Latest News

October 30, 2011

ஒரு மாதத்திற்குள் எனது மகனை மீண்டுத் தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்!
by admin - 0


தனது பிள்ளை கடந்த 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 27 ஆம் திகதி வீட்டில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் சென்றனர். ஆனால் இதுவரை எனது மகனைப் பற்றிய விபரம் தெரியாமல் இருக்கிறது.
தினக்குரல் பத்திரிகையில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் திகதி கட்டுரையில்  வந்த புகைப்படம் ஒன்றில் இளைஞர்கள் மத்தியில் ரன்னிங் சோட்சுடன் எனது மகன் உயிருடன் இருக்கின்றதைக் கண்டேன்.
எனது மகனை மீண்டுத்தருமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருமான ஈ. ஆனந்தராஜாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் தாய் ஒருவர்.
ஒரு மாதத்திற்குள் எனது மகனை மீண்டுத் தராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என கண்ணீர் மல்க கதறியழுதார் ஒரு தமிழ் தாய்.
இவரின் இந்த உருக்கமான வேண்டுகோளைக் கேட்டுக் கொண்டிருந்து மனித நேயமிக்கவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் சொரிந்தது. இந்த சம்பவமானது இன்று சனிக்கிழமை காலை மனித உரிமைகள் அதிகாரிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்குமிடையில் யாழ்.கிறின் கிலாஸ் விடுதியில் நடைபெற்றுள்ளது.
இதேவேளை தங்களது பிள்ளைகளை இராணுவத்தினர் கடந்த 1997 ஆம் ஆண்டு பிடித்துச் சென்றனர் இதுவரை கண்ணில் கூடக் காட்டவிலை இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறியத்தாருங்கள் என தாய்குலம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை ஒப்படைத்தனர்.


யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறு காணாமல் போகும் சம்பவர்கள் நடைபெறாது இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ஆறுதல் படுத்தினார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஈ. ஆனந்தராஜா.
« PREV
NEXT »

No comments