Latest News

November 21, 2010

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 ஒரு கோடி டவுண்லோட்
by admin - 0

வெளியிடப்பட்டு ஆறு வாரங்களில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 சோதனைத் தொகுப்பு, ஒரு கோடி பேரால் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப் படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், பிரவுசர்களில் உள்ள 12 அம்சங்களை மட்டுமே பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், மைக்ரோசாப்ட் தன் பிரவுசரின் புதிய பதிப்பில், அதிகக் குழப்பமில்லாத பயனாளர் முகப்பினைத் தந்துள்ளது. அத்துடன் விண்டோஸ் 7 சிஸ்டத்தின் அடிப்படையில், இணைய தளங்களில், அவற்றின் பக்கங்களில் உள்ள தகவல்கள் முதன்மையாகத் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளன.
இதே போல, டாஸ்க்பாரில் தளங்களை பின் செய்திடும் வசதி, டேப் ஒன்றினைத் தனியே பிரிக்கும் வசதி, இரண்டு தளங்களை, ஒரேநேரத்தில் அடுத்தடுத்து வைத்துக் காணும் வசதியும் தரப்பட்டுள்ளன. இந்த சோதனைத் தொகுப்பிற்கு பல்லாயிரக்கணக்கில் பின்னூட்டுகளும், சோதனைத் தளங்களில் இருந்து முடிவுகளும் கிடைத்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், புதிய பிரவுசரைப் பலராலும் விரும்பப்படும் பிரவுசராகத் தரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ல் வெளியான பின் இரண்டு நாட்களில் 20 லட்சம் பேரால் டவுண்லோட் செய்யப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இதனை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள் கீழ்க்காணும் முகவரிக்குச் செல்லவும்.
http://www.beautyoftheweb.co.uk/
« PREV
NEXT »

No comments