கடந்த மாதம் நடைபெற்ற தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்று காலை முதல் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலைகளின் பெறுபேறுகள் இன்று முதல் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கின்றன. யாழ்.மாவட்ட பாடசாலைகளின் பெறுபேறுகள் பெரும்பாலும் நாளை பிற்பகலில் பாடசாலைகளுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளநிலையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி யாழ்ப்பாணம் 151 கிளிநொச்சி 147 மன்னார்150 வவுனியா 143 முல்லைத்தீவு 148 மட்டக்களப்பு மற்றும் அம்பாறை 151 திருகோணமலை152 என்ற அடிப்படையி;ல் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன
கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை காலி குருநாகல்மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் வெட்டு;ப்புள்ளிகள் 153 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பதுளை நுவரெலிய அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் 149 புள்ளிகளாகும்
புத்தளம் 150 அநுராதப்புரம் 148 பொலனறுவை 150 மொனராகலை 145 ரத்தினபுரி 148 கேகாலை 153 புள்ளிகள் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஐந்தாம் ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளை பெற்று யாழ் புனித ஜோன் பெஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா என்ற மாணவி யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் நிதுஷிகா தெரிவிக்கையில், தான் பரீட்சையில் 190க்கு அதிகமாக புள்ளிகள் எடுப்பேன் என எண்ணிய போதும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறவினர்களும் தனது கல்விக்கு உந்துகோலாக அமைந்ததாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்காலத்தில் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
No comments
Post a Comment