Latest News

September 29, 2011

பார்த்தீனியம் நச்சுக்களை மேலாண்மை
by admin - 0


பார்த்தீனியம் விதைகள் முளைக்கும் முன்னும் முளைத்த செடிகள் பூ பூத்து விதை உண்டாவதற்கு முன்னும் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதனால் விதைகள் முற்றி மேற்கொண்டு இச்செடி பரவுவது தடுக்கப்படுகிறது. பார்த்தீனியம் விதைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்தும் முறை பார்த்தீனியம் நச்சுக்களை விதைகள் முளைப்பதை தடுக்க மழை காலத்தில் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்பொழுது அட்ராடாப் களைக்கொல்லியை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் சுமார் 625 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானால் நிலத்தின் மேல் சீராக தெளிக்க வேண்டும்.

பார்த்தீனியம் செடிகள் பூக்கும் முன் கட்டுப்படுத்தும் முறை

செடிகளை அகற்றி எரித்தல்: பூப்பதற்கு முன் கையுறை அணிந்து அல்லது ஏதாவது கருவியை உபயோகித்து செடிகளை வேருடன் அகற்றி எரிப்பதனால் விதை உண்டாகி பரவுவது தடுக்கப்படுகிறது.

களைக்கொல்லி உபயோகம்: ஒரு லிட்டர் நீரில் 200 கிராம் சமையல் உப்பு (20 சதம்) மற்றும் 2 மில்லி டீபால் அல்லது சோப்பு திரவம் கலந்து நல்ல வெயில் நேரத்தில் செடிகள் முழுவதும் நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
* ஒரு லிட்டர் நீருக்கு 2,4-டி (பெர்னாக்சோன்) 10 கிராம் அல்லது கிளைபோசேட் (ரவுண்டப்) 15 மில்லியுடன் அம்மோனியம் சல்பேட் 20 கிராம் + சோப்பு திரவம் 2 மி.லி. அல்லது மெட்ரிபுசின் (சென்கார்) 4 கிராம் ஆகிய களைக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை கலந்து, வளர்ந்த பார்த்தீனியம் செடிகள் முழுவதும் நனையும்படி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

உயிரியல் முறை கட்டுப்பாடு

* தரிசு நிலங்களில் அடர் ஆவாரை மற்றும் துத்தி வகைச் செடிகளை போட்டு, செடிகளாக வளரச் செய்து பார்த்தீனியத்தின் வளர்ச்சியைக் குறைக்கலாம். * மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளரும் தாவர இனங்களை வளர ஊக்குவிக்கலாம்.
* பார்த்தீனியம் செடியை தின்று அழிக்கக்கூடிய சைக்கோகிராமா பைக்கலரேட்டா என்ற மெக்சிகன் வண்டுகளை பரவச் செய்தும் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்தலாம்.

பார்த்தீனியம் செடிகள் பூத்தபின் கட்டுப்படுத்தும் முறை

* செடிகள் பூத்த பின்னும் மேற்கூறிய களைக் கொல்லிகளைத் தெளிக்கலாம். ஆனால் செடிகள் முழுவதும் அழியாது.
* இச்சூழ்நிலையில் பூத்த செடிகளை கையுறை அணிந்து அல்லது கருவிகள் மூலம் விதைகள் காற்றில் பரவும் முன் அகற்றி எரித்தல் வேண்டும்.

பார்த்தீனியத்தை உரமாக்குதல்:

பார்த்தீனியச் செடிகளை களைக்கொல்லி கொண்டு அழிக்காத தருணத்தில் அவற்றை வேருடன் அகற்றி நன்கு நறுக்கி, குழியில் போட்டு மக்கவைத்து உரமாக பயன்படுத்தலாம்.

Read More

September 28, 2011

எதிர்ப்பை மீறி வெளியாகும் 'சத்யானந்தா'
by admin - 0

போலிச்சாமியார்கள் பற்றிய திரைப்படம் ஒன்று சத்யானந்தா என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி இந்தப் படத்தை திரையிடுகிறார்கள்.

படத்தின் டப்பிங், ரீ ரிக்கார்டிங் போன்ற பணிகள் முடிந்துள்ளது. தற்போது தணிக்கை குழுவுக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சத்யானந்தா படத்தை ரிலீஸ் செய்வதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்துக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், அத்துடன் ரூ. 3 கோடி கேட்டு தனியாக மானநஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இதற்கு படக்குழு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் மதன்படேல் கூறுகையில், "சத்யானந்தா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தணிக்கை குழுவுக்கும் அனுப்பி விட்டோம். தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். நித்யானந்தா இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பது வியப்பாக உள்ளது. படத்தை பார்க்காமலே அவர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை. உலகம் முழுவதும் போலி சாமியார்கள் உள்ளனர். அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதே இப்படத்தின் நோக்கம்.

இந்த படம் ஒரு கற்பனை கதை. ஆன்மீகவாதிகள் போர்வையில் உள்ள போலிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறை யோடு இப்படத்தை எடுத்துள்ளோம். நித்யானந்தா ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார். பணத்தை கொடுத்தால் ரிலீசுக்கு சம்மதிப்பாரா?," என்றார்.

இப்படத்தில் சத்யானந்தாவாக ரவி சேட்டன் நடித்துள்ளார். இத்தாலி நடிகை அனுகி, நேகா மிஸ்ரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
Read More

தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேலாயுதம்!
by admin - 0

விஜய் நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கியுள்ள வேலாயுதம் படம் வரும் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அய்ங்கரன் நிறுவனம் வெளிநாடுகளில் வெளியிடுகிறது. தமிழகத்தில் ஆஸ்கர் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

வெளிநாடுகளில் மட்டும் 400 திரையரங்குகள் வரை இந்தப் படத்துக்கு புக் செய்யப்பட்டுள்ளன. இந்த தியேட்டர்கள் விவரங்களையும் அய்ங்கரன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஹீரோயின்களாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார்.

ரஜினியின் எந்திரனைப் போல பெரிய ஓபனிங் வேண்டும் என்பதற்காக தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். அதேபோல தமிழகத்தில் 1000 அரங்குகள் வரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
Read More

September 15, 2011

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் முடிவுகள் நிதுஷிகா 192 புள்ளிகள் பெற்று யாழில் முதலிடம்
by admin - 0

கடந்த மாதம் நடைபெற்ற தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்று காலை முதல் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலைகளின் பெறுபேறுகள் இன்று முதல் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கின்றன. யாழ்.மாவட்ட பாடசாலைகளின் பெறுபேறுகள் பெரும்பாலும் நாளை பிற்பகலில் பாடசாலைகளுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளநிலையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி யாழ்ப்பாணம் 151 கிளிநொச்சி 147 மன்னார்150 வவுனியா 143 முல்லைத்தீவு 148 மட்டக்களப்பு மற்றும் அம்பாறை 151 திருகோணமலை152 என்ற அடிப்படையி;ல் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன
கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை காலி குருநாகல்மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் வெட்டு;ப்புள்ளிகள் 153 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பதுளை நுவரெலிய அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் 149 புள்ளிகளாகும்
புத்தளம் 150 அநுராதப்புரம் 148 பொலனறுவை 150 மொனராகலை 145 ரத்தினபுரி 148 கேகாலை 153 புள்ளிகள் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


ஐந்தாம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளை பெற்று யாழ் புனித ஜோன் பெஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா என்ற மாணவி யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இது தொடர்பில்  நிதுஷிகா தெரிவிக்கையில், தான் பரீட்சையில் 190க்கு அதிகமாக புள்ளிகள் எடுப்பேன் என எண்ணிய போதும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறவினர்களும் தனது கல்விக்கு உந்துகோலாக அமைந்ததாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்காலத்தில் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Read More

September 14, 2011

இந்திய பதுங்கு குழிகளை சேதப்படுத்திய சீனா
by admin - 0

இந்திய எல்லைக்குள் சீன ராணுவப்படையினர் அத்துமீறி நுழைந்து இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமினை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இந்திய-திபெத் எல்லை கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள லே பகுதியிலிருந்து 300 கி‌.மீ தொலைவில் உள்ள நையோபா செக்டரர் எல்லைப்பகுதி இந்திய-திபெத் மற்றும் சீன எல்லைப்பகுதியாகும்.
இந்த எல்லையில் சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும் இங்குள்ள மிகவும் பழமையான இந்திய எல்லையை கண்காணிக்கும் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளன. இவற்றினை சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வடக்குப்பகுதியின் உதாம்பூரைச் சேர்ந்த ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கூறியதாவது: நேற்று முன்தினம் இதே போன்று லே பகுதியின் சூமோர் என்ற இடத்தில் சீன ஹெலிகாப்டர் அனுமதியின்றி தரையிறங்கியது.
சீனாவின் இந்த அத்துமீறிய செயல் இரண்டாவது முறையாகும். இதே போன்று கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் மெளன்ட் கயாக பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளது என்றார்.
Read More

ரஜினி கையால் அடி வாங்க வேண்டும்! - அஜீத்தின் ஆசை
by admin - 0

தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியார் ரஜினி... ஒரு படத்திலாவது ரஜினிக்கு வில்லனாகி அவர் கையால் அடிவாங்க ஆசை! - அஜீத்

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.

அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:

எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.

சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.

ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"


Read More

September 12, 2011

செவ்வாயில் மரக்கறி தோட்டம்
by admin - 0


அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களுடன் கூடிய விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
 
2030 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை செயற்படுத்த நாசா எதிர்பார்த்துள்ளது.
 
vegetable
செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த 5 வருட ஆராய்ச்சி பணியில் ஏறக்குறைய ஒருவருக்கு 3 ஆயிரத்து 175 கிலோ கிராம் உணவு தேவைப்படும்.
 
இந்த நிலையில், அவர்களுக்கு தொடர்ந்து உணவு அனுப்புவது  தமது திட்டப்பணிகளில் சவாலான ஒரு விடயமாகும்
 
எனவே, உணவுக்கு தேவையான கேரட், தக்காளி உட்பட்ட 10 வகையான செடிகள் கொண்ட மரக்கறி தோட்டம் ஒன்றை செவ்வாய் கிரக சூழலுக்கேற்ப அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
விண்கலத்தில் இதனை வளர்க்க குறைந்த இடமே போதுமானதாக இருக்கும்
 
அத்துடன் ஆரோக்கியமான உணவினை பெற்றுக்கொள்வதன் பொருட்டு செவ்வாய் கிரகத்திலேயே தோட்டத்தை அமைக்கவும் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Read More

தெற்காசியர் மத்தியில் நீரிழிவை தூண்டுப் 6 புதிய மரபணுக்கள்
by admin - 0

தெற்காசியர்கள் மத்தியில் நீரிழிவைத் தூண்டும் 6 புதிய மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மரபணுக்களே தெற்காசியர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் நீரிழிவு ஏற்படுவதற்கு பொறுப்பானவையாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான், மொரீசியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களுடன் இணைந்து பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
5கோடி 50 இலட்சம் தெற்காசியர் நீரிழிவால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்தடவையாக இந்த ஆய்வு தெற்காசியாவில் இடம்பெற்றுள்ளது.
நீரிழிவுடன் தொடர்பு பட்டவையென இதுவரை 42 மரபணுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும் ஐரோப்பியராலேயே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆரோக்கியமற்ற உணவு, பருத்த தொந்தி, உடற்பயிற்சியின்மை என்பன நீரிழிவுக்கான ஆபத்தை ஏற்படுத்துகின்ற போதிலும் நீரிழிவை ஏற்படுத்தும் மரபணுக்கள் தெற்காசியர்களிடம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நடுத்தரவயதில் அல்லது 55 வயதுக்கு பின் ஐரோப்பியருக்கு நீரிழிவு ஏற்படுகிறது. ஆனால் தெற்காசியருக்கு 40 வயதில் இந்த நோய் ஏற்படுவதற்கு வேறு காரணங்கள் இல்லை என்று சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவ நிபுணர் வி.மோகன் தெரிவித்துள்ளார். அவரும் இந்த ஆய்வில் பங்கேற்றிருந்தார்.
தெற்காசியர்களில் மரபணுவுடன் தொடர்புபட்டதான ஆய்தணி சர்வதேச விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தனர். அவர்களின் கண்டுபிடிப்புகள் "நேச்சர் ஜெனற்றிக்ஸ்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர் ஜோன், சி.சேம்பர்ஸ், ஜஸ்பால் சொன்னர் ஆகியோருடன் 42 பேர் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.
தமது ஆய்வுகள் நீரிழிவைத் தடுப்பதற்கான சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்று சேம்பர்ஸ் கூறியுள்ளார்.
6 மரபணுக்களின் பிரச்சன்னமான அசாதாரணமான விதத்தில் நீழிவு நோயாளர்களிடம் அதிகளவுக்கு உள்ளமை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Read More

விண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை
by admin - 0


மைக்ரோசாப்ட் தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின், பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான போது, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடுதான் உச்சத்தில் இருந்தது. லேப்டாப் கம்ப்யூட்டர்கள் சாதரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத விலையில் அனைத்து நாடுகளிலும் இருந்தன. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நுகர்வோர் தொழில் நுட்ப ரீதியில் சிறப்பான இயக்கத்தினை அனைத்து சாதனங்களிலும் எதிர்பார்க் கின்றனர். ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள வசதிகளை பெர்சனல் கம்ப்யூட்டரிலும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையிலான எதிர்பார்ப்புகளைச் சந்திக்கும் வகையில், விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, புதிய தொடுதிரை தொழில் நுட்பம் கொண்டதாகவும், வழக்கமான பயன்பாடும் இணைந்ததாகவும் விண்டோஸ் 8 அமையும். இந்த சிஸ்டம் ஏ.ஆர்.எம். மற்றும் இன்டெல் சிப்கள் என இரண்டு வகை ப்ராசசர்களில் இயங்கும். தற்போது மைக்ரோசாப்ட் தரும் ஆன்லைன் வசதிகளான ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் 365 மற்றும் இலவச ஆபீஸ் இணைய அப்ளிகேஷன்களை ஒருங்கிணைப்பதாக அமையும். மற்ற சிறப்பு அம்சங்களாக, யு.எஸ்.பி.3 சப்போர்ட் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பினைக் கூறலாம். 
தொடுதிரை வசதிக்கென பெரிய அளவிலான பேனல்களை விண்டோஸ் 8 திரையில் காட்டும். இதனை மவுஸ் கொண்டும் இயக்கலாம். வழக்கமான ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் மற்றும் டெஸ்க்டாப் வகையறாவும் இதில் கிடைக்கும். தொடுதிரை தருவதன் மூலம் இப்போது வரும் டேப்ளட் பிசிக்களுடன், விண்டோஸ் போட்டியிட முடியும். மேலும், தன்னுடன் ஒப்பந்தம் கொண்டுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப்பினை வழங்கியுள்ளது. அவர்களும் தொடுதிரை அமைப்பில் இயங்கக் கூடிய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன. 
விண்டோஸ் எக்ஸ்புளோரரின் செயல் பாட்டில் அதிகக் கவனம் விண்டோஸ் 8 தொகுப்பில் காட்டப்படுகிறது. காப்பி, மூவ், ரீ நேம், டெலீட் எனப் பல செயல்பாடுகளை நாம் அடிக்கடி இதில் மேற்கொள்கிறோம். இந்த ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விண்டோவினை இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தந்து வந்தது. விண்டோஸ் 8 தொகுப்பில், இவை அனைத்தும் ஒரே விண்டோவில் இருக்கும். இதன் மூலம் பெரிய பைல்கள், குறிப்பாக வீடீயோ மற்றும் போட்டோ பைல்களை எளிதாக ஒரே இடத்தில் கையாள முடியும். பைல்கள் காப்பி செய்யப்படும் போதும், நகர்த்தப்படும் போதும், எவ்வளவு பிட் டேட்டா மாற்றப்பட்டுள்ளது என வரைபடம் மூலம் தெரிய வரும். 
விண்டோஸ் விஸ்டாவில் தரப்பட்ட ரிப்பன் இன்டர்பேஸ் இதில் தரப்படுகிறது. இதன் மூலம் பைல்களைக் கையாள்வது எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. எக்ஸ்புளோரர் விண்டோவில் மூன்று டேப்கள் முக்கியமானதாக இடம் பெறும். அவை ஹோம், ஷேர் மற்றும் வியூ (Home, Share and View) ஆகும். இடது புறம் பைல் மெனு கிடைக்கும். ஹோம் டேப்பில், விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் மேற்கொள்ளப்படும் 84% செயல்களுக்கான கட்டளைகள் கிடைக்கும். ஒரு பைலை அதன் டைரக்டரிக்கான வழியுடன் காப்பி செய்வதற்கு “Copy path” என்னும் கட்டளை இதில் தரப்படுகிறது. இந்த கட்டளையுடன் பைல் ஒன்றை இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோவில் காப்பி செய்யப்படுகையில், பைலை அணுகுவது எளிதாகிறது.
ஷேர் என்னும் டேப்பின் கீழ் இமெயில் மற்றும் ஸிப் கட்டளைகள் கிடைக்கின்றன. பர்ன் டு டிஸ்க் (Burn to Disc), பிரிண்ட் மற்றும் பேக்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன. 
புதிய பைல் மெனு மூலம் கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கிறது. இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோ மூலம், ஹார்ட் ட்ரைவினை பார்மட், ஆப்டிமைஸ், கிளீன் அப் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். பிளாஷ் ட்ரைவ் ஒன்றை வெளியில் எடுக்க, ஆட்டோ பிளே இயக்க இங்கு கட்டளையிடலாம். 
இன்னும் தொடர்ந்து பல புதிய கட்டளைகளையும் வசதிகளையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read More

September 11, 2011

விவசாயி கண்டு பிடித்த சின்னார் 20 - புதிய ரக நெல்
by admin - 0

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் லேட். சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல்ரகத்தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுஉடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சாயாத நெல் வகையைச் சேர்ந்தது.
புதிய நெல் ரகம் உருவான வரலாறு: 7 வருடங்களுக்கு முன்னர் புஷ்பம் என்ற விவசாயி முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியனில் எடிடி 36 என்ற நெல் ரக விதையை வாங்கிக் கொணர்ந்து புரட்டாசி மாதம் வயலில் விதைத்தார். நெல் முளைத்து பயிரானது. அச்சமயம் நெல்லில் களை எடுக்க முற்பட்டார். ஒரு பயிர் மட்டும் கத்தரி ஊதா கலரில் களைச்செடி போன்று தென்பட்டது. இது களைச்செடி என்று பிடுங்க முற்பட்ட சமயம் நெல்மணி போன்ற கதிரும் தென்பட்டது. இந்த நெல் பயிரை பார்வையிட்ட சின்னார் என்ற பக்கத்து தோட்ட விவசாயி இதனை பிடுங்கிச்சென்று அவருடைய வயலில் நட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தார். ஆரம்பத்தில் கத்தரி கலரில் இருந்த பயிரானது ரோஜா நிறத்தில் மாறியது. நெல்லின் மணிகள் சற்று நீளம் அதிகம் கொண்டதாக இருந்தன. இதன் மணிகளை தனியாக அறுவடை செய்து அடுத்த பட்டத்தில் விதைத்தார். இவ்வாறாக பிரித்து எடுத்த நெல்லை "நாதன்' என்பவர் ஆலோசனைப்படி தன்னுடைய பெயரிலேயே சின்னார் 20 என்று பெயரிட்டார். இதில் 20 என்பது 2000/2004 வருடத்தைக் குறிக்கும். அதாவது 20ம் நூற்றாண்டு என்பதைக்குறிக்க இவ்வாறு பெயரிட்டார். இந்த நெல்லின் நிறத்தையும் நீண்ட மணிகளையும் பார்த்த உள்ளூர் விவசாயிகள் அதிசயப்பட்டு தாங்களும் பயிரிடமுற்பட்டனர். இவ்வூரில் புஷ்பம் என்பவரும் மற்ற விவசாயிகளும் இந்த நெல்லை தங்கள் வயலில் விளைவித்து நல்ல பலன் கண்டனர். இதனால் இந்த ரகம் கீழமானங்கரை மற்றும் பக்கத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகளால் சுமார் 150 ஏக்கர் நிலங்களுக்கும் மேலாக பயிர் செய்யப்படுகிறது.
சின்னார் நெல் ரகத்தின் சிறப்பு தன்மைகள்: நெற்பயிர் வளரும் சமயம் கத்தரி ஊதா கலரில் காணப்படும். அறுவடை செய்யும் போது ரோஜா கலரில் மாறிவிடும். நெல்லின் உயரம் சுமார் 88 செ.மீ. கதிரின் நீளம் 22 செ.மீ. ஒரு பயிரில் 19-30 தூர்கள் உள்ளன. இதில் கதிர்பிடிக்கும் தூர்கள் 11 வரை உள்ளன. இது 115 நாட்களில் அறுவடை ஆகும். ஒரு கதிரில் 85-100 நெல்மணிகள் காணப்படும். 1000 நெல்மணிகளின் எடை 25 கிராம் ஆகும். இந்த நெல் ரகம் சாயாது. ஏக்கருக்கு 40-44 மூடைகள் விளைச்சல் கிடைக்கும்.
இந்த நெல் ரகம் பரவி உள்ள ஊர்கள்: இந்த நெல்லின் சிறப்பம்சங்களை கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் உள்ள விவசாயிகள் இந்த நெல் ரகத்தை விதைக்காக கூடுதல் விலைகொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இந்த நெல் கீழ்க்கண்ட ஊர்களில் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன.
1. தேரூர்வெளி, 2. கீழப்பானூர், 3. உத்தரகோசமங்கை, 4. சாத்தான் குளம், 5. கமுதி, 6. பொதிகுளம், 7. முதுகுளத்தூர், 8. குமாரகுறிஞ்சி, 9. பேரையூர். இந்தரகம் இப்போது சிவகங்கை மாவட்டத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நெல் ரகத்தை மூடைக்கு ரூ.100 அதிகம் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். இதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தன்மை குறைவு என்று கூறுகின்றனர்
Read More

செப். 11 நினைவு நாளில் யு.எஸ்.ஸுக்கு அதிர்ச்சி அளித்த தலிபான்கள்- தாக்குதலில் 50 வீரர்கள் படுகாயமடைந்தனர்
by admin - 0

 செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலை உலகெங்கும் உள்ள அமெரிக்கர்கள் நினைவு கூறும் இந்தநாளில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 50 பேர் உள்பட நேட்டோ படையினர் 90 பேர் படுகாயமடைந்தனர்.

நேட்டோ படையின் ராணுவச் சாவடி மீது லாரி மூலம் தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 90 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 50 பேர் அமெரிக்கர்கள்.

இதை நாங்கள்தான் நடத்தினோம் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். செப்டமபர் 11 நினைவு நாளையொட்டி அமெரிக்காவே சோகமாக உள்ள நேரத்தில், தலிபான்கள் நடத்தியுள்ள தாக்குதலில் பெருமளவிலான அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

தாயான பசு அதிசய படங்கள் வீடியோ(மனிதமற்ற மனிதர்களுக்கு மனிதத்தை புகட்டிய மாடு )
by admin - 0

தாய் இல்லாமல் தாத்தாவுடன் வாழ்ந்த 20 மாத பையன் மாட்டு கன்று பால் குடிப்பதை பார்த்து குடிக்க பழகியதாக அவனுடைய தாத்த தெரிவித்தார் ..தாயன்பு கொண்ட பசுவும் அதற்கு சம்மதித்தது
.


Read More

9/11 தாக்குதல்: அமெரிக்க அரசு நடத்தியது ?
by admin - 0

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 7 பேரில் ஒருவர் 3 ஆயிரம் பேர் பலியான 9/11 தீவிரவாத தாக்குதலை அமெரிக்காவே தான் நடத்தியது என்று கருதுவதாக ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

இந்த கருத்து கணிப்பில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தலா ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதில் 14 சதவீத பிரித்தானியர்களும், 15 சதவீத அமெரிக்கர்களும் 9/11 தீவிரவாத தாக்குதலுக்கு பின் அமெரிக்க நிர்வாகம் உள்ளதாக நினைக்கின்றனர் என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

அல் கொய்தா தான் 9/11 தீவிரவாத தாக்குதலை நடத்தியது என்பது பொதுவான கருத்து. ஆனால் சிலர் இதில் அமெரிக்க அரசின் தலையீடு இருப்பதாகக் கூறுகின்றனர். அமெரிக்க அரசின் தலையீடு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கருத்து கணிப்பில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது.

16 முதல் 24 வயதுள்ள இளைஞர்களில் 24 சதவீதத்தினர் இந்த தாக்குதலுக்கு பின் பெரிய சதிக் கூட்டம் உள்ளது என்று நம்புகின்றனர். ஆனால் 68 சதவீதத்தினர் எந்தவித சதியும் இல்லை என்று நினைக்கின்றனர்.

" சதித்திட்ட கோப்புகள் - 10 ஆண்டுகளைத் தாண்டி" என்ற பிபிசி ஆவணப்படத்திற்காக இந்த கருத்த கணிப்பு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின் ஏதோ ரகசியம் உள்ளது என்று பலர் நம்புவது குறித்த ஆய்வு இது.

தொலைபேசி மூலம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

இரட்டை கோபுர அழிப்பு பத்து ஆண்டுகள் photo in
by admin - 0

உலக வல்லரசாக காலரை தூக்கி விட்டுக் கொண்டு திரிந்த அமெரிக்கர்களை நிம்மதியில்லாமல் போகச் செய்த சம்பவம் நடந்து இன்றுடன் 10 வருடங்கள் முடிகின்றன. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவை உலுக்கிய நான்கு ஒருங்கிணைக்கப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் உலகையே அதிர வைத்த தினம் இன்று.

நியூயார்க், வாஷிங்டன் ஆகிய இரு நகரங்களிலும் 19 அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்திய விமானத் தாக்குதல்கள்லால் அமெரிக்காவே நிலை குலைந்து போனது. அதிலும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மீதே அல் கொய்தாவினர் கை வைத்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் அமெரிக்கர்கள்.

செப்டம்பர் 11ம் தேதி காலை, அமெரிக்காவுக்கு அன்று மோசமான நாளாகவே விடிந்தது. நான்கு ஜெட் விமானங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் கடத்தினர். அவற்றில் இரண்டு விமானங்களை நியூயார்க்கின் இரட்டை கோபுரம் மீது அடுத்தடுத்து மோத விட்டனர்.இதில் இரண்டு மணி நேரங்களில் இரு பிரமாண்ட கட்டடங்களும் தூள் தூளாகி சாம்பலாகி மண்ணோடு மண்ணாக சிதைந்து போனது.

இன்னொரு விமானம் பென்டகன் மீது மோதியது. நான்காவது விமானம், ஷாங்க்ஸ்வில்லி என்ற இடத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த அதி பயங்கர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 5000 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்லேடனின் அல் கொய்தாதான் காரணம் என்று தெரிய வந்ததும் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான போரை அறிவித்தது. பின்லேடனை வேட்டையாடகளம் இறங்கியது அமெரிக்கப் படை.

ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கப் படைகள் அதிரடியாக நுழைந்து அங்கு ஆட்சியில் இருந்து வந்த தலிபான்களை விரட்டியடித்தது. உலகம் முழுவதும் அல் கொய்தாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா முடுக்கி விட்டது. உலகின் பல நாடுகளிலும் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரநடவடிக்கைகள் அந்த ஆண்டில்தான் தொடங்கின. பல தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா தடை செய்தது.

ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டபடி பாகிஸ்தானுக்குள்ளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கப் படைகள், பின்லேடனை வேட்டையாடுவதில் மிகத் தீவிரமாக இருந்து வந்தன. அவர்களின் தொடர் முயற்சியின் விளைவாக 2011 மே மாதம் பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி வசித்து வந்த பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இன்றுடன் அமெரிக்கா மீதான தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இதையடுத்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாகவும், கார் வெடிகுண்டுத் தாக்குதல்கள், சிறிய ரக விமானங்களை கடத்தித் தாக்கலாம் என்று உளவுத் தகவல்கள் கிடைத்திருப்பதாலும் அமெரிக்கா முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகளில் பாதுகாப்பும், கணகாணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்குப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமீபத்தில்தான் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பதால் நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், கோர்ட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை அனைத்து மாநில அரசுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கமாண்டோப் படையிரும், அதிரடிப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Read More

September 10, 2011

விவசாய நிலத்தை பாழ்படுத்தும் செயற்கை உரங்கள்: இயற்கை விவசாயமே தீர்வு!
by admin - 0

விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால், நிலத்தில் உள்ள மண் புழுக்கள் மடிந்து, நிலம் பாழாகிறது. உணவு தானிய தாவரங்களில், பூச்சி தாக்குதலை சமாளிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித உடலில் மெல்ல மெல்ல விஷம் ஏறி வருகிறது. "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' அடிப்பது போல், இயற்கை விவசாயத்திற்கு மாறினால், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்..ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மண்ணில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட்டு, மண் வளம் குறைந்து, உற்பத்தி திறனும் குறைந்து விட்டது.தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரசாயன உரங்களை, விவசாயிகள் இன்னமும் பயன்படுத்தித் தான் வருகின்றனர்.அந்த உரம், வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது ஒரு வகையில் பாதிப்பு தான். ஆனால், இதை விட அதிக பாதிப்பு, விவசாய நிலங்களில், பூச்சிக்கொல்லிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த பயன்படுத்தும், பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படுகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், உலக சுகாதார மையம், ஒரு சில பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தாக்கத்தை வெளிப்படுத்தி, அதை தடை செய்து உத்தரவிட்டது. அந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் டி.டி.டி., மற்றும் எறும்பு பொடி எனப்படும் குறுணை மருந்துகளே.பூச்சி தாக்குதலை சமாளிக்க இந்த மருந்துகளை, விவசாய நிலத்திலுள்ள செடியின் மீது, விவசாயிகள் தெளிக்கின்றனர்.


செடியின் மீது விழுந்த பூச்சிக்கொல்லி பொடி, செடி பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் உள்ள புற்களில் படிகிறது. புற்களின் வேர்கள், மருந்தை உறிஞ்சுகிறது. அந்த புல்லை, பசு மாடு மேய்கிறது. மாட்டின் பாலை சூடு செய்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிடுகின்றனர். அந்த பாலை சாப்பிடும், ஒரு கர்ப்பிணி தாயின் மார்பில் சுரக்கும் பால், பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படுகிறது.புல், பசு மாடு, மனிதர்கள் என பல நிலைகளை கடந்தும், அந்த பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம், பசுவின் பாலிலும், அதை சாப்பிடும் பெண்ணின் உடம்பிலும், அந்த பெண்ணின் உடலில் சுரக்கும் தாய்ப்பாலிலும், அந்த பாலை பருகும் பிறந்த குழந்தையின் உடலிலும் இருப்பதை, உலக சுகாதார மையம் வெளியிட்டது.அளவுக்கு அதிகமாக, ரசாயன உரங்களை விவசாய நிலங்களில் இடுவதால், நிலம், பயிர் மற்றும் அதில் விளையும் உணவு தானியங்கள் விஷமாகின்றன. இது இல்லாமல், அதிகப்படியான உரம் அல்லது உரத்தில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், பாசன நீரில் அடித்துச் செல்லப்படுவதால், நீர் நிலைகள் விஷமாகின்றன.ரசாயன உரங்களின் கழிவுகளிலுள்ள நைட்ரஜன் மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களால், நீர் நிலைகளில், "பச்சை பசேல்' என பாசிகள் படர்கின்றன. இதனால், நீர் நிலைகளில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு, நீர் நிலை விலங்குகள் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


Read More

September 09, 2011

அண்டார்டிக்காவில் பெருகிவரும் இராட்சத நண்டு இனம்
by admin - 0

புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும்.

நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை.

எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம்.

இதனால் இப்பகுதியில் உருவாகி வரும் அபாயமொன்று தொடர்பில் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம், அண்டார்டிகாவின் 'பார்மர் டீப்' எனப்படும் பகுதியில் 'கிங் கிரப்' எனப்படும் இராட்சத நண்டினம் பெருகி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நண்டினமானது 1 முதல் 3 மீற்றர்கள் வரை வளரக்கூடியன.

இவ்வகை நண்டுகள் வெப்பமான நீர்ப் பகுதிகளிலேயே குறிப்பாக 1.4 பாகை செல்சியஸிற்கும் குறைவான வெப்பநிலைப் பகுதியிலேயே வாழும் .எனினும் அவை தற்போது அண்டார்டிக் பகுதியில் வாழ்ந்துவருகின்றமையானது அப்பகுதியில் வெப்பநிலை அதிகரித்துவருவதனைக் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவை சுமார் 30 - 40 வரையான ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடல் வாழ் தாவரங்கள், ஜெலி மற்றும் நட்சத்திர மீன்கள் உட்பட கடல் வளங்களை உண்பதுடன் அவற்றை வேகமாக அழித்துவருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவற்றின் பரம்பல் மேலும் அதிகரிப்பது அப்பகுதியில் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Read More

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பில் நான்கு பேருக்கு கெளரவ கலாநிதி
by admin - 0


 ஒக்ரோபர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ்.பல் கலைக்கழகப் பொதுபட்ட மளிப்பு விழாவில் நான்கு பேருக்கு கௌரவ கலாநிதிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
யாழ். பல்கலைக்கழக மூத வையின் சிபார்சின் பேரில் யாழ். பல்கலைக்கழக பேரவை குறித்த நால்வருக்கு கௌரவ கலாநிதிப் பட்டங்களை வழங்க அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்தப் பட்டமளிப்பு விழாவில்  வாழ்நாள் பேராசிரியர் திருமதி ஆர்.மகேஸ்வரன், வாழ்நாள் பேராசிரியர் எஸ்.கே.சிற்றம் பலம், வைத்திய கலாநிதி எஸ். ஆனந்தராஜா, ஆறு திரு முருகன் ஆகிய நால்வருக்குமே கௌரவ கலாநிதிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
 
யாழ். பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் மகத்தானசேவை ஆற்றியமைக்காக வாழ்நாள் பேராசிரியர் திருமதி ஆர். மகேஸ்வரனுக்கு விஞ்ஞான கலாநிதி பட்டம் வழங்கப்படுகிறது.யாழ். பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் ஆற்றிய மகத்தான சேவையைக் கௌரவித்து வாழ்நாள் பேராசிரியர் எஸ்.கே. சிற்றம்பலத்துக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கப் படுகிறது.
 
யாழ். போதனா வைத்திய சாலையில் யுத்த சூழ்நிலையில் இடர்பாடுகளுக்கு மத்தியில் சிறந்த மருத்துவ சேவை வழங்கியமைக்காக வைத்திய கலாநிதி எஸ். ஆனந்தராஜாவுக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்படுகிறது. சமூக சமயப் பணிகளில் ஈடுபட்டு வரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்படுகிறது.                        
Read More

தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன ?
by admin - 0


தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தங்கம் விண்ணிலிருந்து வந்தது
தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.
இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத் துகள்கள்
மண்ணுடன் கலந்துள்ள தங்கத் துகள்கள்
பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
Read More

இலங்கையிலும் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்தது
by admin - 0

நானோ கார் திடீரென தீப்பிடித்து எரிவது தொடர்கதையாகி உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் குஜராத்தில் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்தது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், இலங்கையிலும் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மேமாதம்தான் இலங்கையில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள் அங்குள்ள டாக்ஸி நிறுவனம் ஒன்று நானோ கார்களை வாங்கி வாடகைக்கு விடத்துவங்கியது. குறைந்த கட்டணம் கொண்ட நானோ டாக்ஸி சேவை அங்கு பிரபலமாகியது.

பட்ஜெட் டாக்ஸி என்ற பெயர் கொண்ட அந்த நிறுவனத்தில் தற்போது ஏராளமான நானோ கார்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த நிலையில், அந்த நானோ கார்களில் ஒன்று கடந்த 2ந் தேதி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

லெய்டன் நாஸ்டியன் மவதா போர்ட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நானோ காரை டிரைவர் ஸ்டார்ட் செய்ய முயற்சித்தபோது சிறிய சப்தத்துடன் அந்த காரில் திடீரென தீப்பற்றியுள்ளது.

உடனடியாக டிரைவர் காரில் இருந்து இறங்கிவிட்டார். காரில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை முழுமையாக தெரியவில்லை.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக டாடா அதிகாரிகள் இலங்கை சென்றுள்ளனர்.

நானோ விற்பனை ஏற்கனவே அதளபாதளத்தை நோக்கி செல்லும் நிலையில், அந்த கார் அடிக்கடி தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
Read More

September 08, 2011

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் உடல் ( படங்கள் )
by admin - 0




நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, வடக்கு விஜயநாராயணம் அருகே கைலாசநாதபுரம் என்ற குக்கிராமத்தில் 200 அடி ஆழ்துளை கிணறு மூடப்படாமல் அப்படியே இருந்தது.

விளையாடி கொண்டு இருந்த, சுதர்சன் என்ற 5 வயது சிறுவன், திடீர் என்று தடுமாறி `போர்வெல்' உள்ளே விழுந்துவிட்டான்.

15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூச்சுத்திணறி இறந்து நிலையில் இருந்த அவனது உடலை வெளியே எடுத்தனர் மீட்பு படையினர்.  
Read More

மறைந்த பின்னும் மறையாத உயிர் : இன்று சர்வதேச கண் தான தினம்
by admin - 0


ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுபவை கண்கள். சில காரணங்களால்(பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சகணக்கானோர் பார்வையின்றி, உலகை காண முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் நிச்சயம் மீண்டும் கண்பார்வை பெற முடியும். அதற்கு ஒரே வழி கண்தானம். இது முற்றிலும் ஒரு சிறந்த கொடை.

நாம் மறைந்த பிறகும் இவ்வுலகைக் காண வேண்டுமா.. கண்தானம் செய்யுங்கள். கண்தானம் செய்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தவும், கண்தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஏன் கண்தானம் : நாம் இறந்து விட்டாலும் உயிருடன் இருப்பது நமது கண்கள். கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். மேலும் கண்தானம் செய்வது புனிதமான செயல்.இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் "கார்னியா' குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கார்னியா குறைபாடு: கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப் படுகிறது. விழித்திரையில் பிம்பம் படிவதில்லை. எனவே பார்வை தெரிவதில்லை. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.

ஒரு வயது குழந்தை முதல் வயது வித்தியாசமின்றி அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டிபி போன்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம்.தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறிநாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருப்பின் அவர்களது கண்கள் தானமாக வழங்கமுடியாது.

கண்தானம் செய்ய விரும்புவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஒருவர் இறந்தவுடன் அவருடைய கண்களை மூடி விட்டு, கண்ணின் மீது ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். இது கார்னியா குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையை உயர்த்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் இருக்கும் மின் விசிறியை ஆப் செய்ய வேண்டும். டாக்டர்கள் வரும் வரை இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டி பயாடிக் சொட்டு மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்ற வேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் கண்களை தானமளிக்க வேண்டும்.
Read More

ஆழ்துளை கிணறில் சிக்கி தவிக்கும் சிறுவன்: மீட்க கிராமத்தினர் பதபதைப்பு (படங்கள் இணைப்பு)
by admin - 0


நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ளது சவளக்காரன் குளம். அதன் அருகே உள்ள கைலாசம் நாதபுரத்தில் ஒரு சுடலை மாட கோயில் உள்ளது. அதன் அருகில் நேற்று 200 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு போடப்பட்டது. அதனை ஒரு சாக்கை வைத்து மூடிவிட்டு சென்றனர்.

காலை 11 மணி அளவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சேர்மேன் நாடார் மகன் 3 வயது சுதர்சதன். இந்த சிறுவன் அந்த சாக்கை திறந்து பார்த்ததில் திடீரென சறுக்கி உள்ளே விழுந்தான்.

சில நொடிகளில் இந்த விபரம் தெரிய வரவே, அரசு அதிகாரிகள், காவல்துறையினர், டிஎஸ்பி உள்பட அந்த இடத்தில் முகாமிட்டு சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஸ்கேன் செய்ததில் சிறுவன் 20 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

சிறுவனை மீட்பதற்காக மற்றொரு ஆழ்துளை கிணறு போடப்பட்டபோது, 15 அடிக்கு கீழே பாறை தென்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது பாறையை உடைக்கும் ரிக் மெஷினை கொண்டு வந்து சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



Read More

மரத்தில் மாட்டிய பெரிய மான் வகை photo in
by admin - 0


மரத்தில் ஏற முயன்று தோற்று போன மரை 

Read More

அமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு
by admin - 0



உலகின் மிகப்பெரிய நதியான அமேசன் 7 மில்லியன் சதுர கிலோமீற்றர்களுக்கும் அதிகமான
நிலப்பரப்பில் பரவியுள்ளது. மிகவும் விசாலமான இந்த நதியின் பிரமாண்டத்தினை முழுதாக
இதுவரை எவரும் பார்க்கவில்லை. அமேசன் நதியின் அரைவாசியைத்தான் இதுவரை உலகம் கண்டு
வியந்திருக்கிறது என்பதே உண்மையாகும்.

இப்படி பிரமாண்டமான அமேசன் நதியின் கீழ் இன்னுமொரு நதியிருப்பதை பிறேஸில்
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமேசன் நதிக்குள் கீழ் 4 கிலோமீற்றர் ஆழத்தில்
இந்த நதிப்படுக்கை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நிலக்கீழ் நதியினை ஆய்வுசெய்த குழுவின்
தலைவரான பேராசிரியர் றியோ ஹம்சாவின் பெயரே கண்டுபிடிக்கப்பட்ட நதிக்கும்
சூட்டப்பட்டிருக்கிறது.

1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெற்றோலிய படுக்கைகளை ஆய்வுசெய்த வேளையிலேயே அமேசன்
நதிக்கு கீழ் இன்னுமொரு நதி இருக்கலாம் என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு எழுந்தது.
அதனடிப்படையில் பேராசிரியர் றியோ ஹம்சா தலைமையில் விஞ்ஞானிகள் குழுவொன்று
ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவிலேயே இந்த அதிசய தகவலினை
ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

அமேசன் நதியினைப்போன்றே ஹம்சா நதியும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்கிறது. இந்த
நிலக்கீழ் நதியும் அமேசன் நதியைப்போன்றே 6000 கிலோமீற்றர் நீளமானது. ஆனால், அமேசன்
நதியின் அகலம் ஒரு கிலோமீற்றரிலிருந்து 100 கிலோமீற்றர்வரை விரிந்து காணப்படுகிறது.
ஹம்சா நதியின் அகலம் 200 கிலோமீற்றரிலிருந்து 400 கிலோமீற்றர்வரை விரிந்து
காணப்படுகின்றமை ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பினையூட்டியிருக்கிறது.

ஹம்சா நதி நிலத்துக்குக் கீழ் ஓடுவதே அமேசன் கழிமுகத்தை அண்மித்த பகுதிகளில் நீரின்
உருவாக்கத் தன்மை மிகக்குறைவாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த நதிபற்றிய ஆராய்ச்சிகளின் முடிவினை இரண்டொரு மாதங்களில் நிறைவு செய்துவிடலாம்
என்ற நம்பிக்கையையும் பேராசிரியல் றியோ ஹம்சா வெளியிட்டுள்ளார்.

பரந்துகிடக்கும் பூலோக பந்துக்குள் புதைந்திருக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்றென்று
கூறினால் அது மிகையாகாது.













Read More

September 07, 2011

கலைஞர் டிவிக்கு ரூ.1.25 கோடி அபராதம்: 2 வாரத்தில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!
by admin - 0

 டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடமிருந்து ரூ. 200 கோடி பெற்ற வழக்கில் கலைஞர் டிவிக்கு அமலாக்கப் பிரிவு ரூ. 1.25 கோடி அபராதம் விதிக்கும் என்று தெரிகிறது. இந்தப் பணத்தைக் கொடுத்த, டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கு ரூ. 222 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரத்தை மிகக் குறைந்த விலைக்கு பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு டி.பி. ரியாலிட்டி நிறுவனம் ரூ. 200 கோடி கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்திடம் வட்டிக்குத் தான் ரூ. 200 கோடியைப் பெற்றதாகவும், அதை 10 சதவீத வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறி வருகிறது.

இந்த விவகாரத்தில் தான் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கலைஞர் டிவிக்கும் ஷாகித் உசேன் பல்வாவுக்குச் சொந்தமான டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கும் பணிகளில் அமலாக்கப் பிரிவு ஈடுபட்டுள்ளது. பணத்தைத் திரும்பத் தந்துவிட்டதால் கலைஞர் டிவிக்கு ரூ. 1.25 கோடி மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 200 கோடியை கலைஞர் டிவி தனது கடன்களை அடைக்க பயன்படுத்தியுள்ளது. இந்தக் கடன்கள் 16 சதவீத வட்டிக்கு வாங்கப்பட்டவை. ஆனால், டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கு கலைஞர் டிவி 10 சதவீதம் மட்டுமே வட்டியோடு பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளது.

இதன்மூலம் கலைஞர் டிவிக்கு 6 சதவீத வட்டித் தொகையான ரூ. 1.25 கோடி மிச்சமாகியுள்ளது. இதனால் இந்தப் பணத்தை கலைஞர் டிவி அபராதமாக செலுத்த வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு கருதுகிறது.

இந்த அபராதத் தொகையை வசூலிக்கும் வகையில், கலைஞர் டிவியின் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கையப்படுத்தும் பணியை அமலாக்கப் பிரிவு விரைவிலேயே தொடங்கவுள்ளது.

அதே போல கலைஞர் டிவிக்குப் பணம் தந்த டி.பி. ரியாலிட்டிக்கு ரூ. 222 கோடியளவுக்கு அபராதம் விதிக்கவும் அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது. இவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கக் காரணம், ரூ. 200 கோடியை கலைஞர் டிவிக்குத் தந்துவிட்டு அதை வட்டியோடு திரும்பப் பெற்று லாபமும் அடைந்துள்ளது இந்த நிறுவனம். தவறும் செய்துவிட்டு வட்டி லாபமும் அடைந்த நிறுவனம் என்ற வகையில், அந்த நிறுவனம் ரூ. 200 கோடியையும் அதற்குக் கிடைத்த வட்டியான ரூ. 22 கோடியையும் அபராதமாகச் செலுத்த வேண்டும் என அமலாக்கப் பிரிவு கூறுகிறது.

இந்த நிறுவனத்தின் ரூ. 222 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கும் பணிகளையும் அமலாக்கப் பிரிவு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஷாகித் உசேன் பல்வாவுக்குச் சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி, டிபி ரியாலிட்டி, கன்வுட் கன்ஸ்ட்ரக்ஷன், நிகார் கன்ட்ரக்ஷன், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பென் ஆகியவற்றின் ரூ. 222 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

அமலாக்கப் பிரிவின் இந்த நடவடிக்கை மூலம் வழக்கு விசாரணை கனிமொழிக்கு சாதகமாகத் திரும்பலாம் என்று தெரிகிறது. அமலாக்கப் பிரிவின் இப்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் மூலம், கலைஞர் டிவிக்கு, டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணம் லஞ்சம் அல்ல, கடன் தான் என்பது உறுதியாகிறது என்று கனிமொழி தரப்பு வாதாடலாம்.

இந்த வழக்கில் கனிமொழி, சரத்குமார், டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் நிறுவனத்தின் கரீம் மொரானி, இன்னொரு துணை நிறுவனமான குசேகாவ்ன் ரியாலிட்டி நிறுவனத்தின் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு சட்ட விரோத பணப் பரிமாற்றப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2 வாரத்தில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு:

இந் நிலையில் கனிமொழி விரைவில் ஜாமீனில் விடுதலையாகலாம் என்றும் தெரிகிறது.

2ஜி வழக்கில் 3வது குற்றப் பத்திரிகையை, சிபிஐ அடுத்த வாரம் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையும் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

இந்த விசாரணைகள் முடிந்து விட்டால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம்.

இதனால் 100 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள கனிமொழி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்ததும், தன்னை பிணையில் விடுதலை செய்யக் கோரி மனு செய்வார் என்று தெரிகிறது.

சிபிஐ தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாது என்று தெரிவதால், இரு வாரங்களில் கனிமொழி விடுதலையாக வாய்ப்புள்ளது.
Read More

புது டில்லி நீதிமன்றில் குண்டுவெடிப்பு -11 பேர் பலி; 76 பேர் காயம்
by admin - 0

இன்று காலை 10.17 மணிக்கு புதுதில்லி உயர்நீதிமன்ற ஐந்தாம் வாயிலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை ஒன்பது பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. படுகாயடைந்தவர்களில் இதுவரை 50 பேர் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் சில உடல்கள் சம்பவ இடத்தில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முழுமையாக கொமாண்டோ படைகளில் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தில்லி முழுவதுமுள்ள வணிக வளாகங்கள், சன நெருக்கடி மிக்க தெருக்களில் இருந்து மக்கள் வெளியேறிதால் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுட்டுள்ளது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பாரளுமன்றத்தின் இரு அவைகளில் எதிர்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சூட்கேசில் ஒருந்த குண்டு ஒன்று வெடித்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்துள்ளது. இதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் டெல்லி முழுவதும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் அருகே இன்று காலை 10.15 மணிக்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சட்டத்தரணிகளும்;, நீதிமன்றத்திற்குச் சென்றவர்களும் அங்கிருந்து ஓடினர். பின்னர் சட்டத்தரணிகளே பொலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக பொலீஸாரும், தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர்.
Read More

September 05, 2011

"பை' முறை விவசாயம்
by admin - 0

இயற்கையான உணவு எப்பொழுதுமே சிறந்தது. சரிவிகித, சத்தான, தீங்கு விளைவிக்காத உணவினை குழந்தைகளுக்கு தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் துகள்களை ஆதாரமாகக் கொண்டு அத்துடன் இயற்கைத் தாதுக் களையும், நுண்ணுயிர்களையும் கலந்து செடிகள் வளர்வதற்கான ஊடகத்தை உருவாக்கலாம்
இந்த ஊடகத்தை ஆராய்ந்தவர்கள் இது இயற்கையான சத்துமிகுந்த ஊடகம் மட்டுமில்லாமல் மிக சிறிதளவு தண்ணீர் இருந்தாலே செடிகள் வளர்வதற்கு போதுமானது என்கிறார்கள். கலக்கப்பட்ட ஊடகத்தை பைகளில் போட்டு விதைச்சான்று பெற்ற வீரிய விதைகளை விதைத்து வீட்டில் சூரிய வெளிச்சம் படும் வராந்தா, பால்கனி, மாடி, ஜன்னல் போன்ற இடங்களில் வளரவிடுவதுதான் வீட்டு குறுந்தோட்டம்.
அன்றாட தேவைக்கான கீரைகள், காய்கறிகள், அலங்கார செடிவகைகள், மூலிகை செடிகள் எது வேண்டுமானாலும் இந்தப் பைகளில் வளர்க்கலாம். பைகளில் விவசாயமா? கதை சொல்கிறார்களா? இல்லை இல்லை. நிஜம். 3 செடியிலிருந்து 8 கிலோ கத்தரிக்காய், 15 கிலோ தக்காளி அறுவடை செய்யப் படுகிறது. இச்செடிகளுக்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்த பஞ்சகவ்யா இயற்கைவழி பூச்சிவிரட்டியும் உபயோகப்படுத்தப் படுகிறது.
கீரைகள்: கீரைகளில் புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, கருவேப்பிலை, சிறுகீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, வல்லாரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சகீரை ஆகியவை பயிர் செய்யப் படுகின்றன. காய்கறிகளில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பாகற்காய், சுரைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், வெள்ளரி, அவரை ஆகியவை பயிர் செய்யப்படுகிறது.
மூலிகைச்செடிகள்: நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான மூலிகைகளையும் இம்முறையில் வளர்க்கலாம். மிக முக்கியமான மூலிகைகளான கற்பூரவல்லி, துளசி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, சிறியாநங்கை, பெரியநங்கை, இன்சுலின், தத்துரா (கருஊமத்தை), பல்வலிப்பூண்டு, பார்வதிதழை, ஆடாதொடை, தைம் ரோஸ்மேரி, மின்ட் வகைகள், அறுபத்தாம் தழை, வெட்டிவேர், லேவண்டர், லெமன்கிராஸ், கரிசலாங்கண்ணி, தூதுவளை, அப்பகோவை, முடக்கத்தான், நொச்சி, பொடுதலை வளர்க்கலாம்.
இம்மூலிகைகளை வளர்க்கும் முறை பற்றியும், உபயோகிக்கும் முறை பற்றியும் இத்துறையில் பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் உதவியோடு எடுத்துரைக்கப் படுகிறது. மாடியிலோ அல்லது தரையிலோ 20+10 அளவில் வெயில் படும்படியான இடவசதி இருக்கின்றதா? இருந்தால் இந்த பசுமைக்குடில் அமைக்கலாம். ஐந்து நபர் கொண்ட குடும்பத்தின் காய்கனி, கீரைகள் தேவைகளை இந்த பசுமைக்குடில் பூர்த்தி செய்யும்
Read More