Latest News

August 05, 2011

இணையத்தின் மூலம் தொலைக்காட்சி தொழிநுட்பத்தில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்யும் கூகுள் _
by admin - 0

பாவனையாளர்களுக்கென பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள கூகுளின் மற்றுமொரு வசதியே கூகுள் டி.வி.

கூகுள் தொலைக்காட்சி (டி.வி) என்பது இணைய இணைப்பின் மூலம் தொலைக்காட்சி வசதியினை வழங்குவதாகும்.

கூகுளின் அண்ட்ரோயிட் இயக்க அமைப்பே தொலைக்காட்சியின் அடிப்படையாகும்.

இணையம் மற்றும் அப்ளிகேஷன்கள் உங்கள் தொலைக்காட்சிக்கு நேரடியாக இணையும் செயற்பாடே இதன்போது நடைபெறுகின்றது. அத்துடன் பல முக்கிய வசதிகளையும் இச் சேவை கொண்டுள்ளது.

கூகுள் தொலைக்காட்சியின் மூலம் நமக்கு தேவையானவற்றை ஒவ்வொரு செனல் அப்ளிகேஷன் மற்றும் இணையத்தின் ஊடாக தேடிப் பெற்றுக்கொள்ள முடியும் அதாவது டி.வி யும் தேடல் பொறியும் ஒன்றாக இணைகின்றன.

உங்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ளது போல டி.வி.யிலும் தற்போது அண்ட்ரோயிட் சந்தையின் ஊடாகவே அப்ளிகேஷன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனை நிர்வகிப்பதற்கான ரிமோர்ட் கொண்ட்ரோல் சாதனமாக குறிப்பிட்ட கையடக்கத்தொலைபேசிகளைப் பயன்படுத்தக் கூடிய வசதியும் இதில் உள்ளது.

'வொய்ஸ்' சேர்ச் வசதியும் உள்ளடங்கியுள்ளமை இதன் மேலதிக சிறப்பு.

இணையத்தினையும், தொலைக்காட்சியினையும் ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியும் இதில் உள்ளது.மேலும் தொலைக்காட்சியின் ஹோம்பேஜை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்து உடனுக்குடன் எக்ஸெஸ் செய்யவும் முடியும்.

நீங்கள் பார்க்கத்தவறிய அல்லது பிடித்த விடயங்களை கூகுள் கியூவில் சேர்த்து பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கும் வாய்ப்பையும் இது வழங்குகின்றது.

இதற்கென தனியான தொலைக்காட்சி;கள் உள்ள போதிலும் தனியாக கிடைக்கும் கூகுள் பொக்ஸினை இணைப்பதன் மூலமும் இவ்வசதியைப் பெறமுடியும்.

அப்பிள் நிறுவனமும் அப்பிள் டி.வி என்ற இணைய தொலைக்காட்சி சேவையினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments