Latest News

November 27, 2010

வரும் 2012ல் விண்டோஸ் 8
by admin - 0

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது மக்களிடையே பரவலாகி, அதனுடன் பழகி இயங்கத் தொடங்கி விட்டோம். இந்நிலையில் விண்டோஸ் 8 என்னும் அடுத்த இயக்கத் தொகுப்பு குறித்த குறிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த தொகுப்பு வெளியிடப்படலாம் என உத்தேசமாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.
இதுவரை வெளியான இயக்கத் தொகுப்புகளில், மிக வேகமாக விற்பனையாகும் தொகுப்பு என்ற பெயரைப் பெற்ற விண்டோஸ் 7 தொகுப்பு வெளியாகி ஓராண்டு ஆனதற்கான வெற்றி குறித்து தகவல் தருகையில், விண்டோஸ் 8 குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. http://www.winrumors.com/microsoft-windows-8-about-two-years-away/ என்ற தளத்தில் இந்த செய்தி காணப்பட்டது. ஆனால் சில நாட்களில் இந்த செய்தி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மேற்கொண்டு எந்த செய்தியையும் மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை.
தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், 128 பிட் அமைப்பில் இயங்கும் சிஸ்டம் ஒன்றைத் தயாரித்து வருவதாகப் பல நாட்களுக்கு முன்பே பேசப்பட்டது. அநேகமாக, இதுவே விண்டோஸ் 8 ஆக இருக்கலாம். இதற்கிடையே ஆப்பிள் நிறுவனம் தன் ஓ.எஸ். எக்ஸ் மற்றும் மொபைல் ஐ.ஓ.எஸ். ஆகியவற்றை இணைத்து ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஒன்றைத் தர இருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. இதனைக் கேள்விப்பட்ட மைக்ரோசாப்ட், நிச்சயமாய் அதனை உணர்ந்து, வரப்போகும் தன் அடுத்த சிஸ்டத்தையும் அதற்கேற்ற வகையில் தயாரிக்க விரும்பலாம்.
Read More

இ-மெயில் சேவையைத் தொடங்கியது "பேஸ்புக்'
by admin - 0

சான்பிரான்சிஸ்கோ : சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாகத் திகழும் "பேஸ்புக்' நிறுவனம், புதிதாக இ-மெயில் சேவையை தொடங்கியுள்ளது. "பேஸ்புக்' சமூக வலைத்தளம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வலைத்தளத்தில், தற்போது, 50 கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், "பேஸ்புக்' நிறுவனம் புதிதாக "இ-மெயில்' சேவையிலும் நுழைந்துள்ளது. " மெயில் @பேஸ்புக்.காம்' என்ற முகவரியில் இ-மெயில் சேவையை, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகேர்பெர்க் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பேஸ்புக் நிறுவனம் தற்போது, இ-மெயில் சேவையிலும் நுழைந்துள்ளது. பேஸ்புக் வலைதளத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற இ-மெயில் தளங்களில் உள்ள பல்வேறு வசதிகளும் இதில் கிடைக்கும். "ஸ்பாம்' மெயில்கள் இதில் வடிகட்டி அனுப்பப்படுவது இதில் சிறப்பம்சம் ஆகும். இணையதளம் பயன்படுத்திவரும், இளைய தலைமுறையினரிடையே இது மிகுந்த வரவேற்பை பெரும். பேஸ்புக்கின் இ-மெயில் சேவையால், ஜிமெயில் மற்றும் யாகூ மெயில் சேவைகளுக்கும் பாதிப்பு வரும் என்பதை என்னால், ஏற்க முடியாது. அவற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ, யாருக்கும் போட்டியாகவோ இதனை தொடங்கவில்லை. ஒருவேளை, ஜிமெயில், யாகூ மெயிலில் உள்ள எனது இ-மெயில் அக்கவுண்டைத்தான் நான் முடித்துக்கொள்ள முடியும். இவ்வாறு மார்க் ஜுகேர்பெர்க் கூறினார்.

Read More

இந்த வார டவுண்லோட் - பயர்பாக்ஸ் பிரவுசரில் கால்குலேட்டர்
by admin - 0

நமக்கு கால்குலேட்டர் எப்போதெல்லாம் தேவைப் படும் என்று முன்கூட்டியே கணக்கிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் தேவைப் படலாம். இன்டர்நெட்டில் உலா வருகையில், இது தேவைப்பட்டால், பிரவுசரை மூடி, பின்னர், புரோகிராம்ஸ் சென்று, கால்குலேட்டரை இயக்க நேரம் வீணாகிவிடும். இதற்கெனவே, பயர்பாக்ஸ் பிரவுசரில், அதன் டாஸ்க் பாரில் வைத்து இயக்கும் வகையில் ஒரு கால்குலேட்டர் தரப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சயின்டிபிக் கால்குலேட்டராக உள்ளது என்றால், அனைவருக்கும், குறிப்பாக மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கும் நன்மைதானே. இந்த பயர்பாக்ஸ் டாஸ்க்பார் சயின்டிபிக் கால்குலேட்டர் ஓர் ஆட் ஆன் தொகுப்பாக, புரோகிராமாகக் கிடைக்கிறது. இதனைப் பெற https://addons.mozilla.org/enUS/firefox/addon/6521/ என்ற முகவரிக்குச் செல்லவும். அடுத்து, அங்குள்ள “Add to Firefox” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
உடனே “Software Installation” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் கிடைக்கும் “Install Now” பட்டனில் கிளிக் செய்திடவும். டாஸ்க் பார் சயின்டிபிக் கால்குலேட்டருக்கான புரோகிராம், உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் பதியப்படும். அடுத்து “Restart Firefox” பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் நீங்கள் மேற்கொள்ள இருப்பதைப் புரிந்து கொண்டு, விண்டோஸ், டேப்ஸ், பிரவுசர் ஆகிய அனைத்தையும் புதிய இணைப்பு களுடன் தொடங்கும். பிரவுசர் மீண்டும் கிடைத்தவுடன், கால்குலேட்டர் ஐகானில் கிளிக் செய்து, டெக்ஸ்ட் ஏரியாவில் நீங்கள் என்ன கணக்குகளைப் போட விரும்புகிறீர்களோ, அவற்றை என்டர் செய்திடவும். இந்த கால்குலேட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, உங்கள் எண் அடிப்படையை மாற்றிக் கொள்ளலாம்.
Read More

November 21, 2010

ஆண்களுக்கு என்ன பிரச்னை? இன்று சர்வதேச ஆண்கள் தினம் 18 nov
by admin - 0

ஆண்கள்...20 -30-40: இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை...


முப்பது வயதில் - பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு...


நாற்பது வயதில் - "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி... பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் தூக்கி வீசி... கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம்...


இவை தான் பெரும்பாலும், ஆண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் விதம். திருமணத்தின் போதும் மட்டும் ஆண்கள், தங்களை பெண்கள் கவர வேண்டும் என்பதற்காக அழகுபடுத்திக் கொள்வதில் மெனக்கெடுகின்றனர். திருமணத்திற்கு பின், தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, குடும்ப பாரத்தை சுமக்க வருவாயை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சிலர் மன உளைச்சலில் சிக்கி மது, போதை, புகைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதித்து, விரைவில் முகப் பொலிவை இழக்கின்றனர்.


வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை இப்படி வீணாக்குவதை தவிர்த்து, அழகுபடுத்தி, கம்பீரத்தை பொலிவாக்கினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல், எண்ணங்களில் மாறுதல் ஏற்பட்டு, வெற்றி கிட்டும். ஆண்களில் விதிவிலக்காக சிலர் மட்டும் சிகை அலங்காரத்தை மட்டும் ஆண்கள் பியூட்டி பார்லரில் செய்து கொள்கின்றனர். பெண்களுக்கு தனியாக பியூட்டி பார்லர்கள் அதிகளவில் உள்ளதைப்போல், ஆண்களுக்கு என தனியாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே உள்ளன.


மதுரை கே.கே.நகர் "ராயல் டச்' ஆண்கள் பியூட்டி பார்லர் உரிமையாளர் ராஜன் கூறுகிறார்: ஆண்களின் கம்பீரத்திற்கு பொலிவு தேவை. தற்போது கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, 60 வயதிலும் அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாதம் ஒருமுறை பியூட்டி பார்லருக்கு சென்று அழகுபடுத்தினால் புத்துணர்ச்சி உறுதி. முடிகொட்டுவதை தடுக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர்வேத டானிக், "பேசியல்' செய்ய பழம், வேர்கள் கலந்த மூலிகைகளை பயன்படுத்துவது நல்லது என்றார்.


என் சோகக் கதையை கேளு தாய்குலமே! பறப்பன, ஊர்வன, நடப்பன என எல்லா உயிர்களுக்கும்(?) ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் காலம் இது. அந்த வரிசையில் இன்று ஆண்கள் தினம். எல்லா விஷயத்திலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்து நிலவும் இக்காலக்கட்டத்தில், போலீசில் அதிகம் சிக்குபவர்களும் "பாவப்பட்ட' ஆண்கள்தான். மதுரை நகரின் மூன்று மகளிர் ஸ்டேஷன்களில் மாதம் 150 புகார்கள் ஆண்கள் மீது கொடுக்கப்படுகின்றன. விசாரணைக்குபின் 15 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக, பெண்கள் சிந்தும் கண்ணீரை நம்பி, சரியாக விசாரிக்காமல் ஆண்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்கிறது.


"இது உண்மைதானா' என மதுரை வரதட்சணை ஒழிப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் ராஜாமணி கூறியதாவது : இருதரப்பையும் அழைத்து, எங்கள் முன் பேச செய்வோம். அப்போது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் சொல்லும்போது, யார் மீது தவறு என்பது தெளிவாகிவிடும். குடும்ப பிரச்னையை தீர்க்கவே எங்களை தேடி வருவதால், முடிந்தளவிற்கு "கவுன்சிலிங்' செய்து சமரசம் செய்து அனுப்பி வைக்கிறோம். ஆண்மை குறைவு, கள்ளத்தொடர்பு, வரதட்சணை போன்ற பிரச்னைகளில் சமரசம் ஆகமாட்டார்கள். இதை தொடர்ந்தே ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறோம். பெரும்பாலும் ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தான் புகார்கள் வருகின்றன. வரதட்சணை கேட்டு மிரட்டும் புகார்கள் குறைவு என்றார்.


ஆண்களுக்கு சிறை: பெண்களின் தந்திரம்: ஆண்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்கீழ்தான் அதிகளவில் பொய்யாக வழக்குகள் புனையப்படுகின்றன. உண்மையில் பாதிக்கப்படுவோர் ஒருபுறமிருக்க, கணவன், மனைவிக்கிடையே உள்ள சிறிய பிரச்னைக்கும் இச்சட்டத்தை சில பெண்கள் பயன்படுத்துகின்றனர். இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் பி.தனசேகரன் கூறியது: சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னையில் கணவன் மீதும், உறவினர் மீதும் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு சமுதாயப் பிரச்னைக்கு வழிஏற்படுத்துகிறது. தாங்கள் நினைத்தால் கணவரை சிறைவைக்க முடியும் என கருதும் வலிமையான பின்னணியுள்ள பெண்கள் இதுபோன்று செயல்படுவதால், ஆண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வரதட்சணை வழக்குகளில் உறவினர்களை தேவையின்றி சேர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரம் தற்போது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.


அக்கறை இல்லையா ஆண்களுக்கு? பல்வேறு அம்சங்களுக்காக தேசிய, சர்வதேச தினங்கள் கடைபிடிக்கும் நிலையில் ஆண்களுக்காக தினம் கொண்டாட அவசியம் ஏன்? ஆண்களுக்கு என்ன பிரச்னை? தற்போது ஆண்கள் தங்களது உரிமை பற்றி பேசுவதற்கு தயக்கம் உள்ளது. ஆண்கள் உரிமைக்காக அகில இந்திய ஆண்கள் நல சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உறுப்பினரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரத்து 200 பேர்.


இந்த அமைப்பை சேர்ந்த சுரேஷ்ராம் கூறியதாவது: ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைதுகள் தேவையில்லாதவை என தேசிய போலீஸ் கமிஷன் கருத்து தெரிவிக்கிறது. கைதாகும் நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டும் தண்டனைக்குள்ளாகின்றனர். பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. வரிசெலுத்துவோரில் 82 சதவீதம் பேர் ஆண்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மதுவிற்பனையால் கிடைக்கிறது. குடிபழக்கத்தால் ஆண்கள் இறப்பு அதிகம். ஆண்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தினால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மது விற்பதை அரசு நிறுத்துமா? விலங்குகளுக்கு கூட தனி வாரியம் அமைக்கும் அரசு, ஆண்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களது பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும், என்றார்.


அய்யோ...ஆண்கள்! தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,


* கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.


* 2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.


* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.


ஆண்கள் தற்கொலை அதிகம் ஏன்? இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்கள் 57 ஆயிரம் பேரும், பெண்கள் 30 ஆயிரம் பேரும் தங்கள் முடிவை தேடிக் கொள்கின்றனர்.


மதுரை மனநல நிபுணர் டாக்டர் சி.ராமசுப்ரமணியம் இதுப்பற்றி கூறியதாவது: ஆண்களே வெளியில் அதிகம் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.இதனால் மனச்சோர்வுக்கு ஆளாகி, தற்கொலை செய்கின்றனர். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளும் ஆண்களிடமே அதிகம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத, நிறைவேற்ற இயலாதபோது தற்கொலை நிகழும் வாய்ப்பு அதிகம். எத்தனை தான் ஆண், பெண் சமம் என்று கூறி வந்தாலும், அது இன்னமும் வரவில்லை. அது வரும்வரை இந்நிலை இருக்கவே செய்யும். பெண்களைப் போல ஆண்கள் தங்கள் உடல் நலம், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மது, போதை பழக்கங்களுக்கு ஆட்படுவதால், அதுவே பிரச்னைகளையும் ஏற்படுத்தி விடுகிறது. தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவதும் தற்கொலைக்கு முக்கிய காரணம். இவ்வாறு கூறினார்.

நன்றி மதுரை நண்பா
Read More

மானாவாரி விவசாயத்தில் நுண்ணுயிர் உரங்கள்
by admin - 0

ரைசோபியம் - குடும்பத்தைச் சார்ந்த பயிர்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி பயிர்களின் வேர்களில் வேர்முடிச்சுகளை உண்டாக்குகின்றன. இதன்மூலம் பயிர்களும் பாக்டீரியாக்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ரைசோபியம் பயிர்களுக்கு தேவையான தழைச்சத்தை காற்றிலிருந்து கிரகித்துக் கொடுத்து பயிர்களில் இருக்கும் சத்துக்களை எடுத்துக்கொண்டு வாழ்கிறது. வேர்முடிச்சுக்களை உண்டாக்கும் ரைசோபியம் அனைத்தும் ஒரே வகையைச் சார்ந்தவை அல்ல. ஒரு குறிப்பிட்ட சில பயறு வகைச் செடிகளில்தான் வேர் முடிச்சை உண்டுபண்ணக்கூடியது. உதாரணம் பச்சைப்பயறு, உளுந்து செடிகளில் வேர்முடிச்சுகளை உண்டாக்கும் ரைசோபியம் இனம் அதே தாவர குடும்பத்தைச் சேர்ந்த நிலக்கடலை செடிகளில் கூட்டு சேர்ந்திருப்பதில்லை. அத்தகைய குறிப்பறிதல் திறனின் அடிப்படையில் ரைசோபியத்தில் 7 வகைகள் உள்ளன. எந்தெந்த ரைசோபியம் இனம் வேர்முடிச்சு உண்டுபண்ணக்கூடியதோ அவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.


அசோஸ்பைரில்லம்: அனைத்து வேளாண் பயிர்களுக்கும் இடலாம் என சிபாரிசு செய்யப் பட்டிருந்தாலும் தானிய பயிர்களில் அசோஸ் பைரில்லத்தின் செயல்பாடு மிக நன்றாக உள்ளது. அசோஸ் பைரில்லம் தழைச்சத்தை கிரகித்து பயிர்களுக்கு கொடுப்பதுடன் பயிர் வளர்ச்சிக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்து பயிர்களின் வேர்களும், தண்டுகளும், இலைகளும் வேகமாக வளர உதவிபுரிகிறது. அசோஸ்பைரில்லம் மண்ணில் அங்கக பொருட்கள் அதிக அளவு இல்லாதபோதிலும் தழைச்சத்தை நிலைப்படுத்தி நன்கு செயல்பட வாய்ப்பு உள்ளது. பாஸ்போ பாக்டீரியா - இடுவதால் பயிரின் வேர்கள் செழித்து வளருகின்றன. திசுக்கள் வளம்பெறுகின்றன. பாறை பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்தினை பயிர்கள் எளிதில் ஈர்க்கும் வகையில் மாற்றித்திரும் திறன் கொண்டது. ரசாயன உரத்தேவையில் மணிச்சத்தின் அளவில் 25 சதம் குறைத்துக்கொள்ளலாம்.


வேர் உட்பூசணங்கள்: வி.ஏ.எம். மண்ணிலுள்ள மணிச்சத்தினை பயிர்களுக்கு எடுத்துக்கொடுப்பதுடன் கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புசத்து ஆகியவற்றை மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது. பூசண வேர்த்தூவிகள் மண்ணில் வெகு தூரத்திற்கு சுலபமாக பரவிவிடுகிறது. ஆகவே வேர்கள் பரவமுடியாத தூரத்தில் உள்ள மணிச்சத்தை சல்லடை போட்டு தேடுவதுபோல் தேடிப்பிடித்து உறிஞ்சி, பயிர்களுக்கு கொடுக்கிறது. வேர் உட்பூசணம் மண்ணிலிருக்கும் மணிச்சத்தை கரைக்க ஏதுவான அமிலம் எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆகவே அதனுடைய செயல் சுலபமாக கிடைக்கக்கூடிய மணிச்சத்தை சல்லடை போட்டு தேடுவதுபோல் தேடிப்பிடித்து உறிஞ்சி பயிர்களுக்கு கொடுக்கிறது. வேர் உட்பூசணங்கள் வேரைத் தாக்கும் பூஞ்சாண நோய்களிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கிறது. நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்த 2 முறைகள் உள்ளன. 1. விதைநேர்த்தி முறை, 2. நாற்றுக்களை நனைத்தல்.


1. விதைநேர்த்தி: ஒரு பாக்கெட் 200 கிராம் உரத்தை 200 மி.லி. ஆறிய கஞ்சியுடன் கலந்து ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் நன்கு கிளறிவிட்டு, 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, பின்னர் விதைக்கலாம். பயிருக்கு ஏற்ப அசோஸ்பைரில்லம் (அ) ரைசோபியம் நுண்ணுயிர்களை பாஸ்போபாக்டீரியாவுடன் கலந்தே இடுவது நல்லது.


2. நாற்றுக்களை நனைத்தல்: 2 பாக்கெட் நுண்ணுயிர் உரத்தை15 லிட்டர் நீரில் கலந்து நாற்றின் வேர்ப்பகுதியை கலவையில் நன்றாக நனைத்து நடவு செய்யலாம். நாற்றுக்களை நனைக்கும்போதும் தழைச்சத்துக்கான உயிர் உரமும் மணிச்சத்துக்கான உயிர் உரமும் கலந்தே உபயோகிக்கலாம்

Read More

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 ஒரு கோடி டவுண்லோட்
by admin - 0

வெளியிடப்பட்டு ஆறு வாரங்களில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 சோதனைத் தொகுப்பு, ஒரு கோடி பேரால் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப் படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், பிரவுசர்களில் உள்ள 12 அம்சங்களை மட்டுமே பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், மைக்ரோசாப்ட் தன் பிரவுசரின் புதிய பதிப்பில், அதிகக் குழப்பமில்லாத பயனாளர் முகப்பினைத் தந்துள்ளது. அத்துடன் விண்டோஸ் 7 சிஸ்டத்தின் அடிப்படையில், இணைய தளங்களில், அவற்றின் பக்கங்களில் உள்ள தகவல்கள் முதன்மையாகத் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளன.
இதே போல, டாஸ்க்பாரில் தளங்களை பின் செய்திடும் வசதி, டேப் ஒன்றினைத் தனியே பிரிக்கும் வசதி, இரண்டு தளங்களை, ஒரேநேரத்தில் அடுத்தடுத்து வைத்துக் காணும் வசதியும் தரப்பட்டுள்ளன. இந்த சோதனைத் தொகுப்பிற்கு பல்லாயிரக்கணக்கில் பின்னூட்டுகளும், சோதனைத் தளங்களில் இருந்து முடிவுகளும் கிடைத்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், புதிய பிரவுசரைப் பலராலும் விரும்பப்படும் பிரவுசராகத் தரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ல் வெளியான பின் இரண்டு நாட்களில் 20 லட்சம் பேரால் டவுண்லோட் செய்யப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இதனை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள் கீழ்க்காணும் முகவரிக்குச் செல்லவும்.
http://www.beautyoftheweb.co.uk/
Read More

November 16, 2010

அவதானமாக இருக்கவும் எதிரி நெருங்குகிறார் -புதிய வைரஸ் எச்சரிக்கை
by admin - 0

அவதானமாக இருக்கவும் எதிரி நெருங்குகிறார்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக்
(Zero Day Attack) ஆக இருக்கும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர் இது பற்றிக் கூறுகையில், இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார். தாக்குதலுக்குக் குறி வைத்துள்ள நிறுவனம் அல்லது குழு உறுப்பினர் ஒருவருக்கு, இமெயில் ஒன்றை அனுப்பலாம். அதில் அந்நிறுவனம் அல்லது குழுவின் இணையதளம் போலவே தோற்றம் அளிக்கும், தளம் ஒன்றிற்கான லிங்க் தரப்பட்டிருக்கும். இந்த லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் காட்டப்படும். பின்னணியில், மால்வேர் அல்லது வைரஸ், மேலே தரப்பட்டுள்ள பிழையான இடத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முடியும். பின்னர், அந்த இணைய தளத்தில் எந்த பைலையும் அப்லோட் செய்திட முடியும். இந்த சிக்கல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மட்டுமின்றி பதிப்பு 8லும் உள்ளது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சோதனைப் பதிப்பு 9 ஐப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இமெயில்களை எச்.டி.எம்.எல். பார்மட்டில் படிக்காமல், வெறும் டெக்ஸ்ட் வடிவில் படித்தால், இதனைத் தவிர்க்கலாம்.

ஸீரோ டே / ஸீரோ அவர் அட்டாக் என்பது, ஒரு அப்ளிகேஷனை உருவாக்கியவர் களுக்கே, அந்த அட்டாக் எங்கு ஏற்படுகிறது என்ற விபரம் தெரியாமல் இருக்கும் நிலையாகும். பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, அவரால் எங்கு பிழை உள்ளது என அறிந்து, அதனைத் தீர்க்க இயலும். எனவே தாக்குதல் நடைபெறும் காலத்தில், அதனைத் தடுக்க இயலாநிலை இருக்கு2ம். இதனையே ஸீரோ டே அல்லது ஸீரோ அவர் அட்டாக் என்று கூறுகின்றனர்
Read More

November 13, 2010

பப்பாளி மாவுப்பூச்சி
by admin - 0

ஏன் கிளர்ச்சியானது?

  • A9 வீதி திறப்பு
  • அதிகப்படியான பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துதல்
  • பலவற்றில் உயிர் வாழுதல் மற்றும் அதிக வாழும் நிலையைக் கொண்டது
  • பலதரப்பட்ட பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல்
  • அதிக இனப்பெருக்கத்திறன் கொண்டது
  • மெழுகு போன்ற பாதுகாப்பான உறை இருப்பதால், பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் போது தடையாக உள்ளது
  • காலநிலை மாற்றம் - வெப்பநிலை மற்றும் கார்பன் - டை ஆக்ஸைடு மட்டங்கள் உயர்வதால்

கட்டுபடுத்துவதற்கான உத்திகள்:

  • ஒழுங்காக, சரியான நேரத்தில் கண்காணித்தல்
  • பூச்சி உருவாவதற்கு முன்பே கட்டுபடுத்த வேண்டும். பூச்சி உள்ள இடத்தில் மட்டும் அளிக்க வேண்டும்
  • அதிக அளவுடைய தெளிப்பான்களைக் கொண்டு தெளிக்க வேண்டும்
  • மேற்பரப்பில் பரவும் பொருளை சேர்க்க வேண்டும்
  • பைரிதராய்களை தவிர்க்க வேண்டும்
  • காக்டெய்லை தவிர்க்க வேண்டும்
  • கலவைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
  • இலைகள், பூக்கள், பழங்களின் அடிப்பரப்பில் தெளிக்க வேண்டும்
  • எறும்பு கட்டுப்பாடு
  • ஒன்றுபட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும்

மேலாண்மை

  • மாற்று களை ஒம்புயிரிகளை அகற்ற வேண்டும்
  • பயிரின் தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
  • பூச்சி நடமாட்டத்தை ஒழுங்கான இடைவெளியில் கண்காணிக்க வேண்டும்
  • ஆரம்ப நிலையிலேயே மேலாண்மை செய்ய வேண்டும்
  • ஒட்டுண்ணி மற்றும் வேட்டையாடும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். பல பொறி வண்டுகள் மற்றும் ஹைமானப்டிரா பூச்சியில் வரிசை குறைகள் வேட்டையாடும் அல்லது ஒட்டுண்ணியாக இதன்மேல் வளரும்.
  • லைக்னேட் வேட்டையாடும் பூச்சி : ஸ்பேல்ஜிஸ் எபியஸ் புழு மாவுப்பூச்சியின் பல நிலைகளை அதிவேகமாக உண்ணும். இந்த பூச்சிகள் காட்டு மல்பெர்ரி, மோரஸ் வகைகளில் அதிகம் காணப்படுகிறது. இதை சேகரித்து தேவைப்படும் இடங்களில் வெளியிடலாம்.
  • இயற்கை எதிரிகளின் நடமாட்டம் இருந்தால், கட்டுப்பாடு முறைகளை காலம் தள்ளி மேற்கொள்ளலாம்
  • தேவைப்படும் இடங்களில், தாவர பூச்சிக்கொல்லிகளை வேம்பிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் - வேப்ப எண்ணெய் 2% வேப்பங்கொட்டை சாறு 5 % மீன் எண்ணெய் சோப் 25 கி /லிட்டர் தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம்.
  • பூச்சித்தாக்குதலின் அதிகமாகும் போது, பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் தெளிக்கலாம்
  • ப்ரோபேனோ பாஸ் 50 இ.சி - 2 மி.லி /லிட்டர்
  • குளோர்பைரிபாஸ் 20 இ.சி - 2 மி.லி/ லிட்டர்
  • ப்யூப்ரோபெசின் 25 எஸ்.சி - 2 மி.லி/லிட்டர்
  • டைமெத்தூயேட் 30 இ.சி - -2 மி.லி/லிட்டர்
  • தையோமெத்தோக்ஸம் 25 - 0.6 கிராம் /லிட்டர்
  • இமிடாக்ளோபிரிட்ட 17.8 எஸ்.எல் - 0.6. மி.லி /லிட்டர்
  • ப்ரோபெனோபாஸ் (அ) டைமெத்தோயேட்டை, வேப்பஎண்ணெய் 20 மி.லி
  • (அ) நிம்பிஸிடின் 10000 பிபிஎம் 2 மி.லி /லிட்டர் கலந்து தெளிக்க வேண்டும்
  • 1 மி.லி டீபால் (அ) ஜேண்டோவிட் /லிட்டர் சேர்க்க வேண்டும்
  • பதினைந்து நாட்களுக்கு பிறகு, புழுக்கள் எதும் உருவாகியிருந்தால் இரண்டாவது தடவை தெளிக்க வேண்டும்

மாவுப்பூச்சி மற்றும் அதன் மேலாண்மை பப்பாளி
பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் வில்லியம்ஸ் மற்றும் கிரேனேரா டி வில்லியிங்க்
மாவுப்பூச்சியின் குடும்பம் -சூடோகாக்ஸிடே : சூப்பர் குடும்பம்
காக்ஸிடே, வகை - ஹெமிப்டிரா
பூச்சியின் தோற்றம்

  • சிறிய முதல் மிதமான அளவில் மஞ்சள் நிறத்தில் உள்ள பூசு்சிகளின் மீது மாவு அல்லது மெழுனு போன்ற முடி இருக்கும்
  • 2.2 மி.மி. நீளமும், 1.5 மி.மி அகலமும் உடையது
  • மாவு போன்று முடியிருப்பதால் இதன் உண்மையான நிறத்தை தெரிந்த கொள்வது கடினமாக உள்ளது
  • நீள் வட்டத்தில் அல்லது நீளவாக்கில் 17 சோடி பக்கவாட்டு இழைகள் மற்றும் இறுதியில் மெழுகு இழைகள், இருப்பதால் இது குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தது என்ற அறியலாம்

வாழ்க்கை சுழற்சி
படம் கருப்பை :

  • பெண் பூச்சியில் 4 நிலைகள் உள்ளன
  • முட்டை - புழு நிலை - புழு நிலை முதிர்பூசு்சி
  • ஆண் பூச்சியில் 6 நிலைகள் உள்ளன
  • முட்டை - புழு நிலை புழு நிலை முன்கூட்டுப்புழு நிலை கூட்டுப்புழு முதிர்ப்பூச்சி
  • முதல் வளர்நிலை புழுவை உளர்ப் புழு என்கிறோம்

இந்த நிலையில் நடமாட்டம் அதிகமாக இருக்கும். முட்டை பொரிந்தவுடன், ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து, உண்ண தொடங்கும். அதன் பிறகு எந்தவிதமான நடமாட்டமும் இருக்காது

  • முதிர்ந்த ஆண்பூச்சி தனிப்பட்ட தலை, மார்பு, வயிறு மற்றும் நடுமார்பில் ஒரு ஜோடி இழை போன்ற இறக்கைகளுடனும், இரண்டாவது ஜோடி ஈக்களின் குறுகிய இறக்கைகள் போன்று மாறியிருக்கும்
  • ஆண்பூச்சிகள் குறைந்த வாழ்நாள் உடையது. உணவு ஊட்டாது. இனப்பெருக்கம் மட்டும் செய்து பின் இறந்துவிடும்
OvisacEggCrawler

கருப்பைமுட்டைஊர்ப்புழு

Adult Female
முதிர் பெண்பூச்சி

Adult Maleமுதிர் ஆண்பூச்சி

அறிகுறிகள்

  • தாக்கப்பட்ட பகுதிகள் பசுங்சோகையாக மாறும். பின் பழுப்பு நிறமாக மாறி, முடிவில் இறந்துவிடும்
  • இந்த பூச்சிகள் தேன் சுரப்பை வெளிப்படுத்தும். இதனால் தாக்கப்பட்ட பகுதிகள் பளபளப்புடன், ஈரமாகவும் தோன்றும்.
  • இரண்டாவது தாக்குதல் கரும்புகை பூசணத்தால், (கேப்னோடியம்) தாக்கப்பட்ட பகுதிகளை சுற்றி கருப்பு நிறமாக மாறும்

மாவுப் பூச்சிகள் தாக்குதலின் ஆரம்பத்தில் உள்ள அறிகுறிகளை பின்வருமாறு காணலாம்

  • இலைகள் மஞ்சள் நிறமாதல்
  • தாக்கப்பட்ட பகுதிகள் உருமாறியிருக்கும் குட்டை இலை வளர்ச்சி மற்றும் இலை, பழங்கள் உதிர்தல்
  • சிவப்பு கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருத்தல்
  • தேன்தளி தத்துப்பூச்சிகளின் கழிவுப்பொருள் இருந்தல்
  • கரும்புகை பூசணத்தால் பூசண வளர்ச்சி தோன்றுதல்
  • செடிகளை முடிவில் அழித்தல்

இனப்பெருக்கம்
முட்டையிடும் இனத்தைச் சேர்ந்தவை
உடலின் கீழ்ப்பகுதியில் வயிற்றின் கடைசிப்பகுதியில் 200-300 என்ற அளவில் கருப்பையில் முட்டைகள் இடப்படுகின்றன
ஒவ்வொரு பெண் பூச்சியும் 400 முதல் 500 முட்டைகளை இடும்
இளம் பூச்சிகள் முதிர்பூச்சிகளாக மாற ஒரு மாத காலம் ஆகிறது
முதிர்பூச்சிகள் சூழ்நிலையைப் பொறுத்து 30லிருந்து 60 நாட்கள் வரை உயிர் வாழும்
கீழ்ப்புறம், இலைகளின் கீழ்ப்புறம் இலை கணு இடுக்குகள், பூ மொட்டுக்கள், பழங்கள் மற்றும் அரிதாக வேர்களில் காணப்படும்
மாற்று ஒம்புயிரிகள்
பருத்தி ப்ளூபேரியா அல்பா களை அபுடில்லான்
கொய்யா காட்டாமணக்கு களை கேலொ
அரளி பார்த்தினியம் துவரை டெக்மோஸ்டேன்ஸ் காட்டு மல்பெர்ரி
சொலேனம் வகைகள்
வயலில் அடையாளம் காணுதல்
ஒரு வெள்ளைத் தாளில் மாவுப்பூச்சியை வைத்து அழுத்தினால் மஞ்சள் நிறமாக மாறும். இளஞ்சிவப்பு நிறமாக மாறினால்
இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி
ஆல்கஹாலுக்கு மாற்றினால், மாவுப்பூச்சியின் உடல் கருப்பு நிறமாக மாறும்
முட்டை : மஞ்சள் நிறத்தில் , கருப்பையில் இடும். மூன்று முதல் 4 நான்கு மடங்கு நீளமாக உடல் இருக்கும். உடல் முழுவதும் வெள்ளை மெழுகால் மூடப்பட்டிருக்கும். முட்டையின் காலம் 2-7 நாட்கள்
இளம்பூச்சிகள் : மஞ்சள் நிறத்தில் 4-5 வளர்நிலைகளுடன் ஒரு மாதத்தில் வளர்ந்துவிடும்
தேன்துளி கரப்பு மற்றும் எறும்புகளின் நடமாட்டம்

  • இந்த பூச்சிகள் தேவைக்கதிகமாக உண்டு விட்டு, கார்போஹைட்டிரேட்ஸ், அமினோ அமிலங்களை தேன்துளி கரப்பாக வெளியேற்றுகின்றன
  • தேன்துளி சுரப்பில் அதிக அமினோ அமிலங்கள் மற்றும் சர்க்கரைகள் இருப்பதால், சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகிள்ன நடமாட்டம் இருக்கும்
  • அதிகப்படியான தேன்துளி சுரப்பை அகற்றாவிட்டால், மாவுப்பூச்சிகள் நடமாடுவது சிக்கலாகிவிடும்
  • எனவே, தேன்துளி சுரப்பை அடிக்கடி அகிற்ற வேண்டியிருப்பதால், அதை எறும்புகள் செய்கின்றன. அது மட்டுமல்லாமல், மாவுப்பூச்சியை இயற்கை எதிரிகளான பூச்சியின் ஒட்டுண்ணிகள் மற்றும் வேட்டையாடும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கின்றன. இதனால், எறும்பு மற்றும் மாவுப்பூச்சியின் பிணைப்பு கூட்டுயிர் வாழ்க்கை முறையில் உள்ளது

பரவுதல்

  • பயிரிடும் பொருள்கள், தாக்கப்பட்ட பகுதிகள் (அ) பொருட்கள், களை ஒம்புயிரிகள், எறும்புகள் மற்றும் காற்று

ஓம்புயிரி பயிர்கள்

  • பல தாவர உண்பவையான மாவுபூச்சி அதைத்து பயிர்களையும் தாக்கும். பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் பூச்சிசெடிகள், ஆண்டுப் பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிப்பயிர்கள் மற்றும் இதர பயிர்கள். மேலும் பலதரப்பட்ட களை ஓம்புயிர்களையும் தாக்குகின்றன. முக்கிய பயிர் இல்லாவிட்டால் கூட களைகளே மாற்று ஒம்புயிரிகளாக செயல்படுகின்றன. முக்கிய ஓம்புயிர்கள் - காட்டாமணக்கு, கொய்யா, ப்ளூமேரியா, அல்பா பருத்தி துவரை, தேக்கு, மரவள்ளி, மோரஸ் வகைகள், சூரியகாந்தி, பழங்கள் மற்றும் காய்கறிகள்.
Read More

November 10, 2010

அழுததாதே F1 கீ
by admin - 0


Read More

November 09, 2010

தன்னை நாயெனக் கருதும் பசுக்கன்று
by admin - 0

பிரிட்டனில், பசுக்கன்று ஒன்று தன்னை நாய் எனக் கருதி நாயைப் போல் நடந்துகொள்கிறது. நாயைப் போன்று அது குரைக்கவும் செய்கிறது.



4 மாத வயதான இந்த பசுக்கன்றை அது பிறந்தவுடன் பண்ணையாளர் பென் பொவர்மன் என்பவர் தனது வீட்டிற்கு கொண்டுவந்து அதை இரு நாய்களுடன் வளர்க்க ஆரம்பித்தார்.

ஹென்றி எனப் பெயரிடப்பட்ட இப்பசுக்கன்று, மந்தைக் கூட்டத்திலிருந்து விலகி, வீட்டில் தன்னுடன் வளர்க்கப்பட்ட நாய்களுடன் விளையாடுவதற்கே விரும்புகின்றது.

பென் பொவர்மனின் வீட்டின் அருகிலுள்ள குடிசையில் இப்பசுக்கன்று உறங்குவதுடன் ஒவ்வொரு காலைவேளையும் சமையலறையின் ஜன்னல் வழியே தனது தலையை விட்டு டோஸ்டரிலிருந்து உணவுப்பொருட்களை களவாடி உண்கிறதாம்.

அக்கன்றானது பென் மற்றும் அவரது மனைவி கெத்தரின் (42) ஆகிய இருவராலும் டோர்ஸெட் பிராந்தியத்திலுள்ள 450 ஏக்கர் நிலத்திலுள்ள பண்ணையிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதனது தாய் அதற்கு ஒழுங்கான முறையில் பாலூட்டாமையே இதற்குக் காரணம்.

தற்போது அக்கன்று அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாக இருப்பதுடன் தன்னை நாயென நினைத்துக்கொண்டு வீட்டிலுள்ள நாய்களுடன் விளையாடுகின்றது.

தற்போது அந்தக் கன்று குறித்த வீடியோ, இணையத்தளங்களிலும் வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர்.

இது தொடர்பாக பென் குறிப்பிடுகையில் 'அது உண்மையில் தன்னை நாயென நினைத்துக்கொண்டுள்ளது. காரணம் அது எங்கள் ஏனைய இரு நாய்களுடன் வளர்ந்தது. அது நாய்களை துரத்தி விளையாடுகின்றது.

அப்பசுக்கன்று எனது பின்னால் வந்து நின்று அதனது தலையை எனது கால்களுக்கிடைய போட்டு என்னைத் தூக்குவது அதற்கு மிகவும் பிடிக்கும்.

எமது பிள்ளைகள் ஹென்றி மீது மிகுந்த அன்புக்கொண்டவர்கள். எங்களால் அதனை விற்கமுடியாது. எனவே அது இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்கு எம்முடன் இருக்கமுடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
Read More

November 07, 2010

இயற்கை திரவ கிருமி நாசினி / உரம்
by admin - 0

Read More

November 06, 2010

அடித்தாள் அழுகல் நோய்-வெங்காயம் Fusarium oxysporum
by admin - 0

அடித்தாள் அழுகல் நோய்: ப்யூசேரியம் அக்ஸிஸ்போரம் வகை செபே
Fusarium oxysporum

அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின் மெதுவாக காய ஆரம்பிக்கும்
  • தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி காயும்
  • செடியின் இலைப்பரப்பு முழுவதும் வாடும்
  • வெங்காயம் குமிழ் மென்மையாகி அழுகும். வேர்கள் அழுகும்
  • வெள்ளை நிற பூஞ்சாண வளர்ச்சி இதன் மேல் தோன்றும்
  • இந்த நோய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கிலும் காணப்படும்
  • வெங்காயத்தின் மீது ப்யூசேரியம் அழுகல்

கட்டுப்பாடு:

  • பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்
  • அறுவடை செய்த வெங்காயக் குமிழ்களை சுத்தமாக சேமிக்க வேண்டும்
  • மண்ணில் தாமிர அளவுகள் குறையும் போது வெங்காயம் நோய்க்கு ஆளாகும். அதனால் தாமிரத்தை கூடுதலாக நிலத்தில் சேர்க்க வேண்டும்
  • தாமிர ஆக்ஸிகுளோரைடு 0.25% மண்ணில் நனைத்து இடவேண்டும்

Read More