Latest News

May 31, 2011

அசாம் கோரச்சம்பவம்; 2 விபத்துக்களில் 40 பேர் பலி;மணமகனை அழைத்து சென்றபோது துயரம்
by admin - 0


கவுகாத்தி: அசாமில் இன்று காலையில் நடந்த இரு வேறு விபத்துக்களில் சிக்கி 37 பேர் பலியாகிவிட்டனர். பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்சில் இடிபாடுகளில் சிக்கியவர்கள், மற்றும் ஆயில் டேங்கருடன் பஸ் மோதியதில் பலர் தீக்காயங்களுடனும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர். திருமண விஷேடத்திற்கு சென்றவர்களும், மற்றொரு காரில் சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகளும் இறந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கிராம மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

குழந்தைகள்- பெண்கள் பலி: கவுகாத்தியிலிருந்து திகு நோக்கி ஒரு பஸ் மலைஇடுக்குகள் இணைக்கும் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. ஹஜோ கவுகாத்திரோடு சொரபாரி என்ற இடத்தில் செல்லும் போது டயர் பழுதாகி பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கவுகாத்தியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த திருமண கோஷ்டியினர் இந்த பஸ்சில் பயணித்தனர். மணமகனை அழைத்து மணமகள் இல்லத்திற்கு சென்றபோது இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. மணமகன் நபாகுமார் சர்மா இவரது பெற்றோர்கள் நண்பர்கள் உயிரிழந்து விட்டனர். குழந்தைகளும், பெண்களும் அதிகம் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். டிரைவர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மரப் பாலத்தில் இருந்து தவறி பள்ளத்தாக்கில் ( நீ‌ரோடை) கவிழ்ந்தது என நேரில் பார்த்த கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். 6 பேரை உயிருடன் மீட்டனர் ஏனையோர் நீரில் மூழ்கி பிணமாயினர். இந்த பஸ்சில் 40 பேர்இருந்தனர். இன்னும் சில‌ரை தண்ணீரில் தேடும் பணி தொடர்கிறது.

மற்றொரு விபத்தில் தீ பிடித்த பஸ் : காசிரங்கா தேசிய பூங்கா அருகே பொக்காகட் எனும் பகுதியில் பஸ்சும் - ஆயில் டாங்கர் லாரியும் மோதிக் கொண்டன. இதில் பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பஸ்சும் ஆயில் டாங்கர் லாரியும் மோதிக் கொண்டது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இரு வேறு சம்பவங்கள் ஒரே மாநிலத்தில் நடந்து 30 க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கும் சம்பவம் அசாம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடிக்கடி அசாமில் நடக்கும் விபத்துக்கள்: அசாம் மாநிலத்தை பொறுத்தவரை வனம் மற்றும் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் இங்கு விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் சாலை போக்குவரத்து மோசமாக இருப்பதாகவும், மோசமான ரப் டிரைவிங் மற்றும் அநுபவம் இல்லாத டிரைவர்கள் ஒட்டுவது உள்ளிட் காரணங்களினால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அசாமில் ஆண்டுக்கு 5 ஆயிரம் விபத்துக்கள் நேரிடுவதாகவும் கூறினார்.
Read More

May 30, 2011

ரஜனியின் புதிய படம் இழந்த சுறுசுறுப்பு
by admin - 0



படத்தை facebook






 இணைக்க
Read More

நடிகர் கார்த்தி திருமண ஏற்பாடு; மும்பையில் திருமண உடை வாங்குகிறார்
by admin - 0

நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடக்கிறது. கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் உள்ள மணப்பெண் வீட்டில் சமீபத்தில் நடந்தது.

தற்போது திருமண ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் தடபுடலாக நடந்து வருகிறது. மணமகளுக்கான பட்டுப்புடவை, மணமகனுக்கான பட்டுவேட்டி, பட்டு சட்டை ஆகியவை ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மணமகன், மணமகள் இருவரும் அணிவதற்காக பிரத்தியேக ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த ஆடைகளை தேர்வு செய்வதற்காக நடிகர் கார்த்தி மும்பை சென்றுள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். மும்பையில் பிரபல டிசைனர் மூலம் ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அங்குள்ள கடைகளில் மணமகளுக்கு பொருத்தமாக ஆடைகளை கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் தேர்வு செய்கிறார்கள். கார்த்தி தனக்கு பொருத்தமான வரவேற்பு ஆடைகளை தேர்வு செய்கிறார்.
Read More

May 29, 2011

தொலைக்கப்படும் மொபைல் போன்கள்
by admin - 0

அசுர வேகத்தில் மொபைல் போன் பயன்பாடு நம்மிடையே அதிகரித்து வருகிறது. பெரும்பாலானவர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட போன்களில், மூன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டு களைப் பயன்படுத்தி வருகின்றனர். நம்முடைய வாழ்க்கையே நம் மொபைல் போனைச் சுற்றித்தான் வருகிறது. நம்முடைய நண்பர்களுடன் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் உரையாடுவது, வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது எனப் பல்வேறு தளங்களில் மொபைல் போன் கை கொடுக்கிறது.
இருப்பினும் நம் மொபைல் தொலைந்து போனால், நம்முடைய பெர்சனல் தகவல்களும் மற்றவர் களுக்குச் சென்று, அதனால் இழப்பு ஏற்படும் அபாயமும் இதில் உள்ளது. நார்டன் நிறுவனம், இந்தியாவில் இது குறித்த ஓர் ஆய்வினை மேற்கொண்டது. அதில் கண்டறிந்த சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
இந்தியாவில் மொபைல் பயன்படுத்து பவர்களில் 53% பேர் தங்கள் மொபைலைத் தொலைக் கின்றனர்; அல்லது திருடுபவர் களிடம் விட்டு விடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு தொலைப் பவர்கள் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. 
74% பேர் தங்கள் பெர்சனல் தகவல்களை இன்னொரு போன் வழி ரிமோட் வழியில் நீக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளைத் தங்கள் மொபைல் போன்களில் பதித்துள்ளனர். இந்த சேவைக்கென அதிகப் பணம் கொடுத்திருக்கின்றனர். ஆனால், பணத்திற்கேற்ற முழுமையான சேவையினை அவர்கள் பெறுவதில்லை.
42% பேர் தான், தங்கள் மொபைல் போன்களை பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாத்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்து பவர்களாக உள்ளனர்; மற்றும் ஏற்கனவே மொபைல் போன்களைத் தொலைத் தவர்களாக உள்ளனர். 
போனை லாக் செய்திடவும், தகவல்களை அழிக்கவும் மற்றும் ரிமோட் நிலையில் போன் எங்குள்ளது என்று அறியவும் உதவுகின்ற சாப்ட்வேர் தொகுப்பினைப் பெற 80% தயாராக உள்ளனர். 60% பேர் தங்கள் மொபைல் போன் வழியே, வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கத் தயாராக உள்ளனர்.






Read More

ரஜினியின் பெருந்தன்மை! – வைகோ நெகிழ்ச்சி
by admin - 0

மரர் எம்ஜிஆருக்குள்ள அரசியல் சக்தி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உள்ளது. ஆனால் அவரோ நான் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கிறேன். அதற்கே தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்களே, என்கிறார். இப்படி கூறுவதற்கு பெருந்தன்மை வேண்டும், என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சனிக்கிழமை இரவு மருத்துவ சிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். ஆசியாவிலேயே மிகவும் சிறந்த மருத்துவமனை என கருதப்படும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா நேற்று மாலை சைதாப்பேட்டையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிக்சைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அவர் மிகச் சிறந்த மனிதர். எனக்கு நல்ல நண்பர். அவர் பூரண நலம் பெற்று வருவார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது.
அவர் சிங்கப்பூர் செல்லும் முன்பு பேசிய ஆடியோவை அவரது மகள் வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவை நான் கேட்டேன். அதில், ‘நான் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கிறேன். அதற்கே தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்களே, இதற்கு என்ன செய்யப் போகிறேன்,’ என்று ரஜினி கூறுகிறார். இப்படி கூறுவதற்கு எவ்வளவு பெருந்தன்மை வேண்டும்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருந்த அரசியல் சக்தி ரஜினியிடம் இருந்தது. இப்போதும் இருக்கிறது என்பதை இந்த மேடையில் சொல்வதில் எனக்கு தயக்கமில்லை,” என்றார்.
thank to என்வழி





Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சாம்பியன்
by admin - 0

ஐபிஎல் இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை, 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

2010ம் ஆண்டில் முதல் முறையாக சாம்பியன் ஆன சென்னை அணி தற்போது தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டதுடன், ஐபிஎல் பட்டத்தை 2 முறை வென்ற ஒரே அணி என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானே நேற்று நிரம்பி வழிந்தது சென்னை - பெங்களூர் அணிகளின் மோதலைப் பார்க்க. சென்னையில் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்ற சாதனையுடன் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்றைய போட்டியிலும் அபாரமாக ஆடி, ரசிகர்களை விசில் போட வைத்தது.

பிரமாதமான பேட்டிங்கை முதலில் வெளிப்படுத்திய சென்னை, பின்னர் பந்து வீச்சிலும் பெங்களூரை நையப்புடைத்து வெற்றியைத் தட்டிச் சென்றது.

ஒரு அணியின் வெற்றிக்குத் தேவையான அனைத்தும் நேற்று சென்னைக்கு சாதகமாக அமைந்தது. டாஸ் வெல்வது, சிறப்பான ஓப்பனிங், எதிரணியின் முக்கிய வீரர்களை சீக்கிரமே அவட் ஆக்குவது, சிறப்பான பீல்டிங், பந்து வீச்சு- இவை அத்தனையையும் நேற்று சென்னை பெற்றதால் வெற்றி எளிதாக வந்து சேர்ந்தது.

முன்னதாக கேப்டன் டோணி டாஸ் வென்று சென்னை முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதையடுத்து முரளி விஜய்யும், மைக்கேல் ஹஸ்ஸியும் பேட்டிங்கைத் தொடங்கினர்.

இருவரும் சரவெடியாக மாறி சரமாரியாக அடித்து நொறுக்கினர். குறிப்பாக விஜய்யின் ஆட்டத்தில் தீப்பொறி பறந்தது. படு துரிதமாக ஆடிய இருவரும் சென்னையின் ரன் விகிதத்தை எகிறச் செய்தனர். இருவரையும் பிரிக்க கடுமையாக முயன்றது பெங்களூர். ஆனால் 15 ஓவர்கள் வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த தொடரில் மிகப் பெரிய அளவில் விளையாடாத முரளி விஜய் நேற்று மொத்தமாக வைத்து சாத்தி எடுத்து விட்டார். கூடவே மைக் ஹஸ்ஸியும் பிரமாதப்படுத்த பெங்களூர் சுருண்டு போனது.

இருவரும் சேர்ந்து 159 ரன்களைக் குவித்து சென்னையின் நிலையை வலுவாக்கி விட்டனர். 14 ஓவர்களில் இவர்கள் இருவரும் ஒரு தவறான ஷாட் கூட ஆடவில்லை என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரியது 10வது ஓவில்தான் விஜய் ஒரு தவறான ஷாட்டை ஆடினார். இருந்தும் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார்.

இருவரும் ஆளுக்கு ஒரு அரை சதம் போட்டனர். விஜய் 95 ரன்களில் இருந்தபோது சதத்தை நழுவ விட்டு அவுட் ஆனார். அவருக்கு முன்னதாக 63 ரன்களில் ஹஸ்ஸி ஆட்டமிழந்தார். இருப்பினும் அணி அதற்குள் நல்ல நிலையை எட்டியிருந்தது.

கேப்டன் டோணி தன் பங்குக்கு 22 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்தவர்கள் சரிவர ஆடாததால் சென்னை அணி மிகப் பெரிய ஸ்கோரை எட்டும் நிலை நழுவிப் போனது. பிரேவோ கடைசிப் பந்தில் அடித்த சிக்ஸர்தான் சென்னை அணியின் ஸ்கோரை 200ஐத் தாண்டி கொண்டு செல்ல உதவியது.

பின்னர் பெங்களூர் ஆட வந்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களைக் குவித்து ஓய்ந்த சென்னைக்கு பதிலடி தருவார் கெய்ல் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை டக் அவுட் செய்து அவுட்டாக்கி ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார் ஓப்பனிங் பவுலிங் செய்த அஸ்வின்.

அதற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே மயங்க் அகர்வாலையும் அவர் போல்டு ஆக்கி அனுப்ப பெங்களூர் தடுமாற ஆரம்பித்து விட்டது. பின்னர் சுரேஷ் அஸ்வினும், ஜகாதியும் சேர்ந்து தங்களது பந்து வீச்சால் பெங்களூரை திக்குமுக்காட வைத்தனர்.

ஏப் டிவில்லியர்ஸை ஜகாதி 18 ரன்களுக்கு அவுட்டாக்க, போமர்பேக்கையும் அவரே 3 ரன்களில் வெளியேற்றி சென்னையின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கி விட்டார்.

மறுபக்கம் அடித்து ஆட முயன்று வந்த விராத் கோலியை சுரேஷ் ரெய்னா எல்பிடபிள்யூ செய்து பெங்களூர் அணியின் கதையை கிட்டத்தட்டமுடித்து விட்டார்.

ஆனால் மனோஜ் திவாரிமட்டும் சற்று சமாளித்து ஆடி வந்தார். 34 பந்துகளில் 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 42 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ஆனால் மறு முனையில்எந்த வீரரும் நிலைக்கவில்லை என்பதால் திவாரியின் போராட்டம் வீணாகிப் போனது.

கடைசி நேரத்தில் ஜாகிர்கான் 21 பந்துகளில் 21 ரன்களை எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். ஆனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்த பெங்களூரால் 147 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அஸ்வின் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஜகாதி 2 விக்கெட்களைக் கைப்பற்ற, ரெய்னா, பிரேவோ, போலிஞ்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

2வது முறையாக சாம்பியன்

சென்னை அணி 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ளது. மேலும், இந்த சாதனையைச் செய்த முதல் அணியாகவும் திகழ்கிறது.

இதுவரை நடந்துள்ள நான்கு ஐபிஎல் தொடர்களில் 3 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை மட்டுமே. அதில் இரண்டு முறை சாம்பியனாகி தனது ஆணித்தரமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.







Read More

Moon may have as much water as earth has: study
by admin - 0

The moon’s interior may contain 100 times more water than previously thought, perhaps as much as the Earth’s interior has, a new study has claimed.
Scientists have recently discovered water in moon, which was long thought to be a dusty and dry place, after examining lunar rocks brought to Earth in 1972 by the final manned mission to the moon, Apollo 17.
Now, researchers from Case Western Reserve University who analysed the volcanic samples of the ancient lunar crust believe there could be 100 times more water than previously thought, the Daily Mail reported.
In fact, the measured quantities, could be as high as the water contained in the Earth’s upper mantle -- the viscous layer of semi-molten rock that lies just beneath this planet’s crust, the scientists said.
If this is the case, it challenges a long-held theory about the moon’s formation. Most experts believe a huge impact early in Earth’s history ejected material into space that became the moon.
But the force involved should have vaporised much of the future moon’s water. Finding large amounts of water in the moon’s interior casts doubt on this idea, the scientists reported in the journal Science.
Professor James van Orman, who led the research, said: “These samples provide the best window we have to the amount of water in the interior of the moon.
“The interior seems to be pretty similar to the interior of the Earth, from what we know about water abundance.” The orange-coloured beads came from deep within the lunar interior during volcanic eruptions long ago when the moon was still geologically active.
Several space missions have detected water ice in craters at the lunar poles.
Scientists had assumed the water was carried there by meteor impacts. But the new research suggests some of it may also have been thrown up by volcanic eruptions.

Read More

May 28, 2011

நாளையுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம்!
by admin - 0

கடந்த 25 நாள்களாக மக்களை வாட்டி வந்த கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைகிறது.

கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இந்த வெயில் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து வெயிலின் அளவு தமிழகத்தில் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. தென் மேற்குப் பருவ மழை தொடங்குவதற்தான சாதகமான சூழலும் உருவாக ஆரம்பித்துள்ளது.

Read More

2012 உலகம் அழியும் அடித்து கூறுகிறார்கள் நிபுணர்கள் -video in
by admin - 0

2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதிக்கு காத்திருக்கிறார்கள் இதுபோன்ற அழிவுச் செய்திகளில் ஆர்வம் கொண்டோர். அது என்ன 21, டிசம்பர் 2012?

அன்றுதான் உலகின் கடைசி தினமாம். அன்றோடு உலகம் அழிந்துவிடுமாம்! இது மாயா இன மக்களின் பழைய கல்வெட்டுப்படி சொல்லப்படும் கணிப்பாம்.


Read More

செருப்பு அணியாத அமைச்சருக்கு ஜெ., உத்தரவு
by admin - 0




செருப்பு அணியாமல் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமாரை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, செருப்பு அணியுமாறு நேற்று உத்தரவிட்டார்.
அரசியல் கட்சி தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைமை மீது வைத்துள்ள பற்று, பாசம் அளவுக்கு அதிகமானால் என்ன செய்வர் என்றே தெரியாது. சமீபத்தில் ஒரு அ.தி.மு.க., பெண் தொண்டர், ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்பதற்காக, தன் நாக்கையே அறுத்து, கோவில் உண்டியலில் போட்ட சம்பவம் நடந்தது. அந்த வரிசையில், அமைச்சர் பொறுப்பேற்றுள்ள ஒருவர், ஜெயலலிதாவை கடவுளாக நினைப்பதாகவும், அவர் இருக்கும் இடத்தில் செருப்பு அணிவதில்லை என்றும், சபதம் ஏற்று, செருப்பு அணியாமல் இருந்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள அந்த தீவிர தொண்டர் பற்றிய ருசிகர தகவல்: அ.தி.மு.க., மாநில மாணவரணி பொறுப்பில் இருந்த உதயகுமார், சாத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவரை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார். முதல்வர் மீதுள்ள மரியாதை மற்றும் அதீத பக்தியால், செருப்பு போடாமல் தலைமை செயலகத்திற்கு, அமைச்சர் உதயகுமார் வந்து சென்றார்.












Read More

May 27, 2011

ரஜினி இன்று இரவு சிங்கப்பூர் பயணம்
by admin - 0


சென்னை, மே.27: சுவாசக் கோளாறு காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக இன்று இரவு சிங்கப்பூர் புறப்பட்டு செல்கிறார்.ரஜினியுடன் அவரது குடும்பத்தினரும் சிங்கப்பூர் செல்கின்றனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏப்ரல் 29-ம் தேதி ராணா படப்பிடிப்பு தொடக்க தினத்தன்று நடிகர் ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சிறுநீரக பாதிப்பு காரணமாக மூச்சுத் திணறல், அதீத உடல் சோர்வு தொடர்ந்ததால், மே 13-ம் தேதி இரவு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திடீர் முச்சுத் திணறல் காரணமாக மே 18-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதய மருத்துவ நிபுணர் எஸ்.தணிகாசலம் தலைமையிலான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஐந்து முறை ஹீமோ டயாலிஸிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 22) தனி அறைக்கு மீண்டும் மாற்றப்பட்டார்.






Read More

May 26, 2011

ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார் ரஜினி!
by admin - 0

ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு, நேற்று மாலை நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.

முன்னதாக நேற்று காலை 7 மணிக்கு சென்னை பிராட்வேயில் உள்ள ரஜினி காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாட்டையும், திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்தில் தியானத்தையும் முடித்தக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கே திரும்பினார்.

மாலை 6.15 மணிக்கு அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இதுகுறித்து, ரஜினியின் இல்லத்தில் விசாரித்தபோது, "ரஜினி சார் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்", என்றனர்.

ஓய்வுக்காக அவர் அமெரிக்கா செல்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அடுத்த மாதம்தான் படப்பிடிப்பில் பங்கேற்பார்...









தற்போது பூரண நலத்துடன் இருந்தாலும், படப்பிடிப்பு தளத்துக்குள் நோய்த் தொற்று எதுவும் அவருக்கு ஏற்படக் கூடாது என்பதால், ஒரு மாதம் வரை ஓய்விலிருப்பார் என்றும், அதன் பிறகே ராணாவில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. அதுவரை ரஜினி சம்பந்தப்படாத காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது.
Read More

தாயின் உருவில் ஒரு தெய்வம்!
by admin - 0

இருபது ஆண்டுகளுக்கும் மேல், நடமாட முடியாத குழந்தைகளை, பாசம் குறையாமல் வளர்த்து வரும் தாய் சந்திரா: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி கிராமம் தான் என் சொந்த ஊர். கணவர், கொத்தனார் வேலை செய்கிறார். திருமணமான ஒரு ஆண்டிற்குப் பின், முதலில், ஒரு பெண் பிறந்தாள். எல்லா குழந்தைகளையும் போல, நடமாடிக் கொண்டிருந்தாள்.ஆனால், நாளடைவில், கை, கால்களில் அசைவு இல்லாமல் இருந்ததால், டாக்டரிடம் காட்டினோம். அப்பதான், பிறவியிலேயே அவளுக்கு உடல் வளர்ச்சி குறைபாடு உள்ளது தெரிந்தது. மனதை தேத்திக் கொண்டு வளர்க்க ஆரம்பித்தோம்.அடுத்தடுத்து பிறந்த பெண், மற்றும் ஆண் என, இரு குழந்தைகளும், இதே நிலையில் தான் பிறந்தன. மனம் வெறுத்த கணவர், குடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால், வீட்டில் தினமும் பிரச்னை. எட்டு ஆண்டுகளுக்குப் பின், நான்காவதாக பெண் குழந்தை பிறந்தாள்; எந்த குறையும் இல்லாமல் இருக்கிறாள். வள்ளியூரில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். என் நிலையைப் பார்த்து, அவளின் படிப்பு செலவை பள்ளி ஏற் றுக் கொண்டுள்ளது.அதன்பின், நல்லபடியாக குழந்தை பிறக்கும் என நம்பி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன்.அவனுக்கும் அந்த குறை இருந்தது. இருப்பினும், அவன் பள்ளிக்கு செல்கிறான். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மற்ற மூன்று குழந்தைகளுக்கும், என் வீட்டில் உள்ள சிறிய அறை தான் உலகம். பசித்தால், அழ வேண்டும் என்று கூட தெரியாது. நான் தான், நேரம் தவறாமல், படுக்கையிலேயே உணவு ஊட்டி விடுகிறேன்.ஜீன்களின் கோளாறு, சொந்தத்தில் திருமணம் முடித்தது போன்றவை தான் காரணம் என்கின்றனர் டாக்டர்கள். மேற்கொண்டு சிகிச்சை அளிக்கவும், வசதியில்லை.






Read More

இரண்டாம் உலக போரில் பேசும் நாய்களை பயன்படுத்திய ஹிட்லர்
by admin - 0

ஜெர்மனை ஆண்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன.

யூதர்களை நடு நடுங்க வைத்து ஆட்டிப்படைத்த சர்வாதிகாரியான ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார்.

ஹிட்லர் வளர்த்த ப்ளாண்டி என்னும் ஜெர்மன் ஷெஃபர்ட் வகை நாய் அவரது பதுங்குழி காலம் வரை கூடவே இருந்துள்ளது. அவர் தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் தருவாயிலும் அந்த பாசமான நாய் ஹிட்லருடன் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மன் ஷெஃபர்ட்

ஜெர்மனியர்கள் நாய்களை மனிதனுக்கு சமமாக புத்தியுள்ள பிராணிகளாக கருதினார்கள். ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் குறிப்பாக அவற்றின் நுண்ணறிவுத் திறனுக்காகவே வளர்க்கப்பட்டன.

இந்தப் பண்பின் காரணமாகவே அவை இன்றும் புகழ் பெற்று விளங்குகின்றன. நுண்ணறிவைப் பொறுத்த வரையில், பார்டர் கோலி மற்றும் பூடில் என்னும் நாய் வகைகளுக்கு அடுத்தாற்போல, மூன்றாவது இடத்தில் அவை இருப்பதாகக் கருதப்படுகின்றன. இவை எளிய பணிகளை ஐந்தே முறை மீண்டும் மீண்டும் செய்தவுடன் அவற்றைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருந்ததாகவும் மற்றும் 95 சத நிகழ்வுகளில் இவை முதலில் அளிக்கப்படும் கட்டளையை நிறைவேற்றுகின்றன என்றும் நாய்களின் நுண்ணறிவு என்னும் புத்தகத்தில், ஸ்டேன்லி கோரென் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றின் உடல் வலிமையுடன் கூடுதலாக, இந்தப் பண்பும் இணைகையில் இந்த இனத்து நாய்கள், காவல்துறை, பாதுகாவலன் மற்றும் தேட்டம் மற்றும் இடர்மீட்பு நாய் ஆகிய பணிகளுக்கு உகந்தவையாகின்றன; இவை பெரும் உருவம் கொண்ட பிற வளர்ப்பின நாய்களை விடவும் விரைவில் பணிகளைக் கற்றுக் கொண்டு, ஆணைகளைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் கொண்டுள்ளன.

ஹிட்லரின் பேசும் நாய்ப்படை

சர்வாதிகாரி ஹிட்லரும் சிறந்த புத்தியுடைய நாய்களின் படை ஒன்றை வைத்திருந்தார். அந்த நாய்கள் தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றிக்கொள்ள உதவும் என்று ஹிட்லர் நம்பினார். அவர் நாய்களுக்கு என்றே ஒரு சிறப்பு பள்ளி ஒன்றையும் நிறுவியிருந்தார். அப்பள்ளியில் நாய்களுக்கு பேச கற்றுக்கொடுக்கப்பட்டது.

ஹிட்லரின் நாய்ப்படை அதிகாரிகள் கல்வியறிவு உள்ள நாய்களை பேச பயிற்சி அளித்த தோடு, அவற்றின் பாதங்கள் மூலம் சிக்னல்களை கண்டறியவும் கற்றுக் கொடுத்தனர். அந்த நாய்கள் ஒரு நாள் அவற்றின் பாதங்களை தட்டி பேசின.

ஜெர்மனியர்கள் நாய்களை இவ்வாறு அதி புத்திசாலிகளாக பழக்கியதற்கு இரண்டாம் உலக போரில் ராணுவத்திற்கு அவை உதவியாக இருக்கும் என்பதே காரணமாகும். மேலும் இத்தகைய நாய்கள் சிறைச்சாலைகளில் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைத்து நன்கு காவல்காத்தன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன








Read More

பின்லேடன் கொலையின் பழிவாங்கல் தொடர்கிறது: பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது தற்கொலைத் தாக்குதல் _
by admin - 0

வட மேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர்.

இதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இத்தாக்குதலில் அப் பொலிஸ் நிலையத்தின் மூன்று மாடிகளும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதன் பின்னர் அங்கு இடம்பெற்ற 4 ஆவது தாக்குதல் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. _










Read More

வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
by admin - 0


டில்லி அருகே வீட்டின் மீது ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த விமானப் பணியாளர், நோயாளி உட்பட 10 பேர் பலியாயினர்.2 பேர் காயமடைந்துள்ளனர்.

பீகார், பாட்னாவிலிருந்து நேற்றிரவு டில்லிக்கு சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில், விமானிகள் உட்பட எட்டு பேர் பயணம் செய்தனர்.இந்நிலையில், இரவு 10.45 மணியளவில் பரிதாபாத் அருகே விமானம் சென்றபோது, பலத்த சூறைக் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு இரண்டு மாடி வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. அப்போது அந்த வீட்டில் 10 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேர் இறந்து விட்டதாகவும், அவர்களது உடல் மீட்கப்பட்டதாகவும் பரிதாபாத் சப் டிவிஷனல் மாஜீஸ்திரேட் கூறினார். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த அரியானா போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டர். இந்த விமானத்தில் பாட்னாவில் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ராகுல் ராய் என்பவர் மருத்துவர்களுடன் டில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதுஇந்த விபத்து ஏற்பட்டது.







Read More

May 25, 2011

டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு
by admin - 0

புதுடில்லி : டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்தது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன. பார்க்கிங் ஏரியா அருகே குண்டு வெடித்தது. பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் குண்டு இருந்தது.

போலீஸ் ஆய்வு : குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஏ.டி.எஸ்., ( பயங்கரவாத தடுப்பு பிரிவு ) போலீஸ் மற்றும் டில்லி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் இன்று மாலை முதல் தகவல் அளிப்பார்கள் என தெரிகிறது.

பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு : சிறிய ரக குண்டு வெடித்ததை தொடர்ந்து டில்லி ஐகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.








Read More

Explosion in Delhi High Court
by admin - 0

New Delhi, May 25: It seems that the fear of Indian government has been proved true as an explosion occurred near Delhi High Court on Wednesday, May 25.

After the terror attack in Karachi's military base, Indian government had beefed up the security of several places, especially the main cities of the country.

Sources informed that the explosion took place in a car which was parked near Gate No 5 of the Delhi High Court. However, the intensity of the explosion was minor. The cause of the explosion still remain unknown.

Five fire brigades have rushed the place soon after the blast. No casualties have been reported yet. The explosion near the protected High Court area raises question about the security of people in the capital and in the country.

Defence Minister, AK Antony, earlier had claimed, "The development in Pakistan, particularly in Karachi, is a matter of serious concern. We are closely monitoring the situation 24X7 in Pakistan."

"We are taking precautions. We are always taking precautions. We have to be on vigil. Many terrorists are waiting across the border to infiltrate into Indian territory. Our armed forces are always ready to prevent that," asserted the Defence Minister.










Read More

கனிமொழிக்கு சிறை கெடுபிடி அதிகரிப்பு; பழம், ஜூஸ் கொடுக்க தடை
by admin - 0

டெல்லி: வீட்டு உணவு கொடுக்கலாம் என நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு, பழங்கள், பழச் சாறு போன்றவற்றைத் தரக்கூடாது என திஹார் சிறை அதிகாரிகள் கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி திகார் ஜெயிலுக்கு சென்று கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது கனிமொழியிடம் ஒரு பாக்கெட் உலர் பழ வகைகள் மற்றும் ஒரு பாட்டில் பழச்சாறு கொடுக்கப்பட்டது.

கருணாநிதி ஜெயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றதும் கனிமொழி அந்த உலர் பழங்களையும், ஜூஸ் பாட்டிலையும் தன்னுடன் எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. உலர் பழங்களையும், பழச்சாறையும் அவர்கள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர்.

இது குறித்து திகார் ஜெயில் சட்ட அதிகாரி சுனில் குப்தா கூறுகையில், சிறை சட்ட விதிகளின் படி, பார்வையாளர்கள் கொடுக்கும் எந்த பொருளையும் கைதிகள் தங்கள் அறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது. நீதிமன்ற அனுமதி கொடுக்கும் பட்சத்தில் உணவு மட்டும் கொண்டு செல்லலாம்.

கனிமொழி விஷயத்தில், அவரைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் கொடுக்கும் உணவை கனிமொழி எடுத்துச் செல்லலாம் என்று நீதிமன்றம் எந்த சிறப்பு அனுமதியும் கொடுக்கவில்லை. எனவே பழம், ஜூஸ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றார்.

திகார் ஜெயில் இயக்குநர் ஜெனரல் நீரஜ்குமார் கூறு கையில், ஜெயிலுக்குள் யாரும் வி.ஐ.பி. அல்ல. வி.ஐ.பிக்கள் கைதிகளாக வரும்போது நீதிமன்ற அனுமதி இல்லாமல் எந்தவித சலுகையும் கொடுக்க மாட்டோம் என்றார்.

கனிமொழி நீதிமன்றக் காவலில் உள்ள விசாரணைக் கைதி என்பதால் அவருக்கு வீட்டு உணவு தர சிபிஐ நீதிமன்றம் அனுமதித்துள்ளது.








Read More

மைக்ரோசாப்ட் ஸ்கைப் - அடுத்து என்ன?
by admin - 0

இணையத்தில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எதேனும் ஒரு நிறுவனம் தன் தனித்துவம் பெற்ற புரோகிராம் மூலம், மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றிருந்தால், அதனுடன் போட்டியிட புரோகிராம் எதனையும் தயாரிக்காமல், அதனை அப்படியே விலைக்கு வாங்கி, தன் குடைக்குள் கொண்டு வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில் அண்மையில் இணையத்தில் நண்பர்களுடன் வீடீயோ காட்சியுடன் பேச, சேட் செய்திட மற்றும் சார்ந்த சேவையினை, உலகளாவிய அளவில் வழங்கி வரும் ஸ்கைப் சாப்ட்வேர் நிறுவனத்தினை, மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது. இதற்கென மைக்ரோசாப்ட் செலுத்திய தொகை 850 கோடி டாலர். இனி ஸ்கைப் என்னவாகும்? என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது. சிலவற்றிற்கான பதிலை இங்கு காணலாம்.
ஸ்கைப் சேவை தற்போது இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதனாலேயே மக்கள் ஸ்கைப் நிறுவனத்தினை மிகவும் நேசிக்கின்றனர். எனவே, மைக்ரோசாப்ட் இந்த சேவையினை கட்டண சேவையாக நிச்சயம் மாற்றப்போவதில்லை. அப்படி மாற்றினால், இந்த சேவையின் பண்பு மாறும். பல வாடிக்கையாளர்கள் இதிலிருந்து விலகிவிடுவார்கள்.
உயர்நிலையில் ஸ்கைப் சேவை கட்டணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அது மிகவும் குறைவு என்பதுடன், தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குறைந்தும் வந்தது. ஸ்கைப் பயன்படுத்தும் 17 கோடிப் பேர்களில், 90 லட்சம் பேர் மட்டுமே கட்டண சேவையினைப் பயன் படுத்தி வந்தனர். இவர்களின் எண்ணிக்கையும் கடந்த மூன்று ஆண்டுகளில் 20% ஆகக் குறைந்தது. எனவே கட்டண சேவையில் மைக்ரோசாப்ட் ஆர்வம் காட்டாது என உறுதியாகச் சொல்லலாம்.
மைக்ரோசாப்ட் ஸ்கைப் சேவையினை ஒரு தனி நிறுவனப் பிரிவாக அமைத்துள்ளது. ஏற்கனவே அதன் தலைமைப் பொறுப்பில் இருந்த டோனி பிளேட்ஸ் அதே நிலையில் தொடர்கிறார். இதில் மைக்ரோசாப்ட் மேலும் முதலீடு செய்து, இந்த சேவையினை இன்னும் சிறப்பான முறையில் அதிக மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை நிச்சயம் எடுக்க இருக்கிறது.
ஏற்கனவே மைக்ரோசாப்ட் இதே போன்றதொரு சேவையினை, விண்டோஸ் லைவ் மெசஞ்சர் மற்றும் எம்.எஸ்.என்.மெசஞ்சர் என்ற பெயர்களில் நடத்துகிறது. இனி, இதனை ஸ்கைப் சேவைக்குள் கொண்டு வந்து, கூகுள் டாக் மற்றும் யாஹு மெசஞ்சர் சேவைகளுக்குப் போட்டியாக மாற்றலாம். 
இதுவரை ஸ்கைப் சேவையில் மாற்றத்திற்கான புரோகிராம் மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் படுகையில், முதலில் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட்டட் புரோகிராம் தரப்பட்டது. அடுத்து சில மாதங்கள் கழித்தே மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்களுக்கு அவை வழங்கப் பட்டன. அனைத்து ஸ்கைப் பயனாளர் களுக்கும், சேவை தொடர்ந்து கிடைக்கும் என மைக்ரோசாப்ட் உறுதி அளித்திருப்பதால், மேக் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை. தற்போதுள்ள மக்களுக்கான இலவச சேவையை அப்படியே வைத்துக் கொண்டு, இதே ஸ்கைப் சேவையினை நிறுவனங்களுக்கான சேவையாகத் தனியாக வடிவமைத்து, கட்டண அடிப்படையில் மைக்ரோசாப்ட் வெளியிடலாம்.
இந்த ஸ்கைப் சேவை மைக்ரோசாப்ட் சர்வர், பிசினஸ் சாப்ட்வேர் மற்றும் நிறுவனங்களுக்கான சர்வீஸ்களுடன் இணைந்து வெளியிடப்படலாம். 
ஸ்கைப் சேவை, மைக்ரோசாப்ட் வழங்கி வரும் லிங்க், மெசஞ்சர், அவுட்லுக், எக்ஸ் பாக்ஸ் லைவ் மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு கிடைக்கலாம். 
ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு நிச்சயம் ஒரு விஷயம் மைக்ரோசாப்ட் மனதில், ஸ்கைப் சேவையை வாங்கும்போது இருந்திருக்க வேண்டும். அது விளம்பர வருமானமே. சாப்ட்வேர் நிறுவனங்கள் அனைத்துமே, தற்போது இணைய வெளி விளம்பரங்களுக்கு இடம் கொடுத்து வருமானம் ஈட்ட திட்டமிடுகின்றன. குறிப்பாக வீடியோ அடிப்படையிலான விளம்பரங்கள், ஸ்கைப் சேவையில் நிறையத் தர முடியும் என்பதால், மைக்ரோசாப்ட் இந்த வருமானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கலாம். like skype








Skype For Dummies
Read More

தென்னையில் எரிபூச்சி கட்டுப்பாடு
by admin - 0

தென்னையைத் தாக்கும் முக்கிய பூச்சிகளில் ஒன்று கொன்தேலா ரோடுண்டா என்ற எரிபூச்சியாகும். இது அந்துப்பூச்சி இனத்தைச் சேர்ந்த உயிரினம் போன்ற உடலமைப்புடன் காணப்படும். இப்புழுக்களின் உடல்மீது, சிறு உரோமங்களும் அதன் நுனியில் வட்டமான சுரப்பிகளும் இருக்கும். இதிலிருந்து வெளிப்படும் திரவம் தோல் அரிப்பை ஏற்படுத்தும். இந்த வகை எரிபூச்சிகள் சில சமயங்களில் மட்டுமே தோன்றி சேதம் விளைவிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென்மாவட்டங்களில் முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள திண்டுக்கல், தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் எரிபூச்சியின் தாக்கம் கோடை காலத்தில் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை பொதுவாக உயரமாக வளர்ந்துள்ள தென்னை மரங்களைத் தாக்குகின்றன. தண்ணீர் பற்றாக்குறை உள்ள தென்னந்தோப்புகளில் இதன் தாக்கம் மிகுந்து காணப்படும். எரிபூச்சியின் புழுக்கள் தென்னை ஒலையின் பச்சையத்தைச் சுரண்டி சாப்பிட்டு நரம்புகளை மட்டுமே விட்டுவைக்கின்றன. புழுக்களின் கழிவுப் பொருட்கள், மரத்தூள் போல் மரங்களுக்குக் கீழே மண்ணில் கிடந்து இருக்கும். இப்பூச்சிகள் இலைகளைத் தின்பது மட்டுமல்லாமது தென்னம்பாளைகளும் குரும்பைகளும் தாக்கி சேதம் விளைவிக்க வல்லவை.
இப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சி கரும்பழுப்பு நிறமாக 10 மி.மீ. நீளமும் 5 மி.மீ. அகலமும் கொண்ட அளவில் இருக்கும். ஒரு தாய்ப்பூச்சி இலைகளுக்கு அடியில் 200 முட்டைகளுக்கு மேல் இடுகின்றன.

எரிபூச்சியின் கட்டுப்பாடு முறைகள்:
* இந்த எரிபூச்சி சில இடங்களில் சில சமயம் மட்டுமே தோன்றி சேதப்படுத்துவதால் விவசாயிகள் இவற்றை முதலில் கவனமாகக் கண்காணித்து வரவேண்டும்.
* தாய் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தை விளக்குப்பொறிகள் மூலம் கண்டறிய வேண்டும்.
* தாக்கப்பட்ட தென்னை ஓலைகளை சேகரித்து புழுக்கள், கூட்டுப்புழுக்களுடன் எரித்தோ அல்லது புதைத்தோ அழிக்க வேண்டும்.
* போதிய அளவு நீர் பாய்ச்சினால் (சொட்டு நீர் / தெளிப்பு நீர் / வாய்க்கால் பாசன நீர்) எரிபூச்சியின் தாக்குதலை ஓரளவு குறைக்க முடியும்.
* இயற்கையாகவே காணப்படும் குளவி வகை ஒட்டுண்ணிகள் எரிபூச்சிகளின் புழு மற்றும் கூட்டுப் புழுகளைத் தாக்கி உயிரியல் ரீதியாக கட்டுப் படுத்துகின்றன.
* சேதம் மிகுந்து காணப்பட்டால் டைகுளோர் வாஸ் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி கலந்து ராக்கர் அல்லது பெடல் பம்பு தெளிப்பான்கள் மூலம் ஓலைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
* மாற்று மருந்துகளாக மீதைல் டெமட்டான் 4 மிலி/லி அல்லது ட்ரைஅசோபாஸ் 5 மிலி/லி போன்றவற்றையும் தெளிக்கலாம்.
* உயரமான மரங்களுக்கு டிராக்டர் பொருத்தப்பட்ட மரத்தெளிப்பான் உபயோகித்து பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கலாம்.
* எரிபூச்சியின் தாக்குதல் பற்றிய சேதத்தை சமாளிக்க விவசாயிகள் அனைவரும் ஒரே சமயத்தில் செயல்பட வேண்டும்.
* கருவிகள் பயன்படுத்த முடியாத இடங்களில் மிக உயர்ந்த மரங்களுக்கு 15 மிலி மோனோகுரோட்டோபாஸ் மருந்தை 15மிலி நீருடன் சேர்த்து வேர் மூலம் செலுத்தியும் இலை தின்னும் தென்னை எரிபூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.








Read More

வைக்கோல் பெட்டி
by admin - 1

வைக்கோல் பெட்டி என்ற எளிய குறைந்த செலவிலான எரிபொருள் சேமிப்பு சாதனத்தை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மனையியல் விரிவாக்கத்?துறை (மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை) உருவாக்கியுள்ளது. இப்பெட்டியில், வெப்பம் உள்ளிருந்து வெளியேறுவது தடுக்கப்பட்டு வெப்ப ஆற்றல் சேமிக்கப்பட்டு, உணவு பொருட்களைச் சமைப்பதற்கும், சூடு ஏற்றுவதற்கும் உதவுகிறது. வைக்கோல் பெட்டியில், உள்ளூரில் கிடைக்கக்கூடிய வைக்கோல் மற்றும் உமி போன்ற வேளாண் கழிவுகள் உபயோகப்படுத்தப்படுகிறது.

வைக்கோல் பெட்டி வடிவமைத்தல்:
கீழ்க்கண்ட அளவில் பெட்டி அமைக்கப்பட வேண்டும். நீளம்-45 செ.மீ., அகலம்-45 செ.மீ., உயரம் -45 செ.மீ. மரப்பெட்டி, கார்ட்போர்டு பெட்டி, மூங்கில் கூடை, சிமென்ட் தொட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம்.
வடிவமைத்தல்: கார்ட்போர்டு பெட்டியை தயாராக வைக்கவும். பெட்டியில் வைக்கோல் நிரப்பவும். பெட்டியின் அளவைப்போல் உள்ள சணல் பையில் வைக்கோல் நிரப்பவும்.

சமைக்கும் முறை (உதாரணம் - அரிசி)
* கழுவிய அரிசியை பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
* இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றவும்.
* 10 நிமிடம் அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும்.
வைக்கோல் பெட்டியின் நடுவில் பாத்திரம் வைக்கும் அளவிற்கு இடத்தை ஏற்படுத்தவும்.
* அடுப்பில் இருந்து பாத்திரத்தை எடுத்து வைக்கோல் பெட்டியில் வைக்கவும்.
* பெட்டியை வைக்கோல் நிரம்பிய சணல் பை கொண்டு மூடிவைக்கவும்.
* வைத்து 45 நிமிடத்திற்குள் அரிசி நன்கு சமைக்கப்பட்டும் (5-6 மணி நேரம் வரை சூடாக இருக்கும்).

நன்மைகள்:
* பாதுகாப்பானது, கையாளுவதற்கு எளிய முறை.
*குறைந்த செலவு
* சுலபமான பராமரிப்பு முறை
* சமைப்பதற்கு குறைவான நேரமே ஆகிறது.
* வெப்பநிலை பராமரிப்பு: தேவைப்படும் வெப்ப அளவை 6 மணி நேரத்திற்கு தக்கவைக்க முடியும். சமைக்கப்பட்ட அரிசியை 61 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 5 மணி நேரம் வரை வைக்கோல் பெட்டியில் வைக்கும்போது பராமரிக்கலாம். ஆனால் வெளியில் வைக்கும்பொழுது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையே பராமரிக்க முடிகிறது.
* உயர்தர உணவு வகைகள்: இம்முறையில் தயாரிக்கப்படும் உணவு, மற்ற முறையில் சமைக்கப் படுவதைக் காட்டிலும் மணம், நிறம், பதம், சுவை ஆகியவற்றில் நல்ல தரம் வாய்ந்ததாக உள்ளது.
* குறைந்த அளவு ஊட்டச்சத்து இழப்பு: சமைக்க பயன்படுத்தும் நீர் முழுமையாக பயன்படுத்தப் படுவதால் குறைந்த அளவு ஊட்டச்சத்தையே இழக்கிறோம். மூலப்பொருட்களை சேமிக்க முடிகிறது.
* இம்முறையில் எரிபொருள், பணம், நேரம், ஆள் செலவு ஆகியவற்றை சேமித்து, சுகாதார கேடுகளையும் தடுக்க முடிகிறது. 58% சமைக்கும் நேரமும், 44% எரிபொருளுக்கான பணமும் சேமிக்கப்படுகிறது.








Read More