அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு முதன்முதலாக விண்வெளி வீரர்களுடன் கூடிய விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை செயற்படுத்த நாசா எதிர்பார்த்துள்ளது.
vegetable |
செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த 5 வருட ஆராய்ச்சி பணியில் ஏறக்குறைய ஒருவருக்கு 3 ஆயிரத்து 175 கிலோ கிராம் உணவு தேவைப்படும்.
இந்த நிலையில், அவர்களுக்கு தொடர்ந்து உணவு அனுப்புவது தமது திட்டப்பணிகளில் சவாலான ஒரு விடயமாகும்
எனவே, உணவுக்கு தேவையான கேரட், தக்காளி உட்பட்ட 10 வகையான செடிகள் கொண்ட மரக்கறி தோட்டம் ஒன்றை செவ்வாய் கிரக சூழலுக்கேற்ப அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விண்கலத்தில் இதனை வளர்க்க குறைந்த இடமே போதுமானதாக இருக்கும்
அத்துடன் ஆரோக்கியமான உணவினை பெற்றுக்கொள்வதன் பொருட்டு செவ்வாய் கிரகத்திலேயே தோட்டத்தை அமைக்கவும் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
No comments
Post a Comment