இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களின் சிறுநீரை விலை கொடுத்து வாங்கவும் முடிவு செய்துள்ளது. மனித கழிவுகள் கூட விவசாயத்திற்கு இயற்கை உரங்களாக பயன்படுவதுண்டு. விவசாய உரத்தில் நைற்ரேட், பொஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை உள்ளன.
தென்னாபிரிக்காவின் துறைமுக நகரமான டேர்பனில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் உலர்ந்த கழிவறைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் திரவ திடக்கழிவுகளை விலை கொடுத்து வாங்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் சுகாதாரமும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் எனவும் நம்பப்படுகிறது. முன்னதாக இத்திட்டம் குறித்து ஆய்வினை தீவிரமாக கவனித்த சுவிட்சலாந்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தின் ஈவோக் அன்ட் பில் மிலின்டா கேட்ஸ் பவுண்டேசன் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தது.
இதன்படி தென்னாபிரிக்காவில் டேர்பன் நகரில் 500 குடியிருப்புகளில் 90.000 உள்ள கழிவறைகளில் சுமார் 20 லீற்றர் கொள்ளவுகொண்ட கொள்கலன் வைக்கப்பட்டது. இதில் சேமிக்கப்படும் சிறுநீர் வாரத்திற்கு ஒரு முறை நகராட்சி ஊழியர்கள் இந்த கொள்கலன்களில் சிறுநீரை எடுத்துச் செல்வர். இதற்காக ஒரு குடும்பத்திற்கு நான்கு டொலர்கள் அல்லது மூன்று யூரோக்களை பணமாக வழங்குகிறது.
இது குறித்து டேர்பன் நகர குடிநீர் சுகாதாரத்துறை தலைவர் நீல் மெக்லியோட் கூறுகையில் இதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு சரிவர தெரியவில்லை.
வருமானம் வரும் ஆதாரமாக கழிவறைகள் விளங்கினால் இனி அனைவரும் கழிவறைகளை பயன்படுத்த விரும்புவர் என்றார். தென்னாபிரிக்காவைச் சேர்ந்த குடிநீர் சுகாதாரத்துறை ஆலோசகர் பியர்ரி யூவெஸ்ஓகர் கூறுகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டம் ஏமன் நாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
No comments
Post a Comment