நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இரு வீட்டாரும் கூடி நிச்சயதார்த்தம் நடத்துகின்றனர். திருமணத் தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அநேகமாக வரும் ஏப்ரல் மாதத்தில் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடக்கும். இதற்காக அந்த ஹோட்டல் ஹால் மற்றும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தி. நகரில் உள்ள நகைக் கடை ஒன்றில் திருமண நகைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சினேகாவுக்கு காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுக்கின்றனர். திருமண அழைப்பிதழும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது.
என்ன பிரசன்னா திருமணத்திற்குப் பிறகு சினேகா நடிக்க அனுமதிப்பீங்களா என்று கேட்டதற்கு,
சினேகா திறமையான நடிகை. அவர் திருமணத்திற்கு பிறகு வீட்டில் சும்மா இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் அவர் திருமணத்திற்கு பிறகும் நடிக்கலாம் என்றார்.
கோச்சடையானில் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கும் சினேகா தான் வரும் காட்சிகளை திருமணத்திற்கு முன்பு நடித்துக் கொடுப்பார் என்று தெரிகிறது.
No comments
Post a Comment