Latest News

May 29, 2011

ரஜினியின் பெருந்தன்மை! – வைகோ நெகிழ்ச்சி
by admin - 0

மரர் எம்ஜிஆருக்குள்ள அரசியல் சக்தி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உள்ளது. ஆனால் அவரோ நான் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கிறேன். அதற்கே தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்களே, என்கிறார். இப்படி கூறுவதற்கு பெருந்தன்மை வேண்டும், என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சனிக்கிழமை இரவு மருத்துவ சிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். ஆசியாவிலேயே மிகவும் சிறந்த மருத்துவமனை என கருதப்படும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா நேற்று மாலை சைதாப்பேட்டையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிக்சைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அவர் மிகச் சிறந்த மனிதர். எனக்கு நல்ல நண்பர். அவர் பூரண நலம் பெற்று வருவார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது.
அவர் சிங்கப்பூர் செல்லும் முன்பு பேசிய ஆடியோவை அவரது மகள் வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவை நான் கேட்டேன். அதில், ‘நான் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கிறேன். அதற்கே தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்களே, இதற்கு என்ன செய்யப் போகிறேன்,’ என்று ரஜினி கூறுகிறார். இப்படி கூறுவதற்கு எவ்வளவு பெருந்தன்மை வேண்டும்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருந்த அரசியல் சக்தி ரஜினியிடம் இருந்தது. இப்போதும் இருக்கிறது என்பதை இந்த மேடையில் சொல்வதில் எனக்கு தயக்கமில்லை,” என்றார்.
thank to என்வழி





« PREV
NEXT »

No comments