Latest News

December 31, 2010

பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? வீடியோ இணைகப்பட்டுள்ளது.
by admin - 0

அமெரிக்க இண்டியானா மாநிலத்திலுள்ள கரென் சிக்லர் என்ற பெண் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தெரிவதாக தெரிவிக்கின்றார்.

எல்வூட் நகரில் வசிக்கும் கரென் சிக்லர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட மார்பக எக்ஸ்ரே படத்திலேயே இயேசுவின் உருவம் தென்படுவதாக கரென் சிக்லா தெரிவிக்கின்றார். மேலும் இதனை தான் ஆணித்தரமாக நம்புவதாகவும் தெரிவிக்கின்றார்.

இதனை நிரூபிக்கும் வகையில் இவர் கூறும் சில விடயங்கள் இன்னும் விசித்திரமானவை.

இப் பெண்மணி அண்மையில் தனது வலது மார்பில் ஏற்பட்ட புற்றுநோய்க்கான அறுவைச்சிகிச்சைக்கு முகங்கொடுத்திருந்தார்.

அந்த சிகிச்சைக்கு முன் தேவையான சில பொருட்களை வாங்குவதற்கு கரென் சிக்லர் கடைக்குச் சென்றுள்ளார்.

இதன் போது முன் பின் அறிமுகமற்ற ஒருவர் கரேனை அணுகி "நீ குணப்படுத்தப்படுவாய்" என இயேசு கிறிஸ்து தெரிவிக்கச் சொன்னதாகக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றுள்ளார்.

எனினும் தனது மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தென்படும்வரை அதை அறிமுகமற்ற ஒருவரின் எதேச்சையான கூற்று என்றே கருதியதாக கரென் சிக்லர் தெரிவிக்கின்றார்.

இதனால் இயேசு கிறிஸ்து தனது புற்றுநோயை முற்றுமுழுதாக குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.






« PREV
NEXT »

No comments