Latest News

August 01, 2011

பிரபுதேவா - நயன்தாரா திருமணம்: மும்பையில் நடத்த ஏற்பாடு
by admin - 0

மனைவி ரமலத்தை விவாகரத்து செய்து விட்ட நடன இயக்குனர் பிரபுதேவா தனது காதலியான நடிகை நயனதாராவை மும்பையில் வைத்து மணம் புரிய திட்டமிட்டுள்ளாராம்.
சென்னை அல்லது கேரளாவில் கல்யாணத்தை நடத்தினால் ரசிகர்களும், பத்திரிக்கைக்காரர்களும் தொல்லையாக அமைவார்கள் என்று அஞ்சுவதால் கல்யாணத்தை மும்பைக்கு மாற்றம் செய்துள்ளார்களாம்.
மும்பைக்கு கல்யாணத்தை மாற்றலாம் என்று முக்கிய நடிகர் ஒருவர் தான் பிரபுதேவாவுக்கு அறிவுரை கொடுத்தாராம். அங்கு வைத்தால் தான் இந்த ஊடகங்கள் தொல்லையைத் தவிர்க்கலாம் என்பது அவரது அறிவுரையாம்.
மனைவியாக ரமலத் நீடித்து வந்த நிலையில், நயனதாராவுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த பிரபுதேவா, கடும் கஷ்டப்பட்டு சமீபத்தில் தான் ரமலத்தை விவாகரத்து செய்தார். இதையடுத்து தற்போது நயனதாராவைக் கல்யாணம் செய்து கொள்ள படு வேகமாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
சென்னை, ஹைதராபாத், கொச்சி என பல இடங்களை முதலில் பரிசீலித்தனர். இறுதியில் மும்பை என தற்போது தீர்மானித்துள்ளனர். மிக மிக நெருங்கிய உறவினர்கள், நட்பு வட்டாரத்தை மட்டும் திருமணத்திற்கு அழைக்கப் போகிறார்களாம் இருவரும்.
நடிகர் சிம்பு, நடிகை மீனா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுப்பார்களா என்பது தெரியவில்லை.
« PREV
NEXT »

No comments