Latest News

May 25, 2011

கனிமொழிக்கு சிறை கெடுபிடி அதிகரிப்பு; பழம், ஜூஸ் கொடுக்க தடை
by admin - 0

டெல்லி: வீட்டு உணவு கொடுக்கலாம் என நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு, பழங்கள், பழச் சாறு போன்றவற்றைத் தரக்கூடாது என திஹார் சிறை அதிகாரிகள் கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி திகார் ஜெயிலுக்கு சென்று கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது கனிமொழியிடம் ஒரு பாக்கெட் உலர் பழ வகைகள் மற்றும் ஒரு பாட்டில் பழச்சாறு கொடுக்கப்பட்டது.

கருணாநிதி ஜெயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றதும் கனிமொழி அந்த உலர் பழங்களையும், ஜூஸ் பாட்டிலையும் தன்னுடன் எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. உலர் பழங்களையும், பழச்சாறையும் அவர்கள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர்.

இது குறித்து திகார் ஜெயில் சட்ட அதிகாரி சுனில் குப்தா கூறுகையில், சிறை சட்ட விதிகளின் படி, பார்வையாளர்கள் கொடுக்கும் எந்த பொருளையும் கைதிகள் தங்கள் அறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது. நீதிமன்ற அனுமதி கொடுக்கும் பட்சத்தில் உணவு மட்டும் கொண்டு செல்லலாம்.

கனிமொழி விஷயத்தில், அவரைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் கொடுக்கும் உணவை கனிமொழி எடுத்துச் செல்லலாம் என்று நீதிமன்றம் எந்த சிறப்பு அனுமதியும் கொடுக்கவில்லை. எனவே பழம், ஜூஸ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றார்.

திகார் ஜெயில் இயக்குநர் ஜெனரல் நீரஜ்குமார் கூறு கையில், ஜெயிலுக்குள் யாரும் வி.ஐ.பி. அல்ல. வி.ஐ.பிக்கள் கைதிகளாக வரும்போது நீதிமன்ற அனுமதி இல்லாமல் எந்தவித சலுகையும் கொடுக்க மாட்டோம் என்றார்.

கனிமொழி நீதிமன்றக் காவலில் உள்ள விசாரணைக் கைதி என்பதால் அவருக்கு வீட்டு உணவு தர சிபிஐ நீதிமன்றம் அனுமதித்துள்ளது.








« PREV
NEXT »

No comments