
செருப்பு அணியாமல் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமாரை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, செருப்பு அணியுமாறு நேற்று உத்தரவிட்டார்.
அரசியல் கட்சி தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைமை மீது வைத்துள்ள பற்று, பாசம் அளவுக்கு அதிகமானால் என்ன செய்வர் என்றே தெரியாது. சமீபத்தில் ஒரு அ.தி.மு.க., பெண் தொண்டர், ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்பதற்காக, தன் நாக்கையே அறுத்து, கோவில் உண்டியலில் போட்ட சம்பவம் நடந்தது. அந்த வரிசையில், அமைச்சர் பொறுப்பேற்றுள்ள ஒருவர், ஜெயலலிதாவை கடவுளாக நினைப்பதாகவும், அவர் இருக்கும் இடத்தில் செருப்பு அணிவதில்லை என்றும், சபதம் ஏற்று, செருப்பு அணியாமல் இருந்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள அந்த தீவிர தொண்டர் பற்றிய ருசிகர தகவல்: அ.தி.மு.க., மாநில மாணவரணி பொறுப்பில் இருந்த உதயகுமார், சாத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவரை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார். முதல்வர் மீதுள்ள மரியாதை மற்றும் அதீத பக்தியால், செருப்பு போடாமல் தலைமை செயலகத்திற்கு, அமைச்சர் உதயகுமார் வந்து சென்றார்.
No comments
Post a Comment