Latest News

November 27, 2010

வரும் 2012ல் விண்டோஸ் 8
by admin - 0

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது மக்களிடையே பரவலாகி, அதனுடன் பழகி இயங்கத் தொடங்கி விட்டோம். இந்நிலையில் விண்டோஸ் 8 என்னும் அடுத்த இயக்கத் தொகுப்பு குறித்த குறிப்புகள் வரத் தொடங்கிவிட்டன. வரும் 2012 ஆம் ஆண்டில் இந்த தொகுப்பு வெளியிடப்படலாம் என உத்தேசமாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.
இதுவரை வெளியான இயக்கத் தொகுப்புகளில், மிக வேகமாக விற்பனையாகும் தொகுப்பு என்ற பெயரைப் பெற்ற விண்டோஸ் 7 தொகுப்பு வெளியாகி ஓராண்டு ஆனதற்கான வெற்றி குறித்து தகவல் தருகையில், விண்டோஸ் 8 குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. http://www.winrumors.com/microsoft-windows-8-about-two-years-away/ என்ற தளத்தில் இந்த செய்தி காணப்பட்டது. ஆனால் சில நாட்களில் இந்த செய்தி தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மேற்கொண்டு எந்த செய்தியையும் மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை.
தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், 128 பிட் அமைப்பில் இயங்கும் சிஸ்டம் ஒன்றைத் தயாரித்து வருவதாகப் பல நாட்களுக்கு முன்பே பேசப்பட்டது. அநேகமாக, இதுவே விண்டோஸ் 8 ஆக இருக்கலாம். இதற்கிடையே ஆப்பிள் நிறுவனம் தன் ஓ.எஸ். எக்ஸ் மற்றும் மொபைல் ஐ.ஓ.எஸ். ஆகியவற்றை இணைத்து ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஒன்றைத் தர இருப்பதாகவும் செய்திகள் கிடைத்தன. இதனைக் கேள்விப்பட்ட மைக்ரோசாப்ட், நிச்சயமாய் அதனை உணர்ந்து, வரப்போகும் தன் அடுத்த சிஸ்டத்தையும் அதற்கேற்ற வகையில் தயாரிக்க விரும்பலாம்.
« PREV
NEXT »

No comments