Latest News

November 06, 2010

அடித்தாள் அழுகல் நோய்-வெங்காயம் Fusarium oxysporum
by admin - 0

அடித்தாள் அழுகல் நோய்: ப்யூசேரியம் அக்ஸிஸ்போரம் வகை செபே
Fusarium oxysporum

அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின் மெதுவாக காய ஆரம்பிக்கும்
  • தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி காயும்
  • செடியின் இலைப்பரப்பு முழுவதும் வாடும்
  • வெங்காயம் குமிழ் மென்மையாகி அழுகும். வேர்கள் அழுகும்
  • வெள்ளை நிற பூஞ்சாண வளர்ச்சி இதன் மேல் தோன்றும்
  • இந்த நோய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கிலும் காணப்படும்
  • வெங்காயத்தின் மீது ப்யூசேரியம் அழுகல்

கட்டுப்பாடு:

  • பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்
  • அறுவடை செய்த வெங்காயக் குமிழ்களை சுத்தமாக சேமிக்க வேண்டும்
  • மண்ணில் தாமிர அளவுகள் குறையும் போது வெங்காயம் நோய்க்கு ஆளாகும். அதனால் தாமிரத்தை கூடுதலாக நிலத்தில் சேர்க்க வேண்டும்
  • தாமிர ஆக்ஸிகுளோரைடு 0.25% மண்ணில் நனைத்து இடவேண்டும்

« PREV
NEXT »

No comments