டில்லி அருகே வீட்டின் மீது ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த விமானப் பணியாளர், நோயாளி உட்பட 10 பேர் பலியாயினர்.2 பேர் காயமடைந்துள்ளனர்.
பீகார், பாட்னாவிலிருந்து நேற்றிரவு டில்லிக்கு சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில், விமானிகள் உட்பட எட்டு பேர் பயணம் செய்தனர்.இந்நிலையில், இரவு 10.45 மணியளவில் பரிதாபாத் அருகே விமானம் சென்றபோது, பலத்த சூறைக் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு இரண்டு மாடி வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. அப்போது அந்த வீட்டில் 10 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேர் இறந்து விட்டதாகவும், அவர்களது உடல் மீட்கப்பட்டதாகவும் பரிதாபாத் சப் டிவிஷனல் மாஜீஸ்திரேட் கூறினார். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த அரியானா போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டர். இந்த விமானத்தில் பாட்னாவில் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ராகுல் ராய் என்பவர் மருத்துவர்களுடன் டில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதுஇந்த விபத்து ஏற்பட்டது.
No comments
Post a Comment