கேத் மிடில்டன் சகோதரி பிப்பா மிடில்டன்னை இளவரசர் ஹாரி காதலிப்பதாக செய்திகள் வந்தன. இதை ஹாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் திருமணத்தின்போது பிரபலமானவர் மணப்பெண் சகோதரி பிப்பா மிடில்டன்(27). அதில் இருந்து இங்கிலாந்து இளைஞர்களின் கவனம் எல்லாம் பிப்பா பக்கம் திரும்பியது. இதனால் அவர் மீது
தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வந்தன. இதையடுத்து அவரது பெற்றோர் அவருக்கு குண்டு துளைக்காத கார் ஒன்றை வாங்க முடிவெடுத்துள்ளனராம்.
இதற்கிடையே தனது காதலி செல்சி டேவியைப் பிரிந்த இளவரசர் ஹாரி (26) பிப்பாவுடன் ஊர் சுற்றுவதாகவும், அவரை காதலிப்பதாகவும் இங்கிலாந்தில் பேசப்பட்டது. இதை இளவரசர் மறுத்துள்ளார். தான் பிப்பாவுடன் ஊர் சுற்றவில்லை என்றும், அவரை காதலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஹாரியும் நடிகர்கள் ஸ்டைலில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார்.
தான் கடுமையாக உழைப்பதாகவும், டேட்டிங் போவதற்கும், டிவி பார்ப்பதற்கும் நேரமே இல்லை என்று கூறியுள்ளார் ஹாரி.
No comments
Post a Comment