Latest News

August 30, 2011

பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட 8 வாரங்களுக்குத் தடை விதித்தது உயர் நீதிமன்றம்
by admin - 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் குவிந்து விட்டனர்.

வழக்கை விசாரித்த பெஞ்ச், அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து 8 வார இடைக்காலத் தடையை அறிவித்தது.

உற்சாக வெள்ளத்தில் ஸ்தம்பித்தது உயர்நீதிமன்றம்

இதைக் கேட்டதும் வக்கீல்கள் உற்சாகக்குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வரலாறு காணாத மிகப் பெரிய வக்கீல்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமும் பூரிப்பில் மூழ்கியது.

அனைவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து முழக்கமிட்டதால் உயர்நீதிமன்றமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.

தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

தூக்குத் தண்டனை 8 வாரங்குக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சி முழக்கமிட்டும் சந்தோஷத்தைப் பகிர்நது கொண்டனர்.

பொதுமக்களும் மகிழ்ச்சி

பொதுமக்களுக்கும் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம். இது நியாயமற்றது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?

முன்னதாக தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் நேற்று வழக்கறிஞர் தடா சந்திரசேகர் ரிட் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களில், 1991-ல் கைது செய்யப்பட்ட நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எங்களுக்கு தூக்கு தண்டனை விதித்து 1998 ஜனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை உறுதி செய்து 1999 மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு தமிழக ஆளுநருக்கு நாங்கள் 2 முறை அளித்த கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 26.4.2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12-ம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 9-ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.

இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும், கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம். வாழ்வோமா, சாவோமா எனத் தெரியாமல் 11 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச் சிறையில் தவித்த தவிப்பும், அனுபவித்த சித்திரவதையும் மரண தண்டனையை விடவும் மிகக் கொடுமையானது.

ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

காப்பாற்ற முடியும்-ராம்ஜேத்மலானி:

முன்னதாக உயர்நீதிமன்றத்திற்கு வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் வழக்கின் தன்மை குறித்து கேட்டபோது, இது மிகவும் சவாலான வழக்கு. இருப்பினும் திறமையாக வாதாடினால் நிச்சயம் மூவரையும் காப்பாற்ற முடியும். காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
Read More

August 27, 2011

வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி
by admin - 0

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் சிறையில் அந்த நிறைவேற்ற யாரும் இல்லாததால், தூக்கில் போடும் பணிக்காக சென்னை புழல் சிறையில் 7 பேருக்கு பயிற்சியளிக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறை 171 ஆண்டுகள் பழமையானது. இங்கு இரு தூக்கு மேடைகள் உள்ளன. ஆனால், சிறையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தனியாக பணியாளர்கள் யாரும் இல்லை. 28 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுமியை கொன்ற குற்றத்துக்காக சென்னையைச் சேர்ந்த சந்துரு என்பவர் தூக்கிலிடப்பட்டார்.

அதன்பிறகு கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் யாரும் தூக்கில் போடப்படவில்லை. இதனால் இரு மேடைகளும் துருப் பிடித்து சிதிலமடைந்து காணப்படுகின்றன. இப்போது அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக 7 பேருக்கு பயிற்சி கொடுக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை புழல் சிறையில் அந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனு-ஆர்டிஐ மூலம் தகவல் பெற திட்டம்:

இந் நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் காக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.

இவர்கள் ஜனாதிபதியிடம் அளித்த கருணை மனு மீது கடந்த 11 ஆண்டுகளாக நடந்த விவாதங்கள் என்ன என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற தமிழக வழக்கறிஞர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்,

இந்த கருணை மனுக்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது, இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையுடன் எந்த விதமான கடிதப் போக்குவரத்து நடைபெற்றது என்பது பற்றிய விவரங்களை இந்த வழக்கறிஞர்கள் கேட்கவுள்ளனர்.



                                                                                                         Vellore Prison
முருகன், சாந்தன், பேரறிவாளன் மீதான குற்றசட்டுகள் என்ன?:

முருகன் அவரது மனைவி நளினியை விடுதலைப் புலி சுபாவுக்கு துணையாக ஸ்ரீபெரும்புதூருக்கு அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

சிவராசன் தங்குவதற்கு அறை எடுத்து கொடுத்தாக சாந்தன் மீதும், பேரறிவாளன் மீது ராஜிவைக் கொன்ற வெடிகுண்டுக்கு பயன்படுத்திய பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More

August 26, 2011

நல்லூர் சப்பற திருவிழா படங்கள் இணைப்பு
by admin - 0


























Read More

August 22, 2011

லிபிய புரட்சிப் படைகளிடம் திரிபோலி வீழ்ந்தது- கடாபியின் மகன் கைது
by admin - 0

திரிபோலி: லிபியப் புரட்சிப் படைகளிடம் தலைநகர் திரிபோலி வீழ்ந்தது. அதிபர் மும்மர் கடாபியின் ஆதரவுப் படையினர் தங்களது எதிர்ப்பை விட்டு விட்டு ஓடி விட்டனர். இதையடுத்து கடாபி வசம் 42 ஆண்டுகளாக இருந்து வந்த லிபியா தற்போது புரட்சிப் படையினரிடம் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடாபியி்ன் மகன் சைப் அல் இஸ்லாமையும் புரட்சிப் படையினர் பிடித்துள்ளனர்.

திரிபோலியின் மையப் பகுதியான கிரீன் ஸ்கொயர் முன்பு கூடிய புரட்சிப்படையினரும், அவர்களது ஆதரவாளர்களும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கடாபியின் வீழ்ச்சியைக் கொண்டாடினர்.

தற்போது கடாபி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இருப்பினும் அவரது பேச்சு மட்டும் டிவியில் ஒளிபரப்பானது. அதில் பேசிய கடாபி, கடைசி வரை போராடுவோம். புரட்சிப் படையினர் மீது தகுந்த சமயத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்றார்.

கடாபியின் மகன் சைப் பிடிபட்டுள்ள நிலையில் இன்னொரு மகன் சரணடைவது குறித்து புரட்சிப் படையினருடன் பேசி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. 'சுருட்டைத் தலையன்' கதை முடிந்தது என்று புரட்சிப் படையினர் ஆவேசத்துடன் கூறினர். கடாபியின் தலைமுடியலங்காரத்தை கேலி செய்து சுருட்டைத் தலையன் என்று அவர்கள் கூறினர்.

தற்போது திரிபோலியின் பெரும்பாலான பகுதிகள் புரட்சிப் படையினர் வசம் வந்து விட்டது. இதையடுத்து அங்கு சோதனைச் சாவடிகளை அவர்கள் அமைத்துள்ளனர். மேலும் துப்பாக்கி ஏந்திய பலர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓரிரு பகுதிகள் மட்டும் இன்னும் கடாபி ஆதரவு ராணுவத்தினர் வசம் உள்ளது. இருப்பினும் அந்த இடத்தில் கடாபி மறைந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அவர் பாதுகாப்பான இடத்திற்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் கடாபிக்கு எதிராக லிபியாவில் புரட்சி வெடித்தது. அன்று முதல் தொடர்ந்து கடாபி படையினருக்கும், புரட்சிப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இந்தப் போர் தற்போது முடிவுக்கு வரும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. புரட்சிப் படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்து வந்தனர். நேட்டோ படைகளும் லிபியா மீது தாக்குதல் நடத்தின.

திரிபோலியைப் பிடிக்க மூன்று முனைகளில் புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தி முன்னேறி வந்தனர். இன்றுதான் அத்தாக்குதலில் அவர்கள் வெற்றியைப் பெற்றனர்.

தெருக்கள் தோறும் புரட்சிப் படையினரு்ம் திரிபோலியில் வசித்து வரும் சொற்ப மக்களும் சேர்ந்து வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

நேட்டோ பொதுச் செயலாளர் ஆண்டிரஸ் போக் ரஸ்முஸன் கூறுகையில், கடாபியின் ஆட்சி ஆட்டம் கண்டு விட்டது. புதிய ஜனநாயக லிபியா உருவாகும் சூழல் வந்து விட்டது. விரைவில் கடாபியும் பிடிபடுவார் என்று நம்புகிறோம். நிச்சயம் அவர் பிடிக்கப்படுவார் என்றார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் புரட்சிப் படையினரின் வெற்றியை வரவேற்றுள்ளார். அவர் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், மேலும் ரத்தக்களறி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அதிபர் கடாபி தனது பதவியை விட்டு உடனடியாக விலக வேண்டும். விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

அரபு நாடுகளிலேயே அதிக காலமாக ஆட்சியில் நீடித்து வந்த ஒரே தலைவர் கடாபி மட்டுமே. கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சியை அவர் நடத்தி வந்தார். வடக்கு ஆப்பிரிக்காவின் மூலையில் உள்ள லிபியா எண்ணெய் வளம் மிக்க நாடாகும். ஆனால் அங்கு தொடர்ந்து மக்கள் நலம் முடக்கப்பட்டு வந்தது.

கடந்த 1988ம் ஆண்டு பான் ஆம் விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து லிபியா சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த விமான தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு லிபியாதான் காரணம், கடாபிதான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதை நீண்ட காலம் மறுத்து வந்த கடாபி பின்னர் ஒத்துக் கொண்டார். மேலும், குண்டுவெடிப்பில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா 10 மில்லியன் டாலர் உதவி தருவதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் சர்வதேச தனிமையிலிருந்து மெதுவாக விடுபடத் தொடங்கியது லிபியா. இருப்பினும் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்தது. அரபு நாடுகளில் எழுந்த புரட்சிகளைத் தொடர்ந்து லிபியாவிலும் மக்கள் புரட்சி வெடித்துக் கிளம்பியது. இப்போது அது பெரும் ரத்தக்களரியுடன் முடிவுக்கு வருகிறது.
Read More

August 13, 2011

நல்லூர் மஞ்சம் படங்கள் இணைப்பு
by admin - 0




Read More

August 12, 2011

நவம்பர் 5, பேஸ்புக்கின் இறுதித் தினமா?: ஹெக்கிங் குழு அறிவிப்பு (காணொளி இணைப்பு) _
by admin - 0

 பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுமென ஜனவரி மாதமளவில் செய்தி வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

தற்போது பேஸ்புக் சேவையை 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு தாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதியுடன் பேஸ்புக் சேவை நிறைவிற்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான அறிவிப்பு அடங்கிய காணொளியானது கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி வெளியாகியிருந்தது.

எனினும் தற்போதே அது தொடர்பில் தகவல்கள் வெளியுலகிற்கு கசிய ஆரம்பித்துள்ளன. 
ஒபரேஷன் பேஸ்புக்' என இத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக் குழு அறிவித்துள்ளது. 

இது வெறும் புரளியெனக் கூறியுள்ள இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் இத்தகவலை மறுத்துள்ளன.

இருந்த போதிலும் குறித்த குழுவே கடந்த சில காலங்களாக பல முக்கிய நிறுவனங்களின் குறிப்பாக மாஸ்டர் கார்ட், பேபேல் மற்றும் அமெசொன் ஆகியவற்றின் இணையக்கட்டமைப்புகளை ஹெக்கிங் செய்திருந்தது.

பேஸ்புக் தொடர்பில் கடுமையாக சாடியுள்ள அவ்வமைப்பு ஷூக்கர் பேர்க் எமது விபரங்கள் மற்றும் தகவல்களின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

நமது தகவல்களை பேஸ்புக் அரசாங்கம் மற்றும் உளவு நிறுவங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

பொதுவாக 'Anonymous' குழு ஓர் இணையக் கட்டமைப்பினைத் தாக்குவதற்கு சில தினங்களுக்கு முன்னரே இது தொடர்பிலான அறிவிப்பினை மேற்கொள்ளும்.

இந்நிலையில் தற்போது பல நாட்களுக்கு முன்னரே அக்குழு அறிவிப்பை மேற்கொண்டுள்ளது

எவ்வாறாயினும் இச் செய்தியானது பேஸ்புக் பாவனையாளர்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துவது உறுதி
Read More

லண்டன் கலவரம் படத்தொகுப்பு
by admin - 0


குரொய்டன் பகுதியில் தமிழ் கடைகள் நிறைந்த இடமும் இந்தக் கலவரங்களில் தப்பவில்லை. அங்கும் கட்டிடங்கள் தீக்கிரையாகின.

கடைகளை உடைத்து உள்ளிருக்கும் பொருட்களை சூறையாடுவதில் இளைஞர் கும்பல்கள் ஈடுபட்டுள்ளனர்.
அடையாளம் தெரியாதபடி முகத்தை மூடியபடி இளைஞர் கும்பல்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருட்சேதம் என்பதைத் தாண்டி நிறையபேரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கான ஆடைகள் விற்கும் கடைகள் சூறையாடல்களின் பெரிய இலக்காக அமைந்துள்ளன.
Read More

'உப்பு அதிகமானால் ஆரோக்கியம் கெடும்
by admin - 0

மக்கள் தங்கள் ஆரோக்கியம் மேம்பட புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கு அடுத்தபடியாக செய்ய வேண்டிய முக்கிய விஷயம், அவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்துக்கொள்வதுதான் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்

உலக சுகாதார நடவடிக்கைகள் முன்னுரிமை தரும் விஷயமாக உப்புக் குறைப்பை ஐ.நா. மன்றம் முன்னிறுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொழிற்சாலை உற்பத்தி உணவுப் பொருட்களில் உப்பின் அளவை கண்காணித்து ஒழுங்குசெய்வதற்கு செயல்திறன் மிக்க வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாம் வாங்கும் உணவுப் பொருட்களில்ஏற்கனவே கலந்துள்ள உப்புதான் நம் உடம்பில் உப்பின் அளவு அதிகமாவதற்கு காரணமாக இருக்கிறது.
ஆகவே ஒருவர் தானாக முன்வந்து உப்பை குறைப்பது என்பது அவ்வளவாகப் பலன் அளிக்காது, தாம் உருவாக்கும் உணவுப் பொருட்களில் உப்பின் அளவைக் குறைக்கச் சொல்லி உற்பத்தி நிறுவனங்களை வற்புறுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
பிரிட்டனில் உள்ள வாரிக் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழகம் இணைந்து இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
உப்பு அதிகம் சாப்பிட சாப்பிட, அதிக உப்பு இருந்தால்தான் உணவு சுவையாக இருப்பதாக நாம் உணர ஆரம்பித்துவிடுவோம். அது நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு அதிகரித்துக்கொண்டேபோக வழிவகுத்துவிடும் என இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரான்ஸிஸ்கோ கப்பூசியோ கூறுகிறார்.
உடலில் கலக்கும் உப்பின் அளவுக்கும், இரத்தக் கொதிப்பின் அளவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
இருதய நோய், வாதம், சிறுநீரகப் பாதிப்பு போன்றவற்றின் காரணியாக இரத்தக் கொதிப்பு அமைந்துள்ளது.
Read More

August 10, 2011

வெளியானது அசத்தலான மங்காத்தா ட்ரெய்லர் (ட்ரெய்லர் இணைக்கப்பட்டுள்ளது)
by admin - 1

பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய மங்காத்தா ட்ரெய்லர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அஜித்தின் 50வது படமான மங்காத்தா படம் பெரும் எதிர்பார்ப்பபை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இன்று அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் படத்தின் மேல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் அசத்தலாக உள்ளது. சிறப்பாக அமைந்துள்ள இந்த ட்ரெய்லரானது தல ரசிகர்களை நிச்சயம் குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இன்று படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிடுகின்றது. மேலும் இம்மாதம் 24ம் திகதி படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி தல ஆட்டம் ஆரம்பம்.





<object width="640" height="390"><param name="movie" value="http://www.youtube.com/v/TOHlz0P-X_o&hl=en_US&feature=player_embedded&version=3"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/TOHlz0P-X_o&hl=en_US&feature=player_embedded&version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"></embed></object>
Read More

August 07, 2011

நெல்லில் பூச்சிகளற்ற பூச்சி மேலாண்மை
by admin - 0

தற்பொழுது இயற்கை விவசாய முறையில் அதிக கவனம் செலுத்தப் படுவதால் ரசாயனமற்ற தாவர வகைப் பூச்சிக்கொல்லிகளையே பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கத்தை குறைக்கலாம்.
* அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சியுள்ள தாள்களை சேகரித்து அழிப்பதன் மூலம் குருத்துப்பூச்சி, ஆனைக்கொம்பன் மற்றும் நூற்புழுக்களின் முட்டை, புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
* கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் மற்றும் பூஞ்சாணங்களை வெளிக்கொணர்ந்து சூரிய ஒளி மூலம் அழிக்கலாம்.
* நூற்புழுக்கள் மற்றும் ஆரம்ப காலத்தில் தோன்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை நன்றாக தூளாக்கி கடைசி உழவின்போது இடவேண்டும்.
* வரப்புகளைச் செதுக்கி களையில்லாமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் புகையான், இலைமடக்கு புழு, கதிர்நாவாய் பூச்சி ஆகியவற்றின் மாற்று உறைவிடங்களை அழிக்கலாம்.
* மண் பரிசோதனைப்படி பரிந்துரைக்கப்பட்ட அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். தழைச்சத்து உரத்துடன் வேப்பம்பிண்ணாக்கு சேர்த்து மூன்று அல்லது நான்கு முறை பிரித்திடுவது நல்லது.
* நாற்றங்காலில் படைப்புழுக்கள் தென்பட்டால் வயலில் தண்ணீரைத் தேக்கி வைப்பதன் மூலம் மறைந்திருக்கும் புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கலாம்.
* கூண்டுப்புழுக்கள் தென்பட்டால் ஒரு கயிறு கொண்டு வரப்பின் இரு புறமும் நின்று பயிரின் மீது படும்படி இழுப்பதன்மூலம் கூண்டுப்புழுக்களை கீழே விழச்செய்து பின் பொதுவான வடிகாலில் வடித்து புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
* நடவின்போது பட்டம் விட்டு நடவு செய்வதன் மூலம் புகையானின் தாக்குதலை குறைக்கலாம்.
* நீர் நிர்வாகத்தில் நிறைந்த கவனம் செலுத்த வேண்டும். புகையான் தாக்குதல் இருந்தால் நீரை வடிப்பது அவசியம்.
* வரப்புகளில் தட்டைப்பயறு, பச்சைப்பயறு போன்ற பயிர்களை பயிரிடுவதன் மூலம் இயற்கை எதிரிகளின் நடமாட்டத்தை அதிகப்படுத்தலாம்.
* விளக்குப்பொறியை 1-2மீ உயரத்திற்கு ஒரு எக்டருக்கு 10 என்ற வீதத்தில் வைத்து குருத்துப்பூச்சி, கதிர் நாவாய் பூச்சி, இலை மடக்குப்புழு, புகையான் மற்றும் தத்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றலாம்.
* இனக்கவர்ச்சி பொறியை ஒரு எக்டருக்கு 12 என்ற வீதத்தில் வைத்து குருத்துப்பூச்சி மற்றும் இலை மடக்குப்புழுவின் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
* டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் என்னும் முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 25, 40 மற்றும் 55ம் நாட்களில் எக்டருக்கு ஒரு லட்சம் ஒட்டுண்ணி என்ற அளவில் இட்டு குருத்துப்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
* இலை சுருட்டுப்புழுக்கள் தாக்குதல் இருக்கும் சமயத்தில் முட்செடிகளின் கிளைகளை பயிரின் மீது படும்படி செய்வதன் மூலம் மடங்கியுள்ள இலைகள் கிழிக்கப்பட்டு உள்ளிருக்கும் புழுக்கள் இயற்கை எதிரிகள் தாக்குதலுக்குள்ளாக ஏதுவாக இருக்கும்.
* பயிர் வளர்ச்சிப்பருவத்தின்போது இரண்டு அல்லது மூன்று அடி உயரத்தில் "டி' வடிவ குச்சிகளை வைப்பதால் பறவைகள் நெற்பயிரில் இருக்கும் பழுக்களை உண்டு சேதத்தை குறைக்கும். இரவு நேரத்தில் ஆந்தைகள் அமர்ந்து வயலில் நடமாடும் எலிகளை பிடித்து உண்பதால் எலிகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கலாம்.
* சிலந்திகள், ஊசித்தட்டான், நீர்த்தாண்டி, நீர் மிதப்பான், இயர்விக், மிரிட் நாவாய்ப்பூச்சி, பொரிவண்டு, தரைவண்டு, கோனியோசில் குளவிகள், டிரைக்கோகிரம்மா குளவி போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையிலேயே நெல் வயல்களில் அதிக அளவில் இருக்கும் சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கக்கூடாது.
* பொருளாதார சேதநிலையை கணக்கிட்டு தேவை ஏற்படின் தாவர பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.
* 5 சதம் வேப்பம் பருப்பு கரைசல் அல்லது வேப்ப எண்ணெய் 3 சத கரைசலை தெளித்து புகையான், பச்சை தத்துப்பூச்சி, இலை மடக்கு புழு, குருத்துப்புழு, இலைப்பேன்களைக் கட்டுப்படுத்தலாம்.
* மேற்கூறிய முறையில் புங்கம் எண்ணெய் 3 சதம், புங்கம் விதைச்சாறு 5 சதம் கரைசலை தெளித்தும் இலைப்பேன் அசுவிணி மற்றும் படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.


Read More

இலங்கையின் வான் பரப்பில் 10 அமெரிக்க போர் விமானங்கள் ஊடுருவல்:
by admin - 0

சிறிலங்கா வான்பரப்பில் அமெரிக்க விமானப்படையின் 10 போர் விமானங்களைக் கொண்ட ஸ்குவாட்ரன் ஒன்று ஊடுருவிப் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கப் போர் விமானங்களின் அத்துமீறல் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடும் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் குடியியல் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் எம்.சி.நிமலசிறி, அமெரிக்கப் போர் விமானங்கள் சிறிலங்காவின் கடல் அல்லது வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்தனவா என்பதை உறுதி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்துலகச் சட்டங்களின்படி, ஒரு நாட்டின் வான் பரப்பை இன்னொரு நாட்டின் விமானங்கள் பயன்படுத்த முன்னர் அதுபற்றி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா வான்பரப்பில் அமெரிக்கப் போர் விமானங்கள் அவ்வப்போது ஊடுருவுவதாகவும், அத்தகைய சந்தர்ப்பங்களில் அவற்றை வெளியேறுமாறு தாம் கூறி வருவதாகவும் சிறிலங்கா விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவற்றின் தொடர்புசாதனங்களை இடைமறித்த போது அந்த போர் விமானங்கள் அமெரிக்க விமானந்தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்டு வந்தவை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படையின் ஏழாவது படைப்பிரிவின் ஜெட் ஸ்குவாட்ரனைச் சேர்ந்த போர் விமானங்களே சிறிலங்கா வான்பரப்புக்குள் ஊடுருவியிருக்கலாம் என்று நம்புவதாகவும் சிறிலங்கா விமானப்படை அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் மிக உயரமான மலைச்சிகரமான பீதுருதாலகாலவில் சிறிலங்கா விமானப்படை அமைத்துள்ள ரேடர் கண்காணிப்பு கருவியிலேயே அமெரிக்கப் போர் விமானங்களின் ஊடுருவல் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக அதுபற்றி சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்துக்கும் குடியியல் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கும் தகவல் அளித்திருந்தனர்.

இந்த ரேடர் கண்காணிப்பு கருவி மூலம் 200 கடல் மைல் தொலைவு வரைக்கும், 380 கி.மீ வான்பரப்பையும் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் போர் விமானங்களின் ஊடுருவல் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் கருத்து வெளியிட மறுத்து விட்டதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் குறிப்பிட்டுள்ளது.


Read More

தேயிலை விவசாயிகளுக்கு மானியம் : வைகோ கோரிக்கை
by admin - 0


 ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தேயிலைக்கு மட்டும், கிலோவுக்கு ரூ.2 மானியம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளும், 200க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிலைச் சார்ந்துள்ள 65 ஆயிரம் தேயிலை விவசாயிகளில், 10 சதவீதம் பேர் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்குத் தேயிலை வழங்குகின்றனர். அரசின் அறிவிப்பால், இந்த 10 சதவீத விவசாயிகள் மட்டுமே பயனடைவர். கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலை தேயிலை விவசாயிகள் என அனைவருக்கும் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

August 06, 2011

பிள்ளையார் முகம் கொண்ட அதிசயமான மாம்பழம்
by admin - 0

கல்முனை வைத்தியசாலை வீதியில் உள்ள தமிழர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த அதிசய மாம்பழம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார் முகங்கொண்ட பழத்தை வீட்டார், கல்முனை புலவி பிள்ளையார் ஆலயத்துக்கு ஒப்படைத்துள்ளனர். அந்த ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் இந்த அதிசயத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
Read More

81 ஆம் ஆண்டில் தடம் வீரகேசரிக்கு வாழ்த்துக்கள்-- விவசாயி
by admin - 0

"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்'' என்கின்ற முதுமொழி அனுபவித்து கூறப்பட்டதாகும். இந்த அற்புத வாக்கியத்தை நாம் ஒவ்வொருவரும் உணருவது ""பத்திரிகை'' எனும் நாளிதழ்களின் மூலமே. அந்த வகையில் கொழும்பில் 06.08.1930 ஆம் ஆண்டில் உதயமான இந்த வீரகேசரி தனது ஒன்பதாவது தசாப்தத்தில் அதாவது 81 ஆம் ஆண்டில் தடம் பதித்து நிற்பது நம் தமிழர்கள் அனைவருக்குமே பெருமிதமான விடயம்.


வீரகேசரிக்கு வாழ்த்துக்கள்.... விவசாயி
Read More

ஐந்து தினங்கள் விவசாய கண்காட்சி
by admin - 0

  யாழ் மாவட்ட விவசாய ஆராட்சி  நிலையத்தின் விவசாய கண்காட்சி எதிர்வரும் 18 திகதி வியாழக்கிழமை தொடக்கம்22 ஆந் திகதி திங்கட்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு திருநெல்வேலி  விவசாய பயிட்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது .விவசாய உட்பத்தியில் நவீன முறைகள் உத்திகள் என்பவற்றை விவசாயிகள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் இக் கண்காட்சி ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது இதில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு விவசாய பணிப்பாளர் எஸ் .சிவகுமார் அறிவித்துள்ளார் 
Read More

பேஸ்புக்கிலிருந்து விலகிய மார்க் ஸூக்கர் பேர்க்கின் சகோதரி: கூகுள் + உடன் இணைவாரா? _
by admin - 0

பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஸூக்கர்பேர்க்கின் சகோதரியும், அச் சமூகவலையமைப்பின் சந்தைப்படுத்தல் இயக்குநருமான ரெண்டி ஸூக்கர்பேர்க் தான் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரெண்டி ஸூக்கர்பேர்க் தான் வேறு ஓர் ஊடக நிறுவனத்தினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதனாலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது இராஜினாமாக் கடிதத்தினையும் பேஸ்புக் நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். Get cash from your website. Sign up as affiliate.


இது தொடர்பில் மார்க் ஸூக்கர்பேர்க் எவ்வித அறிவிப்பையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

எனினும் அவரது இராஜினாமாவை உறுதிசெய்துள்ள பேஸ்புக் அவரது சேவைக்கு நன்றியுடன் விடையளிப்பதாக தெரிவித்துள்ளது.

ரெண்டி ஸூக்கர்பேர்க் பேஸ்புக்கில் சுமார் 6 வருடங்கள் பணி புரிந்தவராவார்.

இவர் தான் குறிப்பிட்டுள்ளதைப் போல தனது சொந்த நிறுவனத்தினை ஆரம்பிப்பாரா அல்லது கூகுள் + சமூகவலையமைப்பில் இணைவாரா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 
Read More

August 05, 2011

தமிழன் வாழ்ந்த குமரிக்கண்டம் என்னும் இடம் கடலுக்குள் போனதுபோல் 2012 தரை கடலாகுமா?video in
by admin - 0

உறுதிப்படுத்தும் பைபிள்










Read More

நோட்டோ தாக்குதலில் கடாபியின் 7வது மகன் உள்பட 32 பலி
by admin - 0

நேட்டோ படைத் தாக்குதலில் லிபிய இராணுவப் படைத் தளபதிகளில் ஒருவரான கடாபியின் 7வது மகன் காமிஸ் உள்பட 32 பேர் பலியாகினர் என்று போராளிகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருப்பவர் கடாபி. அவரைப் பதவி விலக வலியுறுத்தி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அடக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐ.நா.சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடாபி பதவி விலகும்படி அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் கடாபியின் 7-வது மகன் காமிஸ் உள்பட 32 பேர் பலியாகியுள்ளனர்.

ஜ்லிடானில் உள்ள கடாபியின் நம்பிக்கைக்கு பாத்திரமான படைகள் மீது நேட்டோ படை தாக்குதல் நடத்தியது என்று போராளிகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்த எதுவும் தெரிவிக்க முடியாது. நாங்கள் வானில் இருந்து தான் தாக்குதல் நடத்தினோம். தரையில் எங்கள் படையில்லை. ஆனால் தாக்குதல் குறித்து கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திரிபோலி அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் காமிஸ் கடாபி இறந்துவிட்டதை மட்டும் உறுதிபடுத்தியுள்ளது.

கடாபியின் 7-வது மகன் காமிஸ் லிபியா ராணுவத்தின் 32-வது பிரிகேடின் தலைவராக இருந்தார். போராளிகள் வசம் உள்ள மிஸ்ராடா மற்றும் திரிபோலிக்கு இடையேயுள்ள ஜ்லிடானில் இந்த படை போராடி வந்தது. காமிஸின் மரணம் இந்தப் படைக்கு பேரிழப்பாகும்.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நேட்டோ படை நடத்திய தாக்குதலில் கடாபியின் இன்னொரு மகன் சைப் அல் அராப் மற்றும் 3 பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Read More

யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 11 பதக்கங்கள் பெற்று சாதனை
by admin - 0

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்கள் 8 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்கள் என்பவற்றைப் பெற்றுக் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவ்விளையாட்டு நிகழ்வுகள் வவுனியா பூந்தோட்டம் கல்வியியற்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இவ்விளையாட்டுப் போட்டியில் 15 வயதுப் பிரிவு உயரம் பாய்தலில் ஆர்.செந்தூரன் தங்கப் பதக்கத்தையும், 19 வயதுப்பிரிவு 400 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ஜி.சிவேந்திரன் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதே பிரிவில் நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சால் போட்டிகளில் வி.யஸ்மினன் முறையே தங்கப்பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும், 21 வயதுப்பிரிவு 1500 மீற்றர் ஓட்டம் மற்றும் 800 மீற்றர் ஓட்டத்தில் ஆர். சதீசன் முறையே தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இதே பிரிவில் குண்டு எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டியில் கே.பிரகாஷ் முறையே இரு தங்கப்பதக்கங்களையும் பெற்றுக் கொண் டார். அத்துடன் அஞ்சலோட்டப் போட்டியில் இரு தங்கப்பதக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

19 வயதுப் பிரிவுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த மைதான வீரனாகவும் 2011 ஆம் ஆண்டு மாகாண மட்டப் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த மெய்வன்மை வீரனாகவும் வி.யஸ்மினன் தெரிவு செய்யப்பட்டார்.
Read More

யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தை கிளி.அறிவியல் நகருக்கு மாற்ற அங்கீகாரம்
by admin - 0

யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தை கிளிநொச்சி அறிவியல் நகருக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதேஇடத்தில் பொறியியல் பீடத்தையும் தற்காலிகமாக இயங்கவைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க, பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரி பத்திரம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விவசாயபீடத்தை இயக்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ள அறிவியல்நகர் பகுதி 168 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Read More

கோடையில் கோழிகளுக்கு தண்ணீர் பராமரிப்பு
by admin - 0

கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது.
வணிக அளவில் வளர்க்கப் படும் இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ள முடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது.
கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். இத்துடன் தாது உப்புக்களையும் போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன் கோழிகளுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன.
தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம். இதில் குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம்.
தரமற்ற குடிநீர் கோழிக்கு ரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன.
முட்டையிடும் கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவு தண்ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும், அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவே கோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்த அளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.
Read More

இணையத்தின் மூலம் தொலைக்காட்சி தொழிநுட்பத்தில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்யும் கூகுள் _
by admin - 0

பாவனையாளர்களுக்கென பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள கூகுளின் மற்றுமொரு வசதியே கூகுள் டி.வி.

கூகுள் தொலைக்காட்சி (டி.வி) என்பது இணைய இணைப்பின் மூலம் தொலைக்காட்சி வசதியினை வழங்குவதாகும்.

கூகுளின் அண்ட்ரோயிட் இயக்க அமைப்பே தொலைக்காட்சியின் அடிப்படையாகும்.

இணையம் மற்றும் அப்ளிகேஷன்கள் உங்கள் தொலைக்காட்சிக்கு நேரடியாக இணையும் செயற்பாடே இதன்போது நடைபெறுகின்றது. அத்துடன் பல முக்கிய வசதிகளையும் இச் சேவை கொண்டுள்ளது.

கூகுள் தொலைக்காட்சியின் மூலம் நமக்கு தேவையானவற்றை ஒவ்வொரு செனல் அப்ளிகேஷன் மற்றும் இணையத்தின் ஊடாக தேடிப் பெற்றுக்கொள்ள முடியும் அதாவது டி.வி யும் தேடல் பொறியும் ஒன்றாக இணைகின்றன.

உங்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ளது போல டி.வி.யிலும் தற்போது அண்ட்ரோயிட் சந்தையின் ஊடாகவே அப்ளிகேஷன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனை நிர்வகிப்பதற்கான ரிமோர்ட் கொண்ட்ரோல் சாதனமாக குறிப்பிட்ட கையடக்கத்தொலைபேசிகளைப் பயன்படுத்தக் கூடிய வசதியும் இதில் உள்ளது.

'வொய்ஸ்' சேர்ச் வசதியும் உள்ளடங்கியுள்ளமை இதன் மேலதிக சிறப்பு.

இணையத்தினையும், தொலைக்காட்சியினையும் ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியும் இதில் உள்ளது.மேலும் தொலைக்காட்சியின் ஹோம்பேஜை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்து உடனுக்குடன் எக்ஸெஸ் செய்யவும் முடியும்.

நீங்கள் பார்க்கத்தவறிய அல்லது பிடித்த விடயங்களை கூகுள் கியூவில் சேர்த்து பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கும் வாய்ப்பையும் இது வழங்குகின்றது.

இதற்கென தனியான தொலைக்காட்சி;கள் உள்ள போதிலும் தனியாக கிடைக்கும் கூகுள் பொக்ஸினை இணைப்பதன் மூலமும் இவ்வசதியைப் பெறமுடியும்.

அப்பிள் நிறுவனமும் அப்பிள் டி.வி என்ற இணைய தொலைக்காட்சி சேவையினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More

உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் தேமல் நோய்
by admin - 0

கோடை உளுந்து சாகுபடியாளர்களின் கவனத்திற்கு...
உங்கள் உளுந்து பயிரில் இளம் இலைகளில் மஞ்சள் நிற தேமல் போன்ற அறிகுறிகள் காணப் படுகின்றனவா என்று கவனியுங்கள். மஞ்சள் தேமல் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட பயிரின் இலைப்பரப்பில் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றி படிப்படியாக மஞ்சள் நிறப் படலங்களாக மாறிவிடும். உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் மிக முக்கியமானதாகும்.
இந்த நோயானது உளுந்தை மட்டுமின்றி பச்சைப்பயறு, துவரை மற்றும் சோயா மொச்சை போன்றவற்றை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். இந்த நோயின் அறிகுறிகளான மஞ்சள் நிற தேமல் படலங்கள் முதன் முதலில் இளம் இலைகளில்தான் காணப்படும். இந்த நோயின் பாதிப்புக்குட்பட்ட பயிர் முதிர்ச்சியடைய காலதாமதமாகும். மேலும் குறைந்த அளவே பூக்கள் மற்றும் காய்களைக் கொண்டிருக்கும். காய்கள் சிறிய அளவிலும் உருமாறியும் காணப்படும். மஞ்சள் தேமல் நோயானது செடியின் குறைந்த வயதில் (பூக்கும் முன்) தாக்கும்பொழுது பயிரானது காய் பிடிக்காமலேயே இறந்துவிடும் வாய்ப்புள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட செடிகளை உடனே பிடுங்கி அழிப்பதன்மூலம் இந்நோய் பரவாமல் சிறிதளவு தவிர்க்க முடியும். இந்த கொடிய நச்சுயிரி நோய் வெள்ளை ஈ மூலம் பரவுகின்றது.
கட்டுப்படுத்த: மஞ்சள் ஒட்டுப்பொறி: வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்க நெடுஞ்சாலை மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களில் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் பயிர் மட்டத்தில் குச்சிகளில் கவிழ்த்து வைக்க வேண்டும். ஏக்கருக்கு 200 மில்லி டைமீத்தோயேட் அல்லது மானோகுரோட்டோபாஸ் என்ற பூச்சிக்கொல்லியினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். மருந்துக்கரைசல் பயிரின் பாகங்களில் நன்கு பரவிப் படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இன்ட்ரான் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். 10-15 நாட்கள் கழித்து மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க பயிரின் வளர்ச்சியினைப் பொறுத்து ஏக்கருக்கு 200 லிட்டர் வரை மருந்துக்கரைசல் தேவைப்படும்.
Read More

August 03, 2011

வடிவேலுக்கு என்கவுன்டர் -?
by admin - 0

போலீஸ் என்னைத் தேடுவதற்கு நான் ஒன்றும் என்கவுன்டர் குற்றவாளி அல்ல. நான் தலைமறைவாகவுமில்லை. நான்தான் நியாயமாக புகார் தந்திருக்க வேண்டும், என்று வடிவேலு கூறியுள்ளார்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார். தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியதாகவும் அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்று இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நடிகர் வடிவேலு கூறியதாவது:

நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, சென்னையில் இருப்பேன். இல்லாட்டி மதுரைக்கு போவேன். போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என் கவுன்டர் குற்றவாளி அல்ல.

கொஞ்ச நாள் பட வாய்ப்புகளை நிறுத்திட்டு இடம் சம்பந்தமான பிரச்சினைகளை சரி பண்ணிட்டு இருக்கேன்.

ஏமாந்தவன் நானே...

உண்மையை சொன்னா ஏமாந்தவன் நான். வாங்கிய இடங்களை பறி கொடுத்து மோசம் போய் நிற்கிறேன். பிரச்சினைக்குரிய இடத்தை பொறுத்தவரை பத்திரம் காணாமல் போச்சுன்னு பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை காட்டி எனக்கு விற்றனர். இ.சி. போட்டு பார்த்தேன். சரியாதான் இருந்தது.

2002-ல் அந்த நிலத்தை எனக்கு விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். 2009-ல் பழனியப்பன் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன். அவர் 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாக சொன்னார்கள். இ.சி. பார்த்து இருந்தால் என் பெயர் வந்து இருக்கும். அதை எப்படி வாங்கினார் என்று புரியவில்லை. ஒரிஜினல் பத்திரம் காணாமல் போச்சு என்று விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும்.

பழனியப்பன் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. முக்கியமான ஒருத்தர் மூலமா ரூ.1 கோடி தந்தால் விலகிக்கிறேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.

சிரிக்க வைச்சி சம்பாதிச்ச பணம்

உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க, இளைஞர்கள் என எல்லாரையும் சிரிக்க வைச்சு சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன்.

மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க. நான் என் பொண்டாட்டி, குழந்தை எல்லோரும் போலி பத்திரம், தயாரிக்கிறத குடிசை தொழிலாவா செய்துட்டு இருக்கோம். போலி பத்திரம் தயாரிக்கிறது வேற ஆள். நான் ஏமாந்த ஆள். எனக்கு படிப்பறிவு குறைவு பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன். கூடவே இருந்து என் உதவியால் சினிமாவில் நடிச்சி சாமி பக்தியை காட்டி உங்களுக்கு துரோகம் செய்வேனா, அப்படி செஞ்சா என் பிள்ளை விளங்குமா என்றெல்லாம் சொன்னவர் கிட்ட ஏமாந்துட்டேன்.

எங்கும் ஓடல...

என் குல தெய்வமான அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை கொடுத்தேன். எல்லாத்தையும் வாங்கிட்டு போர்ஜரி சொத்தா வாங்கி கொடுத்து ஏமாற்றி விட்டார். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்," என்று கூறியுள்ளார். 
Read More

திருமண வயதை 15ஆக குறைக்க இலங்கை அரசு திட்டம்
by admin - 0

திருமண வயதை 15ஆகக் குறைக்க இலங்கை அரசு ஆலோசித்து வருகிறது என்று பொதுநிர்வாக அமைச்சர் ஜான் செனவிரட்னே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது திருமண வயது 18ஆக உள்ளது. ஆனால் இதை 15ஆக குறைப்பது குறித்து இலங்கை அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இது குறித்து அந்நாட்டு பொது நிர்வாகத் துறை அமைச்சர் ஜான் கூறியதாவது,

திருமண வயதை 18ல் இருந்து 15ஆக குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சிறுவர், சிறுமியர் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை கருத்தில் கொண்டு தான் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. இருப்பினும், இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றார்.
Read More

August 02, 2011

லிபிய பிரேகா நகர் வீழ்ச்சி : கிளர்ச்சியாளர்கள் தெரிவிப்பு _
by admin - 0

லிபியாவின் கிழக்கு பிராந்திய நகரான பிரேகாவை மீளக் கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேகா நகரைச் சுற்றி வளைத்துள்ள போதிலும் அந்நகர வீதிகள் கண்ணிவெடிகள் நிறைந்து காணப்படுவதால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளதாக கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் ஷமிஸ்தீன் அப்துல்மோலா குறிப்பிட்டுள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாத லிபிய அரச படைகள் தற்போது ராஸ் லானப் நகரை நோக்கிப் பின்வாங்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எண்ணெய் வளம்மிக்க பிரேகா நகரின் வீழ்ச்சியானது கடாபி அரசாங்கத்திற்கு பாரிய அடியென கூறப்படுகின்றது.

எனினும் பிரேகா நகரின் வீழ்ச்சி தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் எத்தகைய செய்தியையும் இதுவரை வெளியிடவில்லை.
Read More

உலகின் மிகப் பெரிய குகையான ஹாங் சொன் டொங்கின் மிரட்டலான உட்பக்கம் (பட இணைப்பு)
by admin - 0

'ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும்.

இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகின்றது.

வியட்நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகையானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இக்குகையின் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிரட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக்கான காரணம் அதனுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.


2009 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர்ந்தே இது தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதன் நீளம் 2.5 மைல்கள் உயரம் 800 அடி என்பதுடன் அகலம் 300 அடியெனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இக்குகையின் உள்ளேயே காடு அமைந்திருப்பது இதன் விசாலத்திற்கு ஓர் உதாரணம்.

மேலும் சுமார் 150 குகைகள் இப் பிரதான குகையோடு இணைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இக் குகையானது 2 முதல் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
Read More

August 01, 2011

வவுனியாவில் தேசிய விவசாய வாரம்
by admin - 0

உணவுற்பத்தியில் இலங்கை தன்னிறைவு காண வேண்டும் என்பது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்ற வகையில், விவசாய செய்கையை நாடு முழுதும் ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன வவுனியாவில் தெரிவித்திருக்கின்றார்.
வவுனியாவில் திங்களன்று ஆரம்பமான தேசிய விவசாய வாரத்தின் தொடக்க வைபவத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், இலங்கைக்கு பெரும் தொகையான கோதுமையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதனால் ஏற்படும் செலவு நாட்டு மக்களின் உழைப்பை சுரண்டுவதாக அவர் கூறினார்.
நாம் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டால் கோதுமை மா இறக்குமதியை முழுமையாக நிறுத்த முடியும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார் டி.எம்.ஜயரத்ன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மக்களின் வாழ்க்கையையும், விவசாய முயற்சிகளையும் மேம்படுத்துவதற்காகவே இந்த வருடம் தேசிய விவசாய வாரம் வவுனியாவில் கொண்டாடப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எந்த ஓர் இனத்திற்கும் பாகுபாடு காட்டவோ அல்லது அவர்களைத் துன்புறுத்தவோ எண்ணவி்ல்லை. நாட்டில் உள்ள அனைவரையும் சமமாகவே நடத்தி வருகின்றது என்று கூறிய பிரதமர், 30 வருட கால யுத்தம் முடிந்துள்ளதையடுத்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மேம்பாட்டிற்கும், அங்கு அரிசி உற்பத்தியை பெருக்குவதற்கும் அரசாங்கம் பல்வேறு அடிப்படை உதவிகளை வழங்கியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
Read More