Latest News

September 12, 2011

தெற்காசியர் மத்தியில் நீரிழிவை தூண்டுப் 6 புதிய மரபணுக்கள்
by admin - 0

தெற்காசியர்கள் மத்தியில் நீரிழிவைத் தூண்டும் 6 புதிய மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மரபணுக்களே தெற்காசியர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் நீரிழிவு ஏற்படுவதற்கு பொறுப்பானவையாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான், மொரீசியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களுடன் இணைந்து பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
5கோடி 50 இலட்சம் தெற்காசியர் நீரிழிவால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்தடவையாக இந்த ஆய்வு தெற்காசியாவில் இடம்பெற்றுள்ளது.
நீரிழிவுடன் தொடர்பு பட்டவையென இதுவரை 42 மரபணுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும் ஐரோப்பியராலேயே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆரோக்கியமற்ற உணவு, பருத்த தொந்தி, உடற்பயிற்சியின்மை என்பன நீரிழிவுக்கான ஆபத்தை ஏற்படுத்துகின்ற போதிலும் நீரிழிவை ஏற்படுத்தும் மரபணுக்கள் தெற்காசியர்களிடம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நடுத்தரவயதில் அல்லது 55 வயதுக்கு பின் ஐரோப்பியருக்கு நீரிழிவு ஏற்படுகிறது. ஆனால் தெற்காசியருக்கு 40 வயதில் இந்த நோய் ஏற்படுவதற்கு வேறு காரணங்கள் இல்லை என்று சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவ நிபுணர் வி.மோகன் தெரிவித்துள்ளார். அவரும் இந்த ஆய்வில் பங்கேற்றிருந்தார்.
தெற்காசியர்களில் மரபணுவுடன் தொடர்புபட்டதான ஆய்தணி சர்வதேச விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தனர். அவர்களின் கண்டுபிடிப்புகள் "நேச்சர் ஜெனற்றிக்ஸ்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர் ஜோன், சி.சேம்பர்ஸ், ஜஸ்பால் சொன்னர் ஆகியோருடன் 42 பேர் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.
தமது ஆய்வுகள் நீரிழிவைத் தடுப்பதற்கான சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்று சேம்பர்ஸ் கூறியுள்ளார்.
6 மரபணுக்களின் பிரச்சன்னமான அசாதாரணமான விதத்தில் நீழிவு நோயாளர்களிடம் அதிகளவுக்கு உள்ளமை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments