அமேசான் காடுகளில் வெளி உலகத்தோடு தொடர்பே இல்லாத புதிய பழங்குடி இனம்
ஒன்றினைக் கண்டுப் பிடித்துள்ளார்கள். இதனை பிரேசில் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அந்நாட்டின் செவ்விந்திய நலத்துறை அமைச்சகமான, FUNAI, நடத்திய தேடுதல்
பணியில மேற்கு அமேசான் பகுதிகளில் உள்ள ஜவாரி பள்ளத் தாக்கில் இப்படியான ஒரு பழங்குடி வாழ்ந்துவருவதைக் கண்டறிந்துள்ளார்கள்.

பெருவை அண்மித்த பகுதியில் சுமார் 200 பேர் வரை சோளம், வாழைப்பழம், நிலக்கடலை என இன்னும் பல தானிய வகைகளை வளர்த்து காடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.
FUNAI அமைப்பு அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தப் போவதில்லை, மாறாக காடுகளை அழிப்பவர்களிடம் இருந்து அவர்கள் நிலப்பகுதிகளை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் அவர்கள் எவ்வித பிரச்சனைகளும் இன்றி அமைதியாக வாழவும் நடவடிக்கை எடுக்கும்.
அவ்வமைப்பின் தலைவரி ஃபாப்ரிசியோ அமோரிம் என்பவர் கூறுகையில், '' இப்படியான பழங்குடி மக்களுக்கு பெரும் குந்தகமாக இருப்பவர்கள் சட்டவிரோதமாக மீன் பிடிப்பவர்கள், வேட்டையாடுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சுரங்கம் தோண்டுபவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள், மதம் மாற்றம் செய்வோர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக போதைப் பொருள் கடத்துபவர்களே '' என்றார்.
ஜாவரி பள்ளத்தாக்கில் தான் உலகிலேயே தொடர்பே இல்லாத பல்வேறு பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். சுமார் 2,000 செவ்விந்திய மக்கள் வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் அமைதியாக அங்கு வாழ்ந்து வருகின்றார்கள்.
அவர்களின் அமைதியான வாழ்வு நிலைத்திருக்க வேண்டும் என்பதே எமது ஆசை.
No comments
Post a Comment