Latest News

October 31, 2011

2183ம் ஆண்டில் உலக மக்கள் தெகை 1,000 கோடியை எட்டும்: ஐ.நா
by admin - 0

ஐ.நா.: உலக மக்கள் தொகை அளவானது 2183ம் ஆண்டில் 1,000 கோடியை அதாவது 10 பில்லியன் அளவை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிக அளவில் காணப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி வளர்ச்சி விகிதம்:

2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 120 கோடியாக உள்ளது. இது 2060ம் ஆண்டில் 170 கோடியை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான சீனாவின் மக்கள் தொகை 2030ம் ஆண்டிலேயே 140 கோடியை தொடும் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

700 கோடியாக உயர்வு:

இந்த நூற்றாண்டின் மத்தியில் 930 கோடியாக அதிகரிக்கும் என்றும் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 2183ம் ஆண்டில் 10.1 பில்லியனை எட்டும் என்றும் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் 39 நாடுகளும், ஆசியாவில் 6 நாடுகளும் லத்தீன் அமெரிக்காவைக் சார்ந்த நாடுகளிலும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிரடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகையானது 700 கோடியை தொடும் என்றும் ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

இதயத்திற்கு வலிமை தரும் மாதுளம் பூக்கள்
by admin - 0

மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பல வித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம் பூ.

இருமல் போக்கும்
மாதுளம் பூ மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.

தொண்டை ரணம்

மாதுளம் பூக்களை மைய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவேண்டும். இதனால் தொண்டைக்கமறல், தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.






தாதுபலம்

தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வரவேண்டும்.

ரத்த மூலம் குணமாக

மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்
Read More

உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்தது
by admin - 0

உலகின் 700வது கோடி குழந்தை இன்று உ.பி. தலைநகர் லக்னோ அருகே பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அது பிறந்துள்ளது.

முன்னதாக உலகின் 700வது கோடி குழந்தை லக்னோ அருகே மால் என்ற கிராமத்தில் பிறக்கும், அது பெண் குழந்தை என்று பிளான் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தப் பெண் குழந்தை, பெண் சிசுக் கொலைக்கு எதிரான அடையாளமாக விளங்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் தற்போது 700வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளது.

மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை இன்று பிறந்தது. இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் அவரது பெற்றோர். இக்குழந்தைப் பிறப்பையடுத்து மருத்துவமனையில் பெருமளவில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் திரண்டிருந்தனர். நள்ளிரவைத் தாண்டிய நிலையில் குழந்தை டேனிகா பிறந்தாள்.

குழந்தையின் தாயாரான கேமிலி டலுரா, டேனிகாவை அணைத்தபடி கூறுகையில், இக்குழந்தை மிகவும் அழகாக உள்ளது. எனது மகள்தான் உலகின் 700வது கோடி குழந்தை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார் பூரிப்புடன்.

2.5 கிலோ எடையுடன் உள்ள டேனிகா, டலுரா மற்றும் அவரது கணவர் பிளாரன்ட் கமாச்சோவுக்கு பிறந்த 2வது குழந்தையாகும்.

குழந்தை பிறந்ததும் ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று டேனிகாவின் பெற்றோரை சந்தித்து முறைப்படி இது 700வது கோடி குழந்தை என்று கூறி பரிசாக ஒரு சின்ன கேக்கையும் வழங்கி வாழ்த்தினராம்.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பலரும் கூட குழந்தைக்கு ஏராளமான பரிசுகளை அறிவித்துள்ளனர். குழந்தையின் எதிர்கால கல்விச் செலவு உள்ளிட்டவற்றை ஏற்பதாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனம் டேனிகாவின் பெற்றோருக்காக கடை ஒன்றை வைத்துத் தருவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது இன்னொரு விசேஷமும் நடந்தது. உலகின் 600வது கோடி குழந்தையான போஸ்னியாவைச் சேர்ந்த லோரிஸ் மா குவரா என்ற 12 வயது சிறுவன் டேனிகா பிறப்பின்போது அந்த மருத்துவமனையில் இருந்தான். இவன் 1999ம் ஆண்டு போஸ்னியாவைச் சேர்ந்த அகதித் தம்பதியருக்குப் பிறந்தவன் ஆவான்.

இதுகுறித்து குவரா கூறுகையில், இந்த அழகான குழந்தையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போலவே ஆரோக்கியமாகவும், தெம்பாகவும் இவளும் வளர்வாள், எல்லோராலும் நேசிக்கப்படுவாள் என்று நம்புகிறேன் என்றான் சிரித்தபடி.

உ.பியிலும் 700வது கோடி குழந்தை பிறந்தது!

இதற்கிடையே, உ.பி. மாநிலம் பக்பத் மாவட்டத்திலும் இதே சமயத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பக்பத் மாவட்டத்தில் உள்ள சுன்ஹேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு இன்று இக்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையும், பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் பெறுகின்றன.
Read More

சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
by admin - 0

சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர்.

சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை.

இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீல் வைக்கும் பணிக்காக பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஏன் சீல்?

முறையான கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது, தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டியது, பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகளும் பெருமளவில் தொடரப்பட்டிருந்தன.

பல்வேறு நோட்டீஸ்களுக்குப் பிறகும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்கவில்லை என்பதால் தற்போது சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே சீல் வைக்கும் நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மக்களுக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக காத்திருந்து இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read More

இலங்கையில் தமிழன் தோற்றதற்கு காரணம், துரோகமும் மற்றும் சில நாடுகளின் சதியும்தான் என்ற வரிகளை சூர்யா உணர்ச்சிப் பிழம்பாக சொல்லும்போது, தியேட்டரில் கைதட்டல் காதை நிரப்புகிறது.
by admin - 0


பல்லவ மன்னனின் மூன்றாவது இளவரசர் போதி தர்மர். இவர், 1600 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருந்து சீனாவுக்கு மருத்துவம் மற்றும் தற்காப்பு கலையை பரப்புவதற்கு செல்வதாக கதை ஆரம்பிக்கிறது. சீனாவுக்கு செல்லும் போதி தர்மரை அங்குள்ள மக்கள் முதலில் தீய சக்தியாக கருதி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் வினோத நோயில் இருந்து போதி தர்மர் தனது மருத்துவத்தால் அவர்களை காப்பாற்றியதும் அவர் மீது அவர்களுக்கு பூரண நம்பிக்கை ஏற்படுகிறது. அதோடு அவரிடத்தில், எதிரிகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள களறி கலையையும் சீனர்கள் பயின்று கொள்கின்றனர். அதன்பிறகு தாய் நாடு செல்ல விரும்பும் போதி தர்மரை அனுப்ப அவர்களுக்கு விருப்பமில்லை. மாறாக, அவரது உடம்பை தங்கள் மண்ணிலேயே புதைத்தால் அந்த பலன் தங்களுக்கே கிடைக்கும் என்று நினைக்கின்றனர். இதனால் அவர்கள் தனக்கு தருவது விஷம் என்பது தெரிந்தும் இன்முகத்தோடு அதை வாங்கிக்குடித்து உயிரை விடுகிறார் போதி தர்மர். இதனால் அந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்படும் போதி தர்மர் அவர்களால் வணங்கப்படும் தெய்வமாகிறார். இப்போதும் சீனர்கள் அவரை வழிபட்டு வருகிறார்கள் என்ற வரலாற்றை சொல்லி படத்தை தொடங்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் அதைத்தொடர்ந்து 1600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போதி தர்மரின் டிஎன்ஏ பரிசோதனையை ஸ்ருதிஹாசன் நடத்தி வருவது போன்று படம் வேறு களத்தில் செல்கிறது. அவரது டிஎன்ஏ இருப்பவரை கண்டுபிடித்து மீண்டும் அந்த திறமையை வெளிக்கொண்டு வரலாம் என்பது அவரது ஆராய்ச்சியின் நோக்கமாக இருக்கிறது. அப்படி அந்த வம்சாவழியினர் பலரை டிஎன்ஏ செய்து பார்த்ததில் மறைந்த போதி தர்மரின் டிஎன்ஏ இப்போது அவரது வம்சத்தை சேர்ந்தவரான சூர்யாவுக்கு பொருந்துவதை ஸ்ருதி கண்டுபிடிக்கிறார். ஆனால் அவர்களது முதல் சந்திப்பிலேயே சூர்யா, ஸ்ருதிஹாசனை காதலிக்கிறார். ஸ்ருதி அப்போதைக்கு காதலிக்கவில்லை என்றாலும் தனது ஆராய்ச்சிக்காக காதலிப்பது போல் நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ருதி தன்னை டிஎன்ஏ விசயமாக தேடி வந்திருப்பது சூர்யாவுக்கு தெரிந்து அதிர்ச்சியடைகிறார். ஆனால் அவரிடம் பக்குவமாக சொல்லி புரிய வைக்கிறார் ஸ்ருதி. இந்த நிலையில், ஸ்ருதியின் ஆராய்ச்சி பற்றி தமிழ்நாட்டிலுள்ள ஒரு புரபசர், சீனர்களுக்கு தகவல் கொடுக்கிறார். இதற்காக பெரிய அளவில் லஞ்சமும் பெறுகிறார் இதன்காரணமாக, மீண்டும் இந்தியாவில் இன்னொரு போதி தர்மர் வந்து விடக்கூடாது என்று நினைக்கும் சீனர்கள், அந்த போதி தர்மரின் வம்சத்தை சார்ந்தவரை அழிக்க இந்தியாவுக்கு ஒருவனை அனுப்புகிறது. அதோடு, சீனாவில் பரவிய வினோத நோயை இந்தியாவிலும் பரப்பி விட்டு இந்தியாவை நிலைகுலைய செய்ய வேண்டும் என்றும் நினைக்கும் சீனர்கள், அதன்பிறகு அதற்கான மருந்தை தாங்கள் தருவதாக சொல்லி இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்ற நோக்கத்திலும் அந்த நபரை அனுப்பி வைக்கின்றனர்.இதையடுத்து என்ன நடக்கிறது என்பதே விறுவிறுப்பான இறுதிக்காட்சி.
2001-ம் ஆண்டு ‘தீனா’ படத்தில் இருந்து வித்தியாசமாக கதை சொல்லி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் ’7-ஆம் அறிவு’ படத்தில் தமிழன் தலைநிமிர வேண்டும். அதற்கு தன் பாரம்பரிய சிறப்பை உணர வேண்டும் என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். படத்தில் பல இடங்களில் மசாலாத்தனம் இருந்தாலும் தமிழன் தோற்கக் கூடாது என்ற வரிகள், ஈட்டிகளாக பாய்கின்றன. 
இலங்கையில் தமிழன் தோற்றதற்கு காரணம், துரோகமும் மற்றும் சில நாடுகளின் சதியும்தான் என்ற வரிகளை சூர்யா உணர்ச்சிப் பிழம்பாக சொல்லும்போது, தியேட்டரில் கைதட்டல் காதை நிரப்புகிறது. தமிழர்களிடம் உணர்வு மங்கி விடவில்லை என்பதை இது காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் தமிழ் வரலாற்றுடன் அறிவியல் புனைவும் கலந்த பிரம்மாண்டமாக ’7-ஆம் அறிவு’ உள்ளது.விஷம் கலந்த உணவு என்று தெரிந்தும், தன் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டால் அங்கு எந்த தீங்கும் நேரிடாது என்று அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள் என்பதற்காக அந்த உணவினைச் சாப்பிட்டு சமாதியாகிப் போகும் போதி தர்மனின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பொது நலத்திற்காக சமாதியானவர்கள் சாமி ஆகிவிடுகிறார்கள். போதி தர்மனும் சீனா முழுமைக்கும் சாமி ஆகிவிடுகிறார். போதி தர்மனின் சிலை முன் வணக்கம் செலுத்தும் சீனாக்காரனைப் பார்க்கும் போது நமக்கு நிச்சயமாக கர்வம் தலைகேறுகிறது. தடுக்கி விழுந்தால் அவ்வளவு சிலைகள், அட! இங்கே சிலைகளில் தானே நாம் தடுக்கி விழவே வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு பார்க்கும் இடமெல்லாம் யார் யாருக்கெல்லாமோ சிலை இருக்கும் தமிழகத்தில் போதி தர்மனுக்கு ஒரு சிலை கூட கிடையாது!!!பள்ளி மாணவர்களுக்குத் தேவையில்லாத பாடத்திட்டங்களைச் சேர்த்து அடுத்து வரும் அரசாங்கத்தால் அதனை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டிய அளவிற்குப் பாடத்திட்டங்கள் தயாரிப்பவர்கள் போதி தர்மனை மறந்தது ஏனோ..? நம் நாட்டில் முதலில் மனிதக் காக்கைகள் ஒழிய வேண்டும் அல்லது ஒழிக்கப்பட வேண்டும் திரையில் சூர்யா, ஸ்ருதிஹாசன், வில்லன் நடிகர் ஜானி ட்ரையென் மூவரும்தான் நிறைந்துள்ளனர். சூர்யா இப்படத்தில் போதி தர்மர், சர்க்கஸ் கலைஞர், டி.என்.ஏ. மூலக்கூறு மாற்றம் செய்யப்பட்ட இளைஞன் என மூன்றுவிதமாக வருகிறார். முதல் 30 நிமிடங்கள் போதி தர்மராக அவர் வரும் காட்சிகளில் இமைகளை மூட முடியாதபடி செய்து விட்டார். சிக்ஸ் பேக் உடலமைப்பை முறுக்கி காட்டும் காட்சிகளில் பிரமிப்பூட்டுகிறார். ஸ்ருதியை காதலிக்கும் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் சூர்யா நடிப்பு அருமை.ஸ்ருதி ஹாசனுக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. அழகு, சிரிப்பு, ஆவேசம், அழுகை, ஆர்ப்பாட்டம் என்று அத்தனை அம்சங்களையும் அவர் இந்த படத்தில் கொட்டியுள்ளார். தமிழை அவமதித்தால் மூஞ்ச பேத்துடுவேன், உன் காதலைத் தூக்கி குப்பையில் போடு போன்ற காட்சிகளில் ஆவேசமான நடிப்பு, அவரது சொந்த குரல் வசனம் உயிரோட்டமாக உள்ளது. பல காட்சிகளில் கமலஹாசனின் வாரிசு என்பதை ஸ்ருதி நிரூபித்துள்ளார்.
வில்லன் டாங்லீயாக வரும் ஜானி ட்ரைங்யென் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர். அவரது குடும்பமே கலைக் குடும்பமாகும். 37 வயதாகும் இவர் ‘ஸ்பைடர்மேன்’ படத்தில் கிரீன்காப்லின் கதாபாத்திரத்துக்கு டூப்பாக நடித்துள்ளார். சூர்யாவுக்கு இணையாக இவர் இப்படத்தில் செம கலக்கு கலக்கியுள்ளார். பிறரது மனதை கட்டுப்படுத்த இவர் காட்டும் முகபாவனைகள் மனதை விட்டு அகலாதவை சூர்யா, ஸ்ருதி இருவரையும் விரட்டும் காட்சிகள் படத்துக்கு சூடேற்றுகின்றன. வித்தியாசமான இந்த வியட்நாம் வில்லன் தமிழர்கள் நெஞ்சில் இடம் பிடிப்பார். இவர் வரும் காட்சிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ள இசை, ரசிகர்களை இருக்கையில் உட்கார விடாமல் செய்கிறது. படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. பா.விஜய், நா.முத்துக்குமார், கபிலன், மதன்கார்க்கி எழுதி உள்ளனர்.ஓ ரிங்கா ரிங்கா’ பாடலுக்கு ஆயிரம் நடனக் கலைஞர்கள் ஆடியுள்ளனர். ‘ஏ லே லமா’ பாடலை விஜய்பிரகாஷ், கார்த்திக், ஷாலினியுடன் ஸ்ருதியும் பாடியுள்ளார். ‘யம்மா யம்மா’ என்ற காதல் தோல்வி பாட்டு, படத்தின் வேகத்துக்கு கடிவாளம் போடுவது போல உள்ளது. ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு படத்துக்கு முதுகெலும்பாக இருக்கிறது. சீன அழகை நம் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளார். பீட்டர் ஹெய்னின் சண்டை காட்சிகள் புதுவிதமாக மிரட்டியுள்ளன. சூர்யா, ஸ்ருதி இருவரையும் கொல்ல, வில்லன் டாங்லீ மற்றவர்களின் மனதைத் தூண்டி விட்டு நடத்தும் பத்து நிமிட சண்டை பரரப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு ஆர்வம் கொடுக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் இந்த படத்திற்காக முருகதாஸ் திரட்டியிருக்கிறார். அதை அப்படியே ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார். அதனால்தான் சில காட்சிகள் டாக்குமெண்டரி படம் போல அமைந்திருக்கிறது. போதி தர்மன் எபிசோட்டில் இருந்த விறுவிறுப்பு சூர்யா-ஸ்ருதி காதல் காட்சிகளில் இல்லாமல் போனது படத்திற்கு மைனஸ். அதே போல வில்லன் ஜானி சூர்யாவை கொலை செய்யும் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்சாதாரண பெண், துப்புரவு தொழிலாளி எல்லாம் குங்பூ சண்டை போடுவது வித்தியாசம். சுமார் ஐம்பது வாகனங்களை தூள், தூளாக நொறுக்கி எடுக்கப்பட்ட இந்த சண்டை காட்சிக்கு மட்டும் பத்து கோடி ரூபாயை செலவு செய்துள்ளார்களாம். இறுதியில் சீனாக்காரனை அழித்து விட்டு சூர்யா, தமிழர்கள் தங்கள் பாரம்பரிய சிறப்பை மறக்கக் கூடாது, என்று பேசும் வசனம் ‘நச்’ என உள்ளது. வீரமாக வாழ்ந்த தமிழ் இனம் இதை புரிந்து கொண்டால் நல்லது. இலங்கையிலும், மாலத்தீவிலும் சீனா கால்பதித்து, நம்மை முற்றுகையிட்டுள்ள நிலையில், எதிர்கால தமிழன் எப்படி வாழ வேண்டும் என்ற பாடத்தை ’7ஆம் அறிவு’ சொல்லியுள்ளது.

7ஆம் அறிவு – தமிழனின் மிடுக்கான வரலாற்றுப் பதிவு!
நடிகர்கள்
சூர்யா, ஸ்ருதி ஹாசன், ஜானி
இசை
ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்
ஏ.ஆர்.முருகதாஸ்
தயாரிப்பு
உதயநிதி ஸ்டாலின்
Read More

மனித உரிமைகள் கமிஷனர் நியமனத்துக்கு ஒப்புதல்: இந்திய எதிர்ப்பையும் மீறி காமன்வெல்த் முடிவு
by admin - 0


காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள பெரும்பாலான நாடுகள், அந்த அமைப்பில் மனித உரிமைகள் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளா விடில், பிரிட்டன் பல நாடுகளுக்கு அளித்து வரும் தனது நிதியுதவியை நிறுத்தப் போவதாக எச்சரித்து உள்ளது.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம், கடந்த 28ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.

நிபுணர்கள் குழு: காமன்வெல்த் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை அந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, 11 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, 2009ம் ஆண்டு நவம்பரில், டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் நியமிக்கப்பட்டது.

இந்தியா எதிர்ப்பு: இக்குழுவின் பரிந்துரைகளில், காமன்வெல்த் நாடுகளுக்கு என தனியாக ஒரு மனித உரிமைகள் கமிஷனர் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. இலங்கையில் 2009ல் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இரு தரப்பினரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் வெளிப்படத் துவங்கியதையடுத்து, கமிஷனர் நியமனம் அவசியம் என காமன்வெல்த் அமைப்பு கருதியது.ஆனால், இதுகுறித்து நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குறிப்பாக, தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கமிஷனர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கமிஷனர் தேவை: மலேசிய முன்னாள் பிரதமரும், நிபுணர்கள் குழு உறுப்பினருமான அப்துல்லா அகமது படாவி, இது குறித்து நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "கமிஷனர், ஒரு போலீஸ் அதிகாரியாகச் செயல்பட மாட்டார்; அவருடைய நடவடிக்கைகளும் கடுமையாக இருக்காது. காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நடவடிக்கை குழு மற்றும் பொதுச் செயலர் ஆகியோரின் நடவடிக்கைகளில் இயல்பாக ஏற்படும் விடுதல்களை நிரப்பவே இந்த பதவி' என்றார்.

106 பரிந்துரைகள்: மனித உரிமைகள், எச்.ஐ.வி., ஒழிப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேலையில்லா இளைஞர்கள் விவகாரம், பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளை காமன்வெல்த் நாடுகள் எதிர்கொள்ளும் வகையில், 106 பரிந்துரைகளை நிபுணர் குழு நேற்று முன்தினம் அளித்தது. இந்த பரிந்துரைகளை வெளிப்படையாக அறிவிக்க, காமன்வெல்த் அமைப்பு அனுமதியளிக்கவில்லை.

ஒப்புதல்: இந்நிலையில் நேற்று நடந்த இறுதிக் கூட்டத்தில், மனித உரிமைகள் கமிஷனர் நியமனத்திற்கு, பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு கூறுகையில், "இந்த பரிந்துரைகளை ஒப்புக் கொண்டதன் மூலம் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் காமன்வெல்த் செயல்படும் என்பதை நாம் உறுதி செய்துள்ளோம்' என்றார்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக, சிறிய தீவு நாடுகளுக்கு உதவுவதாக காமன்வெல்த் உறுதியளித்துள்ளது. அந்த அமைப்பில் பாதிக்கு மேற்பட்ட உறுப்பு நாடுகள் தீவுகளே.இலங்கை விவகாரம் தவிர, குழந்தைத் திருமணம் மற்றும் எச்.ஐ.வி., ஆகிய விவகாரங்களில் இக்கூட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது.இந்த அமைப்பில் உள்ள 20 நாடுகளில் இன்னும் குழந்தைத் திருமணம் நடைமுறையில் உள்ளது. அவற்றிலும், 12 நாடுகளில் அதிகளவில் உள்ளது. அதேபோல், உலகில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரில் 60 சதவீதம் பேர் காமன்வெல்த் நாடுகளில் உள்ளனர்.

காமன்வெல்த் நாடுகள் 54ல், 41 நாடுகள் ஓரினச் சேர்க்கையை சட்ட விரோதமாகவே இன்னும் வைத்துள்ளன. பிரிட்டனின் நிதியுதவி பெறும் நாடுகள், மனித உரிமைகள், ஓரினச் சேர்க்கை தடை உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவில்லையெனில், இனி அந்த உதவியைப் பெற முடியாது என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்துள்ளார். பொதுச் செயலராக தொடர்கிறார் சர்மா: காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலராக கமலேஷ் சர்மா, 70, உகாண்டாவில் 2007ல் நடந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டு காலம் கொண்ட இப்பதவிக்கு அவரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவரது இரண்டாவது பதவிக் காலம், 2012, ஏப்ரல் மாதம் துவங்குகிறது.

இலங்கை விவகாரத்தில் தோல்வி:மனித உரிமைகள் கமிஷனர் நியமனம் குறித்த காமன்வெல்த் கூட்டமைப்பின் ஒப்புதல் என்பது பெயரளவில் தான் என, நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இந்த கூட்டம், இலங்கை விவகாரத்தில் தோல்வியையே தழுவியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.வரும் 2013ல் இலங்கையில் காமன்வெல்த் கூட்டம் நடந்தால், அதில் பங்கேற்க முடியாது என கனடா தனது எதிர்ப்பை பதிவு செய்த பின் கூட, பரவலான எதிர்ப்பு இலங்கைக்கு எதிராக காமன்வெல்த்தில் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது."மனித உரிமைகள் தொடர்பான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட கையோடு, 2013 கூட்டத்தை இலங்கையில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தது காமன்வெல்த் அமைப்பிற்கு அவமானமே' என, சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கூறியுள்ளது.
Read More

விஜயின் நண்பன் பட புதிய படங்கள் -படபிடிப்பு காட்சிகள்
by admin - 0
















Read More

October 30, 2011

எனது பலமே வேகம்தான், அது இருக்கும் வரை நடிப்பேன்- ரஜினிகாந்த்
by admin - 0

: எனது பலம், மூலம் வேகம்தான். நான் சிவாஜி போல, கமல் போல நடிப்பாற்றல் கொண்டவன் அல்ல. எனவே எனது உடலில் வேகம் இருக்கும் வரை நான் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சங்கர ரத்னா விருது பெற்றுள்ளார். இதற்கான விழா சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென வருகை தந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். படு டிரி்ம்மாக, ஆரோக்கியமாக, உற்சாகமாக காணப்பட்டார். அவரைப் பார்த்து அனைவரும் உற்சாகமடைந்தனர்.

ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் பேசும்போது எனது உடலில் வேகம் இருக்கும் வரை நான் ஓய்வ பெற மாட்டேன் என்று கூறி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

ரஜினியின் பேச்சு:

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.

பின்புதான் யோசித்தேன், உடல் நிலை சரியான பிறகு, ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். அப்படி பார்த்தால், என்னை சினிமாவில் வளர்த்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை விட வேறு நல்ல நிகழ்ச்சி எதுவும் கிடையாது.

நான் முழுமையாக குணம் அடைய மக்களின் அன்பும், ரசிகர்களின் வேண்டுதலும்தான் காரணம். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது வீட்டோடு இருந்து ரெஸ்ட் எடுக்கத்தான் விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் இருக்கிற இந்த மேடையில், நான் அதிகம் பேசினால், அது அதிக பிரசங்கித்தனம் ஆகிவிடும்.

எனக்கு வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதால் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடிக்கவில்லை. அவர் மீது கொண்ட அன்பினால் தான் 25 படங்களில் நடித்தேன்.

என்னை உருவாக்கியவர்கள் என்னிடம் பேசும்போது, நீ தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் சிவாஜியோ, கமல்ஹாசனோ கிடையாது. அவர்களை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது. அவர்களைப் போல என்னால் நடிக்கவும் முடியாது. நான் ஒரு ஹீரோவாக மட்டுமே இருக்க முடியும். சினிமா துறையில் என் மூலதனம் என் உடலின் வேகம்தான். எனவே, என் உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன் என்றார் ரஜினி.

நிகழ்ச்சியில் பேசிய எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், எஸ்.பி.முத்துராமனின் தந்தை ராமசுப்பையா எனக்கு அரசியல் தந்தை. ஆகவே அவரை எனக்கு 70 ஆண்டுகளாக தெரியும். ஒரே நேரத்தில் ரஜினியையும், கமல்ஹாசனையும் இயக்கியவர். எஸ்.பி.முத்துராமனை பார்த்து உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
Read More

சரண் அடைகிறார் கடாபி மகன்:ஐ.சி.சி.யுடன் பேச்சுவார்த்தை _
by admin - 0

லிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் கடாபியின் மகன்மார்களுள் ஒருவரான சயீப் அல் இஸ்லாம், 39, சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் (ஐ.சி.சி.,) உள்ள தனது வழக்கில் சரண் அடைவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறார். 'லிபியாவில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது" என அவர் கூறியதாக ஐ.சி.சி.,யின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

லிபியாவில் கடாபி ஆட்சிக்கு எதிராக நடந்த மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது இராணுவத்தை ஏவி வன்கொலைகளில் ஈடுபட்டதற்காக, கடாபி மற்றும் சயீப் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், இருவரையும் கைது செய்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.மக்களுக்கு எதிரான குற்றவியல் செயல்களில் மறைமுகமாக கூட்டுச் சதியில் ஈடுபட்டது, கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையிலான நாட்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தியது ஆகிய குற்றங்கள் சயீப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

எதிர்ப்பாளர்களால் கடாபியும், அவரது மற்றொரு மகன் முட்டாசிமும் கொல்லப்பட்ட நிலையில், சயீப் அல் இஸ்லாம் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர் நைஜர், லிபியா எல்லையில் பதுங்கியிருக்கக் கூடும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவை உறுதி செய்யப்படவில்லை.இந்நிலையில், ஐ.சி.சி.,யில் தன் மீதான வழக்கில் சரண் அடைவதற்கான பேச்சு வார்த்தைகளை சயீப், சிலர் மூலம் நடத்தி வருகிறார்.

இதுகுறித்து ஐ.சி.சி., வழக்கறிஞர் லூயிஸ் மொரனோ ஒகம்போ கூறியதாவது:சயீபுக்காக பேச்சு நடத்துவோர் தங்களை யார் என்று காட்டிக் கொள்ளவில்லை. எங்களுக்கும் சயீபுக்கும் இடையில் சிலர் பேச்சு நடத்துவதால் சயீபுடன் நேரடித் தொடர்பு எங்களுக்கு இல்லை. அவர் எங்குள்ளார் என்பதும் தெரியாது.லிபியாவில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், அதை விரைவில் நிரூபிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இவ்வாறு ஒகம்போ தெரிவித்தார்.
 
Read More

திருநெல்வேலியில் பாரிய கொள்ளை
by admin - 0

திருநெல்வேலி சந்தியில் அமைந்துள்ள பிரபல மதுபான சாலையில் இன்று இரவு கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர். பணமாக பத்து இலச்சத்துக்கு  மேல் கொள்ளை இடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது பொலிசார் இது சம்பத்தமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் 
Read More

ஒரு மாதத்திற்குள் எனது மகனை மீண்டுத் தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்!
by admin - 0


தனது பிள்ளை கடந்த 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 27 ஆம் திகதி வீட்டில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் சென்றனர். ஆனால் இதுவரை எனது மகனைப் பற்றிய விபரம் தெரியாமல் இருக்கிறது.
தினக்குரல் பத்திரிகையில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் திகதி கட்டுரையில்  வந்த புகைப்படம் ஒன்றில் இளைஞர்கள் மத்தியில் ரன்னிங் சோட்சுடன் எனது மகன் உயிருடன் இருக்கின்றதைக் கண்டேன்.
எனது மகனை மீண்டுத்தருமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருமான ஈ. ஆனந்தராஜாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் தாய் ஒருவர்.
ஒரு மாதத்திற்குள் எனது மகனை மீண்டுத் தராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என கண்ணீர் மல்க கதறியழுதார் ஒரு தமிழ் தாய்.
இவரின் இந்த உருக்கமான வேண்டுகோளைக் கேட்டுக் கொண்டிருந்து மனித நேயமிக்கவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் சொரிந்தது. இந்த சம்பவமானது இன்று சனிக்கிழமை காலை மனித உரிமைகள் அதிகாரிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்குமிடையில் யாழ்.கிறின் கிலாஸ் விடுதியில் நடைபெற்றுள்ளது.
இதேவேளை தங்களது பிள்ளைகளை இராணுவத்தினர் கடந்த 1997 ஆம் ஆண்டு பிடித்துச் சென்றனர் இதுவரை கண்ணில் கூடக் காட்டவிலை இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறியத்தாருங்கள் என தாய்குலம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை ஒப்படைத்தனர்.


யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறு காணாமல் போகும் சம்பவர்கள் நடைபெறாது இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ஆறுதல் படுத்தினார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஈ. ஆனந்தராஜா.
Read More

அபிவிருத்தி அடையும்? கிளிநொச்சி photo in
by admin - 0

 நன்கு வாகனங்கள் ஒன்றாக பயணிக்க கூடிய வீதி அமைக்கப்படுகிறது 


புது பொழிவு பெறும்  கிளிநொச்சி A9 வீதி  மட்டும் ?



Read More

உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா ?
by admin - 0

கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் அன்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார். அதனை அவர் கனடாவில் உள்ள கான்சர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராட்சியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது. சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் கான்சர் செல்களை அழித்து அந் நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.

இன்று கனடா முழுவதும் பேசப்படும் 17 வயது நிரம்பிய தமிழர் யார் என்று கேட்டால் இந்த அபிக்குமரன் தான். அவர் வளர்ந்துவரும் நிலையில் இன்னும் சில காலத்தில் அவர் உருவாக்கியுள்ள பொறிமுறையைக் கையாண்டால் கான்சரை முற்றாக அழிக்க முடியும் என மூத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அபிக்குமரன் உள்ளார் என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர் பல மூத்த ஆய்வாளர்கள். அச் சிறுவனிடம் புதைந்து கிடக்கும் அறிவும் ஆற்றலும் தம்மை பிரமிக்கவைப்பதாகவும் 30 ஆண்டுகளாக தாம் செய்திராத ஆராட்சிகளை அச் சிறுவன் வித்தியாசமாகவும் வேறு கோணத்திலும் சிந்தித்துச் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
Read More

எக்ஸெல் டிப்ஸ்
by admin - 0

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைக் காட்டிலும், நாம் தரும் விளக்கங்களைக் காட்டிலும், சில வேளைகளில் ஆடியோ இயக்கம் கூடுதல் விளக்கங்களைத் தரும். இதனால் ஒர்க்ஷீட்டினைப் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு மல்ட்டி மீடியா அனுபவம் கிடைக்கும். இதற்கென வசதியினை எக்ஸெல் கொண்டுள்ளது. இதற்கான செட்டிங்ஸ் வழி இதோ:
1. எங்கு ஆடியோ பைலை இணைத்து இடம் அமைக்க வேண்டுமோ, அதன் அருகே உள்ள செல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
2. Insert மெனு சென்று, அங்கு Object என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது காட்டப்படாமல் (Not enabled and gray in colour) இருப்பின், உங்கள் செல் தேர்வில் சிறிய தவறு உள்ளது என்று பொருள். சரியாக இருந்தால், இங்கு ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
3. இந்த பாக்ஸில் Create from File என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மேலாக, ஆடியோ பைலைத் தேர்வு செய்திட பிரவுஸ் பட்டனும், நீள் சதுரமும் கொடுக்கப்பட்டிருக்கும். இதனைப் பயன் படுத்தி, நீங்கள் இணைக்க விரும்பும் ஆடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும். 
4. இந்த பாக்ஸிலேயே, Link to file மற்றும் Display as Icon என்பவை தரப்பட்டிருக்கும். இவற்றையும் தேர்ந்தெடுக்கவும். 
5. அனைத்தும் முடிந்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது ஒர்க் ஷீட்டில் நீங்கள் இணைக்க நினைத்த இடத்தில், ஆடியோ ஐகான் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், அந்த பைல் இயக்கப்பட்டு ஒலிக்கும்.

எக்ஸெல் என்டர் கீ
எக்ஸெல் தொகுப்பில் என்டர் கீ அழுத்தினால், வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதனைக் காணலாம். செல் ஒன்றில் டேட்டாவினை அமைத்துவிட்டு, என்டர் கீ அழுத்தினால், அந்த டேட்டாவினை செல்லில் அமைத்த கையோடு, கர்சர் அதே நெட்டு வரிசையில் கீழே உள்ள செல்லுக்குச் செல்லும். இவ்வாறு இல்லாமல், என்டர் கீ அழுத்துவதன் மூலமாக மேற்கொள்ளப் படும் பணியினை நீங்கள் விரும்பும் வகையில் மேற்கொள்ளுமாறு செய்தி டலாம். 
பொதுவாக செல் ஒன்றில் டேட்டாவினை என்டர் செய்தவுடன், என்டர் கீயினை அழுத்துவது வழக்கமான வேலையாகும். அவ்வாறு செய்திடுகையில் உங்கள் விருப்பப்படி என்டர் கீக்கான பணியை நிர்ணயம் செய்திடலாம். ஒன்றுமே நடக்காத படி செய்திடலாம். அல்லது கீழே உள்ள செல்லுக்குக் கர்சர் செல்லாமல், பக்கத்தில் உள்ள செல்லுக்குச் செல்லும்படி அமைத்திடலாம். இதற்கான வழிகள்:
1. டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் ஆப்ஷன் டயலாக் பாக்ஸினைத் தரும். 
2. இதில் உள்ள டேப்களில் எடிட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 
3. Move Selection After Enter என்ற வரி அருகே உள்ள செக் பாக்ஸைக் காணவும். என்டர் அழுத்திய பிறகு கர்சர் எங்கும் செல்லக் கூடாது எனில், இதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம். 
4. என்டர் அழுத்திய பின்னர், கர்சர் எங்கேனும் செல்ல வேண்டும் என எண்ணினால், டிக் அடையாளம் ஏற்படுத்திப் பின்னர் அருகே உள்ள கீழ்விரி மெனுவிற்கான அம்புக் குறியினை அழுத்தி, அதில் உள்ள கீழே, மேலே, வலது மற்றும் இடது (Down, Up, Right or Left) என உள்ளதில் எந்தப் பக்கம் கர்சர் செல்ல வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் அமைத்தபடி, டேட்டா என்டர் செய்திடுகையில், என்டர் கீ அழுத்தும்போது, கர்சர் நகர்த்தப்படும். 
Read More

October 29, 2011

எதிர்கால விமானம் எப்படி இருக்கும் இதோ படங்கள்
by admin - 0

 உலகின் முதல் சூப்பர்சோனிக் பயணிகள் ஜெட் ZEHST வெறும்
 மூன்றுமற்றும் ஒரு அரை மணி நேரம் லண்டனில் இருந்து சிட்னி விமான உறுதி,


மேகத்தின் மேல் மிதக்கும் பயணிகள் புதிய போக்குவரத்து 



முன்னதாக இந்த ஆண்டு நாசாவின் அது எதிர்கால பயணிகள்விமானங்கள்
 சோதனை தொடங்கும் . , பயணிகள் அல்லது சரக்கு ஒன்று மற்றும் பேலோடின்
 50,000 முதல் 100,000 பவுண்டுகள் துக்கி செல்லும் ; சுமார் ஒலியின் வேகத்தை
 சதவீதம் 85 வரை பறக்கும்.
Read More

மீண்டும் ஒரு விஜய் படம். காமெடி, காதல், தங்கச்சி பாசம்
by admin - 0

நடிப்பு: விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி, சந்தானம்
இசை: விஜய் ஆன்டனி
ஒளிப்பதிவு: ப்ரியன்
கதை, திரைக்கதை, இயக்கம்: எம் ராஜா
தயாரிப்பு: ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்
மக்கள் தொடர்பு: ஜான்சன்

மீண்டும் ஒரு விஜய் படம். காமெடி, காதல், தங்கச்சி பாசம், அவ்வப்போது சென்டிமெண்ட், கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பஞ்ச் வசனங்கள், சுயபுராணம், லாஜிக்குக்கு சம்பந்தமே இல்லாத ஆக்ஷன் என பக்கா விஜய் படம்.

ஆனால் வேட்டைக்காரன், சுறா மாதிரி சோதிக்காமல் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்ததில், இயக்குநர் ஜெயம் ராஜா விஜய்யோடு சேர்ந்து ஜெயித்திருக்கிறார்!

கதை?

பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பதிசாமி எழுதி இயக்கிய ஆசாத் படத்தின் தழுவல் இந்தப் படம் (அதற்கும் முன்பு அமிதாப் நடித்த ஒரு இந்திப் படத்திலிருந்துதான் திருப்பதிசாமி உருவியிருந்தார்!).

ஒரு நிருபரின் கற்பனைப் பாத்திரம், தற்செயலாக உயிர்பெற்றால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்ய கேள்வியின் விளைவு, வேலாயுதம்!

ஜெனிலியா ஒரு சேனல் நிருபர். உயர்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்த முனைகிறார், தனது ஸ்டிங் ஆபரேஷன் மூலம். அமைச்சர் ஒருவர் தொடர்பான வெடிகுண்டு சதியை, அவரது தொடர்பு இருப்பது அறியாமல் நண்பர்களுடன் ஜெனிலியா ஆராய முனைய, அதில் நண்பர்கள் கொல்லப்படுகிறார்கள்.

கத்திக் குத்தோடு ஜெனிலியா தப்பிக்கிறார். அப்போது சென்னையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கப் போகும் அபாயம் அவருக்கு தெரிய வருகிறது, தன்னைத் தாக்கிய ரவுடிகள் மூலம்.

எதிர்பாராத விதமாக அந்த ரவுடிகள் ஒரு விபத்தில் எரிந்து போகின்றனர். அப்போதுதான் கற்பனையாக வேலாயுதம் என்ற பாத்திரத்தை அவர் உருவாக்குகிறார். இந்த ரவுடிகளைக் களையெடுத்தது வேலாயுதம்தான் என்று பரப்பிவிடுகிறார் ஜெனிலியா.

ஒவ்வொரு விபத்து நேரும் முன்னும் மக்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். காரணம் வேலாயுதம் என்று ஜெனிலியா பரப்ப ஆரம்பிக்க, வேலாயுதம் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தும் அளவுக்குப் போகிறார்கள் மக்கள்.

யதேச்சையாக நடக்கும் இந்த விஷயங்களின் போதெல்லாம், யதேச்சையாகவே சம்பந்தப்படுகிறார் ஒருவர். அவர் பெயரும் வேலாயுதம்தான்... நம்ம ஹீரோ பால்கார விஜய். சிட்பண்டில் போட்ட பணத்தை தங்கை திருமணத்துக்காக எடுக்க கிராமத்திலிருந்து சென்னை வரும் அவர், தனக்கே தெரியாமல் ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பிலிருந்து மக்களைக் காக்கிறார்.

சூழ்நிலை, அவரையும் ஜெனிலியாவையும் சந்திக்க வைக்கிறது. தான்தான் மக்களைக் காப்பாற்றினோம் என்பதே தெரியாமல், யாருங்க அந்த வேலாயுதம் என ஒருமுறை ஜெனிலியாவை இவர் கேட்க, 'அது நீங்கதான்' என ஜெனிலியா கூற, ஷாக் அடித்து நிற்கிறார் விஜய். ஆனாலும் இதெல்லாம் வேலைக்காகாது ஆளை விடுங்கள் என கிராமத்துக்கு போகும் விஜய், பின்னர் பொங்கியெழுந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாகிறார்.

அது எப்படி, ஏன் என்பது நீங்கள் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான முடிச்சுகள்!

ஜனரஞ்சகப் படங்கள் என்றால் நம்ப முடியாத காட்சிகள் இருந்தே தீர வேண்டும் என்பது நமது ஹீரோக்களும் இயக்குநர்களும் மனதில் வரித்துக் கொண்ட விஷயங்கள். அதற்கு சரியான உதாரணம் வேலாயுதம் படத்தின் இறுதியில் விஜய் ரயிலை நிறுத்தும் அந்தக் காட்சி. சான்ஸே இல்லை... இது அசல் ஆந்திரத்து இறக்குமதி என கட்டியம் கூற இது ஒன்று போதும்!

வழக்கமான மசாலா படம்தான் என்றாலும், காட்சிகளில் அதை சுவாரஸ்யப்படுத்தியிருப்பதில் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் ராஜா, தனித்துத் தெரிகிறார்.

சாதாரணமாகவே காமெடியில் புகுந்து விளையாடுவார் விஜய். உடன் சந்தானம் வேறு சேர்ந்தால் கேட்கவா வேண்டும். ரகளை பண்ணுகிறார்கள்.

அதுவும் உடைமாற்றும் அறையில் ஜெனிலியாவை 'முன்னே' பார்த்துவிடும் விஜய், சண்டைக் கோழியாக சிலுப்பிக் கொண்டு நிற்கும் ஜெனிலியாவிடம் வேணும்னா நீயும் பார்த்துக்க என தன் முன்பக்கத்தைக் காட்ட, அதற்கு சந்தானம் அடிக்கும் கமெண்ட் அக்மார்க் கவுண்டர் குறும்பு. அரங்கம் சிரிப்பில் வெடிக்கிறது!

தங்கையோடு அவர் பாசமலர் படம் பார்க்கும் காட்சி, இன்னொரு டைமிங் காமெடி வெடி!

முதல்பாதி எப்படி போகிறதென்றே தெரியவில்லை. அத்தனை பரபர வேகம். கலகலப்பான காட்சிகள். ஆனால் பின் பாதியில் ஏக ஆக்ஷன், தேவையற்ற பஞ்ச்கள், அல்லக்கைகள் உசுப்பேத்தும் காட்சிகள் என ஸ்பீட் பிரேக்கர்கள் அதிகம்.

அதிலும் கடைசி காட்சியில் விஜய் வெற்றுடம்போடு வந்து போகிறார். இந்தக் காட்சியின் அவசியத்தை இயக்குநர்தான் விளக்க வேண்டும். அரசியல் ஆசை உள்ளுக்குள் இருந்தாலும், இப்போதைக்கு வெளியில் காட்டினால் ஆபத்து என விஜய்யின் உள்மனது சொல்வது, வசனங்களில் பிரதிபலிக்கிறது!

விஜய்யின் நடிப்பில் வழக்கத்தை விட கூடுதல் துள்ளல். வசன உச்சரிப்பு கூட இதில் வித்தியாசமாக உள்ளது. வரவேற்கத் தக்க மாறுதல்தான்!

இன்னும் ஓரிரு காட்சிகள் அதிகமாக வந்திருந்தால் கூட, ஹீரோ சந்தானமாப்பா என்று கேட்டிருப்பார்கள். மனிதர் அப்படி போட்டுத் தாக்குகிறார்.

ஒரு டெலிவிஷன் பத்திரிகையாளராக ஜெனிலியா ஓகேதான். அவரும் விஜய்யும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் அத்தனை இயல்பு.

ஹன்ஸிகா மோத்வானிக்கு கொடுத்த வேலை ரசிகர்களுக்கு மயக்க மருந்து அடிப்பது. அதற்கு தனது உடல் அழகை கச்சிதமாக உபயோகித்திருக்கிறார்.

தங்கை சரண்யா மோகன் வரும் காட்சிகள் திருப்பாச்சியை நினைவுபடுத்துகின்றன. எம்எஸ் பாஸ்கர், பரோட்டா சூரி, பாண்டி என அனைவரும் தங்கள் பங்கை சரியாகவே செய்துள்ளனர்.

ப்ரியனின் ஒளிப்பதிவும், விஜய் ஆன்டனியின் இசையும் இயக்குநருக்கு மிகவும் கை கொடுத்துள்ளன. ஆனால் அந்த சொன்னா புரியாது பாடலை மட்டும் வேறு பாடகரை பாட வைத்திருக்கலாம்.

கடைசி பத்து நிமிடம் வழக்கம் போல விஜய் பேசிக் கொண்டே போகிறார். இந்த மாதிரி காட்சிகள்தான் அவர் மீது மற்ற ரசிகர்களுக்கு கடுப்பை வரவழைப்பவை.

மற்றபடி இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளைக் குறைத்து, இரண்டு பாடல்களை வெட்டி, நறுக்குத் தெரித்த மாதிரி வசனங்களை வைத்திருந்தால், விஜய் படங்களில் வித்தியாசமானதாக வந்திருக்கும் வேலாயுதம்.

ஆனாலும் எடுத்த வரை, நல்ல பொழுதுபோக்குப் படம் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார்கள் விஜய்யும் ராஜாவும்!
Read More

எம்ஜிஆர் - ரஜினி பாணியில் 'வேலாயுதம்'! - விஜய்
by admin - 0

எம்ஜிஆர், ரஜினியின் படங்களின் பார்முலாதான் சினிமாவில் எவர்கிரீன் வெற்றி பார்முலா என்றார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதால், அதைப் பகிர்ந்து கொள்ள பிரஸ் மீட் வைத்திருந்தார் நடிகர் விஜய்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நான் நடிச்ச 52 படங்களை விட 'வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிரார்கள். கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.

ஜெயம் ரவியும் கதை விவாதத்துக்கு வந்தார்...

ஜெயம்ரவிக்கும் நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டும். அவரும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார். ராஜாவின் தந்தை எடிட்டர் மோகனும் பல ஆலோசனைகள் சொன்னார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும் ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்து கொடுத்தார். விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம். படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் கூட்டுவதாக செய்திகள் வருகின்றன. இது படம் ஹிட்டானதற்கு அறிகுறி," என்றார் விஜய்.

அப்போது ஒரு நிருபர், "உங்கள் படங்களில் எம்ஜிஆர் பாணியில் வந்தது இந்தப் படம்தான் என்பது சரியா?" என்றார்.

உடனே விஜய், "எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவார்கள். அது தவறு அல்ல. எம்.ஜி.ஆர். பாணியில் படம் பண்ணுவது சாதாரணம் அல்ல. அது போல நடிக்க நல்ல கதை அமையணும். அது 'வேலாயுதம்' படத்தில் இருக்கு," என்றார்.

தொடர்ந்து, " ஆரம்பத்தில் நீங்கள் ரஜினி பாணியில் நடிப்பதாகச் சொன்னீர்கள். இப்போது எம்ஜிஆர் பாணி என்கிறீர்கள்," என்றனர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த விஜய், "எம்ஜிஆர், ரஜினி படங்களின் பார்முலா என்றுமே எவர்கிரீன். நான் ஆரம்பத்திலிருந்தே இதை சரியான வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்தியுள்ளேன். மறுக்கவில்லை," என்றார்.

நெட்டில் விடாதீங்க...

மேலும் அவர் கூறுகையில், "கிளைமாக்சில் கூட்டத்தினர் பிடித்து வரும் கொடிகள் எனது மக்கள் இயக்க கொடி அல்ல.

இந்தப் படம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை மகிழ்வித்துள்ளது. நான் இப்போதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வருகிறேன். ஹேப்பியா சார் என்று கேட்டேன். அவரோ, "கவலையே இல்ல.. படம் சூப்பர் ஹிட். நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார். இதைவிட வேறு என்ன வேண்டும்.

இண்டர்நெட்டில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது. அதை தடுக்க எனது இண்டர்நெட் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர். புதுப்படங்களை இது போல் இண்டர்நெட்டில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. 'காவலன்' படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். யோஹன் அடுத்த வருடம் ஆரம்பமாகும். சீமான் படம் குறித்து பின்னர் சொல்கிறேன்," என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ராஜா கூறுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம் வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி என்றார்.


Read More

இளம் பெண் அமெரிக்க சுற்றுலா பெண் பயணியினால்காப்பாற்றப்பட்டார் photo in
by admin - 0


மேற்கு ஏரி, ஹாங்க்ஜோவ் இளம் பெண் அமெரிக்க சுற்றுலா பெண் பயணியினால் காப்பாற்றப்பட்டார்.வங்கியில் இருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் இருந்து ஏரியில் விழுந்த இளம் பெண்ணின் முடி மட்டுமே தெரிந்த்தது இதை அவதானித்த அமெரிக்கன் சுற்றுலா   பெண் உடனே ஏரியில் பாய்ந்து அப்பெண்ணை காப்பாற்றினார் 


Read More

தாய்ப்பாசத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதற்கு இந்தப் படங்களே சாட்சி.
by admin - 0







குழி ஒன்றில் விழுந்த சிங்கக் குட்டியை மீட்கப் போராடும் தாய்ச் சிங்கத்தையே இங்கே காண்கிறீர்கள்.

கல் மனதையும் ஒரு கணம் கலங்க வைக்கும் இந்த புகைப்படங்களை Jean-Francois Largot என்ற வன உயிரியல் புகைப்பிடிப்பாளரே எடுத்துள்ளார்.

முதலில் குழியில் விழுந்த குட்டியைப் பார்த்து கண்கலங்குகிறது தாய்ச் சிங்கம். பின்னர் உதவிக்கு ஏனைய சிங்கங்களையும் அழைக்கிறது.

நான்கு சிங்கங்கள் குறித்த இடத்துக்கு வந்து விடுகின்றன.

அதன் பின்னர் தாய்ச் சிங்கம் திட்டமிட்டு மெதுவாக குழியில் இறங்குகிறது. குழியில் இறங்கி குட்டியைக் கவ்விக் கொண்டு கரை ஏறுகின்றது.

உலகில் தாய்ப்பாசத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதற்கு இந்தப் படங்களே சாட்சி.

அம்மா என்றால் அம்மா தான்...
Read More