Latest News

May 07, 2012

ஓவரா வெயிட் போடாதீங்க! வேலை கிடைப்பது சிரமம்!!
by admin - 0

குண்டாக இருக்கும் பெண்களுக்கு வேலை கொடுப்பதிலும், சம்பளம் கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. அதில், வேலைக்கு விண்ணப்பிக்கப்பட்ட புகைப்படத்துடனான பெண்களின் சுய விபர குறிப்புகள் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, பணி வழங்கும் நிறுவனங்கள் குண்டு உடலைப்பு கொண்ட பெண்களின் ரெசுயூம்களின் மீது பாரபட்சம் பார்ப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக, விண்ணப்பிப்பவரின் புகைப்படங்கள் இருவிதமாக அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒருவர் தனது முந்தைய புகைப்படத்துடன் ஒரு விண்ணப்பமும், அறுவை சிகிச்சைப்பிறகான புகைப்படத்துடன் இன்னொரு விண்ணப்பமும் அனுப்பப்பட்டது.

அதில், குண்டான உருவம் கொண்ட பெண்களுக்கு வேலைக்கு தேர்வு செய்வதில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குண்டாக இருப்பவர்களுக்கு சம்பளம், பொறுப்பு வழங்குதலில் கூட பாரபட்சம் பார்க்கபடுவதாக ஆய்வு கூறுகிறது. குண்டு பெண்களுக்கு குறைந்த ஊதியம் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரிய வருகிறது.

இது ஆஸ்திரேலியாவில்தான் என்றாலும் குண்டு உடல் கொண்டவர்கள் சுறு சுறுப்பாக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் இது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றனர். குண்டாக இருக்கும் பெண்களே கொஞ்சம் உங்கள் உடலை ஸ்லிம் ஆக மாற்றிக்கொள்வது உடலுக்கும் ஆரோக்கியம், நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வு முடிவு சர்வதேச உடல் பருமன் குறித்த மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


« PREV
NEXT »

No comments