Latest News

August 05, 2011

யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 11 பதக்கங்கள் பெற்று சாதனை
by admin - 0

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்கள் 8 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்கள் என்பவற்றைப் பெற்றுக் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவ்விளையாட்டு நிகழ்வுகள் வவுனியா பூந்தோட்டம் கல்வியியற்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இவ்விளையாட்டுப் போட்டியில் 15 வயதுப் பிரிவு உயரம் பாய்தலில் ஆர்.செந்தூரன் தங்கப் பதக்கத்தையும், 19 வயதுப்பிரிவு 400 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ஜி.சிவேந்திரன் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதே பிரிவில் நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சால் போட்டிகளில் வி.யஸ்மினன் முறையே தங்கப்பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும், 21 வயதுப்பிரிவு 1500 மீற்றர் ஓட்டம் மற்றும் 800 மீற்றர் ஓட்டத்தில் ஆர். சதீசன் முறையே தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இதே பிரிவில் குண்டு எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டியில் கே.பிரகாஷ் முறையே இரு தங்கப்பதக்கங்களையும் பெற்றுக் கொண் டார். அத்துடன் அஞ்சலோட்டப் போட்டியில் இரு தங்கப்பதக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

19 வயதுப் பிரிவுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த மைதான வீரனாகவும் 2011 ஆம் ஆண்டு மாகாண மட்டப் போட்டியில் ஆண்களுக்கான சிறந்த மெய்வன்மை வீரனாகவும் வி.யஸ்மினன் தெரிவு செய்யப்பட்டார்.
« PREV
NEXT »

No comments