Latest News

December 09, 2010

இளநீர் வெட்டுவதற்கு ஒரு எளிய கருவி
by admin - 0


இயற்கையில் நல்ல சிறப்புகள் உடையது இளநீர் என்பதை நாம் அறிந்திருந்தாலும் நடைமுறையில் பாட்டில் பானங்கள்தான் விற்பனையில் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் மக்களுக்கு இளநீர் கிடைப்பது குறைவாக உள்ளது. உதாரணமாக 100 இடங்களில் பாட்டில் பானங்கள் கிடைத்தால், 3-4 இடங்களில்தான் நுகர்வோருக்கு இளநீர் கிடைக்கிறது. இதற்கு காரணம் இளநீர் விற்பனை செய்வதற்கு இளநீர் வெட்டும் அனுபவம்மிக்க நபர் தேவை. ஆனால் பாட்டில் பானங்கள் விற்பனைக்கு இத்தேவையில்லை. ஆகவே இத்தடையை தகர்க்க, இதோ ஓர் அற்புதமான, எளிய முறையில் முன் அனுபவமின்றி எவரும் இயக்கக்கூடிய கருவி ஒரு வரப்பிரசாதமாக உங்கள் முன்னே. நம் இளநீருக்கு நல்ல விலை வேண்டுமென்றால், அதிகம் பேர் இளநீர் பருகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆகவே, இக்கருவியின் உதவியுடன் விற்பனைக்கூடங்களை நாம் அதிகப் படுத்தினால், இளநீர் கிடைப்பது கூடும். ஆகவே விற்பனையும் கூடும். காலப்போக்கில் நமது இளநீருக்கு நியாயமான விலை கிடைக்கும். ஆகவே, நீங்கள் உங்களுக்குத் தெரிந்த பாட்டில் பானங்கள் விற்கும் கடைக்காரர்கள், கேன்டீன், தியேட்டர்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், பார்க், தீம் பார்க், பொருட்காட்சிகள், திருமண விழாக்கள், பொதுமக்கள் கூடும் பல இடங்களில் விற்பனை செய்யத் தூண்டவும் இக்கருவி பல்லாயிரக் கணக்கான வர்களுக்கு ஒரு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். சிறிய முதலீட்டில் ஒரு நல்ல வியாபார வாய்ப்பை அமைத்துக் கொள்ள முடியும். நுகர்வோரும் நல்ல ஆரோக்கியமான, தரமான ஒரு பானத்தை உரிய விலையில் பெற முடியும். ஆகவே, இளநீர் பருகுங்கள், விற்பனையை அதிகமாக்கத் தூண்டுங்கள். எல்லோருக்கும் வெற்றி என்ற சூழ்நிலையை ஏற்படுத்துங்கள். கருவியின் சிறப்புகள்: இயக்குவதற்கு எளிதானது; முன் அனுபவம் தேவையில்லை; சுகாதாரமாக செயல்படக்கூடியது; சிக்கனமானது; வேகமாக செயல்படக்கூடியது; மின்சக்தி தேவையில்லை; குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம்.

« PREV
NEXT »

No comments