரில் விளக்கு எரிப்பதற்கும், அடிபம்பிற்கும் பயன்படுத்தலாம். பெரிய திட்டங்களுக்கும், மத்திய தொகுப்புக்கு மின்சாரம் வழங்கவும் அணு மின் நிலையம் தேவை. ஒரு நாட்டின் அடிப்படை பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் முக்கிய தேவை. தமிழ்நாட்டில் இன்று மிக அதிக அளவில் மின்வெட்டு இருக்கிறது. அதுவும் மிக குறைந்த அழுத்தமுடைய மின்சாரம் தான் சப்ளை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான 700 மெகா வாட் மின்சாரம் இங்கிருந்து கிடைக்கும் என்றார்.

கூடங்குளத்தில் ஆய்வு

இதன்பிறகு பிற்பகலில் ஸ்ரீகுமார்பானர்ஜி கூடங்குளம் வந்தார். அவருடன் இந்திய அணுசக்தி ஆணைய மனித வள ஆற்றல் பிரிவு உறுப்பினர் அகர்கரும் வந்திருந்தார். பிற்பகல் 3 மணி அளவில் ஸ்ரீகுமார்பானர்ஜி மற்றும் கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி ஆகியோர் அணு உலையை பார்வையிட்டனர்.

அணு உலையின் பராமரிப்பு குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தனர். தற்போதைய நிலையில் போராட்டம் முடிந்தால் எத்தனை நாட்களில் அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்கலாம் என்று அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதன்பின்னர் பானர்ஜி, அகர்கர் இருவரும் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.
Read More

January 28, 2012

முச்சக்கர வண்டியினுள் இருந்து பெண் ஒருவரின் எரிந்த உடல் மீட்பு
by admin - 0


வெல்லம்பிட்டிய கிட்டம்பகுவ பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சடலம் முச்சக்கர வண்டி ஒன்றினுள் இருந்து இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 61 வயதான கிட்டம்பகுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More

விஜயின் துப்பாக்கி போஸ்டர்கள்
by admin - 0








விஜயின் துப்பாக்கி போஸ்டர்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. இணையத்தில் அதிகம் தேடப்படும் ஒரு போஸ்டர் விஜயின் துப்பாக்கி போஸ்டர்ஸ்

Read More

மோசமான கருத்துக்களை சென்சார் செய்ய நாங்க ரெடி! - ட்விட்டர் அதிரடி
by admin - 0


டெல்லி: இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும் நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம் வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என அறிவித்துள்ளது.

இணையதளங்களை இந்தியாவில் சென்சார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதன் மூலம் புதிய பலம் கிடைத்துள்ளது.

இணையதளங்களை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இணையவெளியில் கோடிக்கணக்கான ஆபாச, வன்முறையைத் தூண்டும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைத் தாங்கி வரும் தளங்களுக்கு கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடமளிக்கின்றன. இந்த நிறுவனங்களின் தேடியந்திரங்கள் (search engines) எல்லா வகையான தகவல்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இவற்றை பல நாடுகள் தடை செய்வதில்லை. ஆனால் சில முக்கிய நாடுகளில் தடை அமலில் உள்ளது.

பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் ஆபாச இணையதளங்கள், மத ரீதியான வக்கிரமான கருத்துக்களைப் பரப்பும் தளங்களை தடை செய்துள்ளனர். இங்கெல்லாம் கூகுளைத் தட்டினால் இந்த வகைத் தளங்களைப் பார்க்க முடியாது.

சீனாவில் 90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. இதனை கோல்டன் ஷீல்டு புராஜக்ட் எனும் சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து செயல்படுகிறது கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், இதற்கு கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம் என சீன அரசு எச்சரித்ததால் அடங்கிப் போனது.

அதேபோல, ஜெர்மனி மற்றும் பிரான்சில் நாஜி கருத்துகளைப் பரப்பும் இணைய தளஙக்களை சென்சார் செய்ய கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளின் சட்டங்கள் இதை வலியுறுத்துவதால் அதை கடுமையாக பின்பற்றுகின்றன கூகுள் போன்றவை.

ஆனால் இந்தியாவில் இணைய வெளியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும் இல்லை என்பதைக் காரணம் காட்டி, அனைத்து வகை வக்கிர, அநாகரீகக் கருத்துக்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலகின் வக்கிர குப்பைகளைக் கொட்டும் நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும், இதுவே சமூகக் குற்றங்கள், வரம்பு மீறல்கள் மற்றும் மோசமான கலாச்சாரத்துக்கு வழி வகுத்துவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரி்வித்து வருகின்றனர்.

இந்த நிலை அரசுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, இந்த தளங்கள் அனைத்தையும் சென்சார் செய்ய வேண்டும், மோசமான content-ஐ தடை செய்ய வேண்டும் என வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை, ஏன் இந்த குப்பைகளை இந்தியாவில் தடுக்க முயற்சிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றன.

இணையவெளியை கட்டுப்படுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், இந்தியா ஜனநாயக நாடு என்பதால் இங்கே அதை செய்ய மாட்டோம் என்றும், அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் பம்மாத்து பண்ணியது.

ஆனால் கூகுளுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு சட்டப்படி வலியுறுத்தினால், தேசவிரோத, கலாச்சார விரோத கருத்துக்கள்- படங்களை நீக்கிவிடுகிறோம் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் சீனாவில் நுழைய திட்டம் போடுகிறது. அதனால்தான் உடனடியாக இப்படி இறங்கி வந்துள்ளது. கூகுளும் யாஹூவும் ஏற்கெனவே சீனாவில் உள்ளன, என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூகுளும் யாஹூவும் சீனாவில் ஏற்கெனவே காலூன்றிவிட்டது உண்மைதான். ஆனால் எப்படி? சீனாவின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்று, அனைத்து மோசமான கருத்துக்களையும் நீக்கிய பிறகே வெளியிடுகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

300 மில்லியன் பயனர்களைக் கொண்ட ட்விட்டரின் இந்த அறிவிப்பால், ஆட்சியாளர்கள் இணைய வெளியை கட்டுப்படுத்தும் வகையிலான விசேஷ சட்டத்தை இயற்றுவது அவசியமாகியுள்ளது. இப்படி ஒரு சட்டம் வந்தால், கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தாமாகவே இணையதளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வார்கள்.
Read More

தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி தெரியவில்லை... குஷ்பு விசனம்!
by admin - 0

ஈரோடு: இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழி குறித்துத் தெரியவில்லை என்று தமிழில் புலமை பெற்ற திமுக நடிகை குஷ்பு ஈரோட்டில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் கவலை வெளியிட்டார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில், இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும்.

நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன்.

தமிழ் மொழியை பேசுகிறேன். தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு- நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது.

இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது.

இந்த மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான்.இதனால் உலகம் முழுவதும் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான். தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறான். இந்த பெருமையை நமக்கு பெற்று கொடுத்தவர் கலைஞர் தான் என்றார் அவர்.
Read More

உபவேந்தரை மாற்றுக: கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆரப்பாட்டம்
by admin - 0

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்சமயம் நியமிக்கப்பட்டுள்ள உபவேந்தரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக வேறொரு நிரந்தர உபவேந்தரை நியமிக்குமாறும் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைகளை பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் நேற்று நண்பகல் வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடி கவன ஈர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “வேண்டாம் … வேண்டாம் மீண்டும் பதில் உபவேந்தர் வேண்டும் .. வேண்டும் நிரந்தர உபவேந்தர்”,

“உயர்கல்வி அமைச்சரே கவுன்சில் சிபார்சு செய்த உபவேந்தர் நியமனம் எங்கே?” உட்பட பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு தமிழிலும் சிங்களத்திலும் கோசங்களை எழுப்பினர்.

கிழக்குப் பல்கலைக் கழக கவுன்சில் உறுப்பினரான பேராசியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக என்பவரே உயர்கல்வி அமைச்சரினால் குறித்த பதவிக்கு நியமிக்ப்பட்டுள்ளார்.

தமது இந்த போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட பல்கலைக் கழக மாணவ அமைப்புகளின் பிரதிநிதிகள் “பல்கலைக்கழகத்திற்கு புதிதாக கவுன்சில் நியமிக்கப்பட்டு கவுன்சிலினால் உபவேந்தர் பதவிக்கு மூன்று பேர்கள் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர உபவேந்தர் விரைவில் நியமிக்கப்படவேண்டிய இந்நேரத்தில் பதில் உபவேந்தராக புதியவரொருவர் நியமிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

பதில் உபவேந்தவராக தற்போது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர் கவுன்சில் உறுப்பினராக உள்ளார். அது மட்டுமின்றி நிரந்தர உபவேந்தர் பதவிக்கு கூட இவரது பெயர் சிபாரிசு செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் மீண்டும் பதில் உபவேந்தராக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பொருத்தமற்றதாகவே நாம் கருதுகிறோம்.

மாணவர்களாகிய எங்களது கோரிக்கை என்னவென்றால் உடனடியாக நிரந்தர உபவேந்தர் நியமிக்ப்படவேண்டும். அதுவரை தற்போது பதில் உபவேந்தர் பதவியிலுள்ள கலாநிதி கே.பிரேம்குமார் அப்பதவியில் இருக்க வேண்டும்” என மாணவர் பிரதிநிகள் பலரும் தெரிவித்தனர்.

தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அல்லது சாதகமான முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


Read More

இருதய நோயாளர்கள் பயன்படுத்தும் மருந்துக்கு தற்காலிக தடை
by admin - 0


இருதய நோயாளர்கள் பயன்படுத்தும் பாக்கிஸ்தான் உற்பத்தியான 20 மில்லிகிராம் isosorbide mononitrate மருந்தினை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Read More

January 27, 2012

இரத்தம் இல்லாமல் பிறந்து உயிருடன் மீண்ட அதிசய குழந்தை
by admin - 0


இறப்பிலிருந்து மீண்ட அதிசய குழந்தை பற்றிய செய்தியே இது... Oliver Morgan என்ற இந்தக் குழந்தை பிறக்கும் போது அதன் உடலில் இரத்தம் எதுவும் இல்லை என்ற மருத்துவ அதிசய உண்மை தெரிய வந்துள்ளது.

குழந்தை பிறக்கும் போது வெளிறிய நிறத்தில் தான் இருந்தது.

குழந்தை பிறந்த போது முதல் 25 நிமிடங்களுக்குள் இருதயத் துடிப்பைக் கண்டறிய முடியவில்லை என்று மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக குழந்தைக்கு மென்மையான இருதய மசாஜ் உடன் ஒட்சிசன் சுவாசமும் வழங்கப்பட்டு உயிரைக்காக்கும் வழிமுறையாக தொப்புள் கொடி மூலம் இரத்தமும் ஏற்றப்பட்டது.

குழந்தையைப் பாதுகாக்க மருத்துவர்கள் கனமான இருதயத்துடனும் கண்ணீருடனும் போராடினர்.

Oliver தற்சமயம் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கிறான். இப்பொழுது குழந்தைக்கு 15 மாதங்கள் ஆகின்றது.

அம்மாவான Katy உம் அப்பாவான Jeff உம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

குழந்தை உயிருடன் தப்பித்திருப்பது பற்றி 36 வயதான தாயாரான Katy கருத்துத் தெரிவிக்கையில்,

Oliver பிறந்த கதையைச் சொல்ல இப்பொழுதும் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ரத்தமே இல்லாமல் தான் பிறந்தான்.

ஆனால் தற்போது என் முன் சிரித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறான்.

மருத்துவர்களால் மீளக் கொடுக்கப்பட்ட அற்புத பரிசாகவே நான் அவனைப் பார்க்கிறேன்.

அவன் என்னைத் திரும்பிப் பார்க்கையில் நம்புவதற்கு கடினமாக உள்ளது என்றார்.


Read More

இலங்கை உற்பத்திகளுக்கு தமிழ்நாட்டில் வந்தது தடை
by admin - 0


இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை உடன் அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். "இலங்கைப் பொருள் களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சக்தி சரவணன் என்ற மூத்த அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். தமிழக அரசு ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இப்போது இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரச கூட்டுறவுச் சங்கங்களே கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கையில் உற்பத்தியாகும் பிஸ்கட், சொக்கலேட், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றுக்கே இந்தத் தடை விதிக்கப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
Read More