Latest News

May 27, 2011

ரஜினி இன்று இரவு சிங்கப்பூர் பயணம்
by admin - 0


சென்னை, மே.27: சுவாசக் கோளாறு காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக இன்று இரவு சிங்கப்பூர் புறப்பட்டு செல்கிறார்.ரஜினியுடன் அவரது குடும்பத்தினரும் சிங்கப்பூர் செல்கின்றனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏப்ரல் 29-ம் தேதி ராணா படப்பிடிப்பு தொடக்க தினத்தன்று நடிகர் ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சிறுநீரக பாதிப்பு காரணமாக மூச்சுத் திணறல், அதீத உடல் சோர்வு தொடர்ந்ததால், மே 13-ம் தேதி இரவு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திடீர் முச்சுத் திணறல் காரணமாக மே 18-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதய மருத்துவ நிபுணர் எஸ்.தணிகாசலம் தலைமையிலான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஐந்து முறை ஹீமோ டயாலிஸிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 22) தனி அறைக்கு மீண்டும் மாற்றப்பட்டார்.






« PREV
NEXT »

No comments