Latest News

December 31, 2010

பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? வீடியோ இணைகப்பட்டுள்ளது.
by admin - 0

அமெரிக்க இண்டியானா மாநிலத்திலுள்ள கரென் சிக்லர் என்ற பெண் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தெரிவதாக தெரிவிக்கின்றார்.

எல்வூட் நகரில் வசிக்கும் கரென் சிக்லர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட மார்பக எக்ஸ்ரே படத்திலேயே இயேசுவின் உருவம் தென்படுவதாக கரென் சிக்லா தெரிவிக்கின்றார். மேலும் இதனை தான் ஆணித்தரமாக நம்புவதாகவும் தெரிவிக்கின்றார்.

இதனை நிரூபிக்கும் வகையில் இவர் கூறும் சில விடயங்கள் இன்னும் விசித்திரமானவை.

இப் பெண்மணி அண்மையில் தனது வலது மார்பில் ஏற்பட்ட புற்றுநோய்க்கான அறுவைச்சிகிச்சைக்கு முகங்கொடுத்திருந்தார்.

அந்த சிகிச்சைக்கு முன் தேவையான சில பொருட்களை வாங்குவதற்கு கரென் சிக்லர் கடைக்குச் சென்றுள்ளார்.

இதன் போது முன் பின் அறிமுகமற்ற ஒருவர் கரேனை அணுகி "நீ குணப்படுத்தப்படுவாய்" என இயேசு கிறிஸ்து தெரிவிக்கச் சொன்னதாகக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றுள்ளார்.

எனினும் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தென்படும்வரை அதை அறிமுகமற்ற ஒருவரின் எதேச்சையான கூற்று என்றே கருதியதாக கரென் சிக்லர் தெரிவிக்கின்றார்.

இதனால் இயேசு கிறிஸ்து தனது புற்றுநோயை முற்றுமுழுதாக குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.






Read More

தானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த
by admin - 0

கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் கழித்து நாம் அனைவரும் எதிர் கொள்ளும் ஒரு அனுபவம், கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குகிறது என்பதுதான். இதற்குக் காரணம் விண்டோஸ் இயக்கத்தை நாம் தொடங்குகையில், பல புரோகிராம்கள் தானாக இயங்கத் தொடங்குகின்றன. நாம் பல சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல புரோகிராம்கள், சிஸ்டம் இயங்குகையிலேயே தொடங்கும்படி பதியப்படுகின்றன. அது மட்டுமின்றி, முதன்மை புரோகிராம் மட்டுமின்றி, ஒரு சில கூடுதல் புரோகிராம்களும் பதியப்படுகின்றன. ஒரு சில மட்டுமே, தானாக சிஸ்டம் இயக்கத்துடன் தொடங்கவா என்று கேட்டு நம் அனுமதியைப் பெறுகின்றன. இவை விண்டோஸ் இயக்கத்திற்கு தேவையா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில் என்ன என்ன புரோகிராம்கள் விண்டோஸ் இயக்கத்துடன் ஒட்டிக் கொண்டு இயங்கி, ராம் நினைவகத்தின் இடத்தை எடுத்துக் கொள்கின்றன என்று அறிய வேண்டுமா? இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது. அதன் பெயர் ஆட்டோ ரன்ஸ் (Autoruns). இதனை http://technet.microsoft.com/enus/sysinternals/bb963902 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம். இவ்வாறு இயக்குகையில், நீங்கள் இது போன்ற புரோகிராம் எதனையும் இயக்கிப் பார்க்காதவராக இருந்தால், மிகவும் ஆச்சரியம் அடைவீர்கள். சாதாரணமாகப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒன்றில் 100க்கும் மேற்பட்ட தானாக இயங்கும் புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் 20 முதல் 50% வரை, கம்ப்யூட்டர் இயங்கும்போது தேவையற்றதாகத்தான் இருக்கும். தானாக இயங்கும் புரோகிராம்கள் பட்டியலிட்ட வுடன், நீங்களாகவே எந்த புரோகிராம்கள் நம் இயக்கத்திற்குத் தேவையில்லை என அறிந்து கொள்ளலாம். இவற்றை கண்ட்ரோல் பேனல் சென்று Add/Remove Programs வழியாக நீக்கலாம். Autoruns Silent Runners (http://www.silentrunners.org/) மற்றும் Hijackthis (http://free.antivirus.com/hijackthis/) புரோகிராம்களும் இவ்வகையில் நமக்கு தானாக இயங்கும் புரோகிராம்களைக் காட்டிக் கொடுக்கும். இவை எல்லாமே மிகப் பயனுள்ளவை. ஒவ்வொன்றும் சில கூடுதல் நன்மைகளையும், வேண்டாத சிலவற்றையும் தரும். புதியதாக இந்த புரோகிராம்களைப் பயன்படுத்துபவர்கள், எந்த எந்த புரோகிராம்கள் நமக்குப் பயனின்றி இயங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதில் கவனமாக இயங்க வேண்டும். ஆட்டோரன்ஸ் மூலம் இவற்றை நீக்கவும், நீக்கியபின்னர் சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், மீண்டும் கொண்டு வரவும் முடியும்.
இது போன்ற புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் நுழைவதனை எப்படித் தடுப்பது? நம்மால் இயலாது. ஏனென்றால், இவை உள்ளே நுழைகையில் நமக்குத் தெரிவதில்லை. இவற்றால் நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. ஏனென்றால் இவை எதற்காகச் செயல்படுகின்றன என்பதனையும் நாம் அறிவதில்லை. இவை எதற்காகச் செயல்பட்டாலும், இவற்றின் இயக்கம் நம் கம்ப்யூட்டரின் திறனை மந்தப்படுத்துகின்றன என்பது உண்மை. எனவே, இது போன்ற ஆட்டோ ரன் புரோகிராம்களை பதிந்திடும் நிறுவனங்கள் தான், தாங்களாகவே முன் வந்து இவற்றின் எண்ணிக்கையினைக் குறைக்க வேண்டும். அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டமே, குறிப்பிட்ட குறைந்த நேரத்திற்குள், கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்க வேண்டும் என்பதனை வரையறை செய்து, அந்த நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டால், மேலும் தானாக இயங்கும் புரோகிராம்கள் பதிவு செய்வதனைத் தடுக்க வேண்டும். அல்லது பயனாளருக்கு அறிவிக்க வேண்டும். சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களுக்குள்ளாக சில கொள்கைகளை அமைத்துச் செயல்பட்டால் தான், இதனை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வர முடியும் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பதியப்பட்ட ஒரு புரோகிராமின் இயங்கு திறனை, புதிதாகப் பதியப்பட இருக்கும் ஒரு புரோகிராம் தொல்லை கொடுக்கும் எனத் தெரிய வந்தால், அது பதியப்படுவது தடுக்கப்பட வேண்டும். அல்லது அத்தகைய சோதனைக்கு, அந்த புரோகிராம் வெளியாகும் முன்பே உட்படுத்தப்பட்டு, தொல்ல கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தால், தடை செய்யப்பட வேண்டும் எனவும் கருதுகின்றனர்.
Read More

மாந்தோப்பில் களைக்கட்டுப்பாடு
by admin - 0

மாந்தோப்பில் களைக்கட்டுப்பாடு - அடர்நடவு முறையில் நடப்பட்ட மாந்தோப்பில் ஆட்களை / கருவிகளைக்கொண்டு மண்ணின் மேல்பகுதிகளை உழுது அல்லது ரசாயனக் களைக்கொல்லிகளைக் கொண்டு என மூன்று வழிகளில் களைகளைக் கட்டுப்படுத்தலாம். கருவிகளைக் கொண்டு உழும்போது எடை குறைவான பவர்டில்லர் அல்லது மினி டிராக்டரைக் கொண்டு உழுது களையைக் கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையெனில் மண் இறுகி மண்ணின் வேர்வளர்ச்சி பாதிக்கப்படும். தவிர மாமரத்திற்கு பாரகுவாட், அட்ரவீன், கிளைபோசேட் போன்ற களைக் கொல்லிகளையும் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தலாம். நீர்வழி உரம் அளித்தல்: நீர்வழி உரம் அளிக்கும்போது முதல் வருடம் மாஞ்செடி ஒன்றுக்கு வருடத்திற்கு 100:50:100 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து வாரம் ஒரு முறை பகிர்ந்து அளிக்க வேண்டும். இரண்டு வயது மரத்திற்கு 200:100:200 கிராம் அளவிலும், 3 வயது மரத்திற்கு 400:200:400 கிராம்; 5 வயது மரத்திற்கு 500:200:500 கிராம் என்ற அளவில் அளிப்பது நல்ல விளைச்சலுக்கு வழிவகுக்கும்.

பசுமைக்குடில் தொழில்நுட்பம்: நிலத்தில் சமமான பகுதியில் பசுமைக்குடில் அமைத்து அதில் பாகர் என்று சொல்லும் புகைமூட்டம் போன்று நீர் தெளிக்கிற அமைப்பை அமைத்துக் கொள்ள வேண்டும். பசுமைக்குடில் இருக்கும் தரைதளத்தின் மண்ணை பயன்படுத்தி 4 அடி அகலத்தில் ஒன்றரை அடி உயரத்திற்கு பாத்தி அமைக்க வேண்டும். பாத்திபோட நீளத்தை நம் குடிலின் அளவுக்கு ஏற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளலாம். பாத்தி அமைத்தபின் பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து அதை மூடிவிட வேண்டும். அதன் மேல்தான் நாற்று உற்பத்தி செய்யும் குழித்தட்டை வைக்க வேண்டும். ஒரு தட்டில் 98 குழிகள் இருக்கும். 100 அடி நீளத்திற்கு பாத்தி அமைத்தால் அதில் 100 தட்டுகளை வைக்க முடியும். தட்டுகளில் உள்ள குழிகளில் ஊட்டமேற்றிய தேங்காய் நாரை நிரப்ப வேண்டும். ஒரு தட்டுக்கு ஒரு கிலோ நார் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் ஒரு விதையை விதைக்க வேண்டும். தினமும் பாகர் மூலம் 10 நிமிடம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். களைகள் வந்தால் எடுக்க வேண்டும். வேறு பராமரிப்பு எதுவும் தேவைப்படாது. பசுமைக் குடிலுக்குள் ஒரே மாதிரியான வெப்பநிலை பராமரிக்கப்படுவதால் எல்லா நாற்றுகளும் ஒரே அளவில் முளைத்துவரும். பூச்சிகள், பூஞ்சாண தாக்குதல் எல்லாம் இல்லாமல் இருக்கும். தக்காளி நாற்று 22 நாளில் உற்பத்தியாகிவிடும். காலிபிளவர் நாற்று 25 நாட்களிலும், மிளகாய், பப்பாளி நாற்றுகள் 40 நாட்களிலும் உற்பத்தியாகும். பப்பாளி நாற்றுக்கு குழித்தட்டு போதாது. அதற்கு மட்டும் பெரிய அளவில் இருக்கும் பிளாஸ்டிக் டம்ளர்களைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான தொழில்நுட்பம் நிழல்வலைப் பசுமைக் குடிலும், பாகர் அமைப்பும்தான். இதன்மூலம் எந்த நாற்றுக்களையும் உருவாக்க முடியும். இந்த குடிலுக்கு பயன்படுத்தும் வலை 3 வருடத்திற்குத்தான் தாங்கும். அதன்பின் புதியதாக மாற்றவேண்டும். 40 நாட்களுக்குள் சராசரியாக 5 லட்சம் என்னும் கணக்கில் வருடத்திற்கு 45 லட்சம் நாற்றுக்கள் உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாற்றுக்கு சராசரியாக 7 பைசா லாபம் கிடைக்கும். 17 சென்ட் நிலத்தில் வருடத்திற்கு சராசரியாக 3 லட்சம் வரை லாபம் கிடைக்கும்
Read More

December 28, 2010

2010ம் ஆண்டின் சிறந்த மனிதனாக பேஸ்புக் நிறுவனர்
by admin - 0

ஆங்கில இதழான டைம், ஆண்டு தோறும், அந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கும். இந்த ஆண்டில், இந்த பத்திரிக்கை, சிறந்த மனிதராக, பேஸ்புக் நிறுவ னரான மார்க் ஸக்கர்பெர்க் கினை அறிவித்துள்ளது. இவர் உலகில் வாழும் மிக இளவயது கோடீஸவரர்களில் ஒருவர். டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்து அறிவிக்கப் பட்ட ஆண்டின் சிறந்த மனிதர்களில், 1927 ஆம் ஆண்டிற்குப் பின் அறிவிக்கப்பட்டவர்களில் மிகக் குறைந்த வயதுடையவரும் இவரே. பிரிட்டன் மகாராணி எலிசபெத் இதே போல 1952 ஆம் ஆண்டில் அறிவிக்கப் படுகையில் இளவயது டையவராகவே இருந்தார். ஆனால், ஸக்கர் பெர்க் அவரைக் காட்டிலும் வயதில் இரண்டு வாரங்கள் குறைவாகவே உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டைம் இதழ், மனித சமுதாயப் பண்பாட்டில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியவருக்கு இந்தப் பெருமையை ஆண்டு தோறும் தருகிறது. சமுதாயத்தின் மீதான இந்த தாக்கம், நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். 2007 ஆம் ஆண்டில் ரஷ்ய பிரதம மந்திரி விளாடிமிர் புட்டின், 2008 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா இந்தப் பெருமையைப் பெற்றனர். நாம் அனைவரும் நம் வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதில் மாற்றங் களைக் கொண்டு வந்தவர் என்று மார்க் ஸக்கர் பெர்க்கினைப் பாராட்டியுள்ளது டைம் இதழ். ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில், தன் 19 ஆவது வயதில், பேஸ்புக் இணைய திட்டத்தினை ஸக்கர் பெர்க் தொடங்கினார். இன் றைக்கு ஏறத்தாழ 55 கோடி மக்களைக் கொண்டதாக பேஸ்புக் இயங்கி வருகிறது. ஸக்கர் பெர்க் இந்த பாராட் டினைத் தன்னுடன் பணியாற்றும் சிறிய குழுவினருக்கு சமர்ப்பித்துள்ளார். இந்த குழுவின் உழைப்புதான், உலகை விரியவைத்து, பல கோடி மக் களை இணைத்துள்ளது என்றும் கூறி உள்ளார். இதில் ஒரு பகுதியாகத் தான் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸக்கர் பெர்க்கின் தயாள குணமும் இந்த பெருமையை அடைவதற்கு வழி வகுத்திருக்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூ ஜெர்ஸி பள்ளி இயக்கத்திற்கு, ஐந்து ஆண்டு காலத்தில், 10 கோடி டாலர் தருவ தாக வாக்களித்து வழங்கினார்.

Read More

December 26, 2010

இந்த நரசிம்மருக்கு புலிமுகம்
by admin - 0


நரசிம்மர் என்றால் சிங்கமுகத்துடன் தானே இருப் பார்! நர (மனித) உடம்பும், சிம்ம (சிங்க) முகமும் கொண்டவர் என்பதால் தான் அவருக்கு "நரசிம்மர்' என்றே பெயர் வந்தது. ஆனால், நரசிம்மருக்கு 32 வகையான முகங்கள் இருப்பதாக ஆகம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் வியாக்ர (புலி) முகம். விஜயவாடாவில் இருந்து 32 கி.மீ., தூரத்தில் சோபனாத்ரி என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள மலையில் நரசிம்மர் புலி முகத்துடன் இருக்கிறார். இதே ஊரில் சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த இறைவனை 'வியாக்ரபுரீஸ்வரர்' என்கின்றனர். புலிமுகத்துடன் கூடிய நரசிம்மரையும், புலியின் பெயரைக் கொண்ட சிவனையும் ஒரு சேர வணங்கினால் மன தைரியம் அதிகரிக்கும்.
Read More

December 24, 2010

சளியைக் குணப்படுத்தும் வாசனை பொருட்கள்
by admin - 0




மஞ்சள்: விரலிமஞ்சள் ஒன்றை எடுத்து அதன் நுனிபாகத்தை நெருப்பில் சுட்டு அதிலிருந்து வரும் புகையை மூக்கினால் நுகர்ந்துவர சளித்தொல்லை முற்றிலும் குணமாகும். காலையில் ஒரு முறையும், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒருமுறையும் இவ்வாறு நுகர வேண்டும். இதனை இயற்கை இன்ஹேலர் என்று சொல்லலாம். இரவில் படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் சிறிது மஞ்சள்தூள், பொடித்த பனங்கற்கண்டு கலந்து பருகிவர சளி நன்கு பழுத்து கபம் வெளிப்பட்டு நலன் பயக்கும்.

மிளகு: மிளகுத்தூளை தீக்கனலில் தூவி வரும் புகையை மெல்ல நுகர்ந்துவர சளித்தொல்லை குணமாகும். தினம் இரவில் மட்டும் இதைக் கடைபிடிக்க வேண்டும். சூடான சாதத்தில் மிளகு ரசம் தயாரித்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை போய்விடும். இப்படி சாப்பிடும்போது சாதத்தில் தயிர் ஊற்றி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

சுக்கு: சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப சுக்கு சளியை ஓட்டும். போதிய அளவு நீரில் சிறிது சுக்கைப் பொடித்து போட்டு, கருப்பட்டி சேர்த்து, சுக்குநீர் கொதிக்கவைத்து இறக்கிவைத்து, அதைச் சுடச்சுட குடித்துவர சளித்தொல்லை நீங்கும். இது ஒரு எளிய இயற்கை மருந்தாகும். சுக்கைத் தூளாக்கி சூடான சாதத்தில் சேர்த்து சிறிது நல்லெண்ணெயும் சேர்த்து சாப்பிட்டுவர சளி குணமாகும்.
Read More

December 22, 2010

30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்
by admin - 0

கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம். கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம். அல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம். நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம். நூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. நூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Read More

குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு
by admin - 0

கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பின் எண் 8.0.552.215. புதிதாக இதில் பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பில் இருந்த 800 பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு வளையங்கள் உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிப்பினைப் பெற http://www.google.com /chrome/intl/en/landing_chrome.html?hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். நீங்கள் ஏற்கனவே குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பிரவுசர் தானாக, இந்த அப்டேட்டினைக் கண்டறிந்து உங்கள் அனுமதியுடன் மேம்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் குரோம் பிரவுசர் மக்களிடையே கூடுதலாக இடம் பெறும் என்றும், இத்தகைய தொடர்ந்த மேம்படுத்துதல்கள் மூலம், 2011 அல்லது 2012 ஆம் ஆண்டில் இந்த பிரவுசர், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் இணைக்கப்பட்டுள்ள பி.டி.எப். வியூவர், பி.டி.எப். பைல்களை, எச்.டி.எம்.எல். பைல்களைப் போலவே காட்டும். இதனால் தனியே பி.டி.எப். வியூவர் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. பிடிஎப் வியூவர் sandbox என்ற அமைப்பினுள் வருவதால், இது கம்ப்யூட்டரில் உள்ள மற்ற பகுதிகளுக்குப் பிரச்னை தராது. அவற்றின் செயல்பாடுகளுக்கு இடையூறு தராது. இந்த புதிய பிரவுசரின் மிக முக்கிய அம்சம், வர இருக்கும் குரோம் வெப் ஸ்டோருடன் இணைந்து செயல்படும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதுதான். இந்த சிறப்பம்சத்தை நாம் இப்போது காண முடியாது. ஏனென்றால் குரோம் வெப் ஸ்டோர் இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் சில வாரங்களில், ஏன் சில நாள்களில் இது தொடங்கப்படலாம். குரோம் வெப் ஸ்டோரில், இணைய அடிப்படையிலான பல அப்ளிகேஷன்கள் கிடைக்கும். சில இலவசமாகவும், சில கட்டணம் செலுத்தியும் கிடைக்கும். இவை குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணையும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More

December 14, 2010

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்? கொழும்பிலிருந்து விலங்கியல் நிபுணர்கள்:-
by admin - 0


யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து விலங்கியல் நிபுணர்கள் படையெடுத்திருக்கின்றனர். இலங்கை மிருக காட்சிசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் குழுவொன்றே யாழ்ப்பாணம் சென்றுள்ளது.
எனினும் இது திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்ட கணணி போட்டோ சொப் மூலமான புகைப்படமே என ஆதாரங்களுடன் வல்லுனர்கள் கூறுகின்றனர். கொழும்பிலிருந்து வெளிவருகின்ற தேசிய நாளிதழ் ஒன்று தனது அடுத்தடுத்த பதிப்புகள் இரண்டில் பத்து தலை நாகம் தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தது. எனினும் உள்ளுரில் இது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது

திட்டமிட்ட வகையில் வர்த்தக நோக்கம் கருதியதாக புற் தரையின் மத்தியில் ஒரு பத்துத்தலை நாகம் ஒன்று இருப்பதைப் புகைப்படம் மூலம் எடுத்து குடாநாட்டில் 10 முதல் 50 ரூபா வரை விற்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று பலரது கைத்தொலைபேசிகளுக்கும் கட்டணம் அறவிடப்பட்டு இது பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இது திட்டமிட்ட வகையில் வர்த்தக நேக்கில் பரப்பப்பட்டு வருவதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் அலட்டிக் கொள்ளாது கொழும்பு தேசிய நாளிதழ் ஒன்று பத்து தலை நாகம் நடமாடுவதாக செய்திகளை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே நேற்றைய தினம் கொழும்பிலிருந்து நிபுணர்கள் குழுவொன்று சென்று தேடுதல்களை நடத்தியிருந்தது.
சுழிபுரம் பகுதியில்; இது தொடர்பில் தங்கியுள்ளவர்கள்; கருத்துக் கூறிய பொழுது இது தொடர்பில் தலைமை அலுவலகமே கருத்துக்களை தெரிவிக்க முடியும் எனவும் தமது முயற்சி இதுவரை வெற்றி பெற்றிருக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.குறித்த 10 தலைநாக பாம்புகளைக் கண்டதாகக் கூறியவர்கள் தொடர்பில் தேடுதல்களை மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட போது அவ்வாறு தாம் எதனையும் கண்டிருக்கவில்லை எனவும் தகவல்களையே அறிந்ததாகவும் மாறி மாறிக் கூறி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இது திட்டமிட்ட வகையில் கணணி மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சியாக இருக்கலாம் என்றே அவதானிகள் கூறுகின்றனர்.

Read More

December 13, 2010

விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்
by admin - 0

விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயக்கத் தொகுப்புகளைப் பயன்படுத்துவோருக்கு சில ரகசிய ட்யூனிங் டிப்ஸ் இங்கு தரப்படுகின்றன. இவை நம் இயக்க வேகத்தினை அதிகப்படுத்துவதுடன், நம் செயல்பாட்டிலும் சுவராஸ்யத்தை தரும். நேரம் மிச்சம், திறன் அதிகரிப்பு, விண்டோஸ் தோற்ற மேம்பாடு ஆகியவை இந்த டிப்ஸ்களின் நோக்கம். இவற்றால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த கேடுதலும் ஏற்படாது என்றாலும், உங்கள் முக்கியமான பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டு இந்த டிப்ஸ்களை இயக்கிப் பார்க்கவும்.
இந்த டிப்ஸ்களில் கண்ட்ரோல் பேனல் குறிக்கும் குறிப்புகள், உங்கள் கம்ப்யூட்டரில் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருப்பதாக எடுத்துக் கொண்டு தரப்படுகின்றன. ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் சென்று, இடது மேலாக உள்ள ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால், கிளாசிக் வியூவிற்கு மாறிக் கொள்ளலாம்.
1. டாஸ்க் பார் ஐட்டம் அனைத்தையும் மொத்தமாக மூட (எக்ஸ்பி): டாஸ்க்பாரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஐட்டங்களையும், போல்டர்களையும் வைத்திருக் கிறீர்களா? இவை அனைத்தையும் மொத்தமாக ஒரே கிளிக்கில் மூடலாம். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, ஒவ்வொரு ஐட்டமாக, டபுள் கிளிக் செய்திடவும். பின்னர், ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, எழுந்து வரும் மெனுவில், குளோஸ் குரூப் (Close Group) என்பதில் கிளிக் செய்திடவும்.
2. சிஸ்டம் ரெஸ்டோர் இடத்தைப் பெற (எக்ஸ்பி): உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கைச் செய்தி வருகிறதா? எந்த ட்ரைவ் சென்று, எப்படிப்பட்ட பைல்களை நீக்கி இடம் மீட்பது என்று குழப்பமா? சிஸ்டம் ரெஸ்டோர் வசதிக்கென உள்ள இடத்தைக் குறைத்து, உங்கள் ஹார்ட் டிஸ்க் இடப் பிரச்னையைத் தற்காலிகமாக சமாளிக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, சிஸ்டம் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் ரெஸ்டோர் டேப்பில் கிளிக் செய்திடவும். அதில் உள்ள ஸ்லைடரைப் பயன்படுத்தி, எவ்வளவு ஹார்ட் டிஸ்க் இடத்தை மீட்கலாம் என்று பார்க்கவும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், சிஸ்டம் ரெஸ்டோர் உங்களுக்குத் தேவை இல்லையே! எனவே இந்த வசதியை மொத்தமாக மூடிவிடலாம். இதற்கென ஒதுக்கப்பட்ட மொத்த இடமும் மிச்சமாகும்.
3. டாஸ்க் பாரில் வெப் ஷார்ட்கட் (விஸ்டா): இணைய தளங்களை வேகமாகத் திறக்க, டாஸ்க்பாரில் உள்ள காலி இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுவில் Toolbars என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள அட்ரஸ் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் இணைய தள முகவரியினை டைப் செய்திடவும். விண்டோஸ் இப்போது அந்த இணைய தளத்தினை, உங்கள் பிரவுசரைத் திறந்து இயக்கிக் காட்டும்.
4. ரீசைக்கிள் பின்னைத் தாண்ட: அழிக்கப்படும் பைல்கள் ரீசைக்கிள் பின்னில் சென்று, அங்கு தொடர்ந்து இடத்தைக் கொண்டிருக்கும். இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் குறையலாம். எனவே ஒரு பைல் அறவே நீக்கப்பட வேண்டும்; அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என எண்ணினால், ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை அழுத்தி, அந்த பைலை முற்றிலுமாக நீக்கவும்.
5. கம்ப்யூட்டரை யார் ஷட் டவுண் செய்வது? (எக்ஸ்பி): உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள உங்களின் பெர்சனல் கம்ப்யூட்டரை, உங்களைத் தவிர மற்றவர்கள் ஷட் டவுண் செய்வதனைத் தடுக்க, ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, Administrative Tools செல்லவும். இங்கு Local Policies என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். பின்னர் Security Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது புறம், ‘Shutdown: allow system to be shut down without having to log on’ என்று இருக்கும் இடம் சென்று அதில் டபுள் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Disabled என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
6. டிஸ்க் ட்ரைவ் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த (எக்ஸ்பி): உங்களுடைய சிடி அல்லது டிவிடி ட்ரைவிற்கான ஐகானை குயிக் லாஞ்ச் பாரில் வைக்கவும். இதற்கு மை கம்ப்யூட்டர் சென்று, சிடி/டிவிடி ஐகான இழுத்து வந்து, டாஸ்க்பாரில் குயிக் லாஞ்ச் ஏரியாவில் விடவும். இதன் மூலம், சிடியில் எழுதப்படக் காத்திருக்கும் பைல்களை, இந்த குயிக்லாஞ்ச் பாரில் உள்ள ட்ரைவ் ஐகானைக் கிளிக் செய்து பார்க்கலாம். ட்ரைவ் ட்ரேயினைத் திறக்கவும் செய்திடலாம். இதே போல எந்த ஒரு பைலுக்கும், போல்டருக்கும் ஷார்ட் கட் ஐகான்களை, குயிக் லாஞ்ச் பாரில் வைத்து இயக்கலாம்.
7. எர்ரர் ரிப்போர்ட் நிறுத்த (எக்ஸ்பி): ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகி, அதனை வலுக்கட்டாயமாக மூடிடுகையில், விண்டோஸ் இதற்கான ரிப்போர்ட்டைத் தயார் செய்து அனுப்பவா என்ற பிழைச் செய்தியினைக் காட்டும். இந்த பிழைச் செய்தியினைக் காட்டாமல் இருக்கும்படி விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தினை அமைக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல், சிஸ்டம் எனச் செல்லவும். அங்கு கீழாக உள்ள எர்ரர் ரிப்போர்டிங் பட்டனில் (Error Reporting) கிளிக் செய்திடவும். இங்கு இந்த பிழைச் செய்தி தோன்றுவதனை நிறுத்தவும், மீண்டும் இயக்கவும் செய்திடலாம்.
8.கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் (விஸ்டா): பொதுவான சில இயக்கங்களை வேகப்படுத்தும் வகையில் விஸ்டா இயக்கம் பல ஷார்ட்கட்கீ தொகுப்புகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, விண்டோஸ் கீயினை அழுத்தியவாறே, ஸ்பேஸ் பார் தட்டினால், பின்னணியில் இருக்கும் ஸைட்பார், முன்னதாகக் கொண்டு வரப்படும். விண்டோஸ் கீயுடன் ‘T’ கீயை அழுத்தினால், டாஸ்க் பார் ஐட்டங்கள் ஒவ்வொன்றாகச் செல்லலாம். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள புரோகிராம்களை இயக்க, விண்டோஸ் கீயுடன், குயிக் லாஞ்ச் பாரில், திறக்கப்பட வேண்டிய புரோகிராம் எந்த இடத்தில் உள்ளதோ (1,2,3,4.. என) அந்த எண்ணை அழுத்தினால் போதும்.
9. கூடுதல் கடிகாரம் (விஸ்டா): பன்னாடுகளின் அப்போதைய நேரத்தினை எப்போதும் அறிந்து கொள்ள விருப்பமா? நோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள கடிகாரத்தின் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அடுத்துAdjust Date/Time’ Additional Clocks என்பதில் கிளிக் செய்திடவும். இனி, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களைக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கடிகாரத்திற்குமான நேர மண்டலத்தை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி திரையில், உங்களுக்குப் பிரியமானவர்கள் வசிக்கும் நாட்டின் கடிகாரம், அந்த நாட்டின் நேரத்தைக் காட்டியபடி இயங்கிக் கொண்டிருக்கும்.
10. ஹெல்த் ரிப்போர்ட் பெற (விஸ்டா): கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் பிற சாதனங்கள் குறித்த ஹெல்த் ரிப்போர்ட்டினைப் பெறும் வசதியினை விஸ்டா கொண்டுள்ளது. இதன் மூலம் நம் ஹார்ட்வேர் சாதனங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். ரிப்போர்ட் ஜெனரேட்டர் என்ற வசதியின் மூலம் இதனைப் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து, performance and information என டைப் செய்து, என்டர் தட்டவும். இங்கு இடது புறமாக உள்ள ‘Advanced tools’ என்பதில் கிளிக் செய்து, ‘Generate a system health report’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சிறிது நேரம் கழித்து, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் வேர் குறித்த ஹெல்த் ரிப்போர்ட் உங்களுக்கு பைலாகக் கிடைக்கும்.
Read More

கேரட்டை தாக்கும் வேர்முடிச்சு நூற்புழு மேலாண்மை
by admin - 0

மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்களில் அதிக வைட்டமின் நிறைந்தது கேரட் பயிராகும்.யாழ்ப்பாணத்திலும் கரட் பயிர் பெருமளவில் பயிரிடப்படுகிறது கேரட் கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் கரேட்டின் நிறைந்துள்ளதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. மிலாய்டோகைனி கேப்லா என்ற இனத்தைச் சேர்ந்த வேர்முடிச்சு நூற்புழு 10-15 சதவீதம் மகசூல் இழப்பினை ஏற்படுத்துகிறது. இது வெப்பம் குறைந்த மலைப்பிரதேசங்களில் வாழும் தன்மைஉடையது.
இந்நூற்புழு வேரினுள் முழுவதுமாக உட்புகுந்து ஊசி போன்ற உணவு குழல் (அலகு) மூலம் செல்களை துளைத்து சாற்றை உறிஞ்சி வாழ்கிறது. முதிர்ச்சிஅடைந்த ஒரு பெண் நூற்புழு 500 முதல் 1000 வரை முட்டைகளை இடும் தன்மைஉடையது. பொதுவாக நூற்புழுக்கள் கண்ணுக்கு தெரியாது. நுண்ணோக்கியின் மூலமாக மட்டுமே பார்க்க முடியும். இதனால் விவசாயிகளுக்கு எளிதில் இதன் தாக்குதலை அறிய முடிவதில்லை. இருப்பினும் கீழ்க்காணும் அறிகுறிகள் மூலம் நூற்புழுக்கள் தாக்கத்தை அறியலாம்.
அறிகுறிகள்:
* நூற்புழுக்கள் வேர்பகுதிகளை சேதப்படுத்துவதால் செடிகளுக்கு தேவைப்படும் நீர் மற்றும் சத்துப்பொருட்கள் தடுக்கப்படுகிறது. இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் மஞ்சளாகவும் அதனை தொடர்ந்து காய்ந்தும் காணப்படும்.
* கேரட் கிழங்கின் மேற்பரப்பில் உண்டாகும் பக்க வேர்களில் முடிச்சுகள் (அல்லது) கழலை போன்ற அமைப்பு காணப்படும்.
* தாக்குதல் அதிகமாகும்பொழுது கிழங்குகள் இரண்டாக பிரிந்து ஒழுங்கற்ற உருவத்துடன் "கவட்டை' போன்று காணப்படும். இதனால் சந்தை மதிப்பு குறைகிறது.
* நூற்புழுக்கள் உண்டாக்கிய வேர் காயங்கள் வழியாக பூஞ்சாணங்கள் உட்புகுந்து பின்நோக்கி வாடல் நோயின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது.
மேலாண்மை முறைகள்:
* கோடைகாலங்களில் ஆழ உழவு செய்து நிலத்தை 1-2 மாதங்களுக்கு தரிசாக விடுதல்.
* தொழு உரம், மண்புழு உரம், கம்போஸ்ட் மற்றும் பசுந்தாள் உரம் போன்றவற்றை தேவைக்கேற்ப இடுதல்.
* உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்றவைகளை தலா 2 கிலோ/எக்டர் என்ற அளவில் விதைகள் நடுவதற்கு முன் இடுதல்.
* சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்னும் பயிர் ஊக்கி பாக்டீரியாவை 2.5 கிலோவை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஒரு எக்டருக்கு இடுதல்.
* கேந்தி (எ) செண்டு மல்லியை ஊடுபயிராக பயிர் செய்வதால் வேர்களில் இருந்து உண்டாகும் வேதிப்பொருள் நூற்புழுக்களை கவர்ந்து அழிக்கிறது.
* கேரட்டை தொடர்ந்து பயிர்செய்யாமல் முள்ளங்கி, ஸ்பினாச், பார்லி, கோதுமை மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்தல்.
* நூற்புழுக்கள் அதிகமுள்ள வயல்களில் கார்போபியூரான் 3 சத குருணை மருந்தினை எக்டருக்கு 33 கிலோ இடுதல்.
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பதன் மூலம் கேரட்டை சேதப்படுத்தும் நூற்புழுக்கள் மற்றும் மண் மூலம் உண்டாகும் நோய்களையும் கட்டுப்படுத்தி தரத்துடன் கூடிய அதிக மகசூலை பெறலாம்.
Read More

December 09, 2010

இளநீர் வெட்டுவதற்கு ஒரு எளிய கருவி
by admin - 0


இயற்கையில் நல்ல சிறப்புகள் உடையது இளநீர் என்பதை நாம் அறிந்திருந்தாலும் நடைமுறையில் பாட்டில் பானங்கள்தான் விற்பனையில் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் மக்களுக்கு இளநீர் கிடைப்பது குறைவாக உள்ளது. உதாரணமாக 100 இடங்களில் பாட்டில் பானங்கள் கிடைத்தால், 3-4 இடங்களில்தான் நுகர்வோருக்கு இளநீர் கிடைக்கிறது. இதற்கு காரணம் இளநீர் விற்பனை செய்வதற்கு இளநீர் வெட்டும் அனுபவம்மிக்க நபர் தேவை. ஆனால் பாட்டில் பானங்கள் விற்பனைக்கு இத்தேவையில்லை. ஆகவே இத்தடையை தகர்க்க, இதோ ஓர் அற்புதமான, எளிய முறையில் முன் அனுபவமின்றி எவரும் இயக்கக்கூடிய கருவி ஒரு வரப்பிரசாதமாக உங்கள் முன்னே. நம் இளநீருக்கு நல்ல விலை வேண்டுமென்றால், அதிகம் பேர் இளநீர் பருகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆகவே, இக்கருவியின் உதவியுடன் விற்பனைக்கூடங்களை நாம் அதிகப் படுத்தினால், இளநீர் கிடைப்பது கூடும். ஆகவே விற்பனையும் கூடும். காலப்போக்கில் நமது இளநீருக்கு நியாயமான விலை கிடைக்கும். ஆகவே, நீங்கள் உங்களுக்குத் தெரிந்த பாட்டில் பானங்கள் விற்கும் கடைக்காரர்கள், கேன்டீன், தியேட்டர்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், பார்க், தீம் பார்க், பொருட்காட்சிகள், திருமண விழாக்கள், பொதுமக்கள் கூடும் பல இடங்களில் விற்பனை செய்யத் தூண்டவும் இக்கருவி பல்லாயிரக் கணக்கான வர்களுக்கு ஒரு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். சிறிய முதலீட்டில் ஒரு நல்ல வியாபார வாய்ப்பை அமைத்துக் கொள்ள முடியும். நுகர்வோரும் நல்ல ஆரோக்கியமான, தரமான ஒரு பானத்தை உரிய விலையில் பெற முடியும். ஆகவே, இளநீர் பருகுங்கள், விற்பனையை அதிகமாக்கத் தூண்டுங்கள். எல்லோருக்கும் வெற்றி என்ற சூழ்நிலையை ஏற்படுத்துங்கள். கருவியின் சிறப்புகள்: இயக்குவதற்கு எளிதானது; முன் அனுபவம் தேவையில்லை; சுகாதாரமாக செயல்படக்கூடியது; சிக்கனமானது; வேகமாக செயல்படக்கூடியது; மின்சக்தி தேவையில்லை; குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம்.

Read More

December 04, 2010

விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் உரத்தினை மனிதனின் சிறுநீர் மூலம் தயாரிக்கும் புதிய முயற்சியினை தென்னாபிரிக்காவின் டர்பன் நகராட்சி மேற்கொண்டுள்ளது.
by admin - 0

விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் உரத்தினை மனிதனின் சிறுநீர் மூலம் தயாரிக்கும் புதிய முயற்சியினை தென்னாபிரிக்காவின் டர்பன் நகராட்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களின் சிறுநீரை விலை கொடுத்து வாங்கவும் முடிவு செய்துள்ளது. மனித கழிவுகள் கூட விவசாயத்திற்கு இயற்கை உரங்களாக பயன்படுவதுண்டு. விவசாய உரத்தில் நைற்ரேட், பொஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை உள்ளன.

தென்னாபிரிக்காவின் துறைமுக நகரமான டேர்பனில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் உலர்ந்த கழிவறைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் திரவ திடக்கழிவுகளை விலை கொடுத்து வாங்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் சுகாதாரமும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் எனவும் நம்பப்படுகிறது. முன்னதாக இத்திட்டம் குறித்து ஆய்வினை தீவிரமாக கவனித்த சுவிட்சலாந்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தின் ஈவோக் அன்ட் பில் மிலின்டா கேட்ஸ் பவுண்டேசன் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தது.

இதன்படி தென்னாபிரிக்காவில் டேர்பன் நகரில் 500 குடியிருப்புகளில் 90.000 உள்ள கழிவறைகளில் சுமார் 20 லீற்றர் கொள்ளவுகொண்ட கொள்கலன் வைக்கப்பட்டது. இதில் சேமிக்கப்படும் சிறுநீர் வாரத்திற்கு ஒரு முறை நகராட்சி ஊழியர்கள் இந்த கொள்கலன்களில் சிறுநீரை எடுத்துச் செல்வர். இதற்காக ஒரு குடும்பத்திற்கு நான்கு டொலர்கள் அல்லது மூன்று யூரோக்களை பணமாக வழங்குகிறது.

இது குறித்து டேர்பன் நகர குடிநீர் சுகாதாரத்துறை தலைவர் நீல் மெக்லியோட் கூறுகையில் இதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு சரிவர தெரியவில்லை.

வருமானம் வரும் ஆதாரமாக கழிவறைகள் விளங்கினால் இனி அனைவரும் கழிவறைகளை பயன்படுத்த விரும்புவர் என்றார். தென்னாபிரிக்காவைச் சேர்ந்த குடிநீர் சுகாதாரத்துறை ஆலோசகர் பியர்ரி யூவெஸ்ஓகர் கூறுகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டம் ஏமன் நாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Read More

December 01, 2010

மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
by admin - 0

போனில் நம்மை வேலை வாங்கும் ஒரு விஷயம் பேட்டரி சார்ஜ் செய்வதாகும். வேலைப் பளுவில் சார்ஜ் செய்திட மறந்து போனால், அடுத்த நாள் சரியான நேரத்தில் மொபைல் பேட்டரி காலை வாரிவிடும். அலுவலக வேலையைப் பார்ப்போமா? மொபைல் சார்ஜ் செய்திட மின்சாரம் கிடைக்கும் ப்ளக் சாக்கெட்டினைத் தேடுவோமா? தேடிச் சென்றாலும், அங்கு ஏற்கனவே ஒருவர் தன்னுடைய மொபைல் போனை மாட்டி வைத்து சார்ஜ் செய்து கொண்டிருப்பார். இதுவே பயணித்துக் கொண்டிருந்தால், கூடுதல் தலைவலி. இவ்வளவு ஏன்? ஓரளவிற்குச் சில வழிகளைக் கடைப்பிடித்து, மொபைல் போன் பேட்டரியின் திறனை மிச்சப்படுத்தும் வழிகளைப் பார்க்கலாமே!
1.ஒவ்வொரு முறை சார்ஜ் செய்திடுகையிலும், பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்திடுங்கள்.
2. தேவைப்படாத அப்ளிகேஷன்களை மூடி வைக்கவும். இல்லையேல் அந்த அப்ளிகேஷன் செயல்படுத்தப்படாமல் இருந்தாலும், கணிசமான மின்சாரத்தினைச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்.
3. புளுடூத் வசதியினை, நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், இயக்கத்தை நிறுத்தி வைக்கவும். இதனால் அதிகமான அளவில் பேட்டரியின் சக்தி மிச்சமாகும். ஏனென்றால், நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், நீங்கள் நடந்து அல்லது வாகனத்தில் செல்கையில், புளுடூத் இயங்கும். ஒவ்வொரு போன் அல்லது மற்ற சாதனங்களுடன் இணைப்பினை உங்கள் மொபைல் போன் ஏற்படுத்திக் கொண்டு, பேட்டரியைக் கரைத்துக் கொண்டிருக்கும்.
4. ஆட்டோ பிரைட்னஸ் செட்டிங் ஏற்படுத்தி இருந்தால், அதனை நீக்கவும். பேக் லைட்டிங் லெவல் கூடுதலாக இருந்தால் அதனைக் குறைத்து அமைக்கவும்.
5. 3ஜி சேவைக்கென செட் செய்யப்பட்டிருந்தால், 3ஜி சேவை இல்லாத இடங்களில், அதனை நிறுத்திவிடலாம்.
6. ஜி.பி.எஸ். மற்றும் லொகேஷன் சேவை பயன்படுத்தப்படாமல் இருக்கையில், அவற்றை நிறுத்திவிடலாம்.
7. ஸ்கிரீன் டை அவுட் இன்டர்வெல் என சில போன்களில் ஒரு வசதி தரப்பட்டிருக்கும். இதனை மிகக் குறைந்த அளவில் வைத்து அமைக்கவும்.
Read More

எலிகளை ஒழிப்பது எப்படி
by admin - 0

எலிகளின் வாழ்க்கை முறை: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் காணப்படும் சிறிய பெருச்சாளிகள் முதுகுப்பகுதி கரும்பழுப்பு நிறத்துடன் சிறிய வாலுடனும் காணப்படும். இவைகளில் கருத்தரிக்கும் காலம் 4 நாட்கள் ஆகும். கருத்தரித்த 22 நாட்களில் 1 முதல் 11 குட்டிகளை ஈணும். எலிக்குட்டியானது பிறந்த 3 மாதத்திற்கு உள்ளாகவே கருத்தரிக்க தயாராகி விடுகிறது. கதிர் முற்றும் மற்றும் அறுவடைக் காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் அதிகமான அளவில் இனச்சேர்க்கை செய்து குட்டிகளை ஈணுகிறது. சராசரியாக ஒரு ஆண்டிற்கு 100 குட்டிகள் வரை இனப்பெருக்கம் இருக்கும்.


எலி ஒழிப்பு உத்திகள்


வயல் வெளியில்: அறுவடை முடிந்தவுடன் எலி வளைகளை வெட்டி எலிகளை அழிக்கலாம்.
* ஆழமாக உழுவதன் மூலம் எலிவளைகளை அழித்து எலிகளை ஒழிக்கலாம்.
* வயல்களில் குறுகிய வரப்புகளை அமைத்து எலிகள் வளைகளை அமைப்பதை தவிர்க்கலாம்.
* வயல்களுக்கு அருகிலுள்ள புதர்களை அழித்து எலிகள் தங்குவதை தவிர்க்கலாம்.
* வைக்கோல் படப்புகளையும் பருத்தி மார் போன்றவைகளையும் வயல்களுக்கு அருகில் வைக்கக்கூடாது.
* ஆந்தைகள் எலிகளை பிடித்து இரையாக உண்ணும். எனவே, அவைகள் வயல்களில் அமர்ந்து எலிகளை பிடித்து உண்பதற்கு ஏதுவாக "டி' வடிவ குச்சிகளை நட்டு வைக்க வேண்டும்.
* தண்ணீர் அதிகம் பாய்ச்சி வளைக்குள் இருக்கும் எலிகளை மூச்சுத்திணறச் செய்து விரட்டியடிக்கலாம்.
* இரவு வேளைகளில் விளக்குகளை பயன்படுத்தி விளக்கின் வெளிச்சத்தினால் ஓடாமல் நிற்கும் எலிகளை அடித்துக் கொல்லலாம்.
* எலிகளை பாம்புகள் பிடித்துத் திண்பதால் பாம்புகளை அழிப்பதை தவிர்க்கலாம்.
* கிட்டிகள் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம்.
* வாய் அகன்ற பானைகளில் சாணம் கலந்த நீரை நிரப்பி மேற்பரப்பில் சோறு போட்டுவைத்தால் அவற்றை உண்ணவரும் எலிகள் அந்த சாண நீரில் வீழ்ந்து மூழ்கி இறந்துவிடும்.
Read More