Latest News

January 31, 2012

நேக்டு ஐ ஸ்டைலில் புதிய பல்சர் 200 என்எஸ்: பஜாஜ் அறிமுகம்
by admin - 0


புதிய 200 சிசி எஞ்சினுடன் பல்சர் 200 என்எஸ் என்ற பெயரில் புத்தம் புதிய 2012ம் ஆண்டு பல்சர் பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பல்சர் வரும் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் பஜாஜ் ஆட்டோவின் பல்சர்தான் தனிக்காட்டு ராஜாவாக நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. எத்தனையோ பல புதிய மாடல்கள் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும் பல்சரின் மார்க்கெட்டில் பிற மாடல்களால் சிறு தாக்கத்தைகூட ஏற்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டை மற்றொரு பல்சர் மாடலால் மட்டுமே நிலை நிறுத்த முடியும் என்று கருதிய பஜாஜ் ஆட்டோ நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 200 சிசி எஞ்சினுடன் புதிய பல்சரை வடிவமைத்துள்ளது.

இந்த புதிய பல்சரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது. நேக்டு ஐ ஸ்போர்ட்ஸ் பைக் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய பல்சரை பார்த்தவுடனே அடுத்த தலைமுறைக்கான மாடல் என்று கூற முடிகிறது.

புதிய பல்சரில் 4சிலிண்டர்கள் கொண்ட 199.5 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய எஞ்சின் 23.18 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை கொண்டிருக்கிறது. இந்த புதிய எஞ்சின் வெறும் 3.61 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தை எட்டும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவிக்கிறது.

ரூ.1 லட்சம் விலைக்குள் புதிய பல்சர் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.





« PREV
NEXT »

No comments