Latest News

May 29, 2012

ஒகஸ்ட் 5ம் திகதி தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடு
by admin - 0

தமிழ்நாடு - விழுப்புரத்தில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5ம் திகதி டெசோ தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடு, நடைபெற உள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி,

மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சனைக்கு தனி தமிழீழமே நிரந்தர தீர்வு என்று வலியுறுத்தப்படும் என்று கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் செயல்படும் டெசோ அமைப்பில், அன்பழகன் மற்றும் வீரமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தினகரன்)
Read More

ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு ஆசின் தூக்கப்பட்டார்!
by admin - 0

ஈழத் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் உறவாடி வந்தவரான நடிகை ஆசின், விக்ரம் நடிக்கும், ஷங்கர் இயக்கும் படத்திலிருந்து தூக்கப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் பாணா காத்தாடி பட நாயகி சமந்தாவை புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈழத்தில் போர் முடிந்து, பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பி்ன்னர் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலரும் முண்டியடித்துக் கொண்டு இலங்கைக்கு ஓடினர். அத்தனை பேரையும் ராஜபக்சேவும் அவரது அரசும் இரு கரம் நீ்ட்டி வரவேற்று விருந்து வைத்து அனுப்பினர். சல்மான் கான் முதல் பலரும் அங்கு போய் விருந்தாடி வந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஆசின்.
சல்மானுடன் ரெடி படத்தில் நடித்த அவர் அப்பட ஷூட்டிங் இலங்கையி்ல வைக்கப்பட்டதால் அங்கு போனார். தமிழ்த் திரையுலகினர் யாரும் இலங்கைக்கு போகக் கூடாது என்று இங்குள்ள திரையுலக கூட்டமைப்பு உத்தரவிட்டபோதும் அதையும் மீறிப் போய் விட்டு வந்தார் ஆசின்.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அதை ஆசின் கண்டு கொள்ளவில்லை. இடையில் விஜய் கூட தனது காவலன் படத்தில் நடிக்க வைத்தார்.
இந்த நிலையில் ஷங்கர் இயக்க, விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஆசினை நாயகியாககப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஈழ ஆதரவாளர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
ஷங்கர் வீட்டை முற்றுகையிடப் போவதாக இநது மக்கள் கட்சியும் அறிவித்தது. இதையடுத்து தற்போது ஆசினை தூக்கி விட்டதாகவும், சமந்தா நாயகியாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாணா காத்தாடி படத்தின் மூலம் நாயகியானவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.


Read More

May 26, 2012

ज्योतिष की भविष्यवाणी- केकेआर जीतेगी IPL-5
by admin - 0

आईपीएल 5 अपने अंतिम पड़ाव
पर पहुंच गया है। ऐसे में क्रिकेट
प्रेमियों के दिलो की धड़कने तेज
हो गयी है कि आईपीएल 5
की विजेता कौन सी टीम होगी?
हर कोई सोच रहा है कि कौन सी टीम जीतेगी। खैर परिणाम जो भी हो, वनइंडिया के ज्योतिषचार्य पं. अनुज के शुक्ला की भविष्यवाणी है कि केकेआर चैंपियन बनेगी। हाल ही में आयीं खबरों के अनुसार आईपीएल सिर्फ खेल नहीं अपितु
यह एक सट्टे का बहुत बड़ा व्यापार है। कहा जाता है- 'जुआ युद्धं
छलं बलं’ इसलिए इस सट्टे वाले खेल में विवाद, छेड़छाड़,
तीखी नोक-झोक, यह सब जायज क्योंकि चर्चा में बने रहने के लिए
थोड़ी सी एक्टिंग तो करनी ही पड़ेगी। भविष्यवाणी- वैसे तो क्रिकेट के बारे में कुछ कहना कह पाना मुश्किल है, परन्तु फिर भी मैं ज्योतिषीय गणना के आधार
एक छोटी सा प्रयास कर रहा हूं कि आईपीएल 5 की ट्राफी किस
टीम को मिलेगी। समय कुण्डली के अनुसार तुला लग्न क्षितिज पर उदित हो रही है।
तुला लग्न एक चर राशि है एंव न्याय का प्रतीक है। ऐसे में भाग्य
की अपेक्षा कर्म की प्रधानता अधिक परिलक्षित होगी।
यानि जो टीम अपने कठिन परिश्रम के बल पर
सफलता की सीढि़यां चढ़ी आ रही है, उसके विजयी होने की अधिक
सम्भावना है। महेंद्र सिंह धोनी, चेन्नई सुपरकिंग्स के कप्तान है। धोनी की नाम
राशि सिंह है जिस पर अभी शनि की साढ़े-साती की प्रकोप जारी है। चेन्नई सुपरकिंग्स की नाम राशि मेष है। सिंह राशि एक स्थिर
राशि है तथा मेष राशि एक चर राशि है, जिस कारण धोनी के
नुतृत्व, दृढ़ता, आक्रमकता और भाग्य के बल पर चेन्नई
सुपरकिंग्स फाइनल तक पहुंच सकती है। किन्तु अंतिम सफलता पर
विजय पाना कठिन है। कोलकता नाइट राईडर्स के कप्तान गौतम गम्भीर है। गम्भीर
की नाम राशि कुम्भ है तथा कोलकता नाइट राईडर्स की नाम
राशि मिथुन है। इन दोनों राशियों के स्वामी शनि तथा बुध आपस में
मैत्री सम्बन्ध रखते है। समय कुण्डली में कुम्भ राशि पंचम भाव में
पड़ रही है, पंचम भाव खेल का प्रतिनिधित्व करता है। जिस कारण
गम्भीर के परिश्रम एंव बेहतर मार्गदर्शन ने टीम को फाइनल तक पहुंचा दिया है। कोलकता नाइट राईडर्स की मिथुन राशि समय
कुण्डली में भाग्य भाव में पड़ रही है। जो एक शुभ संकेत है। गौतम गम्भीर का जन्म 14 अक्टूबर को हुआ है। अंक ज्योतिष के
अनुसार गम्भीर का मूलांक 5 हुआ एंव वर्ष 2012 के
अंको को जोड़ने पर भी 5 अंक आता है। आईपीएल का फाइनल मई
में हो रहा है, जिसका भी 5 अंक है तथा 5 वर्षो में पहली बार
आईपीएल में कोलकता नाइट राईडर्स फाइनल में पहुंची है। इन
सभी संकेतो को मिलाने पर निष्कर्ष यह निकलता है कि 27 मई 2012 को आईपीएल के फाइनल में चेन्नई सुपर किंग्स और
कोलकता नाइट राईडर्स आमने-सामने हो सकती हैं। और 139
रनों के आस-पास का लक्ष्य रहेगा। सम्भवतः गौतम गम्भीर के
बेहतर नेतृत्व में कोलकता नाइट राईडर्स 5वें आईपीएल का खिताब
हासिल कर सकती है।
Read More

யேசு சிலுவையில் அறையப்படவில்லை-சர்ச்சையை கிளப்பும் ஈரான்
by admin - 0

யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும்
நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம்
நூற்றாண்டுக்குரிய
புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய
ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும்
சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறித்த புத்தகமானது மிருக தோலினால்
தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம்
ஆண்டு துருக்கி நாட்டில்
வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம்
மீட்கப்பட்டது. மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில்
ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான
நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ
மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய்யுமென
ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது. சிரியக் (Syriac) மொழியில் இப்புத்தகம்
எழுதப்பட்டுள்ளது. இது 5 ஆம் அல்லது 6ஆம்
நூற்றாண்டுக்குரியதெனவும் இதில்
முஹம்மது நபி அவர்களின் வருகை தொடர்பிலும்
எதிர்வுகூறப்பட்டுள்ளதாக அவ்வூடகம்
தெரிவித்துள்ளது. எனினும் கிறிஸ்தவ உலகம் இத்தகைய நற்செய்தி நூல்
இருப்பதனையே மறுத்து வருவதாக அச்செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நற்செய்தியின் 41 அத்தியாயத்தில்
கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக ஈரானிய
ஊடகம் தெரிவிக்கின்றது. 'God has hidden himself as Archangel Michael ran
them (Adam and Eve) out of heaven, (and) when
Adam turned, he noticed that at top of the
gateway to heaven, it was written "La elah ela
Allah, Mohamad rasool Allah,"' meaning Allah is
the only God and Mohammad his prophet. மேலும் யேசுநாதர் சிலுவையில்
அறையப்படவில்லையென அப்புத்தகத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்வூடகம்
தெரிவித்துள்ளது. துருக்கிய அதிகாரிகள் இப்புத்தகத்தினை 2000 ஆம்
ஆண்டிலேயே கைப்பற்றினர். இவ்வருடம் பெப்ரவரி மாதம் வத்திக்கான்
இப்புத்தகத்தினைப் பார்வையிட
அனுமதி வழங்குமாறு துருக்கியிடம்
கேட்டுக்கொண்டமையை அடுத்தே இது தொடர்பில்
சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இச்செய்தி தொடர்பில் கிறிஸ்தவ
அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இப்புத்தகத்தின் நம்பகத்தன்மை தொடர்பில்
கேள்வி எழுப்பியுள்ளதோடு, இது நகைப்புக்குரிய
செய்தியெனவும் தெரிவித்துள்ளன. கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியில் ஈரான் பயம்
கொண்டுள்ளதாகவும்,எனவே தான் இத்தகைய
போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும்
ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Read More

தேன் எடுக்கசென்றவர் யானை தாக்கி பலி
by admin - 0

மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் வசிக்கும்
குடும்பஸ்தர் ஒருவர்
யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர்
பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை முதலியார்
கமம் எனும் கிராமத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின்
தந்தையான சங்கரப்பிள்ளை வரதராஜா (வயது-45)
என்பவர் கடந்த 22 ஆம் திகதி காலை தேன்
சேகரிப்பதற்காக கல்லானி பாம் எனும் காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
ஆனால் இவர் அன்றைய தினம் மாலை வீடு திரும்பாத
நிலையில் இவரின் உறவினர்கள் மறு நாள் காலை 23
ஆம் திகதி குறித்தபகுதி காவல்துறையினரின்
உதவியுன் குறித்த குடும்பஸ்தர் உடலமாக
மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து குறித்த உடலம் மன்னார்
பொது வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டது.மன்னார் மாவட்ட நீதவான்
ஏ.யூட்சன்
நேற்று சடலத்தை சடலப்பரிசோதனைக்கு உற்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இறந்தவரின் உடலில் பல இடங்களில் யானை தாக்கியதினால் ஏற்பட்ட காயங்கள் உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

May 19, 2012

அஜித் ரெடி! இணைந்து நடிக்க சம்மதிப்பாரா விஜய்
by admin - 0

ரஜினியும் கமலும் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள்? , அஜித்தும் விஜய்யும் எப்போது இணைந்து நடிப்பர்கள்? என்பது இதுவரையிலும் கேள்விக்குறியை தாங்கியபடியே நிற்கின்றன.

ரஜினியும் கமலும் இணைந்து அபூர்வ ராகங்கள், அலிபாபாவும் அற்புதவிளக்கும், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட பல படங்களில் நடித்துள்ளனர். அதேபோல் அஜித்தும் விஜய்யும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை. இப்போதைய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக அஜித், விஜய் இருப்பதால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அஜித், விஜய் இருவரும் ரஜினி, கமல் சொல்வது போல் கதை எனக்கும், அவருக்கும் பிடித்து நேரமும் கூடிவந்தால் கண்டிப்பாக நடக்கும் என்று கூறுகின்றனர்.

கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்கை கையில் எடுத்திருப்பவர், அஜித்தை வைத்து அமராவதி படம் எடுத்த இயக்குனர் செல்வா தான். ரஜினி, கமல் நடித்திருந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் செல்வா.

தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி முதல் படத்தையே வெற்றியடையச் செய்த இயக்குனர் என்கிற முறையில் அவர் ரீமேக் செய்யும் இந்த படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டுள்ளாராம். நினைத்தாலே இனிக்கும் படத்தில் கமல் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க அஜித் முன்வந்திருப்பதாக தெரிகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குனர் செயல்பட்டால் அடுத்ததாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடக்கும் என்பது கோடம்பாக்கத்து தகவல்.

ஒருவேளை விஜய் இந்த படத்தில் நடிப்பது குறித்து பேசப்பட்டால் அஜித்துடன் இணைந்து நடிக்க விஜய் சம்மத்திப்பாரா? என்பது கேள்விக்குறியே. கேள்விக்குறி ஆச்சர்யக்குறியாக மாறுமா?...


Read More

May 18, 2012

மன்னார் அரச பேருந்தும் பார ஊர்தியும் மோதி வவுனியாவில் விபத்து photo in
by admin - 0

மன்னார் அரச பேருந்தும் லாரியும் மோதி வவுனியாவில் விபத்து இன்று காலை வவுனியா வைத்தியசாலைக்கு முன்சற்று முன் நடந்த விபத்தில் மன்னாரில் இருந்து வந்த பேருந்துடன் பார ஊர்தி மோதியது இதில் இரண்டு பேர் காயங்களுக்கு உள்ளனார்கள்
Read More

May 16, 2012

ராசாவுக்கு ஜாமீன்.
by admin - 0

2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து திகார் சிறையிலிருந்து அவர் இன்று மாலை விடுதலையானார்.

2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.

இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், நான் நிரபராதி, என் மீது பொய்யான வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டதால், என்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் ராஜா.

இந்த மனு நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராசாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது.

ராசா தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் குப்தாவும், சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் பி.பி.சிங்கும் வாதிட்டனர். ராசா தரப்பில் வாதாடிய குப்தா கூறுகையில், பெகுரா மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதே பிரிவுகளின் கீழ் தான் ராசா மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கில் பெகுராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், ராசாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக் காலம் முழுவதும் ஒருவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

ஆனால் ராசா முதல் குற்றவாளி என்று சுட்டிக்காட்டி சி.பி.ஐ. ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் சிபிஐ வழக்கறிஞர் சிங் வாதாடுகையில், 2ஜி விவகாரத்தில் ராசாவுக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் சுமார் ரூ. 200 கோடி வரை லஞ்சம் தரப்பட்டுள்ளது. மொரீசியஸ் நாட்டில் உள்ள டெல்பி இன்வஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்தில் ராசாவுக்காக ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது பங்குகளை மாற்றித் தந்துள்ளது. மத்திய அமைச்சராக இருந்து அதிகாரம் பெற்றரவராக இருந்ததால் இவர் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது. இவருக்கு ஜாமின் வழங்க கூடாது. ராசாவை விடுதலை செய்தால் சாட்சிகளை குலைத்துவிடுவார் என்றார்.

இதற்கு பதிலளித்த ராசாவின் வழக்கறிஞர் குப்தா, ராசா மீதான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டது. குற்றப்பத்திரிகையும் வழங்கப்பட்டு விட்டது. எனவே ராசாவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் கோர்ட்டின் எந்த நிபந்தனையும் அவர் ஏற்க தயாராக உள்ளார். ஆயள் தண்டனை பெறும் அளவிற்கு குற்றம் புரிந்தவர்களுக்கும், கைதிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்பது சட்டத்தில் இடம் இருக்கிறது. ஒரு அமைசசராக இருந்திருப்பதால் இவர் நாட்டை விட்டு ஓடுவார் என சந்தேகிக்க முடியாது. சட்டப்பூர்வ விசாரணைக்கு தொடர்ந்து அவர் ஒத்துழைப்பு வழங்குவார் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை 15ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

இந் நிலையில் இன்று தீர்ப்பை தெரிந்து கொள்ள சென்னை, திருச்சி, பெரம்பலூர், நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து சென்றிருந்த சுமார் 200 ராசாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். ராசாவும் நீதிமன்றம் வந்திருந்தார்.

நீதிபதி சைனி வந்ததும் முதலில் சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததும் ஆ.ராசாவிற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ராசாவை இன்னும் சிறையில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்தார்.

ராசாவின் ரூ.20 லட்சம் சொந்த உத்தரவாத அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி சைனி தனது 14 பக்க உத்தரவில் ராசாவுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தார். அதன்படி, ராசா தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் டெல்லியில் தான் தங்கியிருக்க வேண்டும். தமிழகம் செல்ல வேண்டுமானால் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். தொலை தொடர்ப்பு அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என நிபந்தனைகள் விதித்தார்.

அதே நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிபதி அறிவித்தார்.

நீதிமன்றத்தில் ராசா வாழ்க கோஷம்:

ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் ராசாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.

மனைவி மகிழ்ச்சி:

ராசாவுக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி கூறுகையில், நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

ராசாவுக்கு திமுக துணை நிற்கும்-டி.ஆர்.பாலு:

ராசாவுக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து கருத்துத் தெரிவித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ராசாவுக்கு திமுக எப்போதும் துணைநிற்கும் என்றார்.

ஊட்டி-பெரம்பலூரில் பட்டாசு-இனிப்பு:

ராசாவுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து அவரது சொந்த ஊரான பெரம்பலூரில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பெரம்பலூரில் முன்னாள் கவுன்சிலர் மாரிக்கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பழைய பஸ் ஸடாண்ட் அருகே கூடி பட்டாசு வெடித்ததோடு மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அதே போல ராசா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஊட்டியிலும் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும் பொது மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்ததையடுத்து கடந்த 2010ம் ஆண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராசா. அதன் பிறகு அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 15 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராசா இன்று மாலை வெளியே வந்தார். சிறையிலிருந்து நேராக டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு ராசா சென்றார்.

இந்த வழக்கில் கடைசியாக ஜாமீனில் வந்துள்ள நபர் ராசா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted b

Read More

May 15, 2012

தி.நகர் வீட்டில் சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்
by admin - 0



கடந்த வாரம் முழுக்க அமர்க்களப்பட்டு வந்த சினேகா - பிரசன்னா திருமண கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.

ஏற்கெனவே இருவரும் முடிவு செய்தபடி, இப்போதைக்கு கொஞ்ச நாள் இருவரும் தனிக்குடித்தனம் இருக்கப் போகிறார்களாம். பின்னர் பிரசன்னா குடும்பத்தினருடன் சேர்ந்து வசிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

ஹனிமூனுக்கு வெளிநாடு பறக்கும் திட்டம் இருந்தாலும், அது இப்போதைக்கில்லையாம். காரணம்?

ஏற்கெனவே சினேகாவும் பிரசன்னாவும் ஒப்புக் கொண்ட படங்கள். இந்தப் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் ஹனிமூன் செல்லவிருக்கிறார்களாம்.

இதில் ஜிஎன்ஆர் குமாரவேல் இயக்கும் ஹரிதாஸ் முக்கியமான படம். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்குகிறது. இதில் முடித்த பிறகுதான் தேனிலவுப் பயணத்தை வைத்துக் கொள்ளலாம் என சினேகா கூற, மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டாராம் பிரசன்னா!

கையில் உள்ள படங்களை முடித்துக் கொண்ட பிறகு, தொடர்ந்து நடிப்பதா வேண்டாமா என்பதையும் சினேகா முடிவுக்கே விட்டுவிட்டாராம் பிரசன்னா!

Read More

May 14, 2012

ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளாரே? ரஞ்சிதா பதில்!
by admin - 0

நித்யானந்தா மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவித்தார். நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது. ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் அவருடன் இருக்கிறார் என்று ஜெயேந்திரர் கூறி இருந்தார்.


இதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு எதிரான கருத்தை பத்து நாட்களில் ஜெயேந்திரர் வாபஸ் பெறவேண்டும் என்றும் கெடு விதித்தார்.

ரஞ்சிதாவும் ஜெயேந்திரர் கருத்தை கண்டித்து எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர் ஜெயேந்திரர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 499 மற்றும் 500-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

நான் தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். சமுதாயத்தில் நல்ல பெயருடன் வாழ்கிறேன். நித்யானந்தாவின் மாநாடுகள், விழாக்களில் கலந்து கொண்டு உள்ளேன்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அளித்த பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்தியானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். இது எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு, சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். என்னைப்பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கு இன்று (14.05.2012) விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இதையடுத்து எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு ரவீந்திரன் முன்பு ரஞ்சிதா இன்று ஆஜரானார். கோர்ட்டு கூண்டில் ஏறி நின்று மாஜிஸ்திரேட்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்பு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளாரே சமாதானமாக வந்தால் ஏற்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, இப்போது நான் அவதூறு வழக்கு போட்டுள்ளேன். அந்த மாதிரி ஒரு சூழல் வந்தால் பிறகு யோசிக்கலாம் என்றார். ரஞ்சிதாவுடன் அவரது வக்கீல் முருகையன் பாபு வந்திருந்தார்.

16-ந்தேதி வழக்கு விசாரணையின்போது ஜெயேந்திரருக்கு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.

Read More

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு
by admin - 0


அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தி நகரிலிருந்து இருந்து, 350 கி.மி. தொலைவில் இருக்கும் சாண்ட்பார் கிராமம்... தண்ணீர் பஞ்சம் காரணமாக, மரங்கள் உள்ளிட்ட தாவரங்கள் வெகுவாக குறைந்து போக... பாம்புகள், பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.

அப்பகுதியைச் சேர்ந்த ஜாதவ் பயங், வனத்துறையினரிடம் சென்று இதற்கு ஏதாவது செய்யுங்கள் என்று முறையிட்டார். 'இந்தப் பகுதியில் மரங்கள் எதுவும் வளராது. முடிந்தால் நீ மூங்கில் வளர்த்துக் கொள்' என்று திருப்பிவிட்டனர். இது, அவரை வெகுவாக பாதிக்கவே, 'இந்தப் பகுதியிலேயே தங்கியிருந்து காட்டுப்பகுதியை உருவாக்கியே தீருவேன்' என்று சபதம் எடுத்தார். இது நடந்தது 1979-ம் ஆண்டில்! அப்போது அவருக்கு வயது 16.

தனி மனிதனாக மூங்கில் நட்டு, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து என்று அவர் களத்தில் சுழல... ஆரம்பித்தார். அடுத்து பல வகையான மரக்கன்றுகளையும் வெளியில் இருந்து வாங்கி வந்து நட்டார். சிவப்பு எறும்புகளையும் கொண்டுவந்து அங்கே வளர்த்தார். அவை, மண்ணின் தன்மையையே மாற்றி வளப்படுத்தும் என்பதுதான் காரணம்.

இந்த முயற்சிகளுக்கெல்லாம் அருமையான பலன்! ஆம்... நிறைய மரங்கள், மலர்கள், பூச்சிகள், உள்நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகள், யானைகள், காண்டா மிருகம், மாடுகள், மான்கள் என்று வன விலங்குகளும் அங்கே பெருக... 12 ஆண்டுகளில் மாபெரும் காடாக மாறிப்போனது.

1,360 ஏக்கர் என்று பெருகிவிட்ட அந்த காடு... கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழித்து, கடந்த 2008-ம் ஆண்டில்தான் மாநில வனத்துறையின் கண்களுக்கே தெரிந்திருக்கிறது. இப்போது, 49 வயதாகும் ஜாதவ்வை பாராட்டிக் கொண்டிருக்கிறது வனத்துறை!

Read More

தெலுங்கில் முதல் ஹிட் கொடுத்த ஸ்ருதி ஹாசன்
by admin - 0

தெலுங்கில் கப்பார் சிங் மூலம் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஹிட் கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் சித்தார்த்துடன் சேர்ந்து அனகனகா ஒக்க தீருடு மற்றும் ஓ மை பிரண்ட் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இரண்டுமே ஓடவில்லை. இதையடுத்து ஆந்திராவில் ஸ்ருதியின் மார்க்கெட் இறங்கியது. இந்நிலையில் பவன் கல்யாணுடன் சேர்ந்து அவர் நடித்துள்ள கப்பார் சிங் கடந்த 11ம் தேதி ரிலீஸ் ஆனது.

வழக்கமாக ஸ்ருதி படம் ஊத்திக்கும் என்று நினைத்தவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம் படம் ரிலீசான முதல் நாளில் ஆந்திராவில் மட்டும் ரூ. 8 கோடி 25 லட்சம் வசூலாகி புதிய சாதனை படைத்துள்ளது. படம் சூப்பர், டூப்பர் ஹிட்டாகிவிட்டது.

இதனால் ஸ்ருதி ராசியில்லாத நடிகை என்று கூறியவர்கள் இனியும் அதைத் தொடர முடியாது. இந்த படத்தின் வெற்றி மூலம் ஸ்ருதி தான் ராசியானவள் என்பதை நிரூபித்துவிட்டார்.

இந்த கப்பார் சிங் வேறு யாருமில்லை இந்தியில் சல்மான், சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் படத்தின் ரீமேக் தான். எது எப்படியோ, தபாங் எப்படி சோனாக்ஷிக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்ததோ அதேபோன்று ஸ்ருதிக்கும் டோலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.

வாழ்த்துக்கள் ஸ்ருதி...

Read More

May 13, 2012

2012ல் உலகம் அழிந்து விடுமா? அமெரிக்க ஆய்வாளர்கள் விளக்கம்
by admin - 0

மாயன் காலண்டரில் 2012ஆம் ஆண்டுடன் உலகம் அழிந்து விடும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால், உலகம் அழியக் கூடும் என்ற பயம் அனைவரையும் சூழ்ந்துக் கொண்டுள்ளது.
மாயன்களின் காலண்டரை அடிப்படையாக வைத்து பல புத்தகங்களும், பல சினிமாக்களும் கூட வந்துள்ள நிலையில் குவாதமாலாவில் மாயன்களின் பழைய காலண்டரை அமெரிக்கா அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதுகுறித்து இவர்கள் கூறுகையில், 9வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் இக்காலண்டரில் சந்திரனின் சுழற்சி காலங்களோடு, வீனஸ் மற்றும் மார்ஸ் போன்ற கிரகங்களின் சுழற்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2012ல் உலகம் அழியும் என்று சொன்னவர்கள் மாயன்களின் காலண்டரில் 13 பக்தூன்கள்(1 பக்தூன் – 400 வருடங்கள்) வரை மட்டுமே உலகம் இருக்கும் என்று எழுதியுள்ளதாகவும், அது 2012ன் முடிவடைவதாகவும் கூறி வந்தனர்.

இச்சூழலில் தற்போது கிடைத்துள்ள காலண்டரில் 17 பக்தூன்கள் வரை காலண்டர் உள்ளதாகவும், அவற்றில் கூட 17 பக்தூன்களோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்லப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது ஏராளமாக கிடைத்துள்ள ஆவணங்களை முறைப்படுத்தி ஆராயும் போது நிறைய உண்மைகள் வெளிவரலாம் என்றும் கூறியுள்ளனர்.

Read More

கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு - ஹாங்காங் பயணமானார் ரஜினி!
by admin - 0


கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்க இன்று காலை விமானத்தில் புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பின் முதல் கட்ட ஷூட்டிங் லண்டன் பைன்வுட் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது.

அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. ரஜினி, தீபிகா படுகோனே, ஆதி நடித்த காட்சிகளை அங்கு படமாக்கப்பட்டன. ஒரு டூயட் பாடலுக்கு ரஜினியும், தீபிகா படுகோனேவும் பரத நாட்டியம் கலந்த புதிய வகை நடனத்தை ஆடினர்.

இப்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு. இந்த முறை ஹாங்காங்கில் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்தப் படப்பிடிப்புக்காக ரஜினி இன்று காலை விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கி படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். கதாநாயகி தீபிகா படுகோனேயும் ஹாங்காங் செல்கிறார்.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா படப்பிடிப்பை நடத்துகிறார்.

Read More

சிறையிலடைத்து என்னை நேரடி அரசியலில் குதிக்க வைத்துவிட்டார் ஜெ. - எம். நடராஜன்
by admin - 0

மறைமுக அரசியலில் இருந்த தம்மை கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் நேரடி அரசியலுக்கு இழுத்துவிட்டார் ஜெயலலிதா என்று எம். நடராஜன் தெரிவித்துள்ளார்.

நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடராஜன் நேற்று ஜாமீனில் விடுதலையானார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

என் மீது போடப்பட்ட 6 வழக்குகளுமே பொய்யானவை. எனக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்களில் ஒருவரைக் கூட நான் நேரில் பார்த்தது இல்லை. இந்த வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்.

எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பாக இருந்தது நானும் எனது மனைவியும்தான். நாங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லை. துரோகமும் செய்யவில்லை. அதிமுகவை உடைக்கவும் முயற்சிக்கவில்லை.

சசிகலாவை மறைமுகமாக மிரட்டி அவர் பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில்தான் தமக்குத் தெரியாமல் தமது குடும்பத்தினர் தவறு செய்ததாக கூறப்பட்டது. என்னை சிறையில் அடைத்து மறைமுக அரசியல் செய்து கொண்டிருந்த என்னை நேரடி அரசியலுக்கு வரவழைத்துவிட்டார் ஜெயலலிதா என்றார் அவர்.

Read More

May 12, 2012

கலகலப்பு - சினிமா விமர்சனம்
by admin - 0



நடிகர்கள்: விமல், அஞ்சலி, சிவா, ஓவியா, சந்தானம், ஜான் விஜய்
ஒளிப்பதிவு: யுகே செந்தில்குமார்
இசை: விஜய் எபினேசர்
மக்கள் தொடர்பு: ஜான்ஸன்
தயாரிப்பு: யுடிவி & அவ்னி சினிமேக்ஸ்
எழுத்து - இயக்கம்: சுந்தர் சி

சுந்தர் சி கேம்பிலிருந்து இன்னொரு காமெடி கலாட்டா. லாஜிக், எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாமல் போனால் விழுந்து விழுந்து சிரிக்க இன்னும் ஒரு பொழுதுபோக்குப் படம் இந்த கலகலப்பு!

சுந்தர் சிக்கு இது 25 படம். வழக்கம்போல கதை என்ற ஒன்று பிரதானமாக இல்லாவிட்டாலும், கேட்ட அல்லது பார்த்த மாத்திரத்தில் சட்டென்று சிரிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம் உண்டு (ஆனால் சுந்தர் சிக்கே உரிய ஷார்ப் ஒன் லைனர்ஸ் மிஸ்ஸிங்.. அதுவும் சந்தானம் இருந்தும்!).

கும்பகோணத்தில் மூன்று தலைமுறையாக கொடிகட்டிப் பறந்த மசாலா கபே என்ற ஓட்டல், இந்தத் தலைமுறையின் கைக்கு வந்ததும் நொடித்துப் போகிறது. அதைத் தூக்கி நிறுத்தி பழைய பெருமையை மீட்கும் முயற்சியில் அப்பாவி நேர்மையாளர் விமல். துணைக்கு சமையல்கார தாத்தா விஎஸ் ராகவனும், அவர் பேத்தி ஓவியாவும். அவ்வப்போது விமலுக்கு அஞ்சுவட்டிக்கு கடன் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் இளவரசு.

அந்த ஊருக்கு புதிதாக வரும் சுகாதார ஆய்வாளர் அஞ்சலியைப் பார்த்த உடன் லவ்வாகிறார் விமல். இருவரும் முதலில் மோதிக்கொண்டாலும், தமிழ் சினிமா வழக்கப்படி காரணமே இல்லாமல் காதலர்களாகிவிடுகின்றனர்.

அப்போதுதான் ஜெயிலிலிருந்து ரிலீஸாகி வருகிறார் சிவா. விமலின் உடன் பிறந்த தம்பி. வெறும் பில்டப் ஆசாமி. சிரிப்புத் திருடன். வந்தவுடன் ஓவியாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர் கொடுக்கும் ஐடியாபடி மசாலா கபேயில் பழைய கிராமத்து உணவுகளை அறிமுகப்படுத்தி ஒரே பாடலில் ஓஹோவாக்கிவிடுகிறார்கள்.

மசாலா கபேயை அபகரிக்க ஊரின் முக்கிய வர்த்தகர் திட்டமிடுகிறார். அவருக்கு துணை போகிறார் அந்த ஊர் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய்.

இந்த நேரத்தில்தான், அஞ்சலிக்கு முறைமாமனுடன் ஊரில் திருமணம் நிச்சயமாகிறது. வந்து தன்னை 'தூக்கிச் செல்லுமாறு' விமலை அழைக்கிறார் அஞ்சலி. மசாலா கபேயை தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு, காதலியைத் தூக்கிவர கிராமத்துக்குப் போகிறார்.

அங்கே தமாஷ் வில்லன்கள் சந்தானம் & மனோபாலா கோஷ்டியிடம் சிக்கி, சில கிச்சு கிச்சு மூட்டல்களுக்குப் பிறகு காதலியை அடையும் நேரத்தில், அஞ்சலியின் தாத்தா மண்டையைப் போட, காதல் டமாலாகிறது.

ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் விமலுக்கு இன்னொரு அதிர்ச்சி. சீட்டாட்டத்தில் ஹோட்டலை வைத்து சூதாடி தோற்றுவிட்டு, காதலி ஒவியாவையும் இழந்து பாரில் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார் தம்பி.

எப்படி மசாலா கபேயை மீட்கிறார்கள் சகோதர்கள் என்பது மீதிக் கதை. இடையில் சுப்பு தலைமையில் இன்னொரு சிரிப்பு வில்லன் கோஷ்டி, ரூ 10 கோடி வைரத்தை ஒரு செல்போனில் வைத்துத் தொலைத்துவிட்டு தேடுகிறது தேடுகிறது தேடிக் கொண்டே இருக்கிறது. அந்தக் கதையின் க்ளைமாக்ஸும் மசாலா கபேவுக்கே வருகிறது.

ஒரு நீண்ட தமாஷ் பைட்டுக்குப் பிறகு சர்வம் சுபம்!

முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சி வரை எங்கு தேடினாலும் கிடைக்காத ஒரு சமாச்சாரம் லாஜிக். எதுக்கு அதையெல்லாம் தேடிக்கிட்டு... வந்தோமா சிரிச்சோமான்னு போங்க சார் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார் இயக்குநர் சுந்தர்.

சிவா பேசும் வசனங்கள் இன்னும் கூட ஷார்ப்பாக, காதில் விழுந்ததும் உதடுகளை விரிய வைக்கும் விதமான ஒன்லைனர்களாக இருந்திருக்கலாம்.

காதலி கேட்கும் பொருள்களை வாங்க பர்தா போட்டுக் கொண்டு சிவா திருடுவது சரியான காமெடி என்றால், அந்த நேரம் பார்த்து கடையில் ஒரு ஹேண்ட் பேக் வாங்க வந்து, பணமில்லாமல் தவிக்கும் விமல், அந்தப் பையையும் சேர்த்து திருடிக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்வது.. வயிற்றைப் பதம் பார்க்கிறது.

க்ளைமாக்ஸில் அந்த போலீஸ்காரருக்கு மண்டையில் அடி விழ, அப்படியே அவர் மண்டையில் தங்கப்பதகம் சௌத்ரி, மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனெல்லாம் வந்துபோவது 'செம' கலகலப்பு!

அந்த நாய் கேரக்டர் படத்திலேயே டாப் (காவலனில் வடிவேலு செய்ததுதான் என்றாலும்).

விமல்தான் படத்தின் ஹீரோ. ஆனால் ஹீரோயிஸம் காட்டாமல், அப்பாவி முதுகுபிடிப்பு கேஸாக வந்து மனதில் நிற்கிறார். அவர் தம்பியாக வரும் சிவாவும் ஓகே.

நாயகிகளில் அஞ்சலிக்குதான் நடிக்க, கவர்ச்சி காட்ட ஏக வாய்ப்பு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறங்கி வந்து கவர்ச்சி காட்டி கதிகலங்க வைக்கிறார். அவர் குரலைக் கேட்கும்போது வயிற்றைக் கலக்குகிறது!

ஓவியாவும் கிடைத்த கேப்பிலெல்லாம் குளிக்கிறார் அல்லது குத்தாட்டம் போடுகிறார் அல்லது பாவாடை சட்டையோடு வந்து ஒரு வழி பண்ணுகிறார்!

இடைவேளைக்குப் பிறகுதான் சந்தானம் வருகிறார். வாயைத் திறந்தால் வண்டி வண்டியாக ஜோக்குகளைக் கொட்டும் அவருக்கு மொக்கையான வசனங்கள். இருந்தாலும் அவரது பாடி லாங்வேஜ், பார்த்தவுடன் சிரிக்க வைக்கிறது.

போலீசுக்கு பயந்து தசாவதாரம் கமல் ரேஞ்சுக்கு விதவித கெட்டப்புகளில் வரும் இளவரசு, வைரங்களைத் துரத்தி க்ளைமாக்ஸில் தர்ம அடிவாங்கும் சுப்பு, வைரங்களை லவட்டிக் கொண்டு போக நினைத்து, முன்னாள் மந்திரி வீட்டு பாத்ரூம் சுவர் ஓட்டைக்குள் மாட்டிக் கொள்ளும் ஜான் விஜய், அந்த நாய்... என அத்தனை பாத்திரங்களையும் நினைத்து நினைத்து சிரிக்கலாம்!

குறைகள் நிறைய இருக்கின்றன. ரூ 10 கோடி வைரத்தை யாராவது செல்போன் கவரில் வைத்து, அத்தனை அலட்சியமாக ஒரு 'பேக்'கிடம் கொடுத்தனுப்புவார்களா? அந்த செல்போன் ஒவ்வொருவர் கையாக மாற, அவர்களும் நம்பரை மாற்றாமல் அப்படியேவா உபயோகிப்பார்கள்? அத்தனை பெரிய ஹோட்டலை வைத்து யாராவது சீட்டாடுவார்களா? அண்ணன் தம்பி இருவருக்கும் சொந்தமான ஹோட்டலை தம்பி மட்டுமே கையெழுத்துப் போட்டு பதிவு செய்வது சாத்தியமா?

இப்படிப்பட்ட கேள்விகளை மறந்துவிட்டால் படத்தை ரசிக்கலாம்!

யுகே செந்தில்குமாரின் கேமரா காவிரியை ரொம்ப அழகாகப் படம்பிடித்திருக்கிறது. பார்த்ததுமே எப்போது காவிரிக்கும் போகலாம் என ஏங்க வைக்கிறது அந்த குளுமை!

விஜய் எபினேசரின் இசையில் உன்னைப் பற்றி உன்னிடமே, இவளுக இம்சை.. கேட்கலாம் ரகம். பாடல் வரிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தியேட்டருக்கு வந்தவர்களை 2.30 மணி நேரம் சிரிக்க வைப்பது மட்டும்தான் ஒரே நோக்கம் என வேலை பார்த்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. அந்த வகையில் அவர் இலக்கு தப்பவில்லை. தியேட்டரே கலகலக்கிறது, சிரிப்பொலியால்!

Read More

தனது தற்கொலை குறித்த தகவலை ஒளிப்பதிவு செய்து வைத்த இளைஞன்
by admin - 0

தான் தற்கொலை செய்துகொண்டதை, 19 வயது இளைஞன் ஒருவர் ஒளிப்பதிவு செய்துவைத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9ம் திகதி தற்கொலை செய்துகொண்ட இளைஞன், சக நண்பர்களுக்கு “நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன், இதன் ஒளிப்பதிவு எனது கையடக்கத் தொலைபேசியில் இருக்கிறது. கையடக்கத் தொலைபேசி மேசை விளக்கிற்கு அருகில் இருக்கிறது” என குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளான்.

சக நண்பர்களும் இந்த விடயத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி வீட்டிற்கு சென்று பார்ப்பதற்குள் இளைஞன் இறந்துவிட்டான். வாழ்க்கையில் விரக்கியடைந்த இளைஞன், தற்கொலை செய்துகொள்வதற்கான காரணத்தையும் மரணத்திற்கு முன் பதிவுசெய்துள்ளான்.

தனது 19 வயது பூர்த்தியாவதற்கு இரண்டு தினங்கள் இருக்கும்போதே இந்த இளைஞன் இந்த பரிதாப முடிவைத் தேடிக்கொண்டுள்ளான்.

இதற்கு முன்னர் குறிந்த இளைஞனின் குடும்பத்தில் இருந்து அண்ணன் ஒருவரும், அக்கா ஒருவரும் வெவ்வேறு வழிகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
Read More

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் ஜூன் 29-ல் ரிலீஸ்?
by admin - 0


ஜூன் மாதம் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியாகக்கூடும் என்று நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இப்போது விஸ்வரூபத்தின் ரிலீஸ் தேதியே வெளியாகிவிட்டது.

இந்தப் படத்தை ஜூன் 29-ம்தேதி வெளியிட கமல்ஹாஸன் திட்டமிட்டிருப்பதாகவும், புரமோஷன் பணிகளை அடுத்த வாரத்திலிருந்து அவர் தொடங்கக் கூடும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

கமல்ஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நேஷனலும், பிவிபி சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்.

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இல்லாத முதல் பிரதி கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டது.

இப்போது இறுதிக்கட்டப் பணிகளை முடிக்கும் தறுவாயில் உள்ள கமல், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். அங்கேயே பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஓஸ்போர்னேவுக்கு படத்தை போட்டுக் காட்டிவிட்டு சென்னை வரும் கமல், உடனடியாக புரமோஷனை ஆரம்பிக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் பாடல்களையும் வெளியிட உள்ளாராம்.

விஸ்வரூபத்தை எழுதி இயக்கியிருப்பவரும் கமல்ஹாஸன்தான். வைரமுத்துவுடன் இணைந்து படத்துக்கு பாடல்களையும் எழுதியுள்ளார்.

Read More

May 10, 2012

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதி ஏற்றப்பட்டது
by admin - 0



இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதி வியாழக்கிழமை(10.5.12) கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்டுள்ளது
அங்குள்ள ஒலிம்பியா மலைப்பகுதியில், பண்டைகாலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடத்துக்கு அருகே ஹீரா எனும் தெய்வத்தின் சிதிலமடைந்த கோவிலுக்கு முன்னர் உள்ள ஒரு பீடத்தில் வைத்து இந்த ஜோதி ஏற்றப்பட்டது.
பழங்காலத்தில் பெண் பூசாரிகளால் எப்படி சூரிய ஒளியைக் கொண்டு இந்த ஜோதி ஏற்றப்பட்டதோ அதே போன்று, இனோ மெனெகாகி எனும் கிரேக்க நடிகை, பெண் பூசாரி வேடமணிந்து, அதிகாலை சூரிய ஒளியை கொண்டு இந்த ஜோதியை ஏற்றினார்.
பெரிய அளவிலான ஒரு கண்ணாடியில் சூரிய ஒளியை குவியச் செய்து அதன் மூலம் உண்டாகும் வெப்பத்தை வைத்தே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது.

புனிதத்தன்மை

சூரிய ஒளியைக் கொண்டு ஏற்றப்பட்ட ஜோதி வேறு ஒரு குடுவைக்கு மாற்றப்படுகிறது
ஒலிம்பிக் ஜோதியின் புனிதத் தன்மையை உறுதிப்படுத்தவே, இது சூரியக் கதிர்களைக் கொண்டே ஏற்றப்படுகிறது.
பண்டைய கிரேக்கர்கள் தீயை தெய்வத்தன்மை வாய்ந்த ஒன்றாகக் கருதி, அதை தமது முக்கிய ஆலயங்களின் முன்னர் தொடர்ந்து எரியும் வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
மனிதனுக்கும் நெருப்பினால் ஏற்படக்கூடிய சாதகமான விஷயங்களுக்கும் இருக்கும் தொடர்பையே ஒலிம்பிக் ஜோதி தற்காலத்தில் நடைபெறும் விளையாட்டுகளில் எடுத்துக்காட்டுகிறது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் கூறுகிறது.
மேலும் ஒலிம்பிக் ஜோதியின் பயணம், ஒலிம்பியாவிலிருந்து தொடங்குவது என்பது பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கும், தற்கால போட்டிகளுக்கும் இடையேயான ஆழ்ந்த தொடர்பை வெளிக்காட்டுகிறது எனவும் அந்த சம்மேளனம் தெரிவிக்கிறது

சமாதானச் செய்தி

ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வருபவர்கள் அதன் பயணம் முழுவதிலும் சமானத்துக்கான செய்தியை சுமந்து செல்கிறார்கள்.
ஒலிம்பியாவில் ஜோதியை ஏற்றும் பணியை கிரேக்க நாட்டின் ஹெலினிக் ஒலிம்பிக் சங்கமே கையாள்கிறது.அந்தக் குழுவே தொடர் ஒட்டத்தின் மூலம் ஏதன்ஸ் நகருக்கு கொண்டுவரும் நடவடிக்கையை ஏற்பாடு செய்கிறது.
அதன் பிறகு அந்த ஜோதியை ஒலிம்பியாவிலிருந்து போட்டிகள் நடைபெறும் நாட்டிலுள்ள முக்கிய விளையாட்டு அரங்கத்தில் ஏற்றி வைக்க எடுத்து செல்லும் பொறுப்பு, போட்டிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.
கிரேக்கத்தில் இந்த ஜோதி தொடரோட்டமாக சுமார் 2,900 கிலோமீட்டர்கள் பயணம் செய்கிறது, 500 பேர் ஜோதியை ஏந்திச் செல்கிறார்க
பொருளாதார நெருக்கடி

மேலும் கிரேக்கம் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்பில் சிக்கியுள்ள தருணத்தில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களாக கிரேக்கத்தில் பெரிய அளவிலான சமூக அமைதிக்குலைவும் போராட்டாங்களும் இடம்பெற்றன.
ஏழு நாட்கள் கிரேக்கத்தில் பயணிக்கும் ஒலிம்பிக் ஜோதி, இம்மாதம் 17 ஆம் தேதி லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் அமைப்பிடம் கையளிக்கப்படும்.
கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட ஜோதி 18 ஆம் தேதி மாலை உள்ளுர் நேரம் 7 மணிக்கு பிரிட்டனின் தென் மேற்கு கரையோரம் உள்ள லாண்ட்ஸ் எண்ட் எனும் இடத்தை அடைந்து மறுநாள் முதல் நாடெங்கும் கொண்டு செல்லப்படும் நடவடிக்கை தொடங்குகிறது.
Read More

சினேகா- பிரசன்னா நிச்சயார்த்த படங்கள்
by admin - 0










Read More

May 09, 2012

டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'
by admin - 0


பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. மாமியாரை எப்படி வீட்டை விட்டு அனுப்புவது, நாத்தனாரின் வாழ்க்கையை எப்படி கெடுப்பது, மகனிடம் இருந்து மருமகளை பிரித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது எப்படி என்றுதான் இந்த சீரியல்கள் பெரும்பாலும் கவலைப்படுகின்றன.

இன்னொரு கொடுமை, கஸ்தூரி, உறவுகள், இளவரசி, தங்கம், தென்றல், செல்லமே, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திற்கு இரண்டு மனைவி கண்டிப்பாக இருக்கும்.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் சீரியல்களுக்கு மக்கள் மனதில் கொஞ்சம் மரியாதை இருந்தது. தென்றல் சீரியல் மூலம் அந்த பெயர் பாதி கெட்டுப்போனது. மீதியை திருமதி செல்வம் இப்போது கெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவள் கணவனை அதுவும் நேற்றுவரை நண்பனாக கருதியவனை எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டமிட்டு சாதிக்கிறது ஒரு கதாபாத்திரம் பார்க்கும் போதே எரிச்சலும், அந்த இயக்குநர் மீது ஆத்திரமும் ஏற்படுகிறது பெண்களுக்கு. ஏனெனில் பெண்கள் மத்தியில் செல்வத்திற்கு என்று ஒரு மரியாதை இருந்தது அதை கெடுத்து விட்டார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.

கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறானாம், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாளாம். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்களாம். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக இருக்கிறாளாம். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாளாம். சினிமாவில்தானய்யா இப்படியெல்லாம் வரும்.. டிவி சீரியலிலுமா...

இனி சொல்லவே வேண்டாம். கணவர் ராமனாகவே இருந்தாலும் குல குத்துவிளக்குகள் நம்பப்போவதில்லை. எத்தனை தம்பதிகள் பிரிய காரணமாக இருந்து புண்ணியம் கட்டிக்கொண்டாரோ இந்த இயக்குநர். இவரேதான் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரையும் இயக்குகிறார். அந்த தொடரில் கேட்கவே வேண்டாம் கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். தமிழ் கூறும் நல்லுலகம் இதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

இதுதான் என்றில்லை, கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இப்படித்தான் கன்றாவிக் கட்சிகள் களேபரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன.

நல்லவேளையாப் போச்சு, தமிழ்நாட்டில் 75 சதவிகித ஊர்களில் அந்த நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. தப்பின குடும்பங்கள்!...ஆனால் இலங்கையில் ? அதுகும் யாழ்ப்பாண்த்தில்

Read More

இணையத்தில் திகிலூட்டும் ரஷ்ய நெடுஞ்சாலை விபத்து காட்சி .
by admin - 0

ரஷ்ய நெடுஞ்சாலையொன்றில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய ஒருவர் அந்த வீதியில் வந்த பிறிதொரு காரால் மோதப்பட்டு தூக்கி வீசப்படும் காட்சியை காரொன்றிலிருந்த பயணியொருவர் வீடியோ படமெடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விபத்துக்குள்ளான நபர் காலொன்றின் எலும்பு முறிவுக்கு ஆளான நிலையில் அபூர்வமான முறையில் உயிர் தப்பியுள்ளார்.

இந்த வீடியோ காட்சியை பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
Read More

May 08, 2012

போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு "நடுகல்" எடுத்து அந்நாளில் வழிபட்டார்கள்
by admin - 0



போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு "நடுகல்" எடுத்து அந்நாளில் வழிபட்டார்கள். வீரனுடைய திருவுருவம் அந்த நடுகல்லில் பொறிக்கப்பட்டிருக்கும். வீரர்களை போற்றி வழிபட்டதைப் போலவே,கொற்றவைக்காகவோ அல்லது பொது மக்களின் நன்மைகளுக்காகவோ உயிர் தியாகம் செய்த தியாகிகளையும் ,தமிழர்கள் சிலையில் வடித்துப் போற்றி வழிபட்டு வந்தார்கள்.அச்சிலைகள் சாவான் சிலைகள் என்றும் நவகண்டம் என்றும் பொதுவில் வழங்கப்படுகின்றன.தங்கள் உடம்பில் உள்ள ஒன்பது உறுப்புகளையும் தாங்களாகவே அறுத்துக் கொடுத்துக் கொற்றவையை வழிபட்டதால் "நவகண்டப்பலி" என்று அது கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் பல இடங்களில் சாவான் சிலைகளைக் காணலாம்.ஆனால் அச்சிலைகளில் எதன் பொருட்டு ,யார் அந்த பலியைக் கொடுத்தார் என்ற விவரம் பொறிக்கப்பட்டிருப்பது அபூர்வம். அருகே காணப்படும் நவகண்டப்பலி வீரனின் சிற்பத்தில் அவன் பெயரும் செய்தியும் பொறிக்கப்பட்டிருப்பதால், இது முக்கியமான சிலையாகக் கருதப்படுகிறது.இதில் உள்ள வீரன்,தன் இடக்கையில் தன் தலை மயிரைக் கற்றையாக இழுத்துப் பிடித்துக் கொண்டு வலக்கையில் வாள் பிடித்துக் கழுத்தின் பின் பக்கமாகத் தன் தலையை அறுத்துக் கொள்கிறான். அவன் முகத்தில் துன்பத்தின் சாயலே இல்லை.புன்சிரிப்புடன் உயிர்த் தியாகம் புரியும் அவன் முகத்தில் பூரிப்பும் பெருமிதமும் காணப்படுகின்றன.இச்சிலையில் பதினோராம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. "தைஞ்சு செய்யன் கொழகனுக்கு இராவிலே...கங்க...நம்பி செ குடுத்தார் ராஜேந்திர நாந சோழ தந்ம செட்டியார்கு எழுத்து" என்ற தொடர் காணப்படுகிறது.செய்யன் கொழகன் என்பவனுக்கு இரவிலே என்ன நடந்தது... ராஜேந்திரனான சோழ தன்ம செட்டியார் யார் என்று தெரியவில்லை. புதுவை வரலாற்றுச் சங்கத் தலைவரும் புதுவை மாவட்ட ஆட்சித் தலைவருமாகிய பி.எல்.சாமி தலைமையில் தாதாபுரம் வட்டாரத்தில் கள ஆய்வுப்பணி நடை பெற்ற போது,இந்தச் சிலை கல்லேரியம்மன் கோயில் அருகே கண்டறியப்பட்டது. அச்சிறுபாக்கம் தாமரைக்கண்ணனும் பாகூர் குப்புசாமியும் இச்சிலை பற்றிய கள ஆய்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

Read More

ரோஜாவின் 'லக்கா கிக்கா'.
by admin - 0

லக்கா, கிக்கா எனப்படும் புதுமையான கேம் ஷோ மூலம் கலக்கலாக களம் இறங்கியுள்ளார் முன்னாள் கனவுக்கன்னி ரோஜா. அவருடைய அழகான உடை அலங்காரம், கேள்விகளை கேட்கும் மேனரிசம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளித்திரையில் ஜொலித்த நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவது புதிய விசயமல்ல. சிலர் கதாநாயகியாக நடிப்பார்கள். சிலர் நிகழ்ச்சி நடத்துவார்கள். அந்த வரிசையில் ரோஜாவும் களம் இறங்கியுள்ளார். இவர் ஜீ தமிழ் டிவியில் ‘லக்கா, கிக்கா’ என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார்.

வழக்கமான ஜாக்பாட் நிகழ்ச்சி போன்று இல்லாமல், முற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நான்கு சுற்றுக்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் கேள்வியை ரோஜா கேட்பார். அதற்கு பார்வையாளர்கள் வி‌டை சொன்னால் அப்போதே கையில் ரூ.5 ஆயிரம் பரிசு கிடைக்கும்.

2 வது சுற்று திறமைக்கான போட்டி. பாடத்தெரிந்தவர்கள் ஆடத்தெரிந்தவர்கள் மேடையேறி ஆடலாம். அப்போது கிளி ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டெடுக்கும். அந்த சீட்டில் வருகிற பரிசுத்தொகையை அப்போதே ரோஜா வழங்குகிறார்.

3வது சுற்று ஏலம் விடும் நிகழ்ச்சி. 4 வது இறுதி சுற்றை எட்டுபவர்களுக்காக 3 பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பொம்மையில் மட்டும் அதிக தொகை இருக்கும். இதில் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து தங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

முற்றிலும் வித்தியாசமான முறையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஜீ தமிழ் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஜெயா டிவியில் சிம்ரன் நடத்தும் ஜாக் பாட் நிகழ்ச்சிக்கு பலத்த போட்டியாக உருவாகும் என்று நேயர்கள் மத்தியில் இப்போதே ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

அப்பட அடுத்த 'ஜாக்கெட்' சண்டை ரெடி... !

Read More

May 07, 2012

துப்பாக்கியில் விஜய் புகைபிடிக்கும் காட்சி நீக்கம்!
by admin - 0

துப்பாக்கி படத்தில் விஜய் புகைபிடிக்கும் காட்சியை நீக்கிவிட்டதாக அப்படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்து இருக்கிறார். நண்பன் படத்திற்கு அடுத்து விஜய் நடித்து வரும் படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே 1ம் தேதி இப்படத்தின் டிஸ்லகள் வெளியானது. அதில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ஸ்டில்கள் வெளியாகின. இதற்கு பசுமை தாயகம் அமைப்பு கடும் ‌எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதுடன், படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவும் பசுமை தாயகம் இயக்கத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் அக்காட்சியை நீக்கிவிட்டதாக முருகதாஸ் அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, படத்தின் விளம்பரத்திற்காக மட்டுமே விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் கிடையாது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் அந்தக்காட்சி இருக்கும். இப்போது அதையும் நீக்கிவிட்டோம். இனி படத்தின் விளம்பரங்களிலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறாது என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸின் இந்த அறிவிப்பால் துப்பாக்கி படத்திற்கு இருந்து வந்த புகை பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.


Read More

ஓவரா வெயிட் போடாதீங்க! வேலை கிடைப்பது சிரமம்!!
by admin - 0

குண்டாக இருக்கும் பெண்களுக்கு வேலை கொடுப்பதிலும், சம்பளம் கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அதில், வேலைக்கு விண்ணப்பிக்கப்பட்ட புகைப்படத்துடனான பெண்களின் சுய விபர குறிப்புகள் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, பணி வழங்கும் நிறுவனங்கள் குண்டு உடலைப்பு கொண்ட பெண்களின் ரெசுயூம்களின் மீது பாரபட்சம் பார்ப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக, விண்ணப்பிப்பவரின் புகைப்படங்கள் இருவிதமாக அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒருவர் தனது முந்தைய புகைப்படத்துடன் ஒரு விண்ணப்பமும், அறுவை சிகிச்சைப்பிறகான புகைப்படத்துடன் இன்னொரு விண்ணப்பமும் அனுப்பப்பட்டது.

அதில், குண்டான உருவம் கொண்ட பெண்களுக்கு வேலைக்கு தேர்வு செய்வதில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குண்டாக இருப்பவர்களுக்கு சம்பளம், பொறுப்பு வழங்குதலில் கூட பாரபட்சம் பார்க்கபடுவதாக ஆய்வு கூறுகிறது. குண்டு பெண்களுக்கு குறைந்த ஊதியம் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரிய வருகிறது.

இது ஆஸ்திரேலியாவில்தான் என்றாலும் குண்டு உடல் கொண்டவர்கள் சுறு சுறுப்பாக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் இது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றனர். குண்டாக இருக்கும் பெண்களே கொஞ்சம் உங்கள் உடலை ஸ்லிம் ஆக மாற்றிக்கொள்வது உடலுக்கும் ஆரோக்கியம், நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வு முடிவு சர்வதேச உடல் பருமன் குறித்த மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


Read More

சிவபூமியும் ஆக்கிரமிக்கப்பட்டது
by admin - 0

போர் முடிவடைந்துள்ள நிலையிலும்கூட அரசு அவர்களை இன்னும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தவில்லை. கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற புராணத்தை ஓதி அங்கு வாழ்ந்து வந்த மக்களை வெளியிடங்களில் அலைய விடுகின்றது.
போருக்குப் பின்னர் இலங்கைஅரசு தமிழர் வாழும் பகுதிகளை சிங்களமயப்படுத்துவதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம், விகாரைகள் அமைப்பு எனப் பல வடிவங்களிலும் தமிழர் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு கட்டவிழ்த்து வருகின்றது.

அந்தப் பின்னணியில் 10 ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த தமிழர்களின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிவ பூமி எனப் போற்றப்படும் திருக்கேதீச்சரம் ஆலயம் அமைந்துள்ள சூழலிலும் பௌத்த மதத்தை நிலைநாட்டும் முயற்சியில் பௌத்த அடிவருடிகள் செயற்பட்டு வருகின்றனர்.

இதற்குத் தீவிரமான அரசின் ஆதரவும் உண்டு. அங்கு, சுமார் 1,500 கிலோ எடைகொண்ட புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நின்றுவிடவில்லை அரசின் அராஜகம். அதற்கு ஒருபடி மேலேசென்று திருக்கேதீச்சர ஆலய கிராமத்தில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றும் நடவடிக்கையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

திருக்கேதீஸ்வர ஆலயக் கிராமத்தில் சுமார் 185 குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன. போர்க் காலத்தில் அந்தக் குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தன. எனினும், போர் முடிவடைந்துள்ள நிலையிலும்கூட அரசு அவர்களை இன்னும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தவில்லை.

கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற புராணத்தை ஓதி அங்கு வாழ்ந்து வந்த மக்களை வெளியிடங்களில் அலைய விடுகின்றது.

ஆலய கிராமத்தில் சிங்களக்
குடியேற்றம்

ஆனால், ஆலயக் கிராமத்தில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றும் நோக்கிலேயே அரசும், இராணுவமும் செயற்பட்டு வருகின்றன என்று மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

மன்னார் மாட்டத்தில் உள்ள சரித்திர முக்கியத்தும்வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வரலாறு பழைமை வாய்ந்ததாகும்.

திருக்கேதீஸ்வர புனித ஸ்தலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. ஆனால், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கான சான்றுகள் தற்போது ஆலயத் திருப்பணிச் சபையிடம் உள்ளது.

இவ்வளவு நூற்றாண்டுகளுக்குமான தொடர்ச்சியான சைவ சமய வராலற்றுப் புலத்தை திருக்கேதீச்சரம் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் சிதம்பரத்தைப்போல திருக்கேதீச்சர ஆலயம் 48 ஹெக்டேயர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அத்துடன், ஆலயத்தைச் சூழவுள்ள கிராமம் பரந்த நிலப்பரப்பைக் கொண்டது.

ஒல்லாந்தர், போர்த்துகீசரின் ஆட்சிக் காலத்தில் திருக்கேதீச்சர ஆலயம் உடைக்கப்பட்டு அதிலிருந்து பெறப்பட்ட கருங்கற்களில் தேவாலயம் அமைக்கப்பட்டது எனவும் வரலாறு கூறுகின்றது.

திருக்கேதீச்சர ஆலயம் அமைந்துள்ள வளாகத்திலிருந்து 300 மீற்றர் தொலைவிலேயே இராணுவத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்னர் அந்தப் பகுதியில் போர்க் காலத்தில் விகாரையொன்று கட்டப்பட்டுள்ளது. இந்த விகாரை 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க் காலத்தில் மக்கள் ஆலயக் கிராமத்திலிருந்து வெளியேறியிருந்த நிலையிலேயே, இராணுவத்தின் உதவியுடன் இந்த விகாரையை அரசு நிர்மாணித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது.

அத்துடன், திருக்கேதீச்சர ஆலயத்திலிருந்த ஆயத்த மணியும் தற்போது விகாரையில்தான் இருக்கின்றது எனவும் அறியமுடிகின்றது. தேவாரப் பாடல்பெற்ற புனிதத் தலங்களுள் ஒன்றான திருக்கேதீஸ்சரம் புனித பூமி அமைந்துள்ள வளாகத்தை ஆக்கிரமித்து அங்கு பௌத்த மதத்தை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசு பல நடவடிக்கைகளை மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுத்து வருகின்றது.

கடந்த காலங்களில் இங்கு மேற்கொள்ளபட்ட தொல்லியல் ஆய்வுகள் தமிழர் சார்பான வரலாற்றெழுத்தியலை முன்னிலைப்படுத்துவதாக இருப்பினும் இப்போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் கீழ் பணியாற்றும் தொல்லியலாளர்கள் அது சிங்களவர்களுக்கும், பௌத்த மதத்தற்கும் உரியது என்று நிரூபிக்க கூடியளவிலான ஆய்வு முடிவுகளை முன்வைத்தாலும் வியப்பில்லை.

திருப்பணிச்சபை நடவடிக்கை

அதேவேளை, திருக்கேதீச்சர ஆலய சூழலில் புத்தர் சிலை அமைக்கப்படும் விவகாரத்திற்குத் திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றமும் இதனைக் கண்டித்துள்ளது.
அத்துடன், இது விடயம் தொடர்பில் அந்தச் சபையினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நல்லிணக்க செயற்பாடுகளுக்கான ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க எம்.பியை நியமித்தார்.

எனினும், இதனால் நடக்கப்போகும் மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது தமிழர்களுக்கு நன்கு தெரியும். இலங்கை அரசு பெயரளவில் மட்டும்தான் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கின்றது என்பது அவர்களுக்கு நன்கு புரியும். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி மஹிந்த அரசு அங்கே புத்தர் சிலையை அமைத்தே தீரும் என சிலர் அடித்துக்கூறுகின்றனர்.

இதற்கு அவர்கள் தகுந்த காரணிகளைக் கோடிட்டுக் காட்டுகின்றனர். திருக்கேதீச்சரத்தில் மட்டுமல்ல, திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலை அகற்றுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வீதி அபிவிருத்தி என்ற போர்வையிலேயே இந்தத் திட்டமிட்ட செயல் அரங்கேற்றப்படுகின்றது.

அத்துடன், தம்புள்ளையிலும் புனித பூமி எனக் கூறி இரண்டு கோவில்களை அங்கிருந்து அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. புனித பூமியிலிருந்து பள்ளிவாசலையும் அகற்றுமாறு பௌத்த பிக்குகள் கோஷமிடுகின்றனர்.

பௌத்த மதத்திற்கு அப்பால்
செல்லும் பிக்குகள்

இலங்கையிலுள்ள சில பிக்குகள் பௌத்த மதத்தின் போதனைகளுக்கு அப்பால் சென்றே செயற்படுகின்றனர். அரசியல்,அடாவடி என அனைத்துவித செயல்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். புனிதமானதொரு மதத்தின் குருக்களான இவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது அவர்களின் மதத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும். காவி உடை தரித்து காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடக்கூடாது.

அரசின் போலிப் பிரசாரம்

அதேவேளை, இலங்கைத் தீவில் சிறுபான்மையின மக்கள் பூரண சுதந்திரத்துடனேயே வாழ்கின்றனர் என உலகுக்குப் போலிப்பிரசாரங்களைச் செய்யும் மஹிந்த அரசு, நாட்டில் சிறுபான்மையின மக்களை அடக்கி ஓடுக்கி ஆள்வதற்கே முயற்சிக்கின்றது. நாட்டில் அண்மைக்காலமாக அரங்கேறும் சம்பவங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

குறிப்பாகத் தமிழினத்தின் மீது ராஜபக்ஷ அரசு கடும் கோபத்தில் உள்ளது. அதனால்தான் தமிழர்களை அனைத்து வழிகளிலும் துன்பப் படுத்திவருகின்றது. தழிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை அழித்து வருகின்றது.

நாட்டில் நல்லிணக்தை ஏற்படுத்தி சகல இனங்களுக்கும் சம உரிமை வழங்குமாறு இலங்கை அரசை சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது. ஆனால், அதுகுறித்து அரசு கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மாறாக, அசுரவேகத்தில் இனமத சுத்திகரிப்பு நடவடிக்கையையே அது மேற்கொண்டு வருகின்றது.

அன்று இன ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் இன்று மத ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைளை மஹிந்த அரசு கைவிடாவிட்டால் உலக நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பயங்கரமாகவே இருக்கும் என்பதை இலங்கை அரசு உணரவேண்டும்

Read More

பிற மத பரம்பலைத் தடுத்து இந்து சமயத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அகில இலங்கை இந்து மாமன்றம்
by admin - 0

யுத்தத்தினால் அழிந்து போயுள்ள இந்து சமயக் கோயில்களை புணரமைப்பதற்கான முயற்சிகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளாது தமது மதத்தினையும் மதக்கடவுளின் சிலைகளையும் வலுக்கட்டாயமாக வடக்கில் திணித்து வருகின்றது என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை தெரிவித்தார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ். பிராந்திய பணிமனையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கில் தற்போது புத்தர் சிலையினுடைய ஆக்கிரமிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. இதற்காக நாம் ஏற்கனவே கண்டனங்களைத் தெரிவித்திருந்தோம் அதன்பிரகாரம் தற்போது அது இடை நிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோயில்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளது அவற்றினை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அத்துடன் யுத்தத்தினால் அழிந்து போன மற்றும் புணரமைப்புச் செய்ய வேண்டிய கோயில்கள் ஏராளம் வடக்கில் உள்ளன. அதனைப் புணரமைத்து புதுப் பொலிவு பெறுவதற்கு வேண்டிய எந்த முயற்சிகளையும் அரசு எடுக்காமல் தமது கடவுளரின் சிலைகளை தான் தோன்றித்தனமாக நிறுவி வருகின்றனர் இது எமது சமயத்தின் உயர்வுக்கு பாதகமாக அமைகின்றது.

இதற்கு அண்மையில் திருக்கேதீஸ்வரத்தில் புத்தர் சிலை ஒன்று தான் தோன்றித்தனமாக அரசு நிறுவியதனைக் கூறலாம். இதனை நாம் வன்மையாக கண்டித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

அத்துடன் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் முன்னர் தனியாருக்கு சொந்தமானதாக இருந்தது ஆனால் அது தற்போது அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் இங்கு கிடைக்கின்ற வருமானங்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கூட எமக்குத் தெரியாது.

இதற்கென தனிநிர்வாகம் கிடையாது அதனால் அரசின் எதிர்கால திட்டங்கள் என்ன என்றும் புரியவில்லை. காலப்போக்கில் புத்தர் சிலையைக் கூட அங்கு அவர்கள் நிறுவலாம்.

அத்துடன் வடக்கில் பல கோயில்கள் நீதிமன்றில் வழக்கில் உள்ளன. இதனால் சமய ரீதியிலான வழக்கு நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் நடத்தப்படுவதனை விரும்பவில்லை. அதனால் இனிவரும் காலங்களில் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் உள்ள மத்தியஸ்தர் சபையின் ஊடாக கோயில்களில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் அகில இந்து மாமன்றத்தின் செயலாளர் நீலகண்டன், அகில இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறுதிருமுருகன், நல்லை ஆதீன முதல்வர், நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் ஆலய குருக்கள், மற்றும் இந்து மத அமைப்புக்கள் நிர்வாக சபைத் தலைவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட வட மாகாத்தின் அனைத்து மாவட்ட இந்து மத அமைப்புக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய அரசாங்கம் அமைக்கும் பணியில் ஒல்லாந்த்
by admin - 0

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளார்.
அங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு (பொதுச் செலவினங்களுக்கான நிதிக்குறைப்பு மற்றும் இதர சிக்கன அறிவிப்புகள்) ஒரு முடிவு கட்டப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு அளித்துள்ளார்.யூரோ வலய நாடுகளுடன் தொடர்புடைய கடன்கள் விவகாரத்தில் 'அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட புதிய திட்டமொன்றை' முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் சோசலிஸ்ட் வேட்பாளர் ஃபிரான்ஸுவா 52 வீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்று வெற்றியடைந்தார்.
மத்திய-வலதுசாரியான நிக்கோலா சார்க்கோஸி தான் 1981ம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது தவணைக்கான தேர்தலில் தோல்வியடைந்த முதல் பிரான்ஸ் அதிபராவார்.
ஜெர்மனி ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கலுடன் இணைந்து நிக்கோலா சார்க்கோஸி முன்னெடுத்த ஐரோப்பிய நாடுகளின் வரவுசெலவுத் திட்டக் கட்டுப்பாடுகள் தொடர்பான உடன்படிக்கையை மீளவும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் கோரியிருந்தார்.
வெற்றிபெற்றுள்ள புதிய அதிபரை தொலைபேசி மூலம் வாழ்த்தியிருக்கின்ற அங்கேலா மேர்க்கல், பேச்சுவார்த்தைக்காக விரைவில் ஜெர்மனிக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
'ஐரோப்பாவின் நலன்களைக் கருத்தில்கொண்டு பிரான்ஸ்-ஜெர்மனி உறவுகளை பலப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கு' இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஃபிரான்ஸுவா ஒல்லாந்தின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Read More

ஆபாசப் படங்களில் பூஜா! அம்பலப்படுத்தியது கன்னடப் பத்திரிக்கை! வீடியோ இணைப்பு
by admin - 0



ஆபாசப் படங்களில் பூஜா நடித்துள்ளார் என்று கன்னட பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தியைப்பார்த்த நாயகி பூஜா கடும் கோபத்திற்கு ஆளானார்.

இதையடுத்து தன் மீது அபாண்டமாக வீண் பழி சுமத்தியுள்ளதாக அப்பத்திரிக்கை மீது பூஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுகுறித்து பூஜா, தமிழில் கடைசியாக நான் கடவுள் படத்தில் நடித்துவிட்டு இலங்கை சென்று விட்டேன்.நான் இல்லாத சமயம், கன்னட பத்திரிக்கை ஒன்று என் மீது அபாண்டமாக வீண் பழி சுமத்தியுள்ளது. அப்பத்திரிக்கை மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளேன்.

என் மீது பழி சுமத்தியவர்களை வெறுமனே விடமாட்டேன். பழிக்கு பழி வாங்குவேன் என்று ஊடக நிருபர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.தற்போது பாலாவின் “பரதேசி” என்ற புதியதொரு படத்தில் பூஜா நடித்து வருகிறார்.
Read More

May 06, 2012

மணமகன் வர தாமதம்: மணப்பெண்ணுக்கு, மணமகனின் சகோதரி தாலி கட்டினார்
by admin - 0

வெளிநாட்டில் இருந்து மணமகன் வர தாமதம்: மணப்பெண்ணுக்கு, மணமகனின் சகோதரி தாலி கட்டினார்
கேரள மாநிலம் காயங்குளம் பகுதியை சேர்ந்த கமலேஷ், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு சாரிகிரிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்குச் செல்ல கமலேஷின் கடை உரிமையாளர் அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்துவிட்டார்.

அங்குள்ள தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மூலம் சமரசம் பேசியும், குறிப்பிட்ட நேரத்தில் கமலேஷின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டார்.

இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த மாப்பிள்ளை கமலேஷ், குறிப்பிட்ட நேரத்தில் ஊருக்கு வர முடியவில்லை. என்றாலும், சுபமுகூர்த்த நேரத்தை தவறவிட விரும்பாத இரு வீட்டாரும் துணிச்சலான முடிவை எடுத்தனர்.
அதன்படி, கமலேஷின் சகோதரி தகவிதா மணமகன் சார்பில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார். திருமண விருந்து முடிந்ததும், புதுப்பெண் சாரி கிரிஷா, மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Read More

திரிஷாவைத் திருப்திப்படுத்த தமன்னா நீக்கம்
by admin - 0



என்றென்றும் புன்னகை படத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்ய த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவருக்கு பதிலாக பிரபல மாடல் லிசா ஹேடன் நடிக்கிறார்.

ஜீவாவுடன் த்ரிஷா முதன் முதலாக ஜோடி சேரும் படம் என்றென்றும் புன்னகை. அதில் இன்னொரு ஹீரோயின் தேவை என்று நினைத்த இயக்குனர் அகமது, தமன்னாவை தேர்வு செய்துள்ளார். இந்த செய்தி த்ரிஷா காதுக்கு எட்டவே, இந்த படத்தில் ஒரு ஹீரோயின் என்று சொல்லிவிட்டு இப்போ தமன்னாவை ஒப்பந்தம் செய்ய நினைத்தால் எப்படி. படத்தில் எனது முக்கியத்துவம் குறைந்துவிடுமே என்று மல்லுக்கு நின்றுள்ளார்.

த்ரிஷாவின் கோபத்தைப் பார்த்த இயக்குனர் சற்றே இறங்கி வந்து சமாதானம் செய்துள்ளார். சரி, சரி இன்னொரு ஹீரோயின் போட்டால் அவர் தமிழ், தெலுங்கு அல்லாத மொழிகளில் நடிப்பவராக இருக்க வேண்டும் என்று த்ரிஷா கன்டிஷன் போட்டுள்ளார். வேறு வழியின்றி இயக்குனர் தமன்னாவை எடுக்காமல் பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான லிசா ஹேடனை ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதன் பிறகே த்ரிஷா கூலாகியுள்ளாராம். த்ரிஷாவின் செல்லப்பெயர் ஹனியாம். ஆனால் அவரை அவ்வாறு அழைக்க சிலருக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளார்.

Read More

May 04, 2012

முல்லைத்தீவு காட்டில் மரம் வெட்டியவர்கள் கைது
by admin - 0

முல்லைத்தீவு, வல்லிபுரம் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் முல்லைத்தீவு பொலிஸார் நடாத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் காட்டுப் பகுதியில் வெட்டி எடுத்துச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த நான்கு மற்றும் ஏழு அடி உயரமான மரக்குற்றிகள் ஒரு தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மரங்களின் தற்போதைய பெறுமதி இரண்டு லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சினிமா கேள்விக்கு பதில் தெரிந்த தமிழனுக்கு தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் எத்தனை என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் போனது ஏன்?
by admin - 0

சினிமா கேள்விக்கு பதில் தெரிந்த தமிழனுக்கு தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் எத்தனை என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் போனது ஏன்?சினிமா கேள்விக்கு பதில் தெரிந்த தமிழனுக்கு தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் எத்தனை என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் போனது ஏன்? இப்போதே இந்த நிலை என்றால் , இன்னும் பத்து ஆண்டுகளில் இப்படிப் பட்ட தமிழர்கள் தான் அதிகம் தமிழ் நாட்டில் இருப்பார்கள். இந்த நிலை நீடித்தால் தமிழும் இருக்காது தமிழனும் இருக்க மாட்டன் தமிழகத்தில்

Read More

யாழில் இராணுவ வீரர்கள் இடையே மோதல்: (படங்கள்)
by admin - 0

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியோரமாக ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.

இந்த இரு இராணுவ வீரர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு இராணுவ வீரர் மீது மற்றுமொரு இராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.

இந்த இரு இராணுவ வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்

தனது சக இராணுவ வீரர் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச் சம்வப இடத்திற்கு சென்ற யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசாராச மற்றும் சட்ட வைத்திய அதிகாரி நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.





Read More

கோச்சடையானுக்காக தீபிகாவுடன் பரத நாட்டியம் ஆடிய ரஜினி!
by admin - 0


கோச்சடையான் படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் தீபிகாவும் பரத நாட்டியம் ஆடியுள்ளனர். இந்தக் காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.

கோச்சடையான் படம், சரித்திரக் கதை. இதில் ஒரு பரதநாட்டியப் பாடல் இடம்பெற்றுள்ளது. சிவபெருமானின் ருத்ர தாண்டவத்துக்கு நிகரான ஒரு பாடல் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது.

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. இதில் ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் பரத நாட்டியம் ஆடினர்.

இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான் இதற்கான நடனத்தை அமைத்துள்ளார். ரஜினி, தீபிகா இருவருமே சில தினங்கள் ஒத்திகை செய்து பார்த்த பிறகே இந்த நடனக் காட்சியில் நடித்துள்ளனர்.

இது குறித்து டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் கூறுகையில், "தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பணி புரிகிறேன். அதுவும் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் இந்த நடனத்துக்காக கடுமையாக உழைத்தனர். குறிப்பாக ரஜினி இதற்கா தீவிரமாக ரிகர்சல் செய்து ஆடினார்," என்றார்.

கோச்சடையான் படம் செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு ரிலீசாகிறது.


Read More

May 03, 2012

ஒசாமா கொல்லப்பட்ட இடத்தில் அதிசய நீரூற்று
by admin - 0


அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் நரகத்தில் இருந்து டுவிட்டரில் செய்தி மேல் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... எல்லாம் ஒசாமா பெயரில் வெளியிடப்படும் டுவிட்டர்கள்தான்.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு ஓராண்டு ஆகி விட்டது. அவர் கொல்லப்பட்ட உடனேயே பல டுவிட்டர் அக்கௌண்டுகள் அவரது பெயரில் போலியாக துவங்கப்பட்டன. அவற்றில் இருந்து ஒசாமா பேசுவது போன்ற பல தகவல் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

ஒசாமா பெயரில் வலம் வரும் டுவிட்டர் கூத்துகளிலிருந்து சில துளிகள்...

- என் மனைவி ஏபிசி நியூஸிடம் பேசுகிறார். அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கலாமா என்று என்னிடம் அனுமதி கேட்டதைவிட இது அவமதிக்கும் செயலாகும்.

- ஹாட் சாக்கலேட் குடிப்பது ஹராமாகும்.

- நான் இறந்தது போன்று பொய்யான தகவல் பரப்பியுள்ளேன். ஆனால் நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன். தற்போது உலகை சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யார் கண்டது நான் உங்கள் ஊருக்கு கூட வரலாம். அருகில் உள்ள அல் கொய்தா கிளையைத் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளுங்கள்.

- நான் அல் கொய்தா தலைவராக இருந்தேன். தற்போது உயிருடன் இல்லை. என்னை நரகத்தில் வந்து பார்க்கலாம். நான் தான் தலைசிறந்த தீவிரவாதியாக இருந்தேன். கண்ணாமூச்சி ஆட்டத்தில் நான் தான் பெஸ்ட்.

- நான் இறந்திருக்கலாம் ஆனால் வாழ்க்கை தொடரத் தான் செய்யும். உலகில் 71 சதவீதம் கடல். அதனால் நான் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

- இதென்ன மே 1ல் ஒபாமா சர்பிரைஸ் விசிட்?

இதற்கெல்லாம் மேலாக ஒரு டுபாக்கூர் வெப்சைட் ஒசாமாவின் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதில் ஒசாமா அளித்த பேட்டி வருமாறு,

சொர்க்கத்தில் மட்டன் டிக்கா மசாலா கூட கிடைக்காததால் அங்குள்ளவர்கள் நரகத்திற்கு வர விரும்புகிறார்கள். நரகம் ரொம்ப ஜாலியாக இருக்கிறது. இங்கு உள்ள ஸ்டாலின், ஹிட்லர் எனது நண்பர்கள்.

நான் பூமியில் இருக்கும்போதே ஸ்டாலினை சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடால்ப் ஹிட்லரும் நல்லவர் தான் ஆனால் கொஞ்சம் வளைந்து கொடுக்காதவர் என்றார்.

பின் லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் அவர் கொல்லப்பட்ட அப்போத்தாபாத் வீட்டிற்கு விசிட் அடித்தனர். மேலும் அந்த இடத்தில் மோட்டார் இன்றி நீரூற்று போல் தண்ணீர் வருகிறது என்றும் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

நீரூற்றுக்கு உடைந்த பைப் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் அப்பாவிகள் கொல்லப்பட்டதால் தான் ஊற்று வந்துள்ளது என்று பலர் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

May 02, 2012

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைக் கண்டுபிடித்த மறத்தமிழன்
by admin - 0


உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு
தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்சனை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம் இதை உடைத்து தமிழரின் பெருமையை உலகுக்கு கொண்டு வர ஈழதம்ழர்களும் தமிழ் நாடும் முன் வர விவசாயி வேண்டுகோள் விடுகிறது நன்றி தமிழ்
Read More

பச்சை நிற வானம்! உலக அழிவிற்கு அறிகுறியா?
by admin - 0

ஷிய தலைநகர் மொஸ்கோவுக்கு மேலாக கடந்த 26 ஆம் திகதி வானத்தில் திடீரென்று பச்சை நிற முகில்கள் பரவலாக தோன்றின. இதனால் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
உலகத்தின் இறுதி நாள் வந்து விட்டது என்று சொல்லிசிலர் திகிலை ஏற்படுத்தினர்.வேற்றுக் கிரகவாசிகளின் வேலையாக இருக்குமோ? என்று சிலர் சந்தேகப்பட்டனர்.இன்னும் சிலர்கடவுளுடைய அருளின் வெளிப்பாடு என்கின்றனர்.

ஆனால் பெரும்பாலானோர் இரசாயன பேரழிவு ஒன்றை இது கட்டியம் கூறுகின்றது என்றே நம்பினர். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும், பதற்றம் அடைய வேண்டாம் என்று அரசு கோரியது.

மொஸ்கோவில் உள்ள பாரிய இரசாயன தொழில்சாலை ஒன்று தீப்பற்றி எரிந்தது என்றும் இங்கிருந்து கிளம்பி சென்ற இராசாயன பொருட்கள்தான் பச்சை முகில்களாக சூழ்ந்து நிற்கின்றன என்றும் பொதுமக்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் தற்போது பூச்ச மரங்கள் பூத்து உள்ளன என்றும் இவற்றில் இருந்து வெளியேறிய மகரந்தங்கள்தான் பச்சை முகில்களாக சூழந்து நிற்கின்றன என்றும் இவை பாரதூரமான ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்து உள்ளது. இதனால் மொஸ்கோவில் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும் அரசு உண்மையை மறைக்கின்றது என்றே பெருமளவிலானோர் சந்தேகிக்கின்றனர்.





Read More