Latest News

June 30, 2011

புதிய அச்சுறுத்தல்கள்
by admin - 0

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் பிஷ்ஷிங் எனப்படும், வாடிக்கையாளர் கவனத்தினைத் தூண்டி விட்டு, கவிழ்த்துவிடும் செயல்முறை களாகவே இருந்து வருகின்றன. எனவே இந்த தளங்கள் மட்டுமின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு அறிவித்துள்ளன. வழக்கமாக, நமக்கு வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள் போன்ற எச்சரிக்கைகள் மட்டும் இப்போது சரி வராது. மேலும் பல புதிய வழிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்திய தூண்டுதல் வழி முறைகளை ஆய்வு செய்து சில வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
1. நண்பர்களை எப்போதும் நம்பாதீர்கள்: பலமுறை நாம் இந்தப் பக்கங்களில் எழுதியபடி, பிரபலமான வங்கிகளின் பெயர்களில், நம் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்ட் கேட்டு வரும் இமெயில்கள் குறித்து நாம் கவனமாகவே இருக்கிறோம். இவை எப்போதும் போலியாகவே உள்ளன. இதனால் தான், பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் இன்டர்நெட் வழி கணக்கினைத் திறக்கும் முன்னரே, தங்கள் வங்கி எப்போதும் இது போன்ற தகவல்களைக் கேட்டதில்லை; கேட்கவும் மாட்டோம் என அறிவிக்கின்றனர். ஆனால் தற்போது நம்மை மாட்ட வைக்கும் இமெயில்கள், நம் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் குடும்பத் தினரிடமிருந்து வருபவையாக உள்ளன. இதனால், நாம் உடனே அவை பற்றி இரண்டாம் சிந்தனை இல்லாமல், லிங்க்குகளில் கிளிக் செய்து விடுகிறோம். அவை நம்மை மாட்ட வைக்கும் தளங்களுக்கும், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கும் வழி அமைக்கின்றன. எனவே எத்தகைய உறவு முறை உள்ளவர்களிடமிருந்து, லிங்க்குகளோடு வரும் மின்னஞ்சல் செய்திகள் குறித்து அவர்களைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னரே, அந்த அஞ்சலில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டும். 
2.நம்மை செயல்படாமல் வைத்தல்: சென்ற மே மாத இறுதியில், ஹாட்மெயில் தளத்திற்கு வந்த மின்னஞ்சல் செய்திகளில் ஒரு புதிய வழிமுறையை ஹேக்கர்கள் பின்பற்றியதாக, ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வகையில் மின்னஞ்சல் செய்திகள் தனி நபர்களைக் கவரும் வகையில் வெளியிடப்படுகின்றன. அஞ்சல்கள் முன் தோற்றப் பார்வையில் காட்டப்பட்டு, அதன் வழியிலேயே, அக்கவுண்ட் வைத்திருப்போரைக் கவிழ்த்திடும் வழிகள் தரப்பட்டிருந்தன. இதில் உள்ள ஒரு ஸ்கிரிப்ட் தானாக இயங்கி, மெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் தனி நபர் தகவல்களைத் திருடும் வழிகளை மேற்கொள்கின்றன. இத்தகைய தாக்குதல்கள் குறித்து தகவல்கள் வந்தவுடன், மைக்ரோசாப்ட் உடனே அதனைச் சரி செய்தது. இருப்பினும் பாதிப்பு பன்னாட்டளவில் அதிகமாகவே இருந்தது.
ஜிமெயில் மின்னஞ்சல் தளத்தில் புகுத்தப்பட்ட கெடுதல் வழி வேறு மாதிரியாக இருந்தன. இந்த கெடுதல் வழிகள், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஆய்வு செய்து, வைரஸ்களைக் கண்டறியும் குறிப்புகளைச் செயல் இழக்கச் செய்து, தங்கள் வேலையை முடித்துக் கொண்டன. 
3.தொடரும் நாசம்: ஒரு கம்ப்யூட்டரைத் தாக்கியவுடன், தொடர்ந்து அதனையே தாக்குவதற்கான வழிகளையும் இந்த கெடுதல் வழிகள் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், ஒருமுறை தனி நபர் தகவல்கள் கிடைத்தவுடன் அவற்றைப் பயன்படுத்தி தொடர் அழிவு வேலைகளை மேற் கொள்வது இவற்றிற்கு எளிதாகிறது.
4. புதிய அறிவுரைகள்: வழக்கமான எச்சரிக்கைகளுடன், ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் புதிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. மின் அஞ்சலில் ஏதேனும் இணைய தளத்தின் முகவரிக்கான லிங்க் தென்பட்டால், அதன் சொற்களில் உள்ள எழுத்துக்களில் மாறுதலான எழுத்துக்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும். இந்த தளங்கள் மைக்ரோசாப்ட், யாஹூ, கூகுள் மற்றும் பிரபலமான தளங்களின் பெயர் களோடு தள முகவரியைக் கொண்டிருக்கும். ஆனால் உற்று நோக்கினால், இவற்றின் பெயர்களோடு ஒன்றிரண்டு எழுத்துக்கள் இணைக்கப் பட்டு, கெடுதல் விளைவிக்கும் தளங்களுக்கான முகவரிகளாக இருக்கும்.
ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பிரபல மெயில் தளங்கள் தொடக்கத்தில் காட்டப்பட்டு, அடுத்தடுத்த மெயில்களைக் காட்டாமல், அது சரியில்லை, இது சரியில்லை என்று பிழைச் செய்தி வருகிறதா? இணைய இணைப்பு இருக்கும்போதே, எந்த தளமும் கிடைக்க மறுக்கிறதா? உங்கள் டி.என்.எஸ். சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்ற பிழைச் செய்தி கிடைக்கிறதா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்ட இந்த வகை கெடுதல் விளைவிக்கும் வழிகளுக்குப் பலியாகி விட்டதென்று பொருள். 
மைக்ரோசாப்ட் மற்றும் பிற ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தரும் அப்டேட் பேட்ச் பைல்களை இயக்கி வைக்கவும். அப்படியும் சரியாகவில்லை என்றால், நல்ல நிலையில் கம்ப்யூட்டர் இயங்கிய போது ஏற்படுத்திய ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குச் செல்லவும்.
ஆனால் இவை எல்லாம் நிரந்தரத் தீர்வாகிவிடாது. பொறுமையாக அனைத்து மின்னஞ்சல்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து, கவனமாகச் செயல் படுவதே நல்லது.

Read More

June 27, 2011

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
by admin - 0

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகையாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கலந்து கொண்டன. அதிலிருந்து ரசிகர்கள் தேர்வு செய்த கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. எந்திரன் படத்தில் அவர் நடித்த ரோபோ கதாபாத்திரத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது. விருதினை ரஜினியின் மருமகன் தனுஷ் பெற்றுக் கொண்டார்.

ராவணன் படத்தில் நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருதும், அங்காடித் தெரு படத்தில் நடித்த அஞ்சலிக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தன.

அங்காடித் தெரு படத்தின் இயக்குநர் வசந்த பாலனுக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இந்தப் படமே சிறந்த படமாகவும் தேர்வானது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். மைனா பட நாயகன் விதார்த் சிறந்த அறிமுக நாயகனாகவும், அமலா பால் சிறந்த அறிமுக நாயகி விருதையும் பெற்றனர்.

சிறந்த துணை நடிகையாக சரண்யாவும், சிறந்த துணை நடிகராக தம்பி ராமையாவும் விருது பெற்றனர். காமெடியனாக சந்தானம் தேர்வானார்.

பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்தவும், சிவாஜி கணேசன் விருது கே.பாலச்சந்தருக்கும், பொழுதுபோக்கு படத்துக்கான விருது சிங்கம் படத்துக்காக சூர்யாவுக்கும் கிடைத்தது.

தேர்வுக் குழு என்று எதையும் நியமிக்காமல் முற்றிலும் ரசிகர்களே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த விருதுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

பொருளிடம் அறியும் புதிய பொறிமுறை
by admin - 0


பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை தமிழ் விஞ்ஞானி ஒருவர் இங்கு பிரிட்டனில் கண்டுபிடித்திருக்கிறார்.
பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் அவர்களே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.
ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.
விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்கலாம்
விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்கலாம்
ஏற்கனவே இப்படியான பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிள் கைத்தொலைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், தற்போதுள்ள பொறிமுறைகள் மின்கலம் இல்லாமல் இயங்க முடியாத குறைபாட்டுடன் காணபடுகின்றன. அத்துடன் அவற்றின் விலையும் மிகவும் அதிகமாகும்.
ஆனால், 26 வயதான சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்கிறார் சபேசன்.
இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் சபேசன் கூறுகிறார்.
இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கும் தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்.
 
Read More

மகனை நினைத்து அடிக்கடி அழும் கனிமொழி: சிறை அதிகாரி தகவல்
by admin - 0


டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, தன் மகனை நினைத்து அடிக்கடி அழுது கொண்டிருக்கிறார்' என, சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மே 20ல் அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது, "வெளியே வந்து விடுவோம்' என்ற, நம்பிக்கையில் புன்னகையுடன் தான் இருந்தார்.சி.பி.ஐ., கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என, அனைத்தும், அவரது ஜாமின் மனுவை நிராகரித்து விட்டன. இதனால், நம்பிக்கை இழந்த கனிமொழி, சிறையில், 15 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறை அதிகாரி சுனில் குப்தா தெரிவித்ததாவது:எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார். "சில நேரங்களில் தன் மகன் ஆதித்யாவை நினைத்து அழுகிறார். அவரது அறையில், 28 சேனல்கள் கொண்ட, "டிவி' வைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது அதைப் பார்க்கிறார். சில நேரங்களில் எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறார்.அவர் கவிதை எழுதுகிறாரா அல்லது தன் அனுபவங்களை எழுதுகிறாரா என்பது தெரியவில்லை. அவரை சந்திக்க வருபவர்களுடம் பெரும்பாலும் மகனை பற்றியே பேசுகிறார்.இவ்வாறு சுனில் குப்தா தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுத்த நிலையில் கடந்த, 23ல், மகளை சென்று பார்த்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் மகள் கனிமொழி மிக மோசமான சூழ்நிலையில் சிறையில் வாடுவதாக தெரிவித்தார். டில்லி வெயிலின் வெப்பம் தாங்காமல் கனிமொழியின் உடலில் கொப்புளங்கள் தோன்றியுள்ளன என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள திகார் சிறை அதிகாரி சுனில் குப்தா, " நாட்டில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் முன் உதாரணமாக திகார் சிறை உள்ளது. இதை தேசிய மனித உரிமை கமிஷனும், ஐகோர்ட்டும் ஏற்றுக் கொண்டுள்ளன. திகார் சிறை வளாகத்தில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற, சிறை அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கனிமொழிக்கு மன வருத்தம் இருந்தாலோ, உடலில் கொப்புளங்கள் இருந்தாலோ, அதற்கு அவர் தாராளமாக சிகிச்சை பெறலாம்' என்றார்.

Read More

June 26, 2011

பிப்பாவை காதலிக்கவில்லை: சிங்கிளாத் தான் இருக்கிறேன்- இளவரசர் ஹாரி
by admin - 0


கேத் மிடில்டன் சகோதரி பிப்பா மிடில்டன்னை இளவரசர் ஹாரி காதலிப்பதாக செய்திகள் வந்தன. இதை ஹாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் திருமணத்தின்போது பிரபலமானவர் மணப்பெண் சகோதரி பிப்பா மிடில்டன்(27). அதில் இருந்து இங்கிலாந்து இளைஞர்களின் கவனம் எல்லாம் பிப்பா பக்கம் திரும்பியது. இதனால் அவர் மீது




 தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வந்தன. இதையடுத்து அவரது பெற்றோர் அவருக்கு குண்டு துளைக்காத கார் ஒன்றை வாங்க முடிவெடுத்துள்ளனராம்.

இதற்கிடையே தனது காதலி செல்சி டேவியைப் பிரிந்த இளவரசர் ஹாரி (26) பிப்பாவுடன் ஊர் சுற்றுவதாகவும், அவரை காதலிப்பதாகவும் இங்கிலாந்தில் பேசப்பட்டது. இதை இளவரசர் மறுத்துள்ளார். தான் பிப்பாவுடன் ஊர் சுற்றவில்லை என்றும், அவரை காதலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஹாரியும் நடிகர்கள் ஸ்டைலில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார்.

தான் கடுமையாக உழைப்பதாகவும், டேட்டிங் போவதற்கும், டிவி பார்ப்பதற்கும் நேரமே இல்லை என்று கூறியுள்ளார் ஹாரி.








Read More

மாம்பழங்களை கால்சியம் கார்பைடு உபயோகித்து பழுக்கவைப்பதால் ஏற்படும் தீமைகள்
by admin - 0

கால்சியம் கார்பைடு: இது ஒரு ரசாயனப் பொருள். சுத்தமான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலையில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப்பூண்டின் வாசனை சிறிதளவு இருக்கும். இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு போன்ற நச்சுப் பொருட்கள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளியேற்றுகின்றது. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது




உடல்நலக்கேடு: கால்சியம் கார்பைடிலுள்ள ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதன் அளவு அதிகமாகும்போது புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. சுமார் 33-35 சதவீத அசிட்டிலின் வாயுவை ஒருவர் சுவாசித்தால் 5-7 நிமிடங்களில் மயக்கமடையலாம். கார்பைடு உபயோகித்து பழுக்க வைத்த பழங்களை உண்பதால் வாந்தி, பேதி, நெஞ்சில் எரிச்சல், குடற்புண், கண்களில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகலாம். தொடர்ந்து இவ்வாறு பழுக்க வைத்த பழங்களைச் சாப்பிட்டால் தூக்கமின்மை, தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை உண்ணக்கூடாது. பழங்களின் மேற்தோல் ஒரே சீராக மாறி இருந்தால் அது கல்வைத்து பழுக்க வைத்தது என்பதை கண்டறியலாம். தெரிந்தோ தெரியாமலோ கல்வைத்து பழுத்த பழங்களை வாங்கினால் தண்ணீரில் 5 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பழத்தை அப்படியே சாப்பிடாமல் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உண்ணலாம். இப்பழங்களை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க இயலாது. மாம்பழ சீசன் துவங்கியஉடனே சந்தைக்கு வரும் பழங்கள் பெரும்பாலும் கல்வைத்து பழுக்க வைத்ததாக இருக்கலாம். பொதுவாகவே ஜூன்-ஜூலை மாதங்களில் சந்தைக்கு வரும் பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைத்தவையாக இருக்கும்.

Read More

சீன பிரீமியர் குரல்கள் ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு துணைபுரிகின்றன
by admin - 0

சீன பிரதமர் வென் ஜியாபாவோ ஹங்கேரி விஜயத்தின் போதுஐரோப்பா மற்றும் அதன் பொதுவான நாணயத்துக்கு தனது நாட்டின்ஆதரவுகொடுத்திருக்கிறார். சனிக்கிழமை செய்தி மாநாட்டில் பேசுகையில், வென் சீனா சமீபத்திய ஆண்டுகளில் யூரோ பத்திரங்களின் அதன் பிடிப்பு பெரிய அளவில் அதிகரிக்க செய்துள்ளது 
ஐரோப்பாவில் ஒரு நீண்ட காலமுதலீட்டாளர் சீனா  என்று தெரிவித்தார். வென் ஐரோப்பாவில் ஐந்து நாள் சுற்றுப்பயணம் தொடங்கினார் வெள்ளி ஹங்கேரியில்சென்றடைந்தார். பின் பிரிட்டன் மற்றும் ஜெர்மனி  செல்வார்  .
 கிரேக்கத்தில் கூர்மையான பொருளாதாரபிரச்சினைகளையால்  யூரோப்பகுதி நிதிய உறுதிப்பாடு பற்றிய ஐரோப்பிய தலைவர்கள் கவலையை பற்றி அவர் அவர்களுடன் கலந்துரையாடுவார்.
www.vivasaayi.com
Read More

இன்று சர்வதேச போதை ஒழிப்பு தினம்
by admin - 0

மதுக்கடையில் போதையில் தள்ளாடிய தந்தையை கைத்தாங்கலாக  மகன் 



Read More

இனப் படுகொலை:Ethnic massacre
by admin - 0

இனப் படுகொலை மூலம் 8 லட்சம் அப்பாவி டுட்சி இன மக்களை கொன்று குவித்த ருவாண்டா முன்னாள் பெண் அமைச்சருக்கு ஐ.நா. சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (UN war crimes tribunal) ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ருவாண்டா நாட்டின் முனனாள் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாலின் நிராமாசுகுகோ (65). இவர் கடந்த 1994ம் ஆண்டு பதவியில் இருந்தபோது ருவாண்டாவின் தெற்கு புடார் மாகாணத்தில் டுட்சி இன மைனாரிட்டி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 100 நாட்கள் நடந்தது. அப்போது ஆட்சியில் இருந்த அரசு ராணுவத்தினரை ஏவி 8 லட்சம் டுட்சி இன மக்களை இனப் படுகொலை செய்தது. இதில் முக்கிய பங்கு வகித்தார் பாலின்.

இவரது மகன் ஆர்சன் ஷலோமும் இதற்கு உடந்தையாக இருந்தார். எனவே போர் குற்றம் பாலின் மீது ஐ.நா. சபையின் சர்வதேச குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை 10 ஆண்டுகள் நடந்தது. பாலின் இனப் படுகொலை, மனித உயிர்களுக்கு எதிரான கிரிமினல் செயல்கள், கற்பழிப்புகள், அடக்குமுறை, மக்களின் கண்ணியத்தின் மீது அட்டூழியம், வன்முறை உள்பட 11 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பாலின் மீது கொடூர இனப் கொலை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது மகன் ஆர்சென் ஷலோமுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உலக வரலாற்றில் பெண் அமைச்சர் ஒருவருக்கு சர்வதேச நீதிமன்றம் இனப் படுகொலைக்காக ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
Read More

June 25, 2011

அமேசான் காடுகளில் வெளி உலகத்தோடு தொடர்பே இல்லாத புதிய பழங்குடி இனம் ஒன்றினைக் கண்டுப் பிடித்துள்ளார்கள்.
by admin - 0

அமேசான் காடுகளில் வெளி உலகத்தோடு தொடர்பே இல்லாத புதிய பழங்குடி இனம் 
ஒன்றினைக் கண்டுப் பிடித்துள்ளார்கள். இதனை பிரேசில் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.







அந்நாட்டின் செவ்விந்திய நலத்துறை அமைச்சகமான, FUNAI, நடத்திய தேடுதல் 
பணியில மேற்கு அமேசான் பகுதிகளில் உள்ள ஜவாரி பள்ளத் தாக்கில் இப்படியான ஒரு பழங்குடி வாழ்ந்துவருவதைக் கண்டறிந்துள்ளார்கள்.






பெருவை அண்மித்த பகுதியில் சுமார் 200 பேர் வரை சோளம், வாழைப்பழம், நிலக்கடலை என இன்னும் பல தானிய வகைகளை வளர்த்து காடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.

FUNAI அமைப்பு அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தப் போவதில்லை, மாறாக காடுகளை அழிப்பவர்களிடம் இருந்து அவர்கள் நிலப்பகுதிகளை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் அவர்கள் எவ்வித பிரச்சனைகளும் இன்றி அமைதியாக வாழவும் நடவடிக்கை எடுக்கும்.


அவ்வமைப்பின் தலைவரி ஃபாப்ரிசியோ அமோரிம் என்பவர் கூறுகையில், '' இப்படியான பழங்குடி மக்களுக்கு பெரும் குந்தகமாக இருப்பவர்கள் சட்டவிரோதமாக மீன் பிடிப்பவர்கள், வேட்டையாடுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சுரங்கம் தோண்டுபவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள், மதம் மாற்றம் செய்வோர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக போதைப் பொருள் கடத்துபவர்களே '' என்றார்.

ஜாவரி பள்ளத்தாக்கில் தான் உலகிலேயே தொடர்பே இல்லாத பல்வேறு பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். சுமார் 2,000 செவ்விந்திய மக்கள் வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் அமைதியாக அங்கு வாழ்ந்து வருகின்றார்கள்.

அவர்களின் அமைதியான வாழ்வு நிலைத்திருக்க வேண்டும் என்பதே எமது ஆசை.
Read More

உலகின் அதி வேக சுப்பர் கணனியை (Super Computer) கொண்ட நாடாக ஜப்பான்
by admin - 0





vivasaayi.com
உலகின் அதி வேக சுப்பர் கணனியை (Super Computer) கொண்ட நாடாக சீனாவே இருந்து வந்தது.சீனாவின் டியானி (Tianhe) - 1 A என அழைக்கப்படுவதே உலகின் அதிவேக supper computer  .இந்நிலையில் சீனாவின் சாதனையை ஜப்பான் முறியடித்துள்ளது. 

அக்கணினிக்கு சுப்பர் கணனி கே ('K') எனவும் பெயரிட்டுள்ளனர்.
இதனை ஜப்பானின் கணனி தயாரிப்பு நிறுவனமான 'புஜிஸ்டு' ஆகும்.
இக்கணனியானது தற்போது ரயிகன் எட்வான்ஸ் இன்ஸ்டிடியுட் போர் கொம்பியூடேஷனல் சயன்ஸ் (RIKEN Advanced Institute for Computational Science) இலேயே அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வேகம் 8.162 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 8.162 குவாட்ரில்லியன் (quadrillion) கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாகும்

இத்தகவல்களின் படி சுப்பர் கணனி 'கே' ஆனது டியானி (Tianhe) - 1 A ஐ விட மூன்று மடங்கு வேகம் கூடியது.

டியானி (Tianhe) - 1 A இன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). என்பதுடன் இது செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புக்களையே மேற்கொள்ளக்கூடியதாகும்.

இக்கணினி, 68, 544 சிபியுக்களை ( CPU ) கொண்டதுடன் அவை ஒவ்வொன்றும் 2.2 Ghz வேகத்தில் இயங்கும் 8 கோர்களைக் கொண்டது.

இதன் படி சுப்பர் கணனி 'கே' ஆனது 1 மில்லியன் இணைந்த டெஸ்க் டொப் கணனிகளுக்கு சமமானதாகும்.

இதனை இயக்குவதற்கு தேவையான மின்சக்தியின் மூலம் சுமார் 10,000 வீடுகளுக்கு மின் விநியோகம் வழங்க முடிவதுடன் இயக்குவதற்கான வருடாந்த மொத்தச் செலவு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

Read More

புதிய வசதிகளுடன் அப்பிள் ஐ போன் 5 செப்டம்பர் மாதம் வெளியாகிறது _
by admin - 0

அப்பிள் தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 வினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றைப்பற்றிய எதிர்பார்ப்புகள்,செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு குறைவிருக்காது.

அதனைப் போலவே இம்முறையும் ஐ போன் 5 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

ஐ போன் 5 ஆனது தனது கடைசி வெளியீடான ஐ-போன் 4 வை விட வேகமானதும் ஐ பேட் 2 கணனியில் உபயோகிக்கப்பட்டதுமான ' 'ஏ 5' புரசஸரைக் கொண்டிருக்குமெனவும் 8 மெகா பிக்ஸல் கெமராவைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐ கிளவுட் வசதியினையும் கொண்டிருப்பதுடன் வடிவத்தில் ஐ போன் 4 இனை ஒத்ததாகவும் அதனை விட பெரிய தெளிவான திரையை கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு ஐ போன் 5 என பெயரிடாமல் ஐ போன் 4ஜி அல்லது 4 எஸ் எனப் பெயரிடலாம் எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அப்பிள் தனது ஐ போன் 4 வை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்தபோது அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதேவேளை அப்பிள் மத்திய தர சந்தைகளை கருத்திற் கொண்டு குறைந்த விலையிலான ஐ-போனையும் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. _
Read More

ஜாக்சன்இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ கொலைசெய்ய முயற்சி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தா
by admin - 0


யானை இறந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவது அதன் மதிப்பை வலியுறுத்து வதாக அமைகிறது. அதுபோல, அதற்கு நிகரான மதிப்பு மிக்க மனிதர்கள் இவ்வுலகில் இறந்தும் அவரது ரசிகர்கள் நெஞ்சில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக, பாப் இசை உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனை கூறலாம். மைக்கேல் ஜாக்சன் என்றால், அவரது துள்ளலான இசையுடன் கூடிய நடனம், அதற்கு வளைந்து நெளிந்து கொடுக்கும் அவரது உடல்வாகு உள்ளிட்டவை நமக்கு ஞாபகம் வருவதைப் போன்று, அவரை நினைத்தாலே, அவரது இசை மற்றும் நடனம் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.

அத்தகைய நீங்கா புகழை பெற்ற பாப் உலகின் முடிசூடா மன்னாக விளங்கிய பாடகர் மைக்கேல்ஜாக்சன் மறைந்து இன்றுடன் இரண்டு ஆகிறது. ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் அவரின் ரசிகர்கள் அவரை மறக்கவும் இல்லை. சொல்லப்போனால் மறக்க தயாராகவும் இல்லை. இதனால் உலகம் முழுவதும் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். கலிபோர்னியாவில் அவர் சமாதியில் திரளாக கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மைக்கேல் ஜாக்சன் மறைவு என்ற அதிர்ச்சியிலிருந்து அவரது ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: ஜாக்சன்இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ கொலைசெய்ய முயற்சி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்.மேலும் மைக்கேல் ஜாக்சனுக்கு சிகிச்சையளித்த டாக்டர் தோமேதோமே தான் ஜாக்சன் உடன் இறுதிவரை வியாபார ஆலோசகராக வும் இருந்துள்ளார்.தற்போது அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருப்பது அவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும்அவருடன் இருந்த சில நண்பர்களும் ஜாக்சனின் சம்பாத்தியத்தில் பலன்பெற்றுள்ளனர் என்றும் லா டோயா தெரிவித்துள்ளார்.

மக்கள் எந்த அளவிற்குஜாக்சன் மீது அன்பு செலுத்தியிருக்கின்றனர் என்பது அவர்இறப்பிற்கு பின்னர் அவருடைய அறையில் கிடைத்த சில குறிப்புகள் மூலம்இது தெரிய வந்துள்ளதாக லா டோயா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜாக்சன் இறப்பு குறித்து இறப்பு குறித்த எந்தவித தடயமும் குடும்பத்தினர் கைவசம் வைத்திருக்க வில்லை. எனவே ஜாக்சனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Read More

June 24, 2011

பிரபாகரனுக்கு சீட் கொடுக்க மறுத்த, சென்னை லயோலா கல்லூரி
by admin - 0

தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்தின் மகன் பிரபாகரனுக்கு சீட் கொடுக்க மறுத்ததால், சென்னை லயோலா கல்லூரி முதல்வரை நேரில் சென்று மிரட்டியுள்ளனர் தேமுதிக நிர்வாகிகள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு கை நிறைய எம்.எல்.ஏக்கள் கிடைத்து விட்டதால் தேமுதிகவினர் ஆங்காங்கு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் தலைநகர் சென்னையில், இந்தியாவின் மிக முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான லயோலா கல்லூரிக்குள் புகுந்து, அந்தக் கல்லூரியின் முதல்வரையே மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் தேமுதிகவினர்.

விஜயகாந்த்துக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெயர் பிரபாகரன். இவரை விரைவில் சினிமாவில் ஹீரோவாக களம் இறக்க விஜயகாந்த் குடும்பம் முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது.

வெறும் 585 மார்க் வாங்கிய பிரபாகரன்!

பிரபாகரன் சமீபத்தில்தான் பிளஸ்டூவைப் பாஸ் செய்தார். 1200 மார்க்குகளுக்கு வெறும் 585 மதிப்பெண்களையே அவர் பெற்றுள்ளார். அதாவது ஜஸ்ட் பாஸ்.

இந்த நிலையில் லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க விரும்பிய பிரபாகரனை, அவரது பெற்றோர் அங்கேயே சேர்க்க விண்ணப்பித்தனர். ஆனால் மிகவும் மோசமான மார்க் என்பதால் சீட் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் கல்லூரிக்கு விரைந்தனர். அங்கு முதல்வர் அருட்தந்தை ஜெயராஜை சந்தித்து ஏன் விஜயகாந்த் மகனுக்கு சீட் தரவில்லை. இதுகுறித்து அவரைத் தொடர்பு கொண்டு விளக்கமளியுங்கள் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால் லயோலா கல்லூரி முதல்வர் அதிர்ச்சி அடைந்தார்.

லயோலா கல்லூரி வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. இங்கு எத்தனையோ அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், பெரும் புள்ளிகளின் பிள்ளைகள் படித்துள்ளனர், படித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை இப்படி ஒரு பிரச்சினையை லயோலா சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது.

தேமுதிகவினர் மிரட்டிய விவகாரம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.
Read More

உலகிலே சிறிய மனிதன் video in
by admin - 0

18வயதுடைய இவருடைய உயரம் வெறும் 60cm   தான் 


Read More

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கத்தரி!
by admin - 0

கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.

இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் 

இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையான வேதிப்பொருட்கள் அர்ஜினைன், லுஸைன், நிகோடின் அமிலம், சொலசோடைன், டையோஸ்ஜெனினி, டிரான்ஸ், கெபெய்க் அமிலம், டேடுரடியோல்.

ஆஸ்துமா நோயை குறைக்கும்

கத்தரியின் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்; சிறுநீர்க் கழிப்பின் போது ஏற்படும் வலி ஆகியவற்றினை குணப்படுத்தும்; வாயில் எச்சில் சுரக்க உதவும். வேர் ஆஸ்துமா மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது. வேரின் சாறு காதுவலி போக்க பயன்படுத்தப்படுகிறது.

கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். காலின் வீக்கத்தை குறைப்பதற்கு அப்பகுதியில் பூசிக்கொள்வார்கள். இதை பிழிந்து சாறு எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் பூசுவதன் மூலம் வியர்வையை தடைசெய்யலாம்.

கொழுப்புக்கு எதிரானது 

மேலும் கொழுப்பு சேர்வதற்கு எதிரானது. கல்லீரல் நோய்களுக்கு நல்ல மருந்தாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவினைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தினை சரிப்படுத்த சிறந்த உணவாகும். உடலில் கூடுதலாக உள்ள கொழுப்புச்சத்தின் அளவை கட்டுப்படுத்த கத்தரிக்காய் உதவுகிறது. அத்துடன் இது ஒரு போஷாக்கு நிறைந்த உணவாகையால் ஏழைகளின் இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது,

ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கத்தரியின் மருத்துவப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளன. சுத்த ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவத்தை தடுக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூலநோய்க்கு மேல் பூச்சாக பயன்படுகிறது. நசுக்கப்பட்ட கனியானது வெங்குரு மற்றும் வெயில் காரணமாக முகம் சிவந்திருத்தலை போக்க வல்லது.
Read More

சென்னை திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!
by admin - 0

 3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது ரசிகர்களைச் சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இந்த முறை நிர்வாகிகளை மட்டும் சந்திக்காமல், ரசிகர்களையும் சந்திக்க அவர் விரும்புகிறாராம். எனவே அவர்கள் வந்து போக வசதியாக, சென்னையில் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்றைப் பார்த்து வருகின்றனர்.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஜினி, பூரண நலம் பெற்று இப்போது அங்கேயே அபார்ட்மெண்ட் ஒன்றில் ஓய்வெடுத்து வருகிறார்.

இன்னும் 15 நாட்களில் சென்னை வருவார் என்று ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை திரும்பியதும் தனது பழைய போயஸ் தோட்ட வீட்டில் குடியேறாமல், புதி வீட்டில் குடியேறுவார் என்று கூறப்படுகிறது.

ரஜினியின் போயஸ் தோட்ட வீடு இப்போது வாஸ்து சாஸ்திரப்படி மாற்றிக் கட்டப்படுகிறது.

மேலும் ரஜினி இனி இங்கு தங்கினால், அவரைப் பார்க்க ஏராளமான விவிஐபிகள் மற்றும் ரசிகர்கள் வர ஆரம்பிப்பார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்புக் கெடுபிடிகளைத் தவிர்க்க தற்காலிகமாக ஒரு புதுவீட்டுக்குப் போகிறாராம் ரஜினி.

கிருமி தொற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாத நல்ல காற்றோட்டம் உள்ள தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்றில் அவர் குடியேறுகிறார். அத்தகைய வசதிகளுடன் உள்ள வீட்டை ரஜினியின் நண்பர்கள் தேடி வருகின்றனர்.

ரஜினி சென்னை திரும்பியதும் இந்த வீட்டில்தான் ரசிகர்களை தொடர்ந்து சந்திக்க முடிவு செய்துள்ளாராம். முன்புபோல விருப்பப்படும் ரசிகர்களுக்கு புகைப்படம் எடுத்துக் கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தொலைவில் உள்ள மாவட்ட ரசிகர்களை தானே நேரில் சென்று பார்க்கவும் முடிவு செய்துள்ளாராம் ரஜினி.

சென்னை திரும்பிய பின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளார் ரஜினி.
Read More

மாயாஜால நிகழ்ச்சி (வீடியோ இணைப்பு)
by admin - 0





Read More

பாகிஸ்தானுக்கு ஒபாமா எச்சரிக்கை
by admin - 0


: ""எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை, அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திறமையாக தப்பித்துக் கொள்ள முடியாது,'' என்று அதிபர் ஒபாமா மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

ஆப்கனிலும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும், அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் மறைந்திருந்து, உலக நாடுகளை மிரட்டி வருகின்றனர். "பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கன் இருக்கிறது' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி வந்தார். ஆப்கனில், சோவியத் யூனியன் படைகளை விரட்டி அடிக்க, அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட அல் - குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள், இறுதியில், அந்நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் தான் அமெரிக்கா விழித்தது. அமெரிக்காவுக்கே சவாலாக இந்த பயங்கரவாதிகள் மாறினர்.

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின், கடந்த 2009ம் ஆண்டில், ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக அதிகரித்தார். தற்போது, ஆப்கனில் ஒரு லட்சம் அமெரிக்கப் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதனிடையே, "தலிபான்களுடன், அமைதிப் பேச்சுவார்த்தையை, ஆப்கன் அதிபர் அமித் கர்சாய் தலைமையிலான அரசு துவக்கும். பின்னர் சிறிது, சிறிதாக அந்நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும்' என்று அப்போது ஒபாமா பேசினார்.

இந்நிலையில், ஆப்கனில், அமெரிக்கப் படைவீரர்கள் வாபஸ் தொடர்பான அறிவிப்பை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டு பேசியதாவது: ஆப்கனில் இருந்து, நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு, 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். இவர்கள் வாபசுக்குப் பின், அந்நாட்டில், மீதம் 68 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள். 2014ம் ஆண்டில், ஆப்கனின் முழுபாதுகாப்பு பொறுப்பும், அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டு, அனைத்து அமெரிக்கப் படைவீரர்களும் வாபஸ் பெறப்படுவார்கள்.

தலிபான்கள் மீதான போரில், அமெரிக்கா பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அதே சமயம், முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுடன் இணைந்து, இதன் கூட்டு நாடுகளும், ஆப்கனில் ஸ்திரத்தன்மையை உண்டாக்க உதவின. ஏற்கனவே, ஆப்கனின் சில மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளின் அதிகாரங்களை, அப்பகுதி மக்களிடம் ஒப்படைக்கும் பணியை துவக்கி விட்டோம்.

தலிபான்களுடனான எங்களது அமைதிப் பேச்சு திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அமைதியான ஆப்கன் நாடாக மாற விரும்புபவர்கள் அல்- குவைதா அமைப்பை துண்டித்து வெளியேற வேண்டும். வன்முறையை கைவிட வேண்டும். ஆப்கன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆப்கன் நாட்டை பயங்கரவாதிகளின் கூடாரமாக அல் -குவைதா பயங்கரவாதிகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மாற்றுவதை தடுப்பதே அமெரிக்காவின் முதல் நோக்கமாக இருந்தது. தற்போது, அமெரிக்காவின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டது. எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை (பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்தார்) அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திறமையாக தப்பித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.

Read More

June 23, 2011

கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ?
by admin - 0


ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?
தியானம்.  தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!
ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !
Read More

அவன் இவன்- பட விமர்சனம்
by admin - 0


நடிப்பு: விஷால், ஆர்யா, ஜிஎம் குமார், ஆர்கே, அம்பிகா, பிரபா ரமேஷ், ஜனனி, மதுஷாலினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்
வசனம்: எஸ் ராமகிருஷ்ணன்
கதை-திரைக்கதை-இயக்கம்: பாலா
தயாரிப்பு: கல்பாத்தி எஸ் அகோரம்
மக்கள் தொடர்பு: நிகில்


பாலாவிடமிருந்து வந்திருக்கும் முதல் கமர்ஷியல் படம் அவன் இவன். கதை, லாஜிக் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிரிக்கச் சிரிக்க காட்சிகள் அமைத்து, கடைசியில் தனது வழக்கமான வன்முறை க்ளைமாக்ஸில் முடித்திருக்கிறார் பாலா.

கதைக்காக எந்த மெனக்கெடலும் இதில் தெரியவில்லை. 'வால்டர் வணங்காமுடி' விஷால், 'கும்புடறேன் சாமி' ஆர்யா இருவரும் அண்ணன் தம்பிகள். ஆனால் அம்மாக்கள் வேறு. என்னதான் சக்களத்திச் சண்டை என்றாலும், பகை என்று வந்தாலும் உறவையும் பாசத்தையும் விட்டுக் கொடுக்காத முரட்டு அம்மாக்கள் (அம்பிகா, பிரபா ரமேஷ்)! இவர்களுக்கு திருட்டுதான் தொழில்.

இந்தக் குடும்பத்தை தன் உறவாக நினைக்கும் வாழ்ந்து கெட்ட ஜமீன் ஜிஎம் குமார். விஷாலையும் ஆர்யாவையும் சொந்தப் பிள்ளைகளாகக் கருதி பாசம் பொழிகிறார், அவர்களுடன் இம்பாலா காரில் ஊர் சுற்றுகிறார். படத்தின் கடைசி ரீலுக்கு முன்பு வரை விடிய விடிய குடிக்கிறார். அவ்வப்போது திருட்டை விட்டுவிடச் சொல்லி அட்வைஸ் பண்ணுகிறார்.

இப்படி குடியும் கும்மாளமுமாக போய்க் கொண்டிருக்கும் இவர்கள், கசாப்புக் கடைக்கு அடிமாடுகளை அனுப்பும் ஆர்கே வழியில் குறுக்கிடுகிறார்கள் (கவனிக்க: வில்லன் குறுக்கிடவில்லை... இவர்கள்தான் வில்லன் வழியில் குறுக்கிடுகிறார்கள்!). அதன் பிறகு நடப்பது வழக்கமான ரணகள க்ளைமாக்ஸ்!

விஷால் தனது ப்ரொஃபைலாக இனி புகைப்படங்கள் எதையும் காட்டத் தேவையில்லை. இந்தப் படத்தை போட்டுக் காட்டிவிடலாம். அந்த அளவுக்கு நடிப்பில் பின்னிப் பெடலெடுக்கிறார். எல்லா காட்சியிலும் ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஆக்ஷன் படங்களில் வந்த விஷாலையா இப்படி மாற்றியிருக்கிறார் பாலா என்ற வியப்பு படம் முடிந்த பிறகும் அடங்கவில்லை.

அதுவும் அந்த ஆரம்ப ஆட்டமும், நவரச ஒரங்க நாடகமும் அட்டகாசம். விஷாலுக்கு இந்தப் படம் நிஜமாகவே ஒரு மைல்கல்.

ஆர்யா இரண்டாவது நாயகனாக வருகிறார். ஆனால் அவருக்கே உரிய அந்த குறும்புத்தனம் குறையாத நடிப்பு. ஜட்ஜ் வீட்டு பர்மாபெட்டி பூட்டைத் திறக்க அவர் கேட்கும் பரிசும், அதன் பிறகு செய்யும் அலப்பறைகளும் தமிழ் சினிமாவுக்கு புதுசு.

கதாநாயகிகளாக வரும் ஜனனி, மதுஷாலினியை விட, அம்மாக்களாக வரும் அம்பிகாவும் பிரபா ரமேஷும் அலட்டிக் கொள்ளாத நடிப்பைத் தந்து அசத்துகிறார்கள். அம்பிகாவுக்கு அந்தக் குரல் ஒரு பெரிய ப்ளஸ்.

ஜமீனுக்கு துரோகம் செய்த நபர் தேடி வரும் காட்சியில் அம்பிகா சீறும் காட்சி, பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது.

ஜிஎம் குமாருக்கு இது ஒரு 'லைஃப்டைம்' படம். ஆனால் பாவம், அதைச் சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு அந்த கடைசி காட்சி அமைந்துவிட்டது. அந்தக் காட்சியில் அந்த நிர்வாணம் ஆத்திரத்துக்கு பதில் பரிதாபத்தையே கிளப்புகிறது.

வில்லனாக கடைசி 20 நிமிடங்கள் வரும் ஆர்கே அலட்டலில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார். தன்னைக் காட்டிக் கொடுத்த ஜிஎம் குமாரை அவர் பார்க்கும் பார்வையிலேயே க்ளைமாக்ஸ் தெரிந்துவிடுகிறது.

பொதுவாக பாலா படங்களில் வரும் குறியீடுகள் இந்தப் படத்திலும் உண்டு. சிரிப்பு போலீஸ், காட்சிக்குக் காட்சி கரைபுரளும் சீமைச் சாராயம், லூசுப் பெண்களாக வரும் கதாநாயகிகள்...

ஆர்யாவும் ஜிஎம் குமாரும் குடித்துவிட்டு லூட்டியடிக்கும் அந்த நீ...ள காட்சியை தயவுதாட்சண்யமின்றி கத்தரித்து வீசியிருக்கலாம்.

இருந்தாலும் திருடர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரும் கிடாவிருந்து செம ரகளை. சூர்யா வரும் அந்தக் காட்சி தேவையே இல்லை. ஆனால் விஷாலின் நடிப்பை வெளிப்படுத்த ஒரு காரணமாக இருப்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.

யுவன் இசை ஆரம்ப- இறுதிக் காட்சிகளில் ஆஹா... பாடல்களை மொத்தமாக கத்தரித்துவிட்டிருப்பது பரிதாபம்.

ஆர்தர் வில்சனின் கேமரா 'சிம்ப்ளி ஃபென்டாஸ்டிக்'!.

படத்தின் முடிவில் 'என்ன இது பாலா படம் மாதிரி இல்லையே'... என்ற கமெண்டை பலரும் உதிர்ப்பதைக் கேட்க முடிந்தது. பாலா இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது. ஒரு படைப்பாளியாக அது அவரது சுதந்திரம். தனது மனதில் உள்ள பலவித படிமங்களையும் காட்சிப்படுத்த முயல்கிறார் அவர். அதில் யாருக்காகவும் சமரசம் செய்து கொள்வதில்லை.

அதனால்தான், கதை இல்லை, தீவிரத்தன்மை இல்லை, பாலாவின் முத்திரை இல்லை என ஆயிரம் விமர்சனங்கள் வைத்தபோதும், அவன் இவனை ரசிக்க முடிகிறது!
Read More

ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி!
by admin - 0

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது.

கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன.

இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்று வருகிறார்.

அதே நேரத்தில் தனது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டு வருகிறார்.

தனது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு சக கைதிகள், காவலர்களிடம் இயல்பாகப் பழகி வருவதாகவும் கூறுகின்றனர்.

இந் நிலையில் முன்பு வேறு சில பெண் கைதிகளோடு சேர்த்து அடைக்கப்பட்டிருந்த கனிமொழி தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறை இயக்குநர் ஜெனரல் நீரஜ் குமார் கூறுகையில், சக கைதிகளிடையே அவ்வப்போது நடைபெறும் சண்டைகளில் கனிமொழி சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கனிமொழியை தனி அறைக்கு மாற்றியுள்ளோம். கனிமொழி சிறை விதிகளை முழுமையாகவும், கண்டிப்போடும் கடைப்பிடிக்கிறார் என்றார்.

தினமும் திமுக தலைவர்கள் பலர் கனிமொழியைச் சந்திக்க வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More

வேளாண் டிப்ளமோ அழைப்பு விண்ணப்பம் (2012 - 2014) பாடநெறி
by admin - 0



The notification calling application for the recruitment of trainees to the above course has been published in the Gazette of Democratic Socialist Republic of Sri Lanka No. 1705 dated 06th May 2011.


Requisite Qualifications
1. Applicants should not be less than 17 years and not more than 25 years of age as at the closing date of applications.
2. Priority will be given to the applicants those who have passed G.C.E. (AIL) examination with 03 subjects in the stream of Bio Science. Applicants who have passed 01 or 02 subjects are also eligible to apply for the course. (Please refer the aforesaid Gazette Notification for further details with regard to the educationals qualifications and specimen of the application)


Importance of the following Diploma Course
Diploma holders who have passed G.C.E. (A/L) with 03 subjects in the stream of Bio-Science are eligible to apply for the posts of Agricultural Instructors and Research Assistants coming under the Sri Lanka Technical Service. In addition, carrier opportunities are also available in the field of marketing agricultural inputs, agricultural production and seed production and marketing in private sector.


Scheme of Training
The diploma course is conducted in the Sri Lanka Schools of Agriculture, Kundasale, Pelwehera, Angunakolapelssa, Vavuniya and Karapincha and the course is full time and residential. The medium of language in which the diploma to be conducted is Sinhala, Tamil and English. Trainees are provided with lodging facilities and meals at concessionary rates during the period of training. Opportunities are also available for diploma holders those who have passed G.C.E. (A/L) examination with 03 subjects in one and the same sitting in the stream of Bi-Science to enter into universities to follow a B.Sc. degree in Agriculture after completion of particular period of service in a post mentioned above.


Closing date of application is 06th June 2011. Please refer Gazette Notification
Published on 06th May, 2011 for further details.


Director (Extension and Training)
Extension and Training Center
Department of Agriculture, Peradeniya


Download 
Read More

பல கோடி ஆண்டுகளுக்கு முன் இமயமலைப் பகுதி கடலாக இருந்திருக்கும்
by admin - 0

சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையாக இருக்குமோ, கட்டுக்கதையாக இருக்குமோ என்று வியப்புத் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு தகவல்- இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் புதைந்திருந்தது என்பது. நம்பக் கடினமாக இருந்தாலும், உண்மை அதுதான். உலகம் தோன்றும்போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை. கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறு பகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும் பகுதி நீராகவும் இருந்தது. ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்துகொண்டே இருந்தது. இப்போதும் கூட நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதைக் கண்டங்களின் நகர்வு என்பார்கள். இதற்குக் காரணம், பூமி ஒரே திடப்பொருளாக இல்லாததுதான்.

நான்கு அடுக்குகளாக பூமி காணப்படுகிறது. இதன் மையப்பகுதி கனமான திடப்பொருளால் ஆனது. அடுத்து திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப் புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற `மேன்டில்’ உள்ளது. இந்த மேன்டில் பகுதி மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட `பாகு’ நிலையில் இருக்கிறது. இந்த மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப் பகுதி மிதந்து கொண்டிருக்கிறது. நம்முடைய நிலப் பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு காலத்தில் நிலமாக இருந்த பகுதி தற்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது, பூமியின் முகத் தோற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. இமயமலைப் பகுதிகளில் பூமியைத் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்தியபோது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள் காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் உயிரினங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் வாழ்ந்தவை. எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இமயமலைப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர். இந்த முடிவை வேறு பல சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.
Read More

திருப்பூர் அரசு கல்லூரி முதல்வராக கண்பார்வையற்ற பேராசிரியர் நியமனம்
by admin - 0

ருப்பூர், சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக கண் பார்வையற்ற பேராசிரியரை தமிழக அரசு நியமித்துள்ளது.

திருப்பூரில் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக் கல்லுரிக்கு, பிரபு (55) என்ற பேராசிரியர், புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு அக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஏற்பட்ட நோயினால் தான் பிரபுவுக்கு கண் பார்வை பறிபோனதாம்.

ஆனாலும், இவர் சென்னை கிறித்துவக் கல்லுரியில் ஆங்கிலம் பயின்றார். பி.எச்.டியில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், முனைவர் பட்டமும் வாங்கியுள்ளார்.


கடந்த, முப்பது ஆண்டுகளாக ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், ஹரியான பி.பி.எஸ் பெண்கள் கல்லூரி, சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லுரி போன்ற கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

திருப்பூர் சிக்கன்னா கலைக் கல்லுரிக்கு முதல்வராக செல்லும் முன்பாக சென்னை பிரசிடென்சி கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவராக பிரபு பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் கண்பார்வை இல்லாத ஒருவர் முதல்வராக பொறுப்புக்கு வந்துள்ளது இது தான் முதல் முறை என்று கூறப்படுகின்றது.
Read More

June 22, 2011

வீறுடன் எழுந்த Jappan
by admin - 0

கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானை புரட்டிப் போட்டது சுனாமி. நூறாண்டுகளில் இல்லாத பாதிப்பாக இது அமைந்தது. காணாமல் போனவர்களையும் கணக்கில் சேர்த்தால் 23 ஆயிரம் பேர் பலி.
1.25 லட்சம் கட்டிடங்கள் நாசம். ரூ.13.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு. அதிகபட்சமாக 128 அடி உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து ஊருக்குள் 10 கி.மீ. தூரம் வரை பாய்ந்தது.



இதனால் ஏற்பட்ட குப்பை 2.5 கோடி டன் பசிபிக் பெருங்கடலில் 10 ஆண்டுகளுக்கு சுற்றிக் கொண்டிருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால் நடந்த சோகத்தை உடனே மறந்துவிட்டு விறுவிறுவென மீட்பு பணிகளில் கவனம் செலுத்தினர் ஜப்பானியர்கள். சுனாமி தாக்குதல் நடந்து 3 மாதத்துக்குள் சுனாமி சுவடு தெரியாமல் நகரங்களை சீரமைத்துவிட்டார்கள். எதையும் சமாளிப்போம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் ஜப்பானியர்கள்
Read More

எக்ஸெல் டிப்ஸ்...புதியவரா? பழையவரா?
by admin - 0

நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல் +ஸ்பேஸ் பார் (Ctrl+Spacebar) அழுத்தவும்.
படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift+Spacebar) அழுத்தவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப் பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப் படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+Home) கீகள் அழுத்தப் படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.
ஆல்ட் + என்டர் (Alt +Enter) அழுத்தினால் அதே செல்லில் அடுத்த வரிக்குக் கர்சர் செல்லும்.
டேப் கீ (TAB) அழுத்தப் படுகையில் கர்சர் இருக்கும் செல்லில் டேட்டா தருவது நிறைவடைந்து கர்சர் வலது புறம் இருக்கும் அடுத்த செல்லுக்குச் செல்லும்.
ஷிப்ட்+ டேப் (Shft+TAB) கீகளை அழுத்தினால் செல்லில் டேட்டா தருவது நிறைவடைந்து கர்சர் இடது புறம் இருக்கும் முந்தைய செல்லுக்குச் செல்லும்.
செல் ஒன்றில் என்டர் செய்த டேட்டா வினைக் கேன்சல் செய்திட எஸ்கேப் கீயை அழுத்தவும்.
செல் என்ட்ரிக்குள்ளாக ஆரோ கீ அழுத்தினால் ஆரோவின் திசைக்கேற்ப இடது, வலது, மேல், கீழாகச் செல்லும்.
எக்ஸெல் ஷார்ட்கட்ஸ் எக்ஸெல் தொகுப்பில் செயல்படுகையில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட் கட் வழிகள் இங்கு தரப்படுகின்றன.
CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
SHIFT+SPACEBAR : கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+HOME : ஒர்க் ஷீட்டின் தொடக்கத்திற்கு செல்ல
CTRL+END: ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+F3 : பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட
CTRL+A: பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்
CTRL+A: பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்.
CTRL+‘ : (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலாவை அடுத்தடுத்துக் காணலாம்.
F11 or ALT+F1: அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.
CTRL+; –– (செமிகோலன்) தேதியை இடைச் செருக
CTRL+: (கோலன்) நேரத்தை இடைச் செருக
CTRL+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க
F5: Go To டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+1: Format Cells டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+C: காப்பி செய்தல்


CTRL+V: ஒட்டுதல்
CTRL+Z: செயல்படுத்தியதை நீக்க
CTRL+S: சேவ் செய்திட
CTRL+P : பிரிண்ட் செய்திட
CTRL+O : புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்
Read More