உணவுற்பத்தியில் இலங்கை தன்னிறைவு காண வேண்டும்
என்பது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்ற வகையில், விவசாய செய்கையை நாடு
முழுதும்
ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன வவுனியாவில்
தெரிவித்திருக்கின்றார்.
வவுனியாவில் திங்களன்று ஆரம்பமான
தேசிய விவசாய வாரத்தின் தொடக்க வைபவத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர்,
இலங்கைக்கு பெரும் தொகையான
கோதுமையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதனால்
ஏற்படும் செலவு நாட்டு மக்களின் உழைப்பை சுரண்டுவதாக அவர் கூறினார்.
நாம் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டால் கோதுமை மா இறக்குமதியை முழுமையாக நிறுத்த முடியும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த
முடியும் என்றும் கூறியுள்ளார் டி.எம்.ஜயரத்ன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மக்களின் வாழ்க்கையையும், விவசாய முயற்சிகளையும் மேம்படுத்துவதற்காகவே இந்த வருடம் தேசிய
விவசாய வாரம் வவுனியாவில் கொண்டாடப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எந்த
ஓர் இனத்திற்கும் பாகுபாடு காட்டவோ அல்லது அவர்களைத் துன்புறுத்தவோ
எண்ணவி்ல்லை. நாட்டில்
உள்ள அனைவரையும் சமமாகவே நடத்தி வருகின்றது என்று கூறிய
பிரதமர், 30 வருட கால யுத்தம் முடிந்துள்ளதையடுத்து யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட
பிரதேசங்களின் மேம்பாட்டிற்கும், அங்கு அரிசி உற்பத்தியை
பெருக்குவதற்கும் அரசாங்கம் பல்வேறு அடிப்படை உதவிகளை வழங்கியிருக்கின்றது
எனவும் தெரிவித்தார்.
No comments
Post a Comment